தமிழ் மொழி உலகில் சிறந்த மொழிகளில் ஒன்று என்ற அங்கிராம் கிடைத்து நடந்த( முதல்) உலகத் தமிழ் 9 தாவது ஆராய்ச்சி மாநட்டில் ஒரு உண்மை மறைக்கப்பட்டது.. இது ஒன்பதாவது உலகத்தமிழ் மாநாடா ? உலகத் தமிழ் 9 தாவது ஆராய்ச்சி மாநாடா என்ற இலக்கிய பிழையையும் உங்களிடம் விட்டு விடுகிறேன். ஒன்பதாவது உலகம் எனபது அந்த கிரகத்தில் என்னை மரணிக்க செய்ததது. ஆனால் என் தமிழ் உதிரம் என்னை மீட்டது!
ஆராய்ச்சியில் அடிப்படையில் கோளாரா? மாரிமுத்து PHD தான் பதில் சொல்லவேண்டும்? இதுபோலவே வீரமணியும் பழமையை உளறினார் ? பொய்மையால் கருப்பு மை தடவினார்!
மாநாட்டில் வீரமணி உரையில் தமிழ் மொழி உலகசசிறந்த மொழிகளில் 6வது இடத்தில தமிழ் மொழி உண்டு என்பதை சொல்ல வில்லை ! உலக மொழி அறிஞர்கள் அங்கிகாரம் வளங்கியுள்ளதையும் அதற்கு ஆய்வு செய்த தமிழர் மொழி ஞாயிறு தேவ நேயப் பாவாணர் பெயரையும் குறிப்பிடவில்லை ? மாறாக பிறகு தமிழ் மாநில அரசு கொண்டாடிய செம்மொழி மாநாட்டில் தமிழுக்கு செம்மொழி புகழ் சேர்த்த நிகழ்வை நினைவு படுத்தி செம்மொழி ஆய்வுகளை எழுதிய சுமார் பத்து பேர்களை வாசித்தார். அதில் ஒருத்தர் கூட தமிழன் இல்லை. உலக மொழி அந்தஸ்து பெற 11 இலக்கிய இலக்கண அம்சங்களை ஆய்ந்த மொழி ஞாயரின் குறிப்பை இந்த செம்மொழி காப்பி அடிச்சாங்கள் சொன்னதாக பொய் சொல்லிவிட்டார். தமிழை உலகசசிறந்த மொழி என்றப்பின் அதற்கு செம்மொழி என்று அரசியல் தன மாநாடு நடத்திய திராவிட கூட்டம் தமிழர்களை ஏமாற்ற நடத்திய நாடகம். தமிழக தமிழர்களை தமிழ் என்ற ஆயுதத்தில் ஆளுமையில் அரசியல் அரசு முதலீடு செய்த இதரவ வந்தேறிகள் கூட்டம் இதுவரை நம் தமிழர் மண்ணுரிமையில் தமிழ் பெயரால் தொடர்ந்து அட்டகாசம் செய்கின்றனர்.
இதை அறியாத பேதைமை சாமிவேலு அந்த தெலுங்கர் உரையில் மதி மயங்கி விட்டதாக அறிவிலித்தனமாக பேசினார். என் குருதி கொதித்தது. ஆய்வும் அறிவும் இல்லாத தெலுக்கு ஒடுகாளிகளிகளை வைத்து தமிழ் ஆராய்ச்சி மாநாடுகள் நடத்த வேண்டிய பிச்சை புத்தி ஏன் என்கிறேன். பினாங்கு சர்வதேச தமிழ் மாநட்டில் ராமசாமி வைகோ என்ற தெலுங்கனை வர வைத்து மாநாட்டை நடத்தினார் தமிழகம் சென்ற வைக்கோ தமிழர் தேசியத்தை வசைப்பாடி அதை வளர விட்டக் கூடாது என்று தமிழர்களிடம் சொன்னார்.
மாட்டில் நடமாடிய அனேக தெலுங்கு மலையாள வேடர்களை பார்த்தேன் …தோழர் தமிழர் முத்து சந்திரன் சொன்னது போல முதல் நாட்டியம் சமஸ்கிரத பாட்டுக்கு பாகங்கள் பற்றி இச்சைத்தன ஆடைகள் அதுவும் இதுவும் தெரியும்படி ஆடினார்கள். தமிழன் கலை எது ?தமிழ் ஆராய்ச்சி மாநாட்டில் நாட்டிய மணிகள் என்றால் சமஸ்கிரத பாட்டுதானா ? தெலுங்கு கூட்டம்தனா ? தெலுங்கன் மலையாளி மாநாடுகளில் ஒரு தமிழனை தமிழச்சியை இவர்கள் சேர்ப்பார்களா? தெலுங்கு மாநட்டு கண் காட்சியில் என்னதான் உடு என்று பார்க்கப்போன என்னை “உனக்கு இங்கே என்ன வேலை?” என்று ஒரு தெலுங்கன் கேட்டான் …எங்கள் தமிழர் பொருட்ட்களை வைத்து உங்கள் கண் காட்சி என்கிறாய் உனது ரத்தத்தை கீறி பார் தமிழன் விந்து ஓடும் என்றேன்.
இப்படியாக தமிழ் வழி சொறி எலிகளாகா உள்ளே புகுந்து நமது சட்டி பானைகளை நோண்டி நோட்டமிட்டு இன ஓட்டை போடும் வீரமணி வைக்கோ விஜயகாந்த் கருணாநிதி ஈவேரா அரசியல் டென்கிகள் தமிழச்சி மணி அம்மையை அனாதையாக விட்ட திராவிட பண்பாடு தெரியுமா? தமிழர்கள் கொடுத்து வைத்த கோடான கோடி திரவிட சொத்துக்களை தெலுங்கர் வீரமணி போட்டுக்கொண்ட கதை தெரியுமா? பாதி தமிழனாக மீதி குடம்பவியல் தெலுங்கனாக வாழும் மாநாடு மட்லோடுகள் ஆடும் நாடகத்தை தமிழர்கள் புரிதல் வேண்டும்.
நேற்று பெருஞ்சித்தனார் மகன் பூங்குன்றன் அவர்களையும் மறை மலை அடிகளார் பேரன் மறை தி .தாயுமானவன் இருவரையும் நாம் தமிழர் ,தமிழர் களம் ,தமிழர் தேசியம் ,தமிழர் பாதுகாப்பு இயக்கங்கள் சந்தித்து உரையாடல் தமிழ் களம் கண்டோம். மொழி வளம் நன்றாக் உள்ளது இன வளம் மண்ணடியில் உள்ளது,நமது அரசியல் அரசு முன்னுரிமைகள் பாதுகாக்க தமிழர் தேசியம் நகர்வுகளை அரசியல் நினைவில் தமிழக தமிழர்கள் உணர்வு பெற வேண்டும் தமிழன் உணர “தமிழர் தேசியம் அரசியல் மாநாடு” நடத்த வேண்டும் என்ற கோரிக்கையை முன் வைத்தோம்.
எங்கோ ஆரம்பித்து அரசியல் வியாக்கானம் என்று யோசிக்கலாம் ? சாமி வேலு வீரமணி திராவிட கூட்டத்தில் தமிழே தெரியாத கூடிகெடுத்த பழனிவேல் அரசியல் பேசும்போது இந்த கலப்படம் ஒன்றும் தப்பில்லை.
பிரதமர் வாய் கிழிய மலேசியாவின் தமிழ் தமிழன் உணர்வு பேசினார் ஒரு இதர மொழி ஊடகமும் ஒரு வரி ஒன்னும் எழுதவில்லை இன மொழி அழுத்தம் எங்கனம் உள்ளது என்று ஆராயுங்கள்? கடுப்பில் முஹிடின் நிறைவுக்கு போக வில்லை போனவர்கள் எழுதினால் உங்கள் பங்கையும் தமிழ் இனம் பரிசீலிக்கும் .. தொடர்வேன்.
தமிழன்புடன் .
-ம .அ. பொன் ரங்கன்
இயக்குனர் தமிழர் தேசியம் மலேசியா
தன்மானத்தை இழக்க நேரிடினும், தமிழ்க்குடியின் மானத்தை உயர்த்திக் காட்டுவேன் என்று தமிழர்களுக்கு இலக்கியமாய் வாழ்ந்தவர் தந்தை பெரியார். இவர் ஒரு நூற்றாண்டுப் பயனைத் தமிழர்களுக்கு தம் ஓய்வறியா உழைப்பால் உண்டாக்கிக் காட்டியவர்.Theni wrote on 2 March, 2015, 1:21
மஹாதீரின் வவசான் 2020,படாவியின் ஹட்ஹடாரி,நஜிப்பின் 1 மலேசியா போன்ற சுலோகங்களை அவரவர் தலைமையில் இருத்த போது அதன் பிரச்சாரங்கள் எப்படி தூள் பறந்தது என்று யாவரும் அறிந்தததே.இதை போன்ற சுலோகங்களால் ஒன்றுக்கும் ஆவதில்லை என்றாலும் ஒரு கூட்டத்தார் கொடி பிடிப்பதும்,
பதாகைகள் ஏந்துவதும் கூட்டங்கள் கூட்டுவதும்,இதற்கு என்று ஒரு நிதி ஒதுக்கீடும் என எங்கும் விழா கோலம் தான்.மக்கள் அடைந்த பலன் பரிசு பொட்டலம்(ஹேம்பர்ஸ்)டிவி,இலவச பைசிக்கிள். அவ்வளவு தானே.இதற்கும் பெரியார் மற்றும் திராவிட இயக்கங்கள் செய்வதற்கும் என்ன வேறுப்பாடு?
தங்களுடைய நிலையை ஸ்திரப்படுத்தி கொள்ள அவர்களுக்கு ஒரு களம் தேவைப்பட்டது.பயன்படுத்தி கொண்டார்கள்.சற்று கண்ணை மூடிக் கொண்டு கற்ப்பனை குதிரையை சற்று ஓடவிடுங்கள்..
சமஸ்கிருத போராட்ட காலத்தில் இருந்து இன்றைய நிலையை யோசித்து பாருங்கள்…அந்தப் போராட்டத்தால் தமிழர்களுக்கு கிடைத்த பலன் என்ன ?…அதன பலனை இப்பொழுது யார் அனுபவிகிறார்கள்…இந்த போராட்டத்தால் தமிழர்களுக்கு ஏதேனும் ஒரு புரட்சிகரமான எழுச்சி உண்டா?
2.இந்தப் போராட்டம் இல்லாதிருந்தால் இன்றைய நிலை எவ்வாறு இருந்திருக்கும்?அன்றைய நிலைக்கும் இன்றைய நிலைக்கும் என்ன வேறுப்பாடு இருதிருக்கும்?அப்படி ஒன்றும் பெரிய வேறுப்பாடு இருந்திருக்காது என்றால் போராட்டத்தின் பயன் தான் என்ன?
