தமிழ் நாட்டில் தமிழ் தேசியம், அல்லது தமிழர் நாடு என்ற அரசியல் மாற்றம் வேண்டும் என்பது நியாயம். அதுபோலவே தமிழ் ஈழம் ஜபானா தமிழர்களுக்கு தமிழ் ஈழம் வேண்டும் என்பதும் நியாயம். இது தவிர்த்து இதர உலக நாடுகளில் தமிழர்கள் இந்தியனாக வாழ்கிறான் இதில் 98 சகிதம் இந்துவாக வாழ்கிறான். இங்கே மலேசியாவிலும் இந்தியர்களில் 85 %தமிழர்களில் 80 % இந்துவாக இருக்கிறான்.
இந்து உரிமை அல்லது Hindraf என்ற மதம் சார்த்த இயக்கம் பல காரணங்களுக்காக அரசியல் போக்கில் பயணித்தது தவறில்லை! அதில் மக்கள் சக்தியை ஒருவன் வசப்படுதிகொண்டான். அதில் தமிழர்கள்தான் அதிகம். ஆனால் இந்தியன் அரசியல் ஆளுமை “அன்புக்கு” அடைக்கலம் கொடுத்து மடையர்கலானோம். தமிழர்களை மயக்கி தண்ணி தெளித்த கெடா போல மஞ்சல துணி காணிக்கைக்கு குறிப்பா தமிழர்களை “ஏமாளி” ஆளாக்கியாச்சு.இது Hindraf கு முதல் அடி !!
இதன் தொடர்தான் மலேசிய இந்தியர்களை மேலும் 11 பிரிவுகளாக நஜிப் அவர்கள் நண்டு கதையாக கொக்கிகள் போட்டு இந்தியன் கொடுக்குகளை உடைத்தார். அது ஒருவித அரசு அரசியல வியூகம் எனலாம்.இடுப்பை ஒடிப்பது வேறு ,,,முதுகின் Spinal முட்டுகளை கழற்றுவது மூளைக்கே ஆணி அடிப்பதாகும். இன்று மலேசியா இந்தியனுக்கும் தமிழனக்கும் இந்த கழற்றல் சீரியஸ் ஆபரேசன் நடந்துள்ளது தெளிவு!
இதில் வேடிக்கை என்னவென்றால் உதயா/ வேதா அம்பிலும் வில்லை உருவி விசத்தை கலக்கி தமிழர் சமுதாயத்தின் மீது பாய்ச்சியாச்சி!
இன்று உதயா சொல்கிறார் “பாக்காதானில் இந்தியன் அல்லது தமிழ் தலைவர்களை நம்பி போகாதீர்கள் மற்ற இன தலைவனை நம்பி அரசியல் நடத்துங்கள், நான் போய் வருகிறேன்” என்று பாடம் சொல்கிறார்! இது அவர் பட்ட கஷ்டத்துக்கு கிடைத்த தெளிவாகவும் இருக்கலாம். இது சரியோ, தவறோ இந்த சமுதாயம் முடிவு எடுக்கட்டும் என்பதும் அவரின் திறந்த உள்ளமாக இருக்கலாம்.
ஏன் பாக்காதானை நம்புங்கள் என்று சொன்னார்? என்பதில்தான் நமது அரசியல் ஊஞ்சல் மீண்டும் ஆட்டம் காண்கிறது ? மலேசிய இந்தியர்கள் அல்லது தமிழர்களின் அதிகமுள்ள PKR அரசியல் விளைவுகளுக்கு அன்வாரால் சரியான பதில் இல்லை. மற்றது DAP /PAS இரண்டையும் விட்டு தள்ளுவோம். காரணம் நாம் என்ன கரணம் போட்டாலும் நடுவண் அரசை இதுகள் பிடிக்கும் வரை அதுகளை நம் சக்தி நிமிர்த்த முடியாது. அங்கே நமது தலைவர்களின் நிலை அப்படி!
நாம் அடுத்த 14 வது பொது தேர்தலுக்கு மாற்றி யோசித்தால் என்ன என்று சிந்திப்போம் ?மாநில அரசுகளை விடுவோம். யாராச்சும் எப்படியாவது வரட்டும்.நாடாளுமன்ற முக்கிய நடுவண் தேர்வில் நம் கவனத்தை இப்போதே செலுத்துவோம்.
222 நாடாளுமன்ற நாற்காலியில் ஒரு 70தை இந்தியர்கள் கைப்பாற்றினால், பாகாதானுக்கும் தேசிய முன்னணிக்கும் மீதமான 152 சீட்டுகளில் பாதிக்கு பாதி தந்தாலும் ஒன்றுக்கு 76 வீதம் தந்தாலும் அரசை அமைக்க முடியாது. யாராச்சும் ஒருத்தன் இந்த இந்தியர்களின்/தமிழர்களின் ஓட்டில் சமரசம் பேச வரும்போது நமது முதுகு எலும்புகள் மீண்டும் பூட்டப்ப்டலாம்.
இதற்கு இந்தியானாக அல்லது தமிழனாக தனித்து நிற்கும் ஒரு விவேக கூட்டுத தலைவன் தேவை.
இதுதான் தீர்வு என்று உதயா சிந்தித்து இருக்க வேண்டும்.”இரண்டு கண்களும் போச்சிடா நொல்லையப்பா என்று நொண்டிகிட்ட போங்கப்பா” என்பதை விட நாட்டில் ஓட்டு உரிமை பெறாத இன்னும் 40 % இந்தியர்களின் /தமிழர்களின் ஓட்டு உரிமையை வலைபோடலாம் என்பது அறிவியல் அரசியலாகும்.
