அப்படி இப்படி என்று தமிழர் புத்தாண்டு தை மாத பொங்கல் விழாவோடு தொடங்குகிறது என்ற உண்மையை உலகத் தமிழர்கள் உணர்த்து விட்டனர். இன்று 10/1/2015 மின்னல் FM கேட்டுகொண்டு இந்த தலைப்பை துவக்கினேன். விளமபர படைப்பான ஒலியில் உலாவில் ஆறுமுகம் அவர்கள் ஒரு குறிப்பை சொன்னார். அதாவது பரமசிவம் என்ற அபூர்வாஸ் உரிமையாளர் ராசிபலன் சித்திரை மாதத்தில்தான் தெரியும்,,, ஆக இப்போது சொல்வது சரிபடாது என்று போட்டார் ஒரு போடு. தமிழர்கள் வழிபாட்டில் சோதிடம் ராசிபலன் அல்லது எண் கணிதமெல்லாம் இருக்கையில் ஆரியர்கள் மாதமான சித்திரையில் தான் தமிழ் ராசிபலன் வரும் என்றால் சனி பெயர்ச்சியில் வாசிக்கப்படும் சோதிடம் என்பது என்ன?
இந்தக்கேள்வியோடு தமிழர் பண்பாட்டு நாகரீகம் என்றால் என்ன என்று பார்ப்போம். இந்த தலைப்பை நீண்டு எழுதிக்கொண்டே போகலாம். நம்மவர்களுக்கு படிக்க நேரமில்லை என்பதால் பலரின் ஆசைப்படி என் கட்டுரைகளை சுருக்கி எழுத முயல்கிறேன்.
அடிப்படையை விளங்கினால் தான் வரலாறு தெரியும் என்பது கல்வியாளர்களின் கருத்து. ஆனால் இப்போதுள்ள அறிவாளிகள் ஆசானுக்கே பாடம் சொல்பவர்கள்..அதையும் கேர்ப்போம்.
கடந்த 10 ஆண்டுகளாக உலகத் தமிழர்களின் பண்பாட்டு கூறுகளில் நாகரீகம் என்ற போர்வையில் மோசமான் பொதுசசேதங்கள் பாழ்பட்டு உள்ளது. இதற்கு பல காரணங்கள் இருந்தாலும் என் ஆய்வும் இலக்கும் தமிழர் பண்பாட்டு நாகரீகம் என்பது என்ன ?
நானும் நாகரீகம் என்ற புதுமைக்குதான் புகுந்துள்ளேன். காரணம் தேவையானதை கூட்டி பழமையை வைத்து பாராட்டுவது ஒரு வகை. இரண்டாம் வகை பழமையை விட்டு விலகி அதிநவீன நாகரீக அல்லது பிறர் இன பண்பாட்டு கூறுகளை சேர்த்து நமது ஆதித தமிழர் பண்பாட்டு சிறப்புகளை ஒதுக்கிவிடுவது இன்னொரு விதம்.
இப்ப மலேசியத் தமிழர்கள் ஓரளவுக்கு நாம் எங்கு நிற்கிறோம் என்று புரிந்து இருக்கும்.! அவர் அவர் பயிற்சிக்கும் எழிசிக்கும் விட்டு விடுகிறேன்.
புதுமை மூர்க்கத்தனமும் சினிமா கேளிக்கை கலப்பும் ” பேஷன் போட்டிகள் ” பேரில் பேய்கள் நாகீகம் என்று சொல்லும் அளவிற்கு இப்போதைய நடப்புகள் உள்ளது. திருமண மணப்பெண் விருந்து நிகழ்வில் மேடையில் மணமகனை கட்டிபிடித்து பிடித்து காதல் டூயட் பாடுமளவிற்கு நாகரீகம் “சில்க் ஜில்லாவில்” வெள்ளையன் உடையில் சீனர் சிங்க ஆட்டம்ம்வரை மலேசியாவில் கல்ப்பியல் பண்பாட்டு கொலை வெறிகள் அரங்கேறி வருகிறது. ஆனால் இதரவர்கள் நம் கலாசார உடைகளை கொஞ்சமாவது கோர்த்துக்கொண்டார்களா என்றல் பஞ்சம் தான் பரிதேசிக்கிறது.
தமிழர் நாட்டின் பண்பாட்டு சீரழிவுகள் சினிமாவில் மற்ற மாநில மாயைகளால் உரு மாறி உள்ளதை பார்க்கிறோம். ஆனால் கட்டுப்பாடுகள் மிகுந்த தூயத்தமிழர்களின் வாழ்வியல் பழக்க வழக்க பழமை பண்புகள் சென்னையில் கூட இன்னும் மேலோங்கி உள்ளது.
நான் என் கண்களை கலக்கிய சிங்கப்பூர் மற்றும் மலேசியா தமிழர்களை பற்றிய அடங்காத்தன ஆடம்பர அநாகரீக பண்பாட்டு சிதைவுகளை அலச உள்ளேன்.
இதற்காக தமிழர்கள் அனைவரும் இப்படி பாழ் குழியில் விழுந்து விட்டார்கள் என்று சொல்ல வரவில்லை. இருந்தும் சில குடுபங்களில் அப்பா, அம்மா, அண்ணன், தம்பிகளின் எரிச்சலை மீறி நாகரீக படி தாண்டும் தமிழ்பபத்தினிகளை காசு வாங்கி இந்த அலங்காரிகள் அசிங்கப்படுத்தும் கோலத்தை கொஞ்சம் கலைத்துப்பார்க்க வேண்டும். இது நமது உரிமையும் கூட !
சினிமா சீர்கேட்டால் இந்த பரிதாபம் என்றால், அதை நான் ஒத்துக்க முடியாது காரணம் சங்கீதம் ,பாரத நாட்டியம் ,பிற நவீன நடன பள்ளிகள் கூட தமிழர் இலக்கண மரபுடந்தான் பாடங்கள் நடக்கின்றன. இடையில் சினிமா இயக்குனர்கள் இவர்களை விற்பனை பொம்மைகளாக கவர்ச்சி உருவாக்க ஆடைகள் போட்டு ஆட விடுவதை வீட்டில் இருக்கும் ரசிக மணிகள் வீட்டுக்கும் விழாவுக்கும் புகுத்தும் விந்தையைத்தான் தமிழர் சமூகம் நிந்திக்க வேண்டும்.
நம் நாட்டில் மலாய் சகோதரர்களின் திருமண விழாவுக்கு போனால் அவர்களின் உடை நாகரீகம் தெய்வீகமாக உள்ளது ..அனால் நமது பெண்களின் உடையில் பல கலப்புகள்?
நான் தமிழர்களின் பத்துப்பாட்டில் பதினெண்கீழ் கணக்கியல தமிழர்களின் பழமை கணக்கிற்கு போங்கள் வாழுங்கள் என்று சொல்ல வரவில்லை. அந்த கோடுகளையும் சேர்த்து புதிய கட்டுபாடான உருப்படிகளை அணியுங்கள் அழகு பாருங்கள் என்றுதான் சொல்கிறோம்.
உடைகளை மட்டும்தான் மனிதன் பண்பாட்டுக்கு முதல் கூறாக காண்கிறான். மற்றது அறம் சாந்த சம்சாரம். சமீபத்தில் ஒரு தமிழ் ஆசிரியரின் கேள்வியை பாருங்கள்” திருவள்ளுவர் தமது குரல்களில் எங்கேயும் ஒருத்தனுக்கு ஒருத்தி” என்று சொல்லி உள்ளாரா ? என்ற கேள்வியை கேட்டு வைத்தார். யாரும் பதில் சொல்லவில்லை ! திருக்குறளில் எத்தனயோ வாழ்வியல் அறம் உண்டு இவர் கொச்சையாக இந்த விபரீத ஆசைக்கு அடிமையாகி நம் பண்பாட்டை குலைத்துளார். இது (மனிதம்) ஒரு வித பண்பாட்டியல் மனிதம் என்றுதான் எடுத்துக்கொள்ள முடியும்? குயில் போல மனைவியும் குரங்கு போல கூத்தாலும் வைத்துக்கொள். ஆனால் மனை சாட்சி என்ற மனைவியால் வாழ்வியலை திருவள்ளுவர் பல குரல்களில் சொல்லி உளார். அதுதான் பண்பாட்டுக்கல்வி ஒழுக்கம் என்று அந்த ஆசிரியர்க்கு இப்போது சொல்வேன்.
தலைமுறை இடை வெளி எப்போதும் இலாத அளவுக்கு இப்போது அகலமாகிவிட்டது. கடந்த கால சமுதாயம்,நிகழ் கால சமுதாயம் இருக்கட்டும் .எதிர்கால சமுதாயம் என்பதை சமரச சகிப்புகள் என்பதா என்ற முச்சந்தியில் யோசிக்கிறோம். நமது தமிழர்களின் பண்பாட்டு உரிமைகளை கட்டி காப்போமா அல்லது அது ஒரு சலுகை… வந்தால் வரம்பு இல்லையேல் குடும்பத்தில் வம்பு என்று விட்டு ஒதுங்கி போவோமா என்பதே இன்றைய கேள்வி?
ஆனால் அக்கறை உள்ள ஒரு தொன்மையான இனத்தில் பண்பாட்டு அழகும் அடையாளமும் ஒரு சிறுபான்மையிரனால் கெடுமானால் பெரும்பாமை தமிழர்கள் ஏமாளிகளாக முன்பு போல பல வற்றை இழந்த இழி நிலைக்கு போவது நமது கோழைத்தனம் என்பேன்!
நமது சமயம் ,நமது கலாச்சாரம் ,நமது பண்பாடுகள் , நமது நாகீகம் , நமது இனம் , நமது மொழி ,நமது வாழ்வியல் அழகுகளை திரும்ப திரும்ப சொல்வது நமது கடைமையாகும்.