இந்த திராவிட கழகங்கள் மாறி,மாறி ஆட்சி அரசியலில் இருப்பதனால் இன்றைக்கு வரை திராவிட தலைவர்கள் புகழ்ச்சிப் பாடல் பெரியார் ,அண்ணா வீரமணி கருணாநிதி,வை கோ. ஜெயலலிதா ,ராமதாஸ் என பட்டியல் நீளும்.ஆச்சரியம் ஒன்றும் இல்லை.
சரித்திரத்தை உற்று பாருங்கள். வல்லான் வகுத்ததே நீதி.இன்றைய சூழ்நிலையில் அவர்கள் எதை சொல்கிறார்களோ அது தான் தலையில் ஏறும்…அது தான் MEDIA POWER.
இன்றைக்கு தமிழ் என்றால் கருணாநிதி மட்டும் தானாம்..ஆனால் தேர்தல் தோல்வி என்றால் தமிழர்களை மானங் கெட்டவர்கள், சொரணை கெட்டவைகள் என்று திட்டுவாராம்.இதையும் கேட்டுக் கொண்டிருப்பரர்கலாம் இந்த தமிழர்கள்…நெட்டில் சற்று வளம் வாருங்கள்.,நாற்காலியை தற்க்காத்துக் கொள்ள போராடும் தலைவர்கள் இன்றைய பொடிசுகளின் தமிழ் பற்றிற்க்கும் ஆர்வத்திற்கும் ஈடாவார்களா என்று எண்ணிப் பாருங்கள். இவர்களுடைய தமிழ் ஆய்வை படித்து பாருங்கள்.வியந்து போவீர்கள்.
கடவுளை கற்பித்தவன் முட்டாள்,வணங்குபவன் காட்டுமிராண்டி என்றார் பெரியார்.ஆனால் அயர்ந்து உட்காரும் போது பிள்ளையார் அப்பா என்று அமர்வாராம்..என்ன பகுத்தறிவு.
கடவுள் சிலை வணக்கம் மூட பழக்கமாம்,..அனால் தலைவர்களின் பிறந்தநாள்,மறைவு நாளெல்லாம் காக்கை எச்சமிடும் சிலைகளுக்கு மாலை போட்டு வணங்கி தங்களது பகுத்தறிவை காட்டிக் கொள்வார்களாம்.இவைகளை பின்தொடர ஒரு பட்டாளம்.இந்த இரட்டை வேட பிரமுகர்களுக்கு மாய்மால ஜாலர்களுக்கு வக்காலத்து வேறு.
இன்னும் பல உண்மைகளைச் சொல்லி முடிக்கவில்லையே. நீதியையும், நியாயத்தையும் எம்மக்களிடம் எடுத்துச் சொல்ல கொஞ்சம் இடம் கொடுங்கப்பா. தனக்கு பாதகமானதென்றால், உடனே திரைத்துணி போட்டு வணக்கம் என்று முடித்து விடும் தமிழ் திரைப்படமா இது?. இது மக்கள் அவை. பார்ப்பனர் சட்டம் போடும் பாண்டியன் அவை அல்ல என்பதை அறிவீர்.
தமிழரே, தங்களின் வார்த்தைகள் எம் மனதை நெருடுகின்றது. இதுதான் தமிழர் பாசம் என்பது. தான் ஆடாவிட்டாலும் தமிழனுக்கு அநீதி என்று வந்துவிட்டால் தன் சதையும் ஆடும் என்பது தங்களின் வார்த்தைகளில் புலனாகின்றது. நன்றி.
திரு திலிப் அவர்களே ,23/ 2/15 இல் தங்கள் திவள்ளுவர், திருக்குறளில் எப்பொழுது சிவனையோ , சைவத்தையோ போதித்தார்? என்று கேட்டிருந்தீர்கள் ?பதில் சைவத்தில் பரம் பொருளாகிய சிவபெருமானை எண்குணத்தான் என்று விளம்புவர்கள் திருவள்ளுவரும் அதையே கோளில் பொறியில் குணமிலவே எண் குணத்தான் தாளை வணங்காத்தலை என்று KURIPITTULLAAR
திருவள்ளுவரின் :கோளில் பொறியில்,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,, தெளியுரை :கேட்காத செவி பார்க்காத கண் முதலியனபோல் எண்குணங்களை உடைய கடவுளின் திருவடிகளை வணங்காதவரின் தலைகள் பயனற்றவைகளாம்
THIRUYANSAMBANNNNNNNNNNNNNNNNNNNNNNTHA
http://www.senkettru.wordpress.com
அப்படியா லோசனி ? நீங்கள் எழுதியதை தெளிவாக விளக்குங்கள் pls …. அப்படி என்றால் திருக்குறள் ஆறாம் பொருள் இன்பம் என்னும் மூன்று பகுதிகளை தாங்கி உள்ளது என்பது பொய் ! அப்படிதானே லோசனி ?
இன்றைக்கு ஒரு இலக்கிய படைப்பை முல்லை பாட்டிலிருந்து சுவைப்போமே.அப்பாடலில் சில இளைஞ்சர்கள் யானைக்கு வடமொழியில்(சமஸ்கிருதத்தில்) யானையை பயிற்றுவிப்பதாக ஒரு பாடல்.யானை கூட சமஸ்கிருதம் கற்கிரதாம்.இந்த மனுஷர்களுக்கு தான் என்ன ஆனது என்று தெரியவில்லை.சரி கீழே பாடல் தொடரை பார்ப்போம்…..
பாடிவீட்டுத் தெருக்களில் உவலைக்கொடி படர்ந்த கூரைக் கூடாரங்கள் இருந்தன. தெருக்கள் பிரியும் முற்றத்தில் காவலுக்காக யானை நிறுத்தப்பட்டிருந்தது. அந்த யானைக்குக் கரும்பையும் கதிர்ரோடு கூடிய நெல்லந்தாளையும் தழைகளையும் உணவாகத் தந்தனர். அவற்றை அந்த யானை தன் கைகளால் வாங்கி உண்ணாமல் தன் நெற்றியைத் துடைத்துக்கொண்டது. அதனை உண்ணும்படி, வடமொழிச் சொற்களைச் சொல்லி, கையில் கவைமுள் அங்குசம் வைத்திருந்த இளைஞர்கள் பயிற்றுவித்துக்கொண்டிருந்தனர்.
உவலைக் கூரை ஒழுகிய தெருவில்,
கவலை முற்றம் காவல் நின்ற 30
தேம் படு கவுள சிறு கண் யானை
ஓங்கு நிலைக் கரும்பொடு, கதிர் மிடைந்து யாத்த,
வயல் விளை, இன் குளகு உண்ணாது, நுதல் துடைத்து,
அயில் நுனை மருப்பின் தம் கையிடைக் கொண்டென,
கவை முட் கருவியின், வடமொழி பயிற்றி, 35
கல்லா இளைஞர், கவளம் கைப்ப
ஆனால் நம்மவர்கள் ஒரு மொழியிலேயே வாழ்ந்து குண்டான் சட்டிக்குலேயே குதிரை ஓட்ட சொல்லுகிறார்கள்.என்ன செய்வது.
முழு பாடலுக்கும் Link ஐ சொடுக்கவும்.
http://vaiyan.blogspot.com/2014/11/blog-post_27.html
அகஸ்தியரே, உம்முடைய சம்ஸ்கிருத பற்றை மெச்சினோம். இந்த அவசர காலத்தில் தமிழ் படித்த பண்டிதர்களுக்கு தமிழ் நூல்களை கற்று கரை ஏறவே நேரம் போதவில்லை. அதனால்தானே தமிழ் படித்தோரும் தமிழர் சமய நெறி அறியாமல் பிற நெறிகளை நாடி ஓடினர், இன்றும் ஓடிக் கொண்டிருக்கின்றனர். இப்ப வெவ்வேறான 3 இலக்கண மரபுகளை கொண்ட மொழிகளை நம் மாணவர்கள் படித்து வருகின்றனர். இதில் தற்கால உலகியல் கல்விக்கு உதவாத செயற்கை மொழியை படியுங்கள் என்றால் தமிழ் மாணவர்கள் மேலும் குழம்பி விடுவார்கள். பாவம் தமிழ் மாணவர்களை விட்டு விடுங்கள். நீங்கள் படித்து பன்மொழி புலவர் ஆகுங்கள். நாங்கள் மூன்று மொழிகளைக் கற்றுள்ளோம். மேலும் வேண்டுமானால் உலகியல் வாழ்க்கைக்கு உதவக் கூடிய கொரியா, ஜப்பான், சீன, ஜெர்மனி எனும் இதில் எதாவது ஒன்றோ அல்லது இரண்டோ எங்கள் பிள்ளைகளுக்கு கற்றுக் கொள்ள வழிவகை செய்து கொடுப்போம்.
அகஸ்தியரே, தமிழ் மொழி வளர்ச்சிக்காக வாதடியவர்களில் முதல் இடத்தை பிடித்தவர் 20-ம் நூற்றாண்டின் ஆரம்ப காலத்தில் வாழ்ந்த தமிழ் ஆசிரியர்களே. இந்த தமிழ் ஆசிரியர்கள்தாம் தங்களுக்கும் பிற மொழி (சமஸ்கிருத மொழி உட்பட) ஆசிரியர்கள் போல் உயர்நிலைக் கல்விக் கூடங்களில் சரிசம அங்கிகாரம் கொடுக்க வேண்டி போர் தொடுத்தனர்.