2007 ல் ஆரம்பித்த indraf போராட்டம் இன்று 7 ஆண்டுகளை கடந்து சமுதாயத்துக்கு அரசியல் ரீதியில் பயன் தந்ததா? அல்லது பாதிப்பை தந்தாதா? என்று எனக்கு சொல்லத தெரியவில்லை! எல்லோரும் சொல்வது போல நாம் விழித்துக் கொண்டோமா? அல்லது மலாய்க்காரர்களை விழிக்கசசெய்தோமா?
உண்மையை, ஆய்வுப்படி சொன்னால் என்னை தீண்டுவார்கள். அந்த எதிர்வினை அல்லது சாதனை விளையாட்டை சமுதாயத்திடம் விட்டு விடுகிறேன்.
நாட்டில் இருக்கும் அதிகமான இந்தியர்களை /தமிழர்களை அதிகமான அரசியல் கட்சிகளில் மோத விட்ட சமூதாய அரசியல் தலைவர்களை நாம் ஒவ்வொருவாக இழந்து வருகிறோம்! இதுவும் கடந்து போய்… இந்தியன் போர்வையில் ஒளிந்து தமிழர்களை அடகு வைக்கும் நிலை மாறி தமிழன் தலைவர்கள் இந்த நாட்டில் தமிழினம் ஒரு மூன்றாம் நிலை தேசிய இனம் என்பதை தமது அரசியலுக்காக மறந்து உள்ளனர் . தமிழர்கள் இந்தியன் அடிமையில் வாழும் எண்ணத்திலிருந்து மீண்டு வந்தால் செழிப்போம் இல்லையேல் சாவோம்.
யார் இந்த மலேசியத தமிழனின் அரசியல் தமிழ்த தலைவன் என்பதே இன்றைய அவசரக்கேள்வி? அல்லது இந்தியான் அடையாளம் தானா நமது சாபக்கேடு…….?
மீண்டும் வருவேன், நன்றி.
-பொன் ரங்கன்
பிள்ளையைக் கிள்ளிவிட்டு தொட்டிலை ஆட்டுபவர்களைக் கண்டிருக்கிறோம். ஆனால், ‘உண்மையை, ஆய்வுப்படி சொன்னால் என்னை தீண்டுவார்கள். அந்த எதிர்வினை அல்லது சாதனை விளையாட்டை சமுதாயத்திடம் விட்டு விடுகிறேன்’ என்று நழுவுபவரை இப்போதுதான் காண்கிறேன். மற்றவர்கள் திட்டுவார்கள் அல்லது தீண்டுவார்கள் என்று பயந்தால் எப்படி? நம் கருத்தை மற்றவர்கள் அப்படியே ஏற்றுக் கொள்வார்கள் அல்லது ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று எதிர்பார்ப்பது தவறல்லவா? எந்தக் கருத்துக்கும் மாற்றுக் கருத்து உண்டு. அப்படிப்பட்ட மாற்றுக் கருத்தும் பல வேளைகளில் நல்ல பலன்களைக் கொண்டு வந்ததும் உண்டு. உங்கள் கருத்துக்கள் மக்களைப் போய்ச் சேர வேண்டும். எனவே, தாராளமாகச் சொல்லுங்கள்.
ஒரு தமிழ்த் தலைவனைக் கொண்டு வந்தால் ஆயிரம் குறை சொல்லி அவனை விரட்டோ விரட்டென்று விரட்டி விடுவீர்கள். பழனிவேலு என்ன பாடுபடுகிறார் பார்த்தீர்களா? நமக்கெல்லாம் சாமிவேலு மகன் பாரிவேள் தான் லாயக்கு! அவர் தமிழன் தானே!
நமது பலம் என்னவென்று நமக்கு தெரிந்திருக்க வேண்டும் ஓன்று, நம்மையே நம்பாத நாம் இன்னொருவரை நம்பி தலைவர் என அடையாளம் காண முடியுமா? தொலைந்துப்போன,தொலைத்துவிட்ட ஒற்றுமை வேண்டுமே எப்படி மூன்று. முதலில் இவைகளை சரி செய்ய பார்ப்போம்!!!! ,
மலேசியர் தமிழருக்கு குறிப்பாக இந்தியருக்கு தலைவர் சாமி வேலு 20 வருடம் மேல் சேவை செய்தார், ஆனால் மலேசிய இந்தியன் குறிப்பாக தமிழன் கடை நிலை அடிமையாகிவிட்டான் ! சாமிவேலுக்கு பிறகு டத்தோ பத்மா , டத்தோ சுப்ரா,டான்ஸ்ரீ பண்டிதன்,கடைகோடி ஜி. பலனிவேளுவரை வருசையில் நின்று ஏமாந்து போனார்கள் ! இவையாவும் BN கட்சியில் இருந்து ஏமாந்தவர்கள், ஏமாற்ற பட்டவர்களின் பட்டியல் ! PKR ரில் அன்வாரிடம் இந்திய, தமிழர் மக்களை தலைமையேற்க கெடா மாநில கலைவாணர் ,கோபாலக்ருஷ்ணன்,ஹிண்ட்ராப் உதய குமார் போன்றோர் தலைவராக கடந்த பொது தேர்தல் நேரத்தில் தூண்டில் பட்ட மீனாய் துடித்தார்கள் ( உங்களிடம் தலைமை பொறுப்பை கொடுத்தால் என்ன செய்வீர்கள் ) என்று எனக்கு தெரியும் சொல்லி அன்வார் இவர்களை நிராகரித்தார் ! இந்த அடிமை பட்ட இனத்துக்கு மறுபடியும் ஒரு தலைவன் தேவையா என்ற கேள்வியும் எழுகிறது ! தோழர் பொன் ரங்கன் தலைமை பொறுப்பு ஏற்க துடிப்பதாக தெரியவில்லை !
