அப்படி இப்படி என்று தமிழர் புத்தாண்டு தை மாத பொங்கல் விழாவோடு தொடங்குகிறது என்ற உண்மையை உலகத் தமிழர்கள் உணர்த்து விட்டனர். இன்று 10/1/2015 மின்னல் FM கேட்டுகொண்டு இந்த தலைப்பை துவக்கினேன். விளமபர படைப்பான ஒலியில் உலாவில் ஆறுமுகம் அவர்கள் ஒரு குறிப்பை சொன்னார். அதாவது பரமசிவம் என்ற அபூர்வாஸ் உரிமையாளர் ராசிபலன் சித்திரை மாதத்தில்தான் தெரியும்,,, ஆக இப்போது சொல்வது சரிபடாது என்று போட்டார் ஒரு போடு. தமிழர்கள் வழிபாட்டில் சோதிடம் ராசிபலன் அல்லது எண் கணிதமெல்லாம் இருக்கையில் ஆரியர்கள் மாதமான சித்திரையில் தான் தமிழ் ராசிபலன் வரும் என்றால் சனி பெயர்ச்சியில் வாசிக்கப்படும் சோதிடம் என்பது என்ன?
இந்தக்கேள்வியோடு தமிழர் பண்பாட்டு நாகரீகம் என்றால் என்ன என்று பார்ப்போம். இந்த தலைப்பை நீண்டு எழுதிக்கொண்டே போகலாம். நம்மவர்களுக்கு படிக்க நேரமில்லை என்பதால் பலரின் ஆசைப்படி என் கட்டுரைகளை சுருக்கி எழுத முயல்கிறேன்.
அடிப்படையை விளங்கினால் தான் வரலாறு தெரியும் என்பது கல்வியாளர்களின் கருத்து. ஆனால் இப்போதுள்ள அறிவாளிகள் ஆசானுக்கே பாடம் சொல்பவர்கள்..அதையும் கேர்ப்போம்.
கடந்த 10 ஆண்டுகளாக உலகத் தமிழர்களின் பண்பாட்டு கூறுகளில் நாகரீகம் என்ற போர்வையில் மோசமான் பொதுசசேதங்கள் பாழ்பட்டு உள்ளது. இதற்கு பல காரணங்கள் இருந்தாலும் என் ஆய்வும் இலக்கும் தமிழர் பண்பாட்டு நாகரீகம் என்பது என்ன ?
நானும் நாகரீகம் என்ற புதுமைக்குதான் புகுந்துள்ளேன். காரணம் தேவையானதை கூட்டி பழமையை வைத்து பாராட்டுவது ஒரு வகை. இரண்டாம் வகை பழமையை விட்டு விலகி அதிநவீன நாகரீக அல்லது பிறர் இன பண்பாட்டு கூறுகளை சேர்த்து நமது ஆதித தமிழர் பண்பாட்டு சிறப்புகளை ஒதுக்கிவிடுவது இன்னொரு விதம்.
இப்ப மலேசியத் தமிழர்கள் ஓரளவுக்கு நாம் எங்கு நிற்கிறோம் என்று புரிந்து இருக்கும்.! அவர் அவர் பயிற்சிக்கும் எழிசிக்கும் விட்டு விடுகிறேன்.
புதுமை மூர்க்கத்தனமும் சினிமா கேளிக்கை கலப்பும் ” பேஷன் போட்டிகள் ” பேரில் பேய்கள் நாகீகம் என்று சொல்லும் அளவிற்கு இப்போதைய நடப்புகள் உள்ளது. திருமண மணப்பெண் விருந்து நிகழ்வில் மேடையில் மணமகனை கட்டிபிடித்து பிடித்து காதல் டூயட் பாடுமளவிற்கு நாகரீகம் “சில்க் ஜில்லாவில்” வெள்ளையன் உடையில் சீனர் சிங்க ஆட்டம்ம்வரை மலேசியாவில் கல்ப்பியல் பண்பாட்டு கொலை வெறிகள் அரங்கேறி வருகிறது. ஆனால் இதரவர்கள் நம் கலாசார உடைகளை கொஞ்சமாவது கோர்த்துக்கொண்டார்களா என்றல் பஞ்சம் தான் பரிதேசிக்கிறது.
தமிழர் நாட்டின் பண்பாட்டு சீரழிவுகள் சினிமாவில் மற்ற மாநில மாயைகளால் உரு மாறி உள்ளதை பார்க்கிறோம். ஆனால் கட்டுப்பாடுகள் மிகுந்த தூயத்தமிழர்களின் வாழ்வியல் பழக்க வழக்க பழமை பண்புகள் சென்னையில் கூட இன்னும் மேலோங்கி உள்ளது.
நான் என் கண்களை கலக்கிய சிங்கப்பூர் மற்றும் மலேசியா தமிழர்களை பற்றிய அடங்காத்தன ஆடம்பர அநாகரீக பண்பாட்டு சிதைவுகளை அலச உள்ளேன்.
இதற்காக தமிழர்கள் அனைவரும் இப்படி பாழ் குழியில் விழுந்து விட்டார்கள் என்று சொல்ல வரவில்லை. இருந்தும் சில குடுபங்களில் அப்பா, அம்மா, அண்ணன், தம்பிகளின் எரிச்சலை மீறி நாகரீக படி தாண்டும் தமிழ்பபத்தினிகளை காசு வாங்கி இந்த அலங்காரிகள் அசிங்கப்படுத்தும் கோலத்தை கொஞ்சம் கலைத்துப்பார்க்க வேண்டும். இது நமது உரிமையும் கூட !
சினிமா சீர்கேட்டால் இந்த பரிதாபம் என்றால், அதை நான் ஒத்துக்க முடியாது காரணம் சங்கீதம் ,பாரத நாட்டியம் ,பிற நவீன நடன பள்ளிகள் கூட தமிழர் இலக்கண மரபுடந்தான் பாடங்கள் நடக்கின்றன. இடையில் சினிமா இயக்குனர்கள் இவர்களை விற்பனை பொம்மைகளாக கவர்ச்சி உருவாக்க ஆடைகள் போட்டு ஆட விடுவதை வீட்டில் இருக்கும் ரசிக மணிகள் வீட்டுக்கும் விழாவுக்கும் புகுத்தும் விந்தையைத்தான் தமிழர் சமூகம் நிந்திக்க வேண்டும்.
நம் நாட்டில் மலாய் சகோதரர்களின் திருமண விழாவுக்கு போனால் அவர்களின் உடை நாகரீகம் தெய்வீகமாக உள்ளது ..அனால் நமது பெண்களின் உடையில் பல கலப்புகள்?
நான் தமிழர்களின் பத்துப்பாட்டில் பதினெண்கீழ் கணக்கியல தமிழர்களின் பழமை கணக்கிற்கு போங்கள் வாழுங்கள் என்று சொல்ல வரவில்லை. அந்த கோடுகளையும் சேர்த்து புதிய கட்டுபாடான உருப்படிகளை அணியுங்கள் அழகு பாருங்கள் என்றுதான் சொல்கிறோம்.
உடைகளை மட்டும்தான் மனிதன் பண்பாட்டுக்கு முதல் கூறாக காண்கிறான். மற்றது அறம் சாந்த சம்சாரம். சமீபத்தில் ஒரு தமிழ் ஆசிரியரின் கேள்வியை பாருங்கள்” திருவள்ளுவர் தமது குரல்களில் எங்கேயும் ஒருத்தனுக்கு ஒருத்தி” என்று சொல்லி உள்ளாரா ? என்ற கேள்வியை கேட்டு வைத்தார். யாரும் பதில் சொல்லவில்லை ! திருக்குறளில் எத்தனயோ வாழ்வியல் அறம் உண்டு இவர் கொச்சையாக இந்த விபரீத ஆசைக்கு அடிமையாகி நம் பண்பாட்டை குலைத்துளார். இது (மனிதம்) ஒரு வித பண்பாட்டியல் மனிதம் என்றுதான் எடுத்துக்கொள்ள முடியும்? குயில் போல மனைவியும் குரங்கு போல கூத்தாலும் வைத்துக்கொள். ஆனால் மனை சாட்சி என்ற மனைவியால் வாழ்வியலை திருவள்ளுவர் பல குரல்களில் சொல்லி உளார். அதுதான் பண்பாட்டுக்கல்வி ஒழுக்கம் என்று அந்த ஆசிரியர்க்கு இப்போது சொல்வேன்.
தலைமுறை இடை வெளி எப்போதும் இலாத அளவுக்கு இப்போது அகலமாகிவிட்டது. கடந்த கால சமுதாயம்,நிகழ் கால சமுதாயம் இருக்கட்டும் .எதிர்கால சமுதாயம் என்பதை சமரச சகிப்புகள் என்பதா என்ற முச்சந்தியில் யோசிக்கிறோம். நமது தமிழர்களின் பண்பாட்டு உரிமைகளை கட்டி காப்போமா அல்லது அது ஒரு சலுகை… வந்தால் வரம்பு இல்லையேல் குடும்பத்தில் வம்பு என்று விட்டு ஒதுங்கி போவோமா என்பதே இன்றைய கேள்வி?
ஆனால் அக்கறை உள்ள ஒரு தொன்மையான இனத்தில் பண்பாட்டு அழகும் அடையாளமும் ஒரு சிறுபான்மையிரனால் கெடுமானால் பெரும்பாமை தமிழர்கள் ஏமாளிகளாக முன்பு போல பல வற்றை இழந்த இழி நிலைக்கு போவது நமது கோழைத்தனம் என்பேன்!
நமது சமயம் ,நமது கலாச்சாரம் ,நமது பண்பாடுகள் , நமது நாகீகம் , நமது இனம் , நமது மொழி ,நமது வாழ்வியல் அழகுகளை திரும்ப திரும்ப சொல்வது நமது கடைமையாகும்.
-பொன்.ரங்கன்
சரியான பதிலடி தமிழரே.
எதிரியை (ஆங்கிலேயரை) வெல்ல ‘ஞான செருக்கு’ வேண்டும் என்று பாரதியாரே சொல்லி இருக்கின்றார். வைதீகர்களை வெல்லும் அந்த ஞான செருக்கு, தமிழா உன் உள்ளத்திலும், உணர்விலும் காண்கின்றேன். அந்த உணர்வு முளை விட்டு மரமாகி, காய் காயித்து, கணியைத் தரும் முன்னே முளையிலேயே ‘சமரசம்’ என்ற சறுக்குப் பாலத்தைப் போட்டு பாதி வழியிலே ஆற்றில் தள்ளி விட்ட கதைகள் பல. எடுத்துச் சொல்ல ஆரம்பித்தால்? அதன் வலியைத் தாங்கிக் கொள்ள இந்து தர்மத்தை முன் நிறுத்துவோர் தயாராக இருக்க வேண்டும்.