அதற்குப் பின்னரே தமிழ் ஆசிரியர்களுக்கு பல்கலைகழகங்களில் சிறப்பு தேர்வு வைத்து, வித்துவான், மகா வித்துவான், புலவர் எனும் பட்டங்களை கொடுத்து பிற மொழி ஆசிரியர்களுக்கு நிகராக ஊதியம் கொடுக்கும் நிலை வந்தது. பெரியார் சமஸ்கிருத எதிர்ப்பு கொண்டு வந்தது வேறு வகையில். அவர் வைதீக பண்பாட்டைக் கொண்டு வருணாசிரம வாரியாக பிரித்தாளும் பிராமணர்களின் பண்பாட்டை எதிர்த்தார். அவ்வகையில், தமிழ் பெண்களுக்கும், விதவைப் பெண்களுக்கும் ஏற்பட்ட துன்பங்களை போக்குவதற்கு தமிழரிடையே மறுமலர்ச்சியை ஏற்படுத்தினார். அறிவு சிந்தனைக் கொண்டு வாழுங்கள் என்று வற்புறுத்தினார். தனிமனிதர் சொல் அம்பலம் ஏறாது என்பதால் பின்னர் அது திராவிட கழகமாக உருவெடுத்தது. ஒரு உரிமைக்காக போராடும் பொழுது அதற்கு எதிரியாக இருப்பதையும் எதிர்த்து போராட வேண்டும் என்பது இயல்பு. அவ்வாறே தமிழ் மொழியும், தமிழரும் வளர வேண்டி சமஸ்கிருத மற்றும் வைதீக பண்பாட்டிற்கு எதிராக எதிர்ப்பும் கிளம்பியது. அதில் ஓரளவு வெற்றியும் கண்டனர். இருந்தும், தமிழரிடையே வைதீக மத திணிப்பை கழகத்தாரால் வெற்றிக் கொள்ள இயலவில்லை. இதற்குக் காரணம், பிராமணர்கள் தமிழரில் தங்களை மேலோர் என்று குறித்துக் கொண்டவரிடம் செய்து கொண்ட சமரச போக்கே ஆகும். தமிழரில் தங்களை மேலோர் என்று குறித்துக் கொண்டவரிடம் பொருளாதார பலம் இருந்ததால் பிராமணர் கை மீண்டும் ஓங்கியது. இத்தருணத்தில்தான், தமிழரை வைதீக மத ஊடுருவலில் இருந்து காக்க வேண்டி கடவுள் மறுப்புக் கொள்கையை கையில் எடுக்க வேண்டிய நிற்பந்ததிர்க்குள் ஆளானார்கள் கழகத்தார். இருந்தும், பிராமணர்கள் தமிழரின் மீது செலுத்தி வந்த ஆதிக்கத்தை முறியடிக்க முடியாமல் போனதால் பெரியாரின் விருப்பு இல்லாமல் தி.மு.க. அரசியல் கட்சியாக உருவெடுத்தது. அரசியல் பலம் இல்லாமல் பிராமணரின் கொட்டத்தை அடக்க முடியாது என்று அறிந்த சிலர் அரசியல் பலத்தை நாடினர். தமிழ்நாட்டில் திராவிட முன்னேற்ற கழகம் ஆட்சியைப் பிடித்து அரசியல் ரீதியிலும் பிராமணர் கொட்டத்தை அடக்கினர். இருந்தாலும் வைதீக மத பண்பாட்டில் ஊறி விட்ட சைவர்களும் வைதீகச் சைவர்கள் ஆகிப் போனார்கள். தென்கலை வைணவரோ ஆரிய வேதத்தையே வழிகாட்டியாக் கொண்டு ஆரிய பண்பாட்டில் முழுமையாக உட்படுத்திக் கொண்டார்கள். இப்பொழுது தமிழ் பிராமணரின் கடைசிக் கோட்டையாக இருப்பது ஆரிய வேதமும், வைதீக பண்பாடும் மட்டுமே. அதனால்தான் அவர்கள் அந்த இறுதி கோட்டையையும் விழுந்து விடாதபடி தமிழ் நாட்டில் உள்ள புராதன பாரம்பரிய ஆலயங்களை விட்டுக் கொடுக்காமல் தங்கள் இரும்பு பிடியுள் வைத்துள்ளனர். அகஸ்தியரே, தாங்கள் கூறும் இன்றைய தமிழக அரசியல்வாதிகள் நிலை வேறு. இன்று தமிழர், பொருளாதார ரீதியில், கல்வியில் பிராமண சமூகத்திற்கு நிகராக வளர்ந்து விட்டனர். அதனால் ஆரிய பிராமணரின் வருணாசிரம கோட்பாடு இனியும் செல்லாது, செல்லாது. செல்லாது. அடுத்து தமிழரிடையே வரவேண்டிய மறுமலர்ச்சி அவர்தம் சமய நெறியை அறிந்து, ஆரிய மத நெறியையும், அவர்தம் வைதீக பண்பாட்டையும் விட்டு விலகி இருப்பதேயாம். இதுவே தமிழருக்கு இனி வர வேண்டிய விடியல். புதியதோர் உலகம் படைப்போம் தமிழர்களே ஒன்று திரண்டு வாரீர்.
இருநூறு ஆண்டுமுன்பு குமரி மண்ணில் இந்துக்களால் நடந்த வெறியாட்டத்தை …மறக்க முடியுமா ??ஆரிய இந்துக்களால் மனுதர்ம விதிகள் ஆட்சி செய்த காலத்தில்…..!! மறுக்க முடியுமா ?? அவற்றின் சில கொடுமைகள் …இதோ பாருங்கள் …!!
திருவிதாங்கூர் (தற்போதைய தமிழகத்தில் உள்ள கன்னியாகுமரி மாவட்டம் மற்றும் கேரளத்தில் உள்ள திருவனந்தபுரம் ) சமஸ்தானத்தின் கீழிருந்த குமரி மாவட்டத்தில் அன்று நிலவிய சாதிக் கொடுமை…!! தாழ்த்தப்பட்டவர்களும் சமூகத்தில் ஒதுக்கி வைக்கப்பட்ட சாணார் [நாடார்], பரவர், ஈழவர், முக்குவர், புலையர்…. உள்ளிட்ட “18 சாதியைச் சேர்ந்த பெண்கள் மேலாடை அணியமுடியாது. அப்படி அணிவது மாபெரும் குற்றம்.”
சமஸ்தானத்தில் பெரும் எண்ணிக்கையில் இருந்தபோதும் குறைந்த எண்ணிக்கையில் இருந்த நம்பூதிரி(பார்ப்பனர்கள்) மற்றும் உயர் சாதி நாயர்கள் பிள்ளைமார் இந்துக்களால் உலகில் மிகவும் கொடுரதனமாகவும் ,கேவலமாக நடத்தபெற்ற வரலாறு இன்றைய இளைய சமுதாயம் அறிந்திருக்க வேண்டும் .அதனால் இந்த பதிவு …!!
ஆரிய இந்துக்கள் அந்த காலத்தில் குளத்தில் உடைப்பு ஏற்பட்டால் தெய்வ குற்றம் எனக்கருதி ,தெய்வத்திற்கு வேண்டியவர்களான தாழ்த்தப்பட்ட அடிமைகளை உயிரோடு குளத்தில் உடைப்பெடுத்த இடத்தில போட்டு மூடியிருக்கிறார்கள் !!
மகாராஜா மார்த்தாண்ட வர்மா காலத்தில் அவருக்கு
அரசாங்கத்தில் ஏதாவது பிரச்சினை வந்தால் அதற்க்கு தெய்வ குற்றம்என நம்பூதிரி(பார்ப்பனர்கள்)
எடுத்து கூறி தெய்வ குற்றத்தை போக்க வேண்டும் எனில் தாழ்த்தப்பட்ட 15 குழந்தைகளை தெய்வத்திற்கு பலி கொடுக்கவேண்டும் என்றார்கள் .அதன்படி ஒரு மழை நாள் இரவு ஈழவர் சமுதாயத்தை சேர்ந்த 15 குழந்தைகள் திருவனந்த புரத்துக்கு பிடித்து செல்லப்பட்டு ,நம்பூதிரி(பார்ப்பனர்கள்) மந்திர ,தந்திர சடங்குகளுக்கு பின் நகரின் நான்கு மூலைகளிலும் உயரோடு புதைக்கபட்டார்கள் !! (அ.கா .பக்கம் .91-92 )
மேலும் எசமானுக்கு உடல் நலம் இல்லை எனில் ஆடு மாடுகளை பலி இடுவதற்கு பதிலாக எல்லா பெரிய கோவில்களிலும் நரபலி கொடுக்க பட்ட கொடுமைகள் கூட நடந்திருக்கிறது !! ( மறுபக்கம் ,ப.69)
கொடிய தீமைகளில் பாதிக்க பட்ட ஒரு பிரிவு தான்(சாணார்(நாடார் ) ,முக்குவர், புலையர்……) தாழ்த்தப்பட்ட மக்கள் இடுப்புக்கு மேலும், முட்டுக்கு கீழும் ஆடை அணியக்கூடாது என்றக் கட்டுப்பாடு இருந்தது . உயர்ந்த சாதி இந்துக்களின் முன்பு தாழ்த்தப்பட்ட பெண்கள் மறைக்கப்படாத மார்பகங்களுடன்தான் மரியாதை செலுத்த வேண்டும்.
மீசைக்கு வரி, மார்புக்கு வரி, தாலிக்கு வரி…
மார்புக்கு (முலை) வரி வசூலிப்பார்கள்…!!மார்பகம் அளவுக்கு ஏத்தா மாதிரி வரி; பெரிய மார்பகளென்றால் வரி அதிகம்…!! வரி கட்ட முடியாவிட்டால், இடுக்கியினை ( பனைமரத்து பூவை பத படுத்த பயன்படுத்துவது ) கொண்டு மார்பகங்களை திருகுவார்களாம் …சில இடங்களில் முலைகள் அறுத்து எறியப் பட்டது…!! என்ன கொடுமை இந்த கொடுமை உலகில் நடந்ததுண்டா…?
கோவில் தெருக்களில் செல்வதற்கும், உயர்சாதியினரின் தெருக்களில் செல்லவும், குளம், கிணறுகளில் தண்ணீர் எடுக்கவும், குளிக்கவும், காற்றோட்டமுள்ள வீடுகளில் வசிக்கவும் கூட தடை விதிக்கப்பட்டிருந்தது…!!
சாணார்(நாடார் ),முக்குவர், புலையர்… மக்கள் திருமணங்களில் தாலி கட்டுவதற்குக் கூட வரி விதிக்கப்பட்டது..!! பசுக்கள், மண்வெட்டிகள், அரிவாள்களுக்கும் கூட வரி விதிக்கப்பட்டது…!! பனைத் தொழில் செய்பவர்கள் பனை மரத்திற்கும் கூட வரி செலுத்த வேண்டும் என்ற பெயரில் கொத்தடிமைகளாகக் கூலியின்றி வேலை செய்ய வேண்டும்…!!
சாணார் (நாடார் ),முக்குவர், புலையர்… … மக்கள் தீண்டத்தகாதவர்களென்றும் தள்ளி வைக்கப்பட்டனர். பெண்கள் மேலாடை அணிவதற்கும், தெய்வத்தை வழிபடுவதற்கும் கூடத் தடை விதிக்கப்பட்டிருந்தது…!!
இன்னும் பாருங்கள் நாகர்கோயில் செல்லும் வழியில் தாளக்குடி எனும் கிராமம். அங்கு சாம்பவர் சாதியைச் சார்ந்த கர்ப்பிணி பெண் மாடத்தியை, மேலாடை அணிந்ததற்காக ஆதிக்கசாதியினர் அடிமையாய் வைத்திருந்தனர். அவரை மாட்டுக்குப் பதிலாய் கலப்பையில் பூட்டி நிலத்தை உழுது கொன்றனர். இந்த கொடுமை 19ம் நூற்றாண்டில் நடந்தது…!!
கன்னியாகுமரி அருகேயுள்ள கொட்டாரத்தில் திருமணமான சில நாட்களில் தாலி, மேலாடையுடன் வந்த பெண் அரசாணையை எதிர்த்த குற்றத்துக்காக பொது இடத்தில் தாலியறுத்து உடை களைந்து அரசுப் படையால் கொலை செய்யப்பட்டார். அந்த இடம் இன்றும் தாலியறுத்தான் சந்தை என்ற பெயரில் அழைக்கப்படுகிறது!!
மேலாடை அணிந்ததற்காக சிலரைச் சுடுமணலில் நாள் முழுவதும் நிற்க வைத்தார்கள் மேலாடை அணிந்த பெண்களின் மார்புகளை வெட்டினார்கள்…!!
