நேற்று 18/12/ மாலை 6 -7 அஸ்ட்ரோ வானவில்லில் சனி பெயர்ச்சியில் ராசிகளுக்கு என்ன நடக்க போகிறது என்று சோதிடர் பாணியில் ஒரு மணி ஒரு மணி நேரம் பேசினார். இலக்கு தமிழர்களை நோக்கியது. என்றும் எதிலும் சோதிடம் என்ற அறியாமையால் தமிழர்கள் நிலை அந்தோ பரிதாபம். உலக அறிவியலை எப்படி வியாபரமாக்கினார்கள் வியப்புதான் மிஞ்சுகிறது !!
கடசியில் ஒரு அதற்சியான குறிப்பை தந்தார். அதாவது ராசிகளின் பலன்கள் அவரவர் பூர்வ ஜென்மம் , முந்திய பாவ புண்ணியங்கள் படி நல்லது கெட்டது நடக்கும். சனியை மட்டும் கும்பிடுங்கள் பலன் தரும் மற்ற தெய்வங்கள் , ஆஞ்சேநேயர் போன்ற தெய்வங்களின் பிரார்த்தனைகள் பரிகாரங்கள் உதவாது என்று போட்டார் ஒரு போடு!?
சனி என்பது ஒரு கிரகம். ஆனால் நம்மவர்கள் சனியன் “தைதரியம்” என்ற ஐயத்தில் ஜோதிட வியாபாரமும் .கோவில் பூஜைகளும் அறியாமையால் வியாபார சூடும் தலை தூக்கி பன்னெடுங்காலமாக ஓடுகிறது. நம்ம சமய பூசகர்கள் ஐயா முனைவர் நாகப்பன் , தர்மலிங்கம் போன்றோர்ர் ஏழரை சனி சனியன் பற்றி வாய் திறப்பதில்லை ஏன்?
“ஏழரை சனி” ஒரு விஞ்ஞானம். அறிவியல் என்ன சொல்கிறது ?
சோதிடத்தில் நம்பிக்கை உள்ளவர்கள் இப்பெயரைக் கேட்டாலே பயந்து நடுங்குகிறார்கள் அல்லது இவர்களை பயமுறுத்துவதற்காக தினசரிகள், வார இதழ்கள், சோதிடத்திற்கு மட்டுமென வெளிவரும் பத்திரிக்கைகள் உள்ளன. இவ்வாண்டு 2014 டிசம்பர் மாதம் 16ஆம் தேதி அதிகாலையில் துலாம் ராசியில் இருந்து விருச்சிக ராசிக்கு சனி இடம் பெயர இருக்கிறது. இதையொட்டி சனியால் எந்த ராசிக்கு என்ன பலன் என்றும் அதனால் வரும் விளைவுகளுக்கு பரிகாரத்தைத் தேடி காக்கையை தனது வாகனமாகக் கொண்டு திருநள்ளாரில் எழுந்தருளி இருக்கும் சனி பகவானின் நளன் குளத்தில் நீராடவும் மற்ற வகையான பரிகாரங்களை செய்யவும் ஆயத்தமாக இருக்கிறார்கள்.
இனி செய்திக்கு வருவோம் முதலில் இந்த சனிப்பெயர்ச்சி பஞ்சாங்க அடிப்படையில் ஒரே நாளில் நிகழ்கிறதா என்றால் இல்லை, திருக்கணித பஞ்சாங்கத்தின்படி நவம்பர் 2ஆம் தேதி நடந்தது. வாக்கியப் பஞ்சாங்கத்தின் படி டிசம்பர் 16 ஆம் தேதி நடக்க இருக்கிறது, . இதில் என்ன நகைச்சுவை என்றால். பஞ்சாங்கத்திலேயே துல்லியமானது திருக்கணிதப் பஞ்சாங்கம் என கூறப்படுகிறது. ஆனால் சனிப்பெயர்ச்சி மட்டும் வாக்கியப் பஞ்சாங்கத்தின்படியே கணிக்கப்பட்டு 16 ஆம் தேதி திருநள்ளாரில் சனிப்பெயர்ச்சி மிகவும் விமரிசையாக நடத்தப்பட உள்ளது. இவ்வாறு முரண்பட்ட சோதிட நம்பிக்கையின் அடிப்படையில் நடைபெறும் சனிப்பெயர்ச்சியை சற்று அறிவியல் கண்ணோட்டத்துடன் அலசுவோம்.’
ஜாதகமும் ஜோதிடமும்
ஜாதகம் என்பது ஒருவன் பிறந்த நேரதில் வானில் காணப்பட்ட மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிகள், 27 நட்சத்திரங்கள், 9 நவக்கிரகங்கள் ஆகியவற்றைக் கொண்டு பதியும் பதிவு அவ்வளவே. வானவீதியில் கோள்களின் இயக்கம் சீரான காலமுறையை (Uniform Motion) சார்ந்தது என்பதினால் ஜாதகம் என்பது நமது முன்னோர்கள் பயன்படுத்திய பிறப்பு பதிவு எனக் கொள்ளலாம். ஆனால் ஜாதகம் ஜோதிடத்தின் கருவியாக மாறும்போதுதான் சீரழிந்து புனைவுகளுக்கு ஆளாகிறது.
ஜோதிடத்தில் ராசி, நட்சத்திரங்கள் மற்றும் கோள்களுக்கு சில குணங்கள் இருப்பதாக கற்பிதம் செய்யப்படுகிறது. பொதுவாக ஜாதகமும், சோதிடமும் பழமையான பூமிக்கொள்கை (Geo System) எனப்படும் பூமியை மையமாக வைத்து கோள்கள் அனைத்தும் சுற்றி வருவதாகக் கொண்டே இன்றளவும் கணிக்கப்பட்டு வருகின்றது. இன்று அறிவியலால் நிரூபிக்கப்பட்டு உண்மையென எல்லோராலும் குறிப்பாக ஆன்மீகவாதிகளாலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட சூரியனை சுற்றி அனைத்துக் கோள்களும் இயங்குகின்றன (Solar system) என்ற அறிவியல் உண்மைக்கு எதிராக இச்சோதிட தத்துவம் உள்ளது.
கோள்கள் (நவ கிரகங்கள்)
வரிசை எண்.
ஜாதகத்தில்உள்ளவை
சூரிய மண்டலத்தில் இருப்பவை
1. ஞாயிறு
2. சந்திரன், புதன்
3. செவ்வாய், பூமி
4. புதன், செவ்வாய்
5. குரு (வியாழன்), வியாழன்
6. சுக்கிரன்(வெள்ளி), சனி
7.சனி, யுரேனஸ்
8.ராகு, நெப்டியூன்
9. கேது, புளூட்டோ
இதில் நிலையாக பேராற்றல் உள்ள நட்சத்திரமான சூரியனும், ஆற்றல் ஏதும் இல்லாமல் பூமியை சுற்றும் துணைக்கோளான சந்திரனும், கோள்களே அல்லாத ராகுவும் கேதுவும் கிரகங்களாக குறிப்பிடப்பட்டு உள்ளது. மேலும் பூமி, யுரேனஸ், நெப்டியூன் போன்ற கோள்கள் இதில் இடம் பெறவில்லை (அப்போது தொலைநோக்கிகள் இல்லை அதனால் இருந்திருக்கும்). அதைப்போலவே ராசி என்பதும் வானில் உள்ள விண்மீன்களின் வடிவங்களின் கற்பனையான தராசு (துலாம் ராசி-Libra), வில்(தனுசு ராசி-Sagittarius) போன்ற வடிவங்களேயாகும். இந்த வடிவங்களிலான விண்மீன் கூட்டங்களுக்கென தனித்தனியே குணங்களும் ஆற்றலும் உள்ளது எனவும் சோதிடம் கூறுகிறது. இவற்றையே அடிப்படையாகக் கொண்டு அவரவர்களுக்கான தினம், வாரம், மாதம், வருடம் என வாழ்நாள் முழுதும் நல்லதும் கெட்டதுமான பலன்கள் அவ்வப்போது ஜோதிடர்களால் கணிக்கப்படுகிறது.
மீனம் 12, மேஷம் 1, ரிஷபம் 2, மிதுனம் 3, கும்பம் 11,
சோதிடம் கணிக்கும் ராசிக்கட்டம்
கடகம் 4, மகரம் 10, சிம்மம் 5, தனுசு 9, விருச்சிகம் 8, துலாம் 7, கன்னி 6
வர்ணாசிரம – பாலின பாகுபாடு
மனிதர்களிடையே ஜாதி பார்ப்பது போதாது என்று கோள்களையும் வர்ணப்பாகுபாடு செய்கிறது ஜோதிடம்
வர்ணம்
கிரகங்கள்
பிராமணர்
வியாழன்(குரு), வெள்ளி
சத்திரியர்
ஞாயிறு,செவ்வாய்
வைசியர்
சந்திரன், புதன்
சூத்திரர்
சனி, ராகு, கேது
ஆக ஜோதிடத்தை ஏற்பதன் மூலம் நால்வர்ணக்கொள்கையை ஆதரிப்பதாகவே கொள்ளவேண்டும்.
பாலினம்
ராசிகள்
நட்சத்திரங்கள்
ஆண்
மேஷம்,மிதுனம்,சிம்மம், துலாம்
தனுசு,கும்பம்
8
பெண்
ரிஷபம்,கடகம்,கன்னி,விருச்சிகம்,மகரம், மீனம்
16
அலி
3
இப்படி உயிரற்ற கிரகங்களுக்கும் நட்சதிரங்களுக்கும்கூட ஜோதிடத்தில் பாலின வேறுபாடு கற்பிக்கப்பட்டு உள்ளது.
சனிப்பெயர்ச்சி
இனி பெயர்ச்சி என்றால் என்னவென்று பார்ப்போம். பொதுவாக சோதிடத்தில் குருப்பெயர்ச்சியும், சனிப்பெயர்ச்சியுமே மிகவும் பிரபலமானதாகவும் முக்கியமானதாகவும் எடுத்துக்கொள்ளப்படுகிறது. சனி, குரு மட்டுமல்லாமல் எல்லா கிரகங்களுக்கும் பெயர்ச்சி உள்ளது. அந்தந்த கிரகங்கள் பூமியை/சூரியனை சுற்றி வரும் காலத்திற்கு ஏற்ப அட்டவணையில் உள்ளவாறு ஒரு ராசியில் இருந்து இன்னொரு ராசிக்கு இடம் பெயர காலம் எடுத்துக்கொள்ளும்.
மொத்தம் உள்ள 12 ராசிகளில் கோள்கள் இடம் பெயர எடுத்துக் கொள்ளும் காலம்
கோள்களின் பெயர்
சூரியனை சுற்றிவரும் காலம்
இடம் பெயரும் காலம்
சந்திரன்
27 நாட்கள்
2 ¼ நாள்
ராகு, கேது
18 ஆண்டுகள்
1 ½ வருடம்
குரு (வியாழன்)
12 ஆண்டுகள்
ஒரு வருடம்
செவ்வாய்
18 மாதங்கள்
1 ½ மாதம்
சுக்கிரன், புதன்
ஒரு மாதம்
சூரியன்
–
ஒரு மாதம்
சனிக்கோள் சூரியனை சுற்றிவர 30 ஆண்டுகள் ஆகும். 12 ராசிகள் உள்ள சூரியவீதியில் சனி ஒவ்வொரு ராசியிலும் சுமார் 2½ ஆண்டுகள் காணப்படும். இதனைத்தான் அந்த ராசியை சனி பிடித்துள்ளதாக கூறுகிறார்கள். 2½ ஆண்டுகள் கழித்து சனி அந்த ராசியில் இருந்து விலகி அடுத்த ராசிக்கு இடம் பெயரும். இதனைத்தான் சனிப்பெயர்ச்சி என்று கூறுகிறார்கள்.
