நேற்று 18/12/ மாலை 6 -7 அஸ்ட்ரோ வானவில்லில் சனி பெயர்ச்சியில் ராசிகளுக்கு என்ன நடக்க போகிறது என்று சோதிடர் பாணியில் ஒரு மணி ஒரு மணி நேரம் பேசினார். இலக்கு தமிழர்களை நோக்கியது. என்றும் எதிலும் சோதிடம் என்ற அறியாமையால் தமிழர்கள் நிலை அந்தோ பரிதாபம். உலக அறிவியலை எப்படி வியாபரமாக்கினார்கள் வியப்புதான் மிஞ்சுகிறது !!
கடசியில் ஒரு அதற்சியான குறிப்பை தந்தார். அதாவது ராசிகளின் பலன்கள் அவரவர் பூர்வ ஜென்மம் , முந்திய பாவ புண்ணியங்கள் படி நல்லது கெட்டது நடக்கும். சனியை மட்டும் கும்பிடுங்கள் பலன் தரும் மற்ற தெய்வங்கள் , ஆஞ்சேநேயர் போன்ற தெய்வங்களின் பிரார்த்தனைகள் பரிகாரங்கள் உதவாது என்று போட்டார் ஒரு போடு!?
சனி என்பது ஒரு கிரகம். ஆனால் நம்மவர்கள் சனியன் “தைதரியம்” என்ற ஐயத்தில் ஜோதிட வியாபாரமும் .கோவில் பூஜைகளும் அறியாமையால் வியாபார சூடும் தலை தூக்கி பன்னெடுங்காலமாக ஓடுகிறது. நம்ம சமய பூசகர்கள் ஐயா முனைவர் நாகப்பன் , தர்மலிங்கம் போன்றோர்ர் ஏழரை சனி சனியன் பற்றி வாய் திறப்பதில்லை ஏன்?
“ஏழரை சனி” ஒரு விஞ்ஞானம். அறிவியல் என்ன சொல்கிறது ?
சோதிடத்தில் நம்பிக்கை உள்ளவர்கள் இப்பெயரைக் கேட்டாலே பயந்து நடுங்குகிறார்கள் அல்லது இவர்களை பயமுறுத்துவதற்காக தினசரிகள், வார இதழ்கள், சோதிடத்திற்கு மட்டுமென வெளிவரும் பத்திரிக்கைகள் உள்ளன. இவ்வாண்டு 2014 டிசம்பர் மாதம் 16ஆம் தேதி அதிகாலையில் துலாம் ராசியில் இருந்து விருச்சிக ராசிக்கு சனி இடம் பெயர இருக்கிறது. இதையொட்டி சனியால் எந்த ராசிக்கு என்ன பலன் என்றும் அதனால் வரும் விளைவுகளுக்கு பரிகாரத்தைத் தேடி காக்கையை தனது வாகனமாகக் கொண்டு திருநள்ளாரில் எழுந்தருளி இருக்கும் சனி பகவானின் நளன் குளத்தில் நீராடவும் மற்ற வகையான பரிகாரங்களை செய்யவும் ஆயத்தமாக இருக்கிறார்கள்.
இனி செய்திக்கு வருவோம் முதலில் இந்த சனிப்பெயர்ச்சி பஞ்சாங்க அடிப்படையில் ஒரே நாளில் நிகழ்கிறதா என்றால் இல்லை, திருக்கணித பஞ்சாங்கத்தின்படி நவம்பர் 2ஆம் தேதி நடந்தது. வாக்கியப் பஞ்சாங்கத்தின் படி டிசம்பர் 16 ஆம் தேதி நடக்க இருக்கிறது, . இதில் என்ன நகைச்சுவை என்றால். பஞ்சாங்கத்திலேயே துல்லியமானது திருக்கணிதப் பஞ்சாங்கம் என கூறப்படுகிறது. ஆனால் சனிப்பெயர்ச்சி மட்டும் வாக்கியப் பஞ்சாங்கத்தின்படியே கணிக்கப்பட்டு 16 ஆம் தேதி திருநள்ளாரில் சனிப்பெயர்ச்சி மிகவும் விமரிசையாக நடத்தப்பட உள்ளது. இவ்வாறு முரண்பட்ட சோதிட நம்பிக்கையின் அடிப்படையில் நடைபெறும் சனிப்பெயர்ச்சியை சற்று அறிவியல் கண்ணோட்டத்துடன் அலசுவோம்.’
ஜாதகமும் ஜோதிடமும்
ஜாதகம் என்பது ஒருவன் பிறந்த நேரதில் வானில் காணப்பட்ட மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிகள், 27 நட்சத்திரங்கள், 9 நவக்கிரகங்கள் ஆகியவற்றைக் கொண்டு பதியும் பதிவு அவ்வளவே. வானவீதியில் கோள்களின் இயக்கம் சீரான காலமுறையை (Uniform Motion) சார்ந்தது என்பதினால் ஜாதகம் என்பது நமது முன்னோர்கள் பயன்படுத்திய பிறப்பு பதிவு எனக் கொள்ளலாம். ஆனால் ஜாதகம் ஜோதிடத்தின் கருவியாக மாறும்போதுதான் சீரழிந்து புனைவுகளுக்கு ஆளாகிறது.
ஜோதிடத்தில் ராசி, நட்சத்திரங்கள் மற்றும் கோள்களுக்கு சில குணங்கள் இருப்பதாக கற்பிதம் செய்யப்படுகிறது. பொதுவாக ஜாதகமும், சோதிடமும் பழமையான பூமிக்கொள்கை (Geo System) எனப்படும் பூமியை மையமாக வைத்து கோள்கள் அனைத்தும் சுற்றி வருவதாகக் கொண்டே இன்றளவும் கணிக்கப்பட்டு வருகின்றது. இன்று அறிவியலால் நிரூபிக்கப்பட்டு உண்மையென எல்லோராலும் குறிப்பாக ஆன்மீகவாதிகளாலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட சூரியனை சுற்றி அனைத்துக் கோள்களும் இயங்குகின்றன (Solar system) என்ற அறிவியல் உண்மைக்கு எதிராக இச்சோதிட தத்துவம் உள்ளது.
கோள்கள் (நவ கிரகங்கள்)
வரிசை எண்.
ஜாதகத்தில்உள்ளவை
சூரிய மண்டலத்தில் இருப்பவை
1. ஞாயிறு
2. சந்திரன், புதன்
3. செவ்வாய், பூமி
4. புதன், செவ்வாய்
5. குரு (வியாழன்), வியாழன்
6. சுக்கிரன்(வெள்ளி), சனி
7.சனி, யுரேனஸ்
8.ராகு, நெப்டியூன்
9. கேது, புளூட்டோ
இதில் நிலையாக பேராற்றல் உள்ள நட்சத்திரமான சூரியனும், ஆற்றல் ஏதும் இல்லாமல் பூமியை சுற்றும் துணைக்கோளான சந்திரனும், கோள்களே அல்லாத ராகுவும் கேதுவும் கிரகங்களாக குறிப்பிடப்பட்டு உள்ளது. மேலும் பூமி, யுரேனஸ், நெப்டியூன் போன்ற கோள்கள் இதில் இடம் பெறவில்லை (அப்போது தொலைநோக்கிகள் இல்லை அதனால் இருந்திருக்கும்). அதைப்போலவே ராசி என்பதும் வானில் உள்ள விண்மீன்களின் வடிவங்களின் கற்பனையான தராசு (துலாம் ராசி-Libra), வில்(தனுசு ராசி-Sagittarius) போன்ற வடிவங்களேயாகும். இந்த வடிவங்களிலான விண்மீன் கூட்டங்களுக்கென தனித்தனியே குணங்களும் ஆற்றலும் உள்ளது எனவும் சோதிடம் கூறுகிறது. இவற்றையே அடிப்படையாகக் கொண்டு அவரவர்களுக்கான தினம், வாரம், மாதம், வருடம் என வாழ்நாள் முழுதும் நல்லதும் கெட்டதுமான பலன்கள் அவ்வப்போது ஜோதிடர்களால் கணிக்கப்படுகிறது.
மீனம் 12, மேஷம் 1, ரிஷபம் 2, மிதுனம் 3, கும்பம் 11,
சோதிடம் கணிக்கும் ராசிக்கட்டம்
கடகம் 4, மகரம் 10, சிம்மம் 5, தனுசு 9, விருச்சிகம் 8, துலாம் 7, கன்னி 6
வர்ணாசிரம – பாலின பாகுபாடு
மனிதர்களிடையே ஜாதி பார்ப்பது போதாது என்று கோள்களையும் வர்ணப்பாகுபாடு செய்கிறது ஜோதிடம்
வர்ணம்
கிரகங்கள்
பிராமணர்
வியாழன்(குரு), வெள்ளி
சத்திரியர்
ஞாயிறு,செவ்வாய்
வைசியர்
சந்திரன், புதன்
சூத்திரர்
சனி, ராகு, கேது
ஆக ஜோதிடத்தை ஏற்பதன் மூலம் நால்வர்ணக்கொள்கையை ஆதரிப்பதாகவே கொள்ளவேண்டும்.
பாலினம்
ராசிகள்
நட்சத்திரங்கள்
ஆண்
மேஷம்,மிதுனம்,சிம்மம், துலாம்
தனுசு,கும்பம்
8
பெண்
ரிஷபம்,கடகம்,கன்னி,விருச்சிகம்,மகரம், மீனம்
16
அலி
3
இப்படி உயிரற்ற கிரகங்களுக்கும் நட்சதிரங்களுக்கும்கூட ஜோதிடத்தில் பாலின வேறுபாடு கற்பிக்கப்பட்டு உள்ளது.
சனிப்பெயர்ச்சி
இனி பெயர்ச்சி என்றால் என்னவென்று பார்ப்போம். பொதுவாக சோதிடத்தில் குருப்பெயர்ச்சியும், சனிப்பெயர்ச்சியுமே மிகவும் பிரபலமானதாகவும் முக்கியமானதாகவும் எடுத்துக்கொள்ளப்படுகிறது. சனி, குரு மட்டுமல்லாமல் எல்லா கிரகங்களுக்கும் பெயர்ச்சி உள்ளது. அந்தந்த கிரகங்கள் பூமியை/சூரியனை சுற்றி வரும் காலத்திற்கு ஏற்ப அட்டவணையில் உள்ளவாறு ஒரு ராசியில் இருந்து இன்னொரு ராசிக்கு இடம் பெயர காலம் எடுத்துக்கொள்ளும்.
மொத்தம் உள்ள 12 ராசிகளில் கோள்கள் இடம் பெயர எடுத்துக் கொள்ளும் காலம்
கோள்களின் பெயர்
சூரியனை சுற்றிவரும் காலம்
இடம் பெயரும் காலம்
சந்திரன்
27 நாட்கள்
2 ¼ நாள்
ராகு, கேது
18 ஆண்டுகள்
1 ½ வருடம்
குரு (வியாழன்)
12 ஆண்டுகள்
ஒரு வருடம்
செவ்வாய்
18 மாதங்கள்
1 ½ மாதம்
சுக்கிரன், புதன்
ஒரு மாதம்
சூரியன்
–
ஒரு மாதம்
சனிக்கோள் சூரியனை சுற்றிவர 30 ஆண்டுகள் ஆகும். 12 ராசிகள் உள்ள சூரியவீதியில் சனி ஒவ்வொரு ராசியிலும் சுமார் 2½ ஆண்டுகள் காணப்படும். இதனைத்தான் அந்த ராசியை சனி பிடித்துள்ளதாக கூறுகிறார்கள். 2½ ஆண்டுகள் கழித்து சனி அந்த ராசியில் இருந்து விலகி அடுத்த ராசிக்கு இடம் பெயரும். இதனைத்தான் சனிப்பெயர்ச்சி என்று கூறுகிறார்கள்.
ஏழரை சனி
ஏழரை நாட்டுச் சனி என்பது சனிக்கோளானது ராசிக்கும் அந்த ராசியின் முன் வீடு ராசியின் அடுத்த வீடு ஆகிய மூன்றிலும் உள்ளதைக் குறிக்கும். சனி கிரகமானது ஒரு ராசியில் இருந்து அடுத்த ராசிக்கு செல்வதற்கு 2½ ஆண்டுகள் ஆகும் என்பதை முன்னரே கண்டோம். ராசிக்கு முன் ராசியில் 2½ ஆண்டுகள், பிறந்த ராசியில் 2½ ஆண்டுகள், அடுத்த ராசியில் 2½ ஆண்டுகள் ஆக 7½ ஆண்டுகளைத்தான் ஏழரை நாட்டுச் சனி என்பர். உதாரணமாக தற்போது சனி கன்னி ராசியில் இருந்து துலாம் ராசிக்கு இடம் பெயர உள்ளது அடுத்து 2½ ஆண்டுகள் கழித்து விருச்சிக ராசிக்கு செல்லவிருக்கிறது. சோதிடத்தின்படி துலாம் ராசிக்காரருக்கு 2½ ஆண்டுகளுக்கு முன்னரே ஏழரை சனி ஆரம்பித்துவிட்டது இன்னும் ஐந்து ஆண்டுகள் கழித்தே அவரை அது விடும். ஒருவரின் முப்பது ஆண்டுகால வழ்க்கையில் ஏழரை ஆண்டுகள் சனியின் தொல்லையில் கொடுமைக்கு ஆளாகவேண்டும் என்பது அவரின் விதி என்பதே ஜோதிடத்தின் நியதி ஆகும்.
