இது அந்த ‘பழனி’யாண்டவனுக்கே வெளிச்சம்…பதில் சொல்வாரா? அல்லது வழக்கம்போல ___குள்ளே பதுங்கிக் கொள்வாரா?
Loading...
என்னலா….தல… நம்ம ‘பழனி’ யை நிம்மதியா தூங்க விட மாட்டீங்களா.? புத்ராஜெயாவில் அவர் விடும் குறட்டை சத்தம் கேமரன் மலையில் கேட்கிறதாம்.
Loading...
கேமரன்மலையை வெளிநாட்டினருக்கு விற்று விட்டதாகக் கேள்வி! எதற்கு உள்ளே புகுந்து ஆராய்ச்சி செய்யுங்கள்!
Loading...
பங்களாதேஷ்காரன் மட்டும் அல்ல …மாருகளும்தான்.
Loading...
இரண்டு வாரங்களுக்கு முன்பு, கேமரன் மலை தானா ராத்தாவில் இருக்கும் என் மகன் வீட்டிற்குப் போய் இருந்தேன். இருபது வருடங்களுக்கு முன்னால் பார்த்த கேமரன் மலை வேறு. இப்போது பார்க்கும் கேமரன்மலை வேறு. மலைகளும் குன்றுகளும் இருந்த இடங்களில் எல்லாம் வெள்ளை வெள்ளையாகக் கூடாரங்கள் போட்ட விவசாயப் பண்ணைகள். பார்க்கும் இடம் எல்லாம் வங்காளதேசிகள். நேபாளிகள். பாகிஸ்தானியர்கள்.
அடுத்து, சுற்றிச் சுற்றி அண்ணாந்து பார்க்கும் இடம் எல்லாம் காடுகள் இல்லை. கரைந்து காணாமல் போய்விட்டன. பச்சைக் காடுகள் அருகி விட்டன. ஆறுகள் எல்லாம் தேநீர் நிறத்தில் அருவி எடுத்து ஓடுகின்றன. அந்தப் பழைய கேமரன்மலை எங்கே போய்விட்டது. அந்தப் பழைய அழகான இயற்கைகள் எல்லாம் எங்கே போய் விட்டன. வேதனையாக இருக்கிறது.
இருபது வருடங்களுக்கு முன்பு, இயற்கையின் அழகை ரசிக்கப் பள்ளிப் பிள்ளைகளை அழைத்துச் சென்றேன். இப்போது இயற்கையின் சிதைவுகளைக் காட்டுவதற்கு என் பேரப் பிள்ளைகளை அழைத்துச் செல்கிறேன். என்னே காலத்தின் கொடுமை.
பேரப் பிள்ளைகளை அழைத்துக் கொண்டு கேமரன்மலை சமூக ஆர்வலர் சிம்மாதிரி வீட்டிற்குப் போனேன். அவர் வீட்டிற்குப் பக்கத்திலேயே, முட்டைக் கோஸ், காய்கறிகள் பயிர் செய்து இருக்கிறார்.
கேமரன் மலையில் காடுகளில் அழிக்கப்படுவதைப் பற்றி மிகவும் வேதனைப்பட்டுச் சொன்னார். காடுகள் அழிக்கப் படுவதற்கு எதிராக, உடனடி நடவடிக்கை எடுக்கா விட்டால், கேமரன் மலை என்கிற ஒரு நல்ல அழகான சுற்றுலாப் பாசறை சிதைந்து போகும் என்பது அவருடைய கருத்து. என் பேத்திகள் திரு. சிம்மாதிரியுடன் மகிழ்ச்சியாக இருந்த அந்தக் கொஞ்ச நேரத்தை நினைத்துப் பார்க்கிறேன். நல்ல விருந்தோம்பல். அவர் பயிர் செய்து கொடுத்து அனுப்பிய காய்கறிகளுக்கும் இந்த நேரத்தில் நன்றிகளைச் சொல்லிக் கொள்கிறேன்.
