நேற்று 18/12/ மாலை 6 -7 அஸ்ட்ரோ வானவில்லில் சனி பெயர்ச்சியில் ராசிகளுக்கு என்ன நடக்க போகிறது என்று சோதிடர் பாணியில் ஒரு மணி ஒரு மணி நேரம் பேசினார். இலக்கு தமிழர்களை நோக்கியது. என்றும் எதிலும் சோதிடம் என்ற அறியாமையால் தமிழர்கள் நிலை அந்தோ பரிதாபம். உலக அறிவியலை எப்படி வியாபரமாக்கினார்கள் வியப்புதான் மிஞ்சுகிறது !!
கடசியில் ஒரு அதற்சியான குறிப்பை தந்தார். அதாவது ராசிகளின் பலன்கள் அவரவர் பூர்வ ஜென்மம் , முந்திய பாவ புண்ணியங்கள் படி நல்லது கெட்டது நடக்கும். சனியை மட்டும் கும்பிடுங்கள் பலன் தரும் மற்ற தெய்வங்கள் , ஆஞ்சேநேயர் போன்ற தெய்வங்களின் பிரார்த்தனைகள் பரிகாரங்கள் உதவாது என்று போட்டார் ஒரு போடு!?
சனி என்பது ஒரு கிரகம். ஆனால் நம்மவர்கள் சனியன் “தைதரியம்” என்ற ஐயத்தில் ஜோதிட வியாபாரமும் .கோவில் பூஜைகளும் அறியாமையால் வியாபார சூடும் தலை தூக்கி பன்னெடுங்காலமாக ஓடுகிறது. நம்ம சமய பூசகர்கள் ஐயா முனைவர் நாகப்பன் , தர்மலிங்கம் போன்றோர்ர் ஏழரை சனி சனியன் பற்றி வாய் திறப்பதில்லை ஏன்?
“ஏழரை சனி” ஒரு விஞ்ஞானம். அறிவியல் என்ன சொல்கிறது ?
சோதிடத்தில் நம்பிக்கை உள்ளவர்கள் இப்பெயரைக் கேட்டாலே பயந்து நடுங்குகிறார்கள் அல்லது இவர்களை பயமுறுத்துவதற்காக தினசரிகள், வார இதழ்கள், சோதிடத்திற்கு மட்டுமென வெளிவரும் பத்திரிக்கைகள் உள்ளன. இவ்வாண்டு 2014 டிசம்பர் மாதம் 16ஆம் தேதி அதிகாலையில் துலாம் ராசியில் இருந்து விருச்சிக ராசிக்கு சனி இடம் பெயர இருக்கிறது. இதையொட்டி சனியால் எந்த ராசிக்கு என்ன பலன் என்றும் அதனால் வரும் விளைவுகளுக்கு பரிகாரத்தைத் தேடி காக்கையை தனது வாகனமாகக் கொண்டு திருநள்ளாரில் எழுந்தருளி இருக்கும் சனி பகவானின் நளன் குளத்தில் நீராடவும் மற்ற வகையான பரிகாரங்களை செய்யவும் ஆயத்தமாக இருக்கிறார்கள்.
இனி செய்திக்கு வருவோம் முதலில் இந்த சனிப்பெயர்ச்சி பஞ்சாங்க அடிப்படையில் ஒரே நாளில் நிகழ்கிறதா என்றால் இல்லை, திருக்கணித பஞ்சாங்கத்தின்படி நவம்பர் 2ஆம் தேதி நடந்தது. வாக்கியப் பஞ்சாங்கத்தின் படி டிசம்பர் 16 ஆம் தேதி நடக்க இருக்கிறது, . இதில் என்ன நகைச்சுவை என்றால். பஞ்சாங்கத்திலேயே துல்லியமானது திருக்கணிதப் பஞ்சாங்கம் என கூறப்படுகிறது. ஆனால் சனிப்பெயர்ச்சி மட்டும் வாக்கியப் பஞ்சாங்கத்தின்படியே கணிக்கப்பட்டு 16 ஆம் தேதி திருநள்ளாரில் சனிப்பெயர்ச்சி மிகவும் விமரிசையாக நடத்தப்பட உள்ளது. இவ்வாறு முரண்பட்ட சோதிட நம்பிக்கையின் அடிப்படையில் நடைபெறும் சனிப்பெயர்ச்சியை சற்று அறிவியல் கண்ணோட்டத்துடன் அலசுவோம்.’
ஜாதகமும் ஜோதிடமும்
ஜாதகம் என்பது ஒருவன் பிறந்த நேரதில் வானில் காணப்பட்ட மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிகள், 27 நட்சத்திரங்கள், 9 நவக்கிரகங்கள் ஆகியவற்றைக் கொண்டு பதியும் பதிவு அவ்வளவே. வானவீதியில் கோள்களின் இயக்கம் சீரான காலமுறையை (Uniform Motion) சார்ந்தது என்பதினால் ஜாதகம் என்பது நமது முன்னோர்கள் பயன்படுத்திய பிறப்பு பதிவு எனக் கொள்ளலாம். ஆனால் ஜாதகம் ஜோதிடத்தின் கருவியாக மாறும்போதுதான் சீரழிந்து புனைவுகளுக்கு ஆளாகிறது.
ஜோதிடத்தில் ராசி, நட்சத்திரங்கள் மற்றும் கோள்களுக்கு சில குணங்கள் இருப்பதாக கற்பிதம் செய்யப்படுகிறது. பொதுவாக ஜாதகமும், சோதிடமும் பழமையான பூமிக்கொள்கை (Geo System) எனப்படும் பூமியை மையமாக வைத்து கோள்கள் அனைத்தும் சுற்றி வருவதாகக் கொண்டே இன்றளவும் கணிக்கப்பட்டு வருகின்றது. இன்று அறிவியலால் நிரூபிக்கப்பட்டு உண்மையென எல்லோராலும் குறிப்பாக ஆன்மீகவாதிகளாலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட சூரியனை சுற்றி அனைத்துக் கோள்களும் இயங்குகின்றன (Solar system) என்ற அறிவியல் உண்மைக்கு எதிராக இச்சோதிட தத்துவம் உள்ளது.
கோள்கள் (நவ கிரகங்கள்)
வரிசை எண்.
ஜாதகத்தில்உள்ளவை
சூரிய மண்டலத்தில் இருப்பவை
1. ஞாயிறு
2. சந்திரன், புதன்
3. செவ்வாய், பூமி
4. புதன், செவ்வாய்
5. குரு (வியாழன்), வியாழன்
6. சுக்கிரன்(வெள்ளி), சனி
7.சனி, யுரேனஸ்
8.ராகு, நெப்டியூன்
9. கேது, புளூட்டோ
இதில் நிலையாக பேராற்றல் உள்ள நட்சத்திரமான சூரியனும், ஆற்றல் ஏதும் இல்லாமல் பூமியை சுற்றும் துணைக்கோளான சந்திரனும், கோள்களே அல்லாத ராகுவும் கேதுவும் கிரகங்களாக குறிப்பிடப்பட்டு உள்ளது. மேலும் பூமி, யுரேனஸ், நெப்டியூன் போன்ற கோள்கள் இதில் இடம் பெறவில்லை (அப்போது தொலைநோக்கிகள் இல்லை அதனால் இருந்திருக்கும்). அதைப்போலவே ராசி என்பதும் வானில் உள்ள விண்மீன்களின் வடிவங்களின் கற்பனையான தராசு (துலாம் ராசி-Libra), வில்(தனுசு ராசி-Sagittarius) போன்ற வடிவங்களேயாகும். இந்த வடிவங்களிலான விண்மீன் கூட்டங்களுக்கென தனித்தனியே குணங்களும் ஆற்றலும் உள்ளது எனவும் சோதிடம் கூறுகிறது. இவற்றையே அடிப்படையாகக் கொண்டு அவரவர்களுக்கான தினம், வாரம், மாதம், வருடம் என வாழ்நாள் முழுதும் நல்லதும் கெட்டதுமான பலன்கள் அவ்வப்போது ஜோதிடர்களால் கணிக்கப்படுகிறது.
மீனம் 12, மேஷம் 1, ரிஷபம் 2, மிதுனம் 3, கும்பம் 11,
சோதிடம் கணிக்கும் ராசிக்கட்டம்
கடகம் 4, மகரம் 10, சிம்மம் 5, தனுசு 9, விருச்சிகம் 8, துலாம் 7, கன்னி 6
வர்ணாசிரம – பாலின பாகுபாடு
மனிதர்களிடையே ஜாதி பார்ப்பது போதாது என்று கோள்களையும் வர்ணப்பாகுபாடு செய்கிறது ஜோதிடம்
வர்ணம்
கிரகங்கள்
பிராமணர்
வியாழன்(குரு), வெள்ளி
சத்திரியர்
ஞாயிறு,செவ்வாய்
வைசியர்
சந்திரன், புதன்
சூத்திரர்
சனி, ராகு, கேது
ஆக ஜோதிடத்தை ஏற்பதன் மூலம் நால்வர்ணக்கொள்கையை ஆதரிப்பதாகவே கொள்ளவேண்டும்.
பாலினம்
ராசிகள்
நட்சத்திரங்கள்
ஆண்
மேஷம்,மிதுனம்,சிம்மம், துலாம்
தனுசு,கும்பம்
8
பெண்
ரிஷபம்,கடகம்,கன்னி,விருச்சிகம்,மகரம், மீனம்
16
அலி
3
இப்படி உயிரற்ற கிரகங்களுக்கும் நட்சதிரங்களுக்கும்கூட ஜோதிடத்தில் பாலின வேறுபாடு கற்பிக்கப்பட்டு உள்ளது.
சனிப்பெயர்ச்சி
இனி பெயர்ச்சி என்றால் என்னவென்று பார்ப்போம். பொதுவாக சோதிடத்தில் குருப்பெயர்ச்சியும், சனிப்பெயர்ச்சியுமே மிகவும் பிரபலமானதாகவும் முக்கியமானதாகவும் எடுத்துக்கொள்ளப்படுகிறது. சனி, குரு மட்டுமல்லாமல் எல்லா கிரகங்களுக்கும் பெயர்ச்சி உள்ளது. அந்தந்த கிரகங்கள் பூமியை/சூரியனை சுற்றி வரும் காலத்திற்கு ஏற்ப அட்டவணையில் உள்ளவாறு ஒரு ராசியில் இருந்து இன்னொரு ராசிக்கு இடம் பெயர காலம் எடுத்துக்கொள்ளும்.
மொத்தம் உள்ள 12 ராசிகளில் கோள்கள் இடம் பெயர எடுத்துக் கொள்ளும் காலம்
கோள்களின் பெயர்
சூரியனை சுற்றிவரும் காலம்
இடம் பெயரும் காலம்
சந்திரன்
27 நாட்கள்
2 ¼ நாள்
ராகு, கேது
18 ஆண்டுகள்
1 ½ வருடம்
குரு (வியாழன்)
12 ஆண்டுகள்
ஒரு வருடம்
செவ்வாய்
18 மாதங்கள்
1 ½ மாதம்
சுக்கிரன், புதன்
ஒரு மாதம்
சூரியன்
–
ஒரு மாதம்
சனிக்கோள் சூரியனை சுற்றிவர 30 ஆண்டுகள் ஆகும். 12 ராசிகள் உள்ள சூரியவீதியில் சனி ஒவ்வொரு ராசியிலும் சுமார் 2½ ஆண்டுகள் காணப்படும். இதனைத்தான் அந்த ராசியை சனி பிடித்துள்ளதாக கூறுகிறார்கள். 2½ ஆண்டுகள் கழித்து சனி அந்த ராசியில் இருந்து விலகி அடுத்த ராசிக்கு இடம் பெயரும். இதனைத்தான் சனிப்பெயர்ச்சி என்று கூறுகிறார்கள்.
ஏழரை சனி
ஏழரை நாட்டுச் சனி என்பது சனிக்கோளானது ராசிக்கும் அந்த ராசியின் முன் வீடு ராசியின் அடுத்த வீடு ஆகிய மூன்றிலும் உள்ளதைக் குறிக்கும். சனி கிரகமானது ஒரு ராசியில் இருந்து அடுத்த ராசிக்கு செல்வதற்கு 2½ ஆண்டுகள் ஆகும் என்பதை முன்னரே கண்டோம். ராசிக்கு முன் ராசியில் 2½ ஆண்டுகள், பிறந்த ராசியில் 2½ ஆண்டுகள், அடுத்த ராசியில் 2½ ஆண்டுகள் ஆக 7½ ஆண்டுகளைத்தான் ஏழரை நாட்டுச் சனி என்பர். உதாரணமாக தற்போது சனி கன்னி ராசியில் இருந்து துலாம் ராசிக்கு இடம் பெயர உள்ளது அடுத்து 2½ ஆண்டுகள் கழித்து விருச்சிக ராசிக்கு செல்லவிருக்கிறது. சோதிடத்தின்படி துலாம் ராசிக்காரருக்கு 2½ ஆண்டுகளுக்கு முன்னரே ஏழரை சனி ஆரம்பித்துவிட்டது இன்னும் ஐந்து ஆண்டுகள் கழித்தே அவரை அது விடும். ஒருவரின் முப்பது ஆண்டுகால வழ்க்கையில் ஏழரை ஆண்டுகள் சனியின் தொல்லையில் கொடுமைக்கு ஆளாகவேண்டும் என்பது அவரின் விதி என்பதே ஜோதிடத்தின் நியதி ஆகும்.
சனிப்பலன்
நீண்ட கால வாழ்விற்கும், மரணத்திற்கும் காரணமாக இருப்பது சனி என்று சோதிடம் கூறுகிறது. வறுமை, கலகம், நோய், அவமரியாதை ஆகியவற்றின் காரணி சனியாகவே வருணிக்கப்படுகிறது. லக்னத்திற்கு 3.6,9,10,11 இடங்களில் சனி இருந்தால் குவியல் குவியலாக பணமும் பொருளும், வேலையாட்களுடன் கூடிய வாழ்வு அமையுமாம். லக்னத்திற்கு 2,4,8,12 இடத்தில் இருந்தால் துன்பமும், துயரமும், கஷ்ட நஷ்டங்களும் தொடர்கதையாய்த் தொடரும் எனக் கதை விடுகிறார்கள். இந்தியாவில் வறுமைக் கோட்டின் கீழ் 40 சதவீதத்திற்கு மேல் இருக்கிறார்கள் இவர்களின் வாழ்க்கை லக்னத்திற்கு 3,6,9,10,11 இடங்களில் சனி வராமல் இல்லை, ஆனால் நாளுக்கு நாள் வறுமைக்கோட்டிற்கு கீழ் வாழ்பவர்களின் எண்ணிக்கை கூடிக்கொண்டுதான் இருக்கிறது மறுபுறம் பெருமுதலாளிகளின் சொத்தும் பெருகிக்கொண்டுதான் இருக்கிறது. இதற்கு காரணம் சனிதான் என்று சொல்லி அதுதான் விதி விதிப்படிதான் நடக்கும் எனக்கூறி மக்களை ஏமாற்றி அவர்களின் போராட்டக் குணங்களை மழுங்கடிக்கச்செய்கிறது ஒரு கூட்டம் அதற்கு தூபம் போட ஏற்பட்டதே ஜோதிட குவியல்கள்.
