நேற்று 18/12/ மாலை 6 -7 அஸ்ட்ரோ வானவில்லில் சனி பெயர்ச்சியில் ராசிகளுக்கு என்ன நடக்க போகிறது என்று சோதிடர் பாணியில் ஒரு மணி ஒரு மணி நேரம் பேசினார். இலக்கு தமிழர்களை நோக்கியது. என்றும் எதிலும் சோதிடம் என்ற அறியாமையால் தமிழர்கள் நிலை அந்தோ பரிதாபம். உலக அறிவியலை எப்படி வியாபரமாக்கினார்கள் வியப்புதான் மிஞ்சுகிறது !!
கடசியில் ஒரு அதற்சியான குறிப்பை தந்தார். அதாவது ராசிகளின் பலன்கள் அவரவர் பூர்வ ஜென்மம் , முந்திய பாவ புண்ணியங்கள் படி நல்லது கெட்டது நடக்கும். சனியை மட்டும் கும்பிடுங்கள் பலன் தரும் மற்ற தெய்வங்கள் , ஆஞ்சேநேயர் போன்ற தெய்வங்களின் பிரார்த்தனைகள் பரிகாரங்கள் உதவாது என்று போட்டார் ஒரு போடு!?
சனி என்பது ஒரு கிரகம். ஆனால் நம்மவர்கள் சனியன் “தைதரியம்” என்ற ஐயத்தில் ஜோதிட வியாபாரமும் .கோவில் பூஜைகளும் அறியாமையால் வியாபார சூடும் தலை தூக்கி பன்னெடுங்காலமாக ஓடுகிறது. நம்ம சமய பூசகர்கள் ஐயா முனைவர் நாகப்பன் , தர்மலிங்கம் போன்றோர்ர் ஏழரை சனி சனியன் பற்றி வாய் திறப்பதில்லை ஏன்?
“ஏழரை சனி” ஒரு விஞ்ஞானம். அறிவியல் என்ன சொல்கிறது ?
சோதிடத்தில் நம்பிக்கை உள்ளவர்கள் இப்பெயரைக் கேட்டாலே பயந்து நடுங்குகிறார்கள் அல்லது இவர்களை பயமுறுத்துவதற்காக தினசரிகள், வார இதழ்கள், சோதிடத்திற்கு மட்டுமென வெளிவரும் பத்திரிக்கைகள் உள்ளன. இவ்வாண்டு 2014 டிசம்பர் மாதம் 16ஆம் தேதி அதிகாலையில் துலாம் ராசியில் இருந்து விருச்சிக ராசிக்கு சனி இடம் பெயர இருக்கிறது. இதையொட்டி சனியால் எந்த ராசிக்கு என்ன பலன் என்றும் அதனால் வரும் விளைவுகளுக்கு பரிகாரத்தைத் தேடி காக்கையை தனது வாகனமாகக் கொண்டு திருநள்ளாரில் எழுந்தருளி இருக்கும் சனி பகவானின் நளன் குளத்தில் நீராடவும் மற்ற வகையான பரிகாரங்களை செய்யவும் ஆயத்தமாக இருக்கிறார்கள்.
இனி செய்திக்கு வருவோம் முதலில் இந்த சனிப்பெயர்ச்சி பஞ்சாங்க அடிப்படையில் ஒரே நாளில் நிகழ்கிறதா என்றால் இல்லை, திருக்கணித பஞ்சாங்கத்தின்படி நவம்பர் 2ஆம் தேதி நடந்தது. வாக்கியப் பஞ்சாங்கத்தின் படி டிசம்பர் 16 ஆம் தேதி நடக்க இருக்கிறது, . இதில் என்ன நகைச்சுவை என்றால். பஞ்சாங்கத்திலேயே துல்லியமானது திருக்கணிதப் பஞ்சாங்கம் என கூறப்படுகிறது. ஆனால் சனிப்பெயர்ச்சி மட்டும் வாக்கியப் பஞ்சாங்கத்தின்படியே கணிக்கப்பட்டு 16 ஆம் தேதி திருநள்ளாரில் சனிப்பெயர்ச்சி மிகவும் விமரிசையாக நடத்தப்பட உள்ளது. இவ்வாறு முரண்பட்ட சோதிட நம்பிக்கையின் அடிப்படையில் நடைபெறும் சனிப்பெயர்ச்சியை சற்று அறிவியல் கண்ணோட்டத்துடன் அலசுவோம்.’
ஜாதகமும் ஜோதிடமும்
ஜாதகம் என்பது ஒருவன் பிறந்த நேரதில் வானில் காணப்பட்ட மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிகள், 27 நட்சத்திரங்கள், 9 நவக்கிரகங்கள் ஆகியவற்றைக் கொண்டு பதியும் பதிவு அவ்வளவே. வானவீதியில் கோள்களின் இயக்கம் சீரான காலமுறையை (Uniform Motion) சார்ந்தது என்பதினால் ஜாதகம் என்பது நமது முன்னோர்கள் பயன்படுத்திய பிறப்பு பதிவு எனக் கொள்ளலாம். ஆனால் ஜாதகம் ஜோதிடத்தின் கருவியாக மாறும்போதுதான் சீரழிந்து புனைவுகளுக்கு ஆளாகிறது.
ஜோதிடத்தில் ராசி, நட்சத்திரங்கள் மற்றும் கோள்களுக்கு சில குணங்கள் இருப்பதாக கற்பிதம் செய்யப்படுகிறது. பொதுவாக ஜாதகமும், சோதிடமும் பழமையான பூமிக்கொள்கை (Geo System) எனப்படும் பூமியை மையமாக வைத்து கோள்கள் அனைத்தும் சுற்றி வருவதாகக் கொண்டே இன்றளவும் கணிக்கப்பட்டு வருகின்றது. இன்று அறிவியலால் நிரூபிக்கப்பட்டு உண்மையென எல்லோராலும் குறிப்பாக ஆன்மீகவாதிகளாலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட சூரியனை சுற்றி அனைத்துக் கோள்களும் இயங்குகின்றன (Solar system) என்ற அறிவியல் உண்மைக்கு எதிராக இச்சோதிட தத்துவம் உள்ளது.
கோள்கள் (நவ கிரகங்கள்)
வரிசை எண்.
ஜாதகத்தில்உள்ளவை
சூரிய மண்டலத்தில் இருப்பவை
1. ஞாயிறு
2. சந்திரன், புதன்
3. செவ்வாய், பூமி
4. புதன், செவ்வாய்
5. குரு (வியாழன்), வியாழன்
6. சுக்கிரன்(வெள்ளி), சனி
7.சனி, யுரேனஸ்
8.ராகு, நெப்டியூன்
9. கேது, புளூட்டோ
இதில் நிலையாக பேராற்றல் உள்ள நட்சத்திரமான சூரியனும், ஆற்றல் ஏதும் இல்லாமல் பூமியை சுற்றும் துணைக்கோளான சந்திரனும், கோள்களே அல்லாத ராகுவும் கேதுவும் கிரகங்களாக குறிப்பிடப்பட்டு உள்ளது. மேலும் பூமி, யுரேனஸ், நெப்டியூன் போன்ற கோள்கள் இதில் இடம் பெறவில்லை (அப்போது தொலைநோக்கிகள் இல்லை அதனால் இருந்திருக்கும்). அதைப்போலவே ராசி என்பதும் வானில் உள்ள விண்மீன்களின் வடிவங்களின் கற்பனையான தராசு (துலாம் ராசி-Libra), வில்(தனுசு ராசி-Sagittarius) போன்ற வடிவங்களேயாகும். இந்த வடிவங்களிலான விண்மீன் கூட்டங்களுக்கென தனித்தனியே குணங்களும் ஆற்றலும் உள்ளது எனவும் சோதிடம் கூறுகிறது. இவற்றையே அடிப்படையாகக் கொண்டு அவரவர்களுக்கான தினம், வாரம், மாதம், வருடம் என வாழ்நாள் முழுதும் நல்லதும் கெட்டதுமான பலன்கள் அவ்வப்போது ஜோதிடர்களால் கணிக்கப்படுகிறது.
மீனம் 12, மேஷம் 1, ரிஷபம் 2, மிதுனம் 3, கும்பம் 11,
சோதிடம் கணிக்கும் ராசிக்கட்டம்
கடகம் 4, மகரம் 10, சிம்மம் 5, தனுசு 9, விருச்சிகம் 8, துலாம் 7, கன்னி 6
வர்ணாசிரம – பாலின பாகுபாடு
மனிதர்களிடையே ஜாதி பார்ப்பது போதாது என்று கோள்களையும் வர்ணப்பாகுபாடு செய்கிறது ஜோதிடம்
வர்ணம்
கிரகங்கள்
பிராமணர்
வியாழன்(குரு), வெள்ளி
சத்திரியர்
ஞாயிறு,செவ்வாய்
வைசியர்
சந்திரன், புதன்
சூத்திரர்
சனி, ராகு, கேது
ஆக ஜோதிடத்தை ஏற்பதன் மூலம் நால்வர்ணக்கொள்கையை ஆதரிப்பதாகவே கொள்ளவேண்டும்.
பாலினம்
ராசிகள்
நட்சத்திரங்கள்
ஆண்
மேஷம்,மிதுனம்,சிம்மம், துலாம்
தனுசு,கும்பம்
8
பெண்
ரிஷபம்,கடகம்,கன்னி,விருச்சிகம்,மகரம், மீனம்
16
அலி
3
இப்படி உயிரற்ற கிரகங்களுக்கும் நட்சதிரங்களுக்கும்கூட ஜோதிடத்தில் பாலின வேறுபாடு கற்பிக்கப்பட்டு உள்ளது.
சனிப்பெயர்ச்சி
இனி பெயர்ச்சி என்றால் என்னவென்று பார்ப்போம். பொதுவாக சோதிடத்தில் குருப்பெயர்ச்சியும், சனிப்பெயர்ச்சியுமே மிகவும் பிரபலமானதாகவும் முக்கியமானதாகவும் எடுத்துக்கொள்ளப்படுகிறது. சனி, குரு மட்டுமல்லாமல் எல்லா கிரகங்களுக்கும் பெயர்ச்சி உள்ளது. அந்தந்த கிரகங்கள் பூமியை/சூரியனை சுற்றி வரும் காலத்திற்கு ஏற்ப அட்டவணையில் உள்ளவாறு ஒரு ராசியில் இருந்து இன்னொரு ராசிக்கு இடம் பெயர காலம் எடுத்துக்கொள்ளும்.
மொத்தம் உள்ள 12 ராசிகளில் கோள்கள் இடம் பெயர எடுத்துக் கொள்ளும் காலம்
கோள்களின் பெயர்
சூரியனை சுற்றிவரும் காலம்
இடம் பெயரும் காலம்
சந்திரன்
27 நாட்கள்
2 ¼ நாள்
ராகு, கேது
18 ஆண்டுகள்
1 ½ வருடம்
குரு (வியாழன்)
12 ஆண்டுகள்
ஒரு வருடம்
செவ்வாய்
18 மாதங்கள்
1 ½ மாதம்
சுக்கிரன், புதன்
ஒரு மாதம்
சூரியன்
–
ஒரு மாதம்
சனிக்கோள் சூரியனை சுற்றிவர 30 ஆண்டுகள் ஆகும். 12 ராசிகள் உள்ள சூரியவீதியில் சனி ஒவ்வொரு ராசியிலும் சுமார் 2½ ஆண்டுகள் காணப்படும். இதனைத்தான் அந்த ராசியை சனி பிடித்துள்ளதாக கூறுகிறார்கள். 2½ ஆண்டுகள் கழித்து சனி அந்த ராசியில் இருந்து விலகி அடுத்த ராசிக்கு இடம் பெயரும். இதனைத்தான் சனிப்பெயர்ச்சி என்று கூறுகிறார்கள்.
ஏழரை சனி
ஏழரை நாட்டுச் சனி என்பது சனிக்கோளானது ராசிக்கும் அந்த ராசியின் முன் வீடு ராசியின் அடுத்த வீடு ஆகிய மூன்றிலும் உள்ளதைக் குறிக்கும். சனி கிரகமானது ஒரு ராசியில் இருந்து அடுத்த ராசிக்கு செல்வதற்கு 2½ ஆண்டுகள் ஆகும் என்பதை முன்னரே கண்டோம். ராசிக்கு முன் ராசியில் 2½ ஆண்டுகள், பிறந்த ராசியில் 2½ ஆண்டுகள், அடுத்த ராசியில் 2½ ஆண்டுகள் ஆக 7½ ஆண்டுகளைத்தான் ஏழரை நாட்டுச் சனி என்பர். உதாரணமாக தற்போது சனி கன்னி ராசியில் இருந்து துலாம் ராசிக்கு இடம் பெயர உள்ளது அடுத்து 2½ ஆண்டுகள் கழித்து விருச்சிக ராசிக்கு செல்லவிருக்கிறது. சோதிடத்தின்படி துலாம் ராசிக்காரருக்கு 2½ ஆண்டுகளுக்கு முன்னரே ஏழரை சனி ஆரம்பித்துவிட்டது இன்னும் ஐந்து ஆண்டுகள் கழித்தே அவரை அது விடும். ஒருவரின் முப்பது ஆண்டுகால வழ்க்கையில் ஏழரை ஆண்டுகள் சனியின் தொல்லையில் கொடுமைக்கு ஆளாகவேண்டும் என்பது அவரின் விதி என்பதே ஜோதிடத்தின் நியதி ஆகும்.
