2007 நவம்பர் 25 மலேசிய இந்தியர்களின் இண்டராப் போராட்ட நாளை இப்போது பாகாதான் ராக்யாட்டின் DAP உறுபினர்கள் தலைமயில் ஒரு அரசியல் விழாவாக கொண்டாடுவதின் நீண்ட அல்லது குறுகிய கால திட்டங்கள்தான் என்ன ? என்று ஒரு சாதாரண மலேசியத தமிழனாக இந்துவாக தெரிநதுக்கொள்ள ஆசைப்படுகிறேன்?
உதயகுமாரின் இண்டராப் இந்துக்கள் ,இந்தியர்கள் அதிலும் தமிழர்களின் போராட்டமாக அரசியலற்ற இனமான கொள்கையில் இன்று பரிதவிக்கும் நிலையில் ….அது மக்கள் சக்தி அரசியல் கட்சிபோல ஒரு அரசியல் கட்சியாக மாறுமா என்ற பலரின் நிழல்தனமான கேள்விக்கு யாரால் பதில் சொல்லமுடியும்?
அந்த இண்டராப்பின் மாற்று உருவமாக DAP யின் கணபதி ராவ் மற்றும் அவரின் தம்பி ராய்டு இருவரின் விடாமுயற்சியாக இன்று 7 வது நிகழ்வை நடத்துவதில் அனைவருக்கும் மகிழ்ச்சிதான், என்றாலும் அது ஒரு குறுகிய கூட்டதின் அல்லது வட்டதின் அரசியல் ஆளுமையில் நடப்பதை மக்கள் அறிவோம். தெளிவுக்கு ஒரு விளக்கம் வேண்டும் என்று ஆசைப்படுகிறோம்.
இண்டராப் போராட்டத்தை மலேசிய இந்தியர்களின் ஓரங்கட்டப்பட்ட மக்களின் எழுச்சியும் அரசியல் தாக்கமும் என்று சுஹகொம் ஆறுமுகம் அவர்கள் அழகாக தமது நவம்பர் 25 என்ற புத்தகத்தில் வர்ணனை சுவர் கட்டி இருந்தார்.
அந்த சுவர் பல அரசியல் ஜோடனைகளால், அசிங்கங்களால் பசையற்ற மணல்கலாக, தண்ணீரில் மூச்சற்று கிடக்கிறது. ஆனால் கையில் சிக்கிய சில கட்டி மணல்களை கையில் ஏந்திய மலேசிய மக்கள் குரல் எனும் ராய்டுவின் இயக்கம் கடந்த 6 ஆண்டுகளாக மீண்டும் ஒரு உரிமை குரல் மீட்டபடுவதை வரவேற்போம்.
இதில் இண்டராப் போராட்ட வாதிகளில் கணபதி ராவும் வசந்த குமாரும் இணைத்துள்ள வேளையில் ,மற்ற மூவரும் ஓய்ந்து வேடிக்கை பார்க்கும் நிலை வருத்தமாகத்தான் உள்ளது. உதயகுமார்,தீவிர DAP மனோகரன் மலையாளம், கெங்காதரன் இவர்களை இதில் பார்க்க முடியவில்லை. தவிர 25/11/2009 நிகழ்வில் சட்டதின் மடியில் மாட்டிய சுமார் 150 போரையும் பார்க்க முடியவில்லை. இண்டராப் ஒரு சட்ட விரோத அமைப்பானதும் அதை MIV என்று கையில் எடுத்த விதம் சரியே. மாற்றதுக்கு ஒரு மாற்று வித்தை வேண்டும் என்பது நியாயம்தான்.யாரும் முற்படாத தலைமைத்துவ முடிவும்கூட.போராட்ட வாதிகள் மூளை தினம் தினம் முளைதுக்கொண்டேதான் இருக்கும்.