சூரிய குடும்பத்தில் சனி
சனிக்கோள்
பூமியிலிருந்து தூரம்
127 கோடி கி.மீ
சூரியனிலிருந்து தூரம்
142 கோடி கி.மீ
சுற்றளவு
1,21,000 கி.மீ (பூமியைப் போல் 9 மடங்கு)
சுற்றிக்கொள்ளும் நேரம்
10½ மணி (பூமி 24 மணி)
சூரியனை சுற்றி வர காலம்
30 ஆண்டுகள் (பூமி ஒரு ஆண்டு)
குளிர் நிலை
-185oC
அடர்த்தி
தண்ணீரை விட குறைவு (தண்ணீரில் மிதக்கும்)
துணைக்கோள்கள்
31 (பூமிக்கு ஒரே ஒரு சந்திரன் மட்டும்)
சூரியனில் இருந்து உள்ள இடம்
6 (பூமி 3 ஆவது இடம்)
வடிவம்
இரண்டாவது பெரிய கிரகம் (பூமியைவிட 1000 மடங்கு பெரியது)
தன்மை
பெரும்பகுதி காற்றால் ஆனது (பூமி- நிலம், நீர், காற்றால் ஆகிய மூன்றால் ஆனது)
சனிக்கோளில் இருந்து வரும் ஒளி பூமியை வந்தடைய எடுத்துக் கொள்ளும் நேரம்
1 மணி 28 நிமிடம் (விநாடிக்கு 3,30,000 கி.மீ வேகம்)
வாயுக்கிரகமாக உள்ளதால் இதன் அடர்த்தி தண்ணீரைவிட மிகக்குறைவானது. சனியைவிட மிகப்பெரிய கடல் நம்மிடம் இருந்து அதில் சனியை தூக்கி போட்டால் சனி மூழ்காமல் மிதக்கும் என்பது ஆச்சரியமான உண்மை. இதன் காரணமாக மனிதன் அனுப்பும் செயற்கை கோள்கள் செவ்வாயிலும் சந்திரனிலும் தரை இறங்குவதைப்போல சனியில் தரை இறங்கமுடியாது. ஏனென்றால் இதற்கு உறுதியான தரைப்பரப்பு இல்லை குளிரால் ஆண்டு முழுவதும் வறண்டு கிடக்கும் இக்கோளை மிகவும் சக்தி வாய்ந்தது என்று கூசாமல் எப்படித்தான் பொய் சொல்கிறார்களோ?.
கோள்களிடம் உள்ள சக்தி
சோதிடத்தில் கிரகங்களுக்கு அளப்பறிய சக்தி உள்ளதாக சித்தரிக்கப்பட்டு உள்ளது. சனி, செவ்வாய், குரு போன்ற கிரகங்கள் மிகவும் சக்தி வாய்ந்ததாக காட்டப்பட்டுள்ளது. உண்மையில் சூரிய குடும்பத்தில் சக்தி உள்ள ஒன்று உள்ளதென்றால் அது சூரியனே ஆகும். சூரியன் மிகப்பெரிய அணுவுலையாகும். இதன் அளப்பரிய வெப்ப ஆற்றல், ஒளி ஆற்றல், காந்த ஆற்றல், ஈர்ப்பு விசை, புற ஊதாக்க்கதிவீச்சு போன்றவை மற்ற எந்த கிரகங்களுக்கும் இல்லை. உண்மையில் சூரியனுக்கு அடுத்த நிலையில் உள்ள கிரகம் பூமியே ஆகும். இதில் மனித உயிர்வாழ்க்கைக்குத் தேவையான தண்ணீரில் இருந்து, காற்று மண்டலமும் உள்ளது. வேறு எந்த கிரகமும் எவ்வளவு பெரியதாக இருந்தாலும் ஈர்ப்பு விசையைத்தவிர (அதுவும் குறிப்பிட்ட தூரத்திற்கு மட்டும்) வேறு சக்தி இல்லை. அவ்வளவு ஏன் சொந்தமாக ஓளி ஆற்றால்கூட இல்லை சூரியனிடம் இருந்து ஒளியை கடன்வாங்கி பிரதிபளிக்கக்கூடிய அளவிலேயே இவை உள்ளன. வெறும் வெற்று கிரகங்களான இவை அறிவியல் விதியான ஈர்ப்புவிசையின்படி சூரிய மண்டலத்தில் உள்ளனவே தவிர இவற்றிற்கு என எந்த சொந்த ஆற்றலும் இல்லை. இக்கிரகங்கள் பூமியில் இருந்து கோடிக்கணக்கான கி.மீ தூரத்தில் உள்ளதால் இந்த ஈர்ப்பு விசையும் பூமியை எட்டவே எட்டாது. ஆனால் சோதிடத்தில் பேராற்றல் உள்ள சூரியனும் டம்மி பீஸ்களாக செத்துப்போன எரிமலையும், வறண்டு போன ஆறுகளும், கடுங்குளிரும் கொண்ட மற்ற கிரகங்களும் சக்தி உள்ளவைப் போல் சித்தரிக்கப்பட்டு உள்ளது வேடிக்கையான ஒன்று.
கிரக நிலை மனிதனின் வாழ்க்கையை பாதிக்குமா?
1993 ஆம் ஆண்டுகளில் டெல்லியில் உள்ள சனிபகவானின் கோவிலுக்கு சனிக்கிழமைகளில் 100 முதல் 200 பேர் வந்து கொண்டிருந்தனர். ஆனால் தற்போது 1000 பேருக்கு மேல் வருவதாகக் கணக்கிட்டுள்ளனர். வந்தவர்களின் பிரச்சினைகள் தீர்ந்துள்ளதா எனக்கேட்டால், அப்படி ஒன்றும் இல்லை என்கின்றனர். பிரபலமான வானவியல் அறிவியலாளர் ஜெயாண்டி வி.நார்லிக்கர் கூறும்போது சனியைப் பற்றி பேசப்படும், சொல்லப்படும் கருத்துக்கள் அனைத்தும் தவறானது ஆகும். இதில் எந்தவித அறிவியல் உண்மையோ, செயல்பாடோ கிடையாது என்கிறார்.
உலகில் உள்ள மனிதர்களையும் ஜீவராசிகளையும் தங்களுடைய அதிகார பலத்தினால் ஆட்டிப்படைப்பவர்கள் இந்த ஒன்பது கிரகங்கள்தான் என்கிறது ஜோதிடம். இந்தியாவில் தற்போதைய மக்கள் தொகை 120 கோடி ஆகும். இவர்கள் அனைவரும் 12 ராசிக்குள்தான் வருவார்கள். அப்படி என்றால் ஒரு ராசியில் 10 கோடி பேர் உள்ளனர். இவர்களின் வாழ்க்கை நிலை ஒன்றுபோல் உள்ளதா? என்றால் இல்லை
சமுதாயத்தில் உள்ள சாதி, தீண்டாமை, ஏற்றத்தாழ்வு, வேலையின்மை, உலகமயம், தனியார் மயம், தாராள மயம் மற்றும் அரசு கடைபிடிக்கும் தவறான பொருளாதாரக் கொள்கைகள்தான் மனிதனின் வாழ்க்கையைப் பாதிக்கிறது. வறுமைக்கும் கூட இவைகள்தான் இன்றளவும் காரணமாகவுள்ளது.
அறிவியல் பார்வை
பழக்கத்தின் காரணமாக பிடிவாதமாக நமது முன்னோர்கள் நம்பி வந்த நம்பிக்கை இதுவரை தொடர்ந்து வந்துள்ளது. நம்மீது விடாப்பிடியாக உள்ள அந்த நம்பிக்கை மீது நாம் சந்தேகிக்க மறுக்கிறோம். வானவியலை நன்கு அறிந்துகொள்வதின் மூலம் நமக்கு உண்மை புலப்படும்.
உண்மையில் சனிக்கிரகத்தின் வளையமானது அதற்கு அழகைக் கூட்டுகிறது. சிறந்த ஓவியரால்கூட தீட்ட முடியாத வண்ணங்கள் அதில் உள்ளன. வேறு எந்த கிரகத்திற்கும் இல்லாத அழகும், அதிசயமும் சனிக்கிரகத்திற்கு மட்டும்தான் உண்டு.
இனி சனியன் என யாரும் திட்டினால் அதற்குக் கோபமோ, வருத்தப்படவோ வேண்டியதில்லை. சனியைப் பற்றிய முழு உண்மைத் தெரிந்தவர்கள் சனியன் என்றால் மிகவும் மகிழ்ச்சியடையலாம்.
-பொன்.ரங்கன்
“அந்த மனோகரனின் பரம்பரையே திலிப் 2” என்று அன்பர் தேனீ எழுதி உள்ளார். அறிவை கொண்டு, தர்க்கம் செய்து ஜெயிக்க முடிய வில்லை என்றதும், கேவலபடுத்தி சண்டை போட்டு கடித்து காரி துப்புகிறார் இந்த அன்பர் தேனீ. இதில் இந்துதர்மரை முரண்பாடாக திருப்பி விடுகிறார் ! தேனீ அவர்களே, முதலில் சிவ லிங்கம் எதை குறிக்கிறது என்று விளங்கி கொண்டு அப்புறம் தர்கத்திற்கு வரவும்.
சைவ சமயத்தைப் பற்றி தமிழரும், தமிழர் அல்லாதாரும் என்ன சொன்னார்கள் என்பதை தெரிந்துக் கொண்டால்தான் திலிப், இந்து தருமர் போன்றோர் இன்னும் பலருக்கும் சைவ சமயத்தின் பெருமையையும் தனித்தன்மையையும் உணர்த்த முடியும் என்று தீர்மானித்து இவற்றை குறிப்பிடுகின்றேன். இதுவே பாலர் பள்ளி வகுப்புக்கான வழிமுறையாகும்.
(1) G.U. POPE – கிறிஸ்துவ பாதிரியார்
“The saiva siddhanta philosophy is the choicest product of the Dravidian intellect. It is the most elaborate, influential and undoubtedly the most instrinsically valuable of all religions in India. It is peculiarly the south Indian and Tamil Religion.” ஆதாரம்:: சித்தாந்த சைவம் – முனைவர் நாகப்பன் ஆறுமுகம்.
(2) இந்திய மெய்யியல் ஓர் அறிமுகம் – 1994 – இம்மானுவேல் இன்பநாதன், இஸ்ரேல் செல்வநாயகம்:
” பொதுவாக, இந்திய மெய்யியல் எனும்போது வட மொழி மரபுகளின் அடிப்படையில் எழுந்த மெய்யியல் பிரிவுகளை மட்டும் அறிமுகம் செய்வது அல்லது பெரிது படுத்துவது வழக்கு. ஆனால் தென்னிந்தியாவைப் பொறுத்த வரை மிகவும் செல்வாக்கு மிக்க மெய்யியல் சைவ சித்தாந்தம் ஆகும். “சைவ” என்கின்ற சொல் தொன்மை மிக்க வடமொழி இலக்கியங்களிலும் தமிழ் மொழியிலும் சிறப்புற்றிருக்கின்ற, சிவபெருமானை முழுமுதற் கடவுளாகப் போற்றுகின்ற சைவ மரபைக் குறித்து நிற்கின்றது. “சித்தாந்தம்” என்றால் உண்மையின் முடிந்த முடிபு என்று பொருள். வேதாந்தத்தின் இறை ஏற்பு பிரிவுகளுடன் ஒத்து நோக்கும் பொது சில கருத்துக்களில் ஒன்றுபடுகின்றது. ஆயினும் அதன் வளர்ச்சி, அணுகுமுறை, மொழிநடை ஆகியவற்றில் பல தனித்துப் போக்குகளைப் பார்க்க முடிகின்றது. மெய்மையின் மூன்று மடிப்புகளை பதி, பசு, பாசம் என்று இது அழைக்கின்றது. இவை மூன்றும் முறையே, கடவுள், உயிர், அல்லது ஆன்மா, கட்டு என்று பொருள்படும். செயல்பாடு, அறிவு, பக்தி ஆகியவற்றை இணைப்பதில் சைவ சித்தாந்தம் தனிச் சிறப்புற்று விளங்குகிறது. தமிழ் நாட்டிலும் அண்டை நாடுகளில், குறிப்பாக மலேசியா, இலங்கை நாடுகளிலும் சைவ சித்தாந்தம் புகழ் பெற்று காணப்படுகிறது. சைவ மரபின் வளர்ச்சி நீண்ட வரலாற்றையுடையது. அவ்வாறே இலக்கியங்களும் பல. சைவ சித்தாந்தத்தை ஏனைய இந்திய மெய்யியல் பிரிவுகளுடனும், மேற்கத்திய மெய்யியல்களுடனும் ஒப்பீடு ஆய்வுகள் நிகழ்ந்துள்ளன. கிறிஸ்துவ அருள்தொண்டர்களையும் அறிஞர்களையும் சைவ சித்தாந்தம் பெரிதும் கவர்ந்துள்ளது. ”
இப்படி இன்னும் பல தமிழ், தமிழ் அல்லாத அறிஞர்கள் கொடுத்த வாக்கு மூலத்தை அறியாமல் திலிப் போன்றோர் பிதற்றுவது தவறு என்று இப்போது அவருக்கும், இன்னும் அவரைப் போன்ற பலருக்கும் புரிந்திருக்கும். கால நேரத்தைக் கண்டு இன்று இத்துடன் முடிக்கின்றேன். சைவத்தின் எதிர்பாளர்களுக்கும், அதனை அறியாமல் இகழ்வோருக்கும் சுருக்கமான பதில்களை பின்னர் கொடுப்போம்.
“சிவ வழிபாடு” எனும் நூலில் அறநெறியண்ணல் கி. பழநிப்பனார் (மதுரை) தனது முன்னுரையில் சைவ சமயத்தைப் பற்றி இவ்வாறு குறிப்பிடுகின்றார் என்பதனை திலிப் போன்றோரும் மற்றவரும் அறிந்துக் கொள்வீர்களாக:
“காலத்திற்கும் சூழ்நிலைக்கும் ஏற்றவாறு சீரிய வாழ்க்கை நடத்தத் துணை செய்யும் சமயமே உண்மையான சமயமாகும். அத்தகைய சமயமே சைவ சமயம். சாதி, சமயம், மொழி நாடு பேதமில்லாது மனித இனம் யாவருக்கும் இம்மையில் நல்வாழ்வையும் மறுமையில் பேரின்பமும் கொடுக்கக் கூடிய சமயம் சைவமேயாகும்.”.
“மேன்மைகொள் சைவ நீதி விளங்குக உலகமெல்லாம்”.