-பொன்.ரங்கன்
Pon Rangan wrote on 10 January, 2015, 23:32
இது சிட்டிசன் சினிமா பாடல் இலங்கையில் தமிழர் தேசியம் அதரவு
சனாதிபதி வெற்றி பெற்ற மகிழ்ச்சியில் சுட்டது தான் …உன்னை போன்ற நரம்புகள் செத்த ஓநாய்களுக்கு உணர்வு வர மறு சுழற்சி செய்தேன் …ஆமாம் மலேசியன் என்ற பேரை எங்கு சுட்டாய் ? அப்பன் வெச்ச பேருலா எழுத்து லோய்? ஒரு வட சுட எவ்வளோ கஷ்ட்டம் தெரியமா ? சுட்டு பாரு சு எரியும்? அந்த சோசியமும் அறிவுக்கு விருந்தா இருக்கட்டுமே ..அறிவை மறு சுழற்சி செய் புத்தி வரும். படிப்பா ஏன்பா இந்த அரிப்பு
அன்பான செம்பருத்தி. கோம் வாசகர்களே, (உன்னை போன்ற நரம்புகள் செத்த ஓநாய்களுக்கு), ( சுட்டு பாரு சு எரியும்? ) இது பொன் ரங்கனின் எழுத்து/கருத்து தெரிவிக்கும் -தமிழர் பண்பாட்டு நாகரீகம் .. மலேசியன் என்ற பேரை எங்கு சுட்டாய் ? நான் மலேசியன் ஆகவே நான் மலேசியன் என்று எழுதுவதை ஏன் சுட வேண்டும். ஆமாம் செம்பருத்தி. கோமில் கருத்து எழுதுவோர் எல்லோரும் என்ன அப்பன் வெச்ச பேருலா எழுதுகிறார்கள், உங்களையும் சேர்த்துதான்.
முதலில் Pon Rangan என்ற பெயரை தமிழில் எழுத பழகுங்கள்.அனவருக்கும் பொங்கல்/தமிழ் புத்தாண்டு வாழ்த்துகள்.
“இதுவும் தோசை சுட்ட கதைதான் ,, தோசை சாப்பிட்டு விட்டு தினகரன் இதழில் வந்த நமது பண்பாடு என்ற கட்டுரையுடன் படித்து பகிர்வு செய்யவும்.”
திருமணமான பெண் தன் தாய்க்கு எழுதிய கடிதம்..
அன்புள்ள அம்மா, அப்பா !
எல்லா பெண்களைப் போலவே கல்யாண கனவில்
களித்து மனதைக் கொள்ளையடித்தவரை உங்கள்
சம்மதத்துடன் குதூகலமாகா ஆடம்பரமாக திருமணம்
புரிந்து கொண்டேன் .
பின்னர் தான் தெரிந்தது வாழ்க்கை சினிமாவில் போடும்
சுபத்திற்கு பின்பு தான் தொடங்குகிறதென்று.
வாழ்க்கையில் விரும்புவது விரும்பப் படுவதென்பதையும் தாண்டி நிறைய இருக்கிற்து என்று தெரிய வருகிறது
எத்தனை பொறுப்புகள்? எத்தனை சுமைகள்?
எத்தனை எதிர் பார்ப்புகள் ? எத்தனை தியாகங்கள்?
எத்தனை ஏமாற்றங்கள்?
நினைத்த நேரத்தில் ,நிம்மதியாக முழு தூக்கம்
கலைந்த நேரத்தில் எழுந்திருக்க
முடியவில்லை..குடும்பத்தில் மற்றவர் விழிக்கும்
முன் நான் விழித்து என் வேலைகளை ஆரம்பிக்க
வேண்டி இருக்கு..உன்னோடு இருந்த நாட்களில்
எனக்கென்ற விருப்பமான் உடைகளில் சிட்டாக
பறந்து கொண்டிருந்தேன்..இங்கே அவர்கள் விரும்பிய
உடையில் வலம் வருவதையே விரும்புகின்றனர்..
இதோ என் தோழியை/தோழனைப் பார்த்து விட்டு வருகிறேன் என்று உன்னிடம் சொல்லிவிட்டு சென்றது போல் சொல்லி செல்ல இயலவில்லை.
என் தேவைகளை விட அடுத்தவர் தேவைகளை முன் வைத்தே நான் நடந்து கொள்ள வேண்டி இருக்கு..நினைத்த நேரத்தில் தூங்க கூட முடிவதில்லை.எனக்கு விருப்பமான
டிவி நிகழ்ச்சியைக் கூட பார்க்க முடிவதில்லை..சில நேரங்களில் எதற்கு இந்த திருமணம் என்று அலுப்பாக இருக்கிறது..
இந்த திருமணம் என் சுதந்திரதை அல்லவா பறித்து விட்டது..என் சுயத்தை அல்லவா சூறையாடி விட்டது
உன்னிடம் இருந்த போதே மிக மகிழ்வாக
இருந்தேனே! உன்னிடம் திரும்ப வந்து விடலாமா என்று கூட தோன்றுகிறது
உன் மடியில் படுத்து கொள்ளனும் போல இருக்கிறது
வேண்டாம் வேண்டாம் என்று நான் சொல்ல சொல்ல
ஒரே ஒரு இட்லி போட்டுக்கோ..
உனக்கு பிடிக்குமேன்னு பால் கோவா செஞ்சேன்னு நீ
பின்னாலயே வந்து வந்து ஊட்டி விடுவதை கொஞ்சிக்
கொள்ள வேண்டும் போலிருக்கிறது. எந்த கவலையும் இல்லாமல் உன் அரவணைப்பில் உன் கொஞ்சலில் உன் பாதுகாப்பிலேயே இருந்திருக்க கூடாதா என்று தோன்றுகிறது..
ஆனால் அடுத்த கனமே நீயும் என் வயதில் என்னை மாதிரி தானே உணர்ந்திருப்பாய் நீ உன் திருமணத்தில் செய்த தியாகங்கள் தானே எனக்கு இந்த அழகிய நினைவுகளைக்
கொடுத்திருக்கிறது..நீ அன்று நான் இன்று நினைப்பது போல் நினைத்திருந்தால் நான் இன்று இருப்பேனா..
நீ செய்த தியாகங்களையும் உழைப்பையும் பாசத்தையும்
எதிர்பாறா அன்பையும் நான் திருப்பி தர வேண்டாமா..
என்று நினைத்து கொள்கிறேன் ..அதுவும் உன்னிடம்
இருந்து கற்றது தான்..அப்படி நினைக்கும் போது வாழ்க்கையே எளிதாக தெரிகிறது.. தெளிவாக புரிகிறது காலம் செல்ல செல்ல நீ உன் குடும்பத்தை நேசித்தது போல் நானும் என் குடும்பத்தை நேசிக்க ஆரம்பித்து விடுவேன்..
நீ செய்த தியாகங்களை நானும் செய்ய தயாராகி விடுவேன்.. உனக்கு நாங்கள் கொடுத்த மன உறுதியை திடத்தை என் குடும்பமும் எனக்கு தரும்
ஆமாம் மா நீ எனக்கு கொடுத்ததை நானும் என்
குடும்பத்திற்கு கொடுக்க தயாராகி விட்டேன்..
நன்றி ம்மா .
என்றும் அன்புடன்…
* பெண் அன்பில் ஒரு தாய்..
* பெண் அழகில் ஒரு தேவதை..
* பெண் அறிவில் ஒரு மந்திரி..
* பெண் ஆதரிப்பதில் ஒரு உறவு..
* பெண் வெறுப்பில் ஒரு நெருப்பு…
* பெண் வெற்றிக்கு ஒரு மாலை..
* பெண் தோல்விக்கு ஒரு பள்ளம்
* பெண் நட்பில் ஒரு நேர்மை..
* பெண் கண்டிப்பில் ஒரு ஆசிரியர்..
பி. கு: இருந்தாலும் பெண் ஒரு புரியாத புதிர்… அல்ல நமது பண்பாட்டுடன் ஆணுடன் இணையும் போது எல்லாம் பெருமைதான் !
எனக்கு விவரம் தெரிந்த நாளில் இருந்து இன்று வரை தமிழர்கள் பொங்கலை எப்படி கொண்டாடுவார்கள் , தீபாவளியை எப்படி கொண்டாடுவார்கள் பார்த்திருகின்றேன் , பொங்கல் முதல் நாள் போகி கொண்டாடபடுவதை தளபதி படத்தில் பார்த்ததோடு சரி நேரில் பார்த்ததில்லை . தமிழர்களுக்கு தை பொங்கல் முதல் நாள் என்றால் சித்திரை முதல் தேதியை என்னவென்று சொல்வது . தீபாவளி வடகதியர்களுக்கு மட்டும் தான் என்றால் ஏன் தமிழர்களும் அதை வெகு விமர்சையாக கொண்டாடுகின்றனர் ? இறந்தவர்களுக்கு படையல் போடுவதும் அன்று தான் என்று கேள்விபட்டிருக்கேன் .அப்படியானால் தமிழர் திருநாளில் படையல் போடாதது ஏன் .?
நண்பரே அருமையான கருத்து. கண்ணாடி டம்ளரை குழந்தை தூக்கி
நடந்து வருவதுபோல் தயங்குகிறேன் நம் இளைய தலைமுறை திருமணங்களை நடத்துவதைப் பார்த்து .. நிச்சயத்திற்கு 10000; ஒத்திகை திருமணமென்று 10000; பின் மணமேடை, அசைவ விருந்து , மண்டபம் என 50000 ரிங்கிட் . அடுத்தவர் மெச்ச வேண்டும் என்று செலவு செகின்றனர். ஒத்திகை திருமணம் நம் கலாச்சாரம் இல்லை. அசைவ உணவும் நம் பண்பாடு அல்ல. நாம் நம் பண்பாட்டு உணவை உண்டு மகிழ வேண்டும் என்று நினைக்க வேண்டும்.