இரத்தினமே, இங்கிட்டு பேசுவதாகவோ, அங்கிட்டு பேசுவதாகவோ பிடிகொடுக்காமல் பேசுவதால் பயனில்லை. ஒரு நேர் வழியைக் கொண்டு தமிழர் நகர்வோமால் நமக்கு ஒரு இலக்கு இருக்கும், நம் பண்பாடு, கலை கலாச்சாரம் காக்க வேண்டி, போக வேண்டிய இடத்திற்கு செவ்வனே போய்ச் சேரலாம். உங்க வசதி எப்படி?.
“” ஆண் போல நடக்க வேண்டும் ..””
( ஈ,வே ராமசாமி )
>>>”எனவே பெற்றோர்கள் தங்கள் பெண்களை பெண் என்றே ளைக்க அழையாமல் ஆண் என்றே அழைக்க வேண்டும் ..பெயர்களும் ஆண்கள் பெயர்களையே இட வேண்டும் > உடைகளும் ஆண்களைப்போல கட்டுவித்தல் வேண்டும் > சுலபத்தில் இது ஆனா பெண்ணா என்று மற்றவர்கள் கண்டு பிடிக்காத மாதிரியில் தயாரிக்க வேண்டும் > பெண்ணும் தன்னை பெண் இனம் என்று கருத இடமும்-எண்ணமும் உண்டாக்கும்படி நடக்கவே கூடாது ….””
– ( திருப்பத்தூரில் – 15-09-48 )
பெரியார் சொற்பொழிவு
வாதத்தை திசைதிருப்பும் நோக்கில் இங்கே இந்து தர்மன் பெரியாரின் பேச்சை பதிவிட்டு வைதீகத்தின் கொடுமையை அதிகமாகப் பட்டியலிட்டுவிடுவோம் எனும் அச்சத்தின் காரணமாக பாய்பாஸ் உபாயத்தை கையாள்கிறார். இதுதான் வைதீகத்தின் பிறவி குணம் என்பது. நாமிங்கே தமிழினத்தின் மீட்சிக்கான வழிக்கு கவனம் செலுத்திக்கொண்டிஇருக்கும் வேளையில் , தமிழினம் தன்னிலையுணராமல் வீழ்ந்துபோன வரலாற்றை அலசும்போது, இங்கே இடைச்செறுகலாகப் பெரியாரையும் அவர்தம் உரையின் ஒரு பகுதியையும் மொட்டையாகப் பதிவிட்டு , நாம் மேலும் வைதீகத்தின் கேடுகளை முன்வைக்காதபடி நம்மை பெரியாரின் பக்கம் கவனத்தைத் திருப்புகிறார். நாம் இந்த சித்தாட்டத்தை அறியாதவர்கள் அல்லர்; பலியாகிறவரும் அல்லர் என்பதை இந்துதர்மனுக்கும், அவரைப் போன்ற விஷத்தனமிக்க சூசக எண்ணம் கொண்டோருக்கும் சொல்லிக்கொள்கிறேன்.
பெரியார் என்பவர் ஒரு சமூக விடுதலைக்காகப் போராடிய போராட்டவாதி. காந்தியாரும் மற்றும் பலரும் நாட்டு விடுதலைக்காகப் போராடினார்கள். அப்போது காந்தியின் பக்கம் பெரியார் இருந்தார். காந்தியின் நாட்டு விடுதலை வைதீகத்தை உச்சிக்கொம்பில் ஏற்றிவைத்திடப்போகிறது , மற்றவரை மொட்டையடிக்கப் போகிறது என்பதை முன்னறிந்த பெரியார் இந்திய விடுதலை நாளைத் “துக்க நாள்” என்று பகிரங்கமாக அறிவித்தார். நாடு வெள்ளையனிடமிருந்து விடுதலை பெற்று வடவனிடம் நம்மை அடிமையாக்கிடும் நாள் என்றார். ஒரு சமூகம் எல்லா கட்டுகளிலிருந்தும் விடுதலை பெறாமல் நாட்டு விடுதலை பெறுவதினால் எந்த நன்மையும் பெரிதாக ஏற்படப்போவதில்லை என்று சொன்னார் பெரியார். வைதீகத்தின் கிடுக்கிப் பிடியில் மூச்சுத் திணறிக்கொண்டிருந்த சமூகம் முதலில் பெறவேண்டிய விடுதலை வைதீகத்திடமிருந்தே என்பதை ஆணித்தரமாக எடுத்துரைத்தார். ஆக, நாட்டு விடுதலைக்காக வெள்ளையனிடம் போராடுவது எளிது , ஆனால் இந்த வைதீக இந்துக்களிடமிருந்து விடுதலை பெறுவது கடினம் என்பதை உணர்ந்த பெரியார் முதலில் வைதீகத்தை எதிர்த்தார். வைதீகத்தை எதிர்த்த புத்தர் பொன்ற முன்னோடிகளுக்கு என்ன நேர்ந்தது என்பதை எல்லாம் துள்ளிதமாக ஆய்ந்து தனது போராட்டத்தை வடிவமைத்தார்.
இந்திய நாட்டின் விடுதலைக்குப் பின் எந்த அளவிற்கு வைதீகமெனும் நாகம் படமெடுத்தாடியது என்பதை அறிவுள்ளவர்கள் அறிவார்கள். காந்தியார்கூட கோயில்களில் அரங்கேறிய அபாசங்களைக் கண்டு மனம் வெந்து ” கோயில்கள் விபச்சார விடுதிகள் போல் உள்ளன…” என்றார். அந்த அளவிற்கு பணக்கார வைதீகரகளின் செயல்கள் இந்திய திருநாட்டிலே அரங்கேறிக்கொண்டிருந்தன. இஃதை தன்மானமுள்ள எந்த இந்தியனாலும் மறுக்க முடியுமா? இந்தியாவின் பூர்வீக பெண்களை இடுப்புக்குக் கீழே மட்டுமே ஆடை அணிய வேண்டும் , இடுப்புக்கு மேலே மார்பகங்கள் மூடப்படக்கூடாது என்று கொடுமை படுத்தியது வைதீகம். இந்தக் கொடுமையைவிடவா பெரியாரின் உரை மோசமானது? பெரியாரை இந்த வைதீகமே தீவிரமாக சிந்திக்க வைத்தது என்பதை முதலில் இந்து தர்மன் புரிந்துகொள்ள வேண்டும். வைதீகத்தை எதிர்க்க பெரியார் எந்த உச்சத்திற்கும் செல்லத் துணிந்தார். பெண்களின் விடுதலைக்காக பெரியாரைப் போல் போராடிய ஒரு மனிதனை இந்தியாவில் காட்ட முடியுமா இந்து தர்மனே? வைதீகப் பெண்களுக்காகவும் போராடிய ஒப்பற்ற சமூகப் போராளிதான் தந்தை பெரியார். பெண்களுக்குச் சொத்துரிமை, கோயில் வழிபாட்டு உரிமை என அவர்களின் ஒட்டுமொத்த உரிமைக்காகப் போராட்டம் நடத்தி வெற்றி கண்டவர் அவர்.
வைதீகத்தின் கோரப்பிடியிலிருந்து வெற்றி பெறும் உபாயமாகவே பெரியார் பெண்களை தங்கள் நிலையை, நினைப்பை மாற்றிக்கொள்ளத் தூண்டி இருக்கலாம். ஆனால் எந்தப் பெண்னையும் வற்புறுத்தி, கட்டாயப்படுத்தி, ஆணாக மாற்றியதாக இந்து தர்மனால் ஆதாரம் காட்ட முடியுமா? ” நான் சொல்வதில் தங்கள் பகுத்தறிவிற்கு ஏற்புடையதை மாத்திரம் எடுத்துக்கொள்ளுங்கள். வேண்டாம் என்பதை விட்டு விடுங்கள்!” என்று சொன்னதெல்லாம் வைதீகக் காவலன் இந்து தர்மனுக்கத் தெரியாதா? அல்லது வேண்டியதை மாத்திரம் வெட்டி எடுத்து வாதப்பொருளாக்கி காழ்ப்புணர்ச்சியை சொறிந்துகொள்ளும் உபாயமா?
அதென்ன இந்து தர்மா, தமிழன் ஒரு கருத்து எழுதினால் உடனே பெரியாரை உள்ளே கொண்டு வந்து நுழைப்பது?. நமது பண்பாட்டைப் பற்றி பேசுவோம். நம் மக்களின் கலை கலாச்சாரம், பண்பாடு மலேசியாவில் மற்ற இன மக்கள் மதிக்கும்படி இருக்கும் கருத்துக்களை முன் வைப்போம். நம் இன மக்கள் பாரம்பரியம் மிக்க மக்களாக தன்னிலை பெற அவை எப்படி உதவ முடியும் என்பதைப் பற்றி சிந்திப்போம்.
பகுத்தறிவு பகலவன் என்று நாம் போற்றும் பெரியார் கிருஷ்ணரின் சிலையை ரதத்தில் வைத்து செறுப்பால் அடித்துச்சென்றது எந்த வகையில் ஏற்றுகொள்ள முடியும். அப்படி செய்ததனால்தானே மக்கள் இன்னும் அவதிப்பட்டுக்கொண்டிருக்கிறார்கள். திராவிடர் கழகக்காரர்களால் இறை நம்பிக்கை தமிழர்களிடம் குறைவதற்கு காரணமானது. சமீபத்தில். வினாயகர் உருவச்சிலையை வதைசெய்கிறார்கள் தமிழர்கள். ஆண்டவனை நிந்திக்கலாமா? இறை நம்பிக்கையால் மாத்திரமே மனிதர்கள் உயர்வடைய முடியும். எந்த கடவுளை வணங்கினாலும் எல்லாம் ஒன்றுதான். 7 வர்ணங்கள் எல்லோருக்குமா பிடிக்கிறது? ஒவ்வொருவருக்கு ஒவ்வொரு வர்ணம் பிடிப்பதுபோல் இல்லையா? எல்லா கடவுள்களும் முழுமுதற்கடவுள்தான். இதில் அவர்களுக்கு பேதம் இல்லை. மனிதர்களின் அறியாமையால் பேதம் பிறக்கிறது.