அன்பர் தேனீ அவர்கள் இன்னும் என் கேள்விக்கு நேரடியாக பதில் அளிக்காமல் ஏதோ ஏதோ எழுதுகிறார். அவர் சொன்னார் இவர் சொன்னார் என்று 20 ஆம் நூற்றாண்டு அறிஞர்களை காட்டுகிறாரே தவிர, ஆதியில், மூலம், எப்படி தமிழரை கொண்ட சைவ சித்தாந்தம் வந்தது என்று எழுத மாட்டேன் என்கிறார். அது தானே ஐயா அறிவிற்கு வித்து, தர்க்கத்திற்கு மருந்து. விளக்கங்கள் தந்தாள் மட்டுமே உங்கள் மேல் எனக்கு மரியாதையை வரும். நேரடியாக என் கேள்விகள் யாதெனில்: “இந்து மதங்களில் சாஸ்திரிய சங்கீதமாக (1) கர்நாட்டக சங்கீதமும் (72 மேளகர்த ராகங்களும், 36 தாள லயங்களும் உள்ளன) (2) ஹிந்துஸ்தானி சங்கீதமும் (கர்நாட்டக சங்கீதத்திற்கு இணையான தாள ராகங்களை கொண்டுள்ளது) உள்ளது. சைவசித்தார்தங்களில் இசையை எப்படி விளக்குவீர்கள் என்று எழுத முடியுமா நண்பர் தேனீ அவர்களே ?” முருகனுக்கும் விநாயகருக்கும் பிறந்த திகதி/தருணம் உண்டா இல்லையா? ஆதி சங்கரர் அருளிய ஆனந்த லஹரி மற்றும் சௌந்தர்ய லஹரி சைவ மார்க்கத்தை வலியுறுத்துகிறத இல்லையா ? ஆனந்த லஹரியில் 100 சுலோகங்கள் சிவனை எழுதியதும், நந்தி பகவான் ஆதி சங்கரரை வழி மறைத்து ஒரு பகுதியை கிழித்து கொண்டு ஓடவில்லையா ? பிறகு சிவா பெருமான் , பார்வதியை பற்றி பாட சொல்ல விலையா ? விக்கிபீடியா முழு கதையையும் தருகிரதையா. மனிதன் எப்படி உருவாக்க பட்டான் என்பது எல்லா மார்க்கங்களுக்கும் முக்கியமான ஆரம்பம். இந்துக்களுக்கு மாண்டுரிய, தைத்திரிய உபநிஷதுகள்ளில் நேரடியாக விளக்கம் உள்ளது. மனிதர்கள் தண்ணீரில் இருந்து படைக்க பட்டவர்கள்; அறிவியலில் 70% உடல் தண்ணீரால் ஆனது. தமிழர்களை கொண்ட சைவ சித்தாந்தத்திற்கு எப்படியோ ? மனிதன் இறந்த பிறகு அவனின் நிலை என்ன ? மறுபிறவி உண்டா இலையா ? இவை அனைத்தும் பிரம சூதிரதில் இந்துகள்ளுக்காக விளக்க பட்டிருக்கிறது. புலன்களை அடக்கும் யோகா சூதிரம் , பதஞ்சலி முனிவரால் இந்துக்களுக்கு வழங்க பட்டிருக்கிறது. பதஞ்சலி எட்டு யோகா வழிகளை விளக்குகிறார். அவை முறையே: யமா , நியமா , அசனா , பிரனயமா , பிரத்யஹரா , டரனா , டயனா , சமாதி. இவை அனைத்தும் லய யோகா, மந்திர யோகா, குண்டலினி யோகா வில் வருகிறது. நான்கு வகை யோகா வழிகளை நிறுவியுள்ளார் (கர்ம , பக்தி , ஞான ,ராஜ யோகா ). சிலர் இதை விவரித்து எட்டு யோகாவாக பயன்படுத்துவர். சைவ சித்தாந்தத்திற்கு எப்படியோ ? என்னை விமர்சிப்பது தான் உங்கள் வழியா ? தமிழர்களை கொண்ட சைவ சித்தாந்தம் ஆதியில் நாள்வரை முக்கியமாக குறிப்பிடுகிறது. திருஞானசம்பந்தர் நாயனார், திருநாவுகரசர் நாயனார், சுந்தரமூர்த்தி நாயனார் (கி. பி 7 ஆம் நூற்றண்டு), மாணிக்கவாசகர் நாயனார் (கி. பி 10 ஆம் நூற்றண்டு). இவர்களின் பக்தி பேரானந்தங்கள், முறையே தேவாரம் 1-3, தேவாரம் 4-6, தேவாரம் 7 அதற்க்கு பிறகு பிந்தைய- தேவாரமாக (திருவாசகம் மற்றும் திருவெம்பாவை) விளங்குகிறது. இதில் சோகம் என்ன வென்றால், முதல் மூவர்பாடிய தேவாரம் தில்லையில் ஒரு சிவபெருமான் (நடராஜர்) கோவிலில், ஒரு அறையில் நெடுங்காலமாக பூட்டி வைக்க பட்டிருந்தது. ராஜா ராஜா சோழனும், நம்பியாண்டார் நம்பிகளும் (கி. பி 9 ஆம் நூற்றண்டு), மூவர் (திருஞானசம்பந்தர், திருநாவுகரசர், சுந்தரமூர்த்தி ) சிலைகளை ஒருங்கிணைத்து கொண்டு சென்று அறையை திறந்தார்கள். காலத்திற்கு ஒவ்வாத சுவடிகளை கரையான் அரித்து விட்டது. மீத முள்ளவைதாம் இன்றைய நடப்பில் உள்ள தேவாரம். ஆனால் வைதீக மத நான்கு வேதங்களும் அப்படி அல்ல. தொன்று தொட்டு அழியாமல் வருகின்றன. நண்பர் தேனீ அவர்களே, ஏன் நீங்கள் இந்த சைவ சித்தாந்த கோட்பாடுகளை வருசை படுத்த கூடாது ? அப்படி நீங்கள் செய்வீர்கள் ஆனால், குறைந்தது தமிழர்களை கொண்ட சைவ சித்தாந்தம் சிதறி கிடப்பதில் இருந்து ஒரு முறை படுத்த பட்ட மார்க்கமாக மாறுமே. அதுவே சிவ தொண்டு. நான் என்னால் முடிந்த தத்துவ உதவிகளை கண்டிப்பாக செய்வேன், இலவசமாக. தங்களை போன்ற ஒருவர்தான் அதற்க்கு சரியானவர். இதில் வெற்றி தோல்வி என்று எனக்கு எதுவும் கிடையாது. முறைபடுதுங்கள், காலம் உங்களை போற்றும்.
தேனீ அவர்களே எனக்கும் DHILIP 2 என்ன சமந்தம் என்று தெரியாது . அனால் முருகனுக்கு பால் ஊற்றுவது சரியா தவற என்று மட்டும் சொலுங்க . படிக்கிற பிளைங்களுக்கு படிப்பு வரலேன நல்ல படிக்க சொல்லி மிகை பாடத்துக்கு அனுபிவைகனும் அத விட்டுபுட்டு பால ஊத்து பாயசத ஊத்துன்னு பாடம் சொல்லி தந்தா யார தப்பு சொல்லறது ? என் மகன் நடந்துக்கிற விதமே எனக்கு பிடிக்கலே . இதே தேனீ நீங்க வேற உபதேசமா . அத கோவிலே செய்யிங்க பிள்ளைங்க உருப்படும் .
திலிப் அவர்களே எம்முடைய ஒய்வு நேரம் இரவு மணி 10.30 – க்கு மேல். இதுவே சமய சம்பந்தப் பட்ட விவாதத்திற்கு எமக்கு உகந்த நேரம். அதனால் தாங்கள் எதிர்பார்ப்பது போல் தொடர்ந்து தங்களுக்குப் பதில் எழுதிக் கொண்டிருக்க முடியாது. தங்களின் கருத்துக்களில் இருந்து தாங்கள் இந்து மதம் என்ற வைதீக மதத்தின் பொதுவான கருத்துக்களை மட்டும் அறிந்து வைத்துள்ளீர்கள் என்பது தெளிவு. தாங்கள் இந்திய மெய்யியல் தத்துவங்களை ஆழமாக கற்றறிந்து வைத்திருக்கவில்லை என்பது எனது முடிபு. அதனால்தான் புராணத்தை தாங்கிக் கொண்டிருக்கின்றீர்கள். மேலும் தங்களின் கருத்தில் இருந்து தங்களுக்கு சைவத்தைப் பற்றியோ, அதன் சித்தாந்தத்தைப் பற்றியோ ஒரு மண்ணாங்கட்டியும் தெரியவில்லை என்பதனால் நேற்று சைவத்திற்கு பாலர் பள்ளி பாடமாக தங்களுக்கும் தங்களைப் போன்ற பிறருக்கும் சைவத்தைப் பற்றி ஓர் அறிமுகம் தேவை என்பதற்காக அக்கருத்துக்களை எழுதினோம். இன்றோ தங்களுக்கு இடைநிலைப் பள்ளிப் பாடத்தைப் போதிக்கின்றேன். தொடரும்.
இவ்வுலகில் பெருஞ் சமயங்ககளாக விளங்குபவைகளில் கிறிஸ்துவ மதமும், இஸ்லாம் மதமும் அடங்கும். கிறிஸ்துவர்கள் 2,000 ஆண்டுகளுக்கு முன்பே ஒரு கடவுள் தத்துவத்தை ஏற்றுக் கொண்டு செவ்வனே அவர்தம் சமய நெறியில் செல்கின்றனர். அதுபோலவே இஸ்லாமியர்களும் 1,400 ஆண்டுகளுக்கு முன்னரே ஒரு அல்லாவை ஏற்றுக் கொண்டு அவர்தம் சமய வழியில் நிற்கின்றனர். தென் இந்தியாவில் வாழ்ந்த தமிழர்களும் விவேகமானவர்கள். மேற்கூறியவர்களுக்கு கொஞ்சமும் சளைத்தவர் அல்லர். பழங்கால தமிழர்களில் ஒரு பகுதியினர் சிவனை பரம்பொருளாக ஏற்றுக் கொண்டு சைவ நெறியில் நின்றார்கள். இத் தமிழர்களில் தங்களை மேலோர் என்று கூறிக் கொண்டு மற்றொரு சிறிய பகுதியினர் திருமாலை அவர்தம் பரம்பொருளாக ஏற்றுக் கொண்டு தங்களை ஒரு கடவுள் வழிபாட்டில் நிறுத்திக் கொண்டார்கள். வைணவர்களிடையே ஆரியரின் வைதீக மதமும், பண்பாடும் ஊடுருவியதில் அவர்தம் பண்பாட்டினை 100% ஏற்றுக் கொண்டு தென்கலை வைணவர்கள் ஆயினர். இன்றும் அவர்கள் விஷ்ணு அல்லது திருமால் மற்றும் அவர்தம் அவதாரமாகிய கிருஷ்ணர், கண்ணன், இராமர் என்ற ஒரு கடவுள் வழிபாட்டிலேயே இருக்கின்றனர். அவர்களை அசைக்கமுடியாத இந்த இந்து தருமர், மலேசிய சைவ சமய பேரவையின் 2-ம் உலக மாநாட்டின் கருப்பொருளை தமிழ் நாளிதழ்களில் வியாக்கீனப் படுத்தி அதனையே இவ்விடத்திலும் மறைமுகமாக எழுதி எம்மை கடுப்பேற்றினார் . இப்பொழுது தங்களுக்கும், இந்து தருமருக்கும் ஒரு கேள்வி, வைணவர்கள் ஒரு கடவுள் வழிபாட்டில் நிற்கும் பொழுது, பிற தமிழர்கள் சிவனை பரம்பொருளாகக் கொண்டு ஒரு கடவுள் வழிபாட்டில் நிற்பதில் என்ன தவறு இருக்க முடியும். வைணவர்களின் வழிபாடு முறை சரி என்றால், சைவர்களின் ஒரு கடவுள் வழிபாடும் சரியாகத்தானே இருக்க முடியும். அப்படியானால், “சைவசித்தாந்தத்தை நான் முழுமையா தனி பிரிவாக ஆதரிக்க வில்லை” என்று தாங்கள் கூறுவது அறிவுடமையா திலிப்?. தங்களின் அங்கீகாரத்தைக் கேட்டா பல்லாயிரம் ஆண்டுகள் தமிழர்கள் சிவ வழிப்பாட்டில் நின்றனர்?. இப்பொழுது நீங்களும் இந்து தருமரும் சைவத்தை தமிழரின் தனியொரு சமயமாக ஏற்றக் கொள்ள வில்லையானால் சைவம் அழிந்துப் போகும் என்ற தங்களின் எண்ணமும், தங்களைப் போன்றோரின் எண்ணமுமே அழிந்துப் போகும் என்பதே உண்மை. ஆகையால், சைவத்தைப் பற்றிய தங்களின் கருத்தை மாறிக் கொள்வது சிறப்பு. தொடரும்.
வைதீக பண்பாடு தமிழர்களிடையே பரவி அதன் பின்னரே, தமிழர்களிடையே பல தெய்வ வழிபாடு நிலைத்து நிற்க ஆரியர் ஒத்தூதினர். அவர்களின் நோக்கத்தின் பின்புலம், தமிழர்கள் பரம்பொருள் என்ற கோட்பாட்டினை மறந்தால் சுலபமாக தமிழர்களை வைதீக மதத்தில் நிலைத்து வைத்திடலாம் என்பதே. அதன் விளைவே சிவ வழிபாட்டிற்கும், சைவ நெறிகளுக்கும் அவர்கள் ஏற்படுத்திய களங்கங்கள் பல. அதில் ஒன்று “நடராஜர் சிலையை வீட்டில் வைத்தால், வீடே ஆட்டம் கண்டு விடும்” என்பது, மேலும் வைதீக மதத்தில் சொல்வது போல் உருத்திரன் அழிக்கும் தெய்வம், ஆதலால் சிவன் சுடுகாட்டு வழிபாட்டுக்கும், இறந்தவர்களுக்கு மோட்ச விளக்குப் போடவும் தகுதியானவர் என்று விளம்பரப் படுத்தி சிவ வழிபாட்டினை தரம் தாழ்த்தினர். காக்கும் தெய்வமாகிய விஷ்ணு எல்லா செல்வங்களையும் கொடுக்கும் தெய்வம் என்ற கருத்தை முன்னிறுத்தி இந்தியர்களை உலகியல் செல்வங்கள் வேண்டி செய்யப்படும் வழிபாடுகளில் முன்னிறுத்தினர். உலகியல் இன்பத்தை நாடிச் செல்லும் இன்றைய மக்களிடையே உயிருக்கு வேண்டிய மறுமையின் இன்பத்தைச் சொல்வதற்கு மிஞ்சி இருந்தது, இன்றும் இருப்பது சைவ சமயமே ஒன்றே. ஆதலால், தமிழர்கள் பல தெய்வ வழிப்பாட்டில் இருந்து அவர்தம் சமய பரிணாம வளர்ச்சியாக ஒரு கடவுள் வழிபாட்டிற்கு முன்னேறிச் செல்வதில் தங்களுக்கு என்ன வலியோ?. அதனால் மலேசிய உண்மைச் சைவர்களின் வழியில் குறுக்கிடாதீர்கள். நாங்கள் இந்து தருமர் சொன்னது போல் 8 பேர் அல்ல. 2-ம் உலக சைவ சமய மாநாட்டில் கலந்து கொண்டு அம்மாநாடு நடந்த விதம், அங்கே விவாதிக்கப் பட்ட விடயங்கள் அவர் அறிந்தால் சிவ மணம் அவரில் உயிரிலும் கலக்கும். திலிப் தாங்கள் சொன்னீர்களே, “ஒரு கௌமார மெய்யன்பர், முருகனை தவிர மற்ற கடவுள்களை பாட மாட்டேன் என்றிர்ருபார். அவர் மனமாட்றமே, அத காவியத்தின் முடிவு.” அது இந்து தருமருக்கு முழுமையாகப் பொருந்தும். சைவர்கள் பரம்பொருளான சிவனை வழிபடுவதால், அவரை வணங்கி வலம் வந்தால் உலகத்தில் உள்ள அனைத்துத் தெய்வங்களையும் வணங்கியதற்கு ஒப்பாகும் . ஆததால், இந்த தெய்வத்தை வணங்கவில்லை, அந்த தெய்வத்தை வணங்கவில்லை என்பதும் , ஒரு கோவிலில் உள்ள 9 நவகிரக சிலைகளையும் சேர்த்து வணங்கி வர வேண்டும் என்ற இடர்பாடும் சைவர்களுக்கு இல்லை. அதனால், தாங்கள் சொன்ன அந்த காவியத்தைப் படிக்க வேண்டிய அவசியம் எங்களைப் போன்ற சைவர்களுக்கு இல்லை என்பதை அறியவும். தொடரும்.
“அதே போல் ராவணனை கொன்று விட்டு தமிழ் நாட்டை அடைந்த ராமன், பிரமஹத்தி தோஷம் நீங்க , ஈஸ்வரனை பூஜித்த தளம்தான் ராமேஸ்வரம். வைஷ்ணவ மார்க்கத்தில் வந்த ராமன் , சைவ மத கடவுளான சிவனை விட்டு கொடுக்க வில்லை” என்பது திலீபன் கருத்து. விஷ்ணுவின் அல்லது திருமாலின் அவதாரமான இராமருக்கு தனது பிரமஹத்தி தோஷம் நீங்க ஏன் சிவனை வணங்க வேண்டும்?. விஷ்ணுவையும், இராமரையும் மிஞ்சிய எல்லாம் வல்ல பரம்பொருள் சிவ பெருமானே என்று உணர்ந்ததால் அவர் இராமேஸ்வரத்தில் சிவலிங்கத்தைப் பூஜித்தார் என்ற அப்பட்டமான உண்மையை ஏற்றுக் கொள்ளுங்கள். அதனை விடுத்து சிவனை விட்டுக் கொடுக்கவில்லை என்று கூறி திசை திருப்ப வேண்டாம். இக்கருத்தை விளக்கும் பூஜையே இன்று பிரதோஷம் என்ற பூஜையின் வழி வெகு விமரிசையாக சிவ ஆலயங்களில் பின்பற்றப்பட்டு வருகின்றது என்பதனையும் அறிவீர். தொடரும்.
