வணிக சமூகமாக நாம் இந்த மண்ணில் காலெடுத்து வைத்தோம். வெற்றி மேல் வெற்றி பெற்றோம். இது நமது வரலாறு.
இந்த வரலாறு மீட்டு எடுக்கப்பட வேண்டும். இடைக்காலத்தில் நாம் வீழ்ச்சி அடைந்திருக்கலாம். காரணங்கள் பல. ஆனால் அதனையே சொல்லிக் கொண்டிருக்க முடியாது. நாம் மீண்டும் பழைய நிலைக்கு, அந்தப் பொற்காலத்திற்குச் செல்ல வேண்டும்.
அரசாங்க உதவி இல்லாமல் நம்மால் எதையும் சாதிக்க முடியாது என்று சொல்லுபவர்கள் நம்மிடையே உண்டு. அரசாங்க உதவி என்பது நாம் சாதித்த பிறகு தான் கிடைக்கும்! இதைத்தான் நடைமுறையில் நாம் பார்க்கிறோம்!
எந்தத் தொழிலாக இருந்தாலும் ஆரம்பிக்கும் போது ஒரு சில தடங்கல்கள் இருக்கத்தான் செய்யும். இந்தத் தடங்கல்கள் பெரும்பாலும் நமது சுற்றுப்புறத்திலிருந்து தான் வரும். சிலரது வார்த்தைகள் நம்மைக் கலங்கடிக்கும். இப்படி எதிர்மறையான கருத்துக்களை உதிர்ப்பவர்கள் பெரும்பாலும் தோல்வியாளர்களைத் தான் சுட்டிக்காட்டிப் பேசுவார்கள்.
இந்த இடத்தில் மிகப்பெரிய உண்மையை நாம் உணர வேண்டும். நமது சமூகம் தோல்வியாளர்களுக்குத் தான் முக்கியத்துவம் கொடுக்கிறது. நம்மோடு உறவாடுபவர்கள், நமக்கு நெருக்கமானவர்கள் யார் என்று பார்த்தோமானால் அனைவரும் ஏதோ ஒரு வகையில் தோல்வியாளர்களாகத் தான் இருப்பார்கள்.
நாம் பேசுகின்ற பேச்சுக்கள் அனைத்தும் தோல்வியாளர்களைப் பற்றியதாகத்தான் இருக்கும். இருபத்து நான்கு மணி நேரமும் தோல்வியைப் பற்றியை பேசிக்கொண்டிருந்துவிட்டு வாழ்க்கையில் வெற்றிபெற வேண்டுமானால் எப்படி வெற்றிபெற முடியும்?
நமது சிந்தனைகளை நாம் மாற்ற வேண்டும். நமது எண்ண ஓட்டங்களை நாம் மாற்ற வேண்டும். தோல்வியைப்பற்றிப் பேசுவதும், தோல்வியாளர்களோடு கைகோப்பதும் ஒரு வெற்றியாளனுக்கு தடங்கலாகவே இருக்கும். நாம் தோல்வியைத் தழுவது இது போன்ற தோல்வி மனப்பான்மை உள்ளவர்களால் தான்!
வெற்றி பெற்றவர்களே நமது இனத்தில் இல்லையா? நிறையவே இருக்கின்றனர். வணிகத்தில் சிறந்து விளங்குபவர்கள் குஜாராத்தியரும், முஸ்லிம்களும். கல்வியில் சாதனைப் புரிந்தவர்கள் பஞ்சாபியர்களும், மலையாளிகளும். தமிழர்கள் இவர்களை விட இன்னும் அதிகமாகவே சாதனைகள் புரிந்திருக்கின்றனர். வியாபாரத்துறையில் நாம் அதிகமாகவே சாதனைகள் புரிந்திருக்கிறோம். கல்வித்துறையில் நாம் யாருக்கும் குறைந்தவர்கள் அல்ல. ஆனால் நமது சாதனைகள் இன்னும் அதிகரிக்கப்பட வேண்டும் என்பது தான் இன்றைய நிலை.