இதையறிந்த அய்யா வைகுந்தர் கொடுமைகளுக்கு ஆளான மக்களிடம், “மார்பில் ஆடையணியுங்கள்…!! முட்டுக்குக் கீழ் துணி கட்டுங்கள்….!! தங்கத்தில் தாலி கட்டுங்கள்….!! இடுப்பில் குடம் வைத்துத் தண்ணீர் எடுங்கள்…!! கோவில்களை நீங்களே கருவறையில் சென்று பூசை செய்யுங்கள்…!! வணங்குங்கள்” என்றார்.
பிரிட்டிஷ் ஆட்சியாளர்கள் கூட “திருவிதாங்கூர் சமஸ்தானத்தில் நிலவும் சாதியக் கொடுமைகளைப் போன்று உலகில் வேறெங்கும் கண்டதில்லை” என எழுதியுள்ளனர்…!!
இக்கொடுமைகளைக் கண்டதனால் தான் விவேகானந்தர் குமரிக்கு வந்த பொழுது, “திருவிதாங்கூர் சமஸ்தானம் பைத்தியக்காரர்கள் வாழும் இடம்” எனக் குறிப்பிட்டார்…!!
இது தமிழர் வலாற்றின் கறைகள்…!! காலம் மாறலாம் .வரலாறு தெரியாமல் இருந்தால், எதிர் காலம் மதவாத சத்திகளிடம் அடிமை பட்டு விட கூடாது !!
இப்ப யாரும் தமிழகர்களை சமஸ்கிருதம் படியுங்கள் என்று கூர வில்லை. நீங்களே பழைய பேப்பர் படித்து விட்டு ஆரம்பித்த படி மன்றம் இது. தேனீ இப்பதான் உங்களை பார்த்த எனக்கு கோவம் வருது. தமிழ் பட்றாளர் என்று கூரி கொண்டு மூன்று மொழிகளை ஆதரிக்க துணிந்து விட்டீர்கள் காரணம் உங்கள் இன்றைய சூல்நிலை. இப்படி காலத்திற்கு ஜால்ரா போட்டு விட்டு, பின்பு 100 ஆண்டு கழித்து மற்ற இரு மொழிகளைகளையும் துப்புவீர்கள் . அப்படிதானே ? நல்ல பட்சொந்தி கலர் தெரியுதட எங்கப்பா ….
அகஸ்தியரே, தமிழ் மொழி வளர்ச்சிக்காக வாதடியவர்களில் முதல் இடத்தை பிடித்தவர் 20-ம் நூற்றாண்டின் ஆரம்ப காலத்தில் வாழ்ந்த தமிழ் ஆசிரியர்களே. இந்த தமிழ் ஆசிரியர்கள்தாம் தங்களுக்கும் பிற மொழி (சமஸ்கிருத மொழி உட்பட) ஆசிரியர்கள் போல் உயர்நிலைக் கல்விக் கூடங்களில் சரிசம அங்கிகாரம் கொடுக்க வேண்டி போர் தொடுத்தனர்.Theni wrote on 3 March, 2015, 15:48
முதல் போராட்டத்தை ஆரம்பித்த தமிழ் ஆசிரியர்கள் இப்போ என்ன கோலோச்சிகிறார்களா? அங்கு என்ன தமிழுக்கு பெரிய அங்கிகாரம் வாழுகிறது ?அன்றைக்கு இருந்த நிலையை விட இன்னும் மோசமான பரிதாப நிலையில் தானே இருக்கிறார்கள். இன்றைய இந்த நிலைக்கு எந்த பார்ப்பான் தூபம் போட்டான்?பெரியாரும், அண்ணாவும், கருணாநிதியும் தமிழ் பேரரிஞ்ஞசர்களும் ஆளுகின்ற காலம் தானே?நிர்வாக துறைகளில் முழுவதுமாக தமிழின் ஆளுமை வந்துவிட்டதா ?என்ன செய்து கொண்டிருக்கிறார்கள்?ஊரை ஏய்த்து உலையில் போட்டுக் கொண்டிருப்பது ஊர் அறிந்த விஷயம் தானே?தமிழ்,மலாய்,ஆங்கிலம் படிக்கிற பிள்ளைகளுக்கு ஜப்பான்,ஜெர்மன் மொழியை கூட விட்டுக் கொடுப்பதை பார்த்தால் அந்நியன் அடிமை புத்தி உங்கள் ரத்தத்தை விட்டு இன்னும் நீங்க வில்லை போலும்.சுதேசியை நேசியுங்கள்.இதற்கு காரணமும் உண்டு)இன்று இல்லா விட்டாலும் நாளை உலகம் உங்களைப் போற்றும்.
“சமஸ்கிருத போராட்ட காலத்தில் இருந்து இன்றைய நிலையை யோசித்து பாருங்கள்…அந்தப் போராட்டத்தால் தமிழர்களுக்கு கிடைத்த பலன் என்ன ?…அதன பலனை இப்பொழுது யார் அனுபவிகிறார்கள்…இந்த போராட்டத்தால் தமிழர்களுக்கு ஏதேனும் ஒரு புரட்சிகரமான எழுச்சி உண்டா?”
இது என்ன அறியாதவன் கேள்வியா அல்ல புரியாதவன் கேள்வியா?.
சமஸ்கிருதம் ஒழிந்து தமிழர் நாட்டில் தமிழ் மீண்டும் மறுமலர்ச்சி பெற்றதே, அதுதானே தமிழர் வேண்டிய பலன். அதனை அனுபவிப்பவர் தமிழர்தானே. தமிழர் அல்லாதோருக்கு எப்படி புரியும் தமிழின் மாண்பு?. அதனாலேதான் “தமிழ், பிணியை போக்கக் கூடிய” மொழியா என்று கேட்டீர்கள். ஆம், தமிழ் மொழி மனிதரின் பிணியைப் போக்கக் கூடியது என்று நிறுவியவுடன் இருவரும் வாய் அடைத்துப் போனீர்களே!. “புரட்சிகர எழுச்சி” என்பது இன்னும் உண்மைத் தமிழரின் எண்ணத்திலும் உள்ளத்திலும் ஊடுருவி இருக்கின்றது என்பதை தமிழுக்குக்காக பிறரிடம் எம்மைப் போன்றோரும் இன்னும் பலரும் போராடுவதில் இருந்து தெரியவில்லையா அந்த புரட்சியின் ஆழம் எவ்வளவு தூரம் என்று?. தங்கள் கண்ணுக்கு தமிழக அரசியல் கட்சியும் அதன் தலைவர்களும் தான் “புரட்சியின் சின்னம்” என்று தெரிகின்றது போலும்!. அரசியலில் இல்லாத பல தமிழ் அறிஞர்கள், தமிழ் மொழியின் இளைய ஆர்வலர்களும் அன்று தொட்டு இன்று வரை தமிழ் மொழியின் மேம்பாட்டுக்காக தங்கள் வாழ்வை அர்பணித்துக் கொண்டுள்ளனர். மேலும் செயலாற்றி வருகின்றனர். “தமிழ் பள்ளிக்கூடமே நமது தேர்வாக இருக்கட்டும்” என்று இன்று தமிழர் பிள்ளைகளை தமிழ் பள்ளிகூடத்திற்கு அனுப்புங்கள் என்று வேண்டுகின்றோமே இதுதான் உண்மையான “புரட்சி”. அரசியலில் சுகம் காண்பது என்பது அவரவர் தன்னலப் புரட்சி. இவ்விரண்டிற்கும் உள்ள வேறுபாட்டை அறிந்து கருத்தாடுவீர். இந்த தன்னலப் புரட்சியைத்தான் கவிஞர் கண்ணதாசன் கலைஞர் கருணாநிதியைப் பார்த்து கேட்டது:
“பரமசிவன் கழுத்தில் இருந்து பாம்பு கேட்டது கருடா சௌக்கியமா, யாரும் இருக்கும் இடத்தில் இருந்துக் கொண்டால் எல்லாம் சௌக்கியமே, கருடன் சொன்னது. அதில் அர்த்தம் உள்ளது”
https://www.youtube.com/watch?v=u2uTvseL6Rw
“யாதும் ஊரே யாவரும் கேளிர்” என்று வாய் கிழிய பேசி விட்டு இப்பொழுது அகஸ்தியர் சொல்வது என்ன?
“தமிழ்,மலாய்,ஆங்கிலம் படிக்கிற பிள்ளைகளுக்கு ஜப்பான்,ஜெர்மன் மொழியை கூட விட்டுக் கொடுப்பதை பார்த்தால் அந்நியன் அடிமை புத்தி உங்கள் ரத்தத்தை விட்டு இன்னும் நீங்க வில்லை போலும்”. இதுதான் தங்களின் யாதும் ஊரே யாவரும் கேளிர் என்பதற்கு உண்மை விளக்கமா? மொழி ஒரு தொடர்பு சாதனம். ஆதலால் தமிழை விட்டு பிற மொழிகளை ஆதரியுங்கள் என்று நான் சொல்ல வரவில்லை. தமிழுடன் சேர்ந்து வாழ்வியல் கல்வி பெற பிற மொழிகள் கற்பது தவறில்லை என்றேன். அதை விடுத்து பேசா மொழியைக் கற்பதில் பயன் என்னென்னேன்?. தமிழரைப் பார்த்து தமிழர் அல்லாதோர் “அந்நியன் அடிமை புத்தி” என்பது விந்தையாக இருக்கின்றது அகஸ்தியரே!. தங்களை “அகஸ்டின்” என்று அந்நியமாக பெயர் வைத்துக் கொண்டு எம்மைப் பார்த்து “அந்நியன் அடிமை புத்தி” என்று சொல்வது தங்களுக்கே அவமானமாக இல்லையா?. வார்த்தை விடும் முன் சற்று யோசித்து விட்டு விடும். இல்லையேல், வாயை விட்டு வெளியேறிய வார்த்தையை மீண்டும் பெற முடியாது.
“நல்ல பட்சொந்தி கலர் தெரியுதட”. யார் பச்சோந்தி?. நான் உண்மைத் தமிழன் என்றும் எம் பெயர் ராஜ ராஜ சோழன் பரம்பரையில் வரும் 6 மன்னர்களின் பெயர் அப்படியே என் குடும்ப உறுப்பினர்களுக்கு வரும் ஐயா”!. என்று சொல்லி அந்த சோழன் வளர்த்த தமிழுக்கே சாவு மணி அடிப்போரா தங்களை இராஜ இராஜ சோழன் பரம்பரம்பரை என்று மார் தட்டிக் கொள்வது. அப்படி தமிழன் பரம்பரையில் ஒருகால் வந்திருந்தால், உம்முடைய விசுவாசம் தமிழுக்கா சமஸ்கிருதத்திர்க்கா? உம்முடைய விசுவாசம் தமிழருக்கா அல்லது தமிழரை அன்னியனாகப் பார்க்கும் பார்பனருக்கா? உம்முடைய விசுவாசம் தமிழரின் சமயத்திர்க்கா அல்லது ஆரியரின் வேதத்திர்க்கா? தலை அந்நியனுக்கும் வால் தமிழனுக்கும் என்றால் நீர் உண்மைத் தமிழனா?. இப்பதான் எனக்கும் கோபம் வருகின்றது.