இறைவனை அடைய பல வழிகள் இருப்பினும் சித்தர்கள் அணுகியது சைவ முறையையே. அசைவம் அறமற்ற வாழ்க்கை முறை என்பதுமட்டுமல்ல நம் மனதை ஒரு நிலை படுத்துவது அல்லது அசையாமல் காப்பது கடினம் என உணர்ந்தனர் எனவே சைவத்தை பற்றினர் (அறிவியல் ரீதியில் இதற்கு இன்னும் பல தகவல்கள் இருக்கின்றன). இறைவனை தியானம்,தவம் எனும் வழிகளில் மனதை ஒரு நிலை படுத்த சைவ வாழ்க்கை நெறிகள் 18 தமிழ் சித்தர்கள் நமக்கு காட்டிய வழி!
திலிப், “முருக பெருமானுக்கும் விநாயக பெருமானுக்கும் தந்தை-தாய் உள்ளார்கள்; பிறந்த திகதி உள்ளது. ஆகையால் நேரடி பூரணத்தில் இருந்து வந்தவர்கள் அல்ல இந்த இருவர்” என்றும் “மஹா விஷ்ணுவை தாழ்த்தி சிவா பெருமானை மட்டும் வாழ்த்துங்கள் என்றால், இருவருக்கும் பிறந்த சுவாமி அய்யபனை எங்கே வைப்பது ?” என்ற கருத்தும் தயவு செய்து ஜாகிர் ஹுசேன் கண்ணில் படாமல் பார்த்துக் கொள்ளுங்கள். அப்புறம் அவர் இந்து மதத்தை உலகம் முழுதும் கிழி, கிழி என்று கிழித்து விடுவார். தங்களைப் போன்று படித்தவர்களும் இன்னமும் இவ்வாறன புராணக் கதைகளுக்கு முக்கியத்துவம் கொடுப்பதாலேயே மற்ற மத மக்களின் கேலிக் கூத்துக்கு நாம் ஆளாகின்றோம் என்பதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். கொஞ்ச நாளைக்கு முன் காய் என்பவர் கேட்டாரே இறைவன் ஆணா? பெண்ணா? என்று. அதை தாங்கள் இன்னும் மறந்திருக்க மாட்டீர்கள் என்று நினைக்கின்றேன்!. இப்பொழுது இந்து மதத்தில் இரண்டு ஆண்கள் சேர்ந்து ஒரு ஆண் பிள்ளையைப் பெற்றுக் கொண்டார்கள் என்று ஜாகிர் ஹுசேன் விபரீத பிரச்சாரம் செய்ய தாங்கள் அவர்களுக்கு வழி காட்டுகின்றீர். தாங்கள் தமிழராக இருந்திருந்தால் அறிவார்ந்த தமிழராக வாழுங்கள் என்று சொல்லி வாழ்த்தி இருப்பேன். இவ்வாறன கருத்துக்களை தங்கள் பரம்பரையிடமே வைத்துக் கொள்ளுங்கள். அறிவார்ந்த எம்மை போன்ற தமிழர்களிடம் சொல்லி தங்களின் அறிவிலித்தனத்தை எல்லோரும் பார்க்கும் படி செய்துக் கொள்ளாதீர்கள். நாளை இந்து தர்மம், சனாதன தர்மம் அதனால் மாறிப்போன இந்தியர்களின் தர்மம் என்ற நிலைகளைப் பற்றி சிந்திப்போம். அதற்குள் மென்மேலும் கேள்விகள் கேட்டு எம்மை துன்புறுத்தாதீர்கள். நாளை தொடரும்.
கிறிஸ்துவ மார்க்கம், ஏசுவில் இருந்து ஆரம்பிக்கவில்லை. அது ஆதாம் ஏவாள் தொடங்கி, நோவா, ஆபிரகாம், மோசேஸ் என்று வந்து, இஸ்ரேல மன்னனான டேவிட் அவர்களின் வம்சாவளியில் கடைசியில் வந்த இயேசு கிறிஸ்துடன் தொடர்கிறது. கத்தோலிக்க, மெதடிஸ், பெந்தகோஸ், ரோமன் கிறிஸ்துவம் என்று அங்கேயும் பிரிவுகள் உள்ளன. ஆரம்பத்தில் ஜுடைசம் மாக என்றிருந்தது, ஆனால் தொடர்ச்சியினால் கிறிஸ்துவமாக உள்ளது. பெகநிசம் அதன் எதிரி. இதில் ஆபிரகாமிடம் இருந்து பிரிந்தவர்கள்தான், பின்னாளில் முஸ்லிமாக மாறினார்கள். முஸ்லிம்களிலும் சன்னி, ஷியா , குர்டிஷ் என்று பல பிரிவுகள் உள்ளன. அவர்கள் கடவுள் ஒன்று என்று கூறினால், அது அவர்களின் வழி. நாம் ஏன் அதே போன்ற வழிமுறையை கடைபிடிக்க வேண்டும் என்று எதிர்பார்கிறீர்கள் தேனீ அவர்களே ? கடவுளை காண இந்துமதத்தில் ஆறு வழிகள் உள்ளன. பிடித்ததை எடுத்துக்கொள்ளுங்கள் என்பதே என் வாதம். சைவமும் வைஷ்ணவமும் இந்து மதத்தின் இரு கண்கள். இதை நாங்கள் (என்னை தான் வைதீக மதத்தில் சேர்த்து விட்டு விடீர்கலே) ஒருபோதும் விட்டு கொடுக்க மாட்டோம். ஆனால் சைவத்தில் நிறையா புது புது வழிப்பாட்டு முறைகள் வருவதைத்தான் நாங்கள் ஆதரிக்க வில்லை. உதாரணத்திற்கு தமிழர்களை கொண்ட சைவசித்தாந்தம் போல. ஏற்கனவே அத்வைதம், சுத்த அத்வைதம், ஜைனிசம், காஷ்மீரி சைவிசம் (மாமிசம் உண்பார்கள் ), என்று நிறைய பிரிவுகள் சிவனை கொண்ட சைவத்தில் உள்ளது. இதில் சைவசித்தாந்தம் என்று இன்னும் ஒரு பிரிவை உருவாக்குவதற்க்கு பதில் வெறும் சைவ வழிமுறைகளை மட்டும் பின்பற்றலாமெ? என்றும் மாறாத சைவ நெறியில் நில்லுங்கள். ஆனால் நீங்களே ஏன் தமிழர்களுக்கு என்று புதுவித சைவசித்தாந்தத்தை உருவாகுகிரீர்கள்? சைவசித்தாந்தம் என்று வரும் பொழுது தெரிந்தது, தெரியாதது, புரிந்தது, புரியாதது என்று ஏக பட்ட குழப்பங்கள். இன்னும் ஒரு ஆதி சங்கரர் வந்தால் மட்டுமே சைவசித்தாந்ததை சரி செய்ய (தொகுக்க) முடியும். எனவே தான் சைவ நெறிகளை அப்படியே பின் பட்ருங்கள், புதிதாக வேலியில்லாத ஒரு மார்க்கத்தை உருவாக்கதிர்கள். காரணம் போலியான வேலியே பயிரை மேய்ந்து விடும்! நீங்கள் மாற்றி மாற்றி பேசுகிறிர்கள் தேனீ அவர்களே.
பிரதோஷம் எப்படி வந்தது என்று தெரியுமா தெரியாத ? ஏன் பொய் சொல்கிறிர்கள் ? உங்கள் கேள்விக்கு வருவோம்: “இப்பொழுது தங்களுக்கும், இந்து தருமருக்கும் ஒரு கேள்வி, வைணவர்கள் ஒரு கடவுள் வழிபாட்டில் நிற்கும் பொழுது, பிற தமிழர்கள் சிவனை பரம்பொருளாகக் கொண்டு ஒரு கடவுள் வழிபாட்டில் நிற்பதில் என்ன தவறு இருக்க முடியும்.” பதில்: நீங்கள் ஒரு கடவுள் மார்க்கத்தில் நிற்பது உங்கள் விருப்பம். ஆனால் நீங்களே புதிய மார்க்கம் செய்யாதிர்கள் என்பது எங்கள் விருப்பம். உங்கள் கேள்விக்கு வருவோம்: மேலும் வைதீக மதத்தில் சொல்வது போல் உருத்திரன் அழிக்கும் தெய்வம், ஆதலால் சிவன் சுடுகாட்டு வழிபாட்டுக்கும், இறந்தவர்களுக்கு மோட்ச விளக்குப் போடவும் தகுதியானவர் என்று விளம்பரப் படுத்தி சிவ வழிபாட்டினை தரம் தாழ்த்தினர். காக்கும் தெய்வமாகிய விஷ்ணு எல்லா செல்வங்களையும் கொடுக்கும் தெய்வம் என்ற கருத்தை முன்னிறுத்தி இந்தியர்களை உலகியல் செல்வங்கள் வேண்டி செய்யப்படும் வழிபாடுகளில் முன்னிறுத்தினர். பதில்: அன்னை ஆதிபராஷக்தி, பிரம்மா விஷ்ணு மகேஸ்வறரை படைத்த பிறகு யோசித்தார். படைக்கும் தொழிலுக்கு இந்த பிரம்மாவுக்கு என்ன வேண்டும் ? படைப்பவனுக்கு படைப்பின் ரகசியம் தெரிய வேண்டும். அப்படி என்றால் அறிவின் சொருபமான , கல்வியில் கடவுளான சரஸ்வதியை அவரிடம் ஒப்படைப்பதுதான் சரி என்று பட்டது. எனவே தான் சரஸ்வதியை பிரம்மாவின் மனைவியாக புராணங்கள் சித்தரிக்கின்றன. இப்பொழுது காக்கும் கடவுளுக்கு என்ன வேண்டும்? பணம் வேண்டும். ஆகையால் பால் கடலில் தோன்றிய லக்ஷ்மியை திருமாளுக்கு திருமணம் முடித்தார் அன்னை. அழிக்கும் தொழிலை ஏற்று இருக்கும் மகேஸ்வரருக்கு, உயிரை எடுக்க என்ன வேண்டும் என்று யோசித்த பொழுது சக்தி வேண்டும் என்று புல பட்டது………… அப்படியே சிவனுக்கும் திருமணம் நடந்தது …………………தேனீ அவர்களே உங்களுக்கு பிடிக்கவில்லை என்பதால் படைபவனுக்கு பணத்தையும், காப்பவனுக்கு சக்தியையும், அழிப்பவனுக்கு சக்தியையும் கொடுத்திருந்தால் என்ன நடத்திருக்கும் ? நீங்களே யோசித்து பாருங்கள் !!!!
கடவுளைப் பற்றிய சிந்தனைகள் பல்வேறு (‘School of Thought’) ஆனால் நாம் அனைவரும் மலை உச்சியில் இருந்து பல பிரிவாக பிரிந்து ஓடி வரும் நீரைப் போன்றவர்கள். நாம் மீண்டும் அந்த நதியின் மூலத்திர்க்குப் போக வேண்டுமானால் அனைவரும் மீண்டும் ஒரே இடத்தில் வந்து சந்திப்போம். அதுதான் பரம்பொருள் என்ற தத்துவம் இதனை போதிப்பது. சைவம். சித்தன் சொன்னதும் இதுவே. கிறிஸ்துவர்கள் பல திருச்சபையை கொண்டிருந்தாலும் அவர்களின் நோக்கம் ஒரு கடவுளை பற்றியது. அதுபோலவே, இஸ்லாமியர்களும் பல வேறுபாடான வழிமுறைகளைப் பின் பற்றினாலும் அவர்களுக்கு அல்லா என்பது அவர்தம் திருமரையாகிய குர்ஹன் கூறும் அந்த அல்லா பெருமகனாரே பரம்பொருளாகப் போற்றி வழிபடுகின்றனர். There is a difference between School of Thoughts and Monotheism. Don’t mix up both, Dilip 2.
…..””.இப்பத்தான் துவங்கியது இந்த புரட்டு..1868 ஆம் ஆண்டு மார்க்ஸ் முல்லெர் என்கிற சரித்திர நிபுணர் , மத்திய ஆசியாவில் இருந்து ஆரியர்கள் பாரத நாட்டின் மீது படை எடுத்து வந்து,, சிந்து சமவெளி நாகரீகத்தை அழித்து- திராவிடர்களை நகர் புறத்திலிருந்து காடுகளுக்கு விரட்டி -மிச்சம் இருந்தவர்களை தங்களுடைய கலாசார வழிப்பாட்டு முறைகளுக்கு மாற்றி – இந்த நாட்டின் பழமையான கலாச்சாரத்தை அழித்து விட்டனர் >>””
என்று கூறியதில் இருந்து இந்த பயங்கரமான புரட்டு பரவ ஆரம்பித்தது..அன்று பிரிட்டன் நாட்டை சேர்ந்த கிழக்கிந்திய கம்பெனியின் பணியாளரான மார்க்ஸ் முல்லெர் கிளப்பிய இந்த புரட்டு வாதத்தை, இன்று பொய் என்று ஒப்பு கொண்டிரூப்பது -அதே பிரிட்டன் நாட்டை சேர்ந்த பிபிசி ஒளிப்பரப்பு நிலையம்தான் > பிபிசி உலக அளவில் நம்ப தகுந்த ஒலி/ஒளி பரப்பு நிறுவனம் .
..
எஸ் ,குருமூர்த்தி (அரசியல்/பொருளாதார வல்லுநர் }
# தண்ணீர் விட்டோ வளர்த்தோம் – கட்டுரை #
துக்ளக் – 2.11.2005
மீண்டும், மீண்டும், கடவுளுக்குத் திருமணம், அவர்களுக்கு பிள்ளைகள் என்று புராணக் கதைகளையே பாடி, பாடி இன்று பிற மதத்தவர் நம் இளையவர்களிடம் கேட்கும் கேள்வி, உங்கள் இந்து மதத்தில் கடவுள் திருமணம் செய்துக் கொண்டு பிள்ளையை பெற்றுக் கொள்கின்றார்களே அது எப்படி?. இதற்கு தத்துவ ரீதியாக பதில் சொல்லத் தெரியாத நமது இளைஞர்கள் பலர் உள்ளனர் காரணம் நாம் அவர்களுக்கு உண்மைச் சமய நெறியை போதிக்காமல் வெறும் புராணக் கதைகளே நமது சமயம் என்று போதித்து வந்தது. அதே நிலையில்தான் திலிப் அவர்களும் உள்ளீர். சமயத்தின் உண்மை நெறிகளை அறியாமல், உலகியல் கல்வியில் படித்து பட்டம் வாங்கிய பல இளைஞர்களும் இது இந்து மதத்தின் குறைபாடு என்று எண்ணி பிற மதங்களுக்கு சுலபமாக கவர்ந்து இழுக்கப் படுகின்றார்கள். இன்றோ கடவுள் தத்துவத்தைப் பற்றி எவ்வொரு தனித்துவம் வாய்ந்த தத்துவத்தையும் சொல்லாத பாபா குழுமங்களுக்கு நமது இளைஞர்கள் சுலபமாக ஈர்க்கப் படுவதும் இதனாலேதான் என்பதை அறிவீர். புராணக் கதைகளை மூட்டைக் கட்டி ஒரு புறமாக வைத்து விட்டு, சமயத்தின் உண்மையான நெறிகளை அறிந்து பக்தி மார்க்கத்தில் இருப்போரின் சமயமே சிறந்து விளங்கும் என்பதில் ஐயமில்லை. இதுவே மலேசிய சைவ சமய பேரவை, சைவ சித்தாந்தத்தின் போதனையை முன் நிறுத்தி நாட்டின் பல் வேறு பகுதிகளில் சித்தாந்த வகுப்புக்கள் நடத்தி வருகின்றோம். தூர நோக்கின் அடிப்படையில் சைவ சமயம் இந்நாட்டில் தளைத்தோங்க இதுவே வெற்றி தரும் என்பதில் ஐயமில்லை. வெறும் புராணக் கதைகளை சொல்லிச் சொல்லி, இந்து சங்கம் 1965-ம் ஆண்டிலிருந்து இதுவரை இந்நாட்டு இந்தியர்களை முறையான சமய நெறியில் நிறுத்த முடியாமல் போனதற்கு சமயக் கல்வி நம்மிடையே போதிக்கப் படாமல் போனதுதான் காரணம். இந்நாட்டு இந்தியர்கள் படு வேகமாக கிறிஸ்துவ சமயத்திற்கு மாற்றப் படுவதை தடுத்து நிறுத்துவதற்கு இதுவே சிறந்த வழி என்று கண்டு மலேசிய சைவ சமய பேரவையினர் செயல் பட்டு வருகின்றோம். யோசி, யோசி, மாத்தி யோசி.