முருகனை கூப்பிட்டு எனக்கு யோகாப்பியாசம் சொல்லிகொடு என்று சொன்னால் அவர் வந்து சொல்லிக்கொடுக்கிறார். ஆனால், இதற்கு ஆசான் நான் அல்ல ஈசன்தான் என்கிறார். அதே வேளையில், ஐந்து முகம் தோன்றின் ஆறுமுகம் தோன்றும் என்று கூறுகிறான் முருகன். இது எப்படி? ‘திகட சக்கர செம்முகம் ஐந்துளான்’ என்று கந்தபுராணத்தில் தன்னை சிவனே என்று கூறுகிறார். கண்டுபிடிப்பு என்பது பலவருட ஆராய்ச்சிக்குப்பின் வருவது. அதைப்போல் ஆண்டவன் பற்றி அறிவதற்கு தர்க்கவாதம் எந்த வகையிலும் உதவாது. அறிவை நாம் பயன் படுத்தும்வரை ஆண்டவன் தரிசனம் கிடையாது. இது உண்மை வாக்கியம். பொய்யாமொழியும்கூட.
வள்ளலார் கூறிய ‘சைவம் முதலாக காட்டும் பிறமதங்கள் தனித்தனி காட்டும்’ என்றதால் மற்ற மதங்கள் தாழ்ந்து போகவில்லை. மாறாக மதச்சின்னங்கள் என்ன கூறவருகின்றன என்பதுதான். அவைகளில் உள்ள ஒற்றுமைகள் என்ன என்பதை குறிப்பன. இதில் எதுவும் தாழ்ந்ததல்ல. எல்லாம் உயர்ந்ததுதான்.
வழிகாட்டும் ஆசிரியன் சரியாக இருந்துவிட்டால், மாணவர்கள் ஒருநாள் நல்ல ஆசிரியர்களாக முடியும். ‘ குருட்டினைப்போக்கும் குருவினைக்கொள்ளார் குருட்டினைப்போக்கா குருவினைகொள்வர். குருடும் குருடும் குருட்டாட்டமாடி குருடும் குருடும் குழிவிழுமாறே’. சரியான ஆசிரியன் இல்லையென்றால் நல்வழி எப்படி பிறக்கும்?
தெய்வச்சிலைகளெல்லாம் என்னை கண்டுக்கொள் என்று கூறாமல் கூறுகின்றன. ஆனால் நாம் அதனை நிந்தனை செய்கிறோம்.
‘காதலாகிக்கசிந்து கண்ணீர்மழ்கி’ என்று அப்பர்போல் உணர்ந்தால் தெய்வத்தை குறை கூறுவது எவ்வளவு பாவம் என்று தெரியும். ‘தெய்வம் ஆடினால் பூமி நிலைகொள்ளாமல் ஆடும்’. நம்பிக்கையே வாழ்க்கை.
ரத்னா —என்ன எழுதுவது என்று தெரியாமல் கிறுக்கி கொண்டிருக்கிறார் , பாவம் . புராணங்களை நம்பி வாழ்ந்து கொண்டிருக்கிறார் . என்ன செய்வது பார்பனன் விரித்த வலையில் மகிழ்சியுடன் விழுந்து நீந்திகொண்டிருகிறார் !! முதலில் புராணம் என்றால் என்ன என்று விளக்க முடியுமா ரத்னா அவர்களே ? கண்ணன் கடவுள் என்று பார்பனன் சொன்னான் அதை ஏன் தமிழன் ஏற்கவேண்டும் ? கடவுள் பெயரால் பெண்களை போக பொருளாக பாவித்த பரப்பான நா …கள் உங்களுக்கு உயர்ந்தவன் ??? எப்படி இவுலகுக்கு பல கடவுள்கள் இருக்க முடியும் ? படைத்தவன் ஒருவனே அவனே பரம்பொருளான சிவம். மற்றவை அனைத்தும் (முருகன் நீங்கலாக- நெடுங்காலத்து சித்தர், இவரையும் ஆரியன் பல கதைகள் உருவாக்கி தமிழனிடமிருந்து எடுத்து கொண்டான் ) ஆரியன் “உருவாகிய” கடவுள்கள் .
இந்துதர்மன் —- பெரியார் சொன்னதை யார் உங்களை கடைபிடிக்க சொன்னது ? அவர் எங்களை போன்ற தன்மானம் உள்ள தமிழர்களுக்கு அல்லவே சொன்னார் !!! பெரியார் மனிதனுள் தெய்வத்தை கண்டவர் அதனால் அவருக்கு பார்பனின் தெய்வங்கள் தேவையில்லை . மக்கள் தொண்டே மகேசன் தொண்டு !!!!! மனிதனை மனிதனாய் வாழ விடாத பார்பன தெய்வங்களை அவர் இல்லை என்றார் அல்லது வெறுத்தார். அதில் என்ன தப்பு ? மனிதனுக்கு மட்டுமே பகுத்து உணரகூடிய “பகுத்தறிவு” உள்ளது , இதைதான் எங்கள் பெரியார் அன்று ஊர் ஊரக சென்று சொன்னார் . தன்மானம் உள்ள பல தமிழர்கள் உணர்ந்து பார்பன பிடியிலிருந்து வெளியாகி இன்று மகிழ்சியாக வர்கிறார்கள் , தன்மானம் இல்லாத சிலர் இன்னும் பார்பனின் பிடியில் இன்னும் சீரழிந்து கொண்டிருக்கின்றனர் .
இங்கேயும் ஆரம்பிச்சிட்டிங்களா எல்லாரும் ?
ஒவ்வொரு உயிரிலும் ஒன்றாய், உடனாய், வேறாய் இருந்து உயிரை செலுத்துபவன் பரம்பொருள் ஒன்றே. அப்பரம்பொருள் சைவத்தில் சிவம் என்று குறிக்கப் படும். உயிர்களுக்கு தனு, கரண, புவன, போகங்களைக் கொடுத்து உலகியல் இன்ப துன்பங்களை நுகர்ந்து உயிர்களைப் பக்குவப் பட வைக்கின்றான். அவ்வாறு பக்குவப்பட்ட ஆன்மாக்களுக்கு முத்தி பேரின்பத்தை அளிக்கின்றான். இந்த முத்தி பேரின்பத்தை உயிர் தானே பெற முடியாது. அவனே, உயிரின் பக்குவ நிலையை அறிந்து கொடுத்தால் அன்றி பெற இயலாது. இப்படி, உயிர் பக்குவப் பட வேண்டி புவனத்தை படைத்ததும், அவ்வுயிர்களை காத்து பின்னர் அதற்குரிய இப்பிறப்பிற்க்கான ஊழ்வினை நிறைவு பெற அழிப்பு என்ற தொழிலையும் செய்யும் அந்த பரமன், மறைப்பாற்றல் (உயிருடன் உடனாய் இருந்து அவ்வுயிர் தன்னை அறியா வண்ணம் ஆற்றும் தொழில்) செய்து, உயிர் தன்னை யார் என்று அறிந்து சிவத்துடன் சாரும் பொழுது அவ்வுயிருக்கு முக்தி எனும் பேரின்பத்தை கொடுத்து தனது ஐந்தொழில்களை நடத்துபவன் ஆதியும் அந்தமுமாய் இருந்து செயல்படுத்துபவன் அந்த சிவன் ஒருவனே. அதனால் (1) முருகனை கூப்பிட்டு எனக்கு யோகாப்பியாசம் சொல்லிகொடு (2) சரஸ்வதியைக் கூப்பிடு எனக்கு கல்வியைக் கொடு, (3) இலக்குமியை கூப்பிட்டு எனக்கு செல்வத்தைக் கொடு என்று ஒவ்வொரு செயலுக்கும் தனித்தனி தேவதையர்களையும், தெய்வங்களையும் தேடி அலைய வேண்டாம். அனைத்தும் ஒருங்கே இருக்கும் ஐயனைக் கான் என்பதே சைவ சித்தாந்தம். அதனை முழுமையாக அறிபவர் இறைவன் இருக்கும் இடத்தை விட்டு இல்லாத இடம் தேடி அலையை மாட்டார். இவ்வாறு அறியாமையால் பல தெய்வ வழிபாட்டில் நிற்கும் நம்மவர்களை நாடி, இறைவனை அடையும் வழியைக் காட்டி எமது அறியாமையை நீக்கிய குருவிடம் கற்ற மெய்யறிவு இதுதான். இது தான் ஒரு குருவின் இலக்கணம். அறியாமையை நீக்கி இறைவனை அடைய வழியைக் காட்டுபவர்தான் குரு. இதை விட்டு, காவி உடையைப் போட்டுக் கொண்டும், கோட்டு சூட்டு போட்டுக் கொண்டும் பலர் காட்டும் வித்தையை நம்பி குரு என்று போவோர் குழியில் விழுவார் என்பதில் ஐயமில்லை. குருவைத் தேடி நாம் போக வேண்டாம், அந்த குருவை, சிவப் பெருமானே நமக்கு அடையாளம் காட்டுவார், பக்குவப் பட்ட ஆன்மாக்களுக்கு அவரே குருவாக வந்து முத்தி பேரின்பத்தையும் கொடுப்பார். அவரே பரமகுரு.
தமிழ் மொழி வாழ, தமிழர் வாழ, தமிழை நேசிக்கும் செம்பருத்தி வாசகர்கள் அனைவரும் எதிர்வரும் சனவரி 29-ல் மலயா பல்கலைகழகத்தில் நடைபெறும் நிகழ்வுக்கு பதிவு செய்து பங்கேற்ப்போம். தமிழரின் கலை கலாச்சாரத்தையும், பண்பாட்டையும் உணர்த்தும் கண்காட்சியும் நடக்கின்றது. தமிழரின் மேன்மையை உணர வேண்டி நடத்தப் படும் நிகழ்வு என்பதால் மலேசிய வாழ் தமிழர் அங்கே திரளாக திரள்வோம் வாரீர்.
தொல்காப்பியன் மாபெரும் துரோகி >>
( எ வே ராமசாமி நாயக்கர் )
“”>>>>தொல்காப்பியன் ஆரிய கூலி..ஆரிய தர்மத்தையே தமிழ் இலக்கணமாக செய்த விட்ட மாபெரும் துரோகி..திருவள்ளுவன் அக்காலத்திற்கு ஏற்ற வகையில் ஆரிய கருத்துக்கு ஆதரவு கொடுக்கும் வகையில் -பகுத்தறிவு பற்றி கவலைபடாமல் நீதி கூறும்
வகையில் தனது மத உணர்வோடு எதோ கூறி சென்றார் >>>>>
>>பெரியார் எழுதிய “தமிழும் தமிழரும் ”
என்ற நூலிலிருந்து ….