ஆதி குமணன் போன்ற ஒருவர் இருந்தால் சிறிது மன ஆறுதலாக இருக்கும்.
ஆதி.குமணன்? பலருக்கு இவர் அருண் ஷோரி எனும் நினைப்பு. உண்மை நிலை தெரியாதவர்கள்
ரங்கா அட பொன் ரங்கா…உ.ப .த ரெடி தமிழின தலைவர் ….கட்சி சின்னம் ஆள்ள்…படை சேனை சொறி சிரங்கு ..தயார்….வாங்கோ வாங்கோ பிரியனை –தலப்பா- கடையில் பிரஸ் காங்பிறேன்சே…..
யார் இந்த மலேசியத தமிழனின் அரசியல் தமிழ் தலைவன் என்பதே இன்றைய [ ரங்கநின் அவசரக்கேள்வி? அவர் உ. ப த தலைவர் ஆகையால் அவர்தான் அடுத்த { த} கிழவர் ….எப்படி ….
மீண்டும் வருவேன், நன்றி.
சுண்ணாம்பு
காயமே இது பொய்யடா.
காற்றடைத்த வெறும் பையடா.
நல்ல தலைவன் வேண்டுமானால்,,,நமது சமுதாதிற்கு ,,,,நல்ல நடிக்கதெரியனும்,,,ரவுடியா இருக்கனும் ,,,,மலாய்காறருக்கு தலைஆட்டனும் ,,,,,,,,,வீரபாண்டிய கட்டபொம்மன் போல் ஒரு தலைவன் கிடைப்பது கடினம் ,,,,,,வீரபாண்டிய கெட்ட பொம்மன் கிடைப்பது சுலபம்,,,,,,,,,ஆண்டவா ,,,,,இந்த இந்திய சமுதாதிற்கு விடிவு காலம் எப்போது பிறக்கும் ,,,,,,நல்லோர் ஒருவர் உளரேல் அவர்பொர்ட்ட்டு பெய்யும் மலை //////////////
எங்க அப்பா சொக்களிங்கம்தான் அந்த தலைவர்
……………….தமிழை வாழ வைக்க ஒரு தலைவன் தேவை
அரசியலில் உள்ளவர்களில் 100 90% தமிளினத்தளைவர்கள் உண்மையான தலைவர்களாக இல்லை.இன்றைய நிலையில் உள்ள பல தமிழின தலைவர்களுக்கு தாய் மொழியான தமிழ் மொழி சரளமாக பேச முடியவில்லை.இவர்களில் 100 , 90% தங்களது குழந்தைகளை தமிழ் பள்ளியில் சேர்க்க வில்லை.இந்த தமிழின துரோகிகள் பட்டியலில் இளைய தமிழா வேல் ஆதி குமணன், இளம் சிங்கம் எம்.ஜி.பண்டிதன், சாமிவேலு ,பழனிவேலு, படுத்திருக்கும் சுப்ரமணியம், நடமாடும் டாக்டர் சுப்ரமணியம், sothinaathan, saravanan, பாலகிருஷ்ணன், devamani, தன் ஸ்ரீ டாக்டர் தம்பிராஜா , பேராசிரியர் மாரிமுத்து, பேராசிரியர் ராமசாமி, வழக்கறிஞர் மனோகரன் மலையாளம், தமிழ் எழுத்தாளர் சங்க தலைவர் ராஜேந்திரன் ………………………………………………………………………………………………….. இன்னும் இந்த பட்டியல் நீண்டுக்கொண்டே போகுது.இப்படி இருக்கையில் எப்படி அரசியலில் தமிழின தலைவர்களை நாம் காண முடியும்.எப்படி தமிழ் நாட்டில் தமிழ் குடிதாங்கி என்று போற்றப்பட்ட ஒருவர் சாதி அரசியல் நடத்துகிறாரோ அதே போல் நம் நாட்டிலும் உண்மையான தமிழின தலைவர்கள் அரசியல் அரங்கில் நான் யாரையுமே பார்க்க முடியவில்லை.ஆனால் அரசியலுக்கு அப்பால் ஒரு தலைவர் இருக்கிறார் அவர் தன மலேசியா திருமாவளன்.இவரிடம் உண்மை இருக்கிறது என்பது பார்வை.vendumaanaal திருமாவளன் pondravarkal மலேசியத் thamilinat தலைவர்களாக valam வர வேண்டிய தமிழ் அறிவு, உண்மை இருப்பதாக கருதுகிறேன்.அவரை தவிர மானம் உள்ள nalla தமிழ் அறிவு vulla தலைவர்கள் yaarum இருப்பதாக enakku teriyavillai.