சனிப்பலன்
நீண்ட கால வாழ்விற்கும், மரணத்திற்கும் காரணமாக இருப்பது சனி என்று சோதிடம் கூறுகிறது. வறுமை, கலகம், நோய், அவமரியாதை ஆகியவற்றின் காரணி சனியாகவே வருணிக்கப்படுகிறது. லக்னத்திற்கு 3.6,9,10,11 இடங்களில் சனி இருந்தால் குவியல் குவியலாக பணமும் பொருளும், வேலையாட்களுடன் கூடிய வாழ்வு அமையுமாம். லக்னத்திற்கு 2,4,8,12 இடத்தில் இருந்தால் துன்பமும், துயரமும், கஷ்ட நஷ்டங்களும் தொடர்கதையாய்த் தொடரும் எனக் கதை விடுகிறார்கள். இந்தியாவில் வறுமைக் கோட்டின் கீழ் 40 சதவீதத்திற்கு மேல் இருக்கிறார்கள் இவர்களின் வாழ்க்கை லக்னத்திற்கு 3,6,9,10,11 இடங்களில் சனி வராமல் இல்லை, ஆனால் நாளுக்கு நாள் வறுமைக்கோட்டிற்கு கீழ் வாழ்பவர்களின் எண்ணிக்கை கூடிக்கொண்டுதான் இருக்கிறது மறுபுறம் பெருமுதலாளிகளின் சொத்தும் பெருகிக்கொண்டுதான் இருக்கிறது. இதற்கு காரணம் சனிதான் என்று சொல்லி அதுதான் விதி விதிப்படிதான் நடக்கும் எனக்கூறி மக்களை ஏமாற்றி அவர்களின் போராட்டக் குணங்களை மழுங்கடிக்கச்செய்கிறது ஒரு கூட்டம் அதற்கு தூபம் போட ஏற்பட்டதே ஜோதிட குவியல்கள்.
சூரிய குடும்பத்தில் சனி
சனிக்கோள்
பூமியிலிருந்து தூரம்
127 கோடி கி.மீ
சூரியனிலிருந்து தூரம்
142 கோடி கி.மீ
சுற்றளவு
1,21,000 கி.மீ (பூமியைப் போல் 9 மடங்கு)
சுற்றிக்கொள்ளும் நேரம்
10½ மணி (பூமி 24 மணி)
சூரியனை சுற்றி வர காலம்
30 ஆண்டுகள் (பூமி ஒரு ஆண்டு)
குளிர் நிலை
-185oC
அடர்த்தி
தண்ணீரை விட குறைவு (தண்ணீரில் மிதக்கும்)
துணைக்கோள்கள்
31 (பூமிக்கு ஒரே ஒரு சந்திரன் மட்டும்)
சூரியனில் இருந்து உள்ள இடம்
6 (பூமி 3 ஆவது இடம்)
வடிவம்
இரண்டாவது பெரிய கிரகம் (பூமியைவிட 1000 மடங்கு பெரியது)
தன்மை
பெரும்பகுதி காற்றால் ஆனது (பூமி- நிலம், நீர், காற்றால் ஆகிய மூன்றால் ஆனது)
சனிக்கோளில் இருந்து வரும் ஒளி பூமியை வந்தடைய எடுத்துக் கொள்ளும் நேரம்
1 மணி 28 நிமிடம் (விநாடிக்கு 3,30,000 கி.மீ வேகம்)
வாயுக்கிரகமாக உள்ளதால் இதன் அடர்த்தி தண்ணீரைவிட மிகக்குறைவானது. சனியைவிட மிகப்பெரிய கடல் நம்மிடம் இருந்து அதில் சனியை தூக்கி போட்டால் சனி மூழ்காமல் மிதக்கும் என்பது ஆச்சரியமான உண்மை. இதன் காரணமாக மனிதன் அனுப்பும் செயற்கை கோள்கள் செவ்வாயிலும் சந்திரனிலும் தரை இறங்குவதைப்போல சனியில் தரை இறங்கமுடியாது. ஏனென்றால் இதற்கு உறுதியான தரைப்பரப்பு இல்லை குளிரால் ஆண்டு முழுவதும் வறண்டு கிடக்கும் இக்கோளை மிகவும் சக்தி வாய்ந்தது என்று கூசாமல் எப்படித்தான் பொய் சொல்கிறார்களோ?.
கோள்களிடம் உள்ள சக்தி
சோதிடத்தில் கிரகங்களுக்கு அளப்பறிய சக்தி உள்ளதாக சித்தரிக்கப்பட்டு உள்ளது. சனி, செவ்வாய், குரு போன்ற கிரகங்கள் மிகவும் சக்தி வாய்ந்ததாக காட்டப்பட்டுள்ளது. உண்மையில் சூரிய குடும்பத்தில் சக்தி உள்ள ஒன்று உள்ளதென்றால் அது சூரியனே ஆகும். சூரியன் மிகப்பெரிய அணுவுலையாகும். இதன் அளப்பரிய வெப்ப ஆற்றல், ஒளி ஆற்றல், காந்த ஆற்றல், ஈர்ப்பு விசை, புற ஊதாக்க்கதிவீச்சு போன்றவை மற்ற எந்த கிரகங்களுக்கும் இல்லை. உண்மையில் சூரியனுக்கு அடுத்த நிலையில் உள்ள கிரகம் பூமியே ஆகும். இதில் மனித உயிர்வாழ்க்கைக்குத் தேவையான தண்ணீரில் இருந்து, காற்று மண்டலமும் உள்ளது. வேறு எந்த கிரகமும் எவ்வளவு பெரியதாக இருந்தாலும் ஈர்ப்பு விசையைத்தவிர (அதுவும் குறிப்பிட்ட தூரத்திற்கு மட்டும்) வேறு சக்தி இல்லை. அவ்வளவு ஏன் சொந்தமாக ஓளி ஆற்றால்கூட இல்லை சூரியனிடம் இருந்து ஒளியை கடன்வாங்கி பிரதிபளிக்கக்கூடிய அளவிலேயே இவை உள்ளன. வெறும் வெற்று கிரகங்களான இவை அறிவியல் விதியான ஈர்ப்புவிசையின்படி சூரிய மண்டலத்தில் உள்ளனவே தவிர இவற்றிற்கு என எந்த சொந்த ஆற்றலும் இல்லை. இக்கிரகங்கள் பூமியில் இருந்து கோடிக்கணக்கான கி.மீ தூரத்தில் உள்ளதால் இந்த ஈர்ப்பு விசையும் பூமியை எட்டவே எட்டாது. ஆனால் சோதிடத்தில் பேராற்றல் உள்ள சூரியனும் டம்மி பீஸ்களாக செத்துப்போன எரிமலையும், வறண்டு போன ஆறுகளும், கடுங்குளிரும் கொண்ட மற்ற கிரகங்களும் சக்தி உள்ளவைப் போல் சித்தரிக்கப்பட்டு உள்ளது வேடிக்கையான ஒன்று.
கிரக நிலை மனிதனின் வாழ்க்கையை பாதிக்குமா?
1993 ஆம் ஆண்டுகளில் டெல்லியில் உள்ள சனிபகவானின் கோவிலுக்கு சனிக்கிழமைகளில் 100 முதல் 200 பேர் வந்து கொண்டிருந்தனர். ஆனால் தற்போது 1000 பேருக்கு மேல் வருவதாகக் கணக்கிட்டுள்ளனர். வந்தவர்களின் பிரச்சினைகள் தீர்ந்துள்ளதா எனக்கேட்டால், அப்படி ஒன்றும் இல்லை என்கின்றனர். பிரபலமான வானவியல் அறிவியலாளர் ஜெயாண்டி வி.நார்லிக்கர் கூறும்போது சனியைப் பற்றி பேசப்படும், சொல்லப்படும் கருத்துக்கள் அனைத்தும் தவறானது ஆகும். இதில் எந்தவித அறிவியல் உண்மையோ, செயல்பாடோ கிடையாது என்கிறார்.
உலகில் உள்ள மனிதர்களையும் ஜீவராசிகளையும் தங்களுடைய அதிகார பலத்தினால் ஆட்டிப்படைப்பவர்கள் இந்த ஒன்பது கிரகங்கள்தான் என்கிறது ஜோதிடம். இந்தியாவில் தற்போதைய மக்கள் தொகை 120 கோடி ஆகும். இவர்கள் அனைவரும் 12 ராசிக்குள்தான் வருவார்கள். அப்படி என்றால் ஒரு ராசியில் 10 கோடி பேர் உள்ளனர். இவர்களின் வாழ்க்கை நிலை ஒன்றுபோல் உள்ளதா? என்றால் இல்லை
சமுதாயத்தில் உள்ள சாதி, தீண்டாமை, ஏற்றத்தாழ்வு, வேலையின்மை, உலகமயம், தனியார் மயம், தாராள மயம் மற்றும் அரசு கடைபிடிக்கும் தவறான பொருளாதாரக் கொள்கைகள்தான் மனிதனின் வாழ்க்கையைப் பாதிக்கிறது. வறுமைக்கும் கூட இவைகள்தான் இன்றளவும் காரணமாகவுள்ளது.
அறிவியல் பார்வை
பழக்கத்தின் காரணமாக பிடிவாதமாக நமது முன்னோர்கள் நம்பி வந்த நம்பிக்கை இதுவரை தொடர்ந்து வந்துள்ளது. நம்மீது விடாப்பிடியாக உள்ள அந்த நம்பிக்கை மீது நாம் சந்தேகிக்க மறுக்கிறோம். வானவியலை நன்கு அறிந்துகொள்வதின் மூலம் நமக்கு உண்மை புலப்படும்.
உண்மையில் சனிக்கிரகத்தின் வளையமானது அதற்கு அழகைக் கூட்டுகிறது. சிறந்த ஓவியரால்கூட தீட்ட முடியாத வண்ணங்கள் அதில் உள்ளன. வேறு எந்த கிரகத்திற்கும் இல்லாத அழகும், அதிசயமும் சனிக்கிரகத்திற்கு மட்டும்தான் உண்டு.
இனி சனியன் என யாரும் திட்டினால் அதற்குக் கோபமோ, வருத்தப்படவோ வேண்டியதில்லை. சனியைப் பற்றிய முழு உண்மைத் தெரிந்தவர்கள் சனியன் என்றால் மிகவும் மகிழ்ச்சியடையலாம்.
-பொன்.ரங்கன்
திரு. பொன்.ரங்கன் நல்ல தொகுப்பு, நன்றி, இந்த படைப்புக்கு பல புத்தகங்களை வாசித்திருப்பீர்கள். ஆகவே அந்த புத்தகங்களையும் அதன் படைப்பாளர்களையும் குறித்திருந்தால் அவர்களுக்கு நன்றி தெரிவித்திருந்தால் மேலும் நன்றாக இருந்திருக்கும். நன்றி
ஏலரையோன் காலத்தை நம்பிக்கொண்டு நம்ப ஐயப்ப பக்தர், நம்பிக்கை நாயகன் போன்றோர், “வாயைத் திறந்தால் வம்பு வரும்” என்று சோதிடன் சொன்னதால் இருவருமே மௌன விரதம் இருப்பதிலிருந்தே தெரியவில்லையா, சோதிடம் இவர்களை சோடைகளாக்கி விட்டது என்று. தத்தம் சுய நம்பிக்கையை இழக்க வைப்பதில் நமது சோணகிரி சோதிடர்கள் நல்ல வெற்றியை நாட்டியுள்ளனர். மீண்டும் வருவேன்.