இயற்கையை நேசிப்போம். மரங்களை நடுவோம். காடுகளை வளர்ப்போம். எதிர்கால நம்முடைய சந்ததியினருக்கு கொஞ்சம் இயற்கையான சுவாசக் காற்றையாவது சீதனமாக விட்டுச் செல்வோம். -மலாக்கா முத்துக்கிருஷ்ணன்.
Loading...
நன்றிங்க, திரு மலாக்கா முத்துக்கிருஷ்ணன்! இயற்கையை நேசிக்கும் தன்மை தற்போதைய அரசிற்கு எள்ளளவும் இல்லை. லஞ்சத்தின் மூலம் நாட்டை நாசமாக்கிவிட்டார்கள். வெளிநாட்டினரை கொண்டு வந்து காட்டை சூறையாடி விட்டது இந்த பொறுப்பற்ற அரசு. கேமரன் மலை விஜயம் செய்வோர் என் தோட்டத்திற்கு வாருங்கள். பூச்சுக்கொல்லி தெளிக்கப்படாமல் வளர்க்கப்பட்ட காய்கறிகளை கொண்டு சென்று சமைத்து பாருங்களேன். {FOC}
Loading...
ஐயா சிம்மாத்திரி அவர்களே ! பல முறை கேமரன் மலை அழிவை மக்களுக்கு காட்டிய ‘கராம் சிங் வாலியா” என்னும் 3tv இயற்கை வளம் செய்தியாளரை காணவில்லையே ? ஐயா முத்து கிருஷ்ணன் அவர்களே ! செம்பருத்தியில் கணினி தொடர்பான செய்திகள் போடலாமே நீங்கள் ! உங்களின் இயற்கை வளம் ஆர்வம் பாராட்டுக்குரியதே !
Loading...
நண்பரே! தமிழர் நந்தா! டிவி 3, கராம் சிங் ‘வாங்கப் பட்டுவிட்டார்’.
Loading...
திரு. தமிழர் நந்தா, தங்களின் கருத்துகளுக்கு நன்றி. கேமரன் மலை சிம்மாதிரியின் வீட்டிற்குப் போய் இருந்த போது, அவருடைய காய்கறித் தோட்டத்தில் பூச்சுக்கொல்லி மருந்துகள் எதுவும் தெளிக்கப்படவில்லை என்பதை நினைவுபடுத்த மறந்து விட்டேன்.
உண்மையிலேயே காய்கறிகள் மிக மிக அழகாக, ஒரு சொட்டு பூச்சிக் கறை, அரிப்பு இல்லாமல் இருந்தால் அவை ஆபத்தானவை என்பது பலருக்குத் தெரியாது. அதுதான் உண்மையுங்கூட. இரசாயனம் கலக்காத காய்கறிகளாக இருந்தால், கொஞ்சமாவது பூச்சிகள் இருக்கும். பூச்சி அரிப்புகள் இருக்கும்.
அடுத்து, கணினிச் செய்திகளை நம்முடைய செம்பருத்தியில் சேர்த்துக் கொள்ளலாம். இளைஞர்களையும் மாணவர்களையும் ஓரளவுக்கு கவர்ந்து இழுக்க முடியும். வாசகர்கள் விரும்பினால், ஒரு கணினி பகுதியைத் தொடங்கலாம் என்பது என் கருத்து. அந்தப் பகுதியில் வாசகர்களின் கேள்விகளுக்கும் பதில் அளிக்கலாம். அண்மைய கணினிச் செய்திகள், அண்மைய தொழில்நுட்பச் செய்திகளை உடனுக்குடன் அறிவிக்கலாம். வாசகர்கள் என்ன சொல்கிறார்கள் என்பதை முதலில் தெரிந்து கொள்வோம். உங்கள் கருத்துகளையும் சொல்லுங்கள். நன்றி.
Loading...