தனியே இண்டராப் சங்கம் சகாப்தம் செய்த வேத மூர்த்தி அடக்கமாக இன்று பத்திரிக்கை செய்தி விட்டு கொண்டு இருக்கிறார். ஏன் என்றும் நமக்கு தெரியவில்லை. உலகத்தை உலுக்கிய ,உலுக்க போவுது என்று நினைத்த வேத மூர்த்தி வழக்கு ஒரு ஊதாப்பூ கண்சிமிட்டல் கதியாய் போச்சி … உதய குமார் இந்த சமுதாயத்தால் பட்டதே போதும் என்றாகிவிட்டார். எனினும் மலையை குடைந்து பாதி துளை போட்டவர் மற்றவர்கள் தொடரட்டும் என்று ஒதுங்கியதும் வெளிச்சம் ஓய்வு எடுத்துள்ளது பயிர்களுக்கு பனில்லை.
மீண்டும் வருகிறேன் MIV கு . மலேசிய இந்தியர் குரல் மீண்டும் வருகிறேன்.இன்று அரசியல் காரணங்களுக்காக செழிப்பா இருக்கும் MIV நாளைய நடப்பின் திடமான திட்ட வரைவு என்ன என்று கேற்பதில் உரிமை மிஞ்சுகிறது. காரணம் 25/11/2009 என்றால் அது ஒட்டு மொத்த மலேசியர்களின் திண்டாட்டம். சாதனைகளை விட அரசியல் பாதக இன வேற்றுமையில் விரிசல் புகுந்த தந்த நாள். இதனால் பொருளாதார அரசியல் வீழ்ச்சி நம்மை சுழற்றி அடித்துள்ளது.
இதன் வேற்றுமையில் அரசியல் ஆர்பரிப்பில் அடையாளம் தெரியாமல் போன அல்லது அடகு வைக்கப்பட்ட பல இயக்கங்கள் நம்மை ஏமாற்றி விட்டன . இந்தியன் என்ற இனம் துட்டாபட்டது என்பதை நினைவில் பதித்து இந்த ஏழாவது நிகழ்வில் ஒரு குறிப்பிட்ட தேடலை சொன்னால் அந்த குரலின் வேகத்தை கூட்ட
வசதியாக இருக்கும்.மாறாக வெறும் அரசியலுக்கு கொண்டாட்ட புகழ்ச்சியாயின் நமக்கு மகிழ்ச்சி இல்லை காரணம் மேடைகள் கட்டி மாழைகள் போட்டு நாம் இதரவனால் ஏமாந்தது நிறுத்தப்பட வேண்டும்.
இண்டராப் ,BN வழி ம இ கா ,பாகத்தான் போன்ற அரசியல் முச்சந்திபில் நிற்கும் இந்தியர்களின் நிலை முக்கோண முனையில் எதை நிறுத்துவது என்று தலைவர்கள் திண்டாடும் வேளையில் MIV யும் சதுரங்கம் கட்டி உள்ளது. மலேசிய இந்தியர்களுக்கும் அது சார்பு தமிழன், தெலுங்கர் ,மலையாளிகளுக்கும் இதரவர்களுக்கும் சரியான அரசியல் அங்கிகாரமும் பங்கீடும் இல்லை என்பதை நான் சொல்லி வருகிறேன்.
இண்டராப் அரசியல் ,மொழி ,மதம்,பொருளாதாரம், கலாச்சாரம்,சமத்துவம் போன்ற விளையாட்டில் இன்றும் நம்பாமல் முக்கிக கொண்டுதான் உள்ள்ளோம் . BN னிலும் சரி பாகாதானிலும் சரி “மலேசிய இந்தியர்களின்” அரசியலை உரிமையுடன் மொத்தமாக் குத்தகை எடுக்க நமக்கு நல்ல தலைவன் இதுவரை இல்லை.