இக்கட்டுரையில் சொல்லப்பட்ட செய்திகள் அனைத்திலும் எனக்கு உடன்பாடு உண்டு. எனது சித்தாந்த வகுப்பு மாணவர்கள் இந்தப் பெயர்ச்சிகளால் வரும் பலன்கள் அனைத்தும் பொய்யென உணர்த்தப்பெற்றுள்ளனர். இந்தியாவின் 120 கோடி மக்களில் இஸ்லாமியர், கிருஸ்துவர்களையும் உலகின் ஏனைய 500 கோடி மக்களையும் விட்டுவிட்டு இந்துக்களை மட்டும் துரத்தித் துரத்தி இந்தப் பெயர்ச்சிகள் தாக்குவது ஏன்? அறிவியலிலும் பொருளாதாரத்திலும் சிறந்து விளங்கும் அமெரிக்கர்களையும் ஜப்பானியர்களும் இந்தக் கிரகங்களும் பெயர்ச்சிகளும் ஒன்றும் செய்யாதா என்றெல்லாம் சிந்திக்க வேண்டும். அவ்வளவு தூரம் ஏன் போக வேண்டும்? கடந்த 20 ஆண்டுகளாக மலேசியாவில் பெயர்ச்சி வேள்விகள் கோயில்களில் பெரு விழாக்களாகக் கொண்டாடப்படுகின்றன. பலன் என்ன? மக்கள் தொகையில் நாம் 7%. ஆனால் மருத்துவ மனை நோயாளிகளில் 30%, அதிலும் நீரிழிவு நோயாளிகளில் நாம் 25%. குண்டர்களில் 65%, போதைப்பித்தர்களில் 20%, சிறைச்சாலைக் கைதிகளிலும் 15%க்கு மேல். நாட்டின் வறுமைக் கோட்டுக்குக் கீழ் இருக்கும் மக்களிலும் நாம் 40%. கிரக தோஷ நிவர்த்திகளாலும் பெயர்ச்சி வேள்விகளாலும் இந்துக்கள் சமூகப் பொருளாதார நிலைகளில் எந்த மேம்பாடும் பெற முடியவில்லையே, ஏன் என்றும் சிந்திக்க வேண்டும். சோதிடம் என்ற பெயரில் இன்று சொல்லப்படும் கருத்துகள் அனைத்தும் அறிவியலுக்கு அப்பாற்பட்டவை. வணிகத் தன்மையானவை. சோதிடத்தை வணிகமாக்குவதில் கோயில்கள் மட்டுமல்ல, ஊடகங்களும் முனைந்துள்ளன. அறிவார்ந்த சமயம், ஒரு கடவுள் வழிபாடு இந்துக்களின் சமய வாழ்வைச் சீர்படுத்தும். மலேசிய சைவ சமயப் பேரவையும் சைவ சமய மன்றங்களும் எமது சித்தாந்த வகுப்புகளும் இப்பணியில் ஆரவாரமின்றிச் செயல்பட்டு வருகின்றன.
நல்ல
பதிவு வாழ்த்துக்கள்
அதானே ? பார்பனரையும் மதத்தையும் சீண்டாமல் கட்டுரை ஒன்று இவ்வலைத்தளத்தில் வந்தால் ஆச்சரியம் தான் …பொழுது போக்கு ?????
நான் பிராமண வகுப்பை சேர்ந்தவராக இருந்தாலும் என் தாத்தா அப்பா ஜோஹோர் பரு மாரியம்மன் கோவிலில் 60 களில் குருக்களாக இருந்த போது குட இப்படி இல்லை . புது வீடு கிரக பூஜை என்றாலும் அவர்களே இஷ்டப்பட்டு தருவதை வாங்கி கொள்வார்கள் என் தாத்தாவும் என் அப்பா வும் ஆனால் இன்றைய நிலையில் கோவில் தலைவகள் ஒரு பக்கம் புசாரிகள் ஒரு பக்கம் என்று மக்களிடம் நன்றாகவே பணம் பரிகின்றனர் . இன்றைய தேதியில் சனிக்கிழமை சனிஸ்வரனுக்கு விளக்கு போட வேண்டும் என்றால் அதிக பட்சமாக 1 விளக்கு 8-10 வெள்ளி கேட்கின்றனர் . ஒரு குடும்பத்தில் 4 பேருக்கு சனி சனி பிடித்திருந்தால் 40 வெள்ளி . இது அந்த பகவானுக்கே பொறுக்காது . நல்ல வேலை இந்த அக்ஷ்ய திருதியை அன்று நகை வாங்க சொல்லி எங்களுக்கு யாரும் சொல்லி தரவில்லை . அதனால் தேவை என்றால் ஒழிய அந்த பக்கம் போவது இல்லை . சில காளான்கள் சுய நலத்திற்காக இந்துமதம் பலியாகிறது .
ஏன் இந்நாட்டு இந்தியர்கள் சற்றும் சிந்திக்காமல் ஆலய நிருவாகம் போடும் தீயில் குளிர் காயும் புரோகிதருக்கு நம் பணத்தை கரியாக்குகின்றார்கள்?. ஏன் ஒரு சில அருச்சகர்கள் பொய்யானா சமய வழிகாட்டுதலில் கூட்டுக் களவாணியாக செயல்பட வேண்டும்?. இது சமயத் தொண்டா அல்ல சன்மானத் தொண்டா?. இத்தகைய சாந்தி பரிகாரம் எவரையும் ஊழ்வினைப் பயனில் இருந்து காப்பாற்றாது என்று சொல்ல வேண்டியவரே வரவுக்காக அடிப்பணிந்து கீழிறங்கிப் போகலாமா?. எவ்வளவு நாளைக்கு இப்படி ஏமாளிகளான எம்மின மக்களை ஏய்த்து வயிறு வளர்க்க முடியும் என்று நினைக்கின்ரார்கலோ தெரியவில்லை?. நமது ஆலயங்களின் தவறான வழிகாட்டுதலால் அறிவார்ந்த மக்களிடையே இந்து மதத்தின் மீது தப்பான கருத்து ஏற்பட்டு பாபா குளுமங்களுக்கும், குரு குழுமங்களுக்கும் அவர்களின் தேடலுக்குத் தீர்வைத் தேடி ஓடிப்போகின்றனர். அங்கே அவர்களுக்கு கிடைக்கும் தீர்வு ஏன் நமது ஆலயங்ககளால் கொடுக்க முடியவில்லை? அப்புறம் எப்படி ஆலயங்கள் நம் சமயத்தை இந்நாட்டில் நிலைக்கச் செய்ய முடியும்?. இந்நாட்டு இந்தியர்கள் சிந்திப்பார்களாக.
பொன் ரங்கன், நல்ல தொகுப்பு ! அயராத தேடல் ! நான் ரசித்தேன், வாழ்த்துக்கள் ! ஆனால் நான் உங்களுடன் முரண்படுகிறேன். ஏழு கிரகங்களும், இரண்டு கிரக நிலையையும் (ராகு , கேது) கொண்டே, ஒன்பது கிரகநிலையை இந்துக்களின் இதிகாசங்கள் குறிபிடுகின்றன. ஆனால், நீங்கள் நினைப்பது போல் அல்ல கிரக சாஸ்திரம் . இந்துகளுக்கு பொதுவாக ஐந்து வான ஜோயிடம் உண்டு ! திருகனித பஞ்சாங்கம், வாக்கிய பஞ்சாங்கம், லஹிரி பஞ்சாங்கம், கிருஷ்ணா மூர்த்தி பஞ்சாங்கம், சம்ஸ்கிருத பஞ்சாங்கம் என்றும் உண்டு, சம்ஸ்கிருத பஞ்சாங்கம் புழக்கத்தில் இல்லை. இவற்றில் முன்று ஒரு சார இருப்பதும், வாக்கிய பஞ்சாங்கம் மட்டும் திகதிகளில் 45 நாட்கள் பின்தங்கியும் இருக்கும். இந்து மத போதங்கங்களில், ஸ்மிருதி, சுருதி என்று உண்டு. ஸ்மிருதி என்ற கணிப்பு, நமது முனிவர்களால், ஞானத்தால் எழுத பட்டது. உதர்ணதிர்க்கு அகத்தியர் எழுதிய இலக்கணம் போன்று. இன்று அவை நம்மிடம் இல்லை, மாறாக தொல்காப்பியர் எழுதிய இலக்கணம் அந்த இடத்தை நிரப்புகிறது. சுருதி, கடவுளால் நேராக மனிதர்களுக்கு தந்தது. பகவத் கீதை போல. ஆகையால், ஒருவரின் கணிப்புக்கும், கடவுள் தருவதற்கும் வேறு பாடு உண்டு. நான் வியப்பது என்ன வென்றால், சனி பகவானின் மகன், மாந்தி என்ற கிரகம், நமது solar system த்தில் தான் உள்ளது, ஆனால் கண்ணுக்கு தெரியாது. அதை NASA 2009 தொலை நோக்கில் கண்டு, அதற்க்கு medina என்று பெயர் சுட்டியது. சிலர் sedina என்கிறார்கள். அது மறைந்து, மறைந்து வந்து செல்லும். இன்னும் முழுமையான விளக்கம் இல்லை. ஆனால். இந்து மத நான்காவது வேத மான அதர்வண வேதத்தில், சனியின் மகன் மாந்தி, தன் தந்தையை 7.5 சனி முடியும் பொழுது, கண்டு செல்வார் என்று இருக்கிறது. அந்த நேரத்தில், அஷ்ட கர்மங்கள் செய்யும் பொழுது, ஒருவருக்கு துஷ்ட தேவதையை கொண்டு அதித தொந்தரவு செய்யலாம் என்றிருக்கிறது ! இதை கொண்டே, மலையாள மாந்திரிகம் வந்தது. ஆகையால், இன்னும் தெரியாத விஷயங்கள் நிறையவுள்ளதையா. உங்கள் தேடலுக்கு எனது வாழ்த்துக்கள். நான் நம்புகிறேன், கடவுள் காரணம் இல்லாமல் மனிதனுக்கு சிந்திக்கும் தன்மையை கொடுத்திருக்க மாட்டார் என்று. காலமே உண்மையின் நிலையை மனிதனுக்கு உணர்த்தும்.
சூப்பர்…சர் .
ஒரு கிரகமும் அதன் சந்திரன்களும் (‘planets and its moon’) எங்கிருக்கின்றன, எப்படி இருக்கின்றன, எப்படி செயல்படுகின்றன என்று துல்லியமாக கூறக்கூடிய இந்த 21-ம் நூற்றாண்டில், “சனி + பகவான்” என்பதும் “சனி + மகன் = மாந்தி” என்பதும் “தமிழரின்” அறிவாற்றலை சந்தி சிரிக்க வைத்திடும். சடப் பொருளான அந்தந்த கிரங்களின் பெயரைச் சொல்லி அதன் சந்திரங்களின் பெயரைச் சொல்லி குறிப்பிடுவதே படித்தரிந்தவர்க்கு அழகு. இல்லையேல், சடமான கிரகங்களை நவகிரக மூர்த்திகளாக்கி, பாமரர்களை பயமுறுத்தி இன்று வழிபடு மூர்த்திகளாக்கி குளிர் காயும் சோதிடம் நாளை தமிழரை அழிந்துவரும் இனமாக்கி (endangered species’) விடும்.
திலிப் 2 தங்களின் நான்காவது பரா பதிவு “நீங்கள் நினைப்பது போல் அல்ல கிரக சாஸ்திரம்” நான் நினைவுக்கு வந்ததை எழுதும் பண்டிதன் அல்ல ! சாஸ்திர சம்பிரதாயம எனதல்ல நான் படித்த
அறிவியல் ஆயிரம் ..புவி அறிவியல் ஆய்வுக்கு போவோம்.
நாம் தேடுவது விஞ்ஞானமா .மெஞ்ஞானமா ? பாருங்கள் !
விஞ்ஞானம் என்பது என்ன? விஞ்ஞான அறிவு எவ்வாறு பெறப்படுகின்றது? என்பது விஞ்ஞானத்தின் மீதும் விஞ்ஞான தத்துவத்தின் மீதும் கேட்கப்படும் அடிப்படையான கேள்விகளாகும். விஞ்ஞான அறிவு என்பது விவரங்களிலிருந்தும், தரவுகளிலிருந்தும், பொருண்மைகளிலிருந்தும், அனுபவத்திலிருந்தும் பெறப்படும் அறிவாகும். விஞ்ஞானம் என்பது அனுபவ உண்மைகளிலிருந்து பெறப்படும் அறிவாகும் என்பது அறிவியல் தத்துவம் குறித்த பொதுவாக எல்லோராலும் கோட்பாடாகும். இது விஞ்ஞான துறையைச் சார்ந்த அறிஞர்களும் கூட இவ்வாறுதான் விளக்கம் கொடுப்பார்கள்.
நாம் புற உலகத்தை கண்ணால் பார்க்கின்றோம்; காதால் கேட்கின்றோம்; வாயால் சுவைக்கின்றோம்; மூக்கால் நுகர்கின்றோம்; உடலால் உணர்கின்றோம். இந்த அனைத்தும், பொருட்கள் புலன்களைப் பாதித்து நமது மூளையால் உணரும் அனுபவங்களாகும். ஆக புறவுலக பொருட்கள் குறித்த அறிவைப் பெறவேண்டுமானால் அவற்றின் நிகழ்வுகளையும் அனுபவங்களையும் நாம் உணரவேண்டும். அவ்வாறின்றி பொருட்கள் குறித்த அறிவைப் பெறவியலாது என்பதைதான் மேற்குறித்த விஞ்ஞான கண்ணோட்டம் உணர்த்துகின்றது. நேரடியாக பார்ப்பது, கேட்பது, தொடுவது போன்ற அனுபவங்களை மட்டும் விஞ்ஞானம் ஏற்றுக் கொள்ளும். ஆனால் கற்பனைகளையும், யூகங்களையும் விஞ்ஞானம் ஒருபோதும் ஏற்றுக் கொள்ளாது. ஆக விஞ்ஞான அறிவு என்பது பொருட்கள் குறித்த பொருண்மைகள், நிகழ்வுகள், அனுபவங்கள் மீது கட்டப்படும் கட்டிடம் ஆகும். இன்றளவும் இத்தகையக் கோட்பாடுதான் பெரும் செல்வாக்குப் பெற்றுள்ளது. ஆனால் பண்டைய கால விஞ்ஞானத்தின் அணுகுமுறை, கோட்பாடு என்பவை முற்றிலும் வேறானவையாக இருந்தது.