சனிப்பலன்
நீண்ட கால வாழ்விற்கும், மரணத்திற்கும் காரணமாக இருப்பது சனி என்று சோதிடம் கூறுகிறது. வறுமை, கலகம், நோய், அவமரியாதை ஆகியவற்றின் காரணி சனியாகவே வருணிக்கப்படுகிறது. லக்னத்திற்கு 3.6,9,10,11 இடங்களில் சனி இருந்தால் குவியல் குவியலாக பணமும் பொருளும், வேலையாட்களுடன் கூடிய வாழ்வு அமையுமாம். லக்னத்திற்கு 2,4,8,12 இடத்தில் இருந்தால் துன்பமும், துயரமும், கஷ்ட நஷ்டங்களும் தொடர்கதையாய்த் தொடரும் எனக் கதை விடுகிறார்கள். இந்தியாவில் வறுமைக் கோட்டின் கீழ் 40 சதவீதத்திற்கு மேல் இருக்கிறார்கள் இவர்களின் வாழ்க்கை லக்னத்திற்கு 3,6,9,10,11 இடங்களில் சனி வராமல் இல்லை, ஆனால் நாளுக்கு நாள் வறுமைக்கோட்டிற்கு கீழ் வாழ்பவர்களின் எண்ணிக்கை கூடிக்கொண்டுதான் இருக்கிறது மறுபுறம் பெருமுதலாளிகளின் சொத்தும் பெருகிக்கொண்டுதான் இருக்கிறது. இதற்கு காரணம் சனிதான் என்று சொல்லி அதுதான் விதி விதிப்படிதான் நடக்கும் எனக்கூறி மக்களை ஏமாற்றி அவர்களின் போராட்டக் குணங்களை மழுங்கடிக்கச்செய்கிறது ஒரு கூட்டம் அதற்கு தூபம் போட ஏற்பட்டதே ஜோதிட குவியல்கள்.
சூரிய குடும்பத்தில் சனி
சனிக்கோள்
பூமியிலிருந்து தூரம்
127 கோடி கி.மீ
சூரியனிலிருந்து தூரம்
142 கோடி கி.மீ
சுற்றளவு
1,21,000 கி.மீ (பூமியைப் போல் 9 மடங்கு)
சுற்றிக்கொள்ளும் நேரம்
10½ மணி (பூமி 24 மணி)
சூரியனை சுற்றி வர காலம்
30 ஆண்டுகள் (பூமி ஒரு ஆண்டு)
குளிர் நிலை
-185oC
அடர்த்தி
தண்ணீரை விட குறைவு (தண்ணீரில் மிதக்கும்)
துணைக்கோள்கள்
31 (பூமிக்கு ஒரே ஒரு சந்திரன் மட்டும்)
சூரியனில் இருந்து உள்ள இடம்
6 (பூமி 3 ஆவது இடம்)
வடிவம்
இரண்டாவது பெரிய கிரகம் (பூமியைவிட 1000 மடங்கு பெரியது)
தன்மை
பெரும்பகுதி காற்றால் ஆனது (பூமி- நிலம், நீர், காற்றால் ஆகிய மூன்றால் ஆனது)
சனிக்கோளில் இருந்து வரும் ஒளி பூமியை வந்தடைய எடுத்துக் கொள்ளும் நேரம்
1 மணி 28 நிமிடம் (விநாடிக்கு 3,30,000 கி.மீ வேகம்)
வாயுக்கிரகமாக உள்ளதால் இதன் அடர்த்தி தண்ணீரைவிட மிகக்குறைவானது. சனியைவிட மிகப்பெரிய கடல் நம்மிடம் இருந்து அதில் சனியை தூக்கி போட்டால் சனி மூழ்காமல் மிதக்கும் என்பது ஆச்சரியமான உண்மை. இதன் காரணமாக மனிதன் அனுப்பும் செயற்கை கோள்கள் செவ்வாயிலும் சந்திரனிலும் தரை இறங்குவதைப்போல சனியில் தரை இறங்கமுடியாது. ஏனென்றால் இதற்கு உறுதியான தரைப்பரப்பு இல்லை குளிரால் ஆண்டு முழுவதும் வறண்டு கிடக்கும் இக்கோளை மிகவும் சக்தி வாய்ந்தது என்று கூசாமல் எப்படித்தான் பொய் சொல்கிறார்களோ?.
கோள்களிடம் உள்ள சக்தி
சோதிடத்தில் கிரகங்களுக்கு அளப்பறிய சக்தி உள்ளதாக சித்தரிக்கப்பட்டு உள்ளது. சனி, செவ்வாய், குரு போன்ற கிரகங்கள் மிகவும் சக்தி வாய்ந்ததாக காட்டப்பட்டுள்ளது. உண்மையில் சூரிய குடும்பத்தில் சக்தி உள்ள ஒன்று உள்ளதென்றால் அது சூரியனே ஆகும். சூரியன் மிகப்பெரிய அணுவுலையாகும். இதன் அளப்பரிய வெப்ப ஆற்றல், ஒளி ஆற்றல், காந்த ஆற்றல், ஈர்ப்பு விசை, புற ஊதாக்க்கதிவீச்சு போன்றவை மற்ற எந்த கிரகங்களுக்கும் இல்லை. உண்மையில் சூரியனுக்கு அடுத்த நிலையில் உள்ள கிரகம் பூமியே ஆகும். இதில் மனித உயிர்வாழ்க்கைக்குத் தேவையான தண்ணீரில் இருந்து, காற்று மண்டலமும் உள்ளது. வேறு எந்த கிரகமும் எவ்வளவு பெரியதாக இருந்தாலும் ஈர்ப்பு விசையைத்தவிர (அதுவும் குறிப்பிட்ட தூரத்திற்கு மட்டும்) வேறு சக்தி இல்லை. அவ்வளவு ஏன் சொந்தமாக ஓளி ஆற்றால்கூட இல்லை சூரியனிடம் இருந்து ஒளியை கடன்வாங்கி பிரதிபளிக்கக்கூடிய அளவிலேயே இவை உள்ளன. வெறும் வெற்று கிரகங்களான இவை அறிவியல் விதியான ஈர்ப்புவிசையின்படி சூரிய மண்டலத்தில் உள்ளனவே தவிர இவற்றிற்கு என எந்த சொந்த ஆற்றலும் இல்லை. இக்கிரகங்கள் பூமியில் இருந்து கோடிக்கணக்கான கி.மீ தூரத்தில் உள்ளதால் இந்த ஈர்ப்பு விசையும் பூமியை எட்டவே எட்டாது. ஆனால் சோதிடத்தில் பேராற்றல் உள்ள சூரியனும் டம்மி பீஸ்களாக செத்துப்போன எரிமலையும், வறண்டு போன ஆறுகளும், கடுங்குளிரும் கொண்ட மற்ற கிரகங்களும் சக்தி உள்ளவைப் போல் சித்தரிக்கப்பட்டு உள்ளது வேடிக்கையான ஒன்று.
கிரக நிலை மனிதனின் வாழ்க்கையை பாதிக்குமா?
1993 ஆம் ஆண்டுகளில் டெல்லியில் உள்ள சனிபகவானின் கோவிலுக்கு சனிக்கிழமைகளில் 100 முதல் 200 பேர் வந்து கொண்டிருந்தனர். ஆனால் தற்போது 1000 பேருக்கு மேல் வருவதாகக் கணக்கிட்டுள்ளனர். வந்தவர்களின் பிரச்சினைகள் தீர்ந்துள்ளதா எனக்கேட்டால், அப்படி ஒன்றும் இல்லை என்கின்றனர். பிரபலமான வானவியல் அறிவியலாளர் ஜெயாண்டி வி.நார்லிக்கர் கூறும்போது சனியைப் பற்றி பேசப்படும், சொல்லப்படும் கருத்துக்கள் அனைத்தும் தவறானது ஆகும். இதில் எந்தவித அறிவியல் உண்மையோ, செயல்பாடோ கிடையாது என்கிறார்.
உலகில் உள்ள மனிதர்களையும் ஜீவராசிகளையும் தங்களுடைய அதிகார பலத்தினால் ஆட்டிப்படைப்பவர்கள் இந்த ஒன்பது கிரகங்கள்தான் என்கிறது ஜோதிடம். இந்தியாவில் தற்போதைய மக்கள் தொகை 120 கோடி ஆகும். இவர்கள் அனைவரும் 12 ராசிக்குள்தான் வருவார்கள். அப்படி என்றால் ஒரு ராசியில் 10 கோடி பேர் உள்ளனர். இவர்களின் வாழ்க்கை நிலை ஒன்றுபோல் உள்ளதா? என்றால் இல்லை
சமுதாயத்தில் உள்ள சாதி, தீண்டாமை, ஏற்றத்தாழ்வு, வேலையின்மை, உலகமயம், தனியார் மயம், தாராள மயம் மற்றும் அரசு கடைபிடிக்கும் தவறான பொருளாதாரக் கொள்கைகள்தான் மனிதனின் வாழ்க்கையைப் பாதிக்கிறது. வறுமைக்கும் கூட இவைகள்தான் இன்றளவும் காரணமாகவுள்ளது.
அறிவியல் பார்வை
பழக்கத்தின் காரணமாக பிடிவாதமாக நமது முன்னோர்கள் நம்பி வந்த நம்பிக்கை இதுவரை தொடர்ந்து வந்துள்ளது. நம்மீது விடாப்பிடியாக உள்ள அந்த நம்பிக்கை மீது நாம் சந்தேகிக்க மறுக்கிறோம். வானவியலை நன்கு அறிந்துகொள்வதின் மூலம் நமக்கு உண்மை புலப்படும்.
உண்மையில் சனிக்கிரகத்தின் வளையமானது அதற்கு அழகைக் கூட்டுகிறது. சிறந்த ஓவியரால்கூட தீட்ட முடியாத வண்ணங்கள் அதில் உள்ளன. வேறு எந்த கிரகத்திற்கும் இல்லாத அழகும், அதிசயமும் சனிக்கிரகத்திற்கு மட்டும்தான் உண்டு.
இனி சனியன் என யாரும் திட்டினால் அதற்குக் கோபமோ, வருத்தப்படவோ வேண்டியதில்லை. சனியைப் பற்றிய முழு உண்மைத் தெரிந்தவர்கள் சனியன் என்றால் மிகவும் மகிழ்ச்சியடையலாம்.
-பொன்.ரங்கன்
“பிற சங்கங்கள்” என்று சொல்லிய 8 சங்கங்கள் மலேசிய சைவ சமய பேரவையின் சைவ சமயத் தொண்டிற்கு முட்டுக் கட்டை போட வந்தனரே, அவர்களிடம் சொல்ல வேண்டியதை எம்மிடம் சொல்லி என்ன பயன்!. 1965-ம் ஆண்டிலிருந்து செயல்பட்ட சங்கத்திடம் சொல்லுங்கள், இதுவரையில் இந்நாட்டில் 8 பேர்தானா பொருளறிந்து திருமுறை ஓதுகின்றார்கள்?. இந்து தருமர் என்று பெயர் போட்டுக் கொண்டு பலர் படிக்கும் இவ்விடத்தில் இதைச் சொல்லும் உமக்கு வெட்கமாய் இல்லை?. அப்படியானால், வருடா வருடம் ஆங்கிலத்திலும் திருமுறையை எழுதி பொருள் அறியாமல் ஒதுவோருக்கும் பரிசை எடுத்துக் கொடுத்தவரிடம் சொல்லுங்கள் உங்கள் நியாயத்தை. திருமுறைக்கு பொருள் அறிந்து அதனை ஆலயத்தில் ஓத வேண்டும் மாறாக இலவு வீட்டில் இல்லை. சைவத் திருமுறையை இத்தகைய இழிவான நிலைக்கு கொண்டு வருவதற்கு அந்த சங்கம் நடத்திய ‘நீர்த்தார் கடன்’ பயிற்ச்சியின் வழி, திருமுறையை படிக்கச் சொல்லி வழி காட்டியதே. மலேசிய சைவ சமய பேரவை திருமுறையை ஓதி அதன் பொருளை சித்தாந்தத்தின் படி தெளிவித்து பல இடங்களில் சித்தாந்த வகுப்புகள் நடத்தி வருகின்றோம். அரசாங்கத்திடம் பணம் வாங்கிக் கொண்டு கண்ட கணக்கு எழுதி இல்லை மாறாக மாணவர்களின் சுய ஆர்வத்தில் கொடுக்கும் பணத்தில் எளிமையாக, ஆரவாரமில்லாமல் சித்தாந்த வகுப்புக்களை நடத்தி வருகின்றோம். சைவம் இந்நாட்டில் தழைத்தோங்க எங்களை வாழ விடுங்கள். நாங்கள் இந்நாட்டு தமிழர்களுக்கும், சைவத்தை நாடி வருவோருக்கும் பொருள் அறிவித்து திருமுறைகளை ஓத கற்றுக் கொடுக்கின்றோம்.
இந்து தர்மரே , தேங்காய்க்காரனும் , ஜோதிடக்காரனும் காதில் பூ சுற்றுபவர்கள் என்பது இன்னுமா உமக்குப் புரியவில்லை? சொல்வதைப் புரிந்து , தெளிந்து சொல்வதுதானே சிறப்பு. எம்பெருமானே , இந்து தர்மர் ஓர் ஆசிரியராக மட்டும் இருந்துவிடக் கூடாது. பாவம் நம் பிள்ளைகள். கண்டிப்பாக உம்மால் Pட்3 சோதனையில் தேர்ச்சி பெற முடியாது. ஒரு சொல்லின் பொருள் விளங்காமல் பேசுபவன் ‘தார்சன்’ என்று கூட கூறவியலாது , ஏனெனில் அவனும் பொருளுணர்ந்து தான் செயல்படுவான்.