ஏழரை சனி
ஏழரை நாட்டுச் சனி என்பது சனிக்கோளானது ராசிக்கும் அந்த ராசியின் முன் வீடு ராசியின் அடுத்த வீடு ஆகிய மூன்றிலும் உள்ளதைக் குறிக்கும். சனி கிரகமானது ஒரு ராசியில் இருந்து அடுத்த ராசிக்கு செல்வதற்கு 2½ ஆண்டுகள் ஆகும் என்பதை முன்னரே கண்டோம். ராசிக்கு முன் ராசியில் 2½ ஆண்டுகள், பிறந்த ராசியில் 2½ ஆண்டுகள், அடுத்த ராசியில் 2½ ஆண்டுகள் ஆக 7½ ஆண்டுகளைத்தான் ஏழரை நாட்டுச் சனி என்பர். உதாரணமாக தற்போது சனி கன்னி ராசியில் இருந்து துலாம் ராசிக்கு இடம் பெயர உள்ளது அடுத்து 2½ ஆண்டுகள் கழித்து விருச்சிக ராசிக்கு செல்லவிருக்கிறது. சோதிடத்தின்படி துலாம் ராசிக்காரருக்கு 2½ ஆண்டுகளுக்கு முன்னரே ஏழரை சனி ஆரம்பித்துவிட்டது இன்னும் ஐந்து ஆண்டுகள் கழித்தே அவரை அது விடும். ஒருவரின் முப்பது ஆண்டுகால வழ்க்கையில் ஏழரை ஆண்டுகள் சனியின் தொல்லையில் கொடுமைக்கு ஆளாகவேண்டும் என்பது அவரின் விதி என்பதே ஜோதிடத்தின் நியதி ஆகும்.
சனிப்பலன்
நீண்ட கால வாழ்விற்கும், மரணத்திற்கும் காரணமாக இருப்பது சனி என்று சோதிடம் கூறுகிறது. வறுமை, கலகம், நோய், அவமரியாதை ஆகியவற்றின் காரணி சனியாகவே வருணிக்கப்படுகிறது. லக்னத்திற்கு 3.6,9,10,11 இடங்களில் சனி இருந்தால் குவியல் குவியலாக பணமும் பொருளும், வேலையாட்களுடன் கூடிய வாழ்வு அமையுமாம். லக்னத்திற்கு 2,4,8,12 இடத்தில் இருந்தால் துன்பமும், துயரமும், கஷ்ட நஷ்டங்களும் தொடர்கதையாய்த் தொடரும் எனக் கதை விடுகிறார்கள். இந்தியாவில் வறுமைக் கோட்டின் கீழ் 40 சதவீதத்திற்கு மேல் இருக்கிறார்கள் இவர்களின் வாழ்க்கை லக்னத்திற்கு 3,6,9,10,11 இடங்களில் சனி வராமல் இல்லை, ஆனால் நாளுக்கு நாள் வறுமைக்கோட்டிற்கு கீழ் வாழ்பவர்களின் எண்ணிக்கை கூடிக்கொண்டுதான் இருக்கிறது மறுபுறம் பெருமுதலாளிகளின் சொத்தும் பெருகிக்கொண்டுதான் இருக்கிறது. இதற்கு காரணம் சனிதான் என்று சொல்லி அதுதான் விதி விதிப்படிதான் நடக்கும் எனக்கூறி மக்களை ஏமாற்றி அவர்களின் போராட்டக் குணங்களை மழுங்கடிக்கச்செய்கிறது ஒரு கூட்டம் அதற்கு தூபம் போட ஏற்பட்டதே ஜோதிட குவியல்கள்.
சூரிய குடும்பத்தில் சனி
சனிக்கோள்
பூமியிலிருந்து தூரம்
127 கோடி கி.மீ
சூரியனிலிருந்து தூரம்
142 கோடி கி.மீ
சுற்றளவு
1,21,000 கி.மீ (பூமியைப் போல் 9 மடங்கு)
சுற்றிக்கொள்ளும் நேரம்
10½ மணி (பூமி 24 மணி)
சூரியனை சுற்றி வர காலம்
30 ஆண்டுகள் (பூமி ஒரு ஆண்டு)
குளிர் நிலை
-185oC
அடர்த்தி
தண்ணீரை விட குறைவு (தண்ணீரில் மிதக்கும்)
துணைக்கோள்கள்
31 (பூமிக்கு ஒரே ஒரு சந்திரன் மட்டும்)
சூரியனில் இருந்து உள்ள இடம்
6 (பூமி 3 ஆவது இடம்)
வடிவம்
இரண்டாவது பெரிய கிரகம் (பூமியைவிட 1000 மடங்கு பெரியது)
தன்மை
பெரும்பகுதி காற்றால் ஆனது (பூமி- நிலம், நீர், காற்றால் ஆகிய மூன்றால் ஆனது)
சனிக்கோளில் இருந்து வரும் ஒளி பூமியை வந்தடைய எடுத்துக் கொள்ளும் நேரம்
1 மணி 28 நிமிடம் (விநாடிக்கு 3,30,000 கி.மீ வேகம்)
வாயுக்கிரகமாக உள்ளதால் இதன் அடர்த்தி தண்ணீரைவிட மிகக்குறைவானது. சனியைவிட மிகப்பெரிய கடல் நம்மிடம் இருந்து அதில் சனியை தூக்கி போட்டால் சனி மூழ்காமல் மிதக்கும் என்பது ஆச்சரியமான உண்மை. இதன் காரணமாக மனிதன் அனுப்பும் செயற்கை கோள்கள் செவ்வாயிலும் சந்திரனிலும் தரை இறங்குவதைப்போல சனியில் தரை இறங்கமுடியாது. ஏனென்றால் இதற்கு உறுதியான தரைப்பரப்பு இல்லை குளிரால் ஆண்டு முழுவதும் வறண்டு கிடக்கும் இக்கோளை மிகவும் சக்தி வாய்ந்தது என்று கூசாமல் எப்படித்தான் பொய் சொல்கிறார்களோ?.
கோள்களிடம் உள்ள சக்தி
சோதிடத்தில் கிரகங்களுக்கு அளப்பறிய சக்தி உள்ளதாக சித்தரிக்கப்பட்டு உள்ளது. சனி, செவ்வாய், குரு போன்ற கிரகங்கள் மிகவும் சக்தி வாய்ந்ததாக காட்டப்பட்டுள்ளது. உண்மையில் சூரிய குடும்பத்தில் சக்தி உள்ள ஒன்று உள்ளதென்றால் அது சூரியனே ஆகும். சூரியன் மிகப்பெரிய அணுவுலையாகும். இதன் அளப்பரிய வெப்ப ஆற்றல், ஒளி ஆற்றல், காந்த ஆற்றல், ஈர்ப்பு விசை, புற ஊதாக்க்கதிவீச்சு போன்றவை மற்ற எந்த கிரகங்களுக்கும் இல்லை. உண்மையில் சூரியனுக்கு அடுத்த நிலையில் உள்ள கிரகம் பூமியே ஆகும். இதில் மனித உயிர்வாழ்க்கைக்குத் தேவையான தண்ணீரில் இருந்து, காற்று மண்டலமும் உள்ளது. வேறு எந்த கிரகமும் எவ்வளவு பெரியதாக இருந்தாலும் ஈர்ப்பு விசையைத்தவிர (அதுவும் குறிப்பிட்ட தூரத்திற்கு மட்டும்) வேறு சக்தி இல்லை. அவ்வளவு ஏன் சொந்தமாக ஓளி ஆற்றால்கூட இல்லை சூரியனிடம் இருந்து ஒளியை கடன்வாங்கி பிரதிபளிக்கக்கூடிய அளவிலேயே இவை உள்ளன. வெறும் வெற்று கிரகங்களான இவை அறிவியல் விதியான ஈர்ப்புவிசையின்படி சூரிய மண்டலத்தில் உள்ளனவே தவிர இவற்றிற்கு என எந்த சொந்த ஆற்றலும் இல்லை. இக்கிரகங்கள் பூமியில் இருந்து கோடிக்கணக்கான கி.மீ தூரத்தில் உள்ளதால் இந்த ஈர்ப்பு விசையும் பூமியை எட்டவே எட்டாது. ஆனால் சோதிடத்தில் பேராற்றல் உள்ள சூரியனும் டம்மி பீஸ்களாக செத்துப்போன எரிமலையும், வறண்டு போன ஆறுகளும், கடுங்குளிரும் கொண்ட மற்ற கிரகங்களும் சக்தி உள்ளவைப் போல் சித்தரிக்கப்பட்டு உள்ளது வேடிக்கையான ஒன்று.
கிரக நிலை மனிதனின் வாழ்க்கையை பாதிக்குமா?
1993 ஆம் ஆண்டுகளில் டெல்லியில் உள்ள சனிபகவானின் கோவிலுக்கு சனிக்கிழமைகளில் 100 முதல் 200 பேர் வந்து கொண்டிருந்தனர். ஆனால் தற்போது 1000 பேருக்கு மேல் வருவதாகக் கணக்கிட்டுள்ளனர். வந்தவர்களின் பிரச்சினைகள் தீர்ந்துள்ளதா எனக்கேட்டால், அப்படி ஒன்றும் இல்லை என்கின்றனர். பிரபலமான வானவியல் அறிவியலாளர் ஜெயாண்டி வி.நார்லிக்கர் கூறும்போது சனியைப் பற்றி பேசப்படும், சொல்லப்படும் கருத்துக்கள் அனைத்தும் தவறானது ஆகும். இதில் எந்தவித அறிவியல் உண்மையோ, செயல்பாடோ கிடையாது என்கிறார்.
உலகில் உள்ள மனிதர்களையும் ஜீவராசிகளையும் தங்களுடைய அதிகார பலத்தினால் ஆட்டிப்படைப்பவர்கள் இந்த ஒன்பது கிரகங்கள்தான் என்கிறது ஜோதிடம். இந்தியாவில் தற்போதைய மக்கள் தொகை 120 கோடி ஆகும். இவர்கள் அனைவரும் 12 ராசிக்குள்தான் வருவார்கள். அப்படி என்றால் ஒரு ராசியில் 10 கோடி பேர் உள்ளனர். இவர்களின் வாழ்க்கை நிலை ஒன்றுபோல் உள்ளதா? என்றால் இல்லை
சமுதாயத்தில் உள்ள சாதி, தீண்டாமை, ஏற்றத்தாழ்வு, வேலையின்மை, உலகமயம், தனியார் மயம், தாராள மயம் மற்றும் அரசு கடைபிடிக்கும் தவறான பொருளாதாரக் கொள்கைகள்தான் மனிதனின் வாழ்க்கையைப் பாதிக்கிறது. வறுமைக்கும் கூட இவைகள்தான் இன்றளவும் காரணமாகவுள்ளது.
அறிவியல் பார்வை
பழக்கத்தின் காரணமாக பிடிவாதமாக நமது முன்னோர்கள் நம்பி வந்த நம்பிக்கை இதுவரை தொடர்ந்து வந்துள்ளது. நம்மீது விடாப்பிடியாக உள்ள அந்த நம்பிக்கை மீது நாம் சந்தேகிக்க மறுக்கிறோம். வானவியலை நன்கு அறிந்துகொள்வதின் மூலம் நமக்கு உண்மை புலப்படும்.