பண்டைய விஞ்ஞானத்தின் அடிப்படை
கிரேக்கர்கள் தங்களது சிந்தனைக்கான வடிவமைப்புகளை சில அடிப்படையாக கோட்பாடுகளிலிருந்தோ அல்லது கொள்கைகளிலிருந்தோ பகுத்தாராய்வதன் மூலம் பெற்றார்கள்; தொகுத்தாராயும் முறை என்பது அவர்களுக்கு அறியாத ஒன்றாக இருந்தது எனலாம். பகுத்தாராய்வதும், தர்க்கஅறிவும் கொண்டதுதான் கிரேக்கத் தத்துவத்தின் சாரமாகத் திகழ்ந்தன.
இத்தகைய பகுத்தாய்வு முறைமைக்கு வித்திட்டவர் பண்டைய கிரேக்க விஞ்ஞானியும் தத்துவ அறிஞருமான அரிஸ்டாடில் ஆவர். இவரது காலம் தொட்டு 17 ஆம் நூற்றாண்டுவரை பகுத்தாய்வு முறைமைதான் அனைத்து விஞ்ஞான துறைகளிலும் பெரும் செல்வாக்குச் செலுத்திவந்தன. பண்டைய விஞ்ஞானம் என்பது பகுப்பாய்வு முறையின் மீது எழுப்பப்பட்டது என்றால் அது மிகையாகாது.
பருப்பொருட்களுக்கிடையே செயல்படும் விசையைப் பற்றிய துல்லியமான வரையறை செய்தவர் நியூட்டன் ஆவர். இந்த விசையானது, இருபொருட்களுக்கும் இடையே உள்ள தூரத்திற்கும் அவற்றின் நிறைக்கும் உள்ள சமன்பாடாகும். அதுதான் ஈர்ப்புவிசை எனப்படுகின்றது.
பெளதீக நிகழ்வுகள் அனைத்தும், பொருட்களின் பரஸ்பர ஈர்ப்பினால் இயங்குகின்ற இயக்கமாக சுருக்கப்பட்டன. அதாவது ஈர்ப்பு விசையினால் நிறைப்புள்ளி மீதான விசையின் விளைவை துல்லியமான கணிதவியல் வடிவத்தில் வடிக்கும் பொருட்டு, நியூட்டன் முற்றிலும் புதிய கருத்தாக்கங்களையும் கணிதவியல் நுட்பங்களையும் கண்டுபிடிக்க வேண்டியதாயிற்று. அவை வகைநுண் கணிதம் எனப்பட்டது.
பருப்பொருட்களும் அவற்றிற்கிடையில் செயல்படும் விசையும் இறைவனால் உருவாக்கப்பட்டதாக கருதப்பட்டன. நியூட்டனும் இவ்வாறே நம்பினார். முதல் முடுக்கம் பெற்றப்பின் ஒழுங்குமுறையில் பிரபஞ்சம் இயங்கும். இத்தகைய ஒழுங்குமுறைக்குட்பட்ட இயக்கம் முன்கூட்டியே தீர்மானிக்கப்பட்டுவிட்டது என்பதே நியூட்டனின் பிரபஞ்சம் பற்றிய கருத்துரையாகும்.
நியூட்டனின் இயந்திரவியல் கொள்கை
துவக்கத்தில் பிரபஞ்சமானது இயக்கம் ஏதுமின்றி ஓய்வுநிலையில் இருந்தது. எல்லாப் பொருட்களும் இயக்கமற்றுதான் இருந்தன. முதல் முடுக்கம் பெற்றப்பின் பிரபஞ்சம் தானே சுயமாக இயங்கத் துவங்கியது. அதன் பிறகு எந்த தலையீடும் தேவையில்லை. இந்த நியூட்டனின் இயந்திரவியல் கொள்கைதான் மரபுவழி இயற்பியலுக்கு அடிப்படையாகத் திகழ்ந்தது. ஏறக்குறைய மூன்று நூற்றாண்டுகள் வரைக்கும் இயற்கையியல் தத்துவங்களுக்கு ஓர் உறுதியான அடிப்படையைத் தந்தது.
நியூட்டனின் கருத்துப்படி, கடவுள் முதலில் பருப்பொருட்களையும் அவற்றிற்கிடையேயான விசைகளையும் அடிப்படை இயக்க விதிகளையும் படைத்தார். பிறகு, ஒட்டுமொத்த பிரபஞ்சமும், ஓர் இயந்திரம்போல, மாறாத விதிகளால் தீர்மானிக்கப்பட்டு, இயங்கப்பட்டது. இன்னமும் தொடர்ந்து இயங்கிக் கொண்டும் இருக்கின்றது.
சனியனுக்கு இந்துக்கள் மேல் மட்டுமே பாசம் , அன்பு , பரிவு போலும். மற்றவர் எப்படி போனால் என்று நினைக்கின்றானோ என்னவோ. ஏமாற்றுபவர் இருக்கும் வரை ஏமாறுபவர் இருக்கத்தான் செய்வார்கள்.
ஜப்பானியர்களை இந்த சனி பிடிக்கவில்லைய ? நாகசாகி இரோஷிமா அழிந்த பொது அவர்கள் எந்த கிரகங்களை சுற்றினார்கள் ? அவர்கள் சொந்த மூளையை கொண்டு உலகுக்கு பல அறிய கண்டு பிடிப்புகளை கொடுத்தார்கள் .
இன்னும் கொடுத்து கொண்டு தான் உள்ளனர் . ஜபானியர்கள் இல்லை என்றால் விஞானமே இருந்திருக்குமா தெரியவில்லை . ஏன் நமது கடவுளுக்கு மட்டும் இவ்வளவு செலவு செய்ய வேண்டி உள்ளது ? கடவுளுக்கு இவ்வளவு செய்தும் மற்றவர்கள் புகழும் அளவுக்கு இந்தியர்களின் வாழ்க்கை நிலை ஒன்றும் உயரவில்லையே .
பொன் ரங்கன், உங்களின் இரண்டாவது விளக்கம் எனக்கு திருப்தி அளிக்க வில்லை சார் ! அறிவியலின் கண்டு பிடிப்பு, ஒரு குறிப்பிட்ட காலத்தில், ஒரு குறிப்பிட்ட துரத்தில் ஆரம்பித்து, ஒரு குறிபிட்ட இடத்தில முடிந்து விடுகிறது. அறிவியல், ஆரம்ப நிலையையும் விழக்காது, அது முடியும் இடத்தையும் விழக்காது. ஒருவரின் சிந்தனையில் தோன்றிய விஷத்தை hypothesis என்பார்கள். அது, பல அறிஞராலும் யெற்று கொண்ட பின் theory ஆகும். அதே கோட்பாடு, உலகளாவிய நிலையில், பயனீடில் உள்ள பொழுது, அதனை law என்கிறோம். நியூட்டன் கூறினார் பூமியில் 5 மணி என்றால், நிலவிலும் 5 மணி என்று. அதை தவறு என்று ஐன்ஸ்டீன் நிருபித்து, காலமும் நேரமும் ஒன்றோடு ஒன்று பின்னி கொண்டிருக்கிறது என்றார். இதையே, 2009 லில் , ஆஸ்திரேலியா விஞ்ஞானி, பிரபஞ்ச நடப்புகள், ஒரு DNA போன்ற நாளங்களில், இரண்டு இடங்களில் பிணைக்க பட்டிருக்கிறது, ஆகையால் அந்தரத்தில் தொங்குகிற தன்மை இருக்கிறது காரணம் அவை முறையே எங்கோ ஒட்டி கொண்டிருக்க வேண்டும் என்றார். அப்படி பல கோடிகணக்கான நாளங்கள் உள்ளது என்கிறார். நியூட்டன் அவர்களின் விதிகள் CLASSICAL MECHANICS என்போமே தவிர, வாழ்வியலுக்கு அப்பாற்பட்டது. aristotle plato sorcratis தத்துவங்களை நானும் அறிவேன். ஆனால் அவை அறிவியலுக்கு முரன்னானவை.
டார்வின், theory of evolution பற்றி விழக்கையில், மனிதன் முதலில் தண்ணீரில் இருந்து, மீனாகி, தவளையாகி, உடும்பாகி, பின் ஜந்துக்கள் ஆகி, குரங்காகி , பின் மனிதன் ஆகிறான் என்கிறார். அவரின் கோட்பாடு இன்னமும் theory வடிவில் உள்ளது. தண்ணீரில் எப்படி தோன்றினான் என்பதற்கு விளக்கம் இல்லை, ஏன் எல்லா குரங்கு களும் இன்னும் மனிதனாக வில்லை என்ற கேள்விக்கும் விளக்கம் இல்லை ! இதை இந்து மத போதகங்கள், மனிதன் ஆறறிவில் இருந்து, குறைந்த அறிவை நோக்கி, பல ஜென்மங்கள் எடுப்பான் என்றிருக்கிறது. ஆகையால், மனிதர்களின் hypothesis , theory , law என்ற இந்த மூன்றும் (விஞ்ஞானம்) முடியும் இடத்தில தான் சார் மெய்ஞானம் பிறக்கிறது. மனிதனால் உண்ணாமல் 21 நாட்களுக்கு மேல் வாழ முடியாது என்கிறது அறிவியல். நேபாளில் ஒரு யோகி 7 மாதங்கள் உண்ணாமல் இருந்திருக்கிறார். ஆகையால், நீங்கள் கூரும் விஞ்ஞானம், மெய்ஞானத்தின் வாசல் படியே. அவை அறைக்குள் நுழைந்ததாக ஆகாது !
விஞ்ஞான அறிவின் அடித்தளம் எப்பொழுதுமே திடமானதாக இருந்ததில்லை
விஞ்ஞான அறிவின் அடித்தளம் எப்பொழுதுமே திடமானதாக இருந்ததில்லை; பலமுறை மாறியுள்ளது; தலையாய விஞ்ஞானப் புரட்சிகள் நிகழ்ந்த போதெல்லாம் விஞ்ஞானத்தின் அடித்தளம் சரிந்து வந்துள்ளது. விஞ்ஞான வரலாறு முழுமையுமே மீண்டும் மீண்டும் அறிவினுடைய அடித்தளம் மாறிக்கொண்டே வந்துள்ளது. சில சமயங்களில் முற்றாக நொறுக்கப்பட்டுள்ளது. விஞ்ஞானத்தின் தற்போதைய புதிய கருத்தோட்டத்தில் ஏற்பட்டுள்ள மாற்றமும் அத்தகையதொரு உணர்வையே ஏற்படுத்துகின்றது.
இயற்கையானது மனிதப் பார்வையாளனையும் ஒருங்கிணைந்ததோர் உட்கூறாக உள்ளடக்கிய உள்ளார்ந்த இணைப்புக் கொண்ட உறவுகளின் இயக்கப் பூர்வமான வலைப் பின்னல் என்று கருதப்படுகிறது. இந்த வலைப்பின்னலின் ஒவ்வொரு அங்கமும் ஏனைய அங்கங்களைப் போலவே உறுதியான வடிவங்கள்; இக்கருத்தின்படி இயற்கை நிகழ்வுகள் எந்த ஓர் அங்கத்திற்கும் ஏனைய அங்கங்களைக் காட்டிலும் அடிப்படையானது என்கிற கருத்திற்கு இடமளிக்காத வகையில் கருத்தாக்கங்களின் வலைப்பின்னல் என்கிற அடிப்படையில் விவரிக்கப்படுகின்றன.
விஞ்ஞானத்தின் முற்றமுடிந்த உண்மை என்று ஒன்று உண்டா?
விஞ்ஞானத்தில் முற்றும் முடிந்த உண்மை என்று எதுவும் இல்லை. விஞ்ஞான விதிகள் எல்லாம் குறைபாடுடையனவாகவும், தோராயமானவையாகவுமே இருக்கின்றன. இத்தகைய தோராயமான விளக்கங்கள் அடுத்தடுத்த முயற்சிகளில் காணப்படும் அடுத்தடுத்த முன்னேற்றங்களால் செழுமைப்படுத்தப்படுகின்றன. இருப்பினும் அந்த மாதிரி முன்னேற்றங்கள் பாரதூரமான மாற்றங்களைக் கொண்டுவருவதில்லை.