மங்கை அவர்களே ,உங்கள் கேள்விக்கு முடிந்த அளவு சுருக்கமாகவும் தெளிவாகவும் நான் பதில் தருகிறேன் ,
1) பொங்கலுக்கு முதல் நாள் ஏன் போகி பண்டிகையை தமிழர்கள் கொண்டாடுவதில்லை? : முதலில் போன்களை பற்றி நீங்கள் அங்கு அறிய வேண்டும் . குமரிக்கண்டத்தில் வாழ்ந்த தமிழர்கள் (10.000 வருடத்திற்கு முன்பு) முதற்கொண்டு விவசாயத்தை 100 க்கு 70 விழுக்காட்டினர் மிக முக்கிய தொழிலாக கொணடவர்கள். விவசாயமே அனைவருக்கும் உணவளிக்கும் தொழில் என்பதை உலகுக்கு உரைத்தவர்கள் தமிழர்களே ,விவசாயமே அனைத்து விதமான பிற தொழிலுக்கு மூல
தனமான தொழிலாக உள்ளது . . ஆகையால் ஒவ்வொரு வருடமும் தை முதல் நாளன்று தனது முதல் நெல்மணிகள் ,மற்றும் பிற காய்கறிகளை இயற்க்கைக்கு படைத்து நன்றி கூறி இனிதே அந்த தை முதல் நாளை கொண்டாடுவதுதான் தமிழர் மரபு. போகிப் பண்டிகையானது வட நாட்டவரின் மரபே ஒழிய தமிழரின் பண்பாடு அன்று.ஆதலால் பொங்கலுக்கு முதல் நாள் தமிழர்கள் பழைய பொருட்களை எரிக்கும் வழக்கத்தை கொண்டிருக்கவில்லை .
2) தீபாவளி தமிழர்களின் விழா அன்று .ஆனால் மலேசியா தமிழர்களும் மற்றும் சென்னை வாசிகளும் தீபாவளி மற்றும் சித்திரை புத்தாண்டினை பெருவிழாவாக கொண்டாடுகிறார்கள் (ஆனால் தமிழ் நாட்டின் பிற பகுதியில் தீபாவளியை அவ்வளவு சிறப்பாக கொண்டாடுவதில்லை ) காரணம் வடவர்களின் கலாசார திணிப்பும் ,அன்றைய பார்பனர்களின் செல்வாக்கு ஓங்கியிருந்ததின் காரணம் ஒழிய வேறு ஒன்றும் இல்லை . தமிழர்கள் பொங்கல் விழாவில் ஏன் இறந்தவர்களுக்கு படையல் செய்ய வேண்டும்? .அதற்குத்தான் அவர்களின் நினைவு நாள் உள்ளதே? அப்பொழுது படையல் போடலாமே? .
பெண் தான் உலகை படைத்து, காத்து அழிக்கும் சூட்சமம்.
வெள்ளியூர் முருகன் தமிழர்கள் தீபாவளிக்கு இறந்தவர்களுக்கு படையல் போடுவதை நான் கண் குடாக பார்த்திருகின்றேன் . அவர்களுக்கு என்ன என்ன பிடிக்குமோ அனைத்தும் வைத்து படையல் போட்டதை பார்த்திருகின்றேன் . நான் சொல்வதை பலரும் ஒப்புகொல்வார்கள் என்று நினைக்கிறன் . இறந்தவர்களுக்கு நினைவு நாள் இருக்கும் போது தீபாவளிக்கு படையல் போடுவது ஏன்?
திபாவளி அமாவாசையில் வருவதால் இறந்தவர்களுக்கு படையல் போடுவது வழக்கத்தில் உள்ளது மங்கையே….
தமிழர் நாட்டில் ஏறக்குறைய 180 ஆண்டுகள் தமிழர் அல்லாதவர் ஆட்சியில் இருந்ததால் திபாவளி தலை தூக்கிவிட்டது அம்மையே…..
தமிழர்களுக்கு எதிரான இது போன்ற திட்டமிட்ட சதிகளை திருத்தம் செய்ய குறைந்தபட்சம் இன்னும் ஒரு 50 ஆண்டுகளாவது பிடிக்கும் என்பது என் கருத்து….
மங்கை தமிழர் அல்ல என்பது தெரியும் ….மேலே வெளியூர் முருகன் மற்றும் கரிகாலன் சொன்னது புரிந்து கொள்ள கூடிய விளக்கங்கள் …
படையல் – தீபாவளி உங்கள் கதைகள் படி, இறந்து போன “அரக்கனுக்கு” எடுக்கும் விழா தானே ஆதலால் இறந்தவர்களுக்கு படையை போடும் முறையை ஆரம்பத்தீர்கள்.
வடநாட்டு தீபாவளி – கண்ணன் வாடா நட்டான் உருவாக்கிய கடவுள் தானே , கண்ணனை முன்னெடுத்தி தானே இது கொன்னட படுகிறது , ஆரிய மயத்தின் மூலமே வடநாடு தானே ? ஆரியன் தன் தெய்வங்களை முன்னெடுத்தி தானே தென் நாட்டை இன்னும் ஆண்டுகொண்டிருகிறான் !!!!!
இதுதான் தமிழர்கள் தீபாவளி கொண்டாடுவதன் காரணம்
கரிகாலன் சொன்னது போல் இன்னும் அதிக பட்சம் 50 ஆண்டுகளில் தமிழன் மீண்டு வருவான் (கண்டிப்பாக அதற்குள்ளாக )
ஆரியர்களின் சூழ்ச்சி சூரியர்களின் சூழ்ச்சி என்பதெல்லாம் பிரிட்டனின் ஏமாற்றுவேலை..இந்துக்களை முடமாக்க வேண்டும் என அன்றைய மார்க்ஸ் மூலர் என்ற புண்ணியவான் செய்த லீலை..வழக்கம் போல எதையும் யோசிக்காமல் இன்றுவரை அவன் சொன்னதை பிடித்துகொண்டு இவர் தெலுங்கு கடவுள் >அது பார்பனர்களின் தெய்வம் என பிரித்தாண்டு வருகிறோம் ???
தம்பி பொன்ரங்கன் இன்னும் நிறைய எழுத வேண்டும். தமிழனுக்குத் தன்மானம் பீரிட்டு எழும்படி இன்னும் எழுத வேண்டும். படிப்பவர்கள் சந்தேகத்திற்காக மட்டுமே கேள்வி கேட்கலாமே தவிர ஆரியக்கூத்தாடுவதற்காக குதிக்கக்கூடாது. இங்கே முன்வைக்கப்படும் கருத்துகளில் உண்மை இருக்கிறதா? இல்லையா? என்பதே கேள்வியாக இருக்க வேண்டுமேயன்றி வெள்ளையன் சொன்னான், கருப்பன் சொன்னான். அதை நம்பக்கூடாது என்பது வாதமாகாது. எப்பொருள் எத்தன்மைத்து ஆயினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்பது அறிவு என்பது வள்ளுவனின் வாக்காகும். அதன்படி நடப்பது தமிழர்தம் கடமையாகும். ஒரு தமிழன் தமிழர்களின் எழுச்சிக்காக எழுதும்போது தமிழரல்லாதார் சற்று ஒதுங்கி இருப்பது நகரிகமாகும். தமிழினம் பல பண்பாட்டுப் படையெடுப்பிற்குப் பின்னும் தளராமல் நிலைபெற வேண்டும் என்பதே எமது விருப்பம். அதற்காக எழுதக்கூடிய தமிழ் இளைஞர்கள் நிறைய எழுத வேண்டும். பொன்ரங்கனுக்கு வாழ்த்துகள்!
தமிழன் கூற்றுக்கு நானும் உடன்படுகிறேன் . தமிழர் அல்லாதவர்கள் விலகி இருப்பதே நாகரீகம். சைவ அல்லது சிவ வழிபாடு தமிழருடையது இதில் ஆரியனுக்கு சம்மதமே இல்லை.
பிழைக்க வந்த ஆரிய நாடோடி நா…..ள் எவ்வாறு சைவ சமயத்தில் நுழைந்து பின்னாளில் அனைத்தையும் தன் வசம் ஆக்கினான் என்று எல்லோருக்கும் தெரியும்…..
நாங்கள் எங்களுடைய விழாக்களை பற்றி பேசுகிறோம் மற்றவர்கள் மூடிக்கொண்டு இருக்கவும்
வழிபாட்டில் பேதம் இல்லை என்பதை நாம் முதலில் உணரவேண்டும். வடநாட்டுக்காரன் தென்னாட்டுக்காரன் என்று நாம் பிரித்து பேசுவது தகாத செயலாகும். வழிபாடு என்பது எல்லோருக்கும் பொதுவானது. கருத்துக்கு எதிர்பு இருக்குமானால் மன்னிக்கவேண்டும்.
தலைப்பு தமிழர் பண்பாடு நாகரிகத்தை பற்றிய தகல்வல்கள் பரிமாற்றம்,வடவனுக்கு இங்கு என்ன வேலை? இது நாள் வரை தென்னவன் முதுகில் சவாரி செய்தது போதும் இனி ஆரிய கூத்து செல்லாது!
பிலிபிட்: //’ஜல்லிக்கட்டு போட்டி நடத்துவது மேலை நாட்டு கலாசாரம். அந்த கலாசாரத்திற்கு எதிரானது பாரதிய ஜனதா. ஜல்லிக்கட்டுக்கு உச்ச நீதிமன்றம் தடை விதித்துள்ளது வரவேற்கத்தக்க நடவடிக்கை,” என, மத்திய மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத் துறை அமைச்சர் மேனகா கூறினார்.