பெற்றோரை மதித்து, இளமையில் திருமணம் புரிந்து, முதல் காதல் தன் கணவனை காதலித்து, பல பிள்ளை செல்வங்களை பெற்று, பேரப்பிள்ளைகும் வலிகாத்தி, சமுதயத்தின் கண்களாக இருந்து, ஆயிரம் ஆண்டுகள் ஆயிரம் பிறவிகள் பூமியில் வால்ந்திடெ வேண்டுகிறேன் என்று பாடி, சாதனையாளர்களா வாழ்ந்தார்கள் நம் குல பெண்கள். அவர்கள் புண்ணியங்கள் அவர்களை இறந்த பின்னும் அவர்களை கடவுளிடம் ஒரு தேவதையாக ஆகியது. இன்று பொட்டு கூட வைக்காமல் உடல் பாகம் பல தெரிய, மேட்கட்டிய கலச்சரட்டை பின் பற்றி, பொய்ப்ரிஎண்ட் என்று பல ஆண்களுடன் பழகி, ஏமாந்து, 30 வயது ஆனபின் மாப்பிள்ளை தேடி, தன் முன்னாள் சரிட்டரங்க்களை மூடி, கவர்ச்சி போயி, கணவனுடன் விரிசல், பிள்ளை பேறும் கஷ்டமாகி, வாழ்கையே கஷ்டமாகி, அதற்கு காரணம் ஆண்கள் டான் என்று பலியை தூக்கி அவர்கள் மேலே பொட்டு, I hate this life என்று கூறிக்கொண்டு, பல பாவங்களுடன் கடைசி காலத்தை முடிப்பது இக்கால கலாச்சாரம்.
பெரியார் அப்படி என்னதான் சொல்லியிருக்கிறார் என்று நமது வாசகர்களும்தான் தெரிந்து கொள்ளட்டுமே ?? 2 – 3 வாசகங்களை வைத்துக்கொண்டு “”பெரியார் சொன்னது போல் ” – பகுத்தறிவு பகலவன் கூறியது போல..”” என்று பெரியார் சொன்னதையும் சொல்லாததையும் கூறி வாசகர்களை ஏமாற்றும் ஞானிகள் இதையும்தான் படித்து மனனம் செய்து ஒப்புவிக்கட்டுமே ?? என்ன குறைந்து விட்டது ??
தேனீ > திருத்திகொள்ளுங்கள் – “” சைவத்தை நாடினால் மட்டுமே குரு தானாக தேடி வருவார் > முருகன் ,அம்பாள் ,கணபதி ,கிருஷ்ணன் போன்றோரை வழிபட்டால் அந்த பக்தர்களை தேடி வருவோர் குரு அல்லர் > கவி வேஷம் போட்ட ஆரியர்கள் “” என்பதையும் சொல்லி முடித்து விடுங்கள் > அதை மட்டும் ஏன் விட்டுவிடீர்கள் ????
எங்களுக்கு இன்னமும் புரியாத விஷயம் >>
ஆரியர்கள் சூழ்ச்சியால் தமிழர்கள் வீழ்ந்தார்கள் – பார்பனர்களின் வெறியால் தமிழ் இலக்கியங்கள் வீழ்ந்தன – என இவ்வலை தளத்தில் கூவி கொண்டிருக்கும் தமிழ் காக்க வந்த ஞானிகள் உண்மையில் யாரை கிண்டலடிக்கிறார்கள் ?? கல்தோன்றி மண் தோன்றா காலத்து தமிழர்கள் சூழ்ச்சியில் சிக்கும் அளவுக்கு ஞானம் குறைந்தவர்களா ??அல்லது வீழ்த்து போகும் அளவுக்கு நமது தமிழ் இலக்கியங்கள் என்ன அவ்வளவு சொத்தையானதா ?? மற்றவர்கள் சொன்னதை எழுத்து மாறாமல் இங்கு பதிவு செய்வது தவறல்ல > ஆனால் மறைமுகமாய் நம் இனத்தையும் > மொழியையும் அந்த அரைகுறைகளை போல இப்படியா கொச்சை படுத்துவது ???
சும்மா இருந்த சங்கை ஊதி கெடுத்தான் ஆண்டி என்று ஒரு பழமொழி உண்டு. எம்மை தீண்ட தீண்ட விஷம் வந்து கொண்டே இருக்கும். சொன்னால் கேட்காமல், பின்னால் சொரிந்து கொண்டே இருங்கள். வருவதை வாங்கிக் கட்டிக் கொள்ளுங்கள் இந்து தருமாறே. இன்றிரவு வரும்.
இன்னுமா இந்த தமிழர் – ஆரியர் விளையாட்டு விளையாடி கொண்டு இருக்கிறீர்கள் ? உலகத்தில் 200 கும் மேற்பட்ட மனித தொடக்க பிரிவுகள் உள்ளன. இன்றைக்கு 4000 மேட்பட்ட ஜாதிகளின் எண்ணிக்கை உள்ளன, எதற்கும் உதவாமல். தமிழர்கள் மட்டும் 400 கும் மேட்பட்ட ஜாதிகள் வைத்துள்ளோம். சமிபத்தில் கலப்பு திருமண பிரச்சனையால் இரண்டு ஊர்கள் ரெண்டு பட்டது, தமிழ் நாட்டில். பா மா க போன்ற கட்சிகள் குளிர் காய்ந்தன. அதனால் பிரிந்து வாழ்வதை விட, ஊரோடு ஒன்று கூடி வாழுங்கள். ஒன்றை மட்டும் இங்கே தெளிவாக கூரிவிடுகிரேன். நம் முன்னோர்கள் எல்லாம் முட்டாள்கள் என்று கூருவது எவ்வளவு தப்போ, அதற்க்கு இணையான தப்பு எது வென்றால் அவர்கள் எல்லாம் அதி மேதாவிகள் என்று நம்புவது. அதனால் தான் அறிவியலில் பிழைகளை விலக்க விலகக தெளிவு கிடைக்கும் என்று நம்புகிறீர்களே தவிர, சரியானதை கண்டு பிடித்து விட்டோம் என்று யாரும் மார் தட்டி கொள்ளமாட்டார்கள். உண்மை (true) = துல்லியம் (precision ) + தவறு (error). பிழையை குறைக்க குறைக்க, துல்லியம் உயரும். ஆகையால் தான் அறிவியல் வளர வேண்டும் என்று, தவறுகளை அறிவியலில் இருந்து விலக்கி வைக்கிறோம்.
தமிழன் > “”…..நம் மதம் என்பதற்காகவும் -நம் முன்னோர்கள் சொன்னார்கள் என்பதற்காகவும் அவர்கள் சொல்வதெல்லாம் உண்மையாகிவிடாது …..”” ( 24 ஜனவரி 2015 – காண்க )
என்ற உமது கருத்து ”ஆரியார்களின் படையெடுப்பு > பார்பனர்களின் சூழ்ச்சி ” போன்ற உமது முன்னோர்களின் “”கப்சா “”வையும் சேர்த்துதானே ?? அல்லது இந்து மதத்தை போற்றிய முன்னோர்களுக்கு மட்டும் தானா ??
.தேனீ “”செல்வதுக்க்னெ லெட்சுமியையும் .> கல்விக்கென சரஸ்வதியையும் தனி தனியாக ஏன் தேடி போய் வழிபட வேண்டும்..”” என்கிறீர் > சரிதான் //குறையொன்றுமில்லை –
ஆனால் – ஆன்மீகம் என்பதே தேடலின் உணர்வுதானே ஐயா ?
..” தேடி கண்டுகொண்டேன் திருமாலொடு நான்முகனும் ..””என்கிறதே திருமுறை ??
இந்து தருமா, முருகன் யார்?. நீங்கள் விரும்பிய தெய்வமாக போற்றும் முருகன் எமக்கும் தெய்வமாகத்தான் தோன்றுகின்றார். அப்படிபட்ட முருகனை ஏன் சிவத்தில் இருந்து தோன்றினார் என்று தம்பட்டம் அடித்துக் கொள்கின்றீர்?. தானே தன் சுய காலில் நிற்க முடியாததால்தானே அதற்கும் மேலானா ஒருவரை தகப்பன் என்றும் தாய் என்றும் அவர்களின் இணைப்பால் தோன்றியவர் என்று ஆரியன் எழுதிக் கொடுத்த கந்த புராணத்தை ஏற்றுக் கொண்டீர். தான் சுயமாக நிற்பதற்கே ஓர் ஊன்றுகோல் வேண்டுவோருக்கு, எங்கே இருக்கு படைக்கும், காக்கும், அழிக்கும், மறைத்து நின்று உயிரை செயல் படுத்தும் ஆற்றல், அப்படி செயல்படுத்தி பக்குவப் பெற்ற ஆன்மாவை தன்னவனாக்கி பேரின்பத்தை அளிக்கும் பேரின்ப வடிவினன் என்ற தன்மை?. இதற்கு உமக்கு பதில் சொல்லத் தெரியாது. அது எனக்குத் தெரியும். அப்படி நம் முருகரே மூலக் கடவுள் என்றால் அந்த ஆரியனின் கண்டு பிடிப்பானா கந்த புராணத்தை உதறி தள்ளிவிட்டு, நம் குறிஞ்சி முருகனின் உண்மை வழிபாட்டை எடுத்து இயம்பும் கந்த புராணத்திற்கும் முந்தைய நூலான நக்கீரர் வழங்கிய திருமுருகாற்றுப் படையே எமது முருகனின் ஆதார நூல் என்று ஏற்றுக் கொள்ளத் தயாராகுங்கள். முந்தையதை விட்டு விட்டு பிந்தியதை எடுத்துக் கொண்டு முருகன் தமிழ் கடவுள் என்று எழுதிய ஒரு முனைவருக்கு சோரம் போன நீர் சொல்வதென்ன?. சொல்லும். முருகனுக்கு அப்பனும் இல்லை, அம்மையும் இல்லை என்று சொல்ல தங்களுக்குத் துணிவு உண்டா?. முருகன், சிவமும் சக்தியும் இன்றி தானே தோன்றி தானே செயல்படும் கடவுள் என்று சொல்ல உமக்கு சொல்லத் தைரியம் உள்ளதா?. அவ்வாறு சொல்ல உமக்கு ஒருகால் உம்மன்றம் முன் வரலாம். ஆனால் அதை ஏற்றுக் கொள்ள எந்த ஒரு ஈனப் பிறவியும் முன் வராது. இது சத்தியம். ஐயனைக் கான். குமரன் தானே ஐயனுள் அடங்கி விடுவார். இவ்வாறு மறுமொழி எழுதுவதற்கு பிற முருக பக்தர்கள் எம்மை மன்னிப்பீராக. ஒரு மண்டுக்குப் பதில் சொல்ல வேண்டுமானால் அவன் வழியிலேயே போய் பதில் சொல்ல வேண்டியதாகின்றது. அதுவே மேற்கூறியவாறு எழுதுவதர்க்குக் காரணம்.