ஒவ்வொரு புதிய கொள்கையும் முந்தைய கொள்கையோடு நன்கு வரையறுக்கப்பட்ட விதத்தில்தான் தொடர்புறுத்தப்படுகின்றது. புதிய கொள்கை பழையக் கொள்கையை முற்றிலும் மறுத்தலிப்பதில்லை. அதில் நிலவும் தோராயத்தன்மைச் சற்றே செழுமைப் படுத்தப்படுகின்றது. அவ்வளவுதான். எடுத்துக்காட்டாக குவாண்டம் இயந்திரவியல், நியூட்டனின் இயந்திரவியலை முழுமையாகத் தவறென்று நிரூபித்துவிடவில்லை. நியூட்டன் கால இயற்பியலோர் எல்லைக்குட்பட்டது என்று மட்டுமே நிறுவியுள்ளது.
நியூட்டனின் கண்டுபிடிப்பு பேரண்டத்தின் சீரான ஒழுங்கமைப்பைப் பற்றி கூறுகின்றது. இந்த அடிப்படையைக் குவாண்டம் இயந்திரவியலிலோ சார்பியல் கொள்கையிலோ மறுதலித்து விடவில்லை. மாறாக உறுதிப்படுத்தப் பட்டு புதிய கொள்கைகளாக வளர்த்தெடுக்கப்படுகின்றன.
பேரண்டத்தின் அடிப்படையான ஒற்றை நிலை மற்றும் உள்ளார்ந்த சார்புத் தன்மை, அதனுடைய இயற்கை நிகழ்வுகளின் உள்ளார்ந்த இயக்கப் பூர்வமானதன்மை ஆகிய நவீன இயற்பியலின் இவ்விரு மாபெரும் மையக் கருத்துக்கள் எதிர்கால ஆய்வுகளால் என்றுமே மறுத்தலிக்கப்பட மாட்டா.
கிரகங்கள் சுத்துதோ இல்லையோ,
நண்பர்கள் எழுதும் கருத்துக்களை படிக்கும் போது என் தலை பயங்கரமா சுத்துறது.
திரு. பொன்.ரங்கன் அவர்கள் (Pon Rangan wrote on 23 December, 2014, 18:57) – பதிவை இங்கு இருந்து எடுத்துள்ளார்
எனது {அறவன் wrote on 19 December, 2014, 12:35 } கருத்துபடி அதன் படைப்பாளரை குறிப்பிட மறந்துவிட்டார்.
நவீன இயற்பியலின் வளர்ச்சியும் அறிவியல் சிந்தனையில் ஏற்பட்ட மாற்றங்களும்
விவரங்கள்
எழுத்தாளர்: அண்ணா.நாகரத்தினம்
தாய்ப் பிரிவு: அறிவியல் ஆயிரம்
பிரிவு: புவி அறிவியல்
வெளியிடப்பட்டது: 10 ஜனவரி 2013
மேலும் வாசிக்க இங்கே செல்லுங்கள் – http://www.keetru.com/index.php/2014-03-08-04-38-54/2014-03-14-11-17-75/22606-2013-01-10-15-59-02
2015 சனி பெயர்ச்சியில் குழப்பிய சோசியர்..! தமிழர் அறிவியல் என்ன சொல்கிறது ? சோசியர்கள் அறிவார்களா ? -திரு. பொன்.ரங்கன் அவர்கள் தனது படடைப்புக்கு கீழ் உள்ள கட்டுரையை பயன்படுத்தி உள்ளர்.
ஏழரை சனி
விவரங்கள்
எழுத்தாளர்: அன்பு தனசேகர்
தாய்ப் பிரிவு: சமூகம் – இலக்கியம்
பிரிவு: கட்டுரைகள்
வெளியிடப்பட்டது: 19 டிசம்பர் 2011
மேலும் வாசிக்க இங்கே செல்லுங்கள்
http://keetru.com/index.php/2014-03-08-04-35-27/2014-03-08-12-18-14/17826-2011-12-19-05-08-57
ஆனால் ஒன்று மட்டும் சர்வ உண்மை –
கிரகங்கள் என்றால் என்ன என்று மனிதர்கள் அறியாத நிலையில் – ஆயிரம் ஆண்டுகளுக்கும் மேலாக அவற்றை 9 என கண்டுபிடித்து அவற்றை ஆலயத்தில் வைத்து “நவகிரகங்கள் என அழகு பார்த்து -அறிவியல் உலகத்தையே உலுக்கி பார்த்த மதம் இந்து மதம் ….
“ஆலயத்தில் வைத்து “நவகிரகங்கள் என அழகு பார்த்து”?. மவனே எந்த ஆண்டிலிருந்து ஆலயத்தில் வைத்து அழகு பார்த்தனர்?. கொஞ்சம் விளாவாரியாக நவகிரக வழிபாடு வந்த சரித்திரத்தை சொல்ல முடியுமா உம்மால். சொல்லித்தான் பாரேன். அப்புறம் பொட்டி கிழிஞ்சிடும். அழகு பார்ப்பதற்க்காகவா நவகிரகத்தை ஆலயத்தில் வைத்தார்கள்?. அப்படி என்றால் ஏன் கருவறைக்குள் வைக்கவில்லை?. அழகு பார்ப்பதற்காகவா சைவத் தமிழர்களின் ஆகமம் திருமேனி வழிபாட்டை நிறுவியது?. சமயத்தை அறியாமல் சாம்பிராணி, தூபம் போடுபவனால் வந்த வினை இது?. சோதிடம் வேதத்தின் ஓர் அங்கமாக வைத்த ஆரிய பிராமணரே அந்த நவகிகர மூர்த்திகளை வைத்து வணங்காமல் போனானே அது ஏன்?. அவனுக்குத் தெரியுமடா சோதிடம் என்றால் என்னவென்று!. அவன் வழிபடாமல், அந்த நவகிரக மூர்த்தியை ஒரு சில முட்டாள் தமிழரில் தலையில் மட்டும் சாத்தினானே அது ஏன்?. இப்படியே ஏன், எதனால், எதற்கு என்று தமிழர் கேள்விக் கேட்காமலேயே ஆரியனை நம்பி அதற்குப் பின் நம் ஆலய அருச்சகர்களை நம்பி, அதற்கும் பின் சோதிடனை நம்பியதால்தான் தமிழரை சமயம் என்ற போர்வையில் அனைவருமே இன்று ஏமாற்றுகின்றனர். ஏமாளிகள் எம்மின மக்கள் என்பதால் வயிறு எரிகின்றது. அட மடத் தமிழர்களே தமிழரின் சமயம் அறிவுப் பூர்வமானது, தருக்க நெறியின் அடிப்படையில் தோன்றியது என்பதை அறிந்து ஆலயத்தின் உள் அடி எடுத்து வையடா!. அப்பொழுதுதான் தமிழரின் சமயத்தை தரணியே அன்னாந்துப் பார்க்கும்.
தெனாலி நாகப்பன் ..முன்பு நீ ஹிந்து சங்க தலைவன் அப்போ என்ன செய்தி ……..என்ன இப்போ தலைவனை செய் …பொன் ரங்கன் நீ உண் பொண்டாட்டி..சொல்லி தாலி கழட்டி வைத்து …..அருணா கொடியை..கட்டு …பிறகு பேசு
…………….தேனீ >> ….அறிவு களஞ்சியமே>> தேவையின்றி உமக்கு எனையா கொதிக்கிறது ?? தேவாரம் -திருமுறைகள் – திருப்புகழ்- அபிராமி அந்தாதி – திவ்ய பிரபந்தம் -திருமந்திரம் -எதுவும் தமிழ் இல்லையா ??இவற்றை அருளியது யார் ? எல்லாம் வட நாட்டு ஆன்மீகவாதிகளா ?? இவற்றில் ஒன்று கூடவா பார்பனர்களின் திறம் இல்லை ??……………….
திருமுறைகள், திருப்புகழ், அபிராமி அந்தாதி, திவ்ய பிரபந்தம், திருமந்திரம் அனைத்தும் தமிழருடையதே. ஆனால் இதில் எதிலாவது நவகிரகத்தை வழிபடு என்று கூறப் பட்டுள்ளதா?. சான்றுகளை எடுத்து வையும். அப்புறம் வாதாடுவோம்.
இந்துக்களுக்கு என்றொரு சங்கம் இருக்குதாம். அது எப்பொழுதும் மேற்கே இருந்து கிழக்காகத்தான் சுற்றுமாம். அப்படி சுற்றுவதில் குறை இருக்குமானாலும், அங்குள்ள அறிவிலிகளுக்கு, அந்த குறையை எடுத்துச் சொல்வதும் குறையாகி விடுவதால் அங்கிருந்து பயன் என்ன என்று விலகிப் போனவர்களில் முனைவர் நாகப்பன் அவர்களும் ஒருவர். உலகம் சுற்றும் வழியிலேயே நானும் சுற்றி பட்டம் பதவி வாங்கி வைத்துக் கொள்கின்றேன் என்று கூட்டத்தில் கோவிந்தா போட்டவர்களுக்கு உரிய இடமே அந்த சங்கம். அதில் இருந்தென்ன?, பிரிந்தென்ன?.
தேனீ – திருஞானசம்பந்தர் அருளிய “” வேயுறு தோளிபங்கன் ” என்ற
>கோளறு திருப்பதிகம் “” நவக்கிரக தொடர்பானது இல்லையா ?? அல்லது “”இடைசெருகல்” என்ற உளறலா ????
மதிக்கெட்டது முன்னே ; கேடு வரும் பின்னே ! உலக ஆணை எப்போது வரும் ?
++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
“உண்டவன் வீட்டுக்கே ரெண்டகம் செய்தவனை” கொன்று புதைச்சி இருக்கணும் என்று சொல்ல கேள்வி பட்டு இருப்போம்! வீட்டுக்கே இந்த புதச்சல் வீர்யம் என்றால் நாட்டுக்கு?
மகாத்மா காந்தியை சுட்டவனுக்கு “கொற்ற்ஸ் சஹ்வே” கு இன்று இந்தியாவில் கோவில் கட்டும் காலம்.இதையும் இந்துக்கள தாம் செய்கின்றனர். பிறகு அவனும் சிலையாய் 100 ஆண்டுகளுக்குப பிறகு தெய்வமாகி விடுவான். மகாத்மா மனிதனாகத்தான் இருப்பார்.
இரண்டுக்கும் “மனிதம்தான்” காரணம். சுட்டவனுக்கும் ஏதோ ஒரு நியாயம் தெரிந்து இருக்க வேண்டும். உலகம் முழுதும் மனித நேயம் பேசுகிறோம், வாழ்த்துகள் கூறுகிறோம், பிரார்த்தனைகள், திருவிழாக்கள் நடத்துகிறோம். இருந்தும் மனித அநீதியும் குழந்தைகள் கொலையும் கூட அதிகரித்து உள்ளது .
இன வாதம், மத வாதம், அரசியல் “கெட்ட அரசியல் வாய்வு” வாசிகளின் தாய் மொழி அழிப்புகள் யாவும் உலக கவனத்தை ஈர்த்துள்ளது. ஆற்றை கடக்கிற வரைக்கும் அண்ணன் தம்பி. கடந்தபின் வசூல்!!! நீ யார் நான் யாரோ “மறந்திடு” நாடகம் ..தான் நினைவுக்கு வருது. இது மொழிக்கும் பாய்ச்சி பாலூட்டுது எனலாம்.
உலகத தலைவர்கள் பொருளாதாரம் , பாதுகாப்பு ,மனித உரிமை, நில வளம், நீர்வளம் ,கல்வி கலை வளம் என்று அரசியல் சதுரங்க மாநாடுகள் நடத்தியும் தீவிரவாதம் பெருத்துள்ளது. உலகம் இன்று கொடூரங்களை அதிகம் சந்திக்கிறது.
நமது நாட்டிலும் அதிகமான சிக்கல்கள் சொப்பனமாக திகழ்கின்றன. நடுவண் அரசு சட்டம் வைத்தும் ஊடுத்,சரியா சட்டங்களை மாநில அரசுகள் அரசியலாக்கி இஸ்லாதவர்கள் அதிகாரத்துவ சமயம் என்ற உரிமையை மெச்சிக்க அரசியலில் தனி நபர் பேர் போட நாட்டின் மதவாத மகிமையில் உள்ளனர். உண்மை மத போதனையிலிருந்து மனிதன் பிரபலமாக மதத்தை ஆட்டி அடிக்கும் களமாக தலமாக இரண்டியும் அடித்து பேத்து நிமிர்த்த பாக்கிறான். ஒரு பக்கம் பிடிங்கி பிடிங்கி வளைக்கிறான்.
இது நம்மவர்கள் சிக்கல் இல்லாவிட்டாலும் ஒரு நாட்டின் சிக்கலில் ஒரே மதத்து இரு பிரிவினர் அரசியல் சித்தாந்த போரில் இறங்கும் போது இழப்பும் நிம்மதியும் பல்லின நாட்டு மக்களை பாதிக்கும்.