சிவனை வணங்கு – நீ தமிழன்
மலையாளி என்றால் ஐயப்பனை வணக்கு
நாராயணனா / நீ தெலுங்கன்.
விஷ்ணுவா ? நீ வட நாட்டு பயல்
என தெய்வங்களையும் நமது மொழி வெறியால் கூறு பிரிக்கவா ??
இது பல சமய இயக்கங்களில் பொறுப்பில் இருந்து மாலை மரியாதை வாங்கும் போது எவரின் அறிவுக்கும் எட்டவில்லையா ??
எங்களுக்கும் கடவுளுக்கும் இடையில் இருப்பது ஆன்மீக ஒப்பந்தம்..இங்கே நம்பிக்கை மட்டுமே மூலதனம் >
சரியாக சொன்னிர்கள் இந்துதர்மர் அவர்களே. “எங்களுக்கும் கடவுளுக்கும் இடையில் இருப்பது ஆன்மீக ஒப்பந்தம்” அது சன்யாச ஒப்பந்தமோ அல்லது சம்சார ஒப்பந்தமோ அல்ல, காரணம் பெண்களும் ஆண்களும் சமமான ஆன்மீக வழியை பின்பற்றலாம். “பிதா சுதன் பரிசுத்த ஆவி ‘ father son and the holy ghost ‘ ” என்றால் என்ன? பிதா என்றால் அப்பா, சுதன் என்றால் மகன் , ஆனால் அம்மாவை காணவில்லை. ஆனால் ஆவியை அம்மா இடத்தில நிறுத்தி விட்டார்கள்! அங்கே மட்டும் என்ன வாழுதாம் “தத்துவங்கள்”? ஒரு மார்க்கத்தில் க….ளின் துதுவர் என்று வந்தவருக்கு, 6 வயதில் ஒரு மனைவி. சிலர் அதை 9 வயது என்று வாதாடுகிறார்கள், அதிலும் அவருக்கு அப்பொழுது வயது 52. தேனீ அவர்களே, உங்கள் கதை எப்படி இருக்குது தெரியுமா ? புலியை பார்த்து பூனை சூடு போட்டுக்கொண்ட கதையை போல் இருக்குது. அடுத்தவர் மார்க்கங்கள் என்ன செய்கிறது என்று பாராமல், நமக்கு என்ன தர பட்டிருக்கிறது என்று பாருங்கள். உலகத்திலேயே எந்த வித சந்தேகமும் இல்லாமல் மனிதனின் மனதை விளக்கிய ஒரே நூல் பகவத் கீதை. ஆகையால் நாம் ஏன் மற்ற மார்க்கங்களுக்கு இணையாக தான் வெளிப்பாடு முறையை கையாள வேண்டும் என்கிறீர்கள் ? நாம் ஏன் அவர்களுக்கு இணையாக தான் வழிப்பாட்டு முறையை கொண்டிருக்க வேண்டும் என்கிறீர்கள் ? மகாவிஷ்ணுவின் பெண் உருமாற்றம் தான் மோகினி அவதாரம். அந்த பெண் உருமாற்றமும் சிவ ஒன்றினைப்பும் தான் சுவாமி ஐயப்பன். குழம்பாதீர்கள் தேனீ அவர்களே குழம்பாதீர்கள்! கடவுள் ஆணா அல்லது பெண்ணா என்றால் ? இந்து மதத்தில் கூரி இருப்பதுபோல, அந்த பர பிரமம் ஒரு பெண். ஆகயால் தான் அன்னை ஆதிபராஷக்தி, பிரம்மா விஷ்ணு மகேஸ்வர் என்று அந்த மூவரையும் முதலில் படைத்தார். பின்பு தன் சுய அவதாரமான ஆறு பெண்களையும் படைத்தார். இதற்க்கு நல்ல ஒரு உதாரணம் இன்றைய அறிவியியல். ஒரு மனித செல்லிளில் இருக்கும் 46 chromosome மை அப்படியே எடுத்து, ஒரு பெண் முட்டையில் வைத்தால், ஒரு குழந்தையை 9 மாதத்தில் ஈன்றெடுத்து விடலாம். எந்த ஒரு ஆண் மகனின் துணையும்மின்றி, இதுவே படைப்பின் ரகசியம். ஒரு மார்க்கத்தில் ஆணின் விலா எலும்பை எடுத்து ஒரு பெண்ணை படைத்தார் என்றிருக்கிறது. இந்த தத்துவத்தை பார்த்தல் ஆணும் பெண்ணும் பூமியில் எப்பொழுதுமே சமமான எண்ணிக்கையில் தான் இருந்தாக வேண்டும். இப்படி பட்ட ஒரு மதத்தை பார்த்தா உங்கள் முதுகில் சூடு போட்டு கொண்டீர்கள் ? ஐயோ பாவம் !
திலிப்பிடம் கேட்ட இந்து தர்மத்தின் விளக்கத்தை அவர் அதன் கூறுகளை மட்டும் சொல்லி நிறுத்தி விட்டார். இருந்தாலும் தவறான கருத்தை கூறவில்லை என்பதில் மகிழ்ச்சியே. நம்மில் பலர் இந்து தர்மம் என்றால் என்ன, சனாதன தர்மம் என்றால் என்னவென்று புரிந்துக் கொள்ளாமலேயே அவரர் மனம் போன போக்கில் ஏதாவது ஒன்றைச் சொல்லிக் கொண்டு, சொல்லுபவர் குழம்பியது மட்டும் அல்லாமல் பிறரையும் குழப்பிக் கொண்டே இருக்கின்றனர். இந்து “தர்மம்” என்றால் தமிழில் “அறம்” என்று சொல்லுவோமே அதுவல்ல. மனு ஸ்மிருதியில் சொல்லப் பட்டிருக்கும் இந்து தர்மம் ஆரியர்களுக்கான வாழ்வியல் நீதி சம்பந்தமான நெறிமுறைகள் (‘way of life’). சனாதன தர்மம் என்பதோ அவர்களின் தொன்மையான நெறிமுறை என்பதாகும். அதன் நெறிமுறைகளில் ஒன்று வருணாசிரம கோட்பாடும் அதனை ஒட்டிய வாழ்வியல் திட்டங்களும். மக்களை பாகுபடுத்தி அவரவர் நிறங்களுக்கு வெவ்வேறான சட்ட திட்டங்களை வகுத்து ஆட்சி புரிவது. இது வைதீக மதத்தின் தலையாய சட்டமாக விளங்கி மேலோர் கீழோர் என்று பிரித்தாளப்பட்டது. இதில் குறையில்லை என்று பிராமண வகுப்பினர் வாதாட, அதனால் பாதிக்கப் பட்டரோ அது அநீதி என்று மறுபுறம் வாதாடினார். இச்சமய திட்டங்கள் சமத்துவமின்யாக இருப்பதை உணர்ந்த ஆங்கிலேயர்கள், சிவில் சட்ட திட்டங்களை 19-ம் நூற்றாண்டு முதல் படிப்படியாக இந்தியாவில் செயல் படுத்தினர். அதன் பின்னரே, ஆரிய பிராமணர்களின் கொட்டம் இந்தியாவில் படிப்படியாக அடக்கப் பட்டது. வைதீக மதம் இவ்வாறு ஒருவரின் பிறப்பின் அடிப்படையில் அர்த்தமற்ற சட்ட திட்டங்களை புகுத்தி அவர்தம் சுயநலனுக்கு மனு ஸ்மிருதி சட்ட திட்டங்களை சாதகமாக்கி கொண்டு நம் தமிழர்களையும் ஆட்கொண்டனர் என்பது யாரும் மறுக்க முடியாத உண்மை. இவர்களால், சூத்திரன் என்றும், பஞ்சமர் என்றும் முத்திரைக் குத்தப்பட்வர்கள் அடைந்த இழிநிலைக்கும், துயரங்களுக்கும் அளவே இல்லை. மிளகாய் கடித்தவனுக்கே அதன் காரம் தெரியும். அதைப்போல இந்த இந்து தர்மத்தால் பாதிக்கப் பட்டவர்களுக்குத்தான் அதன் வலியும் தெரியும். மனசாட்சி இல்லாமல் அடித்தவனுக்கு வலி தெரியாது ஆனால் அந்த சொல்லடியை வாங்கிய பல கோடி மக்கள் இறக்கும் வரை அதன் வலியுடனே இறந்தனர். இன்றும் அவ்வாறே பிறப்பால் பழிக்கப் பட்டு இறக்கின்றனர். எம்மை பிறப்பால் பழிக்கும் இதுவா என் மதம் என்று கேட்ட பல அறிவார்ந்த தமிழர்கள் இந்து மதம் எனப்படும் வைதீக மதத்தை விட்டுப் பிற மதங்களுக்குப் போய் விட்டனர். இன்றும் பிற மத பரப்பாளர்களின் மதமாறும் தந்திரங்களில் வச்சுர ஆயுதமாக பயன்படுவதே இந்த வருணாசிரம கோட்பாடுதான். இப்ப சொல்லுங்கள் எந்த அறிவார்ந்த மானமுள்ள தமிழனும் இந்த வைதீக மத கோட்பாடை ஏற்றுக் கொள்வான?. அப்படி ஏற்றுக் கொண்டு வாழ வேண்டும் என்பது எங்களின் தலை எழுத்து என்றால் அந்த வைதீக மதத்தை விட்டு மதம் மாறி சைவத்தில் நிற்பதும் எம்பெருமான் எங்களுக்கு விதித்த விதி என்று நாங்கள் ஏற்று எங்கள் வழியைப் பார்த்துக் கொள்வோம். அதனை தடுக்க எந்த கொம்பனுக்கும் அருகதை இல்லை. தொடரும்.
மேற்கூறிய உருவ/தேக அளவிலும், பிறப்பின் அளவிலும் உயிர் குலத்தை பிரிக்காத சமயம் சைவ சமயம். சைவம் உயிர்களைப் பற்றியே பேசும் அவ்வுயிர் பெரும் உடலைப் பற்றி பாகுபடுத்தி வெவ்வேறான நீதி தர்மங்களை நிலை நாட்டுவதில்லை என்பதை திலிப் போன்றோரும் இன்னும் பலரும் அறிந்து தெளிந்து சைவத்தில் நிற்பது அவர்களுக்கு உகந்தது. அதனை தடுப்பது பிறரின் தனி உரிமையில் தலை இடுவதாகும். இந்நியதி திருமூலரின் 10:738 எனும் தந்திரத்தில் இவ்வாறு கூறியுள்ளார்:
“ஒன்றே குலமும் ஒருவனே தேவனும்
நன்றே நினைமின் நமனில்லை நாணாமே…”
இதன் பொருள் இருப்பது குலம் ஒன்றே , அதன் கடவுளும் ஒன்றே என்று நினைந்து நின்றால் இயமனும் நம்மை அணுகான் என்பது. இது சமயமா? அல்லது சமத்துவமின்மையை நிலைநிறுத்தும் இந்து மதம் என்ற வைதீக மதம் ஏற்கப் பட வேண்டிய சமயமா?. முடிவு படிப்போரின் கையில். மீண்டும் சொல்கின்றேன் தமிழர் கண்ட சுத்த சைவ சித்தாந்தம் உலகில் அனைவருக்கும் ஏற்புடைய தருக்க நெறியின் அடிப்படையில் அதுதன் மெய்பொருள் தத்துவங்களை நிறுவி நிற்கும் சமயம். இதுவே தமிழரின் இறைச் சிந்தனையை உலகியல் அளவிற்கு கொண்டு செல்லும் சமயம்.
உருவ வழிபாடு என்பது சரியை, கிரியையில் நிற்போருக்கே தேவைப்படும். யோகிகளும் ஞானிகளும் இறைவனை உணர்வால் உணர்வர். ஆதலால், ஆந்திராவுக்கு ஒரு சாமி, தமிழ் நாட்டுக்கு ஒரு சாமி, கேரளாவுக்கு ஒரு சாமி என்று பேசுவதெல்லாம் சைவம் கூறும் நாற்பாதத்தின் உண்மைப் பொருளை அறியாதவர் பேசும் பேச்சு. ‘GOD does not have form but he resides within your soul. Realise it, then you will no ape the idol worship.’