பரம்பொருளை ஏற்றுக் கொள்ளாதவரை, கடவுள் பலவாகத்தான் தெரியும். “பிரம்மம்” ஒன்றே பரம்பொருள் என்றும் “மூலம்” என்றும் சொல்லும் ஆரியனின் வேதத்தை ஏற்றுக் கொள்ளும் இந்து தருமரே, அதையே சைவம் சொன்னால் தவறாகுமா?. ‘யாதொரு தெய்வம் கொண்டீர் ஆங்கே மாதொரு பாகனார்தாம் வருவார்’ என்று சைவம் சொன்னால் அது பிழையாகுமா?. என்னே, தங்களின் அறியாமையும், இரத்தினாவின் அறியாமையும்!. ஆரியர் சொல்லும் பிரம்மமும் “ஒருவனே’. சைவம் சொல்லும் ‘சிவமும்’ ஒருவனே. ஆரியன் சொன்னால் இனிக்குது. அதையே சைவன் சொன்னால் கசக்குமோ?. ஏன் சமயத்தை இப்படி தாறுமாறா புரிஞ்சு வச்சுருக்கிங்க. ஐயனைக் கான், குமரனைக் கான் என்று இன்னும் எவ்வளவு நாளைக்குத்தான் பெயர் போடப் போகின்றீர்?. ஐயனைக் கான், அதினுள் அனைத்தையும் கான் என்ற முடிவுக்கு நாம் தமிழர் திரும்பினால் நம்சமயம் வாழ்வாங்கு வாழும். இல்லையேல், தருமையாதீனப் புலவர் சி. அருணைவடிவேல் சொன்னவாறு நடக்கும். “.. பெரியார் (சான்றோர்) திருமொழிகளைச் சிறந்த பிரமாணமாகக் கொள்ளாதவருக்கு, காலப் போக்கில் அவர் இறைவன் திருமொழியெனக் கொண்டவைகட்கு, அவை இறைவன் திருமொழியே என்பதற்குரிய வரலாறு முதலியன மறைந்தொழிய முடிவில் உரையளவையே இல்லையாகிவிடும் என்க.”. ஏதாவது புரியுதா?.
தமிழன் (24 ஜன 2015 குறிப்பிலிருந்து… )
“”பெரியார் இப்படி பொருள்படவும் சொல்லி இருக்கலாம் > பெரியார் அப்படி இதற்காகவும் சொல்லி இருக்கலாம் “” என்று அவரின் பக்தர்கள் வேண்டுமானால் அவரின் பேச்சை திரித்தும் & விரிவாக்கியும் அவாவ்ர்களுக்கு சாதகமாக கூறி சமாளிக்கலாம் > அதை நம்பி தலையாட்டி கன்னத்தில் போட்டுக்கொள்ள சுய இந்துக்கள் இளிச்சவாயர்கள் அல்ல ///
இந்துதர்மனே உனக்கு வைதீகப் பித்தம் உச்சந்தலைக்கு ஏறிவிட்டது. மதப்பைத்தியம் பிடித்து பெரியாரைப் பற்றி எல்லாவற்றையும் இங்கே பட்டியலிடு முதலில். பிறகு உனக்கு மொத்தமாக பதில் எழுதுகிறேன். அதுவரை சட்டையைக் கிழித்துக்கொண்டு ஆடுக! உன் ஆட்டத்தை பகுத்தறிவுமிக்க வாசகர்கள் கவனிக்கட்டும். கத்துக்குட்டியாகிய நீரெல்லாம் பெரியாரைப் பற்றி பதிவிட வருகிறீர்!!? பெரியப் பெரிய வைதீக பெருச்சாளிகளையெல்லாம் புறமுதுகிடச் செய்தவர் பெரியார். நீயும் உம்முடைய துக்கடா வாதமும் அவருடைய பார்வைக்குமுன் ஜு ஜு பி!
சிலருடைய வாதம் ISIS போன்ற ஈன ஜென்மங்களின் வாதம் போல் பகுத்தறிவுக்கு ஒவ்வாத வாதம். தயவு செய்து இது 21வது நூற்றாண்டு என்பதை நினைவில் கொள்ளவும். யாரும் உயர்ந்த அல்லது தாழ்ந்த வர்கள் கிடையாது. இந்து சமயத்தில் நல்லதை எடுத்து கொண்டு ஒவ்வாததை தூக்கி எரிந்து விடுங்கள். ஆண்டவனுக்கு எல்லாம் தெரியும்.
“ஆன்மிகம்” என்பது ஆன்மா இலயிக்கும் இடம். அது முத்தி பேரின்பத்தை அளிக்கும் இறைவனின் இடம். அந்த இறைவனைத் தேடுதல் என்பது ஓர் நேர் வழியை அறிந்து, குரு என்ற கை விளக்கை கைப்பிடியாக கொண்டு, சத்தியாகிய திருவருளின் அருளால் சிவத்தை அடைவது. ஆன்மீகத் தேடலுக்கு சைவம் கூறும் சிறந்த வழி இது. இதுவன்றி, இதுவா, அதுவா என்று ஒரு மயக்கத்தில் நிற்போருக்கு எவ்வழியும் இருட்டு வழியாகவே தோன்றும். அவர் இறைவனை அடையார். பிறவாக் கடல் நீந்தார். போக்கு வரத்து கொண்ட பிறவிக் பெருங்கடலில் தத்தளித்த படியே உழல்வார். அவ்வாரானவரே, பரம்பொருளை அறியாமல் பல தெய்வத்தை மற்றுமே போற்றுவார் அல்லது தான் விரும்பி வணங்கும் தெய்வத்தை மட்டுமே போற்றுவார். இதுவே இந்து தர்மர் கூறும் ஆன்மீகத் தேடல் என்றால் அது பிழை. திருந்துங்கள். வைதீகத்தை விட்டு சைவத்திற்கு வாருங்கள். உம் ஆன்மீகத் தேடலுக்கு நாங்கள் சிறந்த வழியைக் காண்பிக்கின்றோம். ஐயனைக் கை விட்டால் பையன்களின் வரலாறும் மறந்துப் போகும் என்பதனை நான் சொல்லியதை விட தருமையாதீனப் புலவர் நன்றாகவேச் சொல்லியுள்ளார்.
இந்து தருமரே, தருமையாதீனப் புலவர் சொல்லியதை தங்களால் புரிந்துக் கொள்ள முடியாது என்பதை யாம் அறிவோம். அவ்வாறே, பெரியார் சொன்னதை, அவர் எழுதிய அந்த நூல் முழுமையாகப் படிக்கவே அதன் உட்கருத்து அறிய முடியும். அதை விடுத்து அதிலிருந்து கிள்ளிப் போட்ட இலையை கொண்டு முழு இலையை அளவிடுவது அறியுடமையாகாது. அக்கருத்து வந்த காலக் கட்டத்தில் ஆரியர் தமிழரை அடிமையாக நிந்தித்த நிலையில் வந்ததென்பதால், அந்த ஆரியரே தமிழை அழித்து சமஸ்கிருதத்தை முன்னிறுத்த முனைந்ததால் வந்த ஆதங்கமாக இருக்க வேண்டும். உமது சிற்றரிவைக் கொண்டு, உமக்கு இருக்கும் ஆரியர் பற்றினால் பெரியாரைத் தாக்க வேண்டும் என்ற ஒரு மூச்சில் பார்ப்பதால் அவர் சொன்ன நற்செய்திகள் உமது அறிவுக்கு எட்டவில்லை என்றேத் தோன்றுகின்றது.
//”வைதீகக் கோரப்பிடியிலிருந்து வெற்றிபெறும் உபாயமாகவே பெரியார் பெண்களைத் தங்கள் நிலையை நினைப்பை மாற்றிக்கொள்ளத் தூண்டி இருக்கலாம்”// இது நான் பதிவிட்டது.
இந்து தாசனாகிய நீர் உமது கற்பனையைக் கூட்டி பதிவிட்டிருப்பதை கவனிப்பாயாக ,
// ” பெரியார் இப்படி பொருள்படவும் பேசி இருக்கலாம்”, பெரியார் அப்படி இதற்காகவும் சொல்லி இருக்கலாம்” //
உம்மிடம் உண்மையிலேயே உண்மை இருந்தால், நீர் மரபணுமாறாத தமிழனாக இருந்தால், ஏன் இந்த இட்டுக் கட்டலும், கூட்டிப் பிதற்றலும் புரிகிறீர்? யாரை ஏய்க்க இந்தச் சித்து விளையாட்டு?
“பெண்களைத் தூண்டி இருக்கலாம்” என்று பொருள்பட நான் பதிவிட்டதற்குக் காரணமே நீர் பெரியாரின் உரையை முழுமையாகப் பதிவிடாமல், எங்கேயோ… யாரோ… இணையத்தளத்திலே வாந்தியெடுத்த ஒன்றை நக்கித் தின்ற நாயைப்போல் இங்கே வந்து வாந்தியெடுத்தால் … எப்படி உம்முடைய பதிவை நம்பி நான் உறுதியாக , பெரியாரின் உள்ள ஓட்டத்தை அறிந்து பதிலுரை பதிவிட இயலும்? ஆதலால்தான் நான் மேற் குறிப்பிட்டபடி பெரியார் தூண்டி இருக்கலாம் என்றேன். நீர் குறிப்பிட்டதைப்போல் “இப்படிப் பொருள்படவும் பேசி இருக்கலாம்! அப்படிப் பொருள்படவும் பேசி இருக்கலாம்!” என்று பிதற்றவில்லை என்பதை உணரும். உம்மை தலையாட்ட எவன் சொன்னது? நீயோ அல்லது உன்னைப் போன்றவர்களோ சுய இந்துவாக இருந்தால் என்ன? இல்லாவிட்டால் என்ன? உமது கூட்டமதான் தமிழனை , தமிழினத்தை முட்டாளாக்க, கடவுளை வைத்து வியாபாரம் நடத்துகிறீர். பெரியாரின் பேச்சை கேட்டு தமிழன் தலையாட்டி இருந்தால் உங்களின் ஆரியக் கூத்து எப்போதோ மேடை இல்லாமல் நின்றுபோயிருக்கும். கடந்த இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு மேலாக வைதீகப் பேய்பிடித்தல்லவா தமிழன் சொந்த சமயத்தை, சொந்த மொழியை மறந்து, கலாச்சாரம் மறந்து, சம்பாதிப்பதை எல்லாம் வைதீகனுக்கும் அவர்தம் மத பித்தலாட்டத்திற்கும் வாரிக்கொடுத்து ஏமாளியாக இருக்கிறான். தமிழன் தன்னுணர்வு பெற்று எழுந்து நிற்பதற்கா கருத்துக்களைப் பதிவிட்டால், ஆரிய, வைதீக தாசர்களாகிய உம்மைப் பொன்றவர்கள் தூக்கம் பிடிக்காமல் பைத்தியம் பிடித்து பெரியாரை மட்டம்தட்டும் நோக்கில் அவர் உரையின் பகுதியை அங்கொன்றும் இங்கொன்றுமாக பதிவிட்டு ஆரியத்தை வெற்றிபெறச் செய்ய கனவு காண்கிறீர். நடக்காது ! தமிழுணர்வு மிக்க கடைசி தமிழன் இருக்கும்வரை உமது வைதீக முகத்திரை கிழிபடும்!