மலாக்கா முத்துக்கிருஷ்ணன் அவர்களே… கணினிச் செய்திகளைச் செப்பருத்தியில் சேர்த்துக்கொள்ளலாம் எனும் தங்களின் விருப்பத்தை நிறைவேற்றும் முன்னம் இப்பகுதியில் பதிவிடப்படும் கருத்தாளர்களின் கொச்சைத் தனமான வாசகங்களையும் மாணவர்கள் படிக்க வேண்டியிருக்கும் என்பதையும் கவனத்தில் கொண்டு மாணவர்களை இப்பகுதிக்கு இழுக்கலாமா என்பதை முடிவு செய்யுங்கள். ( நமது மாணவர்களில் பலர் கொச்சைத் தனங்களுக்கு ஒன்றும் குறைவுபட்டவர்கள் இல்லை என்பது வேறு விசயம்) செம்பருத்தி ஆசிரியர் இதற்காக ஒரு கட்டுரை எழுதியும் பதிவாளர்களின் ( சிலரின் )சண்டித்தனம் குறையாத நிலை கண்டு கைகளைப் பிசையும் நிலையினராயினர் என்பதும் தாங்கள் அறிய வேண்டுகிறேன். மற்றவை தங்களின் சிந்தனைக்கே விட்டுவிடுகிறேன்.
Loading...
நன்றி ஐயா முத்துகிருஷ்ணன் அவர்களே ! செம்பருத்தி ஆசிரியர்களிடம் கலந்து ஆலோசித்து இணையம் , கணினி தொடர்பான கேள்விக்கு பதில் கொடுத்தால் நமது மக்கள் பயன் பெறுவார் ! கணினி தொடர்பான கேள்விக்கு நீங்கள்தான் பொருத்தமான நபர் , இதில் எந்த ஐயமும் இல்லை ! மாணவ மணிகளும் பயன் பெறுவார் ! நீங்கள் எந்த சூழ்நிலையிலும் சமாளிக்க தெரிந்தவர் , நகைச்சுவையோடு பதில் கூறும் திறமை வாய்ந்தவர் என்பது பல ஆண்டு முன்பு தமிழ் தினசரியில் தெரிந்துகொண்டேன் ! கணினி தொடர்பாக கருத்து சொல்வதால் இதில் என்ன கொச்சை கிடக்கிறது ? ஆரம்பிக்கவே இல்லை குழப்பவாதி தமிழன் உளறுகிறான் ! ஐயா சிம்மாதிரியை ஒரு முறை கேமரன் மலையில் சந்தித்து இருக்கிறேன் ! நகைச்சுவையான மனிதர் ! நான் சென்ற நேரம் அந்த வட்டாரத்தில் கோழி சாணம் உரதுக்காக போடபட்டதால் ஈ தொல்லை தாங்க முடியாமல் அவரிடம் இருந்து விடை பெற்றேன் !
Loading...
வணக்கம் தமிழன் அவர்களே. தங்கள் கருத்துகளுக்கு நன்றி. நல்ல தூர எண்ணங்களுடன் கருத்துகளைச் சொல்லி இருக்கிறீர்கள். நீங்கள் சொல்வதிலும் நியாயம் இருக்கிறது. ஆக, தங்களின் கருத்துகளை வரவேற்கிறோம்.
// கணினிச் செய்திகளைச் செப்பருத்தியில் சேர்த்துக் கொள்ளலாம் எனும் தங்களின் விருப்பத்தை நிறைவேற்றும் முன்னம் இப்பகுதியில் பதிவிடப்படும் கருத்தாளர்களின் கொச்சைத் தனமான வாசகங்களையும் மாணவர்கள் படிக்க வேண்டியிருக்கும்.//
தோழர்கள் ஜீவி காத்தையா, பசுபதி, தம்பி கா. ஆறுமுகம். இவர்களின் கருத்துகளையும் நாம் தெரிந்து கொள்ள வேண்டும்.
Loading...
கேமரன்மலைக்கு வந்து கணினி வறை சென்றதை பார்க்கும்போது,கேமரன்மலை உயரத்தை போன்று அவரின் சிந்தனையும் உயர்ந்தே கணிக்கப்படுகிறது,நன்றி வாழ்க நாராயண நாமம்.
Loading...
ஆம் ஐயா தமிழன் உளறுகிறான்; கொச்சை வார்த்தைகளுக்குச் சொந்தக்காரன் நந்தன் உண்மை பேசுகிறான். கொஞ்சம் பின்னோக்கிப் பதிவுகளைப் பாருங்கள் நந்தன் போன்றோரின் பதிவுகளை. அப்போது தெரியும் யார் உளறுகிறார்கள் என்று!