தேனீ அவர்களே, முதலில் நான் எழுதியதை மீண்டும் இங்கே பிரசுரிக்கின்றேன் “இந்து மத போதங்கங்களில், ஸ்மிருதி, சுருதி என்று உண்டு. ஸ்மிருதி என்ற கணிப்பு, நமது முனிவர்களால், ஞானத்தால் எழுத பட்டது. உதர்ணதிர்க்கு அகத்தியர் எழுதிய இலக்கணம் போன்று. இன்று அவை நம்மிடம் இல்லை, மாறாக தொல்காப்பியர் எழுதிய இலக்கணம் அந்த இடத்தை நிரப்புகிறது. சுருதி, கடவுளால் நேராக மனிதர்களுக்கு தந்தது. பகவத் கீதை போல.” நீங்களே மனு சாஸ்திரத்தை ‘மனு ஸ்மிருதி’ என்று குறிப்பிடுகிர்கள். அப்படி என்றால் அது நமது முனிவர்களால், ஞானத்தால் எழுத பட்டது என்று பொருள். மனு சாஸ்திரத்தில் இருந்து பிறக்க வில்லை சனாதன தர்மம். சரி கருத்துக்கு வருவோம்: மனு சாஸ்திரம் படைக்கும் கடவுளான பிரம்மாவிடம் இருந்து தனது மகன் மனு விற்கு தரபட்டது. இது படைக்கும் இடத்திற்கு, படைக்கும் தருணத்திற்கு , படைக்கும் தொழிலுக்கு தரபட்டது !. (பின் குறிப்பு: பிரம்மா சிவனின் சிறசை (தலை முடியை) முதலில் கண்டதாக பொய் கூரியதால், அவருக்கு மூவுலகிலும் தனி பட்ட ஆலயமோ அல்லது அன்பர்கள் வழிபாடோ கிடையாது என்று சிவனும் விஷ்ணுவும் சபித்து விட்டனர். மேலும் தனது உடம்பில் இருந்து உருவாகிய காயத்ரியையும் தானே மணமுடித்தால், அவருக்கு சாங்கிய சம்ப்ருதாயங்கள் மூவுலகிலும் இல்லாமல் போனது – மகளையே மணந்தார் என்ற குற்ற சாட்டில் இருந்து). இந்த மனு சாஸ்திரம் 2684 சுலோகங்களை, 12 அத்யாயங்கள் கொண்டது. முதல் அத்யாயம்: உலகத்தின் படைப்பு, இரண்டு முதல் ஆறாவது அத்யாயம் வரை: மூன்று முதல் வர்ணாசர (பிராமன, ஷத்ரிய, வைசிய) பிரிவினர்களின் நடத்தைகளின் ஒழுங்கு பிரிவு, ஏழாவது அத்யாயம்: அரசானின் பிரத்தியேக கடமை, எட்டாவது அத்யாயம்: பொது மற்றும் குரோத அல்லது பாதக சட்டம். ஒன்பது – பத்தாவது அத்யாயம்: மணமுறிவு (வர்னாசரமதிர்க்கு) ஏற்றார் போல், ஜீவனாம்சம் முதலியவைகளை கொண்டது. பதினோராவது அத்யாயம்: தவம் சம்பந்தபட்டவை, பனிரெண்டாவது அத்யாயம்: பாவ புண்ணிய கர்மாக்கள். இந்த புத்தகம் மனிதர்கள் இன பெருக்கம் செய்த முதல் யுகமான சத்ய யுகத்திற்கு எழுத பட்டது. காரணம் அங்கே தேவர்களும் முனிவர்களும் ஷத்ரியர்களும் வைசியர்களும் மட்டுமே பூஜை புனஸ்காரம் செய்தனர். அவர்களை காக்க மூர்க்கமான அசுர குல மனிதர்களை போன்ற தோற்றமுடைய அசுரர்கள் அல்லது சூதிரர்கல் இருந்தனர். இந்த சூதிரர்கல் சாபத்தால் அசுரர்கள் ஆனார்களே தவிர, மற்றபடி இவர்களும் மனிதர்கள்தான். அவர்களை (சூதிரர்களை) ஒழுங்கு படுத்தவே, சட்டங்கள் கடுமையாக இருந்தன. உதாரணதிற்கு உயர்ந்த மூன்று குல சீமான்கள் கற்பழித்து விட்டால் அவர்களுக்கு மன்னிப்பு. அதுவே சூதிரர்கல் செய்தால் மரண தண்டனை. (இங்கே சில குழப்படிகள் நடந்ததை திலிப் 2 மறுக்க வில்லை) இந்த காலத்தில் தான் மனித குல பெருக்கத்திற்கான முக்கிய தருணம். (ஆதாம்-ஏவாள் முதல் மனிதர்கள் என்றால், அவர்கள் வம்சாவளியினர் சகோதரி மற்றும் சகோதர சேர்க்கையினால் மட்டுமே இன பெருக்கம் செய்திருக்க முடியும். இதை அவர்களின் நூலே குறிப்பிடுகிறது) ஆனால் நாம் அப்படி அல்ல. நமக்கு மக்கள் தொகை பெருக்க சில நிபந்தனை அற்ற சட்டங்கள் தேவை பட்டன. இங்கிருந்துதான் நான்கு வகை வர்ணாசரமம் தொடங்குகின்றது. ஆனால் வேதங்கள் நால்வரையும் சமமாகவே போற்றுகின்றது. இங்கே நடந்த பிரச்னை என்ன வென்றால் சத்ய யுகத்திற்கு, மனு விற்கு எழுத பட்டத்தை வைதீக மத தலைவர்கள் கலியுகத்தில் வழுவாமல் பிடித்து கொண்டாதுதான் வேதனை. DR .அம்பேத்கர் கதறி கதறி அழுதார் இந்த நிலையை பார்த்து. காரணம் தலித் (தீண்ட தகாதவர்கள்) என்று ஒரு பிரிவு ஆரம்பத்தில் இல்லவே இல்லை. பின்னாளில் மத தலைவர்கள் செய்த அயோக்க தனம் இது. ஆனால் ஷேன்மத தொற்றதிர்க்கு பிறகு, இந்த வர்ணாசரமம் குறைந்திருக்கிறது. இன்னும் சில தலை முறையினர் அதை இல்லாமல் செய்து விடுவார்கள் காரணம் ‘ஆண் -பெண் காதல்’ எல்லா எல்லைகளையும் உடைத்தெறியும். யஜுர் வேதம் 18:48 “நமது பிராமணர்களுக்கு மிளிர்வு தா , நமது அரச குமாரர்களுக்கு மிளிர்வு தா, நமது வைசியர்களுக்கும், சூதிர்கலுக்கும் மிளிர்வு தா”
புலியை பார்த்து பூனை சூடு போட்டுக் கொண்டது நாம் அல்ல. அவர்கள். ஒரு கடவுள் வழிபாடு நம்மிடையே ஏதோ இன்றுதான் ஏற்பட போவதாக நினைத்துக் கொண்டு பழமொழியை தலைகீழாக போட்டு நமக்கு உபதேசம் செய்வது தமிழரின் சமய வரலாறு அறியாதவர் பேசும் பேச்சு. பிறரைப் பார்த்து தமிழர் பின்பற்றுவதல்ல ஒரு கடவுள் வழிபாடு. நமக்கு ஆகம முறை வழிபாட்டை தமிழில் நெரிபடுத்தி தந்த திருமூலரின் காலமாகிய 3-ம் நூற்றாண்டிலிருந்தே வழிமுறையாக வருவது ஒரு கடவுள் வழிபாடு முறை. இதைத்தானே தென்கலை வைணவர்களும் பின்பற்றி நாலாயிர திவ்ய பிரபந்தம் படைத்தார்கள். இதை இல்லை என்று சொன்னால் முழு பூசணிக்காயை சோற்றில் மறைத்து மூடுவதற்கு ஒப்பாகும். அவ்வாறே 3-ம் நூற்றாண்டில் வாழ்ந்த காரைக்கால் அம்மையாரும் சிவநெறியாகிய ஒரு கடவுள் வழிபாட்டில் நின்றார். அதனை பின்பற்றியே நால்வர் பெருமக்கள் 7-ம் நூற்றாண்டு முதல் சிவ நெறியில் முழுமையாக தங்களை அர்பணித்துக் கொண்டார்கள். அவ்வாறே 63 நாயன்மார்களும். இவர்களின் 2-ம் & 3-ம் நூற்றாண்டுகளில் வாழ்ந்தவர்களும் உண்டு. தமிழர்களால்தான் தமிழரின் சமய வரலாற்றை அறிந்துக் கொள்ள முடியும். தங்களை தமிழர் அல்லாதோர் என்று நிறுவிக் கொண்டோர், தமிழரின் சமய வரலாற்றை அறியாமல் வேற்றொரு நிலையில் நின்று சைவத்தை வியாக்கீனம் செய்தால் அது தமிழரின் சமயத்தை அறியாமல் செய்யும் தவறு.
திலிப் தாங்கள் இணையத்தில் இருக்கும் கட்டுரையைப் படித்து பெற்ற ஞானத்தில் இருந்து எழுகின்றீர்கள் எனக்கு நன்றாகவேத் தெரிகின்றது. கண்காணாத நாளில் இருந்து பெற்ற சாதிரமானால் அதை 21-ம் நூற்றாண்டு வரை செயல்படுத்தி பிறப்பின் அடிப்படையில் பிராமணர்கள் என்போர் நடத்தும் நாடகங்களை திருத்த தங்களால் இப்பிறவில் முடியாது. அதுவே உண்மை என்று ஏற்றுக் கொண்ட தங்களுக்கு நன்றி.
இந்து மதத்தில் ஆகமங்கள் 3. இவை மந்திர யந்திர தந்திரங்களால் ஆனது. மூன்று ஆகமங்கள் யாதெனில், அவை முறையே வைஷ்ணவம், சைவம் மற்றும் சாக்தகம் சார்ந்தது. இவை அனைத்தும் நான்கு வழிகளில் போதிக்க படுகின்றன. அவை முறையே ஞான, யோக, கிரிய, சர்ய வழிகள். இந்த வழிகளை கோவில்லில் , சிலைகளில் மற்றும் வழிப்பாட்டு முறைகளில் காணலாம். வைஷ்ணவ ஆகமம்: வைகானச, பன்ஜரற்ற. ப்ராதிச்தசர, விஜ்னானலளித்த முறைகளை கொண்டுள்ளது; மொத்தம் 215 உட்பிரிவுகளை கொண்டுள்ளது. சைவ ஆகமம் ப்ரத்யாபிஜினா என்ற கூட்டு மார்க்கமாக, அத்வைதம், காஷ்மீரி சைவிசம், மற்றும் இதர சைவ சித்தாந்தங்களை உள்ளடிக்கியாவை (மூல கூற்றுகலாக 28, துணை கூற்றுகலாக 20 உள்ளது). சாக்தக ஆகமங்களில் 77 உட்பிரிவுகள் தேவியை வணங்குகின்றன. சிலர் இதை ஆதிபராசக்தியின் ஆகமம் என்றே நம்புகின்றனர். எப்படி பார்த்தாலும் கடவுள் ஒன்றே என்ற வழிமுறையை ஆகமங்கள் தெளிவாக தரவில்லை ஐயா! ஆ ஊ என்றால் நான் தமிழரே இல்லை என்றும் …. என்பரம்பரையையே கோளாறு என்றும் கூரும் தேனீ அவர்களே….. எங்கே நீங்கள் கூரிய ஆகம ஒரே கடவுள் வெளிப்பாடு ? தோசையை திருப்பி பார்த்திருக்கிறேன். தோசை கல்லை திருப்பியும் கேள்விபட்டிருக்கிறேன். ஆனால் அடுப்பை திருப்பி இப்பொழுதான் ஐயா பார்கிறேன். மனிதனுக்கு சைவமும் வைஷ்ணவமும் இரு கண்கள், இதில் நெற்றி கண்தான் சாக்தகம். சும்மா புதுசு புதுசா உருவாகாதிர்கள்!
இப்பதான் தாங்கள் ஒவ்வொன்றாக உண்மையை ஒப்பிக் கொண்டு வருகின்றீர்கள். இந்து மதம் என்று ஒன்று இல்லை. அப்படிச் சொல்வது, சைவம், வைணவம், சாக்தம் என்ற மூன்று பிரிவுகளில் உள்ள தனித்தனி ஆகமங்களைக் கொண்டுதான் திருவுருவ வழிபாடு ஆலயத்தில் செய்ய முடியும். இருக்கு முதல் உள்ள ஆரிய வேதத்தின் வேள்வி வழிபாடு இம்மூன்றின் ஆகமங்கள் இல்லாமல் ஆலயத்திற்கு வெளியேதான் செயல்பட முடியும். இந்த உண்மையையும் தாங்கள் ஒப்பிக் கொள்ள வேண்டும். இதற்கே “வேதாகமம்” என்ற கூட்டுக் கலவையை ஏற்படுத்தி ஆரிய வேதம் ஆலயத்தில் செயல்படும் என்று சொல்கின்றீர்கள். “வேதம்” என்பது தமிழில் ஒரு சமயத்தின் மறையை குறிக்கும் பொதுச் சொல். சைவத்தின் “வேதம்” என்பது அதன் 28 ஆகமங்களாகும். அதில் ஒன்பதை தமிழில் திருமூலர் தந்தருளியது எங்களின் பாக்கியம். மீண்டும் சொல்கின்றேன் தமிழர் கண்ட சுத்த சைவம் மெய்கண்டாரின் வழி வந்த சாத்திர நூல்கள் அருளிய தத்துவங்களைக் கொண்டும் அதன் வழி வந்த பக்தி நெறிகளையும் கொண்டு தனித்துவத்துடன் தனிப் பெரும் சமயமாக செயல்பட வல்லது. அவ்வாறே தொன்று தொட்டு செயல்பட்டும் வந்துள்ளது. இடையில் வந்த ஆரியக் கலப்பில் சற்றே நிலை தடுமாறிப் போயிருந்தாலும், எம்பெருமான் எங்களை கை விடாமல் இருக்கும் ஆகமங்களையும், திருமுறைகளையும், மெய்கண்ட சாத்திரங்களையும் சைவத்தின் வழி செவ்வனே செயல்பட வைத்திருக்கின்றார். ஆக ஆரிய வேதங்களுக்குத்தான் சைவ ஆகமத்தின் துணை தேவையே அன்றி அதற்கு நேர்மாறாக இல்லை என்பதனை திலிப் போன்றோர் உணர்ந்தால் சரி. இதுதான் அடுப்பையே திருப்பி போடுவது என்பது. புரிந்தால் சரி.
சைவமும், வைணமும் இரு கண்கள் என்று சொல்லிக் கொண்டு முன்னதில் சுண்ணாம்பை விட்டுக் கொண்டு பார்ப்பதும் பின்னதில் வெண்ணையை விட்டுக் கொண்டு பார்பதும்தான் ஆரிய பிராமணருக்கும், அவரைச் சார்ந்தோருக்கும் இதுவரையில் இந்து தர்மமாக இருந்து வந்துள்ளது என்பதை நான் சொல்லியா பிறருக்குத் தெரிய வேண்டும்?.
சைவம் கடவுள் ஒன்றே என்று தெளிவாக நிறுவுகின்றது. அதற்கு ஆதாரங்கள் பல. தாங்கள் சொல்லும் இந்து மதம் என்ற வைதீக மதத்தின் ஆரிய வேதங்கள் சொல்வது “பிரம்மம்” என்பதே முழுமுதற் பரம் பொருள். அப்புறம் ஏன் விதண்டவாதகமாக கடவுள் ஒன்றா பலவா என்று வாதம் செய்கின்றீர்கள்?. கடவுள் பல என்று தாங்கள் வாதாடினீர்களானால் தங்களின் கருது இந்து மதம் என்ற வைதீக மதத்தின் கூற்றுக்குப் புறம்பாகி விடும். அப்புறம் அவர்களே தங்களை சீண்டும் அளவிற்கு வந்து விடும்.
“உலகத்திலேயே எந்த வித சந்தேகமும் இல்லாமல் மனிதனின் மனதை விளக்கிய ஒரே நூல் பகவத் கீதை. ஆகையால் நாம் ஏன் மற்ற மார்க்கங்களுக்கு இணையாக தான் வெளிப்பாடு முறையை கையாள வேண்டும் என்கிறீர்கள்?”. அப்பனே, திருவள்ளுவர் ஆசான் திருக்குறளில் சொல்லாததா?. தமிழராக வாழ்வோருக்கு திருக்குறளே அவர்தம் அறவழி வழிகாட்டியாகும். இதுவே சைவம் தமிழருக்கு காட்டும் அற வழியாகும். தமிழர் அல்லாதோர் பிறச் சமயங்களின் வழிகாட்டி நூலை பின்பற்றுவது அவரவர் உரிமை. அதனால், ஆரியரின் நூல்களைக் கொண்டு தமிழரின் பண்பாட்டை குலைக்க வேண்டாம் காரணம் பகவத் கீதையும் வருணாசிரம கோட்பாடுக்கு இடமளித்துள்ளது. ஆகையால், திருக்குறள் தமிழரின் பண்பாட்டை ஒட்டி இருக்கும் அற வழிகாட்டியாததால் தமிழர் அவர்தம் வாழ்க்கை நெறிகாட்டியாக திருக்குறளின் போதனைகளை பின் பற்றுவோமானால் நம் வாழ்க்கை சிறப்படையும் என்பதில் சற்றும் சந்தேகமில்லை.