எனக்கு தெரிந்து சத்தம் இல்லாமல் உலுசெலங்கோர் சேர்ந்த கண்ணா மூர்த்தி அவர்கள் பல சேவைகளை செய்து வருகிறார் …அவர் ஒரு பட்டதாரி தன் செல்வங்கள் இருவரையும் தமிழ் பள்ளியில் சேர்த்து உள்ளார் , தமிழ் பள்ளிக்காக பல சிறந்த சேவைகளை செய்து உள்ளார் , ஒரு முறை அவரை தமிழ் நூல் வெளியிட்டு நிகழ்வில் கண்டு பேசிய ஞாபகம் இவர் ஹிந்து சங்க வதியும் குட ஒரு சிறந்த தலைவர் ……..
நக்கல் நாராயணன் எனக்கு ஆதி குமணன் பற்றி அவ்வளவு தெரியாது.நண்பன் பத்திரிக்கை படித்துதான் (முன்பு) சில விட்சயங்களை தெரிந்து கொண்டேன் –அப்படி உங்களுக்கு தெரிந்த உண்மையை சொன்னால் தெரிந்து கொள்ள விரும்புகிறேன்.
Thalaivanai theduvathai vida thamilina otrumaiyay theduvathu mikavum indriyamayaatha ondru
தமிழின தலைவனை விட தமிழின ஒற்றுமையே இன்றைய நிலையில் இன்றியமையாத ஒன்று
அன்பின் வழியது உயர் நிலை
அஃதிலாற்கு எம்புதோல் போர்த்திய உடம்பு
நமது நிலை ஒரு போராடமான நிலை. தலைவன் ஒருவன் வருவான். அந்த தலைவனை நாம் மதிக்கின்றோமா என்பதே கேள்வி
நாம் தலைவனை மதிப்பதில்லை. வசை பாடுவதில் வல்லவர்கள்
குறை சொல்வதில் சளைத்தவர்கள் அல்ல
எந்த தலவன் வந்தாலும் ஒன்றும் செய்ய முடியாது….அப்படிபட்ட சமுதாயத்தில் இருக்கின்றோம். மற்ற இன தலைவன் ஆண்டால் சரி வரும்!!!! ஹ ஹ ஹ
வணக்கம் வால்டோர் அறிவாளி அவர்களே ! ரொம்ப நாளா காணவில்லை ! வழக்கம் போல் கலக்குங்கள் !
கெட்டவர்களிடம் இருக்கும் நல்ல குணம் அவர்களிடமிருக்கும் ஒற்றுமை. நல்லவர்களிடம் இருக்கும் கெட்ட குணம் ஒரு தலைவனின் கீழ் ஒற்றுமை பாராட்டி செயல்படாமை. குறகள் சொல்ல முந்தியும் நிறைகளைச் சொல்ல மறுப்பதுமாகும்.
இன்றைய தேவை தமிழ் தேசியே தலைவன் மட்டும் அல்ல. தமிழ் தேசியே அரசியல் கட்சியும்தான்.
இவை இரண்டும் இருந்தால் தான் இந்தியர் எனும் தமிழ் தேசியத்தினை அழிக்கும் சிறையில் இருந்து விடுபடமுடியும்.
குறிப்பு : சிலர் தமிழ்நாட்டில் இருக்கும் நாம் தமிழர் கட்சியை இங்கே உருவாக்கி வருகிறார்கள். தப்பில்லை, ஆனால் அந்த கட்சியின் கொள்கை முழுமையாக யேற்றுக்ககொள்ளக்கூடியது இல்லை. காரணம் சீமானின் முரண்பாடான கொள்கையே.
மலேசியாவுக்கென நாம் தமிழர் கட்சி தேவையே. ஆனால் அது தமிழ்நாட்டில் இருக்கும் நாம் தமிழர் கட்சியின் பிழையான முடிவுகளை ஆதரிக்ககூடாது.
மாறாக, தலைவர் பிரபாகரனின் கொள்கையை பின்பற்றுவதுவே சிறப்பும் தேவையும்.
தென் நாடு உற்பட எங்கெல்லாம் வாழ்கின்றீரோ,அங்கெல்லாம் பிற இனத்தானே,அன்னியனே ஆழ்கின்றனர் இவ்வினத்தை.ஈ.வெ.ர.நாய்கண் தமிழ் மொழியை கொச்சை படுத்தினான் அன்று இன்று தமிழ்பள்ளியே கூடாது என்கின்றது மலேசிய அரசு.ஆங்கில பள்ளியில் படித்தவரே இன்று தமிழை நேசிக்கின்றனர் உதாரணம் பாண்டிதுறை.தமிழ் பள்ளியில் படித்தவரோ தமிழ் பள்ளியை சுரண்டி போகின்னர்.ஸ்ரீ வல்லுவத்தின் அறத்தை போதியுங்கள்.அதற்கு பேர் தான் ஒரு தனிப்பட்ட இன பள்ளி.தமிழ் கட்சி வேண்டும்,தலைமை வேண்டும்,தலைமைக்கு கட்டுப்படுதல் வேண்டும்.இது ஏற்படுமா,சாத்தியமில்லை,நாராயண நாராயண.
வெடி போட்டேன் விடை இல்லை ..வெடிக்கிறேன் !
+++++++++++++++++++++++++++++++++++++++++++++++
தோழர்களே! மலேசியாவில் குறைந்தது 2000 பதிவு பெற்ற இந்தியர் சார்பு பொது இயக்கங்கள் உள்ளதாம் இதில் ஒரு இயக்கத்தில் குறைந்த பட்சம் 5 பேர் என்றாலும் 10,000 இயக்கப பொறுப்பாளர்கள் உள்ளோம்.