நாம் எவ்வளவு தான் பல துறைகளில் சிறந்து விளங்கினாலும் பொருளாதாரம் என்று வரும் போது வியாபாரத்துறை மட்டுமே நம்மை உயர்த்திக் காட்டும். மற்றத் துறைகளை விட வியாபாரம் மட்டுமே மிகவும் சவாலான ஒரு துறை. ஐந்தாண்டு படித்தோம், பத்தாண்டு படித்தோம் பின்னர் படிப்பைச் சார்ந்த ஒரு தொழில் வல்லுனர் ஆனோம் என்பதெல்லாம் வியாபாரத்துறையில் சரிபட்டு வராது. மற்றத் துறைகளை விட வியாபாரத்துறையில் மட்டும்தான் கற்பனா சக்தி அதிகம் வேண்டும். வியாபாரத்துறையில் சவால்கள் அதிகம். அதே போல சங்கடங்களும் அதிகம்.
எனக்குத் தெரிந்த தொழிலதிபர் ஒருவர் போக்குவரத்து தொழிலில் உள்ளவர். சட்டம் படித்தவர். பல லோரிகளுக்கு உரிமையாளர். ஒரு நாள் லோரி ஓட்டுனர் தீடீரென வேலைக்கு வரவில்லை. வேறு வழியில்லை. அவரே லோரி ஓட்டுனராக மாறினார்! அதைப் பற்றியெல்லாம் அவர் கவலைப்பட்டதாகத் தெரியவில்லை. தொழிலில் இதெல்லாம் “சகஜமப்பா” என்பார்.
ஒவ்வொரு வணிகருக்கும் ஆரம்பகாலம் என்பது மலர் மெத்தை அல்ல. இன்று வணிகத்தில் ஒருவர் கொடிகட்டிப் பறக்கின்றார் என்றால் ஆரம்பகாலத்தில் அவர் பட்ட துன்பங்கள், துயரங்கள் துரோகங்கள் அனேகம். அதனைக் கடந்து தான் இன்றைய நிலைக்கு அவர் வந்திருக்கிறார். நம்மில் சிலர் மந்திரத்தால் மாங்காய் பறிக்க நினைக்கின்றனர். வணிகத்தில் உழைப்பும், திட்டமிடுதலுமே முக்கியம்.
புயலுக்குப் பின் அமைதி என்பது போல ஆரம்பகாலம் சவால் மிக்கதாக இருந்தாலும் பிற்காலத்தில் அமைதி உண்டு. ஒரு தொழிலைத் தொடங்கி அந்தத்தொழில் வளர்ச்சி பெற்றப் பிறகு அந்தத் தொழிலை உங்களின் வாரிசுகளிடம் ஒப்படைக்கும் போது வாழ்க்கையில் நாமும் சாதித்தோம் என்னும் பூரண திருப்தி ஏற்படுகிறது. மற்ற தொழில்களில் ஏற்படும் சாதனைகள் பள்ளிகளில் நாம் படித்தவைகளின் தொடர்ச்சி. ஆனால் வியாபாரத்தில் ஏற்படும் சாதனைகள் நம்மால் – நாமே ஏற்படுத்திய சாதனை. நாமே அதற்குப் பொறுப்பு. காரணம் வியாபாரத்தில் மட்டும் தான் அடிபட்டு, உதைப்பட்டு பல அனுபவங்களைப் பெற்று சாதனைகள் புரியமுடியும்.
இன்று நாம் என்ன செய்கிறோமோ அதனைத் தான் நாளை நமது பிள்ளைகளும் செய்வார்கள். இளம் வயதிலேயே வியாபாரம் செய்ய வேண்டும் என்னும் ஆர்வத்தை அவர்களுக்கு நாம் ஊட்ட வேண்டும்.
நமது நிறுவனத்தில் பத்து பேர் வேலை செய்தாலும் ஒரு பத்து பேர்களுடைய வாழ்வாதாரதிற்கு நாம் துணையாக இருக்கிறோமே என்னும் திருப்தி நமக்கு ஏற்படும்.