கருத்துக்கு கருத்து என்பது அறிவுப்பூர்வமாக இருந்தால் படிப்போர் கவனத்தை ஈர்க்கும். அவ்வாறு இல்லாமல் ஒப்பாரி என்ற வகையில் கருத்து எழுதுவோரின் கருத்து கறுவடையாமல் என்ன செய்யும். “இந்து” என்போரை இழிவுபடுத்துவது அல்ல எமது நோக்கம். தமிழர் தமக்குரிய சமயமான சைவத்தை அறிந்து அதன் வழி ஒழுகுவதே சாலச் சிறப்பு என்று கருத்து எழுதுகின்றோம். இக்கருத்துக்களைப் படித்து வரும் பலர் இதைப் பற்றி சிந்திக்கத் தொடங்கி விட்டனர். மலேசிய இந்து சங்கமே இன்று சைவ முறைப்படியும், வைணவ முறைப்படியும் RM100/= – க்கு சிவாச்சாரியாரால் (?!) தீட்ச்சை செய்து வைக்கப்படும் என்று விளம்பரப் படுத்தும் பொழுது இந்து தருமர் என்று சொல்லிக் கொள்ளுவோர் ஏன் செம்பருத்தியைக் குறை கூற வேண்டும். அவர்களே சைவர்களை ஏற்றுக் கொண்டபொழுது உமக்கெங்கே வலிக்கின்றது ஐயா?. இப்பொழுது அதர்மம் பேசுவது நீரா அல்ல செம்பருத்தியா?.
உண்மையை உண்மை என்றுதானே சொல்லவேண்டும் inthuDharmaரே! அதில் என்ன சந்தேகம் தங்களுக்கு? தாங்கள் தமிழர் என்றல் தங்கள் முன்னோர்கள் எந்த சமயத்தை போற்றினார்கள் என்று அறிவீர்களா? நம் வழிபாட்டு முறை;முதலில் நம் தாய்தந்தை,குலதெய்வம்,குரு,பரம்பொருள் என நம் முன்னோர்கள் காட்டிய வழியை முற்றாக மறைக்க பட்டு வந்தேறிகளின் வழிகாட்டலில் சீரழிந்து கொண்டிருக்கும் நம்மினத்தை கண்டு எப்படி ஐயா சும்மா இருப்பது? தாங்கள் தலையாட்ட வேண்டிய அவசியம் இல்லை! ஆயிரம் காலத்து வணக்கத்தைவிட அரைநொடி ஆராய்ச்சி தங்கள் தேடல்களுக்கு அன்பான பரம்பொருள் வழிக்காட்டுவார்.
தேனீ > இங்கே நீங்கள் இதுவரை பதிவு செய்த எல்லா எழுத்தையும் மீண்டும் படித்து பாருங்கள் > உங்கள தரப்பு செய்திகளை நியாயப்படுத்த எதிர்த்தரப்பினரின் வாதங்களை எப்படியெல்லாம் கீர்தரமாய் கிண்டலடித்து எழுதி உள்ளீர்கள் என னைவருக்கும் தெரியும் ..சைவ சித்தாந்த வகுப்பு நடத்தும் உங்களாலேயே தரமாக விமர்சனம் செய்ய இயலவில்லையே ???( ஆதாரத்தை தேதி வாரியாக தரட்டுமா ) >நான் சைவநெரிகலையோ -ஆன்மீக வளர்ச்சியையோ எங்காவது வீண் விமர்சனம் செய்துள்ளேனா ?
மதத்தின் பெயரால் இந்து இயக்கங்கள் அரியபல நடவடிக்கைகள் செய்வதில் “தீட்சை” “பொருள் அறியாமல் திருமுறை ஓதியவர்களுக்கு பரிசளிக்கிறார்கள் “என விமர்சனம் செய்வது நாகரகமா ?தமிழ் படிக்காதவர்கள் ஆங்கிலத்தில் திருமுறை எழுதிவைத்து ஓதுவது பாவமா ?? விசாலமான நோக்குடன் சமயத்தை அணுகுங்கள் .> உங்களின் குறுகிய நோக்கால் உங்களை தாழ்த்தி கொள்ளாதீர்கள்…
ஐயா இந்து தருமரே, கருத்து எழுதி, எழுதி எமக்கு கை வலியே வந்து விட்டது. புரியாத பாலகனாக மீண்டும் மீண்டும் கருத்து எழுதி எம்மை கடுப்பு ஏற்றுகின்ரீர். யாம் சில நேரங்களில் கடுமையாக எழுதுவதர்க்குக் காரணம் தமிழர்களிடையே சிலர் புல்லுரிவிகளாக இருந்துக் கொண்டு, தமிழரை அறிவார்ந்தவர்களாக வாழ விடாமல், மூட நம்பிக்கைகளில் திளைத்து, சமய நம்பிக்கைகளின் வழி பயங்காட்டி, அவர்களை அறிவுக் குருடர்களாக வைத்திருக்க முயற்ச்சிப்பதை முறியடிக்கவே. இதனை தாங்களும் புரிந்தும் புரியாது போல் கருத்து எழுதிக் கொண்டிருப்பதால், இந்நாட்டில் சமயப் போர்வையை போர்த்திக் கொண்டு ஒரு சில சங்கங்கள் அடிக்கும் கூற்றைப் பார்த்து இவர்கள் எம் மக்களை இப்படி துச்சமாக நினைத்து இன்னும் அறியாமையில் அழுந்த வைத்திருக்கின்றார்ளே என்று நினைக்கத் தோன்றுகின்றது. “தீட்சை” என்பது ஒரு சமய குருவானவர் தன் மாணவனின் பக்குவ நிலையை அறிந்து தாமே மனமுவந்து தீட்சை செய்து வைப்பது முறை. அதை விடுத்து RM100/= – யைக் கட்டி தீட்சை வாங்கிக் கொள்ளுங்கள் என்று விளம்பரம் செய்வது எவ்வகையில் இந்து தருமம் என்று சொல்லுங்கள்?. சோதிடத்தில், கணித சோதிடம் (‘Astrology’) என்றும், எண் கணித சோதிடம் (‘numerology’) என்றும், பெயர் சோதிடம் (‘namelogy’) என்றும் பல பொய்களை கூறி ஏமாற்றுவது இந்து தருமமா?. அது நியாயம் இல்லை என்று யாம் சொல்லியா தங்களுக்குத் தெரிய வேண்டும். அதைப் போலவே “தீட்சை” என்பதையும் வியாபார பொருளாக்கி விளம்பரம் செய்வதும் இந்து மதம் என்று மதி மயங்கி இருப்போருக்கு செய்யும் பச்சைத் துரோகம் அல்லவா?. இதை எல்லாம் நெத்தியில் அடித்த மாதிரி இங்கே எழுதினால் அதுவே குறையாகி விடுவதால், நிறைக்குடங்கள் எல்லாம் நமக்கென்ன வந்தது என்று தலும்பாமல் நிற்கின்றன. எம்மைப் போன்ற குறைக்குடங்கள்தாம் தைரியத்துடன் தட்டிக் கேட்க முன் வரவேண்டியுள்ளது. எம்மைப் போன்றோரும் இதனைச் செய்யவில்லை என்றால் எதிர்கால தமிழர் மூடராகவே வாழ்ந்து வீழ்வார். இதைத்தானா “இந்து மதம்” என்ற “வைதீக மதம்” விரும்புகின்றது.
தரமான கேள்வி பல கேட்டும் அதற்கு பதில் தராமலேயே இங்கே கருத்து எழுதும் இந்து தருமரே, எம்மை கருத்து குருடர் என்று விமர்சிப்பதற்கு தங்களுக்கு போதிய சமய ஞானம் இல்லை என்பதே முடிவான முடிபு.
தேனீ > என் சமய ஞானம் கிடக்கட்டும்..சமயத்தை பற்றி உங்கள் அளவில் நான் நிச்சயமாய் இல்லை. சைவ மார்க்கமே நிஜம் என்ற உங்கள் வாதம் சரி ! அதை எப்போது குறை கூறினேன் ?? என் கேள்வி > சண்மதம் அருளிய சங்கரர் >திருப்புகழ் அருளிய அருணகிரி > ராமனை பாடிய கம்பன் > பராசக்தியை வணங்கிய பரமஹம்சர் > முருகனை சேவித்த வள்ளலார் > அந்தாதி பாடிய பட்டர் போன்றோரை நாம் எந்த பிரிவில் சேர்ப்பது ? அனைவரையும் அவர்தம் தமிழ் படைப்புகளையும் ஆரியர்>பார்பனீயம் என ஒதுக்கிவிடவா ??.>.மீண்டும் 7ஆம நூற்றாண்டு – ராஜ ராஜ சோழன் காலம் என்ற வீர சொல்வீச்சு இல்லாமல் -சுற்றாமல் நேரடி பதிலை கூறவும்..
விவாதங்கள் அருமை, அதனிலும் அருமை ஆய்வு கட்டுரை . மீண்டும் கூறுகிறேன் பார்பன சமயத்தை விட்டு வெளியே வாருங்கள் அதனையே அனைவருக்கும் கற்பியுங்கள் . திருக்குறளை முன்னிருதுங்கள் , அதனை வாழ்க்கை நேரியாகுவோம் . இல்லாவிட்டால் :
1. தெரிந்த திருமுறைகளை பொருளுணர்ந்து பாடுங்கள்
2. ஆலயத்தில் அர்ச்சனை செய்யாதீர் அல்லது தமிழில் செய்யுங்கள்
3. பிறப்பு முதல் இறப்பு வரை அனைத்தையும் தமிழ் முறைப்படி
செய்யுங்கள்
இவைகளை செய்ய ஆரம்பித்தால் நம் தமிழினம் மேன்மையுடன் வாழ முடியும் .இவை அனைத்தும் சிறிய செயல்களே ஆனால் பயன் மிக பெரியது . பொது இயக்கங்களின் சேவை , தேவை.
செயலில் இறங்குவோம் வாரீர் ……
சைவமும் தமிழும் ஒன்றித்தே தோன்றி வளர்ந்து நிற்பன. இவை தமிழரின் அடையாளங்கள். இவை தமிழரின் உயிர். இவை தமிழர் கண்டெடுத்த மாணிக்கம். சைவத்திருந்து தமிழைப் பிரித்து எடுப்பது என்பது ஒவ்வொரு உண்மைச் சைவனின் உடலிலிருந்து உயிரை நீக்குவதர்க்குச் சமம். எவ்வொரு சைவனும் இதற்கு ஒவ்வான். தமிழர்களாகிய எங்களை சமஸ்கிருந்தம் கற்று வேதத்தை அறியுங்கள் என்று அறிவுறுத்தியவர், ஏன் தமிழைக் கற்காதவர்களுக்கு தமிழைக் கற்று திருமுறை ஓதுங்கள் என்று சொல்லத் தவறினீர்?. தங்கள் பற்று வைதீகத்திலும், சமஸ்கிருதத்திலும் இருக்கும் அளவிற்கு ஏன் தமிழிலும், சைவத்திலும் இல்லை?. ஒன்று தங்களை மாற்றிக் கொள்ளுங்கள் இல்லையேல் நாங்கள் தமிழராக வாழ்வதை தடுக்க நினைக்காதீர்கள். விபரீதம் விசுவரூபம் எடுக்கும். அதன் விளைவு இந்து மதம் என்ற வைதீக மதத்தின் முகத்திரையை கிழித்தெறியும். இதனை அறிந்து அன்றைய ஆரியரே சைவருடன் சமாதானம் செய்துக் கொண்டு சைவத்தை போர்வை போட்டு மூடி வைத்தனர். அந்த காலம் மலையேறி விட்டது என்பதையும் அறிவீர்.
இந்து தருமரே கட்டணம் கொடுக்காமல் சைவ சித்தாந்தத்தை செம்பருத்தி வழியே கற்று விட முடிவு செய்து விட்டீர்கள் போலிருக்கு!. சைவமே நிஜம் என்பதல்ல எமது வாதம். தமிழருடைய சமயம் சைவம் என்பதே எமது வாதம். இதில் மாற்றுக் கருத்து இருக்க வாய்ப்பில்லை.
ஆதி சங்கரர் அறுவகைச் சமயத்தை அருளவில்லை. திருத்திக் கொள்ளுங்கள் அவர் இந்த அறுவகைச் சமயத்தில் எதிலும் நிற்காமல் அன்று இந்திய தென்னாட்டில் இருந்த பல்வகை சமயங்களை ஆராய்ந்து சொல்லத் தக்கதாக இருந்த அறுவகைச் சமயங்களை வகைபடுத்தினார். அவ்வளவே. தொடரும்
அப்படி வகைபடுத்தப்பட்ட சமயங்களிலே, விந்திய மலைக்குத் தெற்கே வாழ்ந்த மக்களுக்கு மென்மையான சுத்த சைவ சித்தாந்த ஆகமங்கள் சிவபெருமானால் அருளப்பெற்ற பெருமை உடையது சைவம் என்பதை அறிவீர். அதன் விரிவாக்கமே மெய்கண்ட சாத்திரங்களும், அத்தத்துவங்களை உணர்த்துபவையே நால்வர் பெருமக்கள் வழங்கிய திருமுறைகளும் ஆகும். சைவம் தனிப்பெரும் சமயம் என்பதையும் அறிவீர். இச்சமயம் தன்னகத்தே நின்று செயல்படும் திறனும் பெற்றது என்பதையும் அறிவீர். கௌமாரமும், காணபத்தியமும் தன்னகத்தே மூல ஆகமங்களைக் கொண்டிராதலால் சைவ ஆகமங்களைக் கொண்டே செயல்பட வேண்டிய சூழலில் சைவத்தை சுற்றி வளர்ந்தன என்பதனையும் அறிவீர். எப்பொழுது ஆரியரிடம் அடிமைப் பட்டு சைவர்கள் வைதீகச் சைவர்களாய்ப் போனார்களோ அன்றே சைவம் ஆரியர்கள் போர்வையின் கீழ் போட்டு போர்த்தி வைக்கப் பட்டது. அதுவே முருகரும், பிள்ளையாரும் மாட மாளிகையில் குடியேற அவர்தம் பெற்றோர் ‘outdoor’ – சில் குடிசை வீட்டில் குடித்தனம் வைக்கப் பட்டனர். விளங்குமா இப்பேர்பட்ட குடும்பம். அதன் பயனே தென்னவன் இன்று அனுபவிப்பது என்று சொன்னால் மிகையாகாது. தொடரும்.