ஐயகோ “இந்து மதத்தில் ஆகமங்கள் 3. அவை முறையே வைஷ்ணவம், சைவம் மற்றும் சாக்தகம் சார்ந்தது”. இப்படி தெளிவாக எழுதியும் தாங்கல் இன்னமும் கடவுள் சிவம் என்கிறீர்கலே” அடுப்பை தூக்கி தலையில் போடுவதை தவிர வேறு வழியில்லை! ஐயா அறிவு கொழுந்தே , தேனீ அவர்களே ஆகமம் மூன்று என்றால் எப்படி ஐயா கடவுள் ஒன்று என்று வரும்? ஆகமத்திற்கும் கடவுள்களுக்கும் முன்பிருந்த பர பிரமம் தான் ஒன்று, அது அன்னை ஆதிபராசக்தி. பர பிரமம் வேறு, எல்லவற்றையும் கடந்து , உள் கட உள் கட உள் கட தோன்றும் கடவுள் வேறு. என் தந்தையின் உள்ளே சென்று, அவர் தந்தையின் உள்ளே சென்று …இப்படி கடந்து சென்று கடந்து சென்று கடந்து சென்று பார்த்தல் ஆதியில் என் குலத்தை படைத்தவர்கள் அங்கே இருப்பார்கள். அவர்களைத்தான் கடவுள் என்போம். ஆனால் இந்து மதத்தில் கடவுள் வேறு, கடவுளை தோற்று வித்த பரபிரமமும் வேறு. அப்படியே தேவதைகளும் வேறு. இந்து மத கடவுள்கள் பிரம்மா விஷ்ணு மகேஸ்வர். பிரம்மா தான் உயிரினங்களை தோற்று வித்தார். ஆகையால் உயிரினால் தங்கள் உள்ளேயே கடந்து சென்று கடவுளை காணலாம். இறந்த பின்பு மகேஸ்வரரை காணலாம். வாழும் பொழுது விஷ்ணுவின் கருணையை காணலாம் . குழப்பவாதிகள் கடவுளும் பரபிரமமும் ஒன்று என்று உண்டாக்கி வைத்து விட்டார்கள். இது மற்ற மத போதனை. குழம்பாதீர்கள் . சரி உங்கள் பாதையிலேயே கேள்வியை கேர்கிறேன், சிவா பெருமான் ஏன் இன்னமும் சாக்தகத்தை (சக்தியை கொண்ட சாக்தகம்) பூமியில் பயனீட்டில் வைத்துள்ளார் ? கடவுள் ஒன்றென்றால் பிறகு ஏன் மற்ற மார்க்கத்தை பயநீடில் வைத்துள்ளார். சக்தி இல்லையேல் சிவம் இல்லை! ஒரு ரூபாய்க்கு 2 வாழை பலம்; அந்த இன்னொன்று தான் இது என என்னை டென்ஷன் படுத்துகிறீர்களே !!! வேதம், கடவுள் என்றால் என்ன என்று விளக்க வந்தது. அதில் மனிதனுக்கு இடம் (முன்னுரிமை) இல்லை. ஆனால் கடவுளின் படைக்கும் ரகசியத்தை விளக்க 6 உபநிஷ் நேரடியாக வேதத்தில் பயன் படுத்த பட்டிருக்கிறது. நீங்களே புதிதாக வேதம் என்றால் என்ன என்று உங்களுக்கு என்ன விளங்கியதோ அதையையே விளக்கமாக தருகிறீர்கள்; அதிலும் குறிப்பிட்டு சித்தர்களின் தெய்வீக அனுபவத்தை வைத்து. இதைதான் போலியான வியாக்கியானம் என்பார்கள். ஆதியில் கடவுள் மனிதர்களை படைத்தார் ஆனால் படைக்க பட்ட மனிதர்களின் வம்சாவளியினரை தாங்களே படைக்கும் படி படைத்தார். இருப்பினும் தான் மனசு வைத்தால் மட்டுமே குழந்தை பாக்கியம் கிடைக்க அருள் செய்கிறார். கடவுளிடம் இருந்து குழந்தை பாக்கியம் பெற்றதனால், அவர்கள் பெற்றோர்கள். என்னை படைத்தது என் தந்தையும் தாயும். கடவுளிடம் என் பாவ கணக்கு தீரவில்லை அதனால் பிறந்திருக்கிறேன். ஆகையால் மற்ற மத போதனைகளை வைத்து இந்து மத போதனைகளை பார்காதிர்கள்.
சைவ சித்தாந்திர்க்குப் புறம்பான எவ்வொரு புராணக் கதைகளுக்கும் சைவத்தில் இடமில்லை. பரம்பொருளாகிய சிவபெருமான் எவ்வொரு அவதாரமும் எடுப்பதில்லை. யாருடனும் கூடித் திருமணம் செய்து பிள்ளைப் பெற்றுக் கொள்வதில்லை. இதுவே சித்தாந்தம். சித்தாந்தம் இப்படி இருக்க, “மகாவிஷ்ணுவின் பெண் உருமாற்றம் தான் மோகினி அவதாரம். அந்த பெண் உருமாற்றமும் சிவ ஒன்றினைப்பும் தான் சுவாமி ஐயப்பன்” என்று கூறும் புராணக் கதைகளுக்கு கொடுக்க வேண்டிய தேர்ச்சி புள்ளிகள் “0” தான். அவனைரும் ஒன்றைத் தெளிவாகப் புரிந்துக் கொள்ள வேண்டும். எப்பொழுதெல்லாம் இந்தியாவில் தோன்றிய தனித்தனி சிறு மதங்களும், பரம்பொருளை விடுத்து, மற்றத் தெய்வங்களை அடிப்படையாக கொண்டு எழுந்தவையும் தானே தன் சுய காலில் நிற்க முடியாமல் ஏதாவது ஒரு மதத்தில் கூறும் பரம்பொருளின் கையைப் பிடித்துக் கொண்டு அவரவர் வணங்கிய தெய்வங்களுக்கு புதுப் புது கற்பனைக் கதைகளை உருவாக்கி அவர்தம் தெய்வங்களை உயர்வு நிலைக்கு எடுத்துச் சென்றார்கள். அதுவே புராணத்தின் பெரும்பகுதி. கல்வி அறிவும், பகுத்தறிவும் வளர்ந்த 21-ம் நூற்றாண்டில், புராணக்கதைகளின் வழி பழங்காலத்தில் பக்தி மார்க்கத்தில் நின்ற நாம், நம்முடைய சமயத்தின் ஒரு பரிணாம வளர்ச்சியாக புராணத்தை விட்டு சமய தத்துவங்களின் அடிப்படையிலும், அத்தத்துவங்கள் உணர்த்தும் இறை நெறிகளிலும் நின்றோமானால் இவ்வுலகில் இதர மதங்களை நாம் வெற்றிக் கொள்ளவோம். இல்லையேல், பிற மத்தத்தவர் நம்மை வெற்றிக் கொள்வார். முடிவு, இதைப் படிக்கும் அறிவார்ந்த தமிழர்களின் கையிலுள்ளது.
“தேனீ அவர்களே குழம்பாதீர்கள்! கடவுள் ஆணா அல்லது பெண்ணா என்றால் ? இந்து மதத்தில் கூரி இருப்பதுபோல, அந்த பர பிரமம் ஒரு பெண்”. ஆரிய வேதத்தில் குறிக்கப்படும் “பிரம்மம்” ஒளி வடிவானது என்றும், அது மிக ஒளி பொருந்தியது என்றும்தான் இது வரை கற்று வந்திருக்கின்றேன். அது ஒரு “பெண்” என்று திலிப் சொல்லி நான் தெரிந்துக் கொள்வதா?. அவ்வாறு கற்ப்பித்தது சாக்த மரபினர் என்று புரிந்துக் கொள்ளுங்கள் திலிப் அவர்களே. சைவத்தில், இறைவன், ஆணும் அல்லன், பெண்ணும் அல்லன், அலியும் அல்லன். சடப் பொருளைப் போன்று இன்னது என்று சொல்லி சுட்டி அறியப் படும் பொருள் இறைவன் அல்ல என்பது சித்தாந்தத்தின் நியதி. அதுவே அவன் வியாபகமாணன் (எங்கும் நிறைந்திருப்பவன்) என்பதற்கு கொடுக்கும் தகுதி. தங்களின் வீராப்பு பேச்சை எந்த வேதாந்தியாவது செவி மடுத்தால் தங்கள் தலையிலே தட்டி விடுவார்கள். கவனம்.
“இந்து மதத்தில் கூரி இருப்பதுபோல, அந்த பர பிரமம் ஒரு பெண். ஆகயால் தான் அன்னை ஆதிபராஷக்தி, பிரம்மா விஷ்ணு மகேஸ்வர் என்று அந்த மூவரையும் முதலில் படைத்தார்” என்று திலிப் கூறி இருப்பதின் மூலம் சாக்த மதத்தின் புராணக் கதைகள். இந்த கற்பனைக்கு சைவ சித்தாந்தத்தில் இடமில்லை காரணம் சிவபெருமான் ஆதியும் அந்தமும் இல்லாதவன் என்பதே சித்தாந்தத்தின் முடிபு. அவன் “தன் வயத்தன்”. எதையும் சார்ந்து இருப்பவன் அல்லன். ஆதலால் பராசக்தியின் இருந்து தோன்றியது என்பது சாக்த மரபினர் சிவனை கீழ்நிலைப் படுத்தும் யுக்தியே. இதுவே இந்தியாவில் தொன்று தொட்டு நடந்து வரும் சமய அரசியல் சாக்கடை என்பதை புரிந்துக் கொள்ளுங்கள். ஆதாலால், தங்களின் புராணக் கதைகளின் மூட்டைகளை எல்லாம் இந்து மதத்தோடு நிறுத்திக் கொள்ளுங்கள். சைவத்திற்குள் கொண்டு வராதீர்கள். நாங்கள் சுத்தமாக இருக்கின்றோம். சமய அரசியல் சாக்கடையில் எங்களையும் நுழைத்து சைவத்தையும் கூவம் ஆக்காதீர்கள் என்று தாழ்மையுடன் கேட்டுக் கொள்கின்றேன்.
ஆகமம் 3 என்று தாங்கள் சொல்வது சைவம், வைணவம், சாக்தம் என்ற மூன்று வெவ்வேறான மதங்களின் தனித்தனி சமய கோட்பாடு என்பதனை முதலில் புரிந்துக் கொண்டு அம் மூன்றையும் தாங்கள் இந்து என்று ஒன்றாக இணைத்துக் கொண்டு, இந்து மதத்தில் 3 கடவுள் என்று கூறுவது சமயத்தை அறிந்த அறிஞர்களுக்கு மண்டை வெடித்து விடும். தயவு செய்து இந்தியாவின் தனித்தனி சமயங்களின் கூறுகளைப் புரிந்துக் கொள்ளாமல் கண்ணா பின்னா என்று எழுதிக் கொண்டிருந்தீர்களானால் எம்முடைய நேரம் வீண் என்று மேலும் மறுமொழி இடுவதை நிறுத்த வேண்டி வரும். மூடர்களுடன் பேசிப் பயன் இல்லை என்பது எம் கருத்து.
எங்கும் இருப்பவனை ஏன் குறிப்பிட்டு சிவம் என்கிறீர்கள் ? ஏன் 12 குறிப்பட்ட ஜோதிர்லிங்கங்களை மட்டும் சிவனின் அவதாரம் என்கிறீர்கள் ? சிவன் 12 முறை லிங்கமாக அவதரித்துள்ளார் என்று சைவம் சொல்கிறது. நான் உங்களை நன்றாக புரிந்து கொண்டேன் இப்பொழுது. பிரச்னை வந்தால் நீங்கள் சைவர், இல்லை என்றால் சைவ சித்தாந்தர். விளக்க முடிய வில்லை என்றால் சைவதிர்க்குள் ஒளிந்து கொள்வது, விளக்க முடிந்தால் சைவ சித்தாந்தர் என்பது. சிவமே பார்வதியை பக்கத்தில் வைத்திருந்தாலும் கூட, நீங்கள் விரட்டி அடிப்பீர்கள் காரணம் சிவம் ஒன்றே. அதற்கு மனைவி என்று எந்த ஒரு பந்தம்மும் இருக்க கூடாது. பிள்ளைகள் என்று எவனாவது வந்தால் தலை தட்டு தான் ! அப்படிதானே தேனீ அவர்களே ? காரணம் மற்ற மத கடவுள் ஒருவனாக இருக்கும் பொழுது , சிவம் மட்டும் ஏன் குடும்பம் நடத்த வேண்டும்? நீங்கள் கூறிய கதையையே எடுத்து கொள்வோம். விநாயகர் அம்மை அப்பனை சுற்றி வந்து பழம் வாங்கி கொண்டதை விளக்க பயன் படுத்துகிறீர், ஆனால் சிவத்திற்கு பார்வதி இருப்பதை ஒத்து கொள்ள மாட்டேன் என்கிறீர்கள் , சரி கங்கையாவது யெற்று கொள்வீர்கள இல்லை அதுவும் கோவிந்தாதானா ? முருகனுக்கு வள்ளி தெய்வானை, திருமாலுக்கு பாமா ருக்குமணி, விநாயகருக்கு சித்தி புத்தி, இப்படி பல பல ….. ஒத்துகொள்ள மாட்டேன் என்பீர்களே ? அதுதான் இது 1 அப்படிதானே ?
இப்படி குரோஸ் கணக்கில் கடவுளையும், தேவதைகளையும் வைத்துக் கொண்டு இந்து மதத்தில் எப்படியாவது தாங்கள் கட்டிப் . புரளுங்கள் திலிப். சைவத்தில் பரம்பொருள் ஒன்றே. அப்பரம்பொருளின் குணமாகிய திருவருளையே சைவர்கள் சத்தியாகப் பார்க்கின்றோம். அதில் எவ்வொரு மாற்றமும். இல்லை. நாம் இருவரும் வெவ்வேறு சமயங்களைப் பற்றி அர்த்தமற்று கருத்து எழுதிக் கொண்டிருப்போமானால் படிப்பவர்களுக்கு புளித்துப் போய் விடும். சைவத்தின் நிலைக்குப் புறம்பான நெறிகளை தமிழரிடையே எவரும் போதிப்பார்களானால் அதனை எதிர்த்து எம் குரல் என்றென்றும் ஒலித்துக் கொண்டே இருக்கும். சிவ, சிவ.
தேனீ அவர்களே, “சைவ சித்தாந்திர்க்குப் புறம்பான எவ்வொரு புராணக் கதைகளுக்கும் சைவத்தில் இடமில்லை.” இதை பார்க்கின்ற பொழுது சைவம் முதலில் வந்ததா அல்லது சைவ சித்தாந்தங்கள் முதலில் வந்ததா ? சிவமே வந்து சொன்னாலும் நீங்கள் சைவ சித்தாந்தங்கள் தான் முதலில் வந்தது சிவமே பின் வந்தது என்பீர்கள், அப்படிதானே ?
“சிவா பெருமான் ஏன் இன்னமும் சாக்தகத்தை (சக்தியை கொண்ட சாக்தகம்) பூமியில் பயனீட்டில் வைத்துள்ளார்”. இது என்ன கேள்வி. “யாதொரு தெய்வம் கொண்டீர் அத்தெய்வம் ஆகி, ஆங்கே
மாதொரு பாகனார்தாம் வருவர்” என்ற தத்துவத்தின் படி தாங்கள் எதை வணங்குகிண்றீர்களோ அங்கே அவ்வுருவில் சிவனே வந்து அருள் புரிவார் என்று இதற்கு முன்னமே கூறியதை புரிந்துக் கொள்ளாமல் இப்படி கேட்டுக் கொண்டிருந்தால் “விடிந்தவுடன் இராமன் சீதைக்கு சித்தப்பாவா” என்று கேட்ட மாதிரி இருக்கு. நல்லா இருக்கு தங்களின் அர்த்தமற்ற கேள்வி. சைவம் அன்பு நெறி. அது எதனையும் அழிக்காது மாறாக அனைத்தும் காக்கும். இதுவே உலக சமயம் என்பதற்கு போதிய ஆதாரம்! இன்று இத்தோடு நிறுத்துவோம்.
ஆகமம் 3 என்று தாங்கள் சொல்வது சைவம், வைணவம், சாக்தம் என்ற மூன்று வெவ்வேறான மதங்களின் தனித்தனி சமய கோட்பாடு என்பதனை முதலில் புரிந்துக் கொண்டு அம் மூன்றையும் தாங்கள் இந்து என்று ஒன்றாக இணைத்துக் கொண்டு, இந்து மதத்தில் 3 கடவுள் என்று கூறுவது சமயத்தை அறிந்த அறிஞர்களுக்கு மண்டை வெடித்து விடும். தயவு செய்து இந்தியாவின் தனித்தனி சமயங்களின் கூறுகளைப் புரிந்துக் கொள்ளாமல் கண்ணா பின்னா என்று எழுதிக் கொண்டிருக்காதீர்கள்.