உண்மையில் சனிக்கிரகத்தின் வளையமானது அதற்கு அழகைக் கூட்டுகிறது. சிறந்த ஓவியரால்கூட தீட்ட முடியாத வண்ணங்கள் அதில் உள்ளன. வேறு எந்த கிரகத்திற்கும் இல்லாத அழகும், அதிசயமும் சனிக்கிரகத்திற்கு மட்டும்தான் உண்டு.
இனி சனியன் என யாரும் திட்டினால் அதற்குக் கோபமோ, வருத்தப்படவோ வேண்டியதில்லை. சனியைப் பற்றிய முழு உண்மைத் தெரிந்தவர்கள் சனியன் என்றால் மிகவும் மகிழ்ச்சியடையலாம்.
-பொன்.ரங்கன்
சைவ சித்தாந்தத்தின் முக்கிய தொடக்கம், தேவாரம், முதல் திருமுறை, ஒன்றாவது சுலோகம் (திருஞான சம்பந்தர் அருளியது, தேனீ அல்ல): “தோடுடைய செவியன் விடையேறி யோர் தூ வெண்மதி சூடி…….காடுடைய சுடலை போடி பூசி என் உள்ளம் கவர்கள்வன்…..ஏடுடைய மலரான் முனை நாட்பனிந்தெட்த அருள் செய்த…….பீடுடைய பிரமாபுர மேவிய பெம்மா னிவனன்றே… ‘தோடுடைய செவியன்’ என்றால் என்ன ? காதில் தோடு அணிந்திருக்கும் ஒருவன். காதில் தோடு அணிய வேண்டுமானால், முதலில் காதிருக்க வேண்டும். காது தலையுடன் உள்ள ஒரு உறுப்பு. இரண்டு இருக்கும் (ஆசிரியர், நாம் வீடு பாடம் செய்ய வில்லை என்றால் பிடித்து திருகுவாரே, ஆஅ அதுதான் தேனீ அவர்களே அதேதான்) ‘காடுடைய சுடலை’ என்றால் என்ன ? ‘சுடலை’ என்றால் பிணங்களை எரிக்கும் இடம். ‘காடுடைய’ என்றால் காட்டில் இருக்கும் இடம். ‘ காடுடைய சுடலை பொடி பூசி’ என்றால் என்ன? தீயில் சுட்ட எந்த ஒரு பொருளும் சாம்பல் ஆகிவிடும். அது சானமாக இருந்தாலும் சரி அல்லது தங்கமாக இருந்தாலும் சரி. அந்த சாம்பலை உடலில் பூசிக்கொண்டு இருபவனே (சுக்கள யஜுரில், ஆண்கள் 36 இடத்திலும், பெண்கள் 32 இடத்திலும் திருநீர் பூச வேண்டும்). ஆனால் தேனீ அவர்கள் ஒட்டு மொத்த தமிழர்களின் காதிலும் பூ சுத்த கூடாது. சைவ சித்தாதத்தின் முதல் தேவார பாடலே கூறிவிட்டது, மனிதன் கடவுளை போன்ற உருவம் உள்ளவன் என்று. இப்பொழுது திருஞான சம்பந்தர் தமிழரே அல்ல என்பார் தேனீ , பிறகு தேவாரம் சைவ சித்தாந்தம் அல்ல என்பார். திருஞான சம்பந்தர் ஒரு ஜப்பானியர் என்பார். எல்லாம் என் தலை எழுத்து.
இப்பொழுது நமது விவாதங்களுக்கு முன்னோடியாக இருக்கும் இப்பக்க கட்டுரை, திரு பொன் ரங்கன் அவர்கள் இணையத்தில் இருந்து எடுத்து தொகுத்து போட்டதற்கு காரணம் ‘தீபாவளிப் பொது உபசரிப்புகளில் குத்தாட்டங்கள்” என்ற கட்டுரைக்கு யாம் எழுதிய கருத்தேயாகும். மேலும் திலிப் அவர்கள் இப்பகுதியில் இருக்கும் கட்டுரையை முழுமையாக படித்தாரோ என்னவோ தெரியவில்லை. இக்கட்டுரையின் நோக்கமும் சொல்ல வரும் கருத்தும், சனி பெயர்ச்சிக்கும், ஏலரையோனுக்கும், அதை நிவர்த்தி செய்ய பரிகார பூஜைக்கும் சம்பந்தம்மில்லை. அதனை வைத்துக் கொண்டு சோதிடர்களும், கோவில் அருச்சகர்களும், கோவில் நிருவாகங்களும் கூட்டுக் களவாணித் திட்டம் போட்டு மக்களிடையே பணம் பறிக்கின்றார்கள் என்பதேயாகும். தமிழர் கண்ட பரம்பொருளுக்கே “ஏலரையோன்” பிடித்தது என்று பித்து பிடித்தவர்கள் பேசினால், இவர்களின் அறிவீனத்தை என்னவென்று சொல்வேன்!. படிப்போர்களின் கவனத்திற்காக மீண்டும் முன் கூறிய எமது கருத்தை இங்கே மறுபதிப்பு செய்கின்றேன். திலிப்பின் பதில் என்னவென்று பார்ப்போம்!. தொடரும்.
சனி பெயர்ச்சி என்றவுடன் எப்படி எல்லாம் நம் மக்கள் பயந்து, பக்தியுடன் யாகம் வளர்த்து சாந்தி பரிகாரம் செய்வதைப் பார்த்தேன். எதற்கு இவர்கள் இதனைச் செய்கின்றார்கள்?. சனி எனும் சடப்பொருளான கிரகத்தால் தனக்கு வரும் துன்பங்கள் நீங்கி விட வேண்டும் என்று நம்பிச் செய்கின்றார்கள். இப்படி செய்வது இவர்கள் அனுபவிக்க வேண்டிய ஊழ்வினைப் பயன்கள் அற்றுப் போகும் அல்லது குறைந்து விடும் என்று சோதிடர்களும், அருச்சர்களும் கூறும் பரிகார பூசைகளால் வந்த ஓர் அற்ப நம்பிக்கை. கெடுபலன்கள் நீங்கிப் போக அல்லது குறைந்துப் போக பலனை வேண்டி செய்யப்படும் யாகமானது சோதிடன் கூறும் ஊழ்வினைப் பயனையே அர்த்தமற்றதாக்கி விட்டது. நாம் வணங்கும் பரம்பொருளான சிவபெருமானின் “பேராற்றல்” எனும் தன்மையும் பொய்யாக்கி விட்டது. திருநாள்ளாறு எனும் தளத்தின் கருவறையில் குடி கொண்டிருக்கும் தர்பநீஸ்வரர் என்ற நாமம் கொண்ட சிவபெருமானுக்குப் பயந்து திருகோவிலுக்கு வெளியே சனி என்ற மூர்த்தி நின்றான் என்று உணர்த்துவதே நளன் தமயந்தி கதை. இன்று இந்த சனி மூர்த்தி சர்வல்லமை பொருந்திய அந்த கருவறை கதாநாயகனையும் வென்று விட்டது எப்படி?. சோதிடன், அருச்சகர், ஆலய நிருவாகம் என்று மூன்று தரப்பினரும் போட்ட கூட்டுக் களவாணித் திட்டமா அல்ல பரம்பொருளின் பேராற்றலை மறந்த தமிழர்களின் சமய சீர்கேடா? அல்ல சோதிடம், புராணம் ஒருங்கே சேர்ந்து நம் அறிவை ஆணவமலம் எனும் இருளில் அழுத்தி நின்றதாலா?. இவை அனைத்துமே அதற்கு காரணம் என்று சொன்னால் தவறாகாது. தமிழ் நாட்டு மக்களுக்கு நல்வழி காட்ட வேண்டிய சைவ ஆதினங்களே தத்தம் வாயைப் பொத்திக் கொண்டு சிவனே என்று இருந்தால் சைவம் தழைத்தோங்குமா?. சிந்தியுங்கள் ஆதின கர்த்தர்களே. நமது சைவத்தின் பொற்காலத்தை மீட்டெடுக்க தங்களின் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்து எழுந்து சைவத்தின் உண்மைத் தத்துவங்களை வானுயர அந்த சனி மூர்த்திக்கே உரைக்கும் வண்ணம் எடுத்துரையுங்கள். தமிழர்களின் சைவ சமயம் நேர்படும். இல்லையேல், தமிழரின் சமய சீர்கேடு அந்த சிவபெருமானுக்கே வெளிச்சம். எல்லாம் அவன் செயல் என்று இருந்து விடாமல் தங்கள் செயல் என்னவென்பதை உணர்த்துங்கள் ஆதின கர்த்தர்களே. எல்லாம் வல்ல எம்பெருமான் தங்களுக்கு வெளிச்சத்தைக் காட்ட வேண்டுமாறு எம்பெருமானிடம் உருகி வேண்டுகின்றேன்.
சிவா மஹா புராணங்களை விட்டால் முருகரும், பிள்ளையாரும் தாய் தகப்பன் இல்லாத பிள்ளைகளாக இருக்க வேண்டும். இப்ப தங்களுக்கு சம்போகமா இந்து தருமரே?. தங்களுக்கு என்ன ஏலரையோன் நடக்கின்றதா?. இப்படி ஏடா கூடமா பேசி வாங்கிக் கட்டிக் கொள்கின்றீர்!. சும்மா சொன்னேன். கோவிச்சிக்காதீங்க!.
சைவ சித்தாந்தத்தின் முக்கிய தொடக்கம், தேவாரம், முதல் திருமுறை, ஒன்றாவது சுலோகம் (திருஞான சம்பந்தர் அருளியது, தேனீ அல்ல): “தோடுடைய செவியன் விடையேறி யோர் தூ வெண்மதி சூடி…….காடுடைய சுடலை போடி பூசி என் உள்ளம் கவர்கள்வன்…..ஏடுடைய மலரான் முனை நாட்பனிந்தெட்த அருள் செய்த…….பீடுடைய பிரமாபுர மேவிய பெம்மா னிவனன்றே… ‘தோடுடைய செவியன்’ என்றால் என்ன ? காதில் தோடு அணிந்திருக்கும் ஒருவன். காதில் தோடு அணிய வேண்டுமானால், முதலில் காதிருக்க வேண்டும். காது தலையுடன் உள்ள ஒரு உறுப்பு. இரண்டு இருக்கும் (ஆசிரியர், நாம் வீடு பாடம் செய்ய வில்லை என்றால் பிடித்து திருகுவாரே, ஆஅ அதுதான் தேனீ அவர்களே அதேதான்) ‘வெண்மதி சூடி’ என்றால் நிலாவை தலையில் சூடி கொண்டிருப்பவன் ! ‘காடுடைய சுடலை’ என்றால் என்ன ? ‘சுடலை’ என்றால் பிணங்களை எரிக்கும் இடம். ‘காடுடைய’ என்றால் காட்டில் இருக்கும் இடம். ‘ காடுடைய சுடலை பொடி பூசி’ என்றால் என்ன? தீயில் சுட்ட எந்த ஒரு பொருளும் சாம்பல் ஆகிவிடும். அது சானமாக இருந்தாலும் சரி அல்லது தங்கமாக இருந்தாலும் சரி. அந்த சாம்பலை உடலில் பூசிக்கொண்டு இருபவனே (சுக்கள யஜுரில், ஆண்கள் 36 இடத்திலும், பெண்கள் 32 இடத்திலும் திருநீர் பூச வேண்டும்). ஆனால் தேனீ அவர்கள் ஒட்டு மொத்த தமிழர்களின் காதிலும் பூ சுத்த கூடாது. சைவ சித்தாதத்தின் முதல் தேவார பாடலே கூறிவிட்டது, மனிதன் கடவுளை போன்ற உருவம் உள்ளவன் என்று.