சைவத்தை ஒட்டி வளர்ந்த சமயங்களின் படைப்புகள் தமிழருடையதே என்பதில் கருத்து வேறுபாடு இல்லை. தமிழர்களிடையே தங்களை மேலோர் என்று அறிவித்து வைணவத்தில் நின்று வேதத்தையே தங்களது மெய்நூல்களாக கொண்ட வைணவர்கள் எப்பொழுது ஐயா தங்களை ஆதி தமிழருடன் இணைத்துக் கொண்டார்கள்?. மாறிப்போன தமிழன் தமிழ் பேசுவதால் நானும் தமிழன் என்று சொல்லிக் கொள்வது போலத்தான் வைணவர்களின் நிலையும் என்பதை அறிவீர். இதுவரை எம்மை ஆசுவாசப் படுத்திக் கொண்டு மென்மையான மொழியில் சொன்னோம். இத்தோடு நிறுத்தினால் நல்லது.
பொன் ரங்கன் அவர்களே, உங்கள் விளகத்தில் எளிமையை சேருங்கள் சார் , அதிகமாக சம்பந்தம் இல்லாமல் குழபாதிர்கள். நான் உங்கள் விளகத்தை கண்டு கடுப்பாகி இருக்கிறேன். மீண்டும் ஒரு முறை உங்கள் கடைசி விளக்கத்தை படியுங்கள் !
தேனீ அவர்களே, உங்கள் வாதத்தை நான் ஆழ்ந்து கவனித்தேன், ஒன்று மட்டும் புரிகிறது ! நீங்கள் சைவ சமயத்தை , தமிழை கொண்டு, படைப்புகளின் ரகசியங்களை பார்கிரிர்கள் . இரண்டாவது, சைவ சித்தாந்தத்தின் கூறுகளை மட்டுமே ஏற்று கொண்டு, மற்ற இந்து மத போதகங்கங்களை ஒதுக்கிரிர்கள் . காரணம் ஆரிய , வைணவ கலப்படம் , தமிழர்களின் தரத்தை குறைபதாக கணிக்கிரிர்கள் ! நிறைய எழுதலாம் இங்கே, ஆனால், சுருக்கமாக கூறினால்: இந்து மதத்தில் 15 மொழிகளை , இந்தியாவின் தேசிய மொழிகளாக அங்கிகரிக்க பட்டிருக்கிறது. அவை அனைத்திலும் கடவுளை தேடியவர்கள், அவர்களுக்கு என்ன என்ன பேரானந்தங்கள் கிடைத்தனவோ, அவைகளை மாசுபடாமல் எழுதி வைத்துள்ளனர். அவை அனைத்தும் avargalin தெய்வீக அனுபவமே தவிர , படைப்பின் ரகசியங்கள் அல்ல. ஆகையால் , சைவ சித்தாந்தம் தமிழர்களுக்கு மட்டும் சொந்தம் என்னும் கருத்தை நான் மென்மையாக மறுக்கிறேன். காரணம், தமிழில், நமது முனிவர்களும், ரிஷிகளும் , எல்லா படைப்பின் கருத்துகளையும் கூறி செல்ல வில்லை. உதர்ணதிர்க்கு , திருக்குறள் : அறம், பொருள் , இன்பம் பற்றிய குறிப்புகள் மட்டும் தந்துள்ளது ! மனிதனின் ஆத்மா , இறந்த பிறகு , அதன் செயல் பாடுகள் என்ன என்பதை ஆழமாக விழக்க வில்லை ! ஆகையால், தமிழர்களின் தெய்வ சிந்தனை ( நாயன்மார்கள் ) மட்டும் வழக்கை வழிமுறையாய் எற்று கொள்ள முடியாது . 108 உபநிஷத், சம்ஸ்கிருத மொழியில் தோன்றினாலும் , 13 சைவ சித்தாந்ததை குறிக்கிறது. யஜுர் வேதம் , இரண்டு ஆசிரியர்களால் , சுக்கள யஜுர் (சிவனுக்காகவும்), கிருஷ்ணா யஜுர் (விஷ்ணுவுக்ககவும்) படைக்க பட்டிருக்கிறது ! ஆதி சங்கரரை மட்டும், இந்து மதத்தின் அளவு கோலாக பார்க்க கூடாது தேனீ அவர்களே ! லெமுரிய கண்டதை ஆண்டவர்கள் முற்றிலும் தமிழர்கள் அல்ல , மாறாக கிராந்த வர்க்கத்தை சேர்ந்தவர்கள் என்ன குறிப்பு சொல்கிறது. திருவள்ளுவரின் தமிழும் , கிராந்த மொழி அமைப்பும் அதிக ஒத்துமை கொண்டது … ஆகையால் …… ஆகையால் புனிதம் என்று எந்த மொழியும் இல்லை , ஆதி சிவம் (சிவா பெருமான்) தமிழர்களுக்கு மட்டும் என்று இல்லை ! கடவுள் மொழிக்கு அப்பாற்பட்டவர் !
தேனீ > வேதத்தை மெயநூலாக கொண்டது பாவ செயலா ?? “…வேதம் நான்கினும் மெய்பொருள் ஆவது..” > நாள் வேதமும் பொருள்களும் அருளி,,” என்ற தமிழ் திருமுறை அவற்றை போற்றுவது எதற்கோ ?
* நீர் மிக பதற்றகாரர் என்பதை ஆரம்பம் முதலே அறிந்தேன் ! எமக்கு பதில் சொல்ல உங்களை சிரமப்பட்டு ஆசுவாச படுத்தி நேரத்தை வீணடிக்க வேண்டாம் *
எத்தனை பெரியார் வந்தாலும் , பகுத்தறிவு வராது. சில ராஜாக்கள் இதையும் வைத்து தொடர்ந்து பணம் பண்ணுவார்கள் . பிழைக்க வந்தவர்THAAனே malaysiaர்களைப் பற்றி இவர்களுக்கு என்ன கவலை
நன்றி திலிப் அவர்களே. தமிழர் கண்ட சமயம் சுத்த சைவ சித்தாந்தம் என்பது மென்மையான சிவ நெறியாக விந்திய மலைக்கு தெற்கே வாழ்ந்த தென் இந்தியர்களுக்கு சிவ பெருமானால் அருளப்பெற்றது என்றேன். அதுதானே “தென்னாடுடைய சிவனே போற்றி” என்று நாம் அனைவரும் அந்த சிவ பெருமானை பரம்பொருளாக வணங்குகின்றோம். அதைத்தானே திருமூலரும் “அவனை ஒழிய அமரரும் இல்லை, அவன் அன்றி செய்யும் அருந்தவம் இல்லை, அவன் அன்றி மூவரால் ஆவது ஒன்று இல்லை, அவன் அன்றி ஊர்புகுமாறு அறியேனே” என்று 1-6 – வது தந்திரத்தில் அருளியது. அதனால்தானே நாம் வணங்கும் பரம்பொருளாகிய சிவபெருமான் நமக்கு மட்டும் கடவுள் அல்ல இப்பிரபஞ்சத்தில் வாழும் அனைத்து ஜீவராசிகளுக்கும் அவனே முழு முதற் பரம்பொருள் என்று “எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி” என்று வணங்குகின்றோம். நம்முடைய சைவம் ஒரு குழுவுக்கு உடையதன்று. இது உலகளாவிய சமயம் (‘Universal Religion’). ஆகையால், சைவ சித்தாந்தம் தமிழர்களுக்கு மட்டும் சொந்தம் என்று கூறினால் அது மடைமையாகி விடும் என்பது நான் அறியாததா!. தமிழர் “கண்ட” சமயம் என்பதும், “தமிழருக்கே உடைய” சமயம் என்பதும் இரு வெவ்வேறான விடயங்களைக் குறிக்கும் என்பதை தாங்களும் அறிவீர் என்று நம்புகின்றேன். சுத்த சைவ சித்தாந்தத்தைத் தவிர்த்து, வீர சைவம், காஷ்மீரிய சைவம் என்று இன்னும் பிற சைவ மார்க்கங்களும் உண்டு என்பதனையும் தாங்கள் அறிந்தே வைத்திருக்க வேண்டும். தென்னாட்டவர்கள் கண்ட சுத்த சைவ சித்தாந்தத்தை விட மற்றவை மேலும் கடுமையான நெறிகளையும், கரடு முரடான கொள்கைகளையும் கொண்டுள்ளன என்பதை தாங்கள் அறிந்தே வைத்திருக்க வேண்டும். ஆக தமிழனாகப் பிறந்த எம்மைப் போன்றோருக்கு எங்களுக்குப் புரியும்படி தமிழில் வழங்கிய ஆகமங்களும், திருமுறைகளும், மெய்கண்ட சாத்திரங்களுமே எங்களுடைய மெய்ஞான வழி நூல்களாம். பிற மொழி அறிந்த பிறருக்கு அவரவர் மொழியில் வழங்கிய மெய்ஞான நூல்கள் அவருக்கு வழி காட்டட்டும். “ஆரியத்தை அவுத்து போட்டுட்டு வா” என்று இன்றுதான் உழவர் அவர்கள் ஒரு கவிதையைப் பதிவேற்றினார். படித்து விட்டு வாருங்கள். தொடரும்.
“மற்ற இந்து மத போதகங்களை ஒதுக்கிரிர்கள் . காரணம் ஆரிய , வைணவ கலப்படம்”. ஐயா திலிப், தாங்கள் ஒவ்வொரு சமய நெறி தத்துவங்களை அறியாமல் கருத்து எழுகின்றீர்கள். ஆரிய வேதம், பொருள் ஒன்றே, அது பிரம்மம் என்றும், அப்பிரமத்தை அவிச்சை மறைத்ததால் உயிர்களும் புவனமும் தோன்றியது என்று பகரும். இக்கருத்தில் இருந்து முற்றிலும் மாறுபட்ட தத்துவ நெறியைக் கொண்டது சுத்த சைவம் ஆகும். சைவம் பொருள் பல என்றும் அவை பதி, பசு, பாசம் என்றும் பகரும். பதியிணைப் போல், பசுவும், பாசமும் அநாதி (என்றும் உள்ள பொருள்) என்றும் பகரும். மாறாக ஆரிய வேதத்தைப் போன்று உயிர் பிரம்மத்தில் இருந்து தோன்றியது என்று உணர்த்துவதை ஏற்காது. இதைத்தானே, திருமூலரும், “பதிபசு பாசம் எனப்பகர் மூன்றில், பதியினைப் போற் பசு பாசம் அநாதி, பதியினைச் சென்றணுகாப் பசு பாசம், பதியணு கிற் பாசம் நிலாவே” (10-115) என்று கூறினார். ஆரிய வேதமும், தமிழர் கண்ட சைவமும் இரு வெவ்வேறான கடவுள் கோட்பாட்டினைக் கொண்டுள்ளன என்பதை அறியாமல்தானே தாங்களும், இந்து தருமரும், வைதீக (இந்து) மதமும், சைவமும் ஒன்றே அல்லது உணர்த்தும் கடவுள் கொள்கை ஒன்றே என வாதாடிக் கொண்டிருக்கின்றீர்கள். சைவனாகிய யாம் ஏன் மற்ற இந்து மத போதங்களை ஏற்கவில்லை என்று இப்பொழுது புரிகின்றதா?. காரணம் அவை எம் சைவ சமய நெறிக்குப் புறம்பான கடவுள் தத்துவத்தைக் கொண்டவை மாறாக ஆரிய வைணவ கலப்படம் கொண்டது என்பதால் அல்ல. தாங்கள் இருவரும் இந்து மதம் என்ற மாயையில் இருந்துக் கொண்டு மற்ற தமிழர்களையும் குழப்பாதீர்கள். அதுவே தாங்கள் சைவத்திற்கு செய்யும் நற்பணியாகும். தங்கள் இருவரின் சமய அறியாமைக்காக வருந்துகின்றேன். தொடரும்.