நான் கேட்ட கேள்விக்கு இதுவரை இரு பெயர்கள் மட்டுமே பதிவாகி உள்ளது என்றால் நமக்கு என்ன பிரச்னை என்று ஆய்வு செய்வோம்.?
இந்நாட்டில் என் பார்வையில் குறைந்தது 3 மில்லியன் இந்தியர்கள். கணக்குப்படி 85% தமிழர்களாம். இதில் 10 அரசியல் கட்சிகளில் தனி அல்லது சுய ராஜியம் அமைச்சி 10 வித தலைவர்கள். ம இ கா வில் தலைமைத்துவ அரசியல் நிர்வாக கோளாறு மட்டுமே ஆனாலும் நிலையாக ஒரு அரசியல் கட்சிக்கு வேண்டிய அம்சங்களை நிறைவாகவே வைத்துள்ளது. இதில் BN நில் சேர தொங்கி நிற்கும் இதர இந்தியர் கட்சிகள் சுய பேரம் பேச எதோ ஒரு ஆசையில் கொக்கை போல நின்றாலும் இன்னும் வாய்க்கு எட்டா புழுவாக BN கழுவி நழுவி வைத்துள்ளது.
இதில் மக்கள் சக்தி டத்தோ தநேதிரன் தமிழ் இடை நிலைப்பள்ளி வேண்டும் என்று கோரிக்கை வைத்து சமுக தேவையில் ஒரு பதிவை செய்துள்ளது.
அடுத்து ம இ காவின் டத்தோ சரவணன் பொருளாதார சிந்தனையில் ஒரு லட்சம் இளஞர்களுக்கு மிளகாய் தொட்ட திட்டம் வைத்துள்ளார்.
இருக்கும் மற்ற அரசியல் தலைவர்களிடம் எந்த திட்டமும் இல்லை.. இருக்கும் மாவை அரைக்கும் மந்திரங்களை ஊதி வேப்ப மர உச்சியில் நின்று பேய் ஒன்றை பார்த்துவிட்டது போல அதோ இதோ என்று அரசியல் தனம் ஓடுகிறது. இதில் குறிப்பா ஜனநாய ம இ கா என்ற கட்சி மாநாடே இல்லாமல் குடும்ப அரசியல் தனம் அது ஒரு வெக்கங் கெட்ட வேடிக்கை தலைமைத்துவம் ? இதற்கும் பேர் ஜனநாயகமாம்.!!
மற்றதுகளை எழுதி என் பொழுதை வீணாக்க விரும்பவில்லை.மற்ற இந்தியர்கள் இணைத்துள்ள DAP /PKR தலைமைகள் இதெல்லாலம் பதவிக்கு பல்லின பல்லிளிக்கும் களிசல்கள்.
என் கட்டுரையில் மலேசியா தமிழர்களுக்கு யார் அந்த சிறந்த அரசியல் தலைவர் என்பதால் இருந்தவர்களை விட்டுவிட்டு இருக்கும் அல்லது இருக்க நினைக்கும் சிலரை சிந்திக்க வைப்பது எனது நோக்கமாக உள்ளதை நீங்கள் உணர வேண்டும்.
நாடு எங்கே செல்கிறது என்பதை பிரதமரிடம் கேக்க வேண்டும்! அரசியல் ரீதியில் நாம் தமிழர்கள் எங்கே செல்கிறோம் என்று யாரை கேர்ப்பது? அமரர் எம் எஸ் உதய மூர்த்தி அவர்கள் தமிழர்கள் அரசியல் உயர எவ்வளோ சொல்லியும் எவனும் கேர்க்கவில்லை மனுஷன் பிற தலைவர்களைப்போல ஒரு ஏக்கத்தில் இறந்தே போனார். அவர் தோற்று வித்த கண்டுபிடித்த மக்கள் சக்தி இயக்க சிந்தனைதான் ஹிண்ட்ராப் வழியில் தொற்றி இன்று தனேந்திரன் தலைவராக உள்ளார்.
அந்த வகையில் டாகடர் உதய மூர்த்தியின் கனவுகள் அரசியல் காட்சி தந்தாலும் அது நிறைவை எட்டுமா என்று பொழுதுகள் விடிய காத்துள்ளோம்.
உதய மூர்த்தியின் எழுத்து என்னவெல்லாம் செய்யும் என்று பொருது இருந்து பாருங்கள் என்று கோலா லம்பூரில் அவர் ஆற்றிய கடைசி உரைதான் மக்கள் சக்தி என்றால் மிகை இல்லை.
இங்கு ஆளும் கட்சி எதிர் கட்சி என்ற வெடிகள் இல்லாமல் தமிழனக்கு தனி கட்சி தமிழ் தலைவன் என்று பாத்தால் தனேந்திரன் இல்லை என்று நீங்கள் சொல்லவதும் எனக்கு கேற்கிறது.
தமிழ் அறவாரிய முன்னாள் தலைவர் மனோகரன் / இந்நாள் தலைவர் பசுபதி /சுஹகம் ஆறுமுகம்/ DAP குலசேகரன் /ராமசாமி / PKR சேவியர் , சுரேஸ்குமார், / ம இகா சரவணன்./ சிவராஜா / சீட் DR குமார ராஜா போன்றோரை நல்ல தமிழ்த தலைவர்களாக பார்க்க முடிகிறது.