சுத்தமா தமிழரின் சைவ சமயத்தை அறியாத ஒரு பாலகனுடன் இதுவரையில் விவாதித்துக் கொண்டிருந்த எமக்கு திலிப்பின் திருமுறை விளக்கத்தைக் கண்டு சுத்தமா சைவ சித்தாந்தத்தை மறந்து விடுவேன் போலிருக்கு. சிவ. சிவ. இதற்குத்தான், ஆரம்ப பாடமாக திருமுறைகளைப் படிக்கும் போது “சொல்லிய பாட்டின் பொருளுணர்ந்து சொல்லுவார் செல்வர் சிவபுரத்தின் உள்ளார்” என்று சொன்னேன். அதற்கு இந்து தருமர் பொருள் அறியாமால் படித்தாலே போதும். அப்புறம் ஒருநாள் பொருள் தெரிந்துக் கொள்ளலாம் என்று சொன்னார். அதன் பயன் இப்பொழுது தெரிகின்றதா இந்து தருமரே? இவ்வளவு நாட்களாக கஷ்டப்பட்டு இணையத்தில் இருக்கும் கட்டுரைகளை தேடி பிடித்து அங்கு கற்றதை அப்படியே எடுத்து வந்து இங்கே வாந்தி எடுத்து விட்டு, இப்ப என்னமோ பெரிய உண்மையைக் கண்டு விட்ட மாதிரி நானும் திருமுறைக்குப் பொருள் சொல்லி விட்டேன் என்று மார் தட்டிக் கொள்ளும் அன்பரே, இதற்குத்தான் சைவ சித்தாந்தம் படித்து திருமுறைக்கு பொருள் காண வேண்டும் என்பது. அதுவே தங்களுக்கும் எமக்கும் இருக்கும் வேறுபாடு என்பதை அறிக. தொடரும். .
திருமுறையில், திருஞானசம்பந்தர் அருளிய முதல் பதிகத்தில் முதலாவது பாடல் (1.1.1.) “தோடுடைய செவியன்…” என்பதாகும். தன் தகப்பனார் சிவதலத்தில் இருக்கும் குளத்தில் மூழ்கி தியானம் செய்துக் கொண்டிருக்க, தந்தையைக் காணாத மகன் “அம்மா, அப்பா” என்று அழ, தெய்வக் குழந்தையாகிய திருஞானசம்பதருக்கு அம்மை அப்பராக காட்சியளித்ததை தன் தகப்பானாருக்கு உணர்த்தி பாடிய முதல் பாடல் இதுவே. இதன் உண்மைப் பொருள் அடுத்து வருவது. தொடரும்.
சிவமும் சத்தியும் இணை பிரியாது ஒன்றாய் இருப்பது என்ற தத்துவத்தை விளக்குவது “தோடுடைய செவியன்” என்பது. தோட்டை அணிந்து இருக்கும் சத்தி, சிவபிரானின் ஒரு பகுதியாய் இணைந்து காளை எருதின் மீதேறி தூய வெண் மதியைச் சூடி வருகின்றார். அவர் “காடுடைய சுடலைப் பூசி” என்பது இப்பிரபஞ்சத்தின் முற்றழிப்பு காலத்தில் (ஊழிக் காலத்தில்) மாயையில் இருந்து தோன்றிய அனைத்து சடப் பொருள்களாகிய, தனு, கரண, புவன, போகங்கள் அழிந்து மென்மையான சம்பாலாகி (தூசு போன்று) அவற்றைத் தன் உடலின் மீது தாங்கி நிற்ப்பவன். அவ்வாறு முற்றழிப்பு முடிந்து தானே ஒருவனாகி மீதம் நின்று மீண்டும் உயிர்களுக்கு உடலைக் கொடுத்து, அந்தக் கரணங்களையும் கொடுத்து, அவ்வுயிர்கள் இன்ப துன்ப நுகர்ச்சிகளைப் பெறுவதற்காகப் புவனங்களைப் படைப்பார் என்ற தத்துவத்தை உ ணர்த்துவதே அவ்வார்த்தைகள். இப்படி அந்த ஒரே பாடலுக்கு சிந்தாந்த வகுப்பில் ஒரு மணி நேரம் பொருள் விளக்கம் கொடுப்பார் முனைவர் நாகப்பன் ஆறுமுகம் அவர்கள். இப்ப தெரியுதா நாங்கள் யார் என்று!. ஒரு சிறிய மாணவரே இந்த அளவுக்கு பேசும் பொழுது, குரு எந்த அளவுக்குப் பேச முடியும். திலிப் தங்களின் சமய அறிவு மிகவும் குறைவாக இருப்பதால் தங்களுடன் தொடர்ந்து விவாதம் நடத்த எமக்கு விருப்பமில்லை. இப்பகுதில் கருத்து எழுதிய எமது நோக்கம், தமிழர் கண்ட சுத்த சைவ சமயமே தமிழர்களுக்கு உரியது. அதனை விட்டு இந்த மதம் என்ற “Rojak” குடும்பத்தில் நமக்கு இனியும் வேலை இல்லை என்பதை உணர்த்துவதே. வந்த வேலை செவ்வனே செய்து முடித்தாகி விட்டது என்று நினைக்கின்றேன். ஆதலால் தங்களின் விவாதத்தை இத்துடன் நிறுத்துவீர்களாக. சிவ பெருமான் அடியார் பெருமக்களுக்கு காட்சி அளிப்பது என்பது நம்மை போன்ற தூல உடம்பைக் கொண்டு அல்ல மாறாக ஒளி வடிவினனாக தோன்றி வந்த காரியமானது முடிய அவ்வொளியானது திருவருளில் மீண்டும் கலந்து விடும்., அதனால் தாங்கள் சிவபெருமானின் காதை எல்லாம் பிடித்துத் திருவ முடியாது என்பதையும் அறிக. ‘Adios’.
தேனீ அப்படியே நிற்காமல் என்னை வீணாய் இழுத்து “பொருளறிந்து தான் திருமுறை ஓத வேண்டும் > இல்லாவிட்டால் அவர் தமிழர் இல்லை > திருமுறை ஓதியும் பயன் இல்லை ” என மீண்டும் வீண் கற்பனையில் மிதக்கிரீறே ??யதார்த்த வாழ்க்கை வாழ தெரியா ஆளா நீர் ??நீர் அல்ல : உமது குழுவினர் அல்ல : எவர் நினைத்தாலும் இன்னும் பல வருடங்கள் ஆனாலும் உங்கள் எண்ணம் எழுத்தளவில் தான் இருக்கும் >திருமுறை போட்டியில் 3 -4-5 வயது குழந்தைகள் பாடும் திருமுறையை அமர்ந்து கேளுங்கள் ஐயா !! அவர்களுக்கு நீர் சொல்லும் இன்ப துன்ப நுகர்ச்சி >தூல உடம்பு > போன்ற விளக்கங்கள் புரியுமா அல்லது அவசிய தேவையா ?? நம் மதத்தின் சொத்தாக விளங்கும் இவற்றை முதலில் பாட வருவதே ஆச்சரியம் > அதற்காகாக அவர்களை தட்டி கொடுக்க மனமில்லாமல் > “பொருள் தெரியாமல் எதற்கு பாட வந்தாய் ? “”என்றா கேட்பார்கள் ? திருமுறை போட்டி என்ற பெயரில் அவர்களாவது நமது பாரம்பரியத்தை நிலை நாட்டி வருகிறார்கள் < உம்மால் இயலாவிட்டால் உமது சித்தாந்த பணியை மட்டும் கவனித்து போங்களேன் ? எவர் உம்மை தடுத்தார்கள் ? ஒரு பாடலுக்கு ஒரு மணி நேரம் விளக்கம் கொடுக்கும் உமது குரு முனைவர் நாகப்பன்
இந்து சங்கத்தில் பல ஆண்டுகள் பதவி வகித்து திருமுறை போட்டிகள் நடத்தி பரிசுகள் அளித்தவர் தானே ?? அப்போ எங்கே போச்சு உங்கள் வைராக்கியம் ??
இப்பொழுது இந்து சங்கம் திருமுறைப் பாடல் போட்டிகளில் திருமுறை ஓதி பொருள் விளக்கம் கொடுக்க வேண்டும் என்று விளம்பரப் படுத்துவது ஏன்?. இக்கருத்தை நாங்கள் முன்னிறுத்தினோம். அதை ஒற்றர்கள் மூலம் செய்தி பெற்று அவர்கள் பின்பற்ற ஆரம்பித்தார்கள். சைவ சித்தாந்தம் 18-வயதிற்கு மேற்பட்ட மாணவர்களுக்கே போதிக்கப் படுகின்றது. ஆகையால் சிறிய பிள்ளைகள் அவர்தம் தேவைக்கேற்ப பொருள் விளக்கம் மட்டும் தெரிந்துக் கொண்டால் போதுமானது. உலகியல் கல்வி கற்று இவ்வளவு தூரம் வளர்ந்து விட்ட தங்களுக்கு முனைவர் 30 வருடமாக இந்து சங்கத்தில் பணியாற்றி இந்நாட்டில் நம்மவரிடையே சமய வளர்ச்சி நிலைத்து நிற்க ஓர் ஆலயத்தில் நின்று சொற்பொழிவு செய்யும் போது கிறிஸ்துவ அன்பர்களிடம் வாய் வீச்சும், கை வீச்சும் பெற்றது தாங்கள் அறியவும் இல்லை. அவரைப் போன்று இந்நாட்டில் சமய தொண்டு தாங்கள் ஆற்றியதும் இல்லை. குளிர்சாதனம் கொண்ட குளு, குளு அறையில் உட்கார்ந்துக் கொண்டு தங்களைப் போன்று சமயத்தை வளர்த்தவர் அல்ல அவர். முள்ளிலும், கல்லிலும் அடிபட்டு பல்வேறான மன இரனங்களுக்கு ஆளாகி இந்நாட்டில் நம் சமயத்தை வளர்த்தவர் முனைவர் நாகப்பன் அவர்கள். அவர் எங்கே?. நீர் எங்கே?. மலைக்கும், மடுவுக்கும் உள்ள வித்தியாசம் என்பதை அறிந்து நாவை அடக்கி வாசிக்கவும். இல்லையேல் உமது நாவிலிருந்து வரும் கருத்தை படிப்படியாக நறுக்க ஆரம்பித்து விடுவேன். அதன் வலி மிகவும் வன்மையாக இருக்கும் என்பதை அறிவீர்.
ஆசிரியர் அவர்களுக்கு, 13 January, 2015, 12:15- ல் பதிவு செய்யபட்ட கருத்தில் 3-வது வரியில் “ஒற்றர்கள் மூலம் செய்தி பெற்று” என்று இருக்கும் வார்த்தைகளை தயவு செய்து நீக்கி விடவும். நன்றி.