இந்து தருமரே, தங்களின் கிண்டலுக்குப் பதில் சொல்ல எமக்கு விருப்பம் இல்லை. இருப்பினும் எம்மக்களுக்கு தங்கள் கேள்வியின் ஞாயத்தை எடுத்துரைக்க பதில் எழுதுகின்றேன். “வேதத்தை மெயநூலாக கொண்டது பாவ செயலா” என்று வினவிநீர். அது எப்படி முறையாகும்?. ஆரிய மரபினரது வேதம் இருக்கு, யசூர், சாம, அதர்வண ஆகியவையாகும். யாருக்கு எது வேண்டுமோ அதை ஏற்றுக் கொள்வது எப்படி தப்பாகும். ஆனால் ஆரிய வேதத்தின் உண்மைப் பொருளை தெரிந்து ஏற்றுக் கொண்டீர்களா என்று தங்களைத் தாங்களாகவே கேட்டுக் கொள்ளுங்கள். அல்லது அந்த வேதத்தை தங்களுக்கு உணர்த்தியவர்கள்தான் உங்களிடம் உண்மையைச் சொன்னார்களா என்றாவது செம்பருத்தி வாசகர்களுக்குத் தெரிவியுங்கள். இந்த வேதங்களில் எதில் நீங்கள் படித்து தேரியுள்ளீர்கள் சொல்லுங்கள் இந்து தருமரே?. தாங்கள் சொன்ன “வேதம் நான்கினும் மெய்பொருள் ஆவது” என்பதில் “நமச்சிவாயமே” என்ற வார்த்தையை விடுத்து அரைகுறையாக எழுதியது ஏனோ?. இதைச் சொன்னது சைவம் என்று அறியாமல், அதை ஏற்காமல் போனது ஆரியம் என்றும் அறியாமல் எம்மிடம் வசைப்பாட்டு வாங்க வந்தீரோ?. இது போதுமா இல்லை இன்னும் வேண்டுமா?. நாளை தொடரும்.
“மனிதனின் ஆத்மா , இறந்த பிறகு , அதன் செயல் பாடுகள் என்ன என்பதை ஆழமாக விழக்க வில்லை ! ஆகையால், தமிழர்களின் தெய்வ சிந்தனை ( நாயன்மார்கள் ) மட்டும் வழக்கை வழிமுறையாய் எற்று கொள்ள முடியாது”. ஐயா திலிப் அவர்களே, இதற்குத்தான் யாம் படாது பாடு கொண்டு தமிழர்களை அவர்தம் சமயத்தின் பொருள் உணர்ந்து பின் பற்றுங்கள் என்பது. இக்கட்டுரையின் நோக்கமும் அதுவே. கண் மூடித்தனமாக கண்டவர் காட்டும் வித்தைகளில் தமிழர்கள் மயங்கி வாழ வேண்டாம் என்பது அதனாலேதான். சைவத்தை முழுமையாக அறியாமல் கருத்து எழுதோர், சைவத்தைப் பற்றி கற்றுக் கொள்ள வேண்டியது எவ்வளவோ உள்ளது. மெய்கண்ட சாத்திரங்களைப் படியுங்கள். உயிரின் இலக்கணத்தையும் அதன் இம்மை, மறுமை நிலைகளையும் தெளிவாக எடுத்துரைக்கும். அதை எல்லாம் படிக்காமலேயே பண்டிதர் ஆகணும்முன்னா “அப்பனுக்கு பாடம் சொன்ன சுப்பையா” கதையாக இருக்கின்றது தங்களின் கதை.
ஐயா திலிப் அவர்களே, எம்முடைய நிலைப்பாடு திருக்குறள் உலகத்தவர் அனைவருக்கும் ஏற்ற “அறநூல்” என்பதாகும். அதுவே, அறம், பொருள், இன்பம் என்பதனை உணர்த்தி அதனை அறிந்து ஏற்பவருக்கு, முத்தி பேரின்பம் எனும் வீடுபேறும் அத்துள் மறைந்து அடங்கி இருக்கின்றது என்பது சைவ சமய வழிகாட்டிகளின் நிலைப்பாடு. இதனை அறிய, வள்ளுவப் பெருமகனார் கூறியது போல, ‘கற்க, கசடறக் கற்பவை, கற்றப் பின் நிற்க அதற்கு தக” என்று அறிந்து தங்களைப் போன்றோர் திருக்குறளின் வழி நின்றால் உண்மையை அறியலாம். மற்றவை நாளை சிந்திப்போம்.
இந்து மதம், ஷன்மத அடிப்படையில் தொகுக்க பட்டிருக்கிறது நண்பர் தேனீ அவர்களே. முதல் முழு கடவுளாக விநாயகரை கொண்ட கணாபதியம், இரண்டாம் முழு கடவுளாக முருகனை கொண்ட கௌமாரம், மூன்றாம் முழு கடவுளாக சக்தியை கொண்ட சாக்தகம், நான்காம் முழு கடவுளாக சிவனை கொண்ட சைவம், ஐந்தாம் முழு கடவுளாக மகாவிஷ்ணுவை கொண்ட வைஷ்ணவம் , ஆறாம் முழு கடவுளாக சூரியனை கொண்ட சௌரம். இதில் அத்வைத, துவைத, விஷிடாதத்வைத கோட்பாடுகள் எல்லா கடவுள் வழிப்பாடிலும் பயன் படுத்தும் வகையில் உள்ளது. முதல் வேதமான ரிக், இந்த ஷன்மத வழியை ஏற்று, ஆறு கடவுள்களை தேவர்களாக புஜிக்குது. இரண்டாம் வேதமான யஜுர் , சிவனுக்கு சுக்கல யஜுர் வேதமாகவும், விஷ்ணுவுக்கு கிருஷ்ணா யஜுர் வேதமாகவும், ஒருவரை ஒருவர் உயர்த்தாமலும், ஒருவரை ஒருவர் தாழ்த்தாமலும், அழகாக பகுத்தளிக்க பட்டிருக்கிறது. முன்றாவது வேதமான சாம வேதத்தில், இசைக்கு மகாவிஷ்ணுவையையும், நடனத்திற்காக சிவபெருமானையும் அழகாகவும் இலகுவாகவும் பிரித்திருக்கிறார்கள்! நான்காவது வேதத்தில் (அதர்வண / பிரம வேதம்) சக்தியின் அவதாரமான காளியை வேதத்தின் தலைமை கடவுளாக விவரித்து , மற்ற கடவுள்களை உப தேவதைகளாக விவரித்துள்ளார்கள். உப வேதங்களும் (ஆயுர் வேதம், தனுர் வேதம், அர்த்த சாஸ்திரம், கந்தர்வ சாஸ்திரம்) அப்படியே. இவை அனைத்தும், இந்தியாவின் வெவ்வேறு பகுதிகளில், வெவ்வேறு மொழிகளில் தோன்றினவை. ஆனால் ஷன்மத அடிபடையில் தோன்றின. சிவபெருமான் தமிழை உருவாக்கினார் (‘அக்கன்ன’ சிவபெருமானின் மூன்று கண்களை குறிக்கும்), விஷ்ணு பெருமான் சமஸ்கிருதத்தை உருவாக்கினார். இந்த ஷன்மத கடவுள்களை, அன்னை ஆதிபராசக்தி தோற்று வித்தார் என்று ஸ்ரீ தேவி புராணத்தில் தெளிவாக குறிப்பிட பட்டுள்ளது. சிவா புராணத்தில், சிவா-சக்தி திருமணத்தை, பெருமாள், சக்தியின் அண்ணன் சாணத்தில் இருந்து நடத்தினார் என்று தெள்ள தெளிவாக குறிப்பிட பட்டுள்ளது. குடும்பம் ஒரு கோயில் என்றும், அன்னை தந்தையை தெய்வமாக மதிக்கும் ஒரு வரைமுறையையும் , அவர்களுக்கு இரண்டு ஆண் குழந்தைகள் இருபதாகவும் சித்தரிக்கும் ஒரு கலாசார வம்சாவளியையும், நீங்கள் கூரும் சைவ சித்தந்ததிர்க்காக எல்லா வட்ரையையும் உடைக்க வேண்டுமா தேனீ அவர்களே ? சைவசித்தாந்தம், அத்வைதம், சுத்த அத்வைதம், காஷ்மீரி சைவிசம் (மாமிசம் உண்பார்கள் ), என்று நிறைய பிரிவுகள் சிவனை கொண்ட சைவத்தில் உள்ளது. ஆகையால் தமிழர்களை கொண்ட சைவசித்தாந்தத்தை நான் முழுமையா தனி பிரிவாகா ஆதரிக்க வில்லை. காரணம் அது தனித்து இருக்கும் பொழுது, அதற்கு மற்ற மதத்துடன் அறிவியில் புர்வமாக போட்டியிடும் தன்மை குறைகிறது. ஆனால் அதே தமிழர்களை கொண்ட சைவசித்தாந்தத்தை, இந்து மதத்தின் உள்ளே வைத்து பார்க்கும் பொழுது, இன்னும் ஒரு உறுதியான மார்க்கம் கிடைக்கும் இந்த இந்து மதத்திற்கு. ஆதி சங்கரர் (சைவ மார்க்கத்தை இமயம் முதல் குமரி வரை பரப்பியவர்), காசியை சுழ்த்திருந்த சாபம் நீங்க, காசியை மறுமலர்ச்சி செய்த பொழுது, கங்கையில் இறக்கும் ஆத்மாக்களுக்கு, ‘ராம நாமம் காதில் ஓத பட்டு முக்தி தரப்படும்’ என்று ஒரு ஐதிகத்தை நிலை நிறுத்தினார். அதே போல் ராவணனை கொன்று விட்டு தமிழ் நாட்டை அடைந்த ராமன், பிரமஹத்தி தோஷம் நீங்க , ஈஸ்வரனை பூஜித்த தளம்தான் ராமேஸ்வரம். வைஷ்ணவ மார்க்கத்தில் வந்த ராமன் , சைவ மத கடவுளான சிவனை விட்டு கொடுக்க வில்லை . சைவ மார்க்கத்தில் வந்த ஆதி சங்கரர் , வைஷ்ணவ மத கடவுளின் அவதாரமான ராமனை விட்டு கொடுக்க வில்லை. ஆனால் தோழர்களே , இந்த சைவசித்தாந்த அன்பர்கள், தத்துவ நிலையில் குன்றி இருந்தாலும் , இந்து மதுதுடன் ஒத்து போகமாட்டேன் என்று அடம் பிடிப்பது சரியா ? தேனீ அவர்களே, தயவு செய்து , ‘சிறைவிடந்தாதி’ என்ற காவியத்தை தேடி படிக்கவும். அதில் ஒரு கௌமார மெய்யன்பர், முருகனை தவிர மற்ற கடவுள்களை பாட மாட்டேன் என்றிர்ருபார். அவர் மனமாட்றமே, அத காவியத்தின் முடிவு. தேடி படிக்கவும்!
திலிப் அவர்களே தங்களின் கருத்துக்களுக்கு இன்று இரவு மறுமொழி எழுதுவோம்.
தோழர்கள் தேனீ மற்றும் திலிப் இருவரின் வாதங்களை கணித்து வருகிறேன் நல்ல விவாதங்கள் தமிழுக்கும் தமிழர்களுக்கும் உதவ வேண்டும் ..மற்றவர்கள் அமைதி காக்கவும். தமிழர்கள் இந்துவா ? சைவ சித்தாந்த சமயமா ? என்பதில் களமிடுவோம். மொழி இல்லாத மாற்று இனத்தான் சமயம் அல்லது மதம் அதன் போதனைகள் இக்களதிற்கு நேர விரயம். தமிழில் எழுதும் அன்பர்கள் தமிழர் இனம் ,மொழி ,கலை கலாசார ,பண்பாட்டு உரிமைகளை பெற போராடுவோம்.நன்றி . இனிய நினைவில் , வணக்க்ம.
தேனீ > ஒரு நூலை வைத்துகொண்டு முதல் பக்கம் தொடங்கி இறுதி பக்கம் வரை மேய்ந்து மீண்டும் முதல் பக்கம் ஆரம்பித்து > இப்படி வந்து போய் -வந்த விரக்தியால்தான் பல்வேறுபட்ட நூல்கள் > பல மந்திரங்கள் > பன்முறை சடங்கு காரியங்கள் > பல்லாயிரம் ஆன்மீக ஞானிகளின் தத்துவங்கள் > ஷன்மத நோக்கு போன்றவற்றை கண்டு மகிழ்ந்து இன்றும்” ஹரே ராமா ஹரே கிருஷ்ணா ” போன்ற இயக்கங்களில் ஐரோப்பியரும் ;இஸ்லாமியரும் இணைந்து வருகின்றனர் …உங்கள் சைவ சித்தாந்த நோக்கு என்ற குறுகிய வட்டத்தில் இந்து மதத்தை அடைப்பானேன் ??நீங்கள் சொல்வது போல – பொருள் அறிந்துதான் மந்திரங்கள் ஓதவேண்டும் என்று பிடிவாதம் பிடித்தால் > எழுதிவைத்து கொள்ளுங்கள் -மீண்டும் சொல்கின்றேன் > உங்களையும் சேர்த்து 8 -10 பேர் தேறலாம்…உங்கள் நோக்கமும் சரி அதை கடைபிடிக்கும் வழிவகையும் சரி > இரண்டுமே நேரடி பயன்தராது என்பது ஊர் அறிந்த உண்மை …
inthuDharman தங்கள் கூற்று தவறானது! ஊர் அறிந்த உண்மையும் தாங்கள் அறிந்ததும் வெவ்வேறு ஐயா.
முப்பத்து முக்கோடி தேவர்கள் பிறவி கடலை வாசித்து கடந்து சென்று விட்டனர். சிவம் இல்லையேல் சவம் என அடியேன் சொல்ல தேவை இல்லை, முக்தி நிலையை அடைய பரம்பொருளின் திருவடியை அடைய வேண்டும் ஐயா! இவை யாவற்றையும் உணர முதலில் சத்குருவின் துணை வேண்டும்! இதுவே சித்தர்கள் வழி! சித்தன் போக்கு சிவன் போக்கு என்று தாங்களும் கேட்டு இருப்பீர்! நான் இங்கு விவாதம் செய்ய வரவில்லை ஐயா! தங்கள் கடைசி வரியில் கூறிய 8 – 10 பேர் எனும் கூற்று முற்றிலும் தவறானது.