அகஸ்தியரே என்ன அறியாமையில் உலருகின்ரீர்?. தமிழ் மொழி தமிழ் நாட்டில் அடியில் இருந்து உச்சி வரை போதிக்கும் பொழுது தமிழ் ஆசிரியர்களுக்கு வேலை வாய்ப்பு இல்லாமலா போய் விட்டது. இந்த நாட்டிலும் என்னவாம். தமிழ் பள்ளி ஆசிரியர்கள் 8,700 பேரை நீக்கி விட்டுப் பார்த்தால் இந்நாட்டுப் பொதுச் சேவையில் இருக்கும் இந்தியர்கள் 1% குறைவாகவே இருப்பார்கள். தமிழும் சோறு போடும் என்பதற்கு இதுவே ஆதாரம். இதற்கு மேலும் தமிழையோ, தமிழரையோ அந்நியமாகப் பார்த்துக் குறை கூறி கொண்டிருந்தால், நானும் தங்களை அந்நியமாகப் பார்த்து கருத்து எழுத வேண்டி வரும்.
அப்பப்பா, தமிழர் ஒருவர் தமிழுக்கும், தமிழருக்கும் தொண்டு செய்வதற்கு முன்னால், முகமூடி (அணிந்த) தமிழர்களிடம் காப்புரிமை (அனுமதி) வாங்க வேண்டும் போல் இருக்கிறதே, என்ன கொடுமையான உலகமட இது! பெருமாளே இந்த கொடுமையெல்லாம் நீர் கேக்கமாட்டிர்றோ?
https://www.youtube.com/watch?v=gir-PzWQOcQ (யு டியுப்)
தமிழன் கட்டிய கோவிலில் தமிழில் மட்டுமே மந்திரம் ஓது!’ என என்று எல்லாத் தமிழனும் கட்டளை இடுகிறானோ அந்நாளே தமிழரின் எழுச்சி நாளாகத் திகழும் என்பது என் திடமான உறுதி! ஏனெனில் தமிழரின் வீழ்ச்சியனைத்தும் கோவிலிருந்தே தொடங்குகின்றன” என் மனதை கவர்ந்த, என் மனதை நெருடிய வரிகள் இவை. தொடர்ந்து படிக்க http://karutthumedai.blogspot.com
அகஸ்தியரே!. தங்களை “அகஸ்டின்” என்று அந்நியமாக பெயர் வைத்துக் கொண்டு எம்மைப் பார்த்து “அந்நியன் அடிமை புத்தி” என்று சொல்வது தங்களுக்கே அவமானமாக இல்லையா?.
ஹி..ஹி… எனக்கு சிரிப்பே வரல…..ஹி…..ஹி ….ஹ…ஹா….கீழே பாருங்கள்…
மு. கருணாநிதி, மு.க. ஸ்டாலின், தயாநிதிமாறன், கலாநிதிமாறன், டி.ஆர். பாலு, சுப்புலட்சுமி, ஜெகதீசன், கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன், என்.கே.கே.பி.ராஜா, கீதா ஜீவன், சுரேஷ் ராஜன், ஜெகத்ரட்சகன், ஜெ. ஜெயலலிதா, சசிகலா நடராஜன், டி.டி.வி. தினகரன், இ. மதுசூதனன், டி. ஜெயகுமார், வா. மைத்ரேயன், விசாலாட்சி நெடுஞ்செழியன், மருத்துவர் ராமதாஸ், ஜி.கே. வாசன், எம். கிருஷ்ணசாமி, ப. சிதம்பரம், டி. சுதர்சனம், சி. ஞானசேகரன், டி.யசோதா, ஜே. ஹேமச்சந்திரன், வை. சிவ புண்ணியம், என். வரதராஜன், டி.கே. ரங்கராஜன், விஜயகாந்த், பண்ருட்டி எஸ். ரமச்சந்திரன், சொ.மு. வசந்தன், எல். கணேசன், செஞ்சி ந. ராமச்சந்திரன், ரஜினிகாந்த், கமல்ஹாசன், விஜய் கார்த்திக், பிரபு, அஜித், சரத்குமார், மாதவன், சூர்யா, விக்ரம், சத்தியராஜ், பார்த்திபன், பிரசாந்த், விவேக், ஜனகராஜ், ராதாரவி, அர்ஜுன், பிரகாஷ் ராஜ், பாரதிராஜா, பாலுமகேந்திரா, பாலச்சந்தர் மணிரத்னம், கே. பாக்யராஜ், எஸ்.பி. முத்துராமன், கே.எஸ் ரவிக்குமார், எம்.எஸ். விசுவநாதன். தேவா இளையராஜா, ஹாரிஸ் ஜெயராஜ், வாலி, பாலகுமாரன், இந்திரா செளந்தரராஜன், பா. விஜய் ….இந்த பட்டியல் போதுமா இன்னும் கொஞ்சம் வேனுமா?
தேனீ , நான் மீண்டும் மீண்டும் சொல்கிறேன், மலேசியாவில் யாரையும் சமஸ்கிருதம் படியுங்கள் என்று எந்த ஒரு சங்கமோ அல்லது பள்ளியோ கூரவில்லை. நீங்கலாக தமிழுக்கு ஆபத்து, அதுவும் சமஸ்கிருததாலே என்றதனால் வந்த வம்பு இது. 19 நூற்றாண்டில் நீங்கள் பேசியிருந்தால், நானும், ஒரு கால் உங்கள் ரசிகன் ஆகியிருப்பேன். ஆனால் தங்களோ பூர்வ ஜென்ம நினைவு வந்தவர் போல் தமிழுக்கு ஆபத்து என்கிறீர்கள், அதுவும் 20 ஆம் நூற்றாண்டில். அதிலும் மலேசியாவில். இருப்பினும் மலாய் மொழி மற்றும் ஆங்கிலம் எற்று கொள்ள வேண்டும் என்க்ரிரீர்கள். என்ன பிரச்னை என்று கேட்டல் , உடனே கோவிலில் இருக்கும் சம்ஸ்கிருத மந்திரத்தை தமிழில் மாற்றும் நாள் தான் தமிழர் எழுட்சினால் என்கிறீர்கள். சரி நீங்களே , கோவிலில் படிக்கும் மந்திரத்தை தமிழில் மொழியாங்கம் செய்து இந்து சங்கத்திற்கு அனுப்புங்கள் அல்லது நீங்களே எல்லா கோவிலுக்கும் அனுப்புங்கள் என்றால் …… திலிப் 2 தமிழரே அல்ல என்றீர்கள் … இலையென்றால் அகஸ்டின் கிருஸ்துவ மத பெயர் என்கிறீர் ….. இதெல்லாம் ஒரு பாயிண்ட்டா? சம்பந்த சம்பந்தமில்லாமல் காலத்திற்கு அப்பாற்பட்ட நகைச்சுவை விமசகர் ஐயா தேனீ நீங்கள் …… உலகத்தில் 200 மேற்பட்ட மொழிகள் இருந்தாலும், தமிழ் மற்றும் சமஸ்கிருதம் 5 ல் 2 முக்கிய மொழி என்று உலகளவில் எற்று கொள்ள பட்டு, திபெதில் சமஸ்கிருதம் பயிலுகிறார்கள்….. ஆனால் நீங்களோ …..அகஸ்டின் அவர்களை விமசிக்கிரீர்கள் … தேவையா இது ?
தோள்சீலை கலவரத்தை குறித்து ஆராயும் போது நம்பூதிரி பிராமிணர்கள் மட்டுமே காரணம் என கூறப்படுகையில்,உண்மையை அறிய தேடும் போது வேறு கோணத்திலான கிடைக்கப் பெற்ற எட்டு பக்க வரலாற்றுக் குறிப்பின் சில அம்சங்களை கீழ் காணலாம்.முழு கட்டுரைக்கு கடைசியில் உள்ள link ஐ சொடுக்கவும்.
சான்றோர் சமூகமும் தோள்சீலைக் கலவரமும்
எஸ்.டி. நெல்லை நெடுமாறன், அ. கணேசன்
19-ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் திருவிதாங்கோட்டுச் சமூக அமைப்பில் ஜாதியக் கொடுமைகள் நிலவின என்று குறிப்பிட்டு அதனை நடைமுறைப்படுத்தியவர்கள் பார்ப்பன நம்பூதிரிமாரா அல்லது மிஷனரிகளா என்று கேள்வி எழுப்பியுள்ளார் கற்பக விநாயகம். இந்தக் கேள்வி நியாயமானது. ஆனால், அடுத்து அவர் சொல்வது கடுமையான ஆட்சேபத்துக்குரியது…..
….இவ்விதிகளை மதிக்கக்கூடாது என்று பெரியார் போல் இயங்கியவர் முத்துக்குட்டி சுவாமிகள் என்கிறார் கற்பக விநாயகம். நம் முன்னோர்கள் எல்லாம் முட்டாள்கள் என்றும், காட்டுமிராண்டிகள் என்றும் தயக்கமின்றி ஏசிய ஒருவர் பெரியார். நம்முடைய பக்தி இலக்கியமெல்லாம் ஆபாசக்குப்பைகள், அவையெல்லாம் கொளுத்தப்படவேண்டியவை என்றும் பேசியவர் அவர். ‘கடைவிரித்தேன் கொள்வாரில்லை ‘ என்று ஏங்கி உருகிய வள்ளலாரும், ‘உய்யக்கொண்டார் குலத்தை உருவேற்ற வந்தேன் நான் ‘ என்று ஓங்கி முழங்கிய வைகுண்டரும் இந்த மண்ணின் மரபுகளில் காலூன்றி நின்று கைகளை உயர்த்திக் கூக்குரலெழுப்பியவர்கள். ஜாதியக் கொடுமைகளுக்கு எதிரானவர்கள் அவர்கள் என்பதில் எந்தவித ஐயமுமில்லை…
.தமிழகத்தில் சத்திரிய வர்ணம் உண்டு; பிராமணர் அல்லாத அனைவரும் சூத்திரரே என்பது ஏற்றுக்கொள்ளத் தக்கதல்ல. தமிழ் மொழி இலக்கண இலக்கிய மரபுகளின் படியும் வாழ்வியலைச் சித்திரிக்கின்ற கல்வெட்டுகள் காட்டுகின்ற நடைமுறைகளின் படியும் வர்ணாஸ்ரம அமைப்பு தமிழகத்திலும் நடைமுறையில் இருந்துள்ளது என்பது தெளிவான ஓர் உண்மையாகும். ஆனால் இந்த அமைப்பு சற்று நெகிழ்ச்சியானதுதான். இறுகி உறைந்துபோன அமைப்பல்ல. அரசியல் காரணங்களாலும், பிரதேசத் தனித்தன்மைகள் அடிப்படையிலும் இந்த வருணாஸ்ரம அமைப்பில் பல்வேறுபட்ட முரண்பாடுகள் இருக்கின்றன என்பது உண்மையே….