தமிழகத்தின் சில பகுதிகளில், பொங்கல் பண்டிகையை ஒட்டி, ஜல்லிக்கட்டு போட்டி நடத்தப்படுவது வழக்கம். இந்நிலையில், விலங்கு களை காட்சிப்படுத்தும் பட்டியலில், காளையை சேர்த்து, 2011ம் ஆண்டு, மத்திய அரசு அறிவிப்பு வெளியிட்டது. இதைஅடுத்து, ஜல்லிக்கட்டு நடத்த, உச்ச நீதிமன்றம் தடை விதித்தது. ஆனால், ‘தமிழகத்தில், ஜல்லிக்கட்டு நடத்த அனுமதிக்க வேண்டும்’ என, அரசியல் கட்சிகளும், பல்வேறு அமைப்புகளும் வலியுறுத்தி வருகின்றன; போராட்டமும் நடத்துகின்றன. இந்தக் கோரிக்கை வலுப்பெற்றதை அடுத்து, ஜல்லிக்கட்டுக்கு விதித்த தடையை நீக்க வேண்டும் எனக்கோரி, உச்ச நீதிமன்றத்தில், தமிழக அரசு சார்பில், மறுஆய்வு மனு தாக்கல் செய்யப்பட்டு உள்ளது. அதேநேரத்தில், விலங்கு களை காட்சிப்படுத்தும் பட்டியலில் இருந்து, காளையை நீக்குவது தொடர்பாக, மத்திய வனம் மற்றும் சுற்றுச்சூழல் அமைச்சக அதிகாரி களுடன், தமிழக அரசு அதிகாரிகள் ஆலோசனை நடத்தினர். ஆனாலும், முடிவு எட்டப்படவில்லை.
இந்நிலையில், விலங்கு கள் நல ஆர்வலர்களில் ஒருவரும், மத்திய மகளிர் மற்றும் குழந்தைகள் நல மேம்பாட்டுத் துறை அமைச்சருமான மேனகா, தன் பிலிபிட் லோக்சபா தொகுதியில் நேற்று கூறியதாவது: ஜல்லிக்கட்டு போட்டி நடத்துவது மேற்கத்திய கலாசாரம். மேற்கத்திய கலாசாரத்திற்கு எதிரானது பாரதிய ஜனதா. அதேநேரத்தில், ஜல்லிக்கட்டுக்கு உச்ச நீதிமன்றம் தடை விதித்துள்ளது வரவேற்கத்தக்கது. ஜல்லிக்கட்டு விளையாட்டால், விவசாயிகளுக்கு மிகவும் பயனுள்ள விலங்குகளான காளைகள் மற்றும் பசுக்கள் கொல்லப்படுகின்றன. அத்துடன், ஜல்லிக்கட்டின் போது, மனிதர்களும் உயிரிழக்க நேரிடு கிறது. மகர சங்கராந்தி பண்டிகையின் போது, தாவரங்களையும், மரங்களை யும் வழிபட வேண்டும்.
ஆனால், தமிழகத்திற்கு அதற்கு மாறாக, ஜல்லிக் கட்டு நடத்தப்பட்டு, காளைகளுக்கு கொடுமை கள் இழைக்கப்படுகின்றன; இது, தவறானது.இவ்வாறு, மேனகா கூறியுள்ளார். //
இது தமிழனின் கலாச்சாரத்திற்கெதிராக இன்றைய வடவரின் பண்பாட்டு சதிச்செயல். வாய்கூசாமல் தமிழனின் வீர விளையாட்டை மேலைநாட்டு கலாச்சாரம் என்கிறாள் இந்திராகாந்தியின் சின்ன மருமகள் மேனகா. இந்த கலாச்சாரம் பாரதிய ஜனதாவிற்கு எதிரானதாம். நமது பொங்கலும் அவர்களின் மகர சங்கராந்தி பண்டிகையையும் முட்டாள்தனமாக இந்த வடவனின் மகள் ஒன்று என்பதுபோல் சொல்லும் இந்த பேதை , மரம் செடி கொடிகளை வணங்க வேண்டும் என தமிழனுக்குப் புத்தி சொல்ல முயற்சிப்பது அறிவின்மையாகும். இந்த முட்டாள்களின்… தமிழ் கலாச்சாரத்திற்கு எதிரானவர்களின் ஆட்சி தமிழ் நாட்டில் மலரவேண்டும் என மானமே இல்லா பேடித்தமிழர்களில் சிலரும் முயற்சி செய்வதும், அதற்கு தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் சிலவும் ஆதரவு தருவது மன்னிக்க முடியாத குற்றமாகும்.
ஐயா தமிழர்களே செந்துள் ஆதிஸ்வரன் ஆலயம் இப்போது ஆரியமயம் .
ஆதிச்வரனுக்கு ஜெ என்கிறான் , தமிழில் தேவாரம்பாடுவதை திராவிட சொச்திரமவதாரிய என்கிறான் .. பெரியசத்தமா நீசபாசைல காட்டுகத்து கத்துகிறான் … சைவபெரியோர்களே தமிழ் தலைவர்களே தயவுசெய்து கவனியுங்கள் .. நாமும் துணைநிப்போம்..
ரத்னா NN > உங்களின் கருத்தை ஆமோதிக்கிறேன் //
இறைவனை மொழி வெறியால் கூறு[போட நினைக்கும் யாராக இருந்தாலும் அதன் பிரதி பலனை பெறுவார்கள் // பிரிட்டன் நாட்டு “மார்க்ஸ் மூலரின் ” ஆரிய திராவிடம் வேறுபாடு என்பதே கட்டுக்கதை என்று ஆய்வாளர்கள் கூறியும் > இன்னமும் அதை பிடித்து ஆடிக்கொண்டே இருகிறார்கள் ///
இந்து தர்மன் என்ன “ஆப்பு” பத்திரிகையில் இருந்து வந்தவரா?.
இப்பகுதியில் பல செம்பருத்தி அன்பர்களின் கருத்துக்களைப் படித்தேன். அதில் முதலாவதாக மங்கையின் கருத்தானது தமிழரின் புத்தாண்டு எது?. கடந்த 2 நாட்களுக்கு முன்பு காலையில் மகிழுந்தில் பயணம் செய்யும் பொழுது மின்னல் ‘FM’ -ல் மலாயா பல்கலைகலகத்தைச் சார்ந்த முனைவர் சிவபாலன் என்பார், தமிழர் புத்தாண்டைப் பற்றி விளக்கி கொண்டிருந்தார். அவரின் கருத்து, தமிழ் புத்தாண்டு என்பது தமிழர் வாழ்க்கை முறையின் அடிப்படையில் ஆன கால கணிப்பைக் கொண்டு தை முதல் நாள் அவர்தம் புத்தாண்டு என்று நிர்னையைத்துக் கொண்டனர். இது தமிழர் வாழ்க்கையை ஒற்றியது என்றார். இதுவே, திருவள்ளுவர் ஆண்டின் பிறப்பும் என்று ஏற்றுக் கொண்டு தமிழர்களுக்கு அவர்தம் வரலாற்றைக் காட்ட ஒரு தனி நாட்காட்டி கணிக்கப் பட்டது. கல்தோன்றி மண் தோன்றா காலத்தே தோன்றிய தமிழன் என்றால் அவர்தமக்கு ஒரு வரலாற்று நாட்காட்டி வேண்டாமா?. அதை விட்டு ஆங்கிலேயர் கொடுத்த நாட்காட்டியான கி.மு., கி.பி. என்று கூறிக் கொண்டிருந்தால் அது தமிழருக்கு ஓர் இழுக்கு ஆகாதா?. அதனாலே, தமிழறிஞர்கள் பலர் ஒன்று கூடி நிர்னைத்த ஒன்றை, அவர்களை விட தமிழர் வரலாற்றிலும், பண்பாட்டிலும் குறைவு கொண்ட நாம், அவர்களின் கால நிர்னைப்பை அவமதிப்பது தமிழர்களாகிய எங்களுக்கு அவமதிப்பாகாதா?. தமிழர் அல்லாதோர் தமிழர் புத்தாண்டை ஏற்றுக் கொள்ள மறுப்பதால் அவர்களுக்கு நாம் ஏன் செவி சாய்க்க வேண்டும்?. அவர்கள் யார் தமிழர்களுக்கு எது சரி, எது சரியில்லை என்று நிர்னைக்க?. நாங்கள் யாராவது தமிழர் அல்லாதோரிடம் கேட்டோமா, எங்களுக்கு ஒரு வரலாற்று நாட்காட்டியை தயாரித்துக் கொடுங்கள் என்று?. இல்லையே. அதனால் தமிழர் அல்லர் என்று தங்களை அடையாள படுத்திக் கொண்டோர் தயவு செய்து தமிழர்களுக்கு அதிமேதாவித் தனமாக பாடம் புகட்ட கிளம்ப வேண்டாம். இதையே தமிழர் என்போர் தங்களை அடையாள படுத்திக் கொண்டு கேட்டால் அதற்கும் எம்மிடம் தகுந்த பதில் உண்டு. தொடரும்.
அப்படியானால் பஞ்சாங்கத்தின் அடிப்படையில் வரும் சித்திரைப் புத்தாண்டு தமிழர் புத்தாண்டு இல்லையா?. இது அடுத்த கேள்வி?. இதற்கு முனைவர் சிவபாலன் இவ்வாறு கருத்து கூறினார். சித்திரை புத்தாண்டு கோள்களின் மாறுதலுக்கு ஏற்ப வந்த காலக் கணிப்பைக் கொண்டு நிர்ணைக்கப் படுவது என்றார். அதாவது, இவ்வாறு கோள்களின் காலக் கணிப்பைக் கொண்டு எழுதப்படும் பஞ்சாங்கம் கூறும் புத்தாண்டு. இந்த பஞ்சாங்கம் யாருக்கு சொந்தம்?. வேதத்தின் ஒரு அங்கமாக சோதிடத்தை வைத்த ஆரியர்களுக்குச் சொந்தம். ஆரியர்கள் அவர்கள் வாழ்க்கை முறைக்கு ஏற்ற ஒன்றை அவர்தம் காலக் கணிதமாக வைத்து கொண்டால் அதனை தமிழரும் ஏற்றுக் கொள்ள வேண்டுமா?. இல்லை இது எங்கள் தலை எழுத்து என்று தமிழர் அல்லாதோர் சொல்ல வருகின்றீர்களா?. எங்கள் தலை எழுத்தை நாங்களே தீர்மானித்துக் கொள்ள எங்களுக்கு உரிமை உண்டு அல்லவா?. நாங்கள் என்ன ஆரியரின் அடிமையா?. அவர்கள் என்ன எங்கள் எஜமானா?. இப்படி இன்னும் நிறைய கேள்விகள் கேட்டுக் கொண்டே போகலாம். அதனால் எவ்வொரு பயனும் இல்லை. சுருக்கமாக, மானமுள்ள தமிழா உன் பண்பாட்டைப் பார், அதனை போற்று. பிறர் பண்பாட்டை அவர்களே பார்த்து கொள்ளட்டும். முனைவர் சிவபாலன் சொன்னது ஒன்றும் புதுமை இல்லை. இதையே பலரும் சொல்லி விட்டனர். ஆனால் இந்த தமிழர் அல்லாதோருக்கு ஏனோ இதனை ஏற்றுக் கொள்வது பெரும் கசப்பாக இருக்கின்றது. இதற்க்கு மேல் தமிழரின் புத்தாண்டு தை முதல் நாளா, சித்திரை முதல் நாளா என்று கேள்விக் கேட்டால் இவ்வாறு எல்லாம் விளக்க வரத்து. அவர்களுக்கு வேற்றொரு மொழியில் விளக்க வேண்டி வரும். பரமத்துக்கே சிவமான சோதிடகாரருக்கு ஒரு நல்ல நாள் வரட்டும். அவருக்கும் சில நல்ல பாடங்களைச் சொல்ல வேண்டும். மீண்டும் தமிழரின் நவநாகரீகமான பண்பாட்டைப் பற்றி சிந்திப்போம்.