இவர்கள் வெறுமனே ஆசைப்படுவதிலும் ,ஏக்கப்படுவதிளும் அர்த்தமில்லை !இப்படி காத்திருந்து காலங்களை வீணாக்கினால் இன ஜனநாயகம் தோற்று வருகிறது என்று அர்த்தம்.
இனவெறி ,நிற வேற்றுமை ,தனி மனித கௌரவம் ,இன கௌரவம் எல்லாம் மகாத்மா காந்தி அடிப்ப்படும்போதுதான் உணர்ந்தார்.மாறுதல்கள் வளர்ச்சிக்கு அறிகுறி நாட்டில் நடக்கும் நீண்ட கால அழிப்புகள் தெரிதும் தெரியாததை போல இருக்கும் தலைவர்களின் ஏமாற்று கால விரையம் சுவாசிக்கு ஆக்சிஜனி கொஞ்சம் நிறுத்தி வைத்து வ்வேடிக்கை காட்டினால்தான் புரியும் போல!
நாடு அடுத்த கட்டத்திற்கு தயாராகும் போது நாம் இருக்கிற சிக்கலில் எவரையும் தேர்வு செய்ய முடியாது போனால் தனி தலைவன் தனி உருவாக வேண்டும். தமிழர்களின் ஒற்றுமை உரிமை பேசம் தனி தனி தலைவர்கள் ஏன் ஒரு இரவு நேரத்தில் விடிய விடிய பேசி ஒரு தலைவனை புரிய இவ்வளவு கஷ்டம்?
நாட்டில் தமிழர்களுக்கு எல்லா சிக்கலை காட்டிலும் தமிழ்த தலைவன் தனி சிக்கல்தான் எல்லா வறுமைக்கும் எருமையாக உள்ளது. இன பலவீனம் தெரிந்து சுய அரசியல் கட்சிகள் நடத்தும் தலைவர்கள் சந்திக்க எந்த தலைவன் தயார் என்பதுதான் இன்றைய சவால். இதைதான் உதய மூர்த்தி M B O என்றார்ர் அதாவது management by objective . நமது அரசியல் நோக்கம்தான் என்ன? இது இல்லாமல் கட்சி நடத்துவது அன்றாடம் காய்ச்சிகள் கட்சிகளுக்கு சமம்.
இதுவரை மலேசியா தமிழ் தலைவர்களுக்கு பலவீனமான குணங்கள்தான் இந்த தலைவன் தரத்துக்கு தடையாக உள்ளது. தலைவன் பிறப்பதில்லை அவன். அவன் அவன் தனி தன்மைதான் தலைவன் உருவாகிறான். இதில் சமுதாய வலிமை,சாமாத்தியம் வேண்டும். இதை சொல்பவன் யார்? அவனின் பொருளாதார வளம் இந்த சமுதாயம் தர வேண்டும். அவன் வந்துவிடுவான்,புத்திசாலி தலைவன் எந்த பிரச்சனைக்கும் வழி கண்டு விடுவான். அப்படி யாரும் இல்லை என்பதை இப்போது ஒப்புவோம். இதுதான் என வெடியின் விடை. ஆனால் ஒரு தமிழ் தலைவன் எழுவார் என்ற நம்பிக்கை உண்டு.
நாம் தமிழர் மலேசியா
உதவி தலைவர்.
தமிழ் மாநாடுகள் தமிழனுக்குத்தானே! தமிழர்கள் நிமிர வில்லையே ஏன் ?
+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
தமிழ் மாநாடுகளும் தமிழர்களும் – நாடுதோறும் தமிழ் மாநாடுகள் நடத்தியதன் பலன்தான் என்ன? 2013 -2025 மலேசியாவில் தமிழ்க்கல்விக்கு ஆபத்து, அழிவு என்று தமிழ் அறவாரிய திரு ஆறுமுகம் அவர்கள் கத்தை கத்தையாய் ஆய்வு செய்துள்ளார். அவரை யாரும் அழைத்து தமிழ் சிக்கலை பேசாத மாநாடுக்கு பேர் தமிழ் மாநாடு ? தமிழ் நாட்டில் தமிழும் தமிழ் இனமும் தமிழ் ஈழ சிக்கலும் சிரிப்பா சிரிக்க வைகோ வந்து இங்கு என்ன கிளப்ப போறார்…..?
தமிழ் மாநாடுகள் தமிழனுக்குத்தானே! ஆனால் தமிழ்த தலைவர்கள் உருபடவில்லையே ஏன் ? வைக்கோ பதில் சொல்ல்வாரா ? ஒரு இனத்து வாக்குகள் வேண்டும் இதனால் தமிழ் மாநாடு மாற்றானிடம் மண்ணாகட்டுமா?
உறங்கும் மிருகம் எழுந்துவிடட்டும்
தொடங்கும் கலகம் குனிந்துவிடட்டும்
பதுங்கும் நரிகள் மடிந்துவிடட்டும்
தோள்கள் திமிரட்டும்
துடிக்கும் இதயம் கொழுந்துவிடட்டும்
தெறிக்கும் திசைகள் நொருங்கிவிடட்டும்
வெடிக்கும் பகைமை மறைந்துவிடட்டும்
நட்பே ஜெயிக்கட்டும்…. இந்த பாடலை மீண்டும் மீண்டும் பாடி பார்க்கிறேன் ! ஆனால் அந்த தமிழ் ,தமிழன் வெற்றி திசை மட்டும் தெரியவில்லை ?