Loading...
ஐயா முத்துகிருஷ்ணன் அவர்களே ! உங்களின் (கணினி) சேவையை கருத்தில் கொண்டு பரிந்துரைத்தேன் ! நீங்களும் ஆவலாக இருப்பதாக தெரிகிறது நன்றி ! குறுக்கே வந்து ஒரு தமிழன் குட்டையை குழப்ப முயல்கிறான் ! உலகமே முன்னோக்கி போய் கொண்டு இருக்கிறது தமிழன் பின்னோக்கி போக சொல்கிறான் , தமிழன் மட்டும்தான் ஒரு கருத்து சொன்னால், மறுக்காமல் நாலு கருத்து சொல்லி குட்டிசுவர் ஆக்குவான் ! தமிழன் கொஞ்சம் மூடிக்கொண்டு இருந்தால் அனைவருக்கும் நலம் !
Loading...
எனது கணினி அறிவு வளர்ச்சிக்கு, அவ்வப்போது ஜயா முத்துக்கிருஷ்ணன் அவர்களின் வலைதளத்தை வலம் வந்து பயனடைந்தது உண்டு. அவரின் சேவை நம்மைப் போன்றோருக்கு தேவை. செம்பருத்தியிலும் தொடர்ந்தால் அனைவருக்கும் நன்மையே. வணக்கம்.
Loading...
இதற்கு எல்லாம் காரணம் , பழனி இன் ஆலோசகரோ ……..
Loading...
கேமரன் மலையின் புளூ வேலி என்கிற இடத்தில் ஒரு வாரமாக காட்டு மரங்கள் வெட்டப்பட்டு வருகிறது. வெளிநாட்டு தொழிலாளர்களிடம் அரசு ஊழியர்கள் லஞ்சம் பெற்றுக்கொண்டு, இச்செயலை புரிகின்றனர். ஐயப்பன் மலையையே சுற்றிவரும் பழனி, கேமரன் மலை அழிந்து வருவதை தடுப்பாராக.
இது அந்த ‘பழனி’யாண்டவனுக்கே வெளிச்சம்…பதில் சொல்வாரா? அல்லது வழக்கம்போல ___குள்ளே பதுங்கிக் கொள்வாரா?
என்னலா….தல… நம்ம ‘பழனி’ யை நிம்மதியா தூங்க விட மாட்டீங்களா.? புத்ராஜெயாவில் அவர் விடும் குறட்டை சத்தம் கேமரன் மலையில் கேட்கிறதாம்.
கேமரன்மலையை வெளிநாட்டினருக்கு விற்று விட்டதாகக் கேள்வி! எதற்கு உள்ளே புகுந்து ஆராய்ச்சி செய்யுங்கள்!
பங்களாதேஷ்காரன் மட்டும் அல்ல …மாருகளும்தான்.
இரண்டு வாரங்களுக்கு முன்பு, கேமரன் மலை தானா ராத்தாவில் இருக்கும் என் மகன் வீட்டிற்குப் போய் இருந்தேன். இருபது வருடங்களுக்கு முன்னால் பார்த்த கேமரன் மலை வேறு. இப்போது பார்க்கும் கேமரன்மலை வேறு. மலைகளும் குன்றுகளும் இருந்த இடங்களில் எல்லாம் வெள்ளை வெள்ளையாகக் கூடாரங்கள் போட்ட விவசாயப் பண்ணைகள். பார்க்கும் இடம் எல்லாம் வங்காளதேசிகள். நேபாளிகள். பாகிஸ்தானியர்கள்.
அடுத்து, சுற்றிச் சுற்றி அண்ணாந்து பார்க்கும் இடம் எல்லாம் காடுகள் இல்லை. கரைந்து காணாமல் போய்விட்டன. பச்சைக் காடுகள் அருகி விட்டன. ஆறுகள் எல்லாம் தேநீர் நிறத்தில் அருவி எடுத்து ஓடுகின்றன. அந்தப் பழைய கேமரன்மலை எங்கே போய்விட்டது. அந்தப் பழைய அழகான இயற்கைகள் எல்லாம் எங்கே போய் விட்டன. வேதனையாக இருக்கிறது.