தமிழாண்டு ,ஆரியனின் சித்திரை ஆண்டு, ஆங்கில ஆண்டு, சீனன் ஆண்டு இன்னும் உலகில் உள்ள எல்லா இனத்தவரின் ஆண்டுகளும் நடைமுறை தெளிவால் வந்தவையா ? மனிதனின் மத அறிவியலா ? மெஞ்சான சித்தமா ? யாரெலாம் இந்த உலகியல் கிரகங்களில் கணக்கியல் நிபுணர்கள் என்று பார்க்க வேண்டும். குறைந்த பட்ச 50,000 ஆண்டுகளுக்கு முன் பழமை வாய்த்த தமிழன் இனத்தின் 100,000 ஆண்டுகால பழமையை ஆரியன் புளுகி புளுகி பூந்த கதை என்ன என்று சில தெளிவுகளை வைத்துள்ளேன்.
தமிழன்ரின் முக்கழக முச்சங்க கால கலபியளுக்கு முன் முதலிரண்டு வரலாற்றில் தமிழில் வேறு எந்த கலப்பும் இல்லாத ஒளி வீச்சு நடந்துள்ளது இதன் காலம்தான் தொல்காப்பியம் காலம் உருவாகி உள்ளது. இதில் எப்படி சமஸ்கிரதம் என்ற தெய்வ மொழியாக உட்புகுதல் தெய்வீக ஹிந்டூசியம் புளுகள் நடந்துள்ளது என்ற தெளிவும் நாம் ஆராய உள்ளோம். தமிழக தமிழர்களின் நாகரீகத்தை தமிழ் மொழிவழிகூத்து தழுவிக்கொண்ட ஆரிய மக்களின் கூத்து எப்படி ஆரிய கூத்தானது ? ஆரியம் வடுகம் என் வேறு பிரித்து வடபுலத்து அரச வழியினர் சம்ஸ்கிருத ஆதிக்கம் “சித்திரை ஆண்டு ” வந்த வழிகளை காண உள்ளோம்.
இதைக கொஞ்சம் தேடிப்படித்து புரிய பாருங்கள் !
“பல்லுயிரும் பல் உலகும் படைத்தளித்து துடைக்கினும் …ஆரியம் போல உலக வழக்கு அழிந்து ஒழிந்து ” பிறகு தொடர்கிறேன் அதுவரை மொழி மரபு திரிபுகள் இனத்தை அதன் மரபணு சக்தியை ஓட ஓட அடிக்கிறது ..நின்று நிதானமாக சொல்வோம்.
(காத்து) காத்திருப்பதாலும் இருப்பதிலும் சுகம் உண்டு. AWAS !
தமிழனின் பெருமையை மீட்டெடுக்க ஒரு புதிய படை கிளம்பிவிட்டது என்பதைக்காண மகிழ்ச்சியாக இருக்கிறது. தமிழன் தேனீயின் எழுத்தில் நாளுக்கு நாள் மெருகேறிக்கொண்டிருக்கிறது. நல்ல தமிழ். அழகான வாதம். தொடரட்டும் தேனீயின் எழுத்துகள்! பொன்ரங்கனின் அறிவுபூர்வமான கருத்துகள், முத்து முத்தான செய்திகளைத் தேடித்தரும் பாங்கு புதிய தலைமுறைகளுக்கு பயன் நல்கட்டும். இவர்களுக்கும், இவர்களைப்போல ஆழமான கருத்துகளை தொடர்ந்து பதிவிடும் தளமாக இது விளங்கட்டும்.
ஆங்கில புத்தாண்டை கொண்டாடுபவர்கள் அதை சிறப்பாக கொண்டாடட்டும். தமிழ் புத்தாண்டை கொண்டாடுபவர்கள் அதை கொண்டாடட்டும். இங்கு நமக்கு என்ன தேவை என்றால், உதாரணமாக, தமிழ் புத்தாண்டை நாம் வழக்கமாக கொண்டாடும்போது அதற்கான பலாபலங்கள் முன்கூட்டியே நமக்கு தெரியவரும். அதாவது, ‘ யானை வரும் பின்னே மணியோசை வரும் முன்னே ‘ என்பதுபோல். எதையும் நாம் உடன்பாடோடு சிந்தித்தால் நமக்கு கிடைப்பது நன்மையே!
தமிழர் என்றோர் இனமுண்டு அவர்க்கு தனியே ஒரு குணமுண்டு. எல்லோரும் வாழவேண்டும் அவர்கள் இன்புற்றிருக்க வேண்டும் என்பதே தமிழரின் தாரக மந்திரம். இந்த தாரக மந்திரம்தான்சீனதேசத்தின் வானொலியில் தமிழர்களைப்பற்றி பெருமையாக பேசவைத்திருக்கிறது. இதுவே தமிழர்களுக்கு கிடைத்த பெரிய வெற்றி. உலகத்தில் எந்த இனமும் கூறாத சொல்லை நாம் கூறினோம் என்று பெறுமைக்குரியவர்கள் நாம்.
எம்மதமும் சம்மதம் என்பதால் நாம் தாழ்ந்து விடவில்லை. தாழ்வாக உள்ளதெல்லாம் தாழ்ந்தா இருக்கின்றன? இல்லையே! ‘தாள்வினும் தாள்வினன் ‘ இறைவன் இல்லையா? அவன் கருணைக்கு நிகர் யார்? நாம் அவனை வணங்குவதற்குமுன் அவன் நம்மை வணங்கிவிடுகிறான். கருணையின் வடிவமே இறைவன்.
இரத்தின தமக்கையாரே தங்களின் கருத்து அருமை. வெள்ளைக்காரராக வாழ விரும்புவோர் ஆங்கில புத்தாண்டை கொண்டாடட்டும், ஆரியராக வாழ விரும்புவோர் சித்திரைப் புத்தாண்டைக் கொண்டாடட்டும், தெலுங்கராக வாழ விரும்புவோருக்கு யுகாதி புத்தாண்டைக் கொண்டாடட்டும். மலையாளிகளாக வாழ விரும்புவோர் விஷு புத்தாண்டைக் கொண்டாடட்டும் . இதெல்லாம் அவரவர் உரிமைகள்தானே. அவ்வாறே தமிழர், தமிழராக வாழ அவர்தம் புத்தாண்டாக தை முதல் நாளான பொங்கல் புத்தாண்டை கொண்டாடுவோம். இது நமது உரிமை. அதை மறைக்கவோ, மறுக்கவோ தமிழர் அல்லாதோருக்கு உரிமை உண்டா?.
வருசத்தில 365 நாளையும் எதோ ஒரு தினமா கொண்டாடிகிட்டே இருங்க……
“எம்மதமும் சம்மதம்” என்று சொல்பவனுக்கு எந்த மதத்தைப் பற்றியும் ஒன்றும் தெரியாது. அதனால்தான் அந்த சொற்றொடர் சொல்லும் வழக்கம் வந்தது. அதை சொல்லிச் சொல்லியே இன்று பல தமிழர் சமயம் மாறி போய் விட்டனர். அந்த வார்த்தையால் பயன் அடைந்தவர் என்னவோ தமிழர் அல்லாதவரே.
ஆங்கிலப் புத்தாண்டை நாம் எதிர் கொள்ளும்போது இந்நாட்டில் அனைத்து தமிழ் பத்திரிகைகளிலும் புத்தாண்டுப் பலனை பக்கம் பக்கமாக வியாபாரத்திற்க்காக போடுவதில்லையா?. அப்ப போடுவதும் அதற்குப் பின் போடுவதும் ஒரே பஞ்சாங்கத்தைக் கொண்டுதானே போடுகின்றனர்?. அப்புறம் எதற்கு ‘யானை வரும் பின்னே மணியோசை வரும் முன்னே’ என்ற டயலாக்கு?. அப்படிப் பார்த்தால் ஒருவர் பிறந்த போதே அவர்க்கு கணித்த கால ஜோதிடம் என்னாவது?. அதிலும் இன்று நாம் கணினி உலகத்தில் வாழ்ந்துக் கொண்டிருக்கின்றோம். உங்களுக்கு எத்துனை வருஷ பஞ்சாங்கம் முன்னுக்கும் பின்னுக்குமாக வேண்டும் சொல்லுங்கள். அனைத்துக்கும் மென் பொருள் (‘soft ware’) உள்ளது. அவற்றை எல்லாம் புத்தாண்டு பிறக்கும் போதுதான் தெரிந்துக் கொள்ள வேண்டும் என்ற நிலையும் அவசியமும் இன்று இல்லை. நாம் 21-ம் நூற்றாண்டில் வாழ்கின்றோம் என்பதை மறந்து விட்டு பேசுகின்றீர்களே இரத்தின தமக்கையாரே!. அவ்வாறே நமது பரமசிவம் அண்ணாச்சியும் மறந்து விட்டு பேசுகின்றார். நாங்கெல்லாம் மாறி விட்டோம். நீங்க எப்ப மாறப் போறீங்க?.