ஆரியர்களின் பண்பாட்டுப் படையெடுப்பும்,பார்ப்பனர்களின் சூழ்ச்சி என்பது கற்பனை என்று எந்த ஆய்வாளனும் சொன்னதில்லை. ஆரிய அடிமைகளே அவ்வாறு உரைப்பர். உண்மையை , தெள்ளத் தெளிவான ஆய்வியல் ஆதாரத்தை இலக்கியத்தில் புதைந்து கிடக்கும் ஆதாரத்தை எல்லாம் பொய்யென்று ஒப்ப நாங்கள் ஒன்றும் பகுதறிவற்றவர்கள் அல்லர். ஆனால் வைதீக மதம் அப்படியா? உமது மதம் பட்டியலிட்டுள்ள ஒரு கடவுளையாவது நீர் பார்த்ததுண்டா? கடவுள் என்பவர் எல்லோருக்கும் பொதுவானவர் என்று சொல்லுகிறீர்கள். கோயிலுக்குப் போனால் தமிழன் தன்னுடைய கடவுள் என்று நம்பிவந்த இந்து தெய்வத்தைத் தொழ மீடியேட்டர் அனுமதி தரமாட்டார். ஏதோ ஒரு ஒப்பாரி பாஷையில் உளறுவதை தலையெழுத்தே என்று கேட்டுவிட்டு வெளியே வரவேண்டும். இப்படிப்பட்ட அறிவுக்கு ஒவ்வாத செயலும், ஆரிய வரலாறும் ஒன்று என்றால் அறிவு உலகம் கைகொட்டி சிரிக்கும்.
திரு இந்துதருமரே ! தாங்கள் குறிப்பிட்டுவுள்ள “திருமுறை திரு அங்கமாலை” அப்பதிகம் திருநாவுக்கு கரசரால் பாடப்பெற்றது அப்பதிகம் பரம்பொருள்லான சிவபெருமான் தலையிலிருந்து பாதம் வரை வருணனை செய்து பாடியுள்ளார். தாங்கள் திருமாலையும்,பிரமாவையும் குறிப்பிட்டு விட்டு பரம்பொருளை குறிப்பிட தவறியதேன் ? ‘தேடிக் கண்டுக்கொண்டேன் திருமாலொடு நான்முகனும் தேடித் தேடொணாத் தேவனை என்னுளே தேடிக் கண்டுக் கொண்டேன் ” தயவு கூர்ந்து பதிகங்களை முழுமையாக எழுதுங்கள்! நன்றி .
பெரியார் காலத்தில் அரசியலிலும்,அரசாங்க பதவிகளிலும் அதிகமான தெலுங்கர்கள் தமிழ் நாட்டில் ஆதிக்கம் செலுத்த என்ன காரணம் என்று யாராவது இங்கே கூற முடியுமா?
“தேடிக் கண்டுகொண்டேன்,
திருமாலொடு நான்முகனும்
தேடித் தேடொணாத் தேவனை, யென்னுளே
தேடிக் கண்டுகொண்டேன்” (4.9.12)
திருநாவுக்கரசர் பாடிய இத்தேவாரத்தின் பொருள். திருமாலும், நான்முகனும் (பிரம்மா) சிவபெருமானின் அடி முடித் தேடி காணாது போன சிவபெருமானாகிய செவ்வொளியை, நான் என் உள்ளத்திலே கண்டுகொண்டேன் என்று திருநாவுக்கரசர் விளம்பியது. இதற்குத்தான் திருமுறை பாடல்களை பொருள் அறிந்து பாட வேண்டும் என்று தலைபாடாக அடித்துக் கொள்வது. அவ்வாறு எல்லாம் தெரியவில்லையானாலும் பரவாயில்லை, பாடத் தெரிந்தால் மட்டும் போதும் என்பதானால் வரும் வினைதான் இந்து தருமர் அந்த பாடலின் பொருள் அறியாமல் அதனை இப்பகுதியில் குறித்தது. அதுவும் அப்பாடலை முழுமையாக எழுதமால் தன்னுடைய வைதீக பற்றை பெருமைபடுத்த அதன் ஒரு பகுதியை இங்கே பதிவிட்டு அப்பாடலின் பொருளையே திருப்பிப் போட நினைத்தது தெய்வக் குற்றமாகும். தமிழர்களை அவர்தம் சமயத்தில் இருந்து இவ்வாறான திருட்டாட்டத்தின் வழி திசை திருப்புவது அறிவுடமையா?. சொல்லும் இந்து தருமரே. இதுதான் நீர் தமிழர்களுக்கு செய்யும் சமயத் தொண்டா?. இதுதான் நீர் தேடும் ஆன்மீகத் தேடலா?. இதுதான் உமது குரு உமக்குக் காட்டிய இந்து தர்ம நீதி வழியா?. நீர் தமிழனா?.
ஒரு அரைகுறை படிப்பாளி ஈ வே ராமசாமி நாயக்கர் போகிற வழியில் தன்னுடைய மன கிலேசங்களை கொட்டிவிட்டு சென்றார் >அதை எதோ அதீத புத்திசாலி நெடுங்காலம் ஆராய்ச்சி செய்து பிறரும் அதை நம்பியே ஆகவேண்டும் என்பது தலைவிதியா என்ன ??
பிராமண குளத்தில் வந்த பாரதியாரும் பகுதரிவாளந்தான். ஆனால் அவர் கண்முடிதனமாக கடவுளை எதிர்க்க வில்லை. இருப்பினும் சாங்கிய சம்ப்ருதாயங்களை அவர் எதிர்த்தார். தலித்து குழந்தைகளுக்கு பூனூல் போட்டார். ஏழை குழந்தைகளுக்கு வேதம் ஓதினார். பகவத் கீதைக்கு விறைக்க உரை எழுதினர். அன்னை ஆதி பராசக்தியை மூல கடவுளாக வணங்கினார். சாங்கிய சம்ப்ருதாயங்களை மட்டும் எதிர்த்து விட்டு, பெரியார் பேர் வங்கி கொண்டார். அவர் தனிபட்ட வாழ்க்கையை இங்கே விமர்சிக்க விரும்பவில்லை !
திரு. பாசிமணியின் நியாயமான கேள்விக்கு பெரியார் காரணமல்ல என்பது மதலாவதாக நாம் அறிய வேண்டும். ஐயா, தென்மாநிலங்களை எடுத்துக்கொண்டாலும் சரி, இந்தியாவை விடுத்து வெளிநாடுகளிலும் சரி , அவன் மலையாளியாக இருந்தாலும், தெலுங்கனாக இருந்தாலும், கன்னடனாக இருந்தாலும் , தமிழனாக இருந்தாலும் உயர் பதவிகளில் , நோகாமல் நொங்கடுக்கும் வேலைகளில் இருப்பவர்கள் வைதீக கன்னடனாகவும், வைதீகத் தெலுங்கனாகவும், வைதீக மலையாளியாகவும் , வைதீகத் தமிழ் பார்ப்பானாகவும்தான் இருப்பார்கள். இந்த வைதீக ஆரிய கோஸ்டிகள்தாம் சுதந்திர இந்தியாவில் செழுமையன வாழ்வு வாழ்பவர்கள். இதில் விரல்விட்டு எண்ணக்கூடிய பார்ப்பானியர்களே நியாயத்தை நீதியை உணர்ந்து இந்தியாவின் தேசியக் குடிகளான திராவிட மக்களோடு, அவர்கள் உரிமையை மதித்து நடந்து கொள்பவர்கள். இன்று , மலேசியாவிலும் சரி, உலகின் எந்தப் பகுதியிலும் சரி, தமிழனோடு இனங்க மறுப்பவர்கள் வைதீக வம்சாவழி கன்னடனும்,மலையாளியும், தெலுங்கனும்தான். கோவில் பிரச்சினையில் இருந்து அரசியல் பிரச்சினைகள் வரை நமக்கு ஆப்படிக்க இயங்களைத் துவங்கி, அதில் அப்பாவித் திராவிடத் தெலுங்கனையும், திராவிட மலையாளியையும், திராவிடக் கன்னடனையும் துணைக்கு வைத்துக்கொண்டு வைதீகர்களே தலைமையைத் தங்களின் கட்டுப்பாட்டில் வைத்துக்கொண்டு தமிழினத்தோடு சேரவிடாமல் சகுனியாக இருக்கின்றனர்.
ஈழத்தமிழன் விவகாரத்தில் எதிராக காய்நகர்த்திய முக்கியப் புள்ளிகளைப் பாருங்கள் மலையாள வைதீகனாகவே இருந்தான், வைதீக வடநாட்டானாகவே இருந்தான்.
அடுத்து தங்களின் கேள்விக்கு வருவோம் திரு. பாசிமணி. பெரியார் சமூக நீதிக்காகப் போராடிய ஒரு போராளி என்பதை உணரும் அதே வேளையில் அவர் தம்மை அரசியலில் ஈடுபுத்திக்கொள்ளவில்லை. வேலைவாய்ப்புகளை தெலுங்கருக்கு அள்ளி வழங்கும் அதிகாரத்திலும் அவரில்லை. ஆக, பெரியாரை குறை சொல்ல முடியாது.
அடுத்து, நாயக்கர்கள் காலத்தில்தான் தெலுங்கர்கள் அதிகமானோர் தமிழகத்தை ஆண்டார்கள், இடம்மாறினார்கள். அவர்கள் பார்ப்பன்னுக்குத் தாசர்களாக இருந்து எல்லா வகையிலும் வசதியைப் பெருக்கிக்கொண்ட நில உடைமையாளர்களாக தங்களை நிலைப்படுத்திக் கொண்டார்கள். ஆக, ஆதிக்க சக்திகளுக்கு கல்விகற்கும் வாய்ப்பும் வசதியும் இயற்கையாகவே ஏற்படுவதில் ஒன்றும் ஆச்சரியமில்லை. நாடு சுதந்திரம் அடைந்த அந்தக் காலக்கட்டத்தில் தமிழர்களில் உயர்சாதியினரும், மற்றவர்களில் பணக்காரத் தெலுங்கர்களும் பார்ப்பனர்களைப் பகையாத பங்காளியாக இருந்து பதவிகளை அலங்கரித்தனர், தக்கவைத்துக் கொண்டனர். தமிழகத்து மக்கள் தொகையிலும் 45% தமிழரல்லாதோர் உள்ளனர். தமிழர்களோ வைதீக இந்துமதக் கிடுக்குப்பிடியினால் கல்வி கற்கும் உரிமை மறுக்கப்பட்ட சமூகமாக பல நூற்றாண்டுகளாக உரிமை இழந்து கிடந்தனர். இப்படிப்பட்ட சூழலில் …., வந்தவர்கள் வாழ , சொந்த நாட்டுத் தமிழன் வைதீகத்தின் சூழ்ச்சிக்குப் பலியாகி சாதியாலே சிதறுண்டு கிடந்தான்; கல்வி கற்பிக்கப்படாமல் ஆரியனுக்கும், உயர்சாதி என்று தங்களை நிலைநிறுத்திக்கொண்ட உயர்சாதியனுக்கும் வேலைக்கார அடிமையாம இருக்கும் நிர்பந்தத்திற்கு ஆளானான். இப்படிப்பட்ட இருண்ட காலத்தை உடைத்தெரிய வந்த சமூக விடுதலைப் போராளிதான் பெரியார்.