இருபது வருடங்களுக்கு முன்பு, இயற்கையின் அழகை ரசிக்கப் பள்ளிப் பிள்ளைகளை அழைத்துச் சென்றேன். இப்போது இயற்கையின் சிதைவுகளைக் காட்டுவதற்கு என் பேரப் பிள்ளைகளை அழைத்துச் செல்கிறேன். என்னே காலத்தின் கொடுமை.
பேரப் பிள்ளைகளை அழைத்துக் கொண்டு கேமரன்மலை சமூக ஆர்வலர் சிம்மாதிரி வீட்டிற்குப் போனேன். அவர் வீட்டிற்குப் பக்கத்திலேயே, முட்டைக் கோஸ், காய்கறிகள் பயிர் செய்து இருக்கிறார்.
கேமரன் மலையில் காடுகளில் அழிக்கப்படுவதைப் பற்றி மிகவும் வேதனைப்பட்டுச் சொன்னார். காடுகள் அழிக்கப் படுவதற்கு எதிராக, உடனடி நடவடிக்கை எடுக்கா விட்டால், கேமரன் மலை என்கிற ஒரு நல்ல அழகான சுற்றுலாப் பாசறை சிதைந்து போகும் என்பது அவருடைய கருத்து. என் பேத்திகள் திரு. சிம்மாதிரியுடன் மகிழ்ச்சியாக இருந்த அந்தக் கொஞ்ச நேரத்தை நினைத்துப் பார்க்கிறேன். நல்ல விருந்தோம்பல். அவர் பயிர் செய்து கொடுத்து அனுப்பிய காய்கறிகளுக்கும் இந்த நேரத்தில் நன்றிகளைச் சொல்லிக் கொள்கிறேன்.
இயற்கையை நேசிப்போம். மரங்களை நடுவோம். காடுகளை வளர்ப்போம். எதிர்கால நம்முடைய சந்ததியினருக்கு கொஞ்சம் இயற்கையான சுவாசக் காற்றையாவது சீதனமாக விட்டுச் செல்வோம். -மலாக்கா முத்துக்கிருஷ்ணன்.
நன்றிங்க, திரு மலாக்கா முத்துக்கிருஷ்ணன்! இயற்கையை நேசிக்கும் தன்மை தற்போதைய அரசிற்கு எள்ளளவும் இல்லை. லஞ்சத்தின் மூலம் நாட்டை நாசமாக்கிவிட்டார்கள். வெளிநாட்டினரை கொண்டு வந்து காட்டை சூறையாடி விட்டது இந்த பொறுப்பற்ற அரசு. கேமரன் மலை விஜயம் செய்வோர் என் தோட்டத்திற்கு வாருங்கள். பூச்சுக்கொல்லி தெளிக்கப்படாமல் வளர்க்கப்பட்ட காய்கறிகளை கொண்டு சென்று சமைத்து பாருங்களேன். {FOC}
ஐயா சிம்மாத்திரி அவர்களே ! பல முறை கேமரன் மலை அழிவை மக்களுக்கு காட்டிய ‘கராம் சிங் வாலியா” என்னும் 3tv இயற்கை வளம் செய்தியாளரை காணவில்லையே ?
ஐயா முத்து கிருஷ்ணன் அவர்களே ! செம்பருத்தியில் கணினி தொடர்பான செய்திகள் போடலாமே நீங்கள் ! உங்களின் இயற்கை வளம் ஆர்வம் பாராட்டுக்குரியதே !
நண்பரே! தமிழர் நந்தா! டிவி 3, கராம் சிங் ‘வாங்கப் பட்டுவிட்டார்’.
திரு. தமிழர் நந்தா, தங்களின் கருத்துகளுக்கு நன்றி. கேமரன் மலை சிம்மாதிரியின் வீட்டிற்குப் போய் இருந்த போது, அவருடைய காய்கறித் தோட்டத்தில் பூச்சுக்கொல்லி மருந்துகள் எதுவும் தெளிக்கப்படவில்லை என்பதை நினைவுபடுத்த மறந்து விட்டேன்.