திராவிடம் எனும் பூர்வீக பூமியில் தமிழே தாய்மொழியாக இருந்ததற்கான ஆதாரங்களை மொழியியல் அறிஞர்கள் முன்வைத்துள்ளனர். அக்காலத்திலே மலையாளம்,கன்னடம்,தெலுங்கு போன்ற இன்னும் சில மொழிகளெல்லாம் தமிழின் வடிவத்தில் வட்டார மொழிகளைப்போல் கிளை மொழிகளாக இருந்திருக்கன்றன. தனி எழுத்துகள் இல்லை.எல்லாம் தமிழ் எழுத்தகளே. தமிழை மூல மொழியாக கொண்டு தமிழர்களாகவே வாழ்ந்துள்ளனர். கலாச்சாரத்திலும் சரி, பண்பாட்டிலும் சரி, பழக்க வழக்கங்களிலும் சரி, பெரிய வேறுபாடுகளே இல்லை. உதாரணத்திற்கு , இன்றைய தமிழகத்திலேயே ஒரு பகுதியில் பேசும் தமிழ் மொழிக்கும் மற்ற பகுதியில் பேசப்படும் தமிழுக்கும் வேறுபாடுண்டு உச்சரிப்பிலே, சொற்களிலே. மொழிக்காவலர்கள் சற்று அயர்ந்திருந்தால், கடைசியாக நம்மைவிட்டுப் பிரிந்துபோன சேரத்தமிழனைப்போல் இன்னும் பல மொழியினராக தமிழகம் இன்னும் சுருங்கிப்போக வழி ஏற்பட்டிருக்கும். இந்த அளவிலாவது தப்பித்தது தமிழர் இனமும் நிலமும். தனி இனமாக, இந்தியாவின் பூர்வீக இனமாக, திருவிடமாக இருந்த தமிழர்களின் நாட்டை ,மற்றவர்களால் திராவிடம் என்று பகரப்பட்ட நிலப்பரப்பு ஏன் உடைந்து சுருங்கி கன்னடம் என்றும், ஆந்திரம் என்றும், மலையாளம் என்றும் ஆனது?
தமிழர்களின் திருவிடத்திற்குள்ளே ஆரியர்களின் ஊடுருவலும், அவர்களின் போதகமும், மன்னர்களுக்கு ராஜகுருக்களாக இருந்துகொண்டு ஆட்டுவித்தலில் சிக்கிய திருவிடமாகிய திராவிட மன்னர்கள் ஆரிய போதகத்தில் மயங்கியதால் ஆரியனாகிப் போனார்கள். உடல்மாத்திரம் தமிழரின் வடிவம் .உள்ளமோ ஆரியனாக மாறியதால் சமஸ்கிருதமாகிய ஆரிய மொழிக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு தமிழ் மொழி புறக்கணிக்கப்பட்டதால் அல்லது ஓரங்கட்டப்பட்டதால் திருவிடத்தில் வழக்கிலிருந்த
நற்றமிழும் , வழக்குத் தமிழும், வட்டாரத் தமிழும் சமஸ்கிருதம் எனும் ஆரிய மொழிக் கலப்பால் (இன்று வழக்கில் ஆங்கிலம், மலாய்மொழிச் சொற்களை கலப்பதைப்போல்) சிதைந்தது. இதற்கு யார் மூல காரணம் ? அதிகாரத்தில் இருந்த , ஆரியத்தை ஏற்றுக்கொண்டு ஆரியனாக வாழ்ந்த, ஆரிய வர்ணாசிரம வழக்கப்படி வாழ மக்களைக் கட்டாயத்திற்குள்ளாக்கிய தமிழர்களின் திருவிடத்தையாண்ட திராவிட மன்னர்களே.
இதன் காரணத்தால் கேரளம், கன்னடம், ஆந்திரம் போன்ற நிலப்பரப்பில் வாழ்ந்த , வட்டாரத் தமிழும், கொடுந்தமிழும் பேசிய பூர்வீகத் தமிழர்கள் , (இன்றைய தமிழகத்தின் வட்டார மொழிபேசும் மக்களைப் போன்றவர்கள்) பெரிய அளவில் சமஸ்கிருத மொழிக்கலப்பிற்கு ஆளாகினர் . ஆரிய வர்ணாசிரம்ப்படி ஒட்டு மொத்த தமிழர்கள் கல்விகற்கும் வாய்ப்பினை இழந்தனர். ஆரியர்களின் இனக்கலப்பு பெரிய அளவில் ஏற்பட்டு திராவிட நாட்டுப் பெண்களைக் கூடி புதிய சமுதாயத்தை உருவாக்கினர்.இது கேரளம்,ஆந்திரம்,கன்னடம் போன்ற திருவிடத்தில் மதபோதகத்தைக் கொண்டே திட்டமிட்டு நடைபெற்றது. அதற்கு மதம் பக்கபலமாக இருந்தது. ( உதாரணத்திற்கு, கேரள நம்பூதிரிகளின் வரலாற்றையும், அவர்களின் பழக்கவழக்க வரலாறே சாட்சி பகரும். )
இதன் காரணமாக, அந்தந்த பகுதிகளில் ஆரிய இரத்தத் தொடர்பான மக்கள் பார்ப்னியர்கள் எனும் சமூகம் உருவானது. இந்த சமூகத்தினர் திராவிடக் கலப்பினமானாலும் தங்களை பூர்வீக திராவிட தமிழர்களைவிட மேலானவர்களாக எண்ணிக்கொண்டு, ஆரிய தகப்பன் வழிக்கு முக்கியத்துவம் கொடுத்து , தங்களை திராவிட மக்களைவிட வேறுபட்டவர்களாக காட்டிக்கொள்ள நடையுடை பாவனை எல்லாவற்றிலும் ஆரியத்திற்கு முக்கிய்துவம் கொடுத்ததினால் கன்னடத்திலே கன்னட பிராமனர்கள் என்றும், ஆந்திராவிலே தெலுங்கு பிராமனர்கள் என்றும், தமிழ்நாட்டிலே பிராமனர்கள் என்றும் , ( ஏன் தமிழ்நாட்டு பிராமனர்கள் தங்களை தமிழ் பிராமனர்கள் என்று சொல்லாமல் தவிர்கிறார்கள் என்றால் தமிழர்கள் இந்த நிலத்தின் பூர்வீகத்தையும், மொழியையும் விட்டுக் கொடுக்காமல் ஆரியத்திற்கெதிராக எப்போதும் போராடுவதால், தமிழை நீசபாஷை என்றும், தூயத் தமிழனை நீசன் என்றும் வகைப்படுத்தி தாழ்த்தியதால் தமிழ் பிராமனர் என்று தங்களை விளிப்பதை தவிர்த்தனர்.) கேரளத்திலே மலையாள பிராமனர்களும் ஆனார்கள்.
ஆட்சி அதிகாரம், மதப்பாதுகாப்பு, மனுஸ்மிருதியின் வர்ண பாதுகாப்பு, கல்வி கற்கும் பிரத்யேக உரிமை இவைகளைக் கொண்டு திராவிட நிலப்பரப்பிலே , சமஸ்கிருத்த் தாக்கத்திற்குப் பெருமளவில் ஆளான பகுதியில் அங்கங்குள்ள பார்பனர்கள் எழுத்தகளை உருவாக்கி, புதிய இலக்கணங்கள் எழுதி , பண்டைய தமிழனைத் தெலுங்கனாகவும்,கன்னடனாகவும், மலையாளியாகவும் பிரிந்திட வழிவகுத்தனர். ஆனால் தமிழ்நாட்டிலோ அவ்வாறு மொழியைச் சமஸ்கிருதம் சிதைக்கும் முன்னம் பச்சைத்தமிழர்கள் விழித்துக் கொண்டார்கள். அதனால்தாம் நாம் இன்னும் பெருமைப்படும் அளவிற்கு தமிழ் ஓரளவிற்கேனும் வாழ வழி ஏற்பட்டுள்ளது. அதற்காக உயிரை கொடுத்த சான்றோருக்கு நாம் நன்றி சொல்ல கடமைபட்டுள்ளோம். தமிழனின் பண்டைய வரலாற்றை, தமிழனுக்கெதிராக பார்பனியம் நடத்திய பண்பாட்டு படையெடுப்பை உணர்ந்து தெளிந்ததினால் இன்று தெலுங்கராக்கப்பட்ட,மலையாளியாக்கப்பட்ட, கன்னடராக்கப்பட்வர்களில் சிலர் உண்மை அறிந்து தங்களின் பூர்விக தமிழ்மொழிவாழ இன்றைய தமிழரோடு கைகோர்த்து தமிழைக் காப்பாற்றியுள்ளனர். அவர்களுக்கும் நாம் நன்றிக்கடன் பட்டுள்ளோம்.