பல ஆயிரம் இயக்கங்களில் MIV யும் ஒன்றா ? மலேசிய இந்தியர்களின் உயர்த்த வர்க்கம். நடுத்தர வர்க்கம் ,அடி தட்டு வர்க்கம் என்ற இம்மூன்றையும் இணைக்கும் அந்த ஆளுமையில் MIV உள்ளதா?
ஏழ்மையை விட்டு தள்ளுங்கள் அது இல்லாதவனுக்கு தொடர் கட்டுரை.நாட்டில் அங்கிகாரம் பெற மக்கள் தொகை பெருக்கம் , வாக்காளர் பெருக்கம், விவேக அரசியல் பிரதநிதிகள், பொருளாதார ஆளுநர்கள் இப்படி பல பட்டியலை இந்த சமுகம் நிரப்ப வேண்டும். இந்த சாதனையை MIV ஆளுமா ? வாருங்கள் திரள்வோம் MIV யை தூக்கி நிறுத்துவோம்.
அல்லது ஒரு 28 லட்சம் சிறுபான்மை சமூகத்தில் இது தேவையா? என்று எரிகிற வீட்டில் கிடைத்தவரை சொர்க்கம் என்ற பழைய பல்லவி தலைவர்களைப்போல அரசியல் நிலைதனை. வசமாக கைகளை உயர்த்தி காய்களை நகர்த்தி வெற்றி பெற முடிவை எடுக்க வேண்டும் இல்லையேல் நமக்கு ஏன் இந்த அரசியல் என்ற விரக்திக்கு சமுதாயம் வந்துவிடும்.
உலக அரசியல் தலைவர்கள் யாரும் தன் சொந்த கொள்கையை மக்கள் மத்தியில் பதிக்க முயலவில்லை. மக்கள கொள்கைதான் வென்று நிற்கும். மகாத்மா காந்தியின் படங்களை ஏந்திய இண்ட்ராப் தொண்டர்கள் மீது விஷப்புகை தண்ணீர்தான் வீசினார்கள். ஆனால் வீட்டில் குளிர் காய்ந்த நல்ல கருப்பன், தனேந்திரன், சாமிவேலு ,பழனிவேலு,சுப்ரமணியம், கேவியஸ், சம்பந்தன், சரவணன், கமலநாதன், எல்லாம் சமூகத்தில் நல்லாத்தான் இருகிறார்கள்.
இண்டராப்பின் முதுகெலும்பு நிமிர்ந்து நின்ற போது அப்போது ம இ கா மூளைகள் பக்கவாத நோயால் மெல்லவும் முடியாமல் முழுங்கவும் முடியாமல் போனதால் பாகத்தான் பக்கம் இந்தியர்கள் பாசம் பொழிந்தோம். 2008 பிறகு 2013 தேர்தலில் BN னுக்கு எதிராக முழுக்க நனைந்த நாம் இன்னும் இன சாவடியில் இரு பக்க மலாய் ஆதிக்கம் நம்மை மூக்குடைத்து வைத்துள்ளது . மின் மினி அரசியலில் பதாதை பக்தர்களாக மேடைக்கு மாரடிக்கும் கூட்டமாக மாற்றமே இல்லாத மமதைகளாக இன்று வரை உள்ளோம்.
நாட்டில் இனம் வெல்ல எத்தனையோ மாநாடுகள் ? மனமகிழ் இலக்கிய இன மான பேருரைகள் இருந்தும் நிலைமை கீழ்நோக்கித்தான் , தலை குனிந்து நிற்கிறோம்.,,எந்த அரசியல் முயற்சியும் வெல்ல வில்லை. என்ன செய்யலாம்? மூன்று முக்கிய திராவிட இனங்களுக்குள் தனி தனி கட்சி அமைத்து மலேசியன் இந்தியன் பார்ட்டி MIP என்ற தேசிய அமைப்பை MIV யோசிக்கலாம்.விமர்சனம் இருந்தால் விபரீதங்கள் வரும்.ஆனால் என் விமர்சனம் வித்திட வேண்டும் என்ற தீர்வில் எழுத்து சுதந்திர எண்ணத்தில் விடை காண விழைகிறேன்.