அது மட்டும் அல்ல. பணம் இருந்தால் தான் சீரழிகின்ற ஒரு சமூகத்தை நாம் தூக்கி நிறுத்த முடியும். நமது சமூகத்தில் “இல்லை, இல்லை” என்கிற கூப்பாடு ஓய்ந்த பாடில்லை. பொருளாதார வளம் இல்லாத ஒரு சமுதாயத்தை யார் வேண்டுமானாலும் சீண்டி பார்க்கலாம். அது தான் இப்போது நடந்து கொண்டிருக்கிறது.
இதற்கெல்லாம் ஓரே தீர்வு நமது சமுதாயம் வணிக சமுதாயமாக மாற வேண்டும். வர்த்தக சமுதாயமாக மாற வேண்டும். பணமுள்ள சமுதாயமாக மாற வேண்டும்.
வேலை செய்கின்ற சமுதாயம், கூலி வேலை செய்கின்ற சமுதாயம் என்று பெயர் எடுத்து விட்டோம். இரண்டு பேர் வேலை செய்தால் அங்கே ஒரு “யூனியன்” அமைக்கும் ஒரு சமுதாயம் என்று பெயர் எடுத்து விட்டோம்.
இனி நாம் அடுத்தக் கட்ட நகர்வுக்கு தயார் செய்யவேண்டும். இனி நாம் மற்றவர்களுக்கு வேலை கொடுக்கும் சமுதாயமாக மாற வேண்டும். ஒரு முதாலாளியாக மாற வேண்டும். தொழிலாளி என்கின்ற ‘நிரந்திர’ த்திலிருந்து விடுபட வேண்டும்.
நம்மில் பலர் சிறுரக லாரிகளை வைத்துக்கொண்டு பழைய சாமான்கள் வாங்கும் தொழிலில் ஈடுபட்டிருக்கின்றனர். துணைக்கு ஒரு உதவியாளரையும் வேலைக்கு வைத்திருக்கின்றனர். அந்த உதவியாளருக்கு நாம் ஒரு முதாலாளி என்னும் கம்பீரம் நம்மிடம் இருக்க வேண்டும். இந்தத் தொழிலேயே நாம் இன்னும் கவனம் செலுத்தினால் அதிகமான லாரிகளையும் அதிகமான உதவியாளர்களையும் வேலைக்கு வைத்துக்கொள்ள முடியும். அந்த வளர்ச்சி தடைபடாமல் தொடர வேண்டும். அது தான் வெற்றி.
நாம் முற்றிலுமாக வணிக சமூகமாக மாற வேண்டும். இங்கு முதன் முதலில் காலடி எடுத்த வைத்த தமிழன் எப்படி வணிகத்துக்காக காலடி எடுத்து வைத்தானோ அதே போன்று இன்று நாம் வணிகக் காலடித் தடங்களை இன்னும் அழுத்தமாகப் பதிக்க வேண்டும். வளர்வோம்! வெற்றிபெறுவோம்! வணிக சமூகமாக மாறுவோம்!
(கோடிசுவரன்)
நன்றி திரு. கோடிசுவரன் அருமையான படைப்பு. தங்களின் படைப்புகளை தவராது வாசிப்பவன். நீங்கள் கூறும் அனைத்து கருத்துகளும் நடமுறையில் நடப்பவைகளே.
தமிழர் வாழ்க்கையில் முன்னேற வேண்டுமானல் வர்த்தகத்துறையே சிறந்தது என்பது உண்மையாகும்.
அந்த வர்த்தகத்துறை ஒரு வழி ஆதாயம் இல்லாமல் இரு வழி ஆதாயம் இருக்க வேண்டும். அதோடு நம்மவர்களே நம்மவர்களை ஏமாற்றாமல் இருப்பதும் அவசியம். தமிழ் மொழி எழுச்சிப் பெற வேண்டுமானல் தமிழ் மொழியினை வர்த்தகத்துறையில் பயன் படுத்த வேண்டும். தமிழ் மொழியின் வழி ஒருவர் எல்லை இல்லா வருமானம் பெறலாம், பெற வேண்டும். அப்படி பெறுவோர் சமூகச் சேவைகளிலும் சமூகத்திற்கு உதவ வேண்டும். நன்றி.