“உமது குழுவினர் அல்ல : எவர் நினைத்தாலும் இன்னும் பல வருடங்கள் ஆனாலும் உங்கள் எண்ணம் எழுத்தளவில் தான் இருக்கும்” என்று சொன்ன அன்பரே, இந்த செம்பருத்தி இணையத்தளம் உலகம் முழுவதும் உள்ள தமிழர்கள் படிக்கும் வண்ணம் செயல்படுகின்றது. இங்கே தயவிற்கும் பயத்திற்கும் இடமில்லை. யாரும் எவ்வொரு பயமும் இல்லாமலும், யாருடைய தயவு இல்லாமலும் (‘without fear or favour’) அவரவர் கருத்தை எழுதலாம். எம்முடைய செய்தி மலேசிய வாழ் தமிழர்களுக்கு மட்டும் அல்ல, உலக வாழ் தமிழருக்கும் சேர்த்தே எழுதப் பட்டது. இன்று இல்லையானாலும் எதிர்வரும் காலத்தில் தமிழர் அவர்தம் சமயம் சைவம் என்று அறிந்து ஆரிய மயக்கத்தில் இருந்து மீள்வர் என்ற நல்லெண்ணத்திலே எழுதியது. அதற்கு உம்மை போன்று குழி பறிப்போர் இருக்கவே செய்வர் என்று அறிந்தே எழுதியது. ஆதலால், தங்களின் குறுகிய மனப்போக்கும் “தமிழன்” என்ற தனித்தன்மை இல்லாமல் வாழும் உணர்ச்சி எமக்கு ஆச்சரியமும் அளிக்கவில்லை, துன்பமும் அளிக்கவில்லை. தென்னாடுடைய சிவனே போற்றி, என்னாட்டவர்க்கும் இறைவா போற்றி.
அப்பாடா ! “” …சிறு பிள்ளைகள் அவர்தம் தேவைகேற்ப பொருள் விளக்கம் மட்டும் தெரிந்து கொண்டால் போதுமானது..”” என்ற அளவில் இறங்கி வந்தமைக்கு நன்றி..இதைதான் அப்போதில் இருந்து உமக்கு விளக்குகிறேன் ..””நான் சொல்வதை மட்டும் நீ கேள் ” என்று ஆணவத்தோடு இருந்ததால் என் கருத்து உமக்கு புரிய வில்லை..ஆனால்”” உமது பதட்டம் : பரபரப்பில் நீர் வெளியிடும் விமர்சனக்கள் “” உம்மை பற்றி நான் சொன்னபோது நீர் எகிறிநீர். > மேலே 3வது வரியை நீக்க கோரியது பெரிய உதாரணம்..முனைவர் நாகப்பன் அவர்களின் சமய மாண்பை நான் போற்றுகின்றேன் ( உம்மை விட அதிகமாகவே )அவரின் மேன்மையை நான் விமர்சனம் செய்தேனா ??படப்பிலாமல் பதறாமல் மீண்டும் எமது விமர்சனத்தை வாசிக்கவும்..பிறகு வார்த்தைகளை நறுக்குவது பற்றி பேசலாம்..
தேனீ அவர்களே “சிவமும் சத்தியும் இணை பிரியாது ஒன்றாய் இருப்பது என்ற தத்துவத்தை விளக்குவது “தோடுடைய செவியன்” என்றீர்கள். ஆனால் சைவ சித்தாந்த அகப்பக்கம் சிவபெருமான் தோடு அணிந்திருந்தார் என்று எழுதி உள்ளதே (thOdudaiya cheviyan – He wears a ring in His ear). சைவ சித்தாந்தம் 1 , 2 என்று வந்து விட்டதா ? http://www.shaivam.org/siddhanta/tht4.html சிவமும் சத்தியும் இணை பிரியாது ஒன்றாய் இருப்பது என்பது யோனியும் லிங்கமும்மாக இருப்பது, அல்லது அர்த்தநாரீஸ்வரர் அவதாரமே.. தேனீ அவர்களே ஆக கொஞ்சம் கொஞ்சமாக உங்களுக்கு சைவ சித்த பிரமை பிடிக்கிறது போலிருக்கிறது. இருக்கட்டும் பரவாயில்லை. இங்கே நான் மனிதர்கள், வைதீக மத கடவுள்கள், பரபிரமம், 9 கோள்கள், இவை அனைதையையும் பற்றி பேசி விடலாம் என்று நினைக்கிறேன். தமிழர்களுக்கும், இந்துக்களுக்கும், மற்றவர்கலுக்கும் தெளிவாக புரியும். தேனீ. இந்து தர்மர் அவர்களே, நான் தொடரலாமா ?
“உமது குழுவினர் அல்ல : எவர் நினைத்தாலும் இன்னும் பல வருடங்கள் ஆனாலும் உங்கள் எண்ணம் எழுத்தளவில் தான் இருக்கும்” என்று சொன்ன அன்பரே,” இது முனைவர் நாகப்பன் அவர்களையும் சேர்த்து சொன்னதுதானே?. இது அவரின் மேன்மைக்காக விமர்சனம் செய்தீர்களா அல்லது இழிப்பதர்க்கு விமர்சனம் செய்தீர்களா? எமது கருத்தை திருத்தம் செய்ய சொல்வதற்கு எமக்கில்லாத உரிமையா?. அலுவலக வேளையில் எழுதப்படும் கருத்துக்கள் ‘proof reading’ எல்லாம் செய்து எழுத முடியாது. அதுவே அந்த திருத்தத்திர்க்கான கோரிக்கைக்கு காரணம் என்பதை அறியவும்.
சைவ சித்தாந்த நிறுவனம், உலகெங்கும் இணையத்தில் 6 கோடி மக்களுக்கு விளக்கம் தருகிறது. ஆனால் தேனீ நீங்களே புதிது புதிதாக உளறி தள்ளுகிறீர்கள், கேட்டால் முனைவர் நாகப்பன் அவர்களையும், கிறிஸ்துவ மத போப் ஆண்டவரையும் காண்பிக்கிறீர்கள். இனிமேல் சைவ சித்தாந்த நிறுவனத்தை மூடி விட்டு, “தேனீ அண்ட் கம்பனியின்” சைவ சித்தாந்தம் என்று வைத்து விடலாமா ? ஒன்னும் முடிய வில்லை என்றால், நான் இனைய தலத்தில் எழுதியதை படித்து விட்டு, என்னிடமே வந்து இணையத்தில் படித்து எழுதுகிறீர் என்கிறார். ஏன் இனைய தலத்தில் இந்து மத போதகங்கள் வரகூடாதா? நான் பல இனைய தல பக்கங்களுக்கு ஆங்கிலத்தில் எழுத உதவியுள்ளேன். நான் ஒரு PhD பட்டதாரி, பல்கலைகழகத்தில் விரிவுரையாளன். அதனால் எனக்கு எப்படி எல்லாம் தெரிய வருகிறது என்று பாராமல், நீங்கள் உங்கள் வாதத்தை ஒரு முறைக்கு இரு முறை, பண்டிதர்களுடன் சரி செய்து விட்டு எழுதுங்கள். தேனீ குறிப்பிட முயல்வது ஞான சிவத்தின் ஒரு ரூபமே. அது முழுமையான சிவமாகிவிடாது.
பொன். ரங்கன் அவர்களே, வேதாங்கம் 6. சிக்ஸா, கல்ப, வியாகரண, நிறுக்த்த, சந்தாஸ், ஜோதிஷா. ஜோதிஷா வான சாஸ்திரங்களின் அடித்தளம்; சுலப சூதிரம் என்பது வான சாஸ்திர கணிதம். ஜோதிஷா நேரடியான 7 கிரகங்களும், இரண்டு கிரக நிலையையும் விளக்குவது (நிலைகள் என்பது வழக்கத்திற்கு மாறானது என்பதாகும் ஆனால் கிரங்கங்களை கொண்டதே). மொத்தத்தில் ஒன்பது. ஒரு முழு சுற்று 30 வருடம், இந்துக்களின் 60 ஆண்டு-வாழ்நாளில், 2 சுற்று. 12 ராசிகள் 27 நட்சத்திரங்கள். ஒரு கிரகம் குறைந்தது ஒன்றரை மாதமும், அதிகபடியான காலமாக 18 வருஷமாகவும் ராசிகளுக்குள் இருக்கும். ராகு கேது சனி மூவரும் அதிகம் தொந்தரவு தருபவர்கலாகவே சித்தரிக்க படுகிறது. அதிலும் சனி அதித தொந்தரவு தரும் கிராகமாகவே சித்தரிக்க படுகிறது. இதில் ஆரியபாட்ட (கி.பி 7 ஆம் நூற்றாண்டு) அவர்களின் ஆராய்சிகள் (பிரமகுப்தா, வரஹமிரஹ, லல்லா), பலராலும் பாரட்ட படிருக்கிறது ; இதில் முஸ்லிம்களும் சீனர்களும் குறிப்பிட பட வேண்டியவர்கள்- விக்கிபீடியா. இது போதும் என்று நினைக்கிறான், ஆகையால் கருத்துக்கு வருகிறேன்: பதஞ்சலி யோகா சூதிரதில், ஒரு ஆலயம், மனிதனின் உடலை கொண்டே நிறுவ படுகிறது என்று தெள்ள தெளிவாக குறிப்பிடுகிறது (ஒரு மனிதனை தரையில் மல்லாக்க படுக்க வைப்பதாக மனதில் நினைத்து கொள்ளவும்). அப்படியென்றால் ஆலயத்தின் நுழைவாயில் என்பது மனிதர்களின் கால் பகுதிகள்; அப்படியே உள்நோக்கி வந்தால் (காலில் இருந்து தலையை நோக்கி வருவது போன்று), முதலில் கொடிமரம் இருக்கும் இடம் வரும். அந்த கொடிமரம் அந்தரங்க அங்கங்களின் விடுதலையை உணர்த்துவது. அவை சுத்தமாக இருக்க குளித்து விட்டு கோயிலுக்கு செல்ல வேண்டும் என்பார்கள். அடுத்தது பலி பீடம். அது நமது வயிற்றை குறிப்பது. வயிற்றில் பலியிட படுவதே நமது புலன்களுக்கும் ஆன்மாக்களுக்கும் வித்தாகிறது (சைவம் உண்டால்: அதன் எடை மலமாகிறது; அதன் நடு பகுதி உடல் மாமிச மாகிறது; அதன் மேல் பகுதி மனமாகிறது. மனம் என்றால் வாசனை மற்றும் மனிதர்களின் மனம் என்று பொருள் (மனமாற்றமே, குனமாற்றம்). தொடந்து மனிதனின் மனம் இருக்கும் இடத்தில், ஒரு மிருக அல்லது பிராணிய அல்லது பறவைய சிலை இருக்கும். இது மனிதனின் மனதை குறிக்கும். இங்கே தான் நந்தி, மயில், எலி போன்ற உருவ சிலைகள் இருக்கும். மனம் ஒரு குரங்கு என்பார்களே, அப்படியே ! கடைசியாக மனிதனின் நெற்றி கண் இருக்கும் இடத்தில்தான், கடவுள்களின் சிலை இருக்கும். அப்படி மனித உடம்பை குறிக்கும் ஆலயங்களுக்குள், 9 கோள்களுக்கு வேலையில்லை. ஆகையால் இந்த 9 கோள்களும், வெளியே வைக்கபடும். சரி இந்த ஒன்பது கோள்களும் எங்கே எப்படி இயகதிர்க்கு வருகிறது என்றால், அவை மனிதனுக்கு அவற்றின் மாற்றங்கலுக்கு ஏற்ப 18 மன புத்திகளை நிரந்தரமாக கொடுத்து கொண்டே இருக்கும் (சிலர் 60 க்கும் மேட்பட்ட புத்தி என்கிறார்கள்.) இதுவே ஒருவரின் பூர்வ ஜென்ம பாவ புண்ணியங்களை காலத்திற்கு ஏற்ப தரும் வழிகள் (இப்பொழுது சைவம், யோகா சித்தாந்ததில் பூட்டி கொண்டது). இதில் மனிதர்களின், தேவர்களின், மூவுலகையும் கட்டி காக்கும் பிரமக்களின் நிலை உள்ளது. ஆனால் இந்த கோள்கள் யாருக்கும் கட்டுக்கு அடங்காத, ஆனால் கட்டுபாட்டை மீறாத கோள்கள். அதலால் இவை வைதீக மத கடவுள்களையும் விட்டு வைக்க வில்லை. சில யுகங்களில் இந்த தேவர்களையும், கடவுள்களையும் பிளிந்தேடுததோ, அதை தான் நாம் இதிகாசங்களாகவும், புராணங்களாகவும் படிக்கிறோம். ஆனால் இவை அன்னை ஆதிபராஷக்க்திக்கு உட்பட்டவை. அன்னை நினைத்தால் மட்டுமே, இவை அடங்கும். சட்டத்தை அதை அமல் படுதும் நீதிபதிகளும், போலீசும் போல. இப்படி, கடவுள்கள், மனிதர்களுக்கு வாழ்ந்து காட்டிய வழியே யோகா சாஸ்திரம், அதற்க்கு துணை நின்றது கோள்கள்.