…. துளுபட்டர்களும், நம்பூதிரிகளும் தம்முள் மண உறவு கொள்ளாமல் தமது தனித்தன்மையைக் காத்து வந்திருக்கிறார்கள். துளுபிராமணர்களில் மீனவர்களாக இருந்த சிலர் ஐக்கியமாகி இருக்கின்றனர். இதெல்லாம் எப்படி சாத்தியம் என்றால், பலநிறத் தன்மையும் பல பரிமாணங்களும் கொண்ட கலைடாஸ்கோப் காட்சி போன்ற ஓர் இயக்கத்தில் இது சாத்தியம்தான். ஒரு காலகட்டத்தில் இக் காட்சி, இருந்த இடத்திலேயே உறைந்துபோய் நின்று விட்டதுதான் இந்த இயக்கப் போக்கினை நாம் புரிந்து கொள்ள முடியாமலிருப்பதற்குக் காரணம்….
இனி அடுத்ததாகச் சான்றோர் குலத்தவர்கள் வழிபாட்டின்போது தலைப்பாகை அணியவேண்டும் என்று வைகுண்டர் விதித்தது, திருவிதாங்கூர் அரசின் அதிகாரத்தில் இருந்த கோயில்களில் சட்டையைக் கழற்றிவிட்டுத்தான் செல்லவேண்டும் என்று விதிக்கப்பட்டிருந்த நடைமுறைக்கு எதிர்ப்பாக மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கை என்ற பொருளில் கற்பக விநாயகம் விளக்கமளிப்பது அபத்தமானது. கோவிலுக்குள் நுழைவதற்கு முன் சட்டையைக் கழற்றுவது என்பது அரசர் உட்பட அனைத்துக் குலத்தவர்க்கும் (பார்ப்பனர் உட்பட) கட்டாயமாகும். எனவே, இதை ஐயா வைகுண்டர் நடைமுறைப்படுத்திய விதியுடன் தொடர்புபடுத்த முடியாது…..
சான்றோர் சமூகத்தவர் கிராமணிகள் அல்லது கிராமத் தலைவர்களாக இருந்தவர்கள். கிராமத் தலைவர்கள் மகாநவமி என்ற ஆயுத பூஜை விழாவின் போது உஷ்நிஷை எனப்படும் தலைப்பாகையுடன்தான் வழிபாட்டில் கலந்து கொள்ள வேண்டும் என்பது ‘பூர்வ காரண ஆகம விதிமுறை ‘ ஆகும். (அரசன் பிராமணர்களுக்கு தானம் வழங்கியும், கிராம கர்த்தாக்களுக்குத் தலைப்பாகை அணிவித்தும் மகாநவமி அன்று கெளரவிப்பான். அரசன் அம்பு விடும் நிகழ்சியில் தலைப்பாகை அணிந்த கிராம கர்த்தாக்களுடன் இணைந்து பங்கேற்பான் என்று பூர்வ காரண ஆகமம் தெரிவிக்கிறது) கி.பி. 18-ஆம் நூற்றாண்டில் சத்திரிய அந்தஸ்து அடைய முயன்ற சேதுபதி மன்னர்கள் தமது படைத் தலைவர்களில் முதன்மையானவருக்கு மகாநவமியன்று படி துப்பட்டி உருமால் (சால்வை தலைப்பாகை) மரியாதை வழங்கியதாகப் பெருவாய்க்கோட்டைச் செப்பேடு குறிப்பிடுகிறது. இச் செப்பேடு சென்னை அருங்காட்சியகச் சேகரிப்பில் உள்ளது. (சேதுபதி செப்பெட்டுகள் என்ற நூலில் பக்கம் 539-இல் இச் செப்பேடு வெளியிடப்பட்டுள்ளது.)…
…. ஐயா வைகுண்டரின் காலத்தில் நடந்த தோள்சீலைக் கலவரத்தைப் பற்றிய ஒரு முழுமையான சித்திரத்தை யாருமே இதுவரை வெளிப்படுத்தவில்லை. தோள்சீலைக் கலவரம் யாரால் நிகழ்ந்தது; அந்தக் கலகத்தில் யார் முன்னணியில் நின்று பங்கேற்றார்கள் என்ற விவரங்களை மட்டும் முதன்மைப்படுத்தி, அதன் மூலம் அந்தக் கலகத்தில் இடம்பெற்ற சான்றோர் சமூகத்துப் பெண்டிர் இடுப்புக்கு மேல் உடையணிய முடியாத நிலை இருந்தது என்ற அரைகுறை முடிவுக்குப் பல ஆய்வாளர்கள் அவசரமாக வந்து விடுகின்றனர். தோள்சீலை அணியக் கூடாது என்ற ஆணைக்கு எதிர்ப்புக் குரல் கொடுத்தவர்கள் சான்றோர் சமூகத்தின் ஒரு பிரிவினர் மட்டுமே என்பதும், இடுப்புக்கு மேல் ஆடை அணியும் உரிமை பெறாதிருந்த திருவிதாங்கூர் சமஸ்தானச் சமூகத்தின் பெரும்பான்மையினரான சாதியினர் இந்த உரிமையைப் பெறுவதற்கு எந்த முயற்சியிலும் ஈடுபடவில்லை (அதாவது கலகத்தில் ஈடுபடவில்லை) என்பதும், அதனால்தான் இந்தக் கலவரமே ‘சாணார் ரகளை ‘ என்று சம காலத்தில் வழங்கப்பட்டது என்பதும் நாம் தொடக்கத்திலேயே புரிந்துகொள்ள வேண்டிய விஷயங்களாகும்….
அதாவது, எந்த நாயர் சமூகத்து வீரர்கள் சான்றார் குலத்தின் சில பிரிவுகளைச் சேர்ந்த பெண்டிர் இடுப்புக்கு மேல் தோள்சீலையோ, ரவிக்கையோ அனிந்து சந்தை போன்ற பொது இடங்களுக்கு வந்தபோது அவர்களின் மேலாடையைக் கிழித்து அவமதித்தார்களோ அந்த நாயர் சமூகத்தைச் சேர்ந்த ஒட்டுமொத்தப் பெண்டிரும் இடுப்பிற்கு மேல் ஆடை ஏதும் அணிந்ததில்லை என்ற வரலாற்றுப் பின்னணியையும், அதற்கு எந்த உரிமையும் கோரவில்லை என்ற வரலாற்று யதார்த்தத்தையும் எந்த ஆய்வாளரும் முன்னிலைப் படுத்துவதே இல்லை. உண்மையில் நாயர் மற்றும் வேளாளர் சமூகத்து ஆண்கள் சான்றோர் சமூகத்துப் பெண்டிர்கள் மேல் தீவிரமான குரோதம் கொண்டதற்குக் காரணமே தம் சமூகத்துக்குப் பெண்டிர்க்குக் கூட அனுமதிக்கப்படாத உரிமையை இவர்கள் எப்படித் தாமாகவே ஏற்றுக் கொண்டு தலைநிமிர்ந்து நடக்கிறார்கள் என்பதுதான். இன்னொன்றையும் நாம் இங்கு புரிந்துகொள்ள வேண்டும். இடுப்பிற்கு மேல் ஆடை அணியும் உரிமை, ஏன் தலையை மூடி முக்காடிடும் அந்தஸ்து பெற்றிருந்த உயர்குடிப் பெண்டிரில், திருவிதாங்கூரிலும் மலபாரிலும் வாழ்ந்த தம்புராட்டிமார் என்ற அரச குடும்பத்துப் பெண்டிர், அந்தர்ஜனம் என்ற நம்பூதிரிகள் குடும்பத்துப் பெண்டிர், நாயர் சமூகத்தின் மிக உயர்ந்த அடுக்கில் இருந்ததாகக் கருதப்படும் மேனன் பட்டமுடைய குடும்பங்களின் பெண்டிர், சான்றோர் சமூகத்தின் உயர் அடுக்கிலிருந்த – திருவிதாங்கூர் சாமந்த அரசரின் குலத்தை விடத் தங்கள் குலம் உயர்ந்தது என்று ஆணித்தரமாக அறிவித்து வந்த – வலங்கை உய்யக்கொண்ட ரவி குல சத்திரியர் மற்றும் நிலைமைக்காரப் பிரபுக்கள் (நாடார்) குடும்பத்துப் பெண்டிரும் இந்த அந்தஸ்தைப் பெற்றிருந்தனர். (இவ்வாறு முக்காடு அணிவது பெண்ணுரிமைக்கு எதிரானதா என்பது போன்ற வாதங்களைப் பின்னர் பார்த்துக் கொள்வோம்.)
பதிவு செய்யப்பட்டது சில குறிப்புகள் மட்டுமே.முழுவதும் படிக்க…
http://www.thinnai.com/index.php?module=displaystory&story_id=206022412&format=print&edition_id=20060224
“கோவிலில் இருக்கும் சம்ஸ்கிருத மந்திரத்தை தமிழில் மாற்றும் நாள் தான் தமிழர் எழுட்சினால் என்கிறீர்கள். சரி நீங்களே , கோவிலில் படிக்கும் மந்திரத்தை தமிழில் மொழியாங்கம் செய்து இந்து சங்கத்திற்கு அனுப்புங்கள் அல்லது நீங்களே எல்லா கோவிலுக்கும் அனுப்புங்கள் என்றால் “.
சமஸ்கிருத மந்திரத்தை மொழியாக்கம் செய்தல் என்பதல்ல எமது கருத்து. திருமுறைகளே தமிழரின் வேதம். அத்திருமுறைகளே இறைவனுக்கும், தமிழர் வணங்கும் தெய்வங்களுக்கும் ஓத வேண்டிய மந்திரங்களாகும். இதைச் செய்ய இந்து சங்கத்தாருக்கு என்ன தகுதி இருக்கின்றது?. அப்படிச் செய்ய மனமிருந்திருந்தால் 50 ஆண்டுகள் தேவை இல்லையே. இது என்றோ நடந்திருக்க வேண்டுமே. இதை செய்ய வேண்டுவது தமிழர்களால் நிருவகிக்கப் படும் ஆலயங்களே. இந்த மறுமலர்ச்சி தமிழரிடையே வந்தால் போதும். இதற்கான அருச்சகர் பயிற்சி எதிர்காலத்தில் வரும். மலேசிய அருச்சகர்கள் சங்கத்தின் ஒத்துழைப்போடோ அல்லது அதற்க்கு மாற்றான அமைப்போடோ சேர்ந்து துவங்கும் நாள், அந்த நாள் தமிழர் சமய விடியல் நாளாக இருக்கும். கடந்த 100 ஆண்டுகளில் தமிழர் கல்வியிலும் பொருளாதாரத்திலும் கண்ட வெற்றி அவர்தம் சமயத்திலும் காணும் நாள் வெகு தூரமில்லை என்று அறிக. இதற்கு தமிழ் நாடு மூலமாக இருக்குமா அல்லது மலைநாடு மூலமாக இருக்குமா என்று எதிர்வரும் காலங்களில் தெரியவரும். இன்று திணை விதைத்திருக்கின்றோம். அறுவடை நாள் வரை காத்திருக்க நாங்கள் தயார்.
