இலங்கையில் போர்க்குற்றச் செயல்கள் இடம்பெற்றதாக மூன்று உயர் இராணுவ அதிகாரிகள் மேற்குலக நாடுகளிடம் சாட்சியமளித்துள்ளனர்.
இலங்கை இராணுவத்தில் கடமையாற்றிய மூன்று உயர் அதிகாரிகள் இவ்வாறு சாட்சிமளித்துள்ளனர்.
நாட்டில் போர்ககுற்றச் செயல்கள் இடம்பெற்றதாக குறித்த முன்னாள் இராணுவ அதிகாரிகள் மேற்குலக நாடுகளிடம் பொய்யான சாட்சியமளித்துள்ளதாக சிங்கள பத்திரிகையொன்று குற்றம் சுமத்தியுள்ளது.
இந்த அதிகாரிகளில் இருவர் தற்போது அமெரிக்காவில் அரசியல் புகலிடம் பெற்றுக்கொண்டுள்ளனர்.
சாட்சியமளித்த மூன்று அதிகாரிகளில் ஒருவர் திடீரென உயிரிழந்துள்ளார்.
இராணுவத்திலிருந்து கட்டாய அடிப்படையில் ஓய்வுறுத்தப்பட்டதன் பின்னர் இந்த அதிகாரிகள் வெளிநாடுகளில் புகலிடம் பெற்றுக் கொண்டுள்ளதாக சிங்களப் பத்திரிகையில் தெரிவிக்கப்படுகிறது.
ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவை இலங்கை போர்க்குற்றச் செயல்கள் தொடர்பில் விசாரணை நடத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
ராஜபட்சே! நீ ஒரு மனித மிருகம். பல இன மக்கள்கள் வாழும் மலேசியாவில் நீ பாடம் படிக்க வேண்டும்மடா. முட்டாள் பயலே. உன்னை பற்றி பேசுவதைவிட நாயை பற்றி பேசுவதே சிறந்தது. சீ போட!!!!!!!!!!!!!!!!
ராஜபக்சாவின் மீது எந்த தவறும் இல்லை ,ஈலாதுக்குமே இந்த ராணுவம்தான் காரணம் ,ராணுவத்தின் அராஜகம் எல்லை மீறி விட்டது .
எய்தவனை நோவாமல் அம்பை நோவதனால் என்ன பயன்?