சகோதரன் Dhilip 2 உங்கள் பொன்னான நேரத்தை இவர்களுடன் வாதிடுவதை விட வேறு யாருக்காவது உபன்யாசம் தந்தால் அவர்கள் தீக்ஷை பெற்று மோட்சதையவது யாவது அடைவார்கள் . சகோதரரே உங்கள் வலை தல முகவரியை தர முடியுமா . என் முக புத்தகத்தில் உங்களை நண்பராக ஆசைபடுகிறேன் .
சகோதரி மங்கை அவர்களே, நான் எனது வலைதளத்தை நேரடியாக இங்கே தர இயலாது காரணம் நான் சில நேரங்களில் அரசியல் விமர்சனங்களை முக நூலில் தந்து, வாங்கி கட்டி கொள்வதும் உண்டு. அலசியலும் ஆன்மீகமும் என் இரு கண்கள். அதற்கு பயந்து கொண்டு தான் புனை பெயரில் எழுதுகிறேன். மேலும் சில …போதகங்களை நேரடியாக விமர்சிபதால் எதிரிகள் அதிகம். தயவு செய்து புரிந்து கொள்ளுங்கள்!
Phd எடுத்து விரிவுரையாளராக இருப்போருக்கு அகப்பக்க யோக்கியனாக இருக்க வேண்டிய அவசியம் என்ன?. கையில் இருந்தால்தானே அகப்பையில் வரும்!. சைவத்தை அறியாத பட்டதாரிகள் சைவத்திற்கு பொருள் உரைக்க வந்ததினால் உம்முடிய Phd பட்டமும் சேர்த்தே அடி வாங்கியது. உலகியல் கல்வி வேறு, மெய்யியல் கல்வி வேறு. உலகியல் கல்வி கற்று, தான் எல்லாம் கற்றறிந்தவன் என்ற ஆணவ செருக்குக்கு சைவத்தில் பெயர் “அறியாமை”. சைவத்தின் புனிதத்தை அறியாமல் அதற்கு அவமரியாதை செய்யும் வண்ணம் கண்ட கண்ட குப்பையை எல்லாம் எழுதினால் வருவது துர்நாற்றமே. இணையத்தில் வரும் அத்துணை குப்பைகளும் சரியானவை என்று வாதிடும் ஒரு பட்டதாரி சைவ சித்தாந்தத்தையும் படித்து விட்டு வாரும். shaivam.org சொன்னது அச்சொல்லின் மேற்போக்கான (‘face value’) பதவுரை. அதினுல் இருக்கும் சைவத்தின் தத்துவம் எம்மை போன்ற சைவ சமியிக்குதான் புரியுமே ஒழிய பிறருக்கு அல்ல.
“தேனீ அண்ட் கம்பனியின்” பெயர் நன்றாகவே இருக்கின்றது.
“தேனீ குறிப்பிட முயல்வது ஞான சிவத்தின் ஒரு ரூபமே. அது முழுமையான சிவமாகிவிடாது.” இதைத்தான் ஒரு கண்ணில் சுண்ணாம்பை வைத்துக் கொண்டு பார்க்கும் தமிழர் அல்லாதோர் நிலை. சிவமே ஞான சொருபீதானே. இதில் என்ன முழுமை அடையாத சிவம்?.
உலக மக்களுக்கு
உணவை வழங்கிடும் உழவர் பெருமக்களை உளமார வாழ்த்திடுவோம்; அவர்தம் சேவைகளுக்கு நன்றி செலுத்திடுவோம்.எல்லோரும் வாழ்க வளமுடன்; நலமுடன்.
என் PhD மின்னியல் பொறிரியல். அது வேறு, நாம் இங்கு வாதிடுவது வேறு. “shaivam.org சொன்னது அச்சொல்லின் மேற்போக்கான (‘face value’) பதவுரை. அதினுல் இருக்கும் சைவத்தின் தத்துவம் எம்மை போன்ற சைவ சமியிக்குதான் புரியுமே ஒழிய பிறருக்கு அல்ல” என்று எழுதியுள்ளீர்கள் தேனீ அவர்களே. முதலில் என் கருத்தை முற்றிலும் (100%) மறுத்தீர்கள், ஆனால் இப்பொழுது ஓரளவு எற்று கொண்டு அதை face value என்று எழுதியுள்ளீர்கள். இன்னும் ஓங்கி தலையில் கொட்டினால், deep value என்பீர்களா ? மற்றவருக்கு புரியாது என்றால் ஏன் சார் அதை மற்றவர்கலுக்கு கற்று தருகிறீர்கள் ? சிவா பெருமானுக்காவது உண்மை புரியுமா அல்லது உங்களுக்கு மட்டும் தான் புரியுமா ? ஏன் அப்படி கேட்கிறேன் என்றால், இந்த வியாக்கியானம் செய்யும் பொழுது எல்லா மதத்திலும் சில கலவைகள் சேர்த்து விடுகின்றனர். பின் தாங்களே ஒரு மார்க்கத்தை உண்டு பண்ணி விடுகிறார்கள். அப்புறம் அவர்களுக்கு என்று ஒரு தனி மரியாதை, தனி தொண்டர் படை, தனி அது இது என்று ஒரு ஏகபோக வாழ்க்கை. இப்பொழுது நம் தமிழர்களுக்கு ஏது தேவை என்றால், ஒரு தெளிவுரை. ஆகவே தான் நான் என்னை காட்டி கொள்ளவே இல்லை. நாம் இங்கே வாதிட்டதை ஒரு சிறு தொகுப்பாக இணையத்தில் உலா விட்டால் என்ன தேனீ அவர்களே ?
தேனீ > திலிப் 2 அவர்களின் வாதங்களின் உட்பொருளை உணருங்கள் ->>சைவ சித்தாந்தம் நிறைய பேசுங்கள் > குறையொன்று மில்லை !!ஆனால் > உலகியல் அறிவியல் போன்றவற்றை தன்னகத்தே கொண்டுள்ள இந்து மத வேதங்களையும் > அதன் தொடர்பான உபநிஷத் >மகாபாரதம் >ராமாயணம் >கந்தபுராணம் போன்ற எண்ணற்ற ஆன்மீக பொக்கிஷங்களை “ஆரியர் சொத்து”” என விளக்கி வைத்து பிற மததுக்கு தாரை வார்த்து கொடுத்து விடாதீர்கள் !!
என்ற முன்ஜாக்கிரதை உணர்வின் வெளிப்பாடே அன்றி உம்மை தாக்குவதல்ல..அதனால் அவருக்கு தான் நட்டம்..” எங்களை தவிர வேறு சமய வாதிகள் இல்லை “” என்ற உமது ஆணவ கோளாறே உங்களை சுய பிற்போக்குவாதி என பறை சாற்றுவதை உணர்க>>!!
உலகத் தமிழர்கள் அனைவருக்கும் பொங்கல் தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள் தெரிவித்துக் கொள்வதில் பெரு மகிழ்ச்சி அடைகின்றோம்.
அப்பப்பா! இந்த பகுதியில் இடம் பெரும் எழுத்துக்களைப் படிக்கும் முன்னமே கண்ணு களைகட்டுதே! ரந்தின சுருக்கமாக கருத்துக்களை எழுதுங்கப்பா… அப்பப்பா…
முனைவர் நாகப்பனை மீண்டும் வேண்டும் என்றே இதில் இழுத்து விடுவதில் அப்படி என்ன ஆனந்தம் உமக்கு ??30 வருடம் இந்து சங்கத்தில் பொறுப்பில் இருந்து திருமுறை போட்டியை நடத்தி பரிசுகள் வழங்கி நாட்டில் இந்து சமய எழுச்சியை ஏற்படுத்தியவர் தானே ??இன்றும் சைவ சித்தாந்த பணியில் தீவிரமாக உள்ளார் > அவரின் சமய பங்கை நாம் குறை கூறுவது பாவம்
அனைவருக்கும் பொங்கல் நல்வாழ்த்துக்கள்.
திலிப் தங்கள் கருத்தை முற்றிலும் மறுத்தற்கு காரணம் (1) சிவன் சுடுகாட்டு சாம்பலை பூசியவன். அதற்குக் காரணம் (2) அவனுக்கு ஏலரையோன் பிடித்தது. அதற்கு ஆதாரம் (3) “தோடுடைய செவியன்” என்று சைவ நெறியை அறியாமல் முத்திரை குத்தியது. ஒரு மின்னியல் துறையில் முதுகலை பட்டம் வாங்கிவிட்டு, பரம்பொருளாகிய சிவத்தை அறியாமால், அப்பரம்பொருளை ஓர் “ஆன்ம (மனித) வர்க்கத்திற்கு” தரம் தாழ்த்தியது முதல் குற்றம். அதற்கு “ஏலரையோன்” பிடித்து சுடுகாட்டில் பிணம் எரித்தான் என்று எவனோ ஒரு படுபாவி எழுதி வைக்க அதைப் பற்றி சற்றும் சிந்தித்து அறியாமல் அப்படியே உண்மை என நம்பி இங்கே உமது கருத்தை எழுதியது இரண்டாவது குற்றம். மூன்றாவது குற்றமானது, இந்து மதத்தில் இருப்பு உள்ளோர் வேதாந்தத்தையும் கற்காமல், சைவ சித்தாந்தத்தையும் கற்காமல் சமய சம்பந்தப் பட்ட கட்டுரைக்குள் நுழைந்து “சைவ சித்தாந்தம் தமிழர்களுக்கு மட்டும் சொந்தம் என்னும் கருத்தை நான் மென்மையாக மறுக்கிறேன்.” என்றது. மெய்கண்டார் வழி அருளப்பட்ட சுத்த சைவ சித்தாந்த சாத்திரங்களானது” தமிழரின் மெய்யியல் கருவூலம். தமிழில் படைக்கப் பட்டது. அதைப் படிக்காமலேயே “நான் மென்மையாக மறுக்கிறேன்” என்றால் என்ன அர்த்தம்?. தமிழர் மெய்யியல் அறிவை தமிழர் அல்லாதோர் எவ்வாறு மதிக்கின்ரீர் என்பதற்கு இதுவல்லவோ மகாத்தான சான்று!. இதில் வேறு, சைவமும், வைணவமும் எனக்கு இரு கண்கள் போன்றது என்று ஏன் போலியாக பறைசாற்றுகின்ரீர்?. ஏன் அதே “ஏலரையோன்” பிரும்மாவுக்கும், விஷ்ணுவுக்கும் பிடிக்கவில்லை?. அவர்கள் ஆரியர்கள் கண்ட தேவர்கள் என்பதனாலா?. இதனால் தான் தமிழர்கள் “இந்து மதம்” என்ற மயக்கத்தில் இருந்து வெளியாகி எம் சமயம் “சைவ சமயம்” என்று உறுதி பூண்டால், நம் சைவத்தின் வேத நூல்களாகிய, ஆகமங்களும், திருமுறைகளும், மெய்கண்ட சாத்திரங்களும் நமக்கு நல்ல மெய்யறிவைக் கொடுத்து அதன் வழி நமது பக்தி மார்க்கத்தை உண்மை நெறியில் நின்று செவ்வனே செலுத்தலாம். “மேன்மைகொள் சைவநீதி விளங்குக உலகமெல்லாம்”.