அகஸ்தியரே, பெயர் பட்டியல் போட்டு சாமர்த்தியமாக பதில் சொல்லி விட்டதாக நினைத்தால் அது தப்பு. அவர்களிடம் ஒட்டுமொத்தமாக இருப்பது ஒன்று தங்களிடம் இல்லை. அதுவே வேற்றுமை.
உழவரே இப்பகுதிக்கு வருகை தந்தமைக்கு நன்றி. தங்கள் குறிப்பிட்ட கட்டுரையின் 2-வது பத்தியே போதும். தமிழர் அவர்தம் சமயத்தில் எழுச்சிப் பெற பிறரும் படிக்க அந்த வரிகள் இதோ:
“இத்தனை கலைவேலைபாடுகளைத் திறம்படச் செய்த தமிழன் கடைசியில் மணி அடித்துப் பூசை செய்யத் தெரியாதவனாகிய மடமை எதுவோ, அதுவே தமிழர்களின் வீழ்ச்சி! எந்த ஆரிய பார்ப்பனன் உழைத்துப் பணம் கொடுத்துக் கோவிலைக் கட்டச் சொன்னான்? ஒருவனும் இல்லை. பணந் தமிழனுடையது. உழைப்புத் தமிழனுடையது. கட்டுந் திறம் தமிழனுடையது. ஆனால் கோவில் உள்ளே மணி அடிப்பது பூசனைச் செய்வது சமற்கிருதத்திலும் பூசாரியாக ஆரிய பார்ப்பன். அக் காலத்தில்தான் நம் தமிழ் வேந்தர்களின் அறியாமையால் இந்த தமிழினம் வீழ்ந்தது. இன்றுதான் எந்தத் தமிழப் பேரரசனுக்கோ சிற்றரசனுக்கோ ஒரு கைப்பிடி மண்ணுக்கூட சொந்தமில்லாமல் போயிற்றே, பின் ஏன் இன்னும் தமிழன் ஆரியனுக்கும் சமற்கிருதத்திற்கும் அடிமைப்பட்டே வாழ்கிறான்?
கல் தோன்றி மண் தோன்றா காலத்து தோன்றிய தமிழன் என்றால், மான ஈன ரோசம் உள்ள தமிழன் என்றால் தமிழ் வேதமாகிய திருமுறைகள ஓதி இறைவனை வாயார வாழ்த்தட்டும். சமஸ்கிருத மொழியில் தெய்வங்களை அசிங்கப் படுத்திக் காட்ட வேண்டாமே. தமிழர் அவர்தம் சமயத்தை அறிந்து திருந்துவார். அந்த எழுச்சி நாள் வந்தே தீரும்.
அவர்களிடம் ஒட்டுமொத்தமாக இருப்பது ஒன்று தங்களிடம் இல்லை.
தேனீ ,எப்படி உங்களால் மட்டுமே இப்படி யோசிக்க முடியுது ?ரூம் போட்டு யோசிபபிர்களோ? மனமாச்சரியமே உங்களை இப்படி பேச எழுத தூண்டுகறது என்று நினைக்கிறேன்.உங்களுக்கு ஆறு வித்தியாசங்களை தேடுவது பழக்கப்பட்டுவிட்டது போலும். என்னையும் ,அந்த பட்டியலில் உள்ளவகர்ளையும் கஷ்ட்டப்பட்டு தேடி தேடி ஒரு வித்தியாசத்தை மட்டுமே உங்களால் கண்டுப் பிடிக்க முடிஞ்சது.பரவையில்லை not so bad.ஆனால் அதில் உள்ள ஒற்றுமையை தேடினீரா?.அது உங்களுக்கு தெரியல தானே.இதில் தான் உங்களுடைய பேச்சிலும்,எழுத்திலும் நீங்கள் நிறைய FAIL ஆகிவிடுவதற்க்கு காரணம்..அதில் எத்தனை ஒற்றுமைகள் உள்ளன என்று பார்த்தீரா?நன்கு பாருங்கள் நிறைவே காண்பீர்கள்.
நிறைய எழுதுங்கள்,வசைப்பாடுங்கள்,அரட்டை அடியுங்கள் ஆனால் இதில் மிகவும் ஜாக்கிரதை தேவை.இதுவே சரித்ரத்தில் நாம் படிக்கிற கொடூர காலமும், இருண்டகாலமும் ஆகிவிடுகிறது.பொது சேவைக்கு இதுவே இடஞ்சளாகி விடும்.
அகத்தியரே, தங்கள் கருத்துக்களில் தமிழின் மாண்பைப் பற்றி தங்களால் பேச முடியவில்லையே!. தமிழன் பிறரால் பாதிக்கப் பட்டனர் என்பதை குறித்தால் உடனே அதற்கு இரவு பகலாக இணையத்தில் சுற்றி எதிர் கருத்து தேடி எழுதுகின்றீர்களே அதுதான் அந்த வேற்றுமை. இதற்கு அறை எடுத்து சிந்திக்க வேண்டிய அவசியமே இல்லை. சட்டியில் உள்ளதுதான் அகப்பையில் வரும் என்பதை அறிந்து கொண்டேன்.
ஏன் என்ற கேள்வி இங்கு கேட்காமல் வாழ்க்கை இல்லை..பகுத்தறிவு பிறந்ததெல்லாம் கேள்விகள் கேட்டதனாலே..என்பது கவிஞர் வாலியின் வரிகள், கேள்வியே நாகரீகம்,பண்ப்பாட்டின் மூலம்.ஒரு தலைப்பை எடுத்து பேசுகிறிர்கள் எதிர் வாதமாக ஒரு கருத்தை கூறினாலோ,கேள்வி கேட்டாலோ உடனே உங்கள் கருத்தை எதிர்பவன் என்று எப்படி எடை போடுகிறீர்கல்?வார்த்தைக்கு வார்த்தை உங்களை ஆமோதிக்க வேண்டும் என்று எதிர்பர்க்கிறீகளா?பொது களத்தில் இறங்கிவிட்டோம்,உங்கள் வாதத்தை நீங்கள் வைக்கிறிர்கள்,என் வாதத்தை நான் சொல்கிறேன்,மற்றவர்களும் அவர்கள் பங்காக அவர்கள் கருத்தை தெரியப் படுத்துகிறார்கள். அதனால் தானே இந்த தளத்தில் 177 comments பதிவாகி இருக்கிறது. நம்முடைய அனுபவத்தை மட்டும் பேசினால் அது செவி ஞானமாக மட்டுமே இருக்கும்.முன்பெல்லாம் புத்தகத்தை refer பன்னுவோம் அல்லது ஒருவரை quote பன்னுவோம்.இப்போவெல்லாம் தேவையான கருத்தை இணையத்தை சொடுக்கி நமால் உடனே காண்பிக்க முடிகிறது.இதில் என்ன தவறு? ஒரு பொருளுக்குரிய தேடலை எல்லோர்ராலும் செய்ய முடிவதில்லை.மாறுப்பட்ட கருத்தை தேடுபவர்களும் உண்டு.இதன் மூலம் ஒரு விவாதத்தை கிளப்ப முயற்ச்சித்தேன்.நம்முடைய வாதத்தில் நிறைய கற்றுக்கொண்டோம்.எங்களுடைய கேள்விகள் இல்லாதிருந்தால் உங்களுடைய கருத்தை இவ்வளவு விரைவாக உங்களால் கொடுத்திருக்க முடியுமா?.(நிற்க)
( இணையத்தில் சுற்றி எதிர் கருத்து தேடி எழுதுகின்றீர்களே அதுதான் அந்த வேற்றுமை.)அந்த வேற்றுமைய தான் குறிபிட்டிர்களா.இது என்ன அழுத்தப் பிள்ளைக்கு அல்வாவா?..பரவாயில்லை.மேலும் தொடர்வோம்.
தேனீ அவர்களே, அகஸ்டின் கேட்கிறார் : ரூம் போட்டு யோசிபபிர்களோ? என்னதான் நான் சிரிப்பை மறைத்தாலும், குபீர் என வந்து விட்டது ஐயா….முதலில் சம்ஸ்கிருத மந்திரத்தை ஏற்க்க முடியாது என்றீர்கள். சரி தமிழ் மொழியாக்கம் செய்யுங்கள் என்றால் , முடியாது காரணம் நீங்கள் கூரும் புத்தகம் தான் படிக்க வேண்டும் என்கீறீர்கள் ….. ரூம் போட்டு யோசிபபிர்களோ? நான் ஆரம்பத்திலிருந்து கேட்கிறேன், இறந்த பின்பு மனிதனின் நிலையை எந்த எந்த பூத்தகங்கள் தமிழ் விளக்குகின்றன…. மறு பிறவி உண்டா ? கனவு எப்படி வருகிறது ? சந்தியா வந்தனம் எப்படி சம்ஸ்கிருத மந்திரம் இல்லாமல் பயில்வது …? மறுப்படியும் ரூம் போட்டு விடாதீர்கள் ….
“இறந்த பின்பு மனிதனின் நிலையை எந்த எந்த பூத்தகங்கள் தமிழ் விளக்குகின்றன…”.
உயிர் உடலை விட்டு பிரிந்த பின்பு மனிதன் இல்லையப்பா!. மாயாகாரியத்தால் ஆன அழியக்கூடிய பரு உடல் மட்டும்தான் உமது கண்ணுக்குத் தெரியும். உடலை விட்டுப் பிரிந்த உயிரின் நிலை என்ன என்று தெரிய வேண்டுமானால் சித்தாந்தம் பயிலுங்கள். விடை தானாக கிடைக்கும். அதைப் படிக்காமல் இந்து மதப் புலவர் ஆகலாம். ஆனால் சித்தாந்தியாக முடியாது. மெய்கண்ட கண்ட சாத்திர நூல்களே உயிர் உடலைப் பெறுவதற்கு முந்திய நிலையையும், உயிர் உடலை விட்டுப் பிரிந்த பிறகு அதற்குரிய நிலையையும் விளக்கும். முதலில், திருவருட்பயனில் இருக்கும் “உயிரவை நிலை” என்ற அதிகாரத்தில் 10 குறள்களை கற்றுணர்ந்து அதன்பின் உயிர் விளக்கம் எனும் அதிகாரத்தில் இருக்கும் 10 குறள்களையும் படித்து விட்டு பொருள் அறிந்துக் கொண்டு இங்கே விளக்குங்கள். அப்புறம் மேலும் தகவல் கொடுக்கின்றேன். முன் எச்சரிக்கை சித்தாந்த அறிவில்லாமல் அந்த குறள்களை கற்றுணர முடியாது என்பதை அறியவும். அடிப்படை சித்தாந்தம் பயின்றிருந்தால் மட்டுமே மேற்கூறிய குறள்களின் உண்மை விளக்கம் தெளிவாகும். இல்லையேல், விடிய விடிய இராமாயணம் கேட்டு விடிந்ததும் இராமர் சீதைக்கு சித்தப்பாவா என்று கேட்ட கதையாகத்தான் இருக்கும்.