உண்மையிலேயே காய்கறிகள் மிக மிக அழகாக, ஒரு சொட்டு பூச்சிக் கறை, அரிப்பு இல்லாமல் இருந்தால் அவை ஆபத்தானவை என்பது பலருக்குத் தெரியாது. அதுதான் உண்மையுங்கூட. இரசாயனம் கலக்காத காய்கறிகளாக இருந்தால், கொஞ்சமாவது பூச்சிகள் இருக்கும். பூச்சி அரிப்புகள் இருக்கும்.
அடுத்து, கணினிச் செய்திகளை நம்முடைய செம்பருத்தியில் சேர்த்துக் கொள்ளலாம். இளைஞர்களையும் மாணவர்களையும் ஓரளவுக்கு கவர்ந்து இழுக்க முடியும். வாசகர்கள் விரும்பினால், ஒரு கணினி பகுதியைத் தொடங்கலாம் என்பது என் கருத்து. அந்தப் பகுதியில் வாசகர்களின் கேள்விகளுக்கும் பதில் அளிக்கலாம். அண்மைய கணினிச் செய்திகள், அண்மைய தொழில்நுட்பச் செய்திகளை உடனுக்குடன் அறிவிக்கலாம். வாசகர்கள் என்ன சொல்கிறார்கள் என்பதை முதலில் தெரிந்து கொள்வோம். உங்கள் கருத்துகளையும் சொல்லுங்கள். நன்றி.
மலாக்கா முத்துக்கிருஷ்ணன் அவர்களே… கணினிச் செய்திகளைச் செப்பருத்தியில் சேர்த்துக்கொள்ளலாம் எனும் தங்களின் விருப்பத்தை நிறைவேற்றும் முன்னம் இப்பகுதியில் பதிவிடப்படும் கருத்தாளர்களின் கொச்சைத் தனமான வாசகங்களையும் மாணவர்கள் படிக்க வேண்டியிருக்கும் என்பதையும் கவனத்தில் கொண்டு மாணவர்களை இப்பகுதிக்கு இழுக்கலாமா என்பதை முடிவு செய்யுங்கள். ( நமது மாணவர்களில் பலர் கொச்சைத் தனங்களுக்கு ஒன்றும் குறைவுபட்டவர்கள் இல்லை என்பது வேறு விசயம்) செம்பருத்தி ஆசிரியர் இதற்காக ஒரு கட்டுரை எழுதியும் பதிவாளர்களின் ( சிலரின் )சண்டித்தனம் குறையாத நிலை கண்டு கைகளைப் பிசையும் நிலையினராயினர் என்பதும் தாங்கள் அறிய வேண்டுகிறேன். மற்றவை தங்களின் சிந்தனைக்கே விட்டுவிடுகிறேன்.
நன்றி ஐயா முத்துகிருஷ்ணன் அவர்களே ! செம்பருத்தி ஆசிரியர்களிடம் கலந்து ஆலோசித்து இணையம் , கணினி தொடர்பான கேள்விக்கு பதில் கொடுத்தால் நமது மக்கள் பயன் பெறுவார் ! கணினி தொடர்பான கேள்விக்கு நீங்கள்தான் பொருத்தமான நபர் , இதில் எந்த ஐயமும் இல்லை ! மாணவ மணிகளும் பயன் பெறுவார் ! நீங்கள் எந்த சூழ்நிலையிலும் சமாளிக்க தெரிந்தவர் , நகைச்சுவையோடு பதில் கூறும் திறமை வாய்ந்தவர் என்பது பல ஆண்டு முன்பு தமிழ் தினசரியில் தெரிந்துகொண்டேன் ! கணினி தொடர்பாக கருத்து சொல்வதால் இதில் என்ன கொச்சை கிடக்கிறது ? ஆரம்பிக்கவே இல்லை குழப்பவாதி தமிழன் உளறுகிறான் !