Pon Rangan
[email protected]
இவர்களது சாதனை என்ன? கேளாங் பாத்தா பிரகடனம் என்ன ஆச்சி, இன்னும் எவ்வளவு காலத்திற்கு இவர்கள் நம்மை ஏமாற்றிக் கொண்டே இருக்கப் போகிறார்கள்.
யாரும் யாரையும் எங்கும் எப்போதும் என்னவோ எதுக்கோ ஏமாத்த முடியாது, நாமாவே எமந்தல்தான் உண்டு. மணியடிச்சா சோறு புகழ் அன்வாரை இன்னும் நம்பும் நம்பி ஏமாறும் கூட்டம் இருக்கும் வரை.
பொன் அவர்கள் துசு…தட்டுங்கள்…உங்கள் படையை நாங்கள்…தயார்…உங்கள் திறமை எங்களுக்கு தெரியும்……கூட்டத்துக்கு……அலைய்யுங்கள்
எம்.ஜ.வி. என்பது ஒரு குடும்ப சொத்து. அந்த அமைப்பு நடத்தும் நிகழ்ச்சிகளில் குறிப்பிட்ட எண்ணிக்கையிலானவர்கள் மட்டுமே திரும்ப திரும்ப கலந்து கொள்வதை காண முடிகிறது. இண்ட்ராப் போராட்டத்தை மூலதனமாகப் பயன்படுத்தி ஒரு சட்டமன்றம்/ ஆட்சிக்குழு, இரு கவுன்சிலர் பதவிகளை அவர்கள் பெற்றுக் கொண்டனர். குறிப்பாக சா ஆலாம் கவுன்சிலர் பதவிகள் அவர்களின் குடும்ப சொத்தாகவே உள்ளது. இரு முக்கிய பதவிகளில் இருந்த போதிலும் அண்ணன் தம்பி இருவரும் சமுதாயத்திற்கு பலனளிக்கும் திட்டங்கள் எதனையும் செய்ததாக தெரியவில்லை. கிறிதுஸ்துவர் என வசை பாடப்பட்ட சேவியர் காலத்தில் தமிழ்ப்பள்ளிக்கு 40 லட்சம் வெள்ளி, ஆலயங்களுக்கு பத்து லட்சம் வெள்ளி, மிட்லண்ட்ஸ் தமிழ்ப்பள்ளி, கோல்பீல்டு தங்கும் விடுதியுடன் கூடிய பள்ளி, தமிழ்ப்பள்ளிகளில் கணினி மையங்கள், தோட்டப்புற மாணவர்களுக்கு பஸ் கட்டணம் என பல திட்டங்கள் அறிமுகப்படுததப்பட்டன. ஆனால், கணபதிராவ் பதவிக்கு வந்து ஈராண்டுகள் ஆன போதிலும் எந்த புதிய திட்டமும் இந்தியர்களுக்கு ஏற்படுத்தப்படவில்லை. மேடையில் ஏறி வணக்கம், வணக்கம் என கத்தினால் மட்டும் போதாது. இருக்கிற மூன்று ஆண்டு காலத்திலாவது தனது பெயர் நிலைக்கும் வகையில் கணபதிராவ் ஏதாவது செய்ய வேண்டும். செய்வாரா?
குப்புசாமி ஐயா…57 வருடம் தாறு மாறாக பயன்படுத்திய ஒரு காரை திடீரென ஒருவரிடம் தந்து விரைவாக 1000 கிமி வரை போய்வா என்றால் சரியா?? அதை முதலில் நன்கு பழுது பார்த்த பிறகுதான் ஓட்டியாக வேண்டும்..கணபதி ராவ் முயல்வார் என நம்புவோம்…