வணிக சமூகம் என்றால் என்ன? திரு கோடீஸ்வரன் ஒரு தேங்காவை உடைத்தார். ஆனால் ஆயிரமாயிரம் தேங்காய்களை உடைத்து காரணம் தெரியாமல் போகும் சம்பிரதாயம் போல வணிக வாய்ப்புகளுக்கு அந்த கதவுகளை திறக்காமல் முடித்து விட்டார்.அதில் எனக்கு தெரிந்த முக்கிய அம்சத்தை பாருங்கள் :-
ஆங்கிலத்தில் வணிக வெற்றிக்கு W என்ற எழுத்தில்
5 சவால்களை சொன்னார்கள் ….What > where >who > when > why > இதை தமிழ் படுதிக்கொளுங்கள்.
பிறகு SWOT இதை வணிகத்துக்காக கத்தி முனை என்று பொருள் படுத்தி கொள்ளுங்கள்.அது (sword ) போல கத்தி முனையில் வணிகம் செய்வது என்று சிந்திப்போம்.
strength >Weaknesses > opportunity > threat > இதையும் ஆராய்ந்து தமிழ் படுத்திககொள்ளுங்கள்.
வணிகம் செய்ய நீங்கள் எங்கும் போக வேண்டாம்.
நீங்கள் படித்த படிப்பு ( டிகிரி / அல்லது டிப்ளோமா இருந்தால்)
5 வருசமாவது ஒரே தொழில் வேலை /அல்லது மொழி சிறப்பில் பேசும் திறமையில் விற்பனை துறைக்கு வாங்கள்.
என்ன அது (what where >who > when > why > போன்ற விசியங்களை அடையாளம் காணுங்கள்.(இவைகளை சரிபார்த்து கொள்ளுங்கள்)
பிறகு உங்கள் தேர்வு தொழில் SWOT ( பலம் ,பலவீனம் ,வாய்ப்பு ,அச்சுறுத்தல் ) சந்தை நிலைகளை ஆராயுங்கள்.முடியாது போனால் நிபுணர் உதவி நாடவும்.
உங்கள் ஐந்தாண்டு வனிஅக் தொடர்புகளை உங்கள் பொது உறவு வழி மேலும் புதிய சந்தைகளை தேடுங்கள் வணிக வாய்ப்புகளை பேசுங்கள்.
விற்க போகும் பொருளுக்கு தேவையான வாங்கும் நிதி முடிந்தால் உங்கள் சொந்த நிதி தேவைகளை தயார் செய்யுங்கள்.
சந்தை demand தேவைகளை தேடுங்கள் Supply சக்தியை தயார் செயுங்கள். 30 % margin லாபம் இல்லாதத் தொழில் வேண்டாம்.
வணிகத்தில் மூன்று விதம் 1.சேவைத்துறை , 2.தயாரிப்புத்துறை , 3.விற்பனை துறை. எதுக்கு எது என்று புரிய முற்படுங்கள்.
வணிகத்துக்கு மொழி முக்கியம் நம் நாட்டில் மூன்று முக்கிய மொழிகள் …நீங்கள் தமிழில் சிறப்பு என்றால் இந்தியர்கள் தமிழர்கள் சார்ந்த வணிகம் செய்யுங்கள்.
விற்ப்பனை துறைக்கு துணிவும் பேசும் திறமை மட்டுமே முதலீடு
சேவை துறைக்கு அது சார்ந்த demand தேடுங்கள் விநியோகிக்கும் முன் advance வாங்கலாம்.50% -100% லாபம் வைத்து வணிக வெற்றி பெறலாம். இந்த சேவை துறையில் நிபுணத்துவம் அடங்கும். அதற்கு
விலை அதாவது உங்கள் fees மார்க்கெட் நிலையை தாண்டி போகலாம்.