சித்தன் ஐயா > உங்களின் மாண்பினை வரவேற்கிறேன்.. எவர் உயர்ந்த தெய்வம் என அறிதியிட்டு சொல்ல எல்லோரும் முனையும் வேளை அவரவர்க்கு அவர்தம் தெய்வமே பெரிதாக தோன்றும்..சிவம் தான் பெரிது என்றால் தாராளமாக சொல்லிவிட்டு போங்கள் ! நானும் மனதார ஏற்கிறேன்..சிவனை >:பசுபதியாய் நேப்பளிகள் ஏற்கவில்லையா ? மகாதேவ் என்று வடமாநிலமக்கள் ஏற்கவில்லையா ?? அங்கெல்லாம் தூய தமிழ் வழிபாடுதான் நடக்கிறதா ??என் ஆதங்கம் அதுவல்ல > அதை உயர்த்தி > பிற சமய பிரிவு தெய்வங்களை கீழாக நினைத்து ஆணவத்தோடு விமர்சனம் செய்வது எதற்க்காக ??
சித்தன் ஐயா > பொருள் அறிந்து பிறகுதான் தமிழ் திருமுறைகள் ஓதப்பட வேண்டும் > அவர்கள்தாம் முழு சைவ மதவாதிகளாக கருதப்படுவார்கள் என்பதுபோல தொனியில் சிலர் இட்ட கூச்சலால் திருமுறை பாட தமிழ் படிக்காத 50-60 வயதுக்கு மேற்பட்டவர்கள் மீண்டும் தமிழ் படித்து ; அதனை பொருள் அறிந்து ..நடக்கிற காரியமா ?? இது அவர்களுக்கும் இறைவனுக்கும் இடையே உள்ள உணர்ச்சி பிழம்பான நம்பிக்கை ஒப்பந்தம் ; இங்கே பொருளைவிட அருளே முக்கியமானது ?முதலில் தமிழ் தெரியாதவரை மனமுருக பாட வைப்போம் > காலபோக்கில் அவர்களுக்கு பொருள் உணர்த்துவோம் > என்ன குறைந்துவிட போகிறது ? முதலில் தமிழை படி > பொருள் விளங்கு > பிறகு திருமுறை பாடி பரிசை வாங்கு என்றால் ..சுத்த மூடத்தனம் இல்லையா ?? அதையே கண்டிக்கிறோம் !!
இந்துதர்மன் அவர்களே, உங்கள் வாதங்களை நான் முழு மனதுடன் ஏற்று கொள்கிறேன். எனக்கு பிடித்திருக்கிறது உங்களின் விளக்கம். கடவுளை மொழியால் கட்டி போடக்குடாது என்பதில் நீங்கள் தெளிவாக உள்ளீர்கள். நன்றி, வாழ்த்துக்கள் !
திலிப் உங்கள் கருத்தை முழுமையாக ஏற்கிறேன் . நீங்கள் சொல்லும் கருத்துக்களை நானும் புத்தகத்தில் படிதிருகின்றேன் . என்ன செய்வது உண்மை மருந்தை போன்ற கசப்பானது அதை விழுங்க கஷ்டமே.
இந்து மதம் என்பது ஆங்கிலேயன் இந்தியாவில் பின்பற்றப் பட்டு வந்த பல்வேறு மதங்களுக்கு ஒரு தனிப் பெயர் இல்லாத காரணத்தால் சிந்து, இந்துவாக மாறி கொடுத்த காரணப் பெயர் என்பதை பலரும் அறியாமல் சொல்வதனால் வந்த தலை விதியே தமிழரும் இன்று அவர்தம் உண்மைச் சமயத்தையும் அதன் தனித்துவம் வாய்ந்த தத்துவங்களையும் அறியாமல் போனதர்க்குக் காரணம். இதனை சிறப்பாக விளக்கிய ஓர் ஆங்கில கட்டுரையை செம்பருத்தி வாசகர்கள் அனைவரும் படிப்பதற்காக கீழே அதன் வலைச் சுட்டியை குறிப்பிடுள்ளேன் படித்து தெளிவீர்களா:
http://saivaworld.org/pageview.cgi?iD=904&cat=9
தொடரும்.
திலிப் அவர்களின் கருத்துச் சாரம், இந்து மதம் எனப்படும் வைதீக மதம் இந்தியாவிலுள்ள அனைத்துச் சமயங்களையும் ஏற்றுக் கொண்டது என்பது. இதனை அவரால் சமய தத்துவ நெறிகளின் அடிப்படையில் நிறுவ முடியாது என்பதனை அறிந்து புராணக் கதைகளுக்குத் தாண்டி விட்டார் என்பது நிதர்சன உண்மை. இன்று இந்து மதம் என்று சொல்லும் வழக்கு கடந்த ஒரு 400 ஆண்டுகள் வாக்கில் இருந்துதான் இந்தியாவில் உபயோகிக்கப் பட்டு வருகின்றது. ஆதி சங்கரர் அறுவகைச் சமயங்களை வகைபடுத்தியது கி.பி. 7-ம் நூற்றாண்டுக்குப் பிறகே. ஆரியரின் வேதமோ சுயம்பு, அது தோன்றிய காலமோ அறிய இயலாது என்பது ஆரியர்களின் நம்பிக்கை. இப்ப திலிப் சொல்லும் இந்து மதம் இந்தியாவில் உள்ள அனைத்து மதங்களையும் ஏற்றுக் கொண்டது உண்மையானால், இந்த அறுவகைச் சமயங்களின் குறிப்புகளும் ஆரிய வேத்தத்தில் இருக்க வேண்டுமே!. ஆரியர்களின் 4 வேதங்களாகிய இருக்கு, யசூர், சாம, அதர்வண வேதங்களில்,கௌமாரமும், காணபத்தியமும் எங்கே ஏற்றுக் கொள்ளப் பட்டது என்ற குறிப்புக்களை திலிப்பாலும் கொடுக்க முடியாது அவருக்கு ஒற்றி சங்கு ஊதிய இந்து தருமராலும் கொடுக்க முடியாது. பிறராலும் கொடுக்க முடியாது. காரணம் ஆரிய வேதங்களில் கௌமாரத்திர்க்கும், காணபத்தியத்திர்க்கும் இடமில்லை. ஆரியர்கள் பசுக்களையும் மற்ற வளர்ப்பு பிராணிகளையும் அவர்தம் வாழ்வியலின் அடிப்படையாக கொண்டு வாழ்ந்த காலத்தில் முருக வழிபாட்டையும், பிள்ளையார் வழிபாட்டையும் அவர்கள் கண்டிலர். முருக வழிபாடு தமிழர்களின் மரபு நெறிச் சமயமாக வளர்ந்ததை உணர்த்துவதே திருமுருகாறுப் படை. இது தமிழர்களிடையே முருக வழிப்பாடு இருந்தற்கான ஆதாரப் பூர்வமான நூல். இந்நூல் நக்கீரர் எனும் முருக பக்தர் ஒருவரால் கி.பி. 3-ம் நூற்றாண்டில் இயற்றப் பட்டது. தமிழர்களிடையே இருந்த முருக தெய்வ வழிப்பாட்டை உண்மை நிலையில் எடுத்துச் சொல்லுவது இந்நூலே அன்றி அதன் பிறகு ஆரியர்களால் படைக்கப் பட்டு கச்சியப்ப முனிவரால் தமிழில் மொழி பெயர்க்கப் பட்ட கந்த புராணம் அல்ல. இப்ப திலிப் சொன்ன தமிழரின் தெய்வமான முருகரை ஆரியத்துக்கு நாம் தாரை வார்த்துக் கொடுத்து விட்டோம் என்ற கருத்து, பிழை என்பதனை அனைவரும் அறிய வேண்டும். தொடரும்.
வேதத்தில் கூறும் சிவ பெருமானை, மும்மூர்த்திகளில் ஒருவராக உருத்திரன் எனும் அழிக்கும் கடவுலராகவே உணத்தப்பட்டுள்ளது. இது ஆரியரின் தத்துவ நூல்களாகிய வேதாந்தத்தில் பிரகிருதி மாயையில் தோன்றிய 24 ஆன்ம தத்துவங்களை அதித்திட்டு செயல்படுத்தும் தேவர்களில் ஒருவராகவே உணர்த்தப் பட்டுள்ளது. சைவம் அதுதன் தத்துவ நெறியில் பிரகிருதி மாயைக்கும் மேலாக இருக்கும் சுத்த மாயையில் சிவ பெருமான் சிவ தத்துவத்தில் நின்று பிரகிருதி மாயையில் இருக்கும் பிரமா, திருமால், உருத்திரன் ஆகியோருக்கு தனது அதிகாரத்தை கொடுத்து (அதிதிட்டு) படைத்தல், காத்தல், அழித்தல் எனும் தனது ஐந்தொழில்களில் மூன்றை அவர்கள் வழி செயல்படுத்துவார். சைவம் தனது ஆன்ம தத்துவங்களாக ஆரியத்தை விட மேலாக 36 தத்துவங்களைக் கொண்டுள்ளது. இந்த தத்துவ நெறிகள் கௌமாரத்திலும், காணபத்தியத்திலும் இல்லை என்பதனையும் அனைவரும் அறிய வேண்டும் அப்பொழுதான் சுத்த சைவத்தின் உயரிய இறை தன்மையை நம் தமிழர் அனைவரும் அறிய முடியும். இதனை அறியாது, திலிப் அவர்கள் புராணக் கதைகளுக்குத் திரும்பி, அம்மா, அப்பா, இரண்டு மகன்கள் என்று அம்மா, அப்பா விளையாட்டுதான் நம் சமயம் என்று கூறுவது கேள்வி ஞானத்தைக் கொண்டு எழுதும் கருத்தாகும். இது ஏட்டுச் சுரைக்காய். கறிக்கு உதவாது. இத்தகைய புராணக் கதைகளை மட்டுமே நம்பிக் கொண்டு நம் சமயங்களை வளர்த்ததால்தான் இன்று நம் சமய நெறிகள் தரம் கெட்டு, நம் தெய்வ வழிபாட்டினை பிறரும் நகைக்கும் அளவிற்கு கொண்டு வந்துள்ளோம். அதற்குச் சிறந்த சான்று இக்கட்டுரைக்கு தலைப்பாய் அமைந்த சனி பெயர்ச்சியும், நவகிரக வழிபாடும் ஆகும். சமய நெறிகளை அறியாமல் ‘வெறும் வெங்காய பக்தி’ இன்று தமிழர்களை எங்கே கொண்டு வந்து விட்டுள்ளதைப் பாரும். முழுமையாக எழுதினால் நாறும். தொடரும். .
புராணக் கதைகளைக் கொண்டு திலிப் அவர்கள் அவர்தம் வாதத்தை எடுத்து உரைத்ததும் எமக்கு சாதகமாகவே அமைந்துள்ளது. புராணக் கதைகளில் ஒன்று பிள்ளையார் சிவன் சக்தியை வலம் வந்து, இவுலகத்தையே இரட்சித்துக் காக்கும் அம்மை அப்பரை வணங்கி தானே பழத்தை வாங்கிக் கொண்டாரல்லவா, அதனால், நாம் அறியப் பெற்றது,. சிவன் என்ற குனியும் (பொருளும்), அவரை விட்டு என்றும் பிரியாத அவர்தன் குணத்தை திருவருள் வடிவாக கொண்டு வரும் சத்தியுமே நம் உயிருக்கு வழிகாட்டி.. பிறவாக் கடல் நீந்தி முத்தி பேரின்பத்தை அளிக்கும் பரம்பொருள் என்ற தத்துவத்தை உணர்த்தும் புராணக் கதைக்கு அம்மா, அப்பா விளையாட்டுத் தத்துவத்தை சொல்வோர்களை நம்பியா நமது தமிழர்கள் செல்வது?. இவர்கள் நம்மைத் திக்குத் தெரியாத காட்டிர்க்குக் கொண்டுச் செல்ல வல்லவர்கள் என்பதனை அறிந்து, அறிவார்ந்த தமிழர்கள் அவர்தம் சமய நெறிகளை முறையே கற்று சரியான பக்தி நெறியில் நிற்க வேண்டும் என்பதே எமது அவா. அதனால்தான் பொருள் அறிந்து நம் சமயத்தை போற்றுவோம் என்பது. இதுவே நமது சமய வழிகாட்டியாகக் கொண்டால், நம் தமிழரின் சமயம் சிறந்தோங்கும் என்பதில் ஐயமில்லை. இல்லையேல் இந்து மதம் என்று சொல்லிக்கொண்டு பண்டார் பாரு கோவிலில் உயிர்பலி கொடுத்து வணங்கும் முறையை இன்னும் 2,000 ஆண்டுகளுக்கு நாம் தொடர்ந்து செய்துக் கொண்டிருந்தால், ஆரியர்கள் அது தவறு என்று நமக்கு வழிகாட்டப் போவதில்லை. காரணம் தமிழர்கள் பரம்பொருள் ஒன்றேதான் அது சிவமே என்று உணர்ந்து விட்டால் ஆரியர்கள் அவர்தம் மத பரப்புதலில் தோற்று விடுவார்கள். அந்த பயமே, நம்மை அவர்கள் இன்றும் பல தெய்வ வழிப்பாடுகளில் தொடர்ந்து நிற்க ஆசிர்வதிப்பது என்று திலிப், இந்து தருமர் இன்னும் பலரும் அறியவில்லை. தொடரும். .
