தமிழ் மொழி உலகில் சிறந்த மொழிகளில் ஒன்று என்ற அங்கிராம் கிடைத்து நடந்த( முதல்) உலகத் தமிழ் 9 தாவது ஆராய்ச்சி மாநட்டில் ஒரு உண்மை மறைக்கப்பட்டது.. இது ஒன்பதாவது உலகத்தமிழ் மாநாடா ? உலகத் தமிழ் 9 தாவது ஆராய்ச்சி மாநாடா என்ற இலக்கிய பிழையையும் உங்களிடம் விட்டு விடுகிறேன். ஒன்பதாவது உலகம் எனபது அந்த கிரகத்தில் என்னை மரணிக்க செய்ததது. ஆனால் என் தமிழ் உதிரம் என்னை மீட்டது!
ஆராய்ச்சியில் அடிப்படையில் கோளாரா? மாரிமுத்து PHD தான் பதில் சொல்லவேண்டும்? இதுபோலவே வீரமணியும் பழமையை உளறினார் ? பொய்மையால் கருப்பு மை தடவினார்!
மாநாட்டில் வீரமணி உரையில் தமிழ் மொழி உலகசசிறந்த மொழிகளில் 6வது இடத்தில தமிழ் மொழி உண்டு என்பதை சொல்ல வில்லை ! உலக மொழி அறிஞர்கள் அங்கிகாரம் வளங்கியுள்ளதையும் அதற்கு ஆய்வு செய்த தமிழர் மொழி ஞாயிறு தேவ நேயப் பாவாணர் பெயரையும் குறிப்பிடவில்லை ? மாறாக பிறகு தமிழ் மாநில அரசு கொண்டாடிய செம்மொழி மாநாட்டில் தமிழுக்கு செம்மொழி புகழ் சேர்த்த நிகழ்வை நினைவு படுத்தி செம்மொழி ஆய்வுகளை எழுதிய சுமார் பத்து பேர்களை வாசித்தார். அதில் ஒருத்தர் கூட தமிழன் இல்லை. உலக மொழி அந்தஸ்து பெற 11 இலக்கிய இலக்கண அம்சங்களை ஆய்ந்த மொழி ஞாயரின் குறிப்பை இந்த செம்மொழி காப்பி அடிச்சாங்கள் சொன்னதாக பொய் சொல்லிவிட்டார். தமிழை உலகசசிறந்த மொழி என்றப்பின் அதற்கு செம்மொழி என்று அரசியல் தன மாநாடு நடத்திய திராவிட கூட்டம் தமிழர்களை ஏமாற்ற நடத்திய நாடகம். தமிழக தமிழர்களை தமிழ் என்ற ஆயுதத்தில் ஆளுமையில் அரசியல் அரசு முதலீடு செய்த இதரவ வந்தேறிகள் கூட்டம் இதுவரை நம் தமிழர் மண்ணுரிமையில் தமிழ் பெயரால் தொடர்ந்து அட்டகாசம் செய்கின்றனர்.
இதை அறியாத பேதைமை சாமிவேலு அந்த தெலுங்கர் உரையில் மதி மயங்கி விட்டதாக அறிவிலித்தனமாக பேசினார். என் குருதி கொதித்தது. ஆய்வும் அறிவும் இல்லாத தெலுக்கு ஒடுகாளிகளிகளை வைத்து தமிழ் ஆராய்ச்சி மாநாடுகள் நடத்த வேண்டிய பிச்சை புத்தி ஏன் என்கிறேன். பினாங்கு சர்வதேச தமிழ் மாநட்டில் ராமசாமி வைகோ என்ற தெலுங்கனை வர வைத்து மாநாட்டை நடத்தினார் தமிழகம் சென்ற வைக்கோ தமிழர் தேசியத்தை வசைப்பாடி அதை வளர விட்டக் கூடாது என்று தமிழர்களிடம் சொன்னார்.
மாட்டில் நடமாடிய அனேக தெலுங்கு மலையாள வேடர்களை பார்த்தேன் …தோழர் தமிழர் முத்து சந்திரன் சொன்னது போல முதல் நாட்டியம் சமஸ்கிரத பாட்டுக்கு பாகங்கள் பற்றி இச்சைத்தன ஆடைகள் அதுவும் இதுவும் தெரியும்படி ஆடினார்கள். தமிழன் கலை எது ?தமிழ் ஆராய்ச்சி மாநாட்டில் நாட்டிய மணிகள் என்றால் சமஸ்கிரத பாட்டுதானா ? தெலுங்கு கூட்டம்தனா ? தெலுங்கன் மலையாளி மாநாடுகளில் ஒரு தமிழனை தமிழச்சியை இவர்கள் சேர்ப்பார்களா? தெலுங்கு மாநட்டு கண் காட்சியில் என்னதான் உடு என்று பார்க்கப்போன என்னை “உனக்கு இங்கே என்ன வேலை?” என்று ஒரு தெலுங்கன் கேட்டான் …எங்கள் தமிழர் பொருட்ட்களை வைத்து உங்கள் கண் காட்சி என்கிறாய் உனது ரத்தத்தை கீறி பார் தமிழன் விந்து ஓடும் என்றேன்.
இப்படியாக தமிழ் வழி சொறி எலிகளாகா உள்ளே புகுந்து நமது சட்டி பானைகளை நோண்டி நோட்டமிட்டு இன ஓட்டை போடும் வீரமணி வைக்கோ விஜயகாந்த் கருணாநிதி ஈவேரா அரசியல் டென்கிகள் தமிழச்சி மணி அம்மையை அனாதையாக விட்ட திராவிட பண்பாடு தெரியுமா? தமிழர்கள் கொடுத்து வைத்த கோடான கோடி திரவிட சொத்துக்களை தெலுங்கர் வீரமணி போட்டுக்கொண்ட கதை தெரியுமா? பாதி தமிழனாக மீதி குடம்பவியல் தெலுங்கனாக வாழும் மாநாடு மட்லோடுகள் ஆடும் நாடகத்தை தமிழர்கள் புரிதல் வேண்டும்.