வேற்றுமை என்று சொன்னது கட்டுரை தலைப்பை அறிந்து “தமிழுக்கான உலக மொழி அங்கிகாரம்”, தங்கள் கருத்தில் சிறிதும் உதிர்க்கவில்லையே. அதைத்தான் வேற்றுமை என்றேன். அதற்குப் பதிலாக பிற மொழி பாராயனமே தங்கள் கருத்தாக இருப்பதையே வேற்றுமை என்றேன். தமிழ் பற்று எங்கே போனது?.
“சந்தியா வந்தனம் எப்படி சம்ஸ்கிருத மந்திரம் இல்லாமல் பயில்வது …?”.
இதுதான் தமிழர் சமயம் அறிந்தோருக்கும், அவ்வாறு அறியாதோருக்கும் உள்ள வித்தியாசம். சமஸ்கிருத மந்திரம் இல்லாமல் சந்தியா வந்தனம் எப்படி செய்வது என்றால் தமிழர் சமயத்தை முதலில் தெரிந்து கொள்ளுங்கள். அப்புறம் தங்கள் கேள்விக்கு தானாகவே விடை கிடைக்கும். அறவே தமிழரின் அருள் நூல்களைப் படிக்காமால் இங்கே இந்து மதப் பிரச்சாரம் செய்கின்றீரே அதிலிருந்தே தெரிகின்றது தங்களின் அரை குறை இலட்ச்சணம். இதில் வேறு உண்மைத் தமிழன் என்று ஒரு படையைச் சாற்றிக் கொள்கின்றீர். இப்படி எத்துனை பேர் “தமிழன்” என்ற போர்வைக்குள் மறைந்திருக்கிண்றீர்கள்?.
தமிழர் கண்ட திருமுறைகளே தமிழர் தம் இறைவனை வணங்குவதற்கு உரிய மந்திரங்கள். அவற்றைக் கொண்டு இறைவன் திருமேனியை வழிபட்டோர் நால்வர் பெருமக்கள். இறைவன் திருமேனிப் போற்றுதல் என்பது தென்னவர் கண்ட இறை வழிபாடு. இத்திருமேனி வழிபாட்டிற்கு ஆலயம் அமைத்து வழிபட்டவர்களில் முன்னோடியாக திகழ்ந்தவர் தமிழர். நால்வர் பெருமக்களே சைவர்களுக்கு குருமார்கள். அவர்கள் காட்டிய வழியே எம் வழி. ஆரிய வேதத்தில் உள்ள சமஸ்கிருத மந்திரங்கள் வேள்வி வழிபாட்டிற்க்கென உருவாக்கப் பட்டவை. அவை இறைவன் திருமேனி வழிபாட்டிற்கு உரியனவை அல்ல. ஆரிய பிராமணர் திருமேனி வழிபாட்டைக் கொண்ட ஆலயங்களில் புகுந்த பிறகு தங்களுக்கு ஏற்றவாறு சமஸ்கிருத மந்திரங்களை ஏற்படுத்திக் கொண்டனர். இதை இல்லை என்று மறுத்தால். யசூர் வேத மந்திரங்களை இங்கே கொண்டு வர முடியும். அதனால் வரக்கூடிய பின் விளைவுகளுக்கு தயாரா?. தமிழரின் வேதமாகிய திருமுறைகளே தமிழர் இறை வழிபாட்டிற்கு உரிய மந்திரங்கள் என்பதால் இங்கே சமஸ்கிருத மந்திரம் திருமேனி வழிபாட்டிற்கு அவசியம் இல்லை என்பதை அறிக.
கற்றவர்களே! தமிழ் மொழியின் துணை இல்லாமல் சமஸ்கிரிதம் அசையுமா? சமஸ்கிரிததிற்கு தமிழ் மொழியின் துணை தேவையா?
இறைவன் திருமேனிப் போற்றுதல் என்பது தென்னவர் கண்ட இறை வழிபாடு.” சிவத்தின் திருமேனியை விளங்குவது லிங்கம் அல்லவோ ? நீங்கள் தான் சொன்னீர்கள் சிவம் ஒரு ஒளி என்று … வள்ளலார் போல …. அப்படியே அந்தர்பல்டி அடிக்கீரிர்கள் ….”தமிழர் கண்ட திருமுறைகளே தமிழர் தம் இறைவனை வணங்குவதற்கு உரிய மந்திரங்கள். அவற்றைக் கொண்டு இறைவன் திருமேனியை வழிபட்டோர் நால்வர் பெருமக்கள்.” ஆனால் அவ்வபோது திருமூலரையும் அலைகிறீர்களே………எதையோ செய்யுங்கள் ….
ஊத்தி கொடுத்தாண்டி ஒரு ரவுண்டு
இந்த உலகம் சுத்துதடி பல ரவுண்டு…
ஆறெல்லாம் கள்ளானால் அதுக்குள்ளே
நான் விழுந்து நீச்சல் அடிப்பேன்..
என்கிற பாட்டுத்தான் நினைவில் வருகிறது.பரவாயில்லை மேலே தொடர்வோம் என்று தானே சொன்னேன்.பின் ஏன் இன்னும் ஒரு புது விளக்கம் கொடுத்து எங்க அப்பன் குதிருக்குள் இல்லை என்கிறீர்.கீழே உள்ள ஒன்றுக் கொன்று பொருந்தாத பதிவை பாருங்கள் மேலே உள்ள பாடலின் அர்த்தம் புரியும்.
அகஸ்தியரே பெயர் பட்டியல் போட்டு சாமர்த்தியமாக பதில் சொல்லி விட்டதாக நினைத்தால் அது தப்பு. அவர்களிடம் ஒட்டுமொத்தமாக இருப்பது ஒன்று தங்களிடம் இல்லை. அதுவே வேற்றுமை. Theni wrote on 5 March, 2015, 0:29
தமிழன் பிறரால் பாதிக்கப் பட்டனர் என்பதை குறித்தால் உடனே அதற்கு இரவு பகலாக இணையத்தில் சுற்றி எதிர் கருத்து தேடி எழுதுகின்றீர்களே அதுதான் அந்த வேற்றுமை.Theni wrote on 5 March, 2015, 12:09
வேற்றுமை என்று சொன்னது கட்டுரை தலைப்பை அறிந்து “தமிழுக்கான உலக மொழி அங்கிகாரம்”, தங்கள் கருத்தில் சிறிதும் உதிர்க்கவில்லையே. அதைத்தான் வேற்றுமை என்றேன். அதற்குப் பதிலாக பிற மொழி பாராயனமே தங்கள் கருத்தாக இருப்பதையே வேற்றுமை என்றேன். தமிழ் பற்று எங்கே போனது?. Theni wrote on 6 March, 2015, 1:08.
மேலே உள்ளதை படித்து எனக்கே தலை சுற்றியது.எனக்கு தமிழ் பற்று ஊண்டா இல்லையா என்பதை சொல்லித்தான் ஆக வேண்டும் என்றால் முன் பதிவுகளில் பாருங்கள்.உம்முடைய வாதமும் தமிழ் பற்று பற்றியோ தமிழர் மாண்பு பற்றியோ இல்லை.அவை வெறுமே சமஸ்கிருதமும் எதிர்ப்பும் ,பிராமிணிய எதிப்புமாகவே இருந்தது. இதில் நான் மட்டும் அல்ல,பலர் எதிர் வாதம் வைத்தனர்.ஒரு சிலரின் கருத்து சமஸ்கிருதமும் மற்ற மொழிகளைப் போல் ஒரு மொழியே என்கிற அடிப்படையில் எழுதினார்கள்.
சற்று கவனியுங்கள்.முன்பு இருந்த சமஸ்கிருத எதிபாளர்களையும் இருவகயினராக பிரிக்கலாம்..ஒரு சாரார் தமிழ் மொழியில் சமஸ்கிருதத்தின் தாக்கத்தை எதித்தும் மற்றொரு சாரார் கோயில்களில் சமஸ்கிருதத்தையும் எதிர்த்தனர்.தமிழ் மொழியில் வட மொழியை எதிர்த்தவர்கள் பெரும்பாலும் ஆஸ்திகர்கள்.(நீங்கள் சொல்லியது போல் ஆசிரியர்களின் ஆதரவு இருந்தது).இவர்கள் பெருபாலும் கோயில் வழிப்பாட்டில் உள்ள சமஸ்கிருதத்தை எதிர்க்கவில்லை. மற்றொரு சாரார் பெரும்பாலும் நாஸ்திகர்கள்.இவர்கள் தான் சமஸ்கிருத மொழியில் உள்ள கொச்சையான வார்த்தைகள கூக்குரலிட்டு இந்து மதத்தை சந்தைக்கு கொண்டு வந்தவர்கள்.ஆனால் இவர்கள் வீட்டுப் பெண்களும் ,சில வேளைகளில் இவர்களும் சேர்ந்தே கோவிலுக்கு சென்று சமஸ்கிருத மந்திரம் ஓத அர்ச்சனை செய்துவிட்டு குடும்ப சகிதமாக வருவார்கள்.இது முன்பெல்லாம் சற்று மறை முகமாக நடந்தது ,இப்பொழுதெல்லாம் பகிரங்கமாக போய் வருகிறார்கள். வாழ்க்கையில் இதுவெல்லாம் சகஜம்மையா என்று சொல்வீரா?இவர்களளெல்லாம் அரசியல்வாதிகள் தானே என்று நீங்கள் சொன்னாலும்,அவர்களைத் தானே தமிழ் போராட்ட தலைவர்கள் என்று நீங்கள் எல்லாம் சுட்டி காட்டுகிறிர்கள்.ஒரு விஷயத்தை கூர்ந்து கவனித்தால் உங்களுக்கு ஒன்று புரியும்.உலகலாவ பரவி இருந்த இந்து மதத்தை இந்துத்துவாக்கள் இந்தியாவிற்குள்ளாகவே கொண்டு வந்தார்கள் .நம்முடைய வாய்வீச்சில் வீரரான சம்ஸ்கிருத எதிர்ப்பாளர்கள் அதை தமிழ் நாட்டிக்குள்ளாகவே கொண்டு வந்தார்கள். அதை இன்று நால்வருக்குள் அடக்கிய ஜகஜால கில்லாடி நீங்களாகத் தான் இருக்க முடியும்.
ஒவையார் அணுவை பிளந்து கடலை புகுத்தி திரிகத் தரித்த குறள்
என்றார்.அந்த திருக்குறளையும் மிஞ்சி விட்டீர் அய்யா நீர். வாழ்த்துக்கள்.
தன் ஜீவன்,சிவத்தின் வடிவம் அறியாதவர் எப்படி ஐயா இன்னொருவரிடம் விளக்கி கூறுவீர்? அப்படியே அறிந்தாலும் எப்படி உவமை படுத்துவீர்? பரம்பொருளின் தொழிலை சேயோன் மற்றும் அவர்தம் 18 தமிழ் சித்தர்களும் மானிட பிறவிகளுக்கு வழி காட்டியவர்கள்.அவர்கள் பல்டி அடிக்க தேவை இல்லை ஐயா! அறியாமை,தாங்கள் என்ன செய்வீர்?