இந்த மதவாதம் சர்வதேச பிரச்சனயா என்றால்? சிலர் ஆமாம் சிலர் இல்லை எனலாம். உலக உள் நாட்டு சண்டைகள்,அயல் நாடு எதிர்ப்புகள் என அதிகமான கோளாறுகள் மத சிக்கலால் வந்தவை. இதுகள் எதுகளை பயின்றன ? வெறும் மனித வெறுப்புகளை போதிக்கும் அந்த (ஆ)சாமிகள் (கல் ) யார் ?
இன்று உலகை அதிகம் மிரட்டும் தீவிர வாதம், வதைகள் கூட மத மாந்தரீகம் என்றால் மறுப்பதற்கில்லை.மதம் மனிதனை மனிதனாக வளர்க்க ஆண்டவன் எனும் பதவியில் வைத்து மதிக்கும் மனங்கள் அன்பெனும் உலகில் அகிலத்தை ஆளும் கடவுளுக்கும் அல்லாவுக்கும் நாம் நன்றி சொல்லாத நாளில்லை! ஆனால் உலகில் மதவாத மனுசர்கள் செய்யும் சேட்டைகள் உலக அரசியலை குறிப்பா மனிதர்கள் பாதுக்காப்பை அர்த்தமற்றதாக்கி உள்ளது.
இந்த அநீதிக்கு காரணமான நவீன காலத்து அயோக்கியன் ராஜபக்சே யுடன் சேர்ந்துக்கொண்டு நடத்திய இன மத படுகொலை உண்ம்மையை இவர்கள் மறுக்க முடியாது இல்லை என்று இதுவரை எந்த உலகத தலைவனும் சொன்னதில்லை !
அன்று அங்கு உலகத தலைவர்கள் பேரில் நடத்திய போரை இவர்கள் பார்த்து பழகி புதிய தீவிரவாதம் தோன்றி உள்ளதுதான் உண்மை. தலைவர்கள் நடத்தினால் பாதுகாப்பு, இவர்கள் சேர்ந்து நடத்திய இன மத படுகொலைகளின் ஆத்மாக்கள் இன்று அதே இன மத அப்பாவி உயிர்களை உப்புக்கண்டம் போடுவதுபோல் உணர்கிறோம்.
உலக நாகரீகம், சட்டம், ஒழுங்கு தெரியாத காலத்தில் அநியாயமாக உயிர்களை கொன்ற எத்தனயோ தலைவர்களை மனித உரிமை கண்டித்து உள்ளது. ஆனால் இன்று அதிகம் பேசும் ஐநாவும் அமெரிக்காவும் உலகத தலைவர்களும் அரசியல் வணிக பேரம் பார்க்கும் கூட்டமாக தமிழ் ஈழ மக்களின் சிக்கலை ஐந்தாண்டுகள் ஆகியும் தீர்க்க முடியவில்லை என்ற நிபுணர்களின் மடமை பழிவாங்க துவங்கி விட்டதாக கொள்கிறோம்.
உண்மை நின்று கொள்ளும் நேர்மை நிதானமாக வெல்லும் என்பதால் இன்று தினம தினம் கொலையும் கொள்ளையும் கற்பழிப்பும் உடனே தண்டிக்கபடுகையில் ஒரு இனம் பல பண்டிகைகள் கடந்தும் தன பண்டிகைகளை மறந்து வெறும் மரண கவன ஈர்ப்பில் ஒன்று கூடலில் முனகிக்கொண்டு உள்ளது.
தமிழக அரசியல் ஓநாய்களின் வெறுமை போராட்டம் எந்த பதிலையும் தாராது. காரணம் இன்று திராவிடமா ? தமிழ் தேசியமா என்ற அரசியில் குதிப்பில் கிழவர்கள் குதிக்க தமிழ் தேசியத்தை குலைக்க திராவிட குடுமிகள் “அரசியல் விற்றல் வாங்கல்” போரில் பிழைப்பு நடத்துகின்றனர்.
அங்கே தமிழர்கள் சிங்கள தமிழர்களாக மாற்றபடுவதும் … தமிழீழ மக்கள் தமிழச்சி வயிற்றில் சிங்களதவன் பிள்ளை என்றெல்லாம் புலம்பல்கள். ஆனால் தமிழர் நாட்டு திராவிட திமிரின தலைவர்களும் தமிழர் தேசியம் பேசும் தவளைகள் கூட்டமும் ஊளை கோசமிடுவதோடு நிற்கிraargal
பெண் அடிமைக்கும் கொடுமைக்கும் எழுந்து நின்று போராடிய பாரதியாரின் நிலத்தில் இன்று இலக்கு இலா தமிழன் வெறுமையும், உலக அரசியலால் தமிழன் இனம் பதவி போர்களத்தில் துரு பிடித்து தோற்று போய் உள்ளது. எந்த தமிழனின வீரனையும் சூரனையும் காணவில்லை.
இன்றைய நிலையில் தமிழர் நாட்டில் தமிழர் தேசியம் வெட்டு படும் கிளியின் இடையில் குரங்கின் வால் கதைதான். நசுங்குவது உழியா?மனிதம் வாலா ? தமிழன் மண்டையா ? மதிக்கெட்ட பின் மறுபடி தமிழன், தமிழன் என்ற முழக்க மாந்தீரிகம் தான் நமக்கு மீண்டும் மீண்டும் பதிலா ?
யாம் எதிர்பார்த்துப் போட்ட கேள்விக்கு, நீரும் எதிர்பார்த்தபடியே கருத்து எழுதி சரியாக வந்து மாட்டிக் கொண்டீர். இன்றிரவு பதில் கருத்து எழுதுவோம்.
இந்து தருமரே தங்களின் கேள்விக்குப் பதில்.
‘கோளறு பதிகம்’ (2.85) திருஞானசம்பந்தரால் பாடப் பெற்றதின் வரலாற்றை அறிந்து விளக்க நன்றே விளங்கும். திருஞானசம்பந்தரும், திருநாவுக்கரசரும் திருமறைக்காட்டில் எழுந்தருளி இருப்பதை அறிந்த பாண்டிமாதேவி மங்கையர்கரசியும், அமைச்சர் குலச்சிறையாரும் சமண மதத்தில் கட்டுண்டு இருந்த கூன் பாண்டியனை சைவ சமயத்திற்கு திரும்பி வர வைப்பதற்காக ஏவலார் மூலம் ஓலை ஒன்றை அனுப்பி வைத்தனர். அதனைப் பெற்றுக் கொண்டு தாமும் மதுரைக்கு வருவதாக இசைந்து ஏவலர் மூலம் தகவல் அனுப்பி வைத்தார் பிள்ளையார். இதனை அறிந்த அவரிலும் வயதில் மூத்தவரும், இதற்கு முன்னமே சமணத்தில் இருந்து சைவத்துக்கு மீண்ட திருநாவுக்கரசரைப் பல இன்னல்களுக்கு ஆளாக்கிய சமணரிடம் சிறுபிள்ளையாகிய சம்பந்தர் துன்பப்பட வேண்டி வருமே என்றெண்ணி, ‘நாளும் கோளும்’ சரியில்லை என்று கூறி. அதனால் மதுரைக்குப் போக வேண்டாம் என்று சம்பந்தரை வேண்ட, அதற்குப் பதிலாக சம்பந்தர் பாடிய பதிகமே ‘கோளறு பதிகம்’. இனி இப்பதிகத்தின் பொருள் அறிவோம். தொடரும்.
இப்பதிகத்தின் முதல் பாடல் இவ்வாறு:
“வேயுறு தோளிபங்கண் விடமுண்ட கண்டன்
மிக நல்ல வீணை தடவி
மாசறு திங்கள் கங்கை முடிமேலணிந்து என்
உளமே புகுந்த அதனால்
ஞாயிறு திங்கள் செவ்வாய் புதன் வியாழம் வெள்ளி
சனி பாம்பிரண்டும் உடனே
ஆசறு நல்ல நல்ல அவை நல்ல நல்ல அடியார் அவர்க்கு மிகவே”
முதல் 3 வரிகளில் சிவனின் தன்மையை போற்றிப் புகழ்ந்து அச் சிவ பெருமானே எம் உள்ளத்தில் குடி கொண்டதால் (‘எம் உளமே புகுந்த அதனால்’) 7 கோள்களும் நிழற் கிரகங்களான இராகுவும், கேதுவும் (அவை கெடுதல் செய்யக் கூடியவையாக இருந்தாலும்) அடியார் அவர்களுக்கு நல்லதே செய்யும் என்றார். பிள்ளையார் சொல்ல வந்த கருத்து கெடுதல் செய்யக் கூடியவனாக இருந்தாலும், சிவ பெருமானை உள்ளம் உருகி வணங்கி அவர் நம் உயிருடன் கலந்து இருக்க அந்த கேடு கிரகங்களால் எவ்வொரு தீமையும் வராது என்பதேயாம். இவ்வாறே இப்பதிகத்தில் அடுத்தடுத்து வரும் பாடலிலும் சிவ பெருமான் தன் உள்ளத்தில் குடி கொண்டிருப்பதால் சோதிடத்தில் சொல்லப் படும் தீயதான நாட்களும், நட்சத்திரங்களும் சிவ அடியார்களுக்கு கெடுதி செய்யாமல் நல்லதே செய்யும் என்றும் அருளினார். தொடரும்.
இக் ‘கோளறு பதிகம்’ பாடபெற்ற காலம் 7-ம் நூற்றாண்டு. இன்றையிலிருந்து 1,300 வருடங்களுக்கு முன்பு. நவகிரகமூர்த்திகள் வழிபாடு தமிழ் நாட்டு ஆலயத்திற்குள் நுழைந்தது 15-ம் நூற்றாண்டுக்குப் பின்னரே. அதாவது சைவம் நலிந்த பிறகு. ஏறக்குறைய 500 ஆண்டுகளுக்கு பிந்தியே. எப்பொழுது வைதீக மதமும், அதன் கலாச்சாரமும் தென்னாட்டில் வலிமை பெற்று தமிழர்கள் பல தெய்வ வழிபாட்டில் நின்றனரோ அன்றே நவகிரக வழிபாடு கொஞ்சம் கொஞ்சமாக நம்மை பற்றிக் கொண்டது. தற்பொழுதோ ஆலய நிருவாகங்களும், அங்கிருக்கும் அருச்சகர்களும் இப்பதிகத்தின் பொருள் அறியாது இதை ஒரு அறிவிப்பு பலகையில் எழுதி நவகிரக சன்னதின்யின் முன்னே வைக்க நம் தமிழரும் அதன் உள்பொருள் அறியாது அதனைப் பாடிக் கொண்டே நவகிரகத்தை சுற்றி வருவது என்னே அபத்தம். ‘கோளறு பதிகம்’ இப்ப ‘கோளாறு பதிகமானது’ யாரால் சொல்லும் இந்து தருமரே? தொடரும். .
ஆக இந்து மதம் என்று சொல்லிக் கொண்டு பலரும் வைதீக மதத்தின் நூல்களே தமிழருடையது என்று எண்ணிக் கொண்டு தமிழரின் வேதமாகிய திருமுறைகளை புறந்தள்ளியது யாருடைய குற்றம் அறிவிப்பீரா இந்து தருமரே?. தாங்களே மலேசிய இந்து சங்கத்தில் இருந்தால், இதை அவரிடம் எடுத்துச் சொல்ல முடியுமே இந்து தருமரே?. உள்ளதைச் சொல்லி இந்து ஆலயங்களை சீர் படுத்துமா இந்து சங்கம்?. சிவ நிந்தனை செய்யாதீர். மேலும் எழுத முடியும். ஆனால் அது செவிடன் காதில் ஊதிய சங்காகவே முடியும் என்பதை அறிந்து இத்தோடு நிறுத்துக்கின்றோம்.
உணர்சிகரமான தமிழர்களின் வீர முழக்கங்களை பார்க்கிறேன்.ஜாதகங்களை மறந்து விடுவோம்.நம்மை நம்புவோம்.ஒன்று படுவோம் உயர்வோம்.
தேனீ – நீர் எப்படியெல்லாம் யோசிப்பீர் என்று எமக்கும் தெரியும்>>” நவக்கிரகங்கள் ” என்ற செயலியை இயக்குவதே எல்லாம் வல்ல இறைவன் என்பதில் எமக்கு சிறிதும் ஐயமில்லை..”நாளும் கோளும்” சரியில்லை என நாவுக்கரசர் உரைப்பானேன் ?? நவக்கிராகங்கள் என்பதே இல்லை /இட்டுகட்டிய விஷயம் என்றால் >>இல்லாத ஒன்றை அவர் சொல்வானேன் >>வீணாய் சம்பந்தர் அதுபற்றி பாடுவானேன் ???
இந்த கருத்து சண்டை முடிவதற்குள் அடுத்தவன் செய்வாய் கிரகத்தில் நடைபயிற்சி செய்வான் … முன்பே கட்டம் போடுவதற்குள் சந்திரனில் இறங்கிவிட்டான் அமேரிக்கன் …..