தமிழ் மாநாடுகள் தமிழனுக்குத்தானே! ஆனால் தமிழ்த தலைவர்கள் உருபடவில்லையே ஏன் ? வைக்கோ பதில் சொல்ல்வாரா ? ஒரு இனத்து வாக்குகள் வேண்டும் இதனால் தமிழ் மாநாடு மாற்றானிடம் மண்ணாகட்டுமா?
2014 இறுதி இரண்டு மாதங்களில் பினாங்கில் உலகத்தமிழ் மாநாடு, கோலாலம்பூரில் 10 வது உலகத்தமிழ் ஆராய்ச்சி மாநாடு , தமிழ் விழா என்று மூன்று முத்தான நிகழ்வுகள் நடக்க உள்ளது மனதுக்கு மகிழ்ச்சிதான்.
இதில் பினாங்கு மாநாடு புதிதாக முளைத்துள்ளது. உலகத்தமிழ் ஆராச்சி மாநாடு பத்து ஆண்டுகளுக்கு முன்பு வெட்டப்பட்ட கிளை மறுபடி முளைத்துள்ளது. தமிழ் விழா கடந்த 7 ஆண்டுகளாக ஒரு தமிழ் ஆர்வலர் தனி பாஸ்கரன் முயற்சியில் நலமே நடந்து வருகிறது.
உலகத்தமிழ் ஆராச்சி மாநாடும் . புதிதாய் வந்துள்ள பினாங்கு உலக தமிழ் மாநாடும் இரண்டு பலம் பெரும் அரசியல் வாதிகள் நடத்தும் மாநாடுகளாகும்.
மூன்றும் தமிழுக்கு மகுடம் சூட்டும் மாநாடுகள்தாம் என்பதில் சந்தேகமில்லை. கடலில் கப்பல்கள் இலக்கு நோக்கி அடைய முன்பெல்லாம் கடல் கரை விளக்கு வைத்து கப்பல்கள் வந்து கரையை தொடும். இப்போதெல்லாம் பல திசை காட்டிகள் இருப்பதால் மாலுமிகள் தூங்கினாலும் கப்பல் கரையை தொட்டுவிடும்.
எனக்குத்தெரிந்து 30 ஆண்டுகளுக்கு முன்பு தமிழ் இனி சாவும் என்று யாரோ சொன்னதாக ஒரு புலம்பல் இன்றுவரை உண்டு. இதை பொய்யாக்கிய பெருமை மலேசியா தமிழர்களுக்கு உண்டு என்பதை உலகம் அறியும், தமிழர் நாட்டு இலக்கிய அறிவர்களும் இதை ஒப்புக கொண்டு நம்மை பாராட்டுகின்றனர் என்பதில் மகிழ்ச்சிதான். இதில் தமிழ் மொழிக்கு கணினி உலகில் வளம் சேர்த்த மலேசியா மற்றும் தமிழக தமிழ் ஆர்வலர்களை மதிக்கிறோம்.
தமிழ் வளரும் வேகத்தில் தமிழன் வளர்ந்தானா ? இவன் வளரவில்லை என்றால் இந்த உழைப்புகள் யாவும் என்னவாகும் என்ற போராட்ட காலத்தில் உலகத்தமிழர்கள் உள்ளோம்.
தமிழில் பிழைக்க, அரசியல் நடத்த, தமிழ் வளர்ப்பதுபோல் தன்னை தமிழால் வளர்ந்து அரசியல் நடத்தும் திராவிட குழுமத்தில் பலர் உள்ளனர். ஆனால் தமிழன் தமிழால்,தமிழ் இனத்தால் வளர்ந்துள்ளானா? என்றால் பெரும்பாலான தமிழ் தலைவர்கள் அரசியல் நடத்த அவர்களைப்ப்போல் இவனும் தமிழை தற்காலிக
தடமாக பாவித்து கரை சேர்ந்த நிலையில் துடுப்பை குப்பையில் வீசி விட்டு சுய வாழ்வியல் அகப்பையை நிரப்பிக்கொண்டர்வர்களதாம் அதிகம் இதனால் தமிழன் என்ற இனம் நோக்க்மின்றியும் கொள்கையின்றியும் உருப்படாமல் போனது நமது துர்ரதிஸ்டம் என்பேன்.
தமிழை அரசியலுக்கு அனுபவித்து அரசியல் அரசு ரீதியில் தமிழுக்கு ஆபத்து வரும்போது ஒருத்தனையும் பார்க்க முடியவில்லை. மலேசியாவில் ஆளும் கட்சி தாய் கட்சி என்று ம இ கா இருந்தும் 2013 -2025 புதிய கல்வி கொள்கையில் தமிழுக்கு கிடைத்துள்ள அழிவை தட்டி கேற்க யாருமில்லா விளங்காததன தமிழ் அரசியல் வாதிகள் (வதிகள் ) குழம்பிய குட்டையில் மீன் பிடிக்கும் கருவாடுகளாக போயினர்.
அறுக்க மட்டாதன் கையில் அறுபதெட்டு அருவாள் என்பது போல அரசு அரசியல் ரீதியில் ஒரு பக்கம் தமிழ் மொழிக்கு அழிவை கண் முன்னே வைத்துகொண்டு நாடுதோறும் தமிழ் மாநாடுகள் நடத்துவதின் பலன்தான் என்ன?
கூடி களையும் கூட்டம் என்பது இந்த தமிழனுக்கா? அல்லது இதுபோன்ற மாநாடுகளில் புகுந்து தமிழை தமிழன் அல்லாதவன் சரிக்கும் சம்பரதாயம்தான் என்ன?