“எங்கும் இருப்பவனை ஏன் குறிப்பிட்டு சிவம் என்கிறீர்கள் ? ஏன் 12 குறிப்பிட்ட ஜோதிர்லிங்கங்களை மட்டும் சிவனின் அவதாரம் என்கிறீர்கள் ? சிவன் 12 முறை லிங்கமாக அவதரித்துள்ளார் என்று சைவம் சொல்கிறது.” சைவத்தைப் பற்றி கேள்வி கேட்க முதலில் சைவனாக வேண்டும். அவ்வாறு இல்லையேல் சைவத்தின் உண்மை நெறிகளை பிறரால் புரிந்துக் கொள்ள முடியாது என்பதற்கு தாங்களே சிறந்த சான்று திலிப் அவர்களே. தொடரும்.
மு.பெ.சத்தியவேல் முருகனார் எனும் சைவரும் சிறந்த முருக பக்தரும் ஆனவர் (தமிழ் நாட்டைச் சேர்ந்தவர்) “எங்கும் இருப்பவனை ஏன் குறிப்பிட்டு சிவம் என்கிறீர்கள்” என்பதற்கு இப்படி பதில் சொல்லியுள்ளார். அவர் அனுமதியின்றி இங்கே அதனை பிரசுரிக்கின்றேன் பெரியவர் பொறுத்தருள்வாராக:
..” இக்கடவுள் வாழ்த்து முழுவதும் (புறநானூறு) சிவபெருமானின் அடையாளங்களோடு கடவுளை வாழ்த்துவது. இதில் ஓரிடத்திலும் சிவன் என்ற பெயர் கூட கிடையாது காரணம் கடவுள் பலராய் இருந்தால் அதில் ஒருவரைச் சுட்ட பெயர் வைக்கலாம். ஆனால் கடவுள் ஒருவரே என்பதால் அதற்குப் பெயரிடுவது அபத்தமாகி விடும் என்பதால் தமிழர்கள் கடவுளுக்குப் பெயரிடுவதைக் கூட தவிர்த்தார்கள். இந்தக் கொள்கை சங்க இலக்கியங்கள் முழுதும் காணலாம். “பிறவா யாக்கைப் பெரியோன்”, நீலமணி மிடற்றோன் என்ற அடையாளங்களை உடைய கடவுளைச் சங்க இலக்கியங்கள் பெயர் சுட்டிக் கூடக் குறிப்பிடுவதில்லை. “சிவன்” என்றவாறு அழைப்பது கூட அக்கடவுள் மாதொரு கூறன் என்பதைச் சங்கேதக் குறியீடுகளால் குறிப்பிட்டதுதான். சி – சிறப்பாகிய செம்பொருள்; வ – வனப்பாகிய சத்தி…. “. ஆக “சிவன்” என்பதும்” எம்பெருமானின் அடையாளமே (மாதொரு பாகன்) தவிர அது அவனுக்குடைய பெயரல்ல என்பதை அறிவீர். தொடரும்.
:
“சிவன் 12 முறை லிங்கமாக அவதரித்துள்ளார் என்று சைவம் சொல்கிறது”. யார் கூறிய சைவம் இது?. இந்து மதம் கூறும் சைவமா? அல்ல தமிழர் கண்ட சுத்த சைவமா?. லிங்கம் என்பதே இறைவன் தன் சொரூபத்தில் இருந்து உயிருக்கு அருள் புரியும்பால் தடத்த நிலைக்கு வரும் பொழுது கொண்டு வரும் அருவுருவத் திருமேனியாகும். இது வைதீக மதத்தில் சொல்லும் அவதாரம் இல்லை என்பதை அறிவீர்.
சிவனை அம்மை அப்பராக பார்ப்பதே சைவரின் மரபு. இதை விளக்க ஆம்பித்தால் நான் இன்று தூங்க முடியாது. சென்று வருகின்றேன்.
தேனீ அவர்களே, உங்கள் கூற்றின் வழி பார்த்தல்: ஆதியில் வைதீக மதத்தில் அழிக்கும் கடவுளாக அன்னை ஆதி பராசக்தியினால் உருவாக்க பட்ட சிவம் வேறு, நீங்கள் இங்கே வியாக்கியானம் செய்யும் சைவ சித்தாந்த சிவம் வேறு. சம்பந்த மில்லாத இருவரை பற்றிதான் நாம் விவாதித்து கொண்டிருக்கிறோம் போலிருக்கிறது !
சிவன் காளியை நாட்டியத்தில் வெற்றிக் கொண்டார் என்று தெற்கே சிவ புராணத்தில் ஒரு கதை வர, உடனே வடக்கே தோன்றிய சாக்த மரபினர் காளி, சிவனை நாட்டியத்தில் தோற்கடித்து சிவனை தன் காலால் மிதித்து சூலத்தால் குத்தியதாக சாக்தர்கள் ஒரு புராணக் கதையை ஏற்படுத்தினர். இன்றும் தாங்கள் இந்திவின் வடக்கே சென்றால் இத்தகைய சாமி படங்களை விற்பனைக்கு கடைகளில் வைத்திருப்பதை அனைவரும் கண்கூடாக காணலாம். ஏன் இப்படி?. இந்தியாவில் இப்படி பல சமயங்கள், அவரவர் கற்பனைக்கு ஏற்றவாறு ஒரு பரம்பொருள், தெய்வம் என்று உருவாக்கிக் கொண்டார்கள். இவர்களிடையே மதம் தலைக்கேறி, சமய போட்டா போட்டி வந்த பிறகு இப்படி எல்லாம் ஒரு சமயத்தவரின் பரம்பொருளை பிறர் தாழ்த்தி தாங்கள் வணங்கும் தெய்வமே சிறந்தது என்று கூறிக் கொள்வதற்க்காக வந்ததே பெரும்பகுதியான புராணக் கதைகள். இதைத்தான் இந்திய சமய அரசியல் சாக்கடை என்றேன். இதைச் சொல்ல பெரும்பாலோருக்கு தைரியம் வருவதில்லை காரணம் அவ்வாறு சொல்வது தெய்வ குற்றமாகி விடும் என்று பயமுறுத்தியும் மேலும் அவ்வாறு சொல்லும் சமய அறிஞர்களுக்கு தொல்லைகள் ஏற்படும் என்பதனால் நிறைகுடங்கள் எல்லாம் வாய் மலராமல் நமக்கென்ன வந்தது என்று செயலற்று இருக்கின்றார்கள். நானோ சிறியவன், சமயத்தில் கற்றது கை மண் அளவு. ஆதாலால் உண்மையை உள்ளவாறு எடுத்துச் சொல்வதில் எமக்கு ஒன்றும் பிரச்சனை இல்லை. சுத்த சைவம் கூறும் சிவனும் உலகில் பலரும் சிவன் என்று சொல்லுவதும் ஒரு பரம்பொருளே என்று அறிக. ஆனால் அவரவர் சிவத்தை வெவ்வேறு கண்ணோடத்தில் பார்க்கின்றனர் என்பதுதான் உண்மை. ஆரிய வேதத்தில் கூறப் படும் உருத்திரரும். சைவத்தில் கூறப் படும் சிவனும் ஒன்றே. ஆனால் அங்கே சிவனை ஒரு அதித்திட்ட தெய்வமாக (தேவராக) பார்க்கின்றனர். சைவத்தில் அச்சிவனை பரம்பொருளாக பார்க்கின்றோம். இதுவே அவரவர் கண்ணோடத்தில் ஏற்படும் வேறுபாடு. தொடரும்.
“ஆதியில் வைதீக மதத்தில் அழிக்கும் கடவுளாக”, சிவனை வைதீகர்கள் அழிக்கும் தேவராக பார்த்தார்கள் என்று சொன்னீர். தாங்கள் ஒரு உண்மையைப் புரிந்துக் கொள்ள வேண்டும். படைக்கும் தேவராக பிரம்மா படைக்க, காக்கும் தேவராக விஷ்ணு காக்க, அழிக்கும் தேவராக உருத்திரன் இருக்கின்றார் என்றால், பிரம்மா படைத்ததும் உடனே உருத்திரன் அதை அழித்து விட்டால் விஷ்ணுவுக்கு காக்கும் வேலை இல்லாமல் போய் விடும். அவ்வாறே ஒவ்வொன்றையும் பிரம்மா படைக்க அதை உடனே உருத்திரன் அழிக்க பிரம்மாவின் தொழிலும் செயல் அற்றுப் போகும். ஆதால், முதலில் கூறிய இரு தேவர்களும் தத்தம் தொழிலை செவ்வனே செய்ய சிவனே அவர்களுக்கு படைக்கும் தொழிலின் இரகசியத்தையும், காக்கும் தொழிலின் இரகசியத்தியும் உணர்த்தினார் என்பது திருமுறை பாடல்களில் வரும் சிவ புராணக் கதைகளின் சாரமாகும். உண்மை இப்படி இருக்க அதனை உணராமல் சிவத்தைப் பழிப்பது ஏனோ?. சிவ, சிவ.
சிவம் தன் மனைவி சக்தியை பிரிந்ததினால், எல்லாவட்ரையையும் இழந்து, பின்பு சக்தி இலையேல் சிவம் இல்லை என்று ஒப்பு கொண்டு, தன் உடம்பில் பாதியை தந்து, அர்த்தனாரீர்ஸ்வரர் அவதாரத்தை தர வில்லையா ? பாவம் சிவம் ! நிச்சயமாக இந்த சைவ சித்தாந்த வாதிகள் இந்த சிவத்திற்கு விவாகரத்து வாங்கி கொடுத்து விடுவார்கள், அவ்வளவு சைவ சித்தாந்த உட்கட்சி பூசல். அறிவியலில் ஒரு ஆண் மகன் உள்ளே ஒரு பெண் இருக்கிறாள் (chromosome ‘X’ represents female and ‘Y’ represents male) என்ற தத்துவத்திற்கு சைவ சித்தாந்தத்தில் வேலையில்லை. சுடுகாட்டு காளியை, ஒரு அசுரன், சிவா வேடம் பூண்டு தீய நோக்குடன் நெருங்கவே, அன்னை ஆவேசம் கொண்டு தலையை வாங்கினால். ஆனால் தேனீ அவர்களே வழக்கம் போல நீங்களே உங்களுக்கு விஷ ஊசி யெற்றிய அன்பர்களின் கதைகளை என்னிடம் ஒப்பிபானேன் ? ஐயா சாங்கிய யோகத்தின் வழி, யோகம் நான்காக பிரிகிறது. கர்ம யோகம், பக்தி யோகம், ஞான யோகம், ராஜ யோகம். இதில் தாங்கள் வாதிடும் சிவம் (characteristic of shiva) ஞான யோகி; காரணம் உங்கள் சித்தர்களின் பாடல் அப்படிதான் உங்களுக்கு போதிக்கிறது. நன் குறிப்பிடும் சிவம் வைதீக மத கடவுள். அவன் ஒரு சமுக பந்ததில் இருப்பவன், ஒரு துறைக்கு (அழிக்கும்) தலைவன். அன்னை சக்தியின் கணவன், இரண்டு குழந்தைகளுக்கு தகப்பன். அவன் சின்னம் காம சொருபம். ஏழரை சனியில் மாட்டி கொண்டு சுடுகாட்டில் பிணம் எரித்தான், அழிக்கும் துறைக்கு தலைவனாக இருந்தும்! சமுக சட்டங்களை ஒரு தலைவனே விருப்பத்திற்கு மாற்றி கொள்ள முடியாது. விருப்பத்திற்கு மாற்றி கொள்ளும் சக்தி அவனிடம் இல்லை! பக்தியின் முக்தியில் ஒரு கடவுளை எல்லையிலாமல் சித்தரிப்பதே சித்தர்களின் குறைபாடு. “கந்தன் காலடியை வணங்கினால், கடவுள் யாவரையும் வணங்குதல் போலே” என்ற பாடல் தமிழ் மார்க்கத்தில் தானையா வந்தது!
இந்து சமயத்தின் புராணங்களில் ஊறிப்போன திலிப் போன்றோருக்கு அச்சயத்தின் தத்துவங்களை எடுத்துரைக்கும் பொழுது அதனை ஏற்றுக் கொள்வது கடிமாக இருக்கின்றது. ஒரு நிலையில் பல காலம் நம்பிக்கையின் அடிப்படியில் இருந்து விட்டோருக்கு அந்நம்பிக்கை, அவநம்பிக்கையாவதை எளிதில் ஏற்றுக் கொள்ள முடியாது. அதுவே அவர் விரக்தியோடு பேசுவதற்குக் காரணம். எவ்வொருச் சமயமானாலும் அதன் தத்துவ நெறிதான் அதற்கு முதுகெலும்பு அவற்றின் தன்மையை உயர்த்திச் சொல்லவும், அத்தத்துவம் கேட்போரின் மனதில் (பெரும்பாலும் அக்காலத்து மாணவர்கள், பாமரர்கள்) ஆழாமாகவும் நிரந்தரமாக பதியவும் உதவுவது புராணக் கதைகள். ஆனால், சமயம் கூறும் தத்துவத்தை நீக்கி விட்டு புராணக் கதைகளை மட்டும் கெட்டியாகப் கட்டிப் பிடித்துக் கொண்டால் அந்த மதத்தைச் சார்ந்தவர் கோவிந்தா, கோவிந்தா. மெய்பொருளின் உண்மையை அறியாமல் மயக்கத்திலேயே வாழ்வர். திலிப் எப்படியோ?. இந்து தருமர் எப்படியோ?.
“ஏழரை சனியில் மாட்டி கொண்டு சுடுகாட்டில் பிணம் எரித்தான்.” இதைத்தான் சைவம் தங்களின் “ஒரு கண்” என்றீர்களோ?. இதுதான் சுன்னாம்ம்பைப் போட்டுக் கொண்டு பார்க்கும் நொள்ளைக் கண் என்று நான் முன்னமே சொன்னேன். சொன்னது தங்களின் திருவாய் வழியாகவே உலகோருக்குத் தெரிந்து விட்டது. வாழ்க உண்மைச் சைவத்தை அழிக்கப் புறப்பட்ட தங்களின் இந்து ‘மத’ சமயத் தொண்டு!.
“அழிக்கும் துறைக்கு தலைவனாக இருந்தும்! சமுக சட்டங்களை ஒரு தலைவனே விருப்பத்திற்கு மாற்றி கொள்ள முடியாது.” நாம என்ன “சமூக சட்டத்தைப்” பற்றியா பேசிக் கொண்டிருக்கின்றோம்?. அதைப் பற்றி பேசிக் கொண்டிருந்தால், தாங்கள் தங்கள் வழக்கறிஞரிடம் சொல்லி சிவனுக்கு எதிராக ஒரு தடை உத்தரவை (‘Injunction’) வாங்க வேண்டியதுதானே. போக்கனா மாறி பேசிக் கொண்டிருக்கின்றீர்கள். நாம் பேசுவதும், வாதாடுவதும் உயிர்குலங்கள் தோன்றுவதற்கு முன்னம் இருந்த நிலையையும், உயிர் குலங்களும், மாயையான சடப் பொருளும் அழிந்த பிறகு இருக்கப் போகும் நிலையைப் பற்றிப் பேசிக் கொண்டிருக்கின்றோம், விவாதித்துக் கொண்டிருக்கின்றோம். இவற்றை தருக்க நெறியின் (‘by logical deduction’) வழி நிறுவப்பட்ட தத்துவங்களின் வழியே நிறுவ முடியும் என்பதுதான் சைவ சித்தாந்தம். வெறும் “நம்பிக்கை” எந்நேரத்திலும் அவநம்பிக்கையாவதர்க்கு 99.99% வாய்ப்பிருக்கின்றது.
புராணங்கள் இதர தெய்வத்துக்கு மட்டும்தானோ ??சிவத்துக்கு இல்லையோ ?? பாற்கடலை கடைந்த பிறகு “”நீலகண்டன் “- கங்கையை தலையில் சூடிய “”கங்காதரன் “” யாரோ ????