சமசுகிருதம் தேவ பாசை, இந்தி இந்தியாவின் தாய்மொழி,
இந்தியர் அனைவரும் ராமரின் புதல்வர்கள், மறுப்பவர்கள் நாட்டை விட்டு வெளியேறலாம்,
இந்த ஐந்தாண்டுக்குள் ராமர் கோவிலை கட்டியேத் தீரவேண்டும்,
தாஜ்மகாலை இடிக்க வேண்டும்,
தமிழினம் என்று ஒரு இனமே கிடையாது,
திருக்குறளை தேசிய நூலாக அறிவிக்க முடியாது,
திருவள்ளுவர் பிறந்தநாளை தேசிய நாளாக அறிவிக்க முடியாது,
அனைவரும் தாய் மதத்திர்க்கு திரும்புங்கள், ஒரு இலட்சம் பேரை ஹிந்துவாக மாற்றுவோம்,
இராவணனும் மண்டோதரியும் தலித்துகள், வள்ளுவனே ப..யன் சாதியை சேர்ந்தவர்,
இதுப்போக அதானிக்கு 6,400 கோடி, கூத்தாடிகளை கூட்டி கும்மியடித்த கிளீன் இன்டியா,
சரோசா சாமான் நிக்காலோ
நன்றி வேலா
அன்பான தோழர்களுக்கு வணக்கம் , இந்துவாகிவிட்ட தமிழர்கள், மூடநம்பிக்கைகளை மூட்டை மூட்டையாக முதுகில் சுமப்பதால் தமிழர்களால் அன்று முதல் இன்று வரை தலை நிமிர முடியவில்லை. என்றைக்கு அவர்கள் அந்த மூட்டைகளை கீழே இறக்கி வைக்கிறார்களோ, அன்றைக்குதான் அவர்கள் தலை நிமிர்வார்கள் . அதுவரை இந்த நிலமைதான். அவர்கள் சுமப்பது மூடநம்பிக்கை மூட்டை என்று தெரியாமலேயே அடுத்த தலைமுறை முதுகிலும் ஏற்றி விடுகின்றனர். மூட்டையை கீழே இறக்கி வைத்தால், எங்கே பாரம் கூடி விடுமோ என்ற பயம்,பயம், பயம். இதனை திரைப்பட நகைச்சுவையில் சொல்வதென்றால் “எப்படி இருந்த நாம இப்போது இப்படி ஆயிட்டோம்” என்றுதான் சொல்ல வேண்டும். இதையே கவிஞர்கள் மொழியில் சொல்வதென்றால் அன்று “அச்சமில்லை அச்சமில்லை அச்சம் என்பது இல்லையே, உச்சி மீது வானிடிந்து வீழ்ந்தாலும் அச்சம் என்பது இல்லையே” என்றிருந்த நம்மை இப்போழுது “ அஞ்சி அஞ்சி சாவான் இவன் அஞ்சாத பொருள் இல்லை அவனியிலே” என்றுதான் பாடவேண்டும். இங்கே ஓர் உவமையை சொல்ல வேண்டும். காலியான குடத்தினுள் எட்டி பார்த்தால், காற்றை தவிர வேறு எதுவும் அதனுள் இருக்காது. அதனுள் இருக்கும் காற்றை வெளியாக்க தண்ணீரை நிரப்பி விட்டால் காற்று தானாக வெளியாகி விடும். அதுபோல் நம்மிடம் இருந்த பகுத்தறிவு, அறிவியல், தன்னம்பிக்கை, தைரியம், ஒற்றுமை, ஒரு கடவுள் வழிபாடு இன்னும் மற்றும் பல பல, மூடநம்பிக்கையை நம்மனதினுள் ஏற்ற ஏற்ற அங்கிருந்த நல்ல எண்ணங்கள் தானாக வெளியாகி, இன்று இந்த நிலமையில் இருக்கிறோம். எங்கிருந்து எதை தொலைத்தோமோ, அங்கிருந்து திரும்பவும் தொடங்கினாலே நாம் திரும்பவும் பழைய நிலையை அடைய முடியும். இதை நான் புத்தகத்தில் படித்துவிட்டு மட்டும் சொல்லவில்லை, அறிவிப்புர்வமாக அனுபவித்தே சொல்கிறேன். விதி, தலை எழுத்து, கர்மவினை, அடுத்த சென்மம் இப்படி சொல்லி சொல்லியே பயமுறித்தி, இதன் மூலம் ஏற்படும் துன்பங்களில் இருந்து தப்பிக்க வேண்டும் என்றால், உயர்ந்த வகுப்பினரான எங்கள் மூலம், பணம் செலவழித்து புசை, யாகம், எங்களுக்கு மட்டும் தெரிந்த மந்திரம் சொல்லி புசை செய்தால், இறைவன் மனம் குளிர்ந்து (அதாவது அவர்கள் மொழியில் ஆண்டவன் ஒரு ஏமாந்த சோணகிரி) உங்களுக்கு துன்பம் தராமல் விலகிக் கொள்வார் என்று மனம் கூசாமல் பொய் சொல்வார்கள். இங்கே எனக்கொரு சந்தேகம்? உலகத்தின் ஆதி அந்தம் மொத்த உருவமே கடவுள். அவரை மிஞ்சி வேறு யாருமில்லை. அவரே மேலானவர். அப்படியிருக்க அவர் வகுத்த நெறியை உடைத்துக் கொண்டு அவரை மிஞ்சி மேல் நோக்கி இவர்கள் செல்கிறார்கள் என்றால், இவர்களில் யார் பெரியவர்? கடவுளுக்கு என்ன மதிப்பிருக்கிறது? தன்னம்பிக்கை, பகுத்தறிவு, அறிவியலுடன் வாழ்ந்த நம் முன்னோர்களை முடக்கி மூலையில் உட்கார வைத்து விட்டனர் இந்த நாடோடிகள். ஓர் இடைசெறுக்கள், ஒரு கவிஞரின் புலம்பல் ”அன்னசத்திரம் இருப்பது எதனாலே? சில திண்ணை துாங்கி பயல்கள் இருப்பதாலே. பரதேசியாய் திரிவது எதனாலே? அவன் பத்து வீட்டு சோத்து ருசி கண்டதாலே”. இப்படி பட்டவர்களின் பேச்சை கேட்டு நாம்தான் சீரழிந்து விட்டோம். எவன் ஒருவன் ஒன்றை திரும்ப திரும்ப பார்க்கின்றானோ அல்லது பழகுகின்றானோ அல்லது படிக்கின்றானோ அவன் அதுவாக மாறுவான் என்பது இயற்கையின் நியதி. வன்முறையும், வஞ்சகமும், சூழ்ச்சியும் நிறைந்த அந்த வேதம் என்கிற புதத்தை படித்ததால், காதால் கேட்டதால் வந்த வினையே இன்றைய நமது நிலமை. இங்கே உங்களுக்கு ஒரு சந்தேகம் ஏற்படலாம். இன்று யாரும் வேதம் படிப்பதில்லை, படித்தவர்கள் பெரும்பாலோர் சிறப்பாக வாழ்கின்றனரே என்று. இதற்கான பதிலும் அதிலேயே உண்டு. இதனை மனோதத்துவ ரீதியில் அலசி ஆராய்ந்தாலே பதில் கிடைக்கும். பிரிதொரு நாளில் ஓய்வு கிடைக்கும்போது இதற்கான ஆய்வு கட்டுரையை எழுதுவேன். ஓர் உதாரணம். கலப்பட தமிழ் என்கிறபோது நாகூசாமல் தமிழ் நாட்டு மக்களை கை நீட்டுகின்றோம். இங்கே மட்டும் என்ன வாழுதாம். தம்பி இந்த போத்த மூடி கொஞ்ச கிராச (இறுக்கமாக) இருக்கு கொஞ்சம் துறந்து கொடப்ப, தம்பி ஜாகா (காவலாளி) வேலைக்கு போனயே என்ன ஆச்சு. முந்தி செஞ்ச வேலை ரொம்ப சின்னாங்கான (சுலபம்) வேலை ஆச்சே ஏன் விட்டுட்டே. உன் டெலிபோன் நம்பரை சொல்லு கோசம் ஒன்னு கோசம் (சுழியம்). இப்படி பட்ட மலாய் வார்த்தைகளை யார் புகுத்தியது? இதற்கான விடையை யாராவது சொல்ல முடியுமா? என்ன ஈழத்து தமிழ் சகோதரர்களே எங்கள் இருவரையும் பார்த்து மௌனமாக சிரிக்கின்றீர்களா? உங்களிடத்திலேயும் இதே கூத்துதான். முதலுக்கே மோசம் என்பது போல், கற்பாறையின் மேல் அமர்ந்து இருக்கும் சரசுவதின் சிலையை வென்தாமரையின் மேல் இருத்தி அழகு பார்க்கும் உங்களை என்ன வென்று சொல்வது. ஆக மொத்தத்தில் நாம் அனைவருமே ஒரு கவிஞரின் பாடல் வரிகள் போல் நடந்து கொள்கிறோம். நீ முன்னாலே போன நான் பின்னாலே வருவேன் என்பதே அந்த வரிகள்.
நவக்கிரக வழிபாடும், எனது நிலைப்பாடும்.
மதங்களைப் பற்றி அறியாத வயதில், என் நினைவில் வாழும் ஒரு பெரியவர் சொன்ன கருத்துக்களே இன்றும் என் நினைவில் வாழ்கின்றது. அய்யா இந்து மதத்தை உருவாக்கியவர்களும் ஆதி மனிதர்களும், எந்த ஒரு உபகரணங்களும் இல்லாத அந்த காலத்திலேயே எப்படி வெறும் கண்ணால் ஒன்பது கிரகங்கள் என்று கண்டுபிடித்தார்கள்? நெற்றிக் கண் என்று சொல்லக்கூடிய ஞானக்கண்ணாலேவா? அப்படி இல்லை தம்பி, அன்று வாழ்ந்த ஆதி மனிதர்கள் என்று சொல்லக்கூடிய தமிழர்கள், இயற்கையுடன் ஒட்டி வாழ்ந்தனர். அவர்கள் உடலும் ஆரோக்கியமும். நம்மை விட பலம் வாய்ந்ததாக இருந்தது. கண் பார்வையும் அது போலவே. அவர்கள் வெறும் கண்ணாலே இரவில், திறந்த வெளியில் படுத்துக்கொண்டு வான் வெளியை ஆராய்ச்சி செய்தனர். இந்த ஆராய்ச்சி தலைமுறை தலைமுறையாக தொடரும். ஒரு தலைமுறை ஆராய்ச்சி செய்து எழுதிய குறிப்புக்களை கொண்டு அடுத்த தலைமுறை தொடரும். வான்வெளியில் ஆராய்ச்சி செய்யும் போழுது, எங்கும் விண்மீன் கூட்டமே தெரியும். எந்த இடம் வட்டவடிவமாக, வெற்றிடமாக தெரிந்ததோ அந்த இடத்தில் கிரகம் இருப்பதை உணர்ந்தனர். அவைகள் ஒன்றை ஒன்று மோதாமல், தனித்தனி பாதையில் சுழல்வதும், புமிக்கு அருகில் வரும் போழுது, பஞ்ச புதத்தால்ஆன இந்த புமியில் ஏற்படும், நிலநடுக்கம், ஆழிபேரலை, எரிமலை, சூறாவளி இவைகளை வைத்து அவைகளிடம் புவிஈர்ப்பு சக்தி இருப்பதை உணர்ந்து கொண்டனர். இதை மெய்ப்பிப்பதுபோல் சில ஆண்டுகளுக்கு முன்னால் தொலைகாட்சியில் ஒரு நிகழ்ச்சி பார்த்தேன் அதில் அமோசன் காட்டை சேர்ந்த பழங்குடி இன மக்கள் மிருக வேட்டைக்கு செல்லும் போது, கூட்டத்திலுல்ல ஒருவருக்கு அவர்கள் சொந்தமாக தயாரித்த ஒரு திரவத்தை ஓரிரு சொட்டுக்கள் கண்னில் விட்டு அவரையும் அழைத்து செல்கிறார்கள். அவருக்கு தற்காலியமாக துாரப்பார்வை தெளிவாக தெரியுமாம். மேலே சொன்ன அந்த வழிமுறையே சோதிடம் பிறக்க வழி வகுத்தது. பின்னாளில் புமியில் பிறந்த மனிதனும் பஞ்ச புதத்தால் ஆனவனே என்பதால் அவனையும் இந்த சோதிடம் கவ்விக் கொண்டது. இங்கே எனது அனுபவத்தை கூற வேண்டும். வியபார நோக்கமில்லாமல், சொந்த ஆராய்ச்சிக்காக ஆராய்ச்சி செய்யும் எனது நண்பருக்கு, அவ்வப்போது பொது நுாலகத்திலிருந்து புத்தகங்களை கொண்டு வந்து கொடுத்து உதவியது உண்டு. மற்றவர்களைப் போல் கண்டதையும் வழ வழ என்று கூறமல், எதிர் காலத்தில் நிகழப்போகும் என் குடும்பத்தை சார்ந்த இரண்டு குறிப்புகளை கூறினார். இன்று அவை பலிச்சதமாக நடப்பவை. இதன் பிறகே சோதிடத்தின் மேல் எனக்கொரு நம்பிக்கை ஏற்பட்டது. அவர் அடிக்கடி கூறும் வார்த்தைகள், சோதிடத்தில் எந்த பரிகாரமும் கிடையாது. பணத்தசை பிடித்த நயவஞ்கர்களால் ஏற்படுத்தப்பட்டதுதான் இப்போது நடைபெறும் பரிகார புசை. நாமும் நமக்கு புரியாத மொழியில் எதாவது சொன்னால், அவருக்கே எல்லாம் தெரியும் என்று நம்பி ஓடியதால் வந்த வினையே சோதிடத்தின் இன்றைய நிலை. சமிபத்தில் காலமான தமிழ் நாட்டின் தலை சிறந்த அறியல் எழுத்தாளர் சுஜதா அவர்களும், சோதிடத்தில் சூட்சமம் (மர்மம்) இருப்பதை ஒப்புக்கொள்கிறார். ஆக மொத்தத்தில் சோதிடம் என்பது தனியொரு கலை. அதை கண்டவர்களும் பணத்திற்காக கையிலெடுத்ததால் அதற்கு வந்ததே இன்றைய பரிதாபமான நிலை.