தமிழ் நாட்டில் தமிழ் ஈழம் தமிழர்களை காட்டி பல கூட்டணிகள் அரசியல் வாழ்வாதாரம் நடத்தும் மோகத்தில் இங்கு நடக்கும் பினாங்கு உலகத தமிழ் மாநாட்டிற்கு தமிழன் அல்லதா தமிழ் வழி தெலுங்கு வை கோவை தலைமைதாங்க வைத்துள்ள ஒரு தமிழனின் நிலையை ஆராய வேண்டிய காலம் வந்துள்ளது?
கடந்த முப்பது ஆண்டுகளாக தமிழ் ஈழம் ஒப்பாரியில் தான் மதிய அமைச்சில் அமைச்சராக இருந்த போது கூட ஒரு மண்ணையும் நகர்த்த முடியாமல் பேச்சில் ஓலத்தையும் ஒப்பாரிகளையும் தூவி தமிழர் நாட்டு தமிழர்களை /தமிழை வைத்து தமிழனி பந்தாடும் ஒருத்தரை பினாங்கு உலகத தமிழ் மாநாட்டிற்கு தலைமை தாங்க வைத்துள்ளது என்ன அறிவிலித்தனம் என்று யோசிக்கிறோம்?
தமிழ் எல்லார்க்கும் உரியது, வந்தாரை வாழவைக்கும் தமிழ் நாடு என்பதின் தமிழன் அல்லதான் வார்த்தை வசனத்தில் மயங்கி மக்கி இருக்கும் தமிழினத்தை ஏய்க்க மற்றொரு மாநாடா?
திராவிடத்தால் தமிழர் நாடும் ,தமிழ் இனமும் சீரழிந்த கோலங்கள் போதும் இனியாவது திருந்துவோம் என்றவர் இன்று திராவிடன் தீயில் ஈயாய் கொல்வது எனோ?
கோயம்புத்தூரிலும் பிறகு கோலாலம்பூரிலும் உலகத்தமிழர் பாதுகாப்பு மாநாடுகளுக்கு தளமி ஏற்றார் பிறகு தமிழன் சீமானை வரவேற்று அரசியல் அலங்காரம் செய்ய ஒரு தமிழர் பணிப்படை விழா நடத்தி உலகத தமிழ் தலைவன் பட்டம் தந்தும் இதுதான் அடியா ? போதவில்லை … தமிழன் எங்கே செல்கிறான் என்பதை மாற்றி, தமிழ் தலைகள் எங்கே அடைக்கலம் ஆகிறது என்ற மாநாட்டை கூட்ட வேண்டிய காலத்தில் உள்ளோமா?
உலக இனம் ரீதி மக்களுக்கு யாரவது ஒரு தலைவன் இருப்பான் ஏன் மூன்றாம் உலக நாட்டில் கூட தலைவர்கள் உருவாகிவிட்ட வேளையில் தமிழனுக்கு மட்டும் அந்த பாக்கியம் இல்லாமல் போய் பொய்யாகி விட்டத்தின் தலை விதிதான் என்ன?
மாநாட்டிற்கு நம்மை பிரதிபலிக்க ஒரு தலைமை இல்லாத இனமா?
இனக்கொள்கை போராட்டத்தில்தான் இந்த உலகம் வாழ்கிறது.
மகாத்மா காந்தியும் அதைதான் செய்தார்?
வீடு பற்றி எரியும்போது பீடிக்கு நெருப்பு கேட்டவன் வரிசையில் நிற்காமல் தண்ணி கொண்டு அணைக்க வருபவன்தான் தலைவன்.
உலகத தமிழன் வீடுகள் எல்லாம் இன /மொழி உரிமை எரிந்து புகைந்ததுக்கொண்டு வருகிறது. மாநாடுகள் இலக்கு நோக்கி இல்லாமல் தனி மனித லச்சங்களுக்கு அர்ச்சனை செய்வதை இனம் வன்மையாக கண்டிக்க வேண்டும்.
பொதுவில் இன முதலீட்டில் தனி மனித திமுருகளை என்று அடக்குகிறோமோ அன்றுதான் நல்ல அரசியல் நெறிகள் தோன்றும் .இது துரோகம் என்ற பயம் இருந்தால்தான் நமது இன, மொழி உரிமை தூய்மை பெரும். மொழியே இனத்தில் விழி. இங்கு இனத்தலைவர்களே அருவருடியாக இருந்தால் புதிய அரசியல் கடிவாளம் கட்டுவது நமது கடமை. அதற்கு இன விழிப்பும், மொழி தெளிவும் தெரிந்த தைரியமிக்க தலைவன் தேவை.
இந்திய இயக்கங்கள் யாவும் ஒன்று சேர்ந்து முதலில் இந்தியரை கேலி செய்து பேசும் எம்பி களையும் மலாய் தலைவர்களையும் அடக்கி வாசிக்க சொல்லுங்கள்..இவர்களால் நம் இன பிள்ளைகளும் வெளியே பகடிவதைக்கு ஆளாகி வருகின்றனர்..இவர்களை தடுத்து நிறுத்தாமல் 1000 மாநாடுகளை நடத்தி ஆகப்போவது என்ன ??சுவர் இருந்தால்தானே சித்திரம் வரைவதற்கு ?? மாநாடு யாருக்காக ? உங்கள் அப்பாவுக்கும் தாத்தாவுககுமா ??