தமிழர் தொன்றுதொட்டே சிறந்த மெய்யறிவாளர்களாக வாழ்ந்தவர்கள். உலக ஜீவராசிகள் அனைத்திற்கும் பரம்பொருள் ஒன்றே என்று அறிந்தவர்கள். இது ஆரிய வேதத்தில் குறிக்கப் படும் “பிரம்மம்” ஒன்றே பரம்பொருள் என்ற தத்துவத்திற்கு நிகரானது. இதனை உணர்த்துவதே சிவஞான சித்தியாரின் கீழ்காணும் பாடல். மெய்கண்ட சாத்திரங்களில் வழி நூலான சிவஞான சித்தியாரில் அருள்நந்தி சித்தியார் எனும் சிவ ஞானியால் விளக்கப் பெற்றது.
“யாதொரு தெய்வம் கொண்டீர் அத்தெய்வம் ஆகி, ஆங்கே
மாதொரு பாகனார்தாம் வருவர் மற்று அத்தெய்வங்கள்
வேதனைப் படும் இறக்கும் பிறக்கும் மேல்வினையும் செய்யும்
ஆதலின் இவை இலாதான் அறிந்து அருள் செய்வன் அன்றே.”
இதனால் நாம் அறியப்படுவது, நாம் எவ்வொரு தெய்வத்தை வணங்கினாலும் ஆங்கே சக்தியை தனதுள் கொண்டவனாகிய சிவபெருமானே வந்து அருள் புரிவார் என்பதாம். இதைச் சொன்னவர் ஒரு சிவ ஞானி. திலிப்போ அல்லது இந்து தருமரோ அல்ல. அந்த ஞானி சொன்னது பொய்யா?. இங்கே, அஞ்ஞானிகள் முருகன் ஒரு பரம்பொருள், பிள்ளையார் ஒரு பரம்பொருள், சக்தி ஒரு பரம்பொருள், சிவன் ஒரு பரம்பொருள், விஷ்ணு ஒரு பரம்பொருள் என்று கூறி அனைவரையும் பிரித்தாளும் அறியாமையை என்னவென்று சொல்வேன்!. சிவ, சிவ. இப்பொழுது இந்து மதம் என்ற வைதீக மதம் நம்மை பிரித்தாளுகின்றதா இல்லை நம்மை சேர்த்து வைக்கின்றதா?. சொல்வீர்களா அஞ்ஞானிகளே?. நாளை தொடரும்.
திரு தேனீ அவர்களே ,தங்களுடைய சைவ சித்தாந்த உறுதியான மனபோகினையும், வழுவாத ஓர் இறை கோட்ப்படினை கொள்கையாகக்கொண்ட தங்களுக்கு என் முதல்கண் வணக்கம் தொடருங்கள் உங்கள் வாதத்தையும், விவாதத்தையும் எல்லாம் வல்ல பரம்பொருள் என்றென்றும் துணை நிற்பார். 115. யாதொரு தெய்வங் கொண்டீ ரத்தெய்வ மாகி யாங்கே மாதொரு பாகனார் தாம் வருவர் மற்றத் தெய்வங்கள் வேதனைப் படுமிறக்கும் பிறக்கு மேல் வினயுஞ்ச்செய்யும் ஆதலா னிவை இலாதா னறிந்த ருள் செய்வனன்றே.. .
தேனீ அவர்கள் ஷன்மார்க்க நிலைகளில் குழம்பி இருக்கிறார் என்று எனக்கு தோன்றுகிறது. கருத்துக்கு வருவோம்: வேதங்களுக்கும் உபநிஷத்களுக்கும் நெருங்கிய நேரடி தொடர்பு உண்டு! ஆதி சங்கரரால் வேதங்களின் தொகுப்பு முழுமை அடைந்ததும், 108 உபநிஷத்தின் (மூல உபநிஷத் 10, பொது உபநிஷத் 27, சைவ உபநிஷத் 13, சாக்த உபநிஷத் 9, வைஷ்ணவ உபநிஷத் 14, சன்யாச உபநிஷத் 16, யோகா உபநிஷத் 19 ) தனித்த நிலை என்ன என்ற கேள்வி எழுந்த காலம் உண்டு. காரணம் ஆதியில் மனிதன் பஞ்ச பூதங்களை வணங்கிய காலத்தில் இயட்ற பட்டதுதான் இந்த உபநிஷத்துகள். இதில் நேரடியாக கௌமார அல்லது கணாபதிய உபநிஷத் என்று எதுவும் இல்லை காரணம் இந்த இரு கடவுளின் குழந்தைகளும் என்றுமே இல்லாமல் இல்லை என்ற பூரனதில் இருந்து நேரடியாக வந்தவர்கள் அல்லர்; பிரம்மா, விஷ்ணு, மகேஸ்வரர் போல. முருக பெருமானுக்கும் விநாயக பெருமானுக்கும் தந்தை-தாய் உள்ளார்கள்; பிறந்த திகதி உள்ளது. ஆகையால் நேரடி பூரணத்தில் இருந்து வந்தவர்கள் அல்ல இந்த இருவர். எனவே தான் குறிபிட்ட எந்த ஒரு உபநிஷத்தும் இவர்களுக்கு (முருக பெருமானுக்கும் விநாயக பெருமானுக்கும்) நேரடியாக இயட்ற பட வில்லை ! ஆனால் ஷன்மத தொகுபிற்கு பிறகு , இந்த இரு கடவுள்களுக்கும் எல்ல இதிகாசங்களிலும் இடம் அளிக்க பட்டத்தை பிரத்யேகமாக குறிப்பிட பட்டுள்ளது. (உதார்ணதிற்கு சுப்ரமணிய (முருகன்) கடவுள், அம்பா என்ற காசி நாட்டு இளவரசிக்கு, பீஷ்மரை கொல்ல ஒரு ஜப மாலையை தந்தார். குருஷேத்திர போரில், சிகண்டி அந்த மாலையுடனே போர்களத்திற்கு வந்தார். அந்த மாலை இல்லை என்றால் பீஷ்மரை சாய்த்திருக்க முடியாது, பஞ்ச பாண்டவர்களுக்கும் வெற்றி சுலபத்தில் கிடைத்திருக்காது) (அதே போன்று ராமாயண போரில் லக்ஷ்மணனை நோக்கி வந்த ஒரு விதியை மீறிய பிரமாஸ்திரத்தை, சுப்ரமணிய கடவுள் வளைத்து, ஒரு பெரிய மலையில் செலுத்தினார். இதை துளசி தாஸ் இந்தியில் எழுதிய ராமாயணத்தில் விரிவாக குறிபிடுகிறார்.) இங்கே என்ன பிரச்னை என்றால், தமிழர்கள் முருகனுக்கும் விநாயகருக்கும் , மும்மூர்திகலுக்கான அங்கிகாரம் கேற்பதுதான். அதிலும் இந்த தேனீ அவர்கள் என்னையும் இந்துதர்மரையும் வசை பாடுவதில் அந்த அளவை குறைபதே இல்லை. எது எப்படியாயினும் இன்று இந்து தர்மம் சனாதன தருமமாக மாறி, பல வேதாந்த அமைப்புகளை கொண்டுள்ளது. இந்த ஒரு அமைப்பு , உலகளாவிய நிலையில் தன்னை ஒரு மதமாக விளக்கி, பல மார்க்கங்களை காட்டுகின்றது. சைவசித்தாந்தத்திற்கு வருவதற்கு முன், 0010 AD , வைதீக மதத்தை எதிர்த்தவர்கள்தான் சமணர்கள். அதன் விளைவு, ஒரு புதிய மார்க்கம் ‘ஜைனிசம்’. இவர்களின் கோட்பாடுகள்: அத்வைதம், தியானம், அஹிம்ச, சத்யம் அல்லது போலி இன்மை, சைவம்-வேர் தாவரங்கள் அன்றி உண்பது. இபொழுது ஜைநிசத்தை விட , சைவசித்தாந்தம் என்ன ஒரு மாறு பட்ட விளிம்பை தந்து விட போகிறது ? இந்து மதத்திற்குள் இருக்கும் ஒரு மார்க்கம்தான் சைவசித்தாந்தம். சித்தர் பாடல்கள்தான் வழிகாட்டி என்றால் இது இன்னும் ஒரு புது விதமான மார்க்கம்மாகதான் இருக்குமே ஒழிய, கடவுளை அடைய வழிகாட்டாது! 1706 AD , சிக்ஹிசம் (SIKHISM), இந்து மதத்தில் இருந்து விலகி தனி மார்க்கமாக மாறியது. அதன் பாதை ஒரு குறிபிட்ட புத்தகத்தில் மட்டி கொண்டு, 10 ஆன்மீக தலைவர்களின் வார்த்தைக்குள் சிக்கி கொண்டது. அதன் வெற்றி என்ன என்றால் ? கேள்விக்குறிதான் ! இபொழுது சொல்லுங்கள் யார் பிரித்தாளும் கொள்கையை யார் கையாளுகிறார்கள் ? மஹா விஷ்ணுவை தாழ்த்தி சிவா பெருமானை மட்டும் வாழ்த்துங்கள் என்றால், இருவருக்கும் பிறந்த சுவாமி அய்யபனை எங்கே வைப்பது ? உண்மையிலே தேனீ அவர்களே உங்களுக்கு வைதீக மத உட்பிரிவுகள் தெரியுமா ? தெரியாமலே ஒதுக்குவதுதான் மத தலைவர்களின் வேலை. நீங்கள் எப்படி ?
திலிப், தாங்கள் சமயத்தில் பாலர் பள்ளியில் படித்துக் கொண்டிருக்கின்றீர்கள் போலிருக்கு!. (1) ஆதி சங்கரர் (சைவ மார்க்கத்தை இமயம் முதல் குமரி வரை பரப்பியவர்) என்று முதலில் எழுதினீர். அதற்கு பதில் சொல்வதற்குள் (2) ஆதி சங்கரரால் வேதங்களின் தொகுப்பு முழுமை அடைந்ததும்? என்று இன்று எழுதுகின்றீர்கள். என்னய்யா இப்படி போட்டு குழப்புகின்றீர்கள்!. ஆதி சங்கரர் ஏகான்மைவாதத்தை நிறுவி காஞ்சி மடத்தை நிறுவினார் என்பதே உண்மை. அவர் இமயம் முதல் குமரி வரை சைவத்தை பரப்பினாரா? சாக்தத்தை பரப்பினாரா?. காஞ்சி பீடாதிபதிகள் இன்றும் சாக்தத்தை முன்னிருத்துபவர்களே சைவத்தை அல்ல. அதனாலேதான் காஞ்சி ஏகம்பரீஸ்வர் ஆலயம் இன்று காஞ்சி காமாட்ச்சியம்மன் ஆலயமாக மாறியது. சங்கரர் சைவத்தை பரப்பினார் என்றால் அது தங்களின் சமய அறியாமை என்று மன்னித்து விடுகின்றோம். ஆதி சங்கரரால் வேதங்களின் தொகுப்பு முழுமை அடைந்ததும் என்பதனை ஆரியர்கள் படித்தார்களேயானால் அவர்கள் எங்கே போய் முட்டிக் கொள்வார்கள் என்று தெரியவில்லை. வேதங்களை பல்வேறு காலங்களில் ஒழுங்குப் படுத்திவர்கள் வேத வியாசர்கள் (முனிவர் / அறிஞ்சர்) எனப்படுவர். இவையெல்லாம் ஆதி சங்கரரின் காலமாகிய 7-ம் நூற்றாண்டுக்கு முன்பே நடந்து முடிந்த கதைகள்.
இதர உளறல்களுக்கு இன்றிரவு பதில் எழுதுவோம். இப்பொழுது நேரமில்லை.
திலிப் தாங்கள் சொன்ன மஹா “விஷ்ணுவை தாழ்த்தி சிவா பெருமானை மட்டும் வாழ்த்துங்கள் என்றால், இருவருக்கும் பிறந்த சுவாமி அய்யபனை எங்கே வைப்பது.” ஒட்டு மொத்தமாக இந்து மதத்தை ஒரு குடும்ப காவியமாக மாற்றி விட்டீர்கள். பாவம் ஆரியர்கள் தங்களின் கருத்துக்களைப் படித்தால் மயங்கி விடுவார்கள். அதிலும் நீங்கள் சைவத்தைப் பற்றி சொன்ன வார்த்தைகள் “சைவசித்தாந்தம் என்ன ஒரு மாறு பட்ட விளிம்பை தந்து விட போகிறது ? இந்து மதத்திற்குள் இருக்கும் ஒரு மார்க்கம்தான் சைவசித்தாந்தம்” என்ற வார்த்தைகள் எம்மை வியப்பிற்குள் ஆழ்த்தியது மட்டும் அல்லாமல் வாயடைத்துப் போக வைத்து விட்டீர்கள்!. சுத்தமாக சைவ சித்தாந்தமும், சைவமும் என்னவென்பதை அறியாமலேயே உளறிக் கொட்டி விட்டீர்கள். இவ்வாறு சமயத்தில் பாலர் பள்ளி பாலகனாக இருப்பவர்களுக்கு யாம் மேலும் விளக்கங்கள் எழுதிக் கொண்டிருக்க வேண்டுமா என்று யோசிக்கின்றேன். சைவ சித்தாந்தம் படிக்க வேண்டிய ஆட்களில் நீங்கள்தான் முதல் நபராக இருக்க வேண்டும் காரணம் சமய தத்துவ நெறிகளில் தாங்கள் சொல்லும் குடும்ப காவியங்கள் வருவதில்லை. அத்தகைய காவியங்களுக்கு இடம் புராணம், மகாபாரத, இராமய இதிகாசங்கள்.