அவர் வந்த பிறகே, கல்விகற்கும் உரிமை, கோவில் வழிபாட்டு உரிமை, பெண்களுக்கு சம உரிமை, விதவைப் பெண்களுக்கு திருமண உரிமை, தமிழன் தன்மானத்தோடு வாழ முன்னின்று போராடியதன் விளைவாகவே வேலைவாய்ப்பில், கல்விக் கழகங்களில், இட ஒதுக்கீடெல்லாம் வந்தது. அப்படிப் படித்து , உணர்வு பெற்ற தமிழன்தான் இன்று பெரியாரையே நன்றியே இல்லாமல் வரிக்கு வரி சாடி ஊடங்களில் எழுதிக்கொண்டிருக்கிறான்.
இன்றைய சூழலில் நாற்பத்து ஐந்து சத வேற்று மாநிலத்தவரின் ஒத்தாசை இல்லாமல் தமிழக ஆட்சியைக் கைப்பற்ற இயலாது. அதிகாரத்தைப் பிடிக்க இயலாது. அதனால்தான் திராவிடர்…திராவிடர்… எனும் அனுசரனையான வார்த்தையை உச்சரிக்கும் கட்டாயத்தில் தமிழக அரசியல் கட்சிகள்.
இந்து தர்மனே… உன்னை யாரப்பா நம்பச் சொன்னது. நம்பு என்பதே மூடத்தனம். ஒருவனைப் பார்த்து என்னுடையதை நம்பு என்பதே ஒருவகை தீவிரவாதம். சிந்தி என்பதே பெரியாரின் பாடம். சிந்தன செய் என்றுதான் சொன்னார் பெரியார். ” என்னையும் , என் கருத்தையும் நம்பு ! ” என்று என்றுமே, எங்கேயுமே பெரியார் சொன்னதில்லை. உன்னையே நீ பகுத்தறிவாய்! எதையும் ஏன்? எதற்காக? எதனால்? எப்படி? என்று பகுத்தறிவோடு சிந்தித்து வாழப்பார்! அவர் சொல்கிறார்… இவர் சொல்கிறார்…. மந்திரவாதி சொல்கிறான்… மாமுனி சொல்கிறார்… அரசியல்வாதி சொல்கிறான்… என்று அம்மா, ஐயா பின்னால் ஓடாமல் பகுத்தறிவோடும், தனமானத்தோடும் வாழு! என்றுதான் சொன்னார் பெரியார்.
வைதீகம்தான் கண்களை மூடிக்கொண்டு எதையும் நம்பு என்று பாடம் நடத்தும். தமிழ் சமூகத்தின் விடுதலைக்காக எந்தப் படித்த அறிஞனும் முன்வந்து சேவை செய்யாமல் ஒதுங்கிக் கொண்டதனால்தான் , படிக்காத கிழவர் தந்தை பெரியார் சேவை செய்ய முன்வந்தார். படித்தவனையே மண்டை கிரு கிருத்துப் போகும்படி கேள்விக் கணைகளால் துளைத்தெடுத்தார். அவர் கேள்விக்கு நேரடியாக பதில் சொல்லமுடியாத படித்ததுகள் தமிழர்தம் வாழ்வின் எதிர்காலத்தைப்பற்றி நினையாமல், உம்மைப்போல் சந்தை மடமும், சங்கர் மடமும் கதியென காலம் கடத்திக்கொண்டிருந்தன. உமக்கு ஒன்று தெரியுமா இந்து தர்மா? பெரியாரை வள்ளுவரை எதிர்த்த துரோகியாக பிலீம் ஓட்டினீர். நான் சொல்கிறேன், திருக்குறளையும், திருவள்ளுவரையும் மதித்து, தமிழர்கள் குறளை மதிக்கும்படி உலகத்திலேயே முதன்முதலாக ” திருக்குறள் மாநாடு” நடத்தியவர் நீர் சொன்ன அந்த படிக்காத பெரியார்தான். படித்த எந்தப் புலவனோ , அரசனோ, பணக்கார ஜமீனோ திருக்குறளுக்கு மாநாடு நடத்தி குறளின் பெருமையை நிலைநாட்டவில்லை. இதெல்லாம் உமக்குத் தெரிந்திருந்தால் பெரியாரைக் குறித்து கீழ்த்தரமான விமர்சனத்திற்குள் சென்றிருக்க மாட்டீர்!
“அவர் (“பெரியார்”) வந்த பிறகே, (“தமிழனுக்கு”) கல்விகற்கும் உரிமை, கோவில் வழிபாட்டு உரிமை, பெண்களுக்கு சம உரிமை, விதவைப் பெண்களுக்கு திருமண உரிமை, தமிழன் தன்மானத்தோடு வாழ முன்னின்று போராடியதன் விளைவாகவே வேலைவாய்ப்பில், கல்விக் கழகங்களில், இட ஒதுக்கீடெல்லாம் வந்தது. அப்படிப் படித்து , உணர்வு பெற்ற தமிழன்தான் இன்று பெரியாரையே நன்றியே இல்லாமல் வரிக்கு வரி சாடி ஊடங்களில் எழுதிக்கொண்டிருக்கிறான்.” தமிழரே, இவ்வாறு ஒப்பாரி வைப்போர் யார்?. தமிழரின் உரிமை தமிழ் நாட்டில் மீட்டெடுக்கப் பட்டு அதன் பின் தாழ்த்தப்பட்ட தமிழர் கல்வியிலும், வேலை வாய்ப்புகளிலும், பொருளாதாரத்திலும் முன்னேற வேண்டும் என்று திராவிடக் கட்சிகள் சாதியின் சான்றிதழுடன் பிரித்தெடுத்து வாய்ப்புகளை வழங்க ஆரம்பித்ததின் வழி பாதிக்கப்பட்ட பிராமண வகுப்பினரே ஒப்பாரி வைக்கின்றனர். அதை அடுத்து வெள்ளாளர், பிள்ளைமார்கள், நாட்டுக் கோட்டை செட்டியார் என்று அடையாளமிட்டுக் கொண்டோரும் இவ்வகையில் பாதிக்கப் பட்டோரே. பின்னவர் வகையில் வந்த இந்து தருமர் பெரியாரை வைவதில் ஆச்சரியம் ஏதும் உளதோ?. அதனால்தான், அவருக்கு பெரியார் மீது அவ்வளவு காழ்ப்புணர்ச்சி. அதன் வயிற்றெரிச்சலை தாங்க முடியாமல்தான் இங்கு பெரியாரின் வைதீக சமய, வைதீக மொழி எதிர்ப்பினை பெரிது படுத்துகின்றாரே ஒழிய இந்து மத பற்றினால் அல்ல. சோழியன் குடுமி சும்மா ஆடாது.
தேனீ > ஆக- திருமாலும் -நான்முகனும் புராணம் காட்டும் கட்டுக்கதை பாத்திரமல்ல > அவர்கள் சிவனின் அடி முடியை தேடியிருக்கிறார்கள் என்று வாக்குக்கு அரசர் அருளியுள்ளார் என்பது சத்தியம் – நன்றி நன்றி
தமிழன் > பெரியார் திருவள்ளுவரையும் குறளையும் எதிர்க்க வில்லையா ?? வேடிக்கை !! மீண்டும் நான் குறிப்பிட்ட அவரின் நூலை தேடி படியும் ஐயா ! யார் உண்மையில் பிலிம் காட்டுகிறார் என புரியும் !! அடுத்தவரின் கட்டுரைகளை அப்படியே வாங்கி எழுதினால் இப்படிதான் சமாளிக்க தோன்றும் !!( மன்னிக்கவும் ! உம்மை போல “நாய்”- “”வாந்தி” போன்ற முறைகேடான உதாரணங்களை எழுதும் அளவுக்கு நான் பகுத்தறிவாளன் அல்லன் )
இன்று வரை பெரியார் >தமிழ் என அன்றாடம் உயீரை விட்டு அரசியல் நடத்தும் தமிழ் நாட்டு மரபணு தமிழர்கள் தூங்கி கொண்டிருக்க > ஒரு மதவாத வட நாட்டு பார்பன அமைச்சர் திருக்குறளை தேசிய நூலாக அறிவிக்க குரல் கொடுக்கின்றார் ! இந்த லட்சணத்தில் இருக்கிறது உங்கள் “”திருக்குறள் மாநாடு “” நடத்திய மரபணு தமிழனின் கையாலாகாதனம் !!
lozeni > கருத்துக்கு நன்றி -“”தலையே நீ வணங்காய் ” !என துவங்கும் அப்பாடலை நான் அறிவேன் >
நான் அறிந்து இவ்வலை தள வாசகர்கள் பலர் மிக நீண்ட விமர்சனகளை வாசிக்க விரும்புவதில்லை என்பதால் நான் அந்த வரிகளை மட்டும் குறிப்பிட வேண்டியதாயிற்று !!
தமிழர் அல்லாதாருக்கு தமிழே ஆயுதம் .
தமிழன் என்றும் தமிழச்சி என்றெல்லாம் வசதிகேற்றால்போல் வச்சுக்குவோம்..
பெரியார் TBI’ என்பது கி. வீரமணியை நிர்வாக இயக்குனர் கம் ஓனராக கொண்ட தனியார் நிறுவனம். இது மத்திய அரசின் (வீரமணி மொழியில் ஆரிய இந்துத்துவ அரசின்) அறிவியல் தொழில் நுட்ப அமைச்சரகம், மற்றும் அறிவியல் தொழில் நுட்ப துறை (DST) போன்ற அமைப்புகளின் நேரடி நிதியுதவி பெற்று, எந்த பெரும் சுய முதலீடும் இன்றி இயங்கும் நிறுவனம்!