களங்கத்தை ஏற்படுத்திக் கொண்டீர். அதனை விளக்கவே நான் மிகவும் சுருக்கமாக மறுமொழி எழுத வேட்டியதாயிற்று .
“இன்னும் ஓங்கி தலையில் கொட்டினால், deep value என்பீர்களா”. இன்னும் ஓங்கி எம் தலையில் கொட்டினால், எமது உயிரில் இருந்து வருவது தூல பஞ்சாட்த்திர மந்திரமாகிய “நமசிவய” என்பதாகும். அதைவிட ஓங்கி தலையில் அடித்தால் அடுத்து வருவது சூக்கும பஞ்சாட்த்திர மந்திரமாகிய “சிவயநம” என்பதாகும். அப்பொழுது என்னுடைய ‘sub-conscious mind” வேலை செய்ய ஆரம்பித்து விடும். அதற்கப்புறம் பேசுவது நானாக இருக்காது எம்முருவில் அந்த சிவமே உம்முடன் பேசும். சிவநிந்தனை செய்யாதீர். எச்சரிக்கை விடுகின்றேன்.
எம் சித்தாந்த ஆசிரியரை மதித்தமைக்கு நன்றி இந்து தருமரே. வாழ்க தங்கள் முருகத் தொண்டு.
இங்கே வாதிட்டதை ஒரு சிறு தொகுப்பாக இணையத்தில் உலா விட்டால் என்ன தேனீ அவர்களே?. இங்கே தாங்கள் இந்து மதத்தின் புராணக் கதைகளின் அடிப்படையில் தங்களுடைய கருத்துக்களை முன் வைத்தீர். யாமோ சைவ சித்தாந்தத்தின் அடிப்படையில் கருத்துக்கைளை முன் வைத்தோம். முன்னது “நம்பிக்கை”. பின்னது தருக்க நெறியில் வந்த “தத்துவம்”, இரண்டும் முரண்படுவது சகஜமே. இங்கே நடைபெற்ற உரையாடல் முழுமை பெறாதது. இதை இணையத்தில் உலாவ விடுவதால் எவ்வொரு பிரயோஜனமும் இல்லை. சமயத்தைப் பற்றிப் பேசுவதற்கு வேதாந்திகளும், சித்தாந்திகளுமே சிறந்தவர்கள். ஆனால் அவர்களெல்லாம் இணையத்தில் வந்து இப்படி வாதாடமாட்டர்கள், தர்க்கம் பண்ண மாட்டார்கள். அவர்கள் நிலை வேறு. நம் நிலை வேறு.
நல்ல உடல் பயிற்ச்சி ,ஆரோகியமான உணவு, நல்ல பழக்க வழக்கம் நல்ல உளைப்பு இதை கடைபிடிங்க சர், மதத்தை பொய் குப்பையலை போடுங்க. ஒரு 70- 80 வயது வழலாம். தேவையல்லாத வாக்கு வதம் உடலுக்கு நல்லதில்லை, மதம் ஒரு கொடிய நோய் !!!!!!
தேனீ அவர்களே , சனீஸ்வரர் கர்ம விமோச்சகர். நல்ல கருமத்திற்கு நல்லவைகலையையும், கெட்ட கருமத்திற்கு கெட்டவைகளையையும் தருபவர். சிவத்தை மட்டும்மல்ல, மகாவிஷ்ணுவின் ஒன்பது அவதாரங்களையையும் (இது வரை), பிழிந்தெடுதிருக்கிரார். மற்சய, குர்ம, வராஹ, நரசிம்ஹ, வாமன, பரசுராம, ராம, கிருஷ்ணா மற்றும் பலராம அவதாரங்களை படித்ததில்லையா? பூனை கண்ணகளை மூடி கொண்டால் உலகமே இருட்டானது என்று எண்ணி விடும். அப்படி இருக்கிறது உங்கள் கதை. சிவத்திற்கு உயிருடனான அவதாரமில்லை, ஆகையால் 12 ஜோதிர்லிங்கமாக தான் சிவம் அவதரித்து உள்ளார். பிரம்மாவிற்கும் 7.5 சனி பிடித்து, மதி கெட்டு படைக்கும் கடவுளான அவரின் எல்லா வித புகழ்ச்சியையையும் இழந்தார், தெரியாதா? ஒன்று மட்டும் நன்றாக புரிகிறது. தாங்கள் உங்கள் சைவ சித்தாந்த போதனைகளை மட்டும் வியாபாரம் செய்ய ஆசை படுகிறீர்கள். அதனால் தான் உங்கள் வகுப்புகளை மறைமுகமாக இங்கே விளம்பரம் செய்கிறீர்கள். அதிலும் நீங்கள் விளக்கினால் தான் தோடுடைய செவியன் , தோடுடைய செவியனாக இருப்பார் என்றும் இணையம் விளக்கினால் அது மேலோட்டமானது என்றும், நான் விளக்கினால் அது தவறு என்றும் பறைசாட்ருகீரீர்கள். பாவம் நீங்கள். என்ன செய்வது தங்களுக்கும் வயிறு உள்ளதே. இப்படிதான் பல இந்து மத போதனைகள் , இன்று பொருள் தேடி ஓடும் காலம் கலியுகம். உதாரணதிற்கு யோகா; பதஞ்சலி முனிவரால் இலவசமாக தரபட்டது. ஆனால் இன்று ஒரு தடவைக்கு 80-700 வெள்ளிவரை வசூல் செய்கிறார்கள் யோகாவை சொல்லி தர. இதில் அவன் தவறு செய்கிறான், இவன் தவறு செய்கிறான் என்று கூறி விட்டு, தங்களில் சொந்த கண்டுபிடிப்புகளை விற்கிறார்கள். நான் இந்துமதம் ஓர் வாழ்க்கை வழிமுறை என்று, இந்து மத போதகங்களின் தொகுப்பு ஒன்றை (250 பக்கங்கள் வரை) இலவசமாக மலேசியாவில் உள்ள அனைத்து பல்கலைகழக மாணவர்கள் சங்கங்களுக்கும் (ஆங்கிலத்தில் அவசரமாக தொகுக்க பட்டவை-நான் முற்றிலும் எழுத வில்லை), இலவசமாக தந்தேன். 10,000 பேர்வரை அந்த தொகுப்பை ஒரு வருடத்தில் பார்வையிட்டனர். உங்களுடன் இங்கே உரையாடி பிறகுதான், அதனை தமிழில் மொழியாக்கம் செய்து, அனைத்து தமிழர்களுக்கும் இலவசமாக தர ஆசை படுகிறேன். காரணம் இனிமேலும் தமிழர்கள் ஏமாறாமல் இருக்க. தேனீ அவர்களே , தாங்கள் தூங்குபவனை போல் நடிப்பவர், தங்களை எழுப்ப முடியாது.
திலிப் சார் > அற்புத சேவை //தொடரட்டும் உங்கள் பணி..நாம் இமயம் >>சில செம்மறிகள் முட்டி இமயம் சாய்ந்ததாக சரித்திரம் இல்லை….
சித்தர்கள் ஆட்சி ஆரம்பமாகிவிட்டது இனி கோவில்களில் ஆதாயம் காண முடியாது, ஆதாயம் கண்டவர்கள் அனைத்தையும் இழப்பர், இயற்கை செழிக்கும் செயற்கை மறையும்.
தமிழர்களின் உண்மையான சைவ சமயத்திற்கும் ஆரியனால் “உருவாக்க பட்ட ” சைவ சமயத்திற்கும் அடுக்கி கொண்டே போகும் அளவுக்கு வேறுபாடு\கள் உள்ளன.
மாயை உலகம், பல கடவுள்கள் , தோஷம் , நட்சத்திர வழிபாடு , கடவுள் அவதாரங்கள் , வேள்வி வளர்த்தல் இன்னும் அடுக்கி கொண்டே போகலாம். நாற்றாக பார்தோமானால் இவ அனைத்தும் பரந்த வியாபாரம் ஆகி கொண்டிருகிறது . யார் இதி பணம் சம்பாதிப்பது ? பணம் போட்டவர்களுக்கு ஏதேனும் சொல்லும் அளவுக்கு பலன் உண்டா?
மீண்டும் கூறுகிறேன் ஆரியனுடைய சமயம் வியாபாரம் மட்டுமே நோக்கமாக கொண்டது.
தமிழரின் சைவ சமயம் எங்கும் எதிலும் சிவத்தையே காண்பது . சிவனுள்ளே அனைத்தும் அடக்கம். பரம் பொருளான சிவத்தை வழிபட்டால் அணைத்து நன்மைகளும் உண்டு. பரம் பொருளுக்கு அப்பால் வேறு ஓர் சக்தி உண்டோ ?
பிராமண கதைகளை இனி யாரும் நம்ப வேண்டாம். நன்றாக யோசியுங்கள் , இறைவனும் நமக்கும் உள்ள தொடர்பு தந்தைக்கும்/தாயிக்கும் உள்ள தொடர்பு போல்.
நான் என் தந்தையிடம் நேரடியாக பேசமுடியும் எதற்காக இடை தரகர்கள் அதுவும் புரியாத மொழியில் ???????
கதைகளை நம்பி இனியும் ஏமாற வேண்டாம் ….
…தொடர்பு தந்தைக்கும்/தாய்க்கும் பிள்ளைக்கும் உள்ள தொடர்பு …
தேனீ > …””ஏலரையோன் பிடித்து சுகாட்டில் பிணம் எரித்தான் என்று எவனோ ஒரு படுபாவி எழுதிவைக்க அதை பற்றி சற்றும் அறியாமல் …” என்ற உமது வாசகத்தை மீண்டும் ஒரு முறை வாசித்து வைத்துகொள்ளுங்கள் – dhilp கு உதவியாக நீங்களே வைத்த வாதம்..
தேனீ > “”எம்முருவில் சிவனே வந்து பேசும் ..”என்பது dhilip கு நீர் விடும் எச்சரிக்கையோ ?? ..”” நான் தான் பர பிரம்மம் -வாருங்கள் என்னோடு இணைந்து மோட்சத்தை அடையலாம் >>”என்று கூடத்தான் சுவாமி நிட்யானந்தாவும் சொன்னார்..i ?? இந்து தாத்பரியத்தை பொறுத்தவரை “”இறைவனை கண்டவர் வெளியே சொல்வதில்லை > வெளியே சொல்பவர்கள் அவனை கண்டதே இல்லை..> நீர் அறியாததா ??