யாம் எப்படி சிந்திப்போம் என்று சிந்திப்பதை விட அடியார் பெரு மக்கள் எவ்வாறு சிந்தித்தனர் என்று இந்து தருமர் சிந்திக்காமால் போனது ஏனோ?.
சமஸ்கிருதத்தை விடுங்கள் !! இந்தி மொழியை தமிழ் வெறியர்களின் பிதற்றலால் கல்லாமல் கைவிட்ட எத்தனை இளைஞர்கள் இன்று வேலை இன்றி சிரமப்படுகிறார்கள் என்ற தமிழ்நாட்டு ஆய்வினை பாருங்கள் .வாடும் அவர்களின் குடும்பத்திற்கு கஞ்சி யார் ஊற்றுவார்கள் ?? இந்தி கற்காதே என்று விரட்டிய அந்த மடையர்களா ???
இந்தியாவில் இன்னும் சில வருடங்களில் பல்லாயிரம் மக்களை கிறிஸ்துவர்களாக மாற்றியே ஆகவேண்டும் >என கிறிஸ்துவ மத தலைவர் ஜோன் போப் இந்தியாவில் உரை ஆற்றிய போது வராத ரோஷமும் – வக்கற்ற தன்மையும் – இந்த வீராப்பு குணமும் வாலை சுருட்டி உறங்கி விட்டன்பவோ ???
இன்று உள்ள மத்திய பாஜகவுடன் பல ஆண்டு கூட்டனி வைத்து எல்லா சுகங்களையும், அனுபவித்த இன்று தமிழின் காவலன் என ஆர்பரிக்கும் மடையர்கள் அன்று திருக்குறளை மறந்தது ஏனோ ??காசை பார்த்த இவர்கள் – காரியத்தை கைவிட்ட சுயநல பன்னிகள் கூட்டம் > இன்று மக்கள் அவர்கலை வெறுத்து ஒதுக்கியது நல்லதுதான்..
திருநாவுக்கரசர் பிள்ளையாரைப் பார்த்து ‘நாளும் கோலும்’ சரியில்லை என்று அன்றிருந்த பாண்டிய நாட்டின் சூழலை யாம் சுருக்கமாக சொல்ல வந்ததை அப்படியே திருநாவுக்கரசர் சொன்னதாக எடுத்துக் கொண்டு கருத்து எழுதும் உமது அறியாமையை எண்ணி சிரிப்பதா இல்லை அழுவதா என்று தெரியவில்லை இந்து தருமரே. 7-ம் நூற்றாண்டு ஆரம்ப காலக் கட்டத்தில் சமணர்கள் கூன் பாண்டியனை மதம் மாற்றி தனது கட்டுக்குள் வைத்திருந்தனர். எப்படி மகாதீர் காலத்தில் சமஸ்தானபதிகள் இருந்தனரோ அவ்வாறே!. தன் கணவனை சைவத்தின் வழி கொணர வகையறியாமல் அறிவிற் சிறந்த அரசியும், முதல் அமைச்சரும் திருஞானசம்பந்தரை நாடினர். இதற்கு முன்னரே மதத்தில் ஊறித் திளைத்த சமணர்களிடம் திருநாவுக்கரசர் பட்ட துன்பங்களை பிள்ளயாருக்கு நேரிடக் கூடாது என்ற நல்ல எண்ணத்தில் மதுரைக்குப் போக வேண்டாம். அங்கே மன்னர், சமணர்களின் கக்கத்தில் மாட்டிக் கொண்டு, அவர்கள் சொல்லுவதைக் கேட்டுக் கொண்டு சைவர்களை ‘கண்டு முட்டு, கேட்டு முட்டு’ என்று பிதற்றிக் கொண்டிருக்கின்றார். இக்காலச் சூழலில் மதுரைக்குச் சென்றால் உம்முடைய நலனுக்கு பாதுகாப்பு இல்லை என்றே திருநாவுக்கரசர் சொல்ல, திருஞாநசம்பந்தர் அப்பதிகத்தைப் பாடினார். தொடரும்.
“நவக்கிரகங்கள் ” என்ற செயலியை இயக்குவதே எல்லாம் வல்ல இறைவன் என்பதில் எமக்கு சிறிதும் ஐயமில்லை” என்று கூறி விட்டு அந்த முழுமுதற் பரம்பொருளை வேண்டி வணங்குவதை விட்டு விட்டு அவரவர் ஊழ்வினைப் பயன் நீங்க, அந்த சடப் பொருளான சனி கிரகத்தை வணங்குவது என்ன மூடம்?. சிவ பெருமானை வணங்க, சோதிடத்தில் சொல்லும் நல்ல நாள், கெட்ட நாள் ஏதும் தீங்கு செய்ய முடியாது என்று சொல்வதே அந்த பதிகம். அன்றே ஆரியர்களின் வழி சோதிடம் தென்னாட்டில் இருந்ததையும், அதை நம்புவதை விட பரம்பொருளாகிய சிவ பெருமானை நம்புங்கள் என்று 1,300 வருடங்களுக்கு முன்பே அடியார் பெருமக்கள் சொல்லி வைத்தனர். திருந்துவார்களா எம் மூடத் தமிழர்கள்?. தொடரும்.
நால்வர்க்கு என்றே ஒரு மன்றத்தை வைத்துக் கொண்ட குட்டித் தலைவர் ஒருவர், திருமுறைகளைப் பாடினால் மட்டும் போதும். அதன் பொருள் தெரியவில்லை என்றால் பராவாயில்லை என்று சொன்னாராம். இது எப்படி இருக்குத் தெரியுமா?. ஆலயத்தில் அருச்சகர்கள் நான் ஓதும் சம்ஸ்கிருத மந்திரம் தங்களுக்குப் புரியவில்லை என்றாலும் பரவாயில்லை அதை காதால் மட்டும் கேட்டாலுமே தங்களுக்கு அதன் பலன் கிடைத்து விடும் என்று கூறியதைப் போல் உள்ளது. அவ்வாறே, திருமுறைகளைப் பாடினால் மட்டும் அதன் பொருள் அறிந்துக் கொள்ள முடியாது. தக்காரிடம் பயிற்சிப் பெற்று ‘சொல்லியப் பாட்டின் பொருள் உணர்ந்து சொல்லுவார் செல்வர் சிவபுரத்தின் உள்ளார்” என்று மணிவாசகர் சொல்லியது போல் சைவத்தில் நிற்போருக்கே அடியார்களின் உள்மனதை அறிய முடியும். இந்து மதம் என்ற வைதீக மதத்தில் நின்றுக் கொண்டு திருமுறைக்கு பொருள் அறியாமல் பிதற்றிக் கொண்டு திரியும் பலர் தங்களை இந்து தருமர் என்று பட்டம் போட்டு பட்டையம் அடித்து வைத்துக் கொள்ளலாம். யாம் சைவத்தில் நின்று அடியாருக்கும் அடியாராகவே சைவப் பனி ஆற்றுவோம்.
உழவரே நன்றாகச் சொன்னீர்கள். தமிழர்கள் அறிவுப்பூர்வமாக சிந்தித்து பல நூற்றாண்டுகள் ஆகி விட்டன. அதனால்தான், எப்படி இருந்த நாம், இன்று இப்படி ஆகி விட்டோம் என்ற கருத்து நமக்கு 100% பொருந்தும்.
“சொல்லிய பாட்டின் பொருள் உணர்ந்து ஓதுவது “.என தேர்ந்தெடுத்தால் உம்மையும் சேர்த்து சுமார் 8 பேர்தான் இந்நாட்டில் தேர்வீர்கள். > முதலில் இந்துக்களை இந்துக்களாக இருந்து மந்திரங்களை/ திருமுறைகளை மனமார ஓத வழிவிடுங்கள்..உணர்ந்த பிறகு தானே பரம்பொருள் யார் என்று அவர்களாகவே அறிவார்கள்.உம்மால் முடியாவிட்டால் விடுங்கள் <உங்கள் இயக்கம் உங்களுக்கு பெரிது என்றால் //வைத்து கொள்ளுங்களேன் !!! ஆமீகத்தை நாடும் மக்களை வழிகாட்டும் பிற சமய இயக்கங்களை கீழ்தரமாய்
விமச்சிக்க நீங்கள் யார் ?? அதனை அமைத்து : உருவாக்கி நடத்துபவர்கள் எல்லாம் மூடர்களா ??
உலகில் உள்ள 500 கோடி மக்களை ஜோசியம் துரத்தாமல்
120 கோடி இந்தியர்களை சனி கிரகம் முதல் மற்ற கிரகங்கள்
சுற்றி சுற்றி விரட்டுவதற்கு காரணம் இந்தியர்கள் 6 ஆம் அறிவுக்கு வேலை கொடுக்காதவர்கள் ,மற்றவர்களோ 6 அறிவுக்கு வேலை கொடுப்பவர்கள் என்பதாலும் ஜோசியத்தை சொல்லி மக்களை ஏமாற்றும் ஆரிய கூட் டமும் ,வயிற்று பிழைப்புகாக ஜோசியத்தை அச்சிட்டு வெளியிடும் பத்திரிக்கைகளின் ஆசிரியர்கள் என்பதாலும்
தான் என்று நான் கூறினால் ஏமாற்று பேர் விழிகளுக்கு
கோபம் வரும் நைனா.
மாஸ் 370 யை பாயில் அமர்ந்து தேங்க்கையோடு உலகம் பார்க்க klia தேடினான் ஒரு போமோ > அவனை கண்டிக்க துப்பில்லாத கூட்டம் இந்துக்களின் பாரம்பரிய ஜோதிட கலையை கிண்டலடிக்கிறது.> கூலிக்கு மாரடிக்கும் ஜோசியர்கள் அயோக்கியர்கள் தான் ..ஆனால் ஜோதிடத்தை பொய் என சொல்ல ஒரு தகுதி வேண்டும்..வாய்கிழிய பேசும் பலருக்கு அதில் சிறிதும் ஞானம் இல்லை என்பதே உண்மை..
உலகின் மிகத் தொன்மையான நாகரிகம் உடையவர்களான நாம்,வான சாத்திரம் உச்சத்தில் இருந்துள்ளது. கோள்களையும் விண்வெளியையும் பற்றிய பரந்த அறிவை நம் முன்னோர் ஏற்படுத்திச் சென்றுள்ளனர். ஆயினும் கணக்கீடுகள் சார்ந்த அறிவுபூர்வமான அஸ்ட்ரானமி எனப்படும் வானியலைக் காட்டிலும், சுவாரஸ்யங்கள் மிகுந்த அஸ்ட்ராலஜி எனப்படும் ஜோதிடத்தை அதிகமாகக் கையாளத் தொடங்கியதால், முன்னோரின் வானியல் நுட்பம் பிற்காலங்களில் சிலரே வான் சாத்திரத்தில் முழுமையாக வளர்சிபெற்றனர் என்பர் அறிஞர் பெருமக்கள்.
இப்பகுதியை பொறுத்த அளவில் > ஜோதிடங்கள் ; அவை தொடர்பாக பல்லாண்டு காலம் அராய்ச்சி குறிப்புகளை வெளிட்ட அறிஞர்கள் எல்லோரும் மூடர்கள் > இங்கே இந்து என கூறினால் பாவம் : சைவம் கூறும் தமிழ்தான் சரி – இதர தெய்வங்களின் திருப்பாடல்கள் யாவும் ஒதுக்க தக்கவை என நீட்டி முழங்கும் அறிவாளிகள் சொல்வது மட்டும்தான் உண்மை..ஏனென்றால் > இவ்வலைதளத்தில் இந்த அறிவாளிகள் மட்டுமே வலம் வரலாம் > மற்றவர்கள் தலையை மட்டும் தான் ஆட்ட வேண்டும்……