இந்த DST மற்றும் DBT போன்ற அறிவியல் அமைப்புக்கள் இந்தியாவில் அறிவியல் ஆராய்ச்சியை மேம்படுத்தவும், வளர்க்கவும், இளம் தலைமுறை ஆய்வாளர்களை ஊக்குவிக்கவும் உருவாக்கப்பட்டவை. ஆனால் இந்த அமைப்புக்களின் தலைமைகள் எப்போதும் சுப்பிரமணிய சாமி, இந்து. ராம் வகையறாக்களால் சூழ்ந்து இருக்கும். இந்த மத்திய அமைப்புக்கள் தமிழர்களை, தமிழ் நாட்டு அறிவியல் பல்கலை கழக மற்றும் ஆராய்ச்சி அமைப்புக்களை எப்படி வஞ்சிக்கின்றன என்பதை அத்துறையில் இருக்கும் அனைவரும் அறிவர்!
ஈ-மெயிலை அறிமுகப்படுத்திய சிவ அய்யாத்துரை உள்ளிட்ட எண்ணற்ற கொண்டாடப்படும் தென் இந்திய அறிவியலாளர்கள் இந்த அமைப்புக்களை நேரடியாக குற்றம் சாட்டியது உண்டு. அந்த அமைப்புக்கள் வீரமணியின் தனியார் நிறுவனத்திற்கு நிதியுதவி அளிப்பது எப்படி சாத்தியம் என்பதற்கான பதிலுக்குள் ஒளிந்து இருக்கிறது இத்துணை ஆண்டுவடுககள் ஏய்த்து கோலோச்சிய திராவிட அரசியலின் சூட்சுமம்!
வீரமணியின் இந்த நிறுவனம் இயங்க துவங்கியதும் அதே ஈழ யுத்த காலத்தில்தான் (2007). வீரமணியின் அந்த ‘பெரியார் TBI’ நிறுவனத்தின் கீழ் இயங்கும் ஒரு அமைப்பின், திட்டத்தின் பெயர் ‘SAWETHA’. அதற்கு வீரமணி அந்த நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ பக்கத்தில் கொடுக்கும் (சமஸ்கிருத) விளக்கம் ‘Sawetha in Sanskrit means impeller, suitably named as women always drive from within’. அதாவது சவீதா என்பதன் சமஸ்கிருத விளக்கம் பெண்களை உள்ளே இருந்தே தூண்டுவதாம். சமஸ்கிருதத்தில் சரியாக பெயரிட்டு இருக்கிறார்களாம்!
இந்த வீரமணியும், அவர் சார்ந்த கும்பலும் தமிழ் மொழியை காத்து இந்தியை விரட்டிய லட்சணம் புரிகிறதா? தமிழ்த்தாயை வன்புணர்ச்சி செய்த மாபாதகர்கள். ஆரியனிடம் ஈழத்தையும் இனத்தையும் காட்டிக் கொடுத்து, பார்ப்பனிய பணத்தில் தொழில் நிறுவனம் துவங்கிய இனத்துரோகிகள். இது எதேச்சையாக நிகழும் ஒன்றன்று, இது இவர்களின் இரத்த புத்தி, குல பண்பாடு, திராவிட வடுக மரபியல்!
இந்து தர்மனே… நான் முன்னாள் பத்திரிகை ஆசிரியன். சுயமாக கட்டுரையும்,கவிதையும், தமிழாய்வு செய்யும் ஆற்றலும் உடையோன். தேவை ஏற்பட்டாலன்றி மற்றவர்கள் எழுத்தை சப்போர்டீவுக்காக ஆதாரம் காட்டுவேனேயன்றி துண்டு பிரசுரம் செய்ய எத்தனிப்போன் அல்லன். வள்ளுவனேயானாலும் குறையுள்ள விடத்து குறைகளைச் சுட்டிக்காட்ட அறிவும் ஆற்றலும் வேண்டும்.அத்தகைய குறைபாடுகளைக் குறையாக,காலத்திற்கு ஒவ்வாதவற்றை மட்டுமே பெரியார் குறை சொன்னார். அதற்காக வள்ளுவனை வெறுக்கவில்லை. குறளுக்கு மாநாடு எடுத்தார். இந்த மாநாட்டிற்கு முன்னம் பாமரத் தமிழனுக்கு திருக்குறளைப் பற்றியோ, இப்படி எல்லாம் நமக்கு வழிகாட்ட ஒரு தமிழன் அழகான நீதி நூல் சமைத்துள்ளான் என்ற விழிப்புணர்வோ ஏற்படவில்லை. இன்று எந்த மரபணுத்மிழனும் நீர் புலம்புவதைப்போல் தூங்கிக்கொண்டில்லை. குறளறிவில் குறைந்துவிடவோ இல்லை.அதை நிலை நாட்டுவதில் விழிப்பாகவே இருக்கின்றனர். அந்த விழிப்புணர்வை மழுங்கடிக்கும் உன்னதமான கைங்காரியத்தைத்தாம் ஆரியமும், வைதீகமும் இன்றும் தொடர்கிறது. திருக்குறளைத் தேசிய நூலாக அறிவிக்க எங்கள் மரபணு தமிழன் பல காலமாக குரல் கொடுத்துக்கொண்டுதான் இருந்தான். வடக்கிருந்த அதிகார ஆரியன்தான் அதனை அறிவிக்கும் அதிகாரத்திலிருந்தும் தடையாக இருந்தான் என்பதை அறியாமல் பிதற்றாதீர். மற்றவர்களின் உணர்வுகளை மதிக்கிற வடவன் இல்லவே இல்லை என்று சொல்ல நான் உம்மைப்போல் கருத்துக் குருடரல்லன். என்னுடைய 27/1/2015 ,நேரம் 13:02 பதிவைப் பாரும்.அதில் அடியேன் 6ம்,7ம்,8ம் வரிகளில் …
// இதில் விரல்விட்டு எண்ணக்கூடிய ப் பார்ப்பனியர்களே நியாயத்தை , நீதியை உணர்ந்து இந்தியாவின் தேசியக் குடிகளான திராவிட மக்களோடு , அவர்கள் உரிமையை மதித்து நடந்து கொள்வார்கள்! // என்று குறிப்பிட்டுள்ளேன்.
எல்லா பார்ப்பனரையும் ஒரே தரசில் எடைபோடும் அறிவிலியல்லன் நான். எங்களை, எங்கள் முன்னேற்றத்தில் அக்கறையுள்ள எந்த மனிதனையும், அவன் எங்கள் இனப்பகைவனின் வம்சமாக இருந்தாலும் மதிப்பவன் நான். அந்த வகையில் ஒரு பார்ப்பன அமைச்சர் திருக்குறளை நேசித்தால் அதற்காக அவரை மதிப்பேன். அந்த அமைச்சரை உம்முடைய வசதிக்காக நீர் இங்கே அவரை “மதவாத” என்று குறிப்பிட்டு மதவெறியனாக படம் பிடிக்காதீர். இன்னோன்று ,திருக்குறள் தன்னிகரற்ற நூல் என்பதை காந்தியடிகள், லியோ டால்டாய், அந்நாள் சிங்கை பிரதமர் லீ குவான் யூ, அந்நாள் மலேசியப் பிரதமர் துங்கு , மேலை நாட்டு அறிஞர் பெருமக்கள் எல்லோருமே புகழ்ந்துள்ளனர். அந்தத் தன்னிகரற்ற நூலை இந்தியாவின் தேசிய நூலாக்குவது ஒரு இந்திய அமைச்சனின் கடமை. அது தமிழன் கேட்டப் பிச்சையல்ல., உரிமை! அதே சாக்கில் திருக்குறளோடு பகவத்கீதை எனும் மக்களை வர்ணபேதத்தால் பிரித்து உயர்வு தாழ்வை போதிக்கும் கீதையையும் தேசிய நூலாக்க எத்தனிப்பது வடவனின் நரித்தந்திரம். இந்தியா என்பது வைதீகமத நாடல்ல. மதச்சார்பற்ற தேசம். அங்கே ஆரியம் கொடிநாட்ட நினைப்பது அறிவீனம். இந்த வைதீகத்தின் குறுக்குப் புத்தியால்தான் பாகிஸ்தான் பிரிந்தது. பாகிஸதானிலுள்ள ஆரிய முஸ்லீம்களின் குறுக்கு புத்தியால்தான் வங்காளதேஸ் உருவானது. ஆரிய இரத்தம் பொதுவாகவே மற்றவரை மனிதனாக ஏற்றுக்கொள்ள மறுக்கும் இயல்புடையது என்பதை உலக. வரலாறு சொல்லும்.
அது சரி , திருக்குறளில் 70ம் அதிகாரத்தில், 2ம் குறளை வாசித்துவிட்டு ,அந்தக் குறள் மக்களாட்சி மான்படன் விளங்கும் இந்தக் காலத்திற்கு ஒத்துப் போகுமா என்று சொல்லும். மன்னர்காலத்தில் எழுதப்பட்டதை ஜனநாயக காலத்தில் ஏற்றுக்கொள்ளாத பெரியார் விமர்சனத்தை முன்வைப்பாரேயானால் , இதோ பார் தமிழா…கன்னட நாயக்கன் தமிழனின் திருக்குறளைச் சாடிவிட்டான் என்று உம்மைப் போன்றோர் பிலீம் ஒட்டினால், நாங்கள் மறுப்பெழுதி மறுக்கக்கூடாதா இந்து தர்மனே?
இப்பொழுதும் தங்களின் அறியாமையை இந்து தருமர் காட்டுவது வருந்ததக்கது. சிவபெருமானின் அடித்திட்ட தெய்வமாக (அவனிடத்தில் இருந்து) படைத்தல், காத்தல், அழித்தல் என்ற முத்தொழில்களை செய்வோராகிய பிரம்மா, திருமால் உருத்திரன் என்போருக்கு சைவ சித்தாந்தத்தில் இடமுண்டு. ஆனால் அவர்களின் நிலையை, எடுத்தியம்பும் பொழுது சைவமும், வைதீகமும் வேறுபடும். சைவ சித்தாந்தம் சொல்வதை ஏதோ பிற மதத்தை தாழ்த்துவதாக எண்ணிக் கொண்டு நீங்கள் எம்மிடம் வம்புக்கு நிற்கின்றீர்.
நன்றி தமிழன் ஐயா,தங்கள் கருத்திலிருந்து பெரியார் செய்த பெரும் மாற்றங்களை தெள்ள தெளிவாக அறிந்து கொண்டேன்.அந்நிய மாநிலங்களில் இருந்து தமிழ் நாட்டின் மேல் படை எடுப்பு பெரியார் காலத்திலும் தொடர்ந்ததை எப்படி கையாண்டார்? அதை பற்றிய விளக்கங்கள் ஐயா?
தேனீ .> உம்மோடு நான் வம்புக்கு நிற்பதாக நினைப்பது தவறு > தொடரட்டும் உமது சைவ பணி…