டிலிப்2 சகோதரரே உங்கள் எழுத்தை படித்து 2 நான் உங்கள் வார்த்தைக்கு அடிமையாகி விட்டேன் . தொடரட்டும் உங்கள் சேவை . இங்கே யார் பெரியவர் சிறியவர் என்ற பேதம் வேண்டாம் உள்ளதை உண்மையை தெரிந்துகொள்ள ஒரு பாலமாக இருக்கட்டும் . உங்கள் கருத்துக்களை படிக்கும் சிலராவது ஹிந்துமதத்தை நிந்திக்க மாட்டார்கள் என்று நம்புகிறேன்
பல்வேறு கருத்துகளை வெளியிட்ட அன்பர்களுக்கு நன்றிகள் பல.!! எமதறிவுக்கெட்டிய சிறிய சிந்தனை !!!! உன்னுள் கடவுளைப்பார். உமது சொல்லில் கடவுளைப்பார். உமது செயலில் கடவுளைப்பார்..உமது உறவில் கடவுளைப்பார். உமது வாழ்வில் கடவுளைப்பார்…ஆத்மாவில் பரமாத்மாவைப் பார்….முயற்சி செய்து பாருங்கள்…ஆனந்தம் நாளடைவில் பேரானந்தமாகும்!!!!
தமிழன் நீங்கள் சொல்லும் கருத்தை நான் அமோதிப்பதேன்றாலும் குரு யார் ? அவர் எங்கேஉபதேசிகின்றார் சொலுங்கள் . நீங்கள் சொல்வது சாவியே இல்லாமல் பூட்டை திறக்க முயற்சிக்கும் செயல் . இது சாத்தியமா ? தமிழ் மதமோ இந்து மதமோ முறையான பிரசங்கம் இல்லை என்றால் பலன் எப்படி தெரியும் ? சிவன் யாருக்கு சொந்தம் என்பதை விட அவரை முறையாக எப்படி புஜ்ஜிப்பது எப்படி என்பதை பிளைகாளுக்கு சொல்லிதாருங்கள்
சிற்றெரும்பு! இன்று முதல் நீங்கள் பெரிய யானை! தங்கள் தத்துவம் தங்களை அடையாளம் காட்டுகிறது.
ஈசனே மனிதனாகிறான்,மனிதனான ஈசனே தன் உயர் ஞானத்தால் தன்னை அறிவான்.
அனைத்து நல்லுங்களுக்கும் நன்றி, நினைவில் கொள்ளுங்கள் சைவமும் வைணவமும் இந்துமதத்தின் இரு கண்கள். இதில் எந்த வேறு பாடும் எனக்கு இல்லை. இங்கே நான் தேனீ அவர்களிடம் தெளிவாக கூறிவிட்டேன் தமிழர்களை கொண்ட சைவ சித்தாந்த மார்க்கம் இன்னும் சரியாக தொகுக்க படவில்லை ஆகையால் தத்துவ மார்க்கத்தில் பலவீனமாக உள்ளது என்று. அதை நான் விட்டும் கொடுக்க வில்லை, அவர் அதை பற்றி கவலை படுவதாக தெரிய வில்லை. மேலும் நானாக வழியே வந்து, இந்த தமிழர்களை கொண்ட சைவ சித்தாந்த மார்க்கத்தை தொகுக்க உதவுகிறேன், நீங்கள் தலைமை எற்று கொள்ளுங்கள் என்றதிற்கும் வெறும் அலச்சியம் தான் மிஞ்சியது. ஆகையால் இந்த தேனீ சைவ சித்தாந்த மார்கத்தை அவரிடமே விட்டு விடுகிறேன். காலம் வரும் பொழுது தயவு செய்து இந்து மத போதகங்களை தமிழில் மொழியாக்கம் செய்ய மங்கை, இந்து தருமர் போன்றோர் உதவ வேண்டும் என்று வேண்டி கேட்டு கொள்கிறேன். நன்றி.
திரு தமிழன் அவர்களே, சரியாகச் சொன்னீர்கள் நன்றி . வாழ்க நம் சைவ சித்தாந்த வரலாறுகள் ‘நமசிவாய வாழ்க நாதன் தாழ்வாழ்க!”
மங்கை …..”அன்பும் சிவமும் இரண்டென்பர் அறிவிலார் , அன்பே சிவமாவது யாரும் அறிகிலார், அன்பே சிவமாவது யாரும் அறிந்த பின் அன்பே சிவமாய் அமர்ந்திருந்தாரே “…..இதன் அர்த்தம் புரிந்தால் , நம் வாழ்வு எவ்வளவு இம்பகரமாய் இருக்கும்……???? இத விட்டு விட்டு ஏன் நாம் எங்கெங்கோ யார் யார் பின்னாளில் நாம் திரிகிறோம் …
உண்மையான சைவ சமயத்தை அறிய , எங்கும் எதிலும் சிவத்தை காணுவோம். சிவனை அடைய எந்த “பர்மிலவும் ” இல்லை .அவன் ஒருவனே என்று முதலில் அறிவோம், சிவனே பரம்பொருள் , சிவனே உலகின் அனைவருக்கும் தாய் தந்தை . நம் தாய் தந்தையிடம் பேச நமக்கு யாருடைய வழிகாட்டியோ அனுமதியோ அல்லது எந்த ஒரு குறிப்பிட்ட மொழியோ தேவையில்லை . நமக்கு தெரிந்த மொழியிலே எவ்வளவு வேண்டுமானாலும் பேசலாம் என்ன வேண்டுமாலும் பேசலாம். இதை நான் அனுபவித்து எழுதுகிறேன்.
இந்த உண்மையை அறியவிடாமல் பல பயங்கர சதிகாரர்கள் தடுத்து கொண்டிருகின்றனர் …………ஏன் ….பதில் உங்கள் கண் முன்னே ..
திலிப் 2 ஐயா > இந்துமதத்தின் மேல் தங்களுக்கு உள்ள பற்று >சிவனும் சரி சன்மதமும் சரி – அதன் களஞ்சியங்கள் அனைத்தும் நம்முடையதே > அதில் ஒரு எள்ளளவு விஷயத்தை கூட எந்த காரணத்தை கொண்டும் விட்டு கொடுக்க கூடாது என்ற உங்களது ஆணவமில்லா வைராக்கியம் ஆகியன கண்டு பெருமைபடுகின்றம் > எங்கள் நண்பர்கள் யாவரும் உங்களின் வாதங்களின் விசிறிகள்…>
மன்னிக்கவும் இடி அவர்களே!!!! ஈசன் மனிதனாகலாம். அனால், மனிதன் ஈசனாக முடியாது. ஈசன் நம்முள் இருப்பதையே உணர முடியும் தவிர மனிதன் பரமாத்மாவாக முடியாது என்பதே யாம் அறிந்த கருத்து!!!
1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 0 என்பது அடிப்படை எண்களின் வருசை. இந்துகளின் கணித சாஷ்திரபடி: 1 = சூரியன், 2 = சந்திரன், 3 = அக்னி , 4 = பிரம்மா , 5 = நமசிவாய ,6 = சரவணபவ , 7 = விநாயகர் , 8 = மகாவிஷ்ணு , 9 = மகிஷாசுறமர்தினி (சக்தி), 0 = பிரபஞ்சம் . ஆரம்பத்தில் இந்துக்கள் தான் சுழியனை (பூஜியம்) இந்த உலகிற்கு தந்தார்கள். வெவ்வேறு எண்களை கொண்டிருந்தாலும் 9 நவ கிரக வாழிபாடு இதற்க்கு ஒரு உதாரணம். இதில் 1+8=9 , 2+7=9 , 3+6=9 , 4+5=9 , 9+0=9 ஜோடியாக வருவது ஐந்து கூட்டுகள், அதாவது நமசிவாய (5). இந்த கூட்டுகளின் மொத்த என் 9. அதாவது மகிஷாசுற மர்தினி (சக்தி) 9. சக்தி இல்லையேல் சிவம் இல்லை. சிவம் ஜோடியானவர். இப்பொழுது சிவனையும் பர்வதியையையும் கூட்டினால் 5 + 9 = 14 வரும், அதில் இருந்து வரும் 14 கை கூட்டினால் 1+4 = 5 வரும். ஆகவே தான் சிவசக்தி அவதாரத்தில் சிவமே உயர்வாக போற்றபடும். சரி இது ஏதோவோ சித்து விளையாட்டு போன்று தோன்றும் பலருக்கு. தேனீ அவர்களுக்கு சொல்லவா வேண்டும் ? இன்றைய கணிதத்தில் பரம்பொருளை சுலபமாக காணலாம். இந்த ஒன்பது (9), அதாவது ஒரு பெண்தான் படைப்பின் ரகசியம் என்றால், எல்லவற்றிலும் அது இருந்தாக வேண்டும். உதர்ணதிர்க்கு 1 x 2 x 3 x 4 x 5 x 6 x 7 x 8 x 9 பெருக்கினால் 362880 வரும் இதன் எல்லா எங்களையையும் கூட்டினால் 9 வரும். அப்படியே வகுத்தலும், 1 / 2 / 3 / 4 / 5 / 6 / 7 / 8 / 9 = 0.0000027 வரும் .கூட்டினல் 9 வரும். இப்பொழுது கூடல் கழித்தலை பாருங்கள். ( 0 + 1 + 2 +3 + 4 + 5 + 6 + 7 + 8 + 9 = 45 => 4+5 =9 ). ( 0 – 1– 2 – 3 –4 – 5 – 6 – 7 – 8 – 9 = -45 => -(4+5) = -9). இந்த படைப்புகள் 4 வேதமாக இருப்பதால், இந்த 9 நான்கு வழிகளில் எல்லா வகை இன்றைய கணித்தையையும் உட்டளிக்கியது. உதர்ணதிர்க்கு சில இங்கே தந்துள்ளேன் 1) பாகை (90 டிகிரி = 9+0 = 9), (180 டிகிரி = 1+8+0 = 9), (270 டிகிரி = 2+7+0 = 9), (360 டிகிரி = 3+6+0 = 9). 2) மொத்த வினாடிகள் 60Sec X 60Min (1Hr) = 3600Sec (3+6=9), 3600Sec X 24Hrs = 86400Sec (8+6+4+0+0=9), 86400Sec X 28Days (1Month) =2419200Sec, (2+4+1+9+2+0+0 = 9) (எதனை நாட்களை , மாதமாக போட்டாலும் விடை ஒன்பதுதான்). 3) இதன் அடிப்படையிலேயே தவரங்கள், பூக்கள், செடிகள், கொடிகள், பழங்கள் அதன் தோற்றம் பெறுகிறது, Fibonacci series is given by Fn = F n-1 + F n-2. இதில் வரும் என் 12 மற்றும் வைத்து, இத நீழலின் 12 இடத்தில உள்ள அணைத்து என்னையும் கூட்டினால் 9 வரும். 4) நிலவின் குறுக்களவை (diameter ) 2 ஆள் வகுத்தால் 108 மையில்கள். அந்த நிலவின் குறுக்களவை 108 கொண்டு பெருக்கினால், பூமிக்கும் நிலவுக்கும் உள்ள தூரம். பூமியின் குருக்களைவை 108 கொண்டு பெருக்கினால் சூரியனின் குறுக்களவு. இப்பொழுது சூரியனின் குறுக்களவை 108 பெருக்கினால் பூமிக்கும் சூரியனுக்கும் உள்ள தூரம். 1+0+8 கூட்டினால் 9. படைப்பின் கடவுளை எண்களாலும் கண்டு கொள்ள முடியும். இந்து மதம் இதில் ஈடு இனையிலாதது. இப்படி அடிக்கி கொண்டே போகலாம்…………சைவ சித்தாந்தம் எண்களின் தொகுப்புகளை கொண்டிருக்கவில்லை. நாங்கள் யாருடனும் மத சண்டைக்கு செல்வதில்லை, ஆனால் அவர்களே …..