இப்போது உள்ள தமிழர்களும் சரி, இந்து தாசர்களும் சரி, சமஸ்கிருத விசுவாசிகளும்சரி, ஏன் உண்மையான உணர்வு உள்ள தமிழன் வர்ணாசிரமத்தையும், மனுநீதியையும், சமஸ்கிருத மொழியையும் வெறுக்கிறான் என்பதை புரிந்துகொள்ள வேண்டும். ஒரு இன அழிவுக்கு, ஒரு மொழியழிவிற்கு, ஒரு கலாச்சார சீரழிவிற்கு, ஒரு இனத்தின் அரசியல் அதிகார அழிவிற்கு இந்துமத வர்ணாசிரம கொள்கையும், அதை அடிப்படையாகக்கொண்டு இயற்றப்பட்ட சாஸ்திரப் புராணங்களும், பார்பனியத்தை ஓங்கிப்பிடிக்கும் ஓரினத்திற்கொருநீதி சொல்லும் வைதீகமும் மனுநீதியையும், காரணமாக பல நூற்றாண்டுகளாக இருந்ததினாலும், இன்றும் தமிழின அழிவிற்கு காரணமாக இருப்பதினாலும் எதிர்க்கிறோம். மற்றபடி அந்தக் கோளாறான த. த்துவங்கள் மீதோ , சமஸகிருத மொழியின்மீதோ, பார்பனியத்தின் மீதோ தனிப்பட்ட காரண காரியம் ஏதும் உண்மையான தமிழர்களுக்கு இல்லை. முன்னைய சரித்திரமும், பார்பனியர்களின் ஆதிக்க குணமும், எங்களைப் போன்றோரை சந்தேகிக்கவும், எச்சரிக்கையுடன் இருக்கவும் தூண்டுகின்றது. அதன் வெளிப்பாடே தமிழ்ப்பள்ளியில் தமிழ்மாணவர் சேர்க்கையை வழியுறுத்துவது, தமிழர் சமயத்தை மீட்டெடுப்பது, தமிழர் புத்தாண்டை கொண்டாடுவது, தமிழ்வழி வழிபாட்டை ஊக்குவிப்பது, தமிழ் கலாச்சாரத்தை மீட்டெடுப்பது, மத போதகத்தைவிட ஐயனின் திருக்குறளுக்கு முக்கியத்துவம் கொடுப்பது, சாதியத்தை இனங்கண்டு ஒழிப்பது, நல்ல தூயத் தமிழை மீட்டெடுப்பது, காலத்திற்கேற்ப கணிப்பொறிக்கேற்ற வகையில் தமிழ் எழுத்துக்களை பழைமையான தமிழ் எழுத்துவடிவங்களின் பரிமாணத்தை மனதில் கொண்டு புதிய வடிவமைப்பது போன்ற காரியங்களில் ஈடுபடும் போது தமிழரல்லாதார், தமிழ்வாழச் சகியாதார் தயவு செய்து தமிழரிடை சகுனிவேலை செய்யாமல் ஒதுங்கி இருக்க வேண்டுகிறோம். ஏன் என்றால் மிக முக்கியமாக மிஞ்சி இருக்கும் கொஞ்சம் தமிழர்களாவது இன்னொரு மொழிப் பிரிவிற்கும் இனப்பிரிவிற்கும் ஆளாகாமல் இருக்கவேண்டும் என்பதற்காகவே! தேவை ஏற்படின் எழுத்து தொடரும்.
நல்ல விளக்கம் தந்தீர் தமிழரே. புரியுமா தன்மானத் தமிழனுக்கு?.
கணினி காலத்தில் நாம் இருந்தாலும் நாம் என்ன சாகாமலா இருக்கப்போகிறோம்? வரட்சியான பூமியில் வாழ்ந்தவனும் ஒருநாள் சாகிறான் வளப்பமான பூமியில் வாழ்ந்தவனும் ஒருநாள் சாகிறான். இதில் கணினி இருந்தென்ன இல்லாமல் இருந்தென்ன.
கோயில் வழிபாட்டு கலாச்சாரமே மிகவும் உயர்ந்தது. அதை கடைபிடித்ததனால்தான் சமுதாயம் ஒழுக்கமுடன் அன்று இருந்தது. தமிழ்நாட்டு அரசியல்வாதி ஒருவர் சமீபத்தில் ஒரு கேள்வி எழுப்பினார். அதாவது, தமிழ் நாட்டில் தங்கச்சுரங்கம் இருந்ததே கிடையாது. ஆனால் நமது வழிபாட்டுச்சிலைகளை பார்த்தால் எல்லாம் தங்க ஆபரணங்களுடன் இருக்கிறது. இது எப்படி சாத்தியம் என்றார். அவர் இளைஞ்சர்களை இந்த ரகசியத்தை கண்டுபிடியுங்கள் என்றார். இன்னொரு விசயத்தை நாம் தெரிந்து கொள்ளவேண்டும். அமெரிக்காவின் விண் ஆராய்ச்சிக்கழகத்தில் திருநடராஜர் உருவத்தை வைத்திருக்கிறார்கள். அவர்களுக்கு ஒரு சந்தேகம், இந்த உருவத்தில் ஏதோ ஒரு மர்மம் இருக்கிறதென்று. ஆனால் நாம் இதற்கு சொந்தக்காரர்களாக இருந்தும் உண்மையை உணர மறுக்கிறோம். இதுதானே நமது பலவீனம்.
‘கல்லைக்கண்டால் நாயைக்காணோம்; நாயைக்கண்டால் கல்லைக்காணோம்’ என்பது ஒரு பழமொழி. சிலைகளை தெய்வம் என்று நினைத்தால் அது தெய்வம். மாறாக அது ஒரு உருவச்சிலை என்று நினைத்தால் அது ஒரு கற்சிலை. ‘கோயில் இல்லாத ஊரில் குடியிருக்கவேண்டாம்’ என்பது ஆண்டவனை அறியும் பொருட்டே!.
ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு, ஒற்றுமை இல்லையேல் தாழ்வு.
மனிதனை மனிதன் பழிவாங்கும் நோக்கத்துடன் செயல்படும்போது புலன் நம்மைபார்த்து கொக்கரிக்கின்றது. இவன் நம் வலையில் விழுந்துவிட்டான் என்று. இது நமக்கு தெரிவதில்லை. ஆத்திரம் நமது முதல் எதிரி என்பதை நாம் உணர மறுக்கிறோம். அதனால்தான் புலனடக்கம் நமக்கு தேவைப்படுகிறது.
காட்டிலே கொள்ளையடித்து கொலை செய்தவன் ஒருவன் பின்னாளில் ராமயணத்தை படைத்தான். அவன் வால்மீகி. அது ஒரு கதையோ அல்லது இதிகாசமோ என்று நாம் நினைத்தால் அது தவறு. அது முற்றிலும் உண்மை. அதைப்போலவே மகாபாரதமும் பெரியபுராணமும். ‘பொன்முகலி ஆறு, குடிமித்தேவர்’ என்று நண்பன் சொன்னதைக்கேட்டதுமே திண்ணபருக்கு கடந்த காலத்தின் நினைவுகள் வருகின்றன. திண்ணப்பர் கண்ணப்பராகிறார். ‘கற்கின்ற கல்வி சரியான கல்வியாயிருந்தால் கற்கின்ற நூல்வலையில் அகப்படுவானாம் சர்வேஸ்வரன்’ இன்னும் என்ன வேண்டும்?
‘தீதும் நன்றும் பிறர் தற வருவதில்லை; யாது ஊரே யாவரும் கேளீர்’ என்ற பொன்மொழி பாதுகாக்கப்படவேண்டும்.
இரத்தினமே, எங்களுக்குப் பழகிப் போன பழமொழிகளாக பொரிந்துத் தள்ளினால் போரடிக்குது. கொஞ்சம் சுவாரசியமான பழமொழிகளைப் போட்டால் நாங்களும் ரசிப்போம்.
என்னாம்மா!, கணினி இருந்தென்ன, இல்லாமல் இருந்தென்ன என்று சப்புன்னு சொல்லிட்டிங்க!. கணினி இல்லாமல் உலகமே இருண்டு விடும் நிலைக்கு வந்து விட்டோம். கணினி இருந்து உலகத்தையே கைக்குள் அடக்கி விட்டோம். எப்படி மூளை நமது உடலில் ஒரு பகுதியோ அவ்வாறே கணினி நம் வாழ்க்கையில் ஒரு பகுதியாக மாறி விட்டது. கணினி இல்லையேல் மலேசியாகினி எங்கே!.
“அதாவது, தமிழ் நாட்டில் தங்கச்சுரங்கம் இருந்ததே கிடையாது. ஆனால் நமது வழிபாட்டுச்சிலைகளை பார்த்தால் எல்லாம் தங்க ஆபரணங்களுடன் இருக்கிறது. இது எப்படி சாத்தியம் என்றார். அவர்.” அந்த தமிழ்நாட்டு அரசியல்வாதிக்கிட்டே இதே கேள்வியை வேறு ஒரு மடையன் கேட்டிருப்பான். அவனுக்கு பதில் சொல்லத் தெரியாமல் இவன் அதையே பிறரிடம் போட்டு வாங்குகின்றான். இது கூட நாம் புரிந்துக் கொள்ளவில்லை என்பதால்தான் தமிழ்நாட்டு அரசியல்வாதிகள் ஏமாறுகின்றனர், அந்நாட்டு மாக்கள் ஏமாந்து நிற்கின்றனர். தொடரும்.
அந்த அரசியல்வாதியிடம் இப்படி பதில் சொல்லுங்கள். கடந்த 14-ம் நூற்றாண்டு வரையில் தமிழ் நாட்டில் சைவம் ஓங்கி இருக்க தெய்வம் முத்தி நெறிக்கு வழிகாட்டியது. அதனால் அன்று வரை வழிபாட்டுச் சிலைகளுக்கு தங்க ஆபரணம் தேவை இல்லாமல் இருந்தது. அதன்பின், வைதீகம் நமது ஆலயங்களில் கோலோச்சி நம் இறை வழிபாட்டை உலகியல் இன்பத்திற்கு மடை மாற்றியது. அன்றிருந்தே நமது தெய்வங்களுக்கு எல்லாம் தங்க ஆபரண ஆசை வந்து விட்டது. பக்தர்கள் கொடுக்க தெய்வங்கள் அணிந்து அழகு பார்கின்றன !. என்ன எமது பதில் சரியோ?. பிழை என்றால் பரிசுத் தொகையை கொஞ்சம் குறைத்து தந்தாலும் பரவாயில்லை!.
நடைமுறையில் ஒரு சவாலை ஏற்றுக்கொள்ள முடியாதவர்கள் தான்தோன்றித்தனமாக பதில் சொல்வது ‘ முயலை விட்டு காக்கை பின் போன கதையாக’ இருக்கிறது. எதையும் ஆராய்ந்து பார்ப்பதற்கு நேரமில்லாதபோது உண்மை எப்படி புலப்படும்?