தொழில் துறை பெரும்பாலும் தயாரிப்புக்கு அதிகம் முதலீடு தேவை இதில் ஆபத்தும் உண்டு. உங்கள் Product சந்தையில் தேவையை சமாளித்தால் பெரிய சந்தைகளை தேடி போகலாம்.
இது என் சிறிய விளக்கம் மட்டுமே ! மனம் சொன்னது எழுதினேன்! மற்றபடி அதிக்பிரசங்கமில்லை. அக்கரையில் .நன்றி. வணக்கம்.
நம்மவர்கள் வணிகர்களாக முடியும் . Bangladesh மற்றும் Pakistan காரன்களை ஒலித்தால் இல்லை என்றால் இருப்பதும் போய்விடும் ……
இது எச்சரிக்கை
இன்று பிள்ளைகள் பள்ளி படிப்புடன் தொழில் கல்வியும் பள்ளியிலே பயிற்சி பெற்று வெளியே வருகின்றனர்,வந்தவுடன் வேளை தேடி செல்கின்றனர்,பலர் தொழில் கல்வியை தொடர்கின்றனர்.வாணிபம் ஓர் அரசியல்,நாம் கேட்கிறோம் எத்தனைபேறுக்கு நம்மவர்மீது நம்பிக்கை உள்ளது,டைல்ஸ்,வீடு புதுப்பித்தல்,ஒய்ரீங்,ப்லம்பிங்,வாகன ரிப்பேரிங்,பூ கடை,உணவகம்,ஜவுளி எல்லாவற்றிலும் ஏமாத்துவேலை.நிறைய அனுபவம் எமக்கு.நாராயண நாராயண.
முதலில் நம் நாம் இனம் சேயும் டைல்ஸ்,வீடு புதுப்பித்தல்,ஒய்ரீங்,ப்லம்பிங்,வாகன ரிப்பேரிங்,பூ கடை,உணவகம்,ஜவுளி அதரவு கொடுங்கள் .மலாய்/சின செல்லலும் முன் சிறுது யோசிங்கள் .அதோடு நம்மவர்களே நம்மவர்களை ஏமாற்றாமல் இருப்பதும் அவசியம்
நான் எப்போதும் நம்மவர்களின் தொழிலுக்கு ஆதரவு கொடுப்பவன் ஆனால் கடைசியில் எனக்கு கரியை பூசினவர்கள் தான் அதிகம். இருந்தாலும் நம்முடையவர்களுக்கு தொடர்ந்து ஆதரவு கொடுப்பேன். நான் பார்த்த வரையில் நம்மவர்கள் நம்மவர்களை நம்புவது மிக குறைவு- இதை என்னிடத்தில் பலர் கூறி இருக்கின்றனர்.
ஒரு காலத்தில் மலாய்காரன் களை வியாபாரத்தில் பார்ப்பதே அபூர்வம் ஆனால் இன்று நிலைமை வேறு– நம்மவர்கள் சீனர்கள் போல் செயல் பட வேண்டும்- அவர்கள் ஒருவருக்கு ஒருவர் வியாபாரத்தில் உதவியும் ஒத்தாசையும் கொடுப்பார்கள். ஆனால் நம்மவர்கள் இன்னொரு தமிழன் முன்னேறுவதை விரும்புவதில்லை என்பதே உண்மை என்பதை வருத்தத்துடன் கூறுகிறேன்.
செர்வீஸ் தரம் தேவை,அது சீனரிடம் உண்டு.வசந்தம் நிகழ்சியில் மோடன் இசையா பாரம்பரிய இசையா,கடைசியில் கருத்து கேட்டதற்கு ஒருவர் சொல்கிறார்,இசைத்துறைக்கு வாருங்கள் வரும் முன் ஏதேனும் ஒரு வியாபாரத்தை ஏற்படுத்திக்கொள்ளுங்கள் வெளியே என்றார் சிறப்பாக.அதுபோல் தான் வியாபாரமும்.வாழ்க நாராயண நாமம்.