விநாயகருக்கும், முருகருக்கும் பிறந்த திகதி உள்ளது என்று எழுதியுள்ளீர்களே, பிறப்பு பத்திரம் இருக்கா என்று நான் கேட்க மற்றவர்களெல்லாம் “கொள்” என்று சிரித்து விடுவார்கள். பரம்பொருள் என்பவர் ஆதியும் அந்தமும் இல்லாதவர். பிறிதொன்றில் இருந்து தோன்றாதவர். அப்படிப் பட்ட பரம்பொருளைத்தான் சித்தாந்தம் “தன்வயத்தன்” என்று சொல்லும். தயவு செய்து விவரம் அறியாமல் முருகருக்கும், பிள்ளையாருக்கும் பிறந்த சூரா தேட பஞ்சாங்கத்தைப் புரட்டிப் பார்க்க சோதிடரிடம் போய் விடாதீர்கள். அப்புறம் முருக பக்தனான இந்து தருமர் கொதித்துப் போய் விடுவார். சமய அறிவில் இவ்வளவு கீழ் நிலையில் உள்ளவர்களுக்கு எவ்வாறு கருத்து எழுதி புரிய வைப்பது என்று யோசிக்க வேண்டியுள்ளது.
இந்து தர்மம் என்றால் என்ன?. சனாதன தர்மம் என்றால் என்ன என்று இன்றிரவிற்குள் பதில் எழுதுங்கள், திலிப்.
எந்த தர்மம் ஆக இருந்தாலும் அது பகுத்தறிவுக்கு ஒத்து தான் போகவேண்டும் இன மத கலை கலாச்சாரத்திற்கு அப்பாற்பட்ட ஒன்றாகத்தான் இருக்க வேண்டும் இல்லையேல் அது தர்மம் ஆகவே இருக்க முடியாது.
என்னை விமர்சிப்பதை விடுத்தது, உங்கள் வாதங்களை வையுங்கள் நண்பர் தேனீ அவர்களே. பாலர் பள்ளியில் படிக்கும் ஒரு மாணவனின் கேள்விக்கு கூட உங்கள் சித்தார்தங்கள் விளக்கம் தர முடியாமல் தடுமாறுகின்றன; உங்கள் பாஷையில் சொன்னால். மற்றவர்களை தப்பானாவர்கள் என்று கூறிவிட்டால், நீங்கள் சரியானவராக மாறிவிடுவிர்கள். அப்படிதானே ? ஆதி சங்கரரால் வேதங்களின் தொகுப்பு முழுமை அடைந்தது என்று தான் எழுதி உள்ளேனே தவிர, ஆதி சங்கரர் தான் வேதங்களை எழுதினர் என்று கூர வில்லை! அவருக்கு பின் வேதத்தின் தொகுப்பை யாரும் மாற்றி அமைக்க வில்லை. வேத வியாசர் உரைக்க, விநாயக பெருமான் எழுதியதாக இந்து இதிகாசங்களில் கூறபட்டிருக்கிறது. ஆதி சங்கரர் காஞ்சி காமாச்சி சந்நிதியில் ஒன்றினைந்தார்; மறுக்க வில்லை, ஆனால் அவர் அருளிய ஆனந்த லஹரி சிவனையும் (சைவம்- 40 சொலோகம்) மன்றும் சௌந்தர்யா லஹரி பார்வதியையும் (சாக்தகம்-60 சொலோகம்) குறிக்கும் (லஹரி தான் ஆதி சங்கரின் அடையாளம்-அவரே எழுதி இருந்தாலும் நீங்கள் ஒத்து கொள்ள மாட்டேன் என்பீர்கள்). ஷன்மததை ஆதரித்தாலும், ஆதி சங்கரர் சைவ மார்க்கத்தையே அதிகமாக வலியுறுத்தி உள்ளார். இதற்க்கு பரம பாதரின் கதையை படியுங்கள் காரணம் அவர் ஆதி சங்கரரின் பிரதம சீடர் (மண்டலமிச்சறரை போன்று). வைஷீக மாதத்தில், விஷக நட்சத்ரத்தில் முருகன் பிறந்தார் என்று இருக்கிறது. சிவா புரானதையையும், கந்த புரானதையையும் ஒரினைந்து தேடினால் முருகனின் பிறப்பு ரகசியம் புலப்படும். அப்படியே சிவா புரானதையையும், சக்தி புரானதையையும் ஒரினைந்து தேடினால் விநாயகரின் பிறப்பு ரகசியம் புலப்படும். Indian institute of science சமீபத்தில் குருஷேத்ர போர் நடந்த திகதியை கணித்திருக்கிறார்கள். ஆனால் அவை நமது தேடல்ளல்ல. நான்காம் வேதமான அதர்வன வேதம் இன்னமுன் முடிக்கப்படாமலே, புதுமையை ஆதரிக்கிறது. இந்த வேதத்தில் ஆவிகளுடனான நடவடிக்கைகளை விளக்க பட்டுள்ளது. எனவே தான் இந்த நான்காவது வேதம் முடிவில்லாதது. இதில் ஆரியர்களுக்கு வருத்தம் இல்லை; உங்களை தவிர. இந்து மதங்களில் சாஸ்திரிய சங்கீதமாக (1) கர்நாட்டக சங்கீதமும் (72 மேளகர்த ராகங்களும், 36 தாள லயங்களும் உள்ளன) (2) ஹிந்துஸ்தானி சங்கீதமும் (கர்நாட்டக சங்கீதத்திற்கு இணையான தாள ராகங்களை கொண்டுள்ளது) உள்ளது. சைவசித்தார்தங்களில் இசையை எப்படி விளக்குவீர்கள் என்று எழுத முடியுமா நண்பர் தேனீ அவர்களே ? இந்து தர்மங்கள் 14. அதில் ஒன்றுதான் சனாதன தர்மம்.
தமிழ் கடவுள் முருகன் X3 என்று வானுயர பீற்றிகொள்ளும் பல தமிழர்கள் அந்த கடவுள் வந்து சொன்னாரா தைபுசதிற்கு என் தலையில் பால் உற்று அப்போது தான் நீ வேண்டியதை செய்வேன் என்று . SMC எனப்படும் இயக்கமும் மாணவர்களுக்கு முட நம்பிக்கையை விதைகிறதே தவிர ஆக்கபுர்வமான செயல் எதையும் செய்ய வில்லை . தம்பிராஜா மாணவர் படிப்பிற்காக கடவுள் மிது கைவைப்பது சரி இல்லை . மாணவர்களுக்கு தெய்வ நம்பிக்கையை ஏற்படுத்துவது அதே வேளையில் படிப்பை கொண்டு அவர்களுக்கு முட நம்பிக்கையை ஏற்படுத்துவது நல்லதல்ல . என் மகன் இந்த வருடம் 6ம் ஆண்டு என்னை தைபுச தினத்திற்கு கோவிலுக்கு அழைத்து போங்க நான் முருகனுக்கு பால் ஊற்ற வேண்டும் இல்லை என்றால் fail ஆகிவிடுவேன் என்று அடம் பிடிக்கிறான் . இதை எங்கு போய் போய் சொல்வது ?
இந்து தர்மம் என்றால் என்ன?. சனாதன தர்மம் என்றால் என்ன என்று விளக்குவேன். அமைதி காக்கவும் !
இந்து மதத்தில் கடவுள்களை ஆறு வழிகளில் காணலாம். ஆங்கிலத்தில் இந்த வழக்க முறையை THEISM என்பார்கள். HENOTHEISM என்பது ஒரே கடவுளை வணங்குதல் – வழிபடுதல்; அதே வேளையில் மற்ற தேவதைகளையும் ஏற்று கொளுத்தல் (அன்னை ஆதிபராசக்தியை மூலமாக கொண்டு மற்ற தேவதைகளையும் [பிரம்மா, விஷ்ணு, மகேஸ்வர்] ஏற்று கொள்ளுதல்). MONOTHEISM ஒரே ஒரு கடவுள் வழிபாடு. POLYTHEISM : பல்வேறு வகையான கடவுள்களையும் தேவதைகளையும் வணங்குதல் (சனாதன தர்மம் போலே). PANENTHEISM : பிரபஞ்சம் அனைத்தும் கடவுளே (இயர்கைவாதிகளின் கூற்று). PANTHEISM : மனதின் கற்பனா சக்திக்குள் விளையும் எண்ணமாகிய கடவுள் (மனமே கடவுள்). MONISM : உலகம் அணுவால் ஆனா ஒரு கடவுள் (JAIMINI யின் தத்துவம் போல). பகவத் கீதை 7:21, “உலகியல் ஆசைகளை நிறைவேற்றி கொள்வதற்காக கர்மத்தில் ஈடுபடுகின்ற (பலனை விரும்பும்) எந்தெந்த பக்தர்கள் எந்தெந்த தெய்வங்களின் (தேவதைகளின்) உருவங்களை நம்பிக்கையுடன் பூஜிக்க விரும்புகிறார்களோ, அந்த அந்த தெய்வங்களின் மீது அந்த அந்த பக்தர்களுடைய நம்பிக்கையை நானே நிலைக்க செய்கிறேன்.” – பகவான் ஸ்ரீ கிருஷ்ணர். இந்துமதத்தில் 14 தர்மங்கள் உள்ளன. அவை: நித்திய தர்மம் (சனாதன தர்மம்), சாமான்ய தர்மம் (பொது தர்மம்), விசேஷ தர்மம் (பிரத்தியேக தர்மம்), வர்ணாசார தர்மம் (ஜாதிகளின் தர்மம்), சுவத் தர்மம் (சுய தர்மம்), யுக தர்மம் (காலங்களுக்கு தேவைப்படும் தர்மம்), குல தர்மம் (குடும்ப தர்மம்), மனவ தர்மம் (ஆண் மகனின் தர்மம்), புருஷ தர்மம் (ஆண்மையின் தர்மம்), ஸ்திரி தர்மம் (பெண்மையின் தர்மம்), ராஜ தர்மம் (அரசனின் தர்மம்), பிரஜா தர்மம் (பொருட்கள் மேல் உள்ள தர்ம கோட்பாடுகள்), பவ்ரித்தி தர்மம் (உலக தர்மம்), நிவ்ரித்தி தர்மம் (ஆன்மீக தர்மம்). இதில் சனாதன கோட்பாடே, 20 ஆம் நூற்றாண்டிர்க்கு, மற்ற மதங்களுடன் சண்டை போடாமல், உண்மையை மட்டும் விளக்கி கூரும் ஒரு நித்திய வழி, என்பது எனது கருத்து !
2014 லில் முருகனின் பிறந்த நாள் ஜூன் 11.
http://www.astroved.com/vaikasi_vishakha.aspx
இந்து தருமரே, “இத்தோடு நிறுத்தினால் நல்லது” என்று சொன்னேன். கேட்கவில்லையே!. தங்களின் செய்வினையின் பயனை தற்பொழுது ‘Manokaran’ என்று கருத்து எழுதிய அன்பர் வழி, தங்கள் பரம்பரையே பக்தி மார்க்கமாக வணங்கும் முருகரை எப்படி கொச்சைப் படுத்தி எழுதுகின்றார்கள் பார்த்தீர்களா?. அந்த மனோகரனின் பரம்பரையே திலிப் 2. அவருக்கும் ஒத்தூதி பாட்டுப் பாடினீர்கள். அவரும் முருகனை “பிறந்தார்” என்று கூறி “ஆன்ம வர்க்கத்திற்கு” அவரை அறியாமலேயே தரம் தாழ்த்தி விட்டார் பாருங்கள். இதுவெல்லாம் தங்களுக்கு அவமானமாக இல்லையா?. இப்பொழுது தங்களின் நிலைமை “பிள்ளையார் பிடிக்கப் போயி குரங்கான” கதையாச்சு பார்த்தீர்களா. இதுதான் மறந்தும் சிவ நிந்தனை மனதாலும் நினைக்கக் கூடாது என்பது. தொடரும்.
சைவ சமயத்தை சற்றும் அறியாதவர் இப்படி கூறுகின்றார், “ஆகையால் தமிழர்களை கொண்ட சைவசித்தாந்தத்தை நான் முழுமையா தனி பிரிவாகா ஆதரிக்க வில்லை. காரணம் அது தனித்து இருக்கும் பொழுது, அதற்கு மற்ற மதத்துடன் அறிவியில் புர்வமாக போட்டியிடும் தன்மை குறைகிறது.”. திலிப் 2 தாங்கள் தமிழர் அல்லாதவர் என்று அடையாளம் காட்டிக் கொண்டீர். அதனால் தங்களுக்கு இந்து மதத்தை விட்டால் வேறு கதி இல்லை (“என்னை விட்டால் யாருமில்லை”) என்பது நிதர்சன உண்மை. ஆகையால், சைவம் தமிழர் கண்ட நெறி என்பதால் ஏற்க மறுக்கின்றீர். பரவாயில்லை. இருப்பினும், சைவ சித்தாந்தத்தை முழுமையாக அறிந்த பிறர் சைவத்தைப் பற்றி என்ன சொல்கின்றனர் என்பதை செம்பருத்தி வாசகர்களுக்கு தெரிவிப்பதில் நாம் மகிழ்ச்சி கொள்கின்றோம். தொடரும்.