சமய நம்பிக்கை எல்லா மதத்தவர்களிடமும் இருக்கிறது. இதிலிருந்து என்ன தெரிகிறது என்றால், இறை நம்பிக்கை எல்லோரிடமும் இருக்கிறது என்றுதானே அர்த்தம். நாம் மற்றவர்களின் கருத்தை ஆராயாமல் பதில் தெரிவிப்பது நம் அவசர குணத்தைக்காட்டுகிறது. ‘அவசரம் ஆயிரம் பொன்னை அழிக்கும்’. பழமொழிகளெல்லாம் ஆராய்ந்து அறிந்த பிறகுதான் சொல்லியிருக்கிறார்கள் நம் முன்னோற்கள். இப்பொழுது உள்ளவர்கள்போல் ‘ஆறாக இருக்காதீர்கள் பாலமாக இருங்கள்’ என்று கூறுகிறார்கள். ‘ஆறில்லா ஊருக்கு அழகு பாழ்’ என்பது ஆன்றோர் கூறியது. ஆக, உறவு பாலமாக இருங்கள் என்றாவது கூறலாமே!
கலிகாலத்தில் இளைஞ்சர்களுக்கு இளைஞ்சர்களே அறிவுரை கூறிக்கொள்கிறார்கள். வானொலியாகட்டும் தொலைக்காட்சியாகட்டும் எல்லாம் வேகமாக இருக்கிறது. ஆங்கிலேயன் தமிழ்மொழியை புல்லெட் லேங்குவேச் என்கிறான். அவ்வளவு வேகமாக போகிறது. காரணம் பொறுமை இல்லாததே! படகு என்று சொல்லிவிட்டு அடுத்த வினாடியே சோரி போட் என்கிறார்கள் படைப்பாளர்கள்.
தானத்திலே மிகவும் சிறந்தது நிதானமே.
ஆண்டவனின் அழகைக்காண கண் கோடி வேண்டும். அன்பு உடையோர் எல்லாம் உடையவர். அன்பினால் மாத்திரமே ஆண்டவனை அடைய முடியும். ஆக, ஆண்டவனைப்பற்றி அறியாமல் படிக்காமல் தான்தோன்றித்தனமாக பதில் கூறுவது ஏற்புடையதல்ல. தர்க்கவாதம் செய்யும்பொழுது கொஞ்சம் கனிவாக எழுதுவோமே. இதுதானே தமிழர் நாகரீகம்!
‘ சைவம் முதலாவது காட்டும் பிற சமயங்கள் தனித்தனி காட்டும்’ என்று வள்ளலார் ராமலிங்க சுவாமிகள் கூறியிருக்கிறார். அந்த உண்மை என்ன என்றாவது நாம் அறிவோமா? அல்லது ‘ திகட சக்கர செம்முகம் ஐந்துலான்’ என்ன என்றாவது அறிய முற்படுகிறோமா? இல்லையே! இதை அறிவதுதான் எப்போ எப்போ.
ஒரு பொருளைக் குறித்து ஆய்வினை மேற்கொள்ள விரும்புபவர்களின் முதல்தகுதியே எந்தக் கொள்கையையும் சார்ந்து இருக்காமல் விடுபட்டு நின்று உண்மைப் பொருளை சுதந்திரமாக அணுகுவதாகும். பலரின் நடுநிலையான ஆய்வினை ஒப்பு நோக்குவதும், ஆய்வினை மேற்கொண்டு உண்மைப் பொருளை காண்பதாகும். ஒரு சார்பாக நாம் எந்தக் கொள்கையை விரும்பி ஏற்றுக்கொண்டுள்ளோமோ அந்தக் கொள்கைக்கு ஆதரவானவற்றை மட்டிலும் தேடி பிடித்து வைத்துக்கொண்டு வாதங்களை முன்வைப்பது நடுநிலையான ஆய்வாகவும் இருக்காது; இருக்கவும் முடியாது.
நமது மதம் என்பதற்காகவும், நமது முன்னோர்கள் சொன்னார்கள் என்பதற்காகவும் அவர்கள் சொல்வதெல்லாம் உண்மையாகிடாது. அல்லது இக்காலத்திற்கும் எக்காலத்திற்கும் பொருந்திடும் என்று சொல்லிட, வாதிட முடியாது . முயற்சிப்பது அறிவுடைமையும் ஆகிடாது.
உண்மையிலேயே இந்தியாவிலிருந்து இங்கு வந்து குடியேறியவர்கள் இந்தியர்களா என்பதை ஆய்வுப் பொருளாக எடுத்து நடு நிலையோடு ஆய்வு செய்தால் ஒரு உண்மை புலப்படும். அதாவது இந்திய நாட்டிற்கு வெளியில் உள்ளவர்களும், தென்னாட்டவர்களுமே இந்தியா என்று விளிக்கிறோம். வடநாட்டார் “ஹிந்துஸ்தான்” என்றே விளிக்கின்றனர். அப்படி என்றால் என்ன பொருள்? ” ஹிந்துக்களின் நாடு” . (இந்துக்களின்). சரி, “இந்தியா” என்றால் என்ன பொருள்? ஹிந்தி + யா = இந்தியா. இந்தி மொழிக்காரர்களின் தேசம். இப்படி விளிப்பதிலே காந்தியும் சரி மற்ற வடநாட்டு சுதந்திர போராட்டவாதிகளும் வெட்கப்பட்டதாகத் தெரியவில்லை?
ஏன் வெட்கப்பட வேண்டும்? என்று இன்றைய ஹிந்துக்கள் எதிர்கேள்வி கேட்பர். நான் கேட்கிறேன் இந்தியா “மதச்சார்பற்ற நாடு” என்று எந்த வகையில் சரியாகும்? ஹிந்துக்களின் நாடு என்று விளித்துக்கொண்டே மதச்சார்பற்ற நாடு என்றால் சுத்தப் பேத்தல் இல்லையா? 1600 க்கு மேல் மொழிகளில் பேசும் , எழுதும் மக்கள் வாழும் ஒரு நாட்டை ஹிந்தி மொழிக்காரர்களின் நாடு எனும் பொருள் வெளிப்படையாகவே கொள்ளும்படி “இந்தியா” ( ஹிந்தியா) எனும் பெயரில் விளிப்பது எவ்வளவு பெரிய அயோக்கியத்தனம் என்பதை மனசாட்சிப்படி எண்ணிப் பாருங்கள்.
இப்படியெல்லாம் குரூரமாக சிந்தித்து ஒரு நாட்டிற்கு பெயரிட எவ்வளவு பெரிய மத, இன வெறியர்கள் ஆட்சி அதிகாரத்தில் இருந்திருக்க வேண்டும்? பல மத மக்கள் வாழும் ஒரு நாட்டை ஹிந்து தேசம் என்று ( ஹிந்துஸ்தான் ) என்று சொல்ல வட நாட்டு மத வெறியனுக்கு எவ்வளவு சூழ்ச்சி இருக்க வேண்டும்?
இப்படிப்பட்ட இழிநிலையை அடையாளம் கண்டு , திருவிடத் தாய்மொழிக்குச் சொந்தக்காரன் வெகுண்டெழுந்து, வீருகொண்டு, இழந்ததை மீட்க உணர்வு கொண்டு செயல்படத் துணிவுகொண்டு தன் சமயத்தை, தன் மொழியை, தன் பண்பாட்டை மீட்க அந்த அயோக்கியர்களின் மதமான வைதீக இந்துமதத்திலிருந்தும், அயோக்கிய வடவர்களாம் வைதீகனின் மொழியான சமஸ்கிருதத்திலிருந்தும், சூழ்ச்சிக்குச் சொந்தக்காரனாகிய வடவனின் ஆபாச கலை, கலாச்சாரத்திலிருந்து விடுபட முற்படும்போது…. , ” எல்லா மொழியும் ஒன்று, எல்லா மதமும் ஒன்று, யாதும் ஊரே யாவரும் கேளிர் என்று சொல்வதும், அவசர குணம் என்பதும், அவசரம் ஆயிரம் பொன்னை அழிக்கும் என்பதும்,ஆறாக இருக்காதீர்கள் பாலமாக இருங்கள் என்று புத்தி சொல்வதும் ஆராய்ந்து பார்ப்பவர்கள் செயலென்று அறிவு உலகம் ஒப்புமா?
தமிழர்களைப் பிழைக்கவிடாமல் எல்லாகாலத்திலும் வஞ்சிப்பது வடவரின் செயலே. வடவனுக்கும் , வடநாட்டு மதவாதிகளுக்கும் பழமொழி சொல்லவும், யாதும் ஊரே என உபதேசம் பண்ணவும், ஆறாக இல்லாமல் பாலமாக இருங்கள், நால்வர்ண போதகத்தை போதித்து இந்தியாவையும் ,இந்தியர்கள் என்று செப்பி ஒட்டு மொத்த மக்களையும் வஞ்சிக்காதீர்கள் என்று இங்கு நம்மை வஞ்சிக்க நமக்கு அறிவுரை பகரும் சமாதானப் பிரபுகளும், மஹாத்துமாக்களும், வைதீகத்தை பற்றிக்கொள்ளத் தூண்டும் சமய அமைதி வெண்புறாக்களும் அங்கு போய் உபதேசிக்க மாட்டார்கள். இவர்களின் சில்லரை வேலையெல்லாம் இளிச்சவாயர்களான தமிழர்களிடம் தானோ?
இரத்தினமே, தங்களின் கருத்து நன்று. அதிலும் நனிநன்று சைவம் \முதலாவது (‘பரம்பொருளைக்’) காட்டும், பிற சமயங்கள் தனித்தனி காட்டும்’ என்ற வள்ளலாரின் பொன்மொழி. இப்பதான் பழமொழிகள் பேசும்படியாக இருக்கின்றது. வாழ்க தங்களின் வழிகாட்டுதல்.