தொழிலில் தனி திறமை உண்டு என்றால் கண்டிப்பாக மறுபடி மறுபடி நம்மை நாடி வருவார்கள் , ஓரிருவர் ஏமாற்றுவதால் மீதம் உள்ளவர்களும் அப்படிதான் என்று முடிவு பண்ண குடாது .
என் அனுபவத்தில் வீடு கட்டுவதில் சினரிடம் ஏமாந்ததும் உண்டு , அதே வேலையை முழுமையாக அழகாக முடித்து தந்த இந்தியரும் உண்டு . திறமையும் creativity இருந்தால் கண்டிப்பாக பெயர் போடா முடியும் .
நல்ல கருத்து. வரவேற்கிறேன். ஆனால் தமிழன் எங்காவது கடையைத் திறந்தால் இது என் ஏரியா, மாதம் இவ்வளவு கொடு எனக்கூறிக்கொண்டு நம்மினத்தைச் சேர்ந்த ரவுடி நாய்கள் பாராங் கத்தியோடு நிற்கின்றனவே அதற்கு என்ன செய்வது. இந்த நாய்கள் இங்கு சட்டவிரோதமாக வந்து வியாபாரம் செய்யும் வங்காளதேசி, மியன்மார்காரன், இந்னோசியாகாரனிடம் வீரததை காட்டுவதில்லை. தமிழனை மட்டும் துரத்தி பணம் பிடுங்கிறான். இந்த மாதிரி ரவுடி நாய்களை ஒழித்தால் நாம் இன்னும் தைரியமாக வியாபாரம் செய்யலாம்.
அடேங்கப்பா, பரவாயில்லையே ! நம்மவர்கள் அரசியலில் இருந்து சற்று விலகி , இப்பொழுது வணிகம் பேசுகிறார்களே ! SWOT , 5W , 5S எல்லாம் வருகிறதே !! நல்லது நல்லது ! என்னால் முடித்த உதவிகளை நானும் செய்கிறேம் இங்கே ! ஒரு இணையத்தளம் செய்து, அதில் இந்தியர்களுக்கு வேண்டிய அணைத்து வியாபாரங்களையும் ஒருங்கிணைத்தால் , நாமும் செய்யாலாம் ONE STOP SHOP . புது வியாபாரத்துக்கு விளம்பரம், எல்லோருக்கும் செண்டடைய ஒரு இணையத்தளம் ! WEB PAGE ! குறைந்த விலையில் வியாபாரம் ! உத்ர்ணதிர்க்கு, நான் ஒரு உறுகாய் விற்கிறேன் என்றால், எண்ணிடல் இருந்து வாங்கி , மற்ற மாநிலங்களில் விற்கலாம் ! அப்படிதான் நாம் நெட்வொர்கிங் (NETWORKING) செய்ய வேண்டும் ! இதில் விற்பவரே முதலாளி, வாங்கி விற்பவர் வியாபார முகவர் ! ஒருவர், ஓர் கார் விற்க விரும்பினால் , இனைய தலத்தில் விளம்பரம் செய்து , நமவரே வங்கி கொளுத்தல் ! அட அட …. நாம் ஏன் மற்றவர்கலுக்கு வியாபாரம் தர வேண்டும் ?
வணக்கம், தமிழன் தமிழனை முன்னேற விடமடன்னு பலபேர் குறை குருவ்டுதன் அதிகமா இறுக்கு அதை முதலில் விடுங்கே. திரு கோடிஸ்வரன் சொனது போல மற்றவர்களையும் பலையெ விசயங்களையும் நம் முனோர்கலையும் குறை கூறுவதை விட்டுட்டு நம்மும் நம் கூட உள்ளவர்களையும் இப்படி முன்னேற்றுவதுன்னு பாத்தா நம் எதிர்காலம் நிச்சயம் நல்ல இருக்கும்
நன்றி திரு. கோடிசுவரன் அருமையான படைப்பு.
பெண்கள் என்ன தொழ்ல் பண்லாம் என்பதை கொஜம் விரிவகசொனால் நன்றகிருகும்
எப்படிபட்ட வணிக சமுகம் கஞ்சா விற்கும் சரவணனை போலவா ?