ஐயா சிம்மாதிரியை ஒரு முறை கேமரன் மலையில் சந்தித்து இருக்கிறேன் ! நகைச்சுவையான மனிதர் ! நான் சென்ற நேரம் அந்த வட்டாரத்தில் கோழி சாணம் உரதுக்காக போடபட்டதால் ஈ தொல்லை தாங்க முடியாமல் அவரிடம் இருந்து விடை பெற்றேன் !
வணக்கம் தமிழன் அவர்களே. தங்கள் கருத்துகளுக்கு நன்றி. நல்ல தூர எண்ணங்களுடன் கருத்துகளைச் சொல்லி இருக்கிறீர்கள். நீங்கள் சொல்வதிலும் நியாயம் இருக்கிறது. ஆக, தங்களின் கருத்துகளை வரவேற்கிறோம்.
// கணினிச் செய்திகளைச் செப்பருத்தியில் சேர்த்துக் கொள்ளலாம் எனும் தங்களின் விருப்பத்தை நிறைவேற்றும் முன்னம் இப்பகுதியில் பதிவிடப்படும் கருத்தாளர்களின் கொச்சைத் தனமான வாசகங்களையும் மாணவர்கள் படிக்க வேண்டியிருக்கும்.//
தோழர்கள் ஜீவி காத்தையா, பசுபதி, தம்பி கா. ஆறுமுகம். இவர்களின் கருத்துகளையும் நாம் தெரிந்து கொள்ள வேண்டும்.
கேமரன்மலைக்கு வந்து கணினி வறை சென்றதை பார்க்கும்போது,கேமரன்மலை உயரத்தை போன்று அவரின் சிந்தனையும் உயர்ந்தே கணிக்கப்படுகிறது,நன்றி வாழ்க நாராயண நாமம்.
ஆம் ஐயா தமிழன் உளறுகிறான்; கொச்சை வார்த்தைகளுக்குச் சொந்தக்காரன் நந்தன் உண்மை பேசுகிறான். கொஞ்சம் பின்னோக்கிப் பதிவுகளைப் பாருங்கள் நந்தன் போன்றோரின் பதிவுகளை. அப்போது தெரியும் யார் உளறுகிறார்கள் என்று!
ஐயா முத்துகிருஷ்ணன் அவர்களே ! உங்களின் (கணினி) சேவையை கருத்தில் கொண்டு பரிந்துரைத்தேன் ! நீங்களும் ஆவலாக இருப்பதாக தெரிகிறது நன்றி ! குறுக்கே வந்து ஒரு தமிழன் குட்டையை குழப்ப முயல்கிறான் ! உலகமே முன்னோக்கி போய் கொண்டு இருக்கிறது தமிழன் பின்னோக்கி போக சொல்கிறான் , தமிழன் மட்டும்தான் ஒரு கருத்து சொன்னால், மறுக்காமல் நாலு கருத்து சொல்லி குட்டிசுவர் ஆக்குவான் ! தமிழன் கொஞ்சம் மூடிக்கொண்டு இருந்தால் அனைவருக்கும் நலம் !
எனது கணினி அறிவு வளர்ச்சிக்கு, அவ்வப்போது ஜயா முத்துக்கிருஷ்ணன் அவர்களின் வலைதளத்தை வலம் வந்து பயனடைந்தது உண்டு. அவரின் சேவை நம்மைப் போன்றோருக்கு தேவை. செம்பருத்தியிலும் தொடர்ந்தால் அனைவருக்கும் நன்மையே. வணக்கம்.
இதற்கு எல்லாம் காரணம் , பழனி இன் ஆலோசகரோ ……..
கேமரன் மலையின் புளூ வேலி என்கிற இடத்தில் ஒரு வாரமாக காட்டு மரங்கள் வெட்டப்பட்டு வருகிறது. வெளிநாட்டு தொழிலாளர்களிடம் அரசு ஊழியர்கள் லஞ்சம் பெற்றுக்கொண்டு, இச்செயலை புரிகின்றனர். ஐயப்பன் மலையையே சுற்றிவரும் பழனி, கேமரன் மலை அழிந்து வருவதை தடுப்பாராக.
எம் கே நீங்கள் சொல்வது போல் இருக்கலாம்