நேற்று பெருஞ்சித்தனார் மகன் பூங்குன்றன் அவர்களையும் மறை மலை அடிகளார் பேரன் மறை தி .தாயுமானவன் இருவரையும் நாம் தமிழர் ,தமிழர் களம் ,தமிழர் தேசியம் ,தமிழர் பாதுகாப்பு இயக்கங்கள் சந்தித்து உரையாடல் தமிழ் களம் கண்டோம். மொழி வளம் நன்றாக் உள்ளது இன வளம் மண்ணடியில் உள்ளது,நமது அரசியல் அரசு முன்னுரிமைகள் பாதுகாக்க தமிழர் தேசியம் நகர்வுகளை அரசியல் நினைவில் தமிழக தமிழர்கள் உணர்வு பெற வேண்டும் தமிழன் உணர “தமிழர் தேசியம் அரசியல் மாநாடு” நடத்த வேண்டும் என்ற கோரிக்கையை முன் வைத்தோம்.
எங்கோ ஆரம்பித்து அரசியல் வியாக்கானம் என்று யோசிக்கலாம் ? சாமி வேலு வீரமணி திராவிட கூட்டத்தில் தமிழே தெரியாத கூடிகெடுத்த பழனிவேல் அரசியல் பேசும்போது இந்த கலப்படம் ஒன்றும் தப்பில்லை.
பிரதமர் வாய் கிழிய மலேசியாவின் தமிழ் தமிழன் உணர்வு பேசினார் ஒரு இதர மொழி ஊடகமும் ஒரு வரி ஒன்னும் எழுதவில்லை இன மொழி அழுத்தம் எங்கனம் உள்ளது என்று ஆராயுங்கள்? கடுப்பில் முஹிடின் நிறைவுக்கு போக வில்லை போனவர்கள் எழுதினால் உங்கள் பங்கையும் தமிழ் இனம் பரிசீலிக்கும் .. தொடர்வேன்.
தமிழன்புடன் .
-ம .அ. பொன் ரங்கன்
இயக்குனர் தமிழர் தேசியம் மலேசியா
தொல்காப்பியர் 2,500 ஆண்டுகளுக்கு முன்னரே சொல்லதிகாரத்தின் எச்சவியலில் சொற்களின் வகை என்று குறித்த பகுதியில் இருக்கும் சூத்திரத்தை (397) குறித்து கேள்வி கேட்டவரே, இதற்குப் பதில் தங்களுக்கே சொல்லத் தெரியாமல் எம்மிடம் கேட்டு தாங்கள் தப்பித்துக் கொள்வதேனோ?.
“இயற்சொல் திரிச்சொல் திசைச்சொல் வடசொல் என்று
அனைத்தே செய்யுள் ஈட்டச் சொல்லே.”
இதன் சுருக்கமான உரைநடை தெளிவு, இயற்சொல், திரிசொல், திசைச்சொல், வடசொல், என்ற குறியீடு பெற்ற சொற்கள் எல்லாமே … தமிழ்ச்செய்யுளை உருவாக்கும் சொற்கள் என்பது.
வட சொல்லையும் கொண்டு தமிழ்ச் செய்யுள் உருவாக்கக் கூடியதே என்று தொல்காப்பியர் குறித்திருக்கின்றாரே என்று சொல்ல வருகின்றீரா!. “வடசொல்”, தமிழில் “சேர்க்கையால்” (‘assimilated’) வந்த சொல். அது தமிழுக்கு இயற்கைச் சொல் அல்ல என்பது தெளிவு. இல்லையேல் அதனை தனிப்படுத்தி தொல்காப்பியர் சொல்வானேன்?. இச்சூத்திரத்தை பிற தமிழ் அறிஞர்கள் எவ்வாறு விளக்கி உள்ளனர் என்று சம்ஸ்கிருத ஆர்வாளர் ஒருவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார் (இக்கருத்தில் அவர் ஐயம் எழுப்பி உள்ளார் என்பது வேறு கதை):
“வடசொல்லைத் தமிழில் எவ்வாறு பயன்படுத்துவது என்பதை விளக்க “ஒரீஇ’ என்ற சொல்லை தொல்காப்பியர் பயன்படுத்தியுள்ளார். வடசொல் என்பது சமஸ்கிருதத்தைக் குறிக்கும் என்ற கருத்து பரவலாக உள்ளது. பேரா.தொ.பொ.மீனாட்சிசுந்தரம் போன்றவர்கள் வடசொல் என்பது சமஸ்கிருதம் மட்டுமின்றி, பிராகிருதம் மற்றும் பாலி மொழிகளையும் குறிக்கும் என்று கருத்து தெரிவித்துள்ளனர்.(A History of Tamil Language -1965 – பக்கம் 171) இது தொடர்பாக பேரா. ந.சஞ்சீவி தனது “தமிழியல் கட்டுரைகள்’ நூலில், முனை.ம.இராசமாணிக்கனாரின் கீழ்வரும் கருத்தை மேற்கோள் காட்டியுள்ளார்.
“If grammarians before Tolkappiyar had given the rules for using Sanskrit words in Tamil language, Tolkappiyar would certainly have referred to these rules and end his sutras as “Enpa” (என்ப) ” Enmanar pulavar” (என்மனார் புலவர்) etc. Since he has not made any reference to such rules of grammar, it is evident that Tolkappiyar himself framed these rules. In his days some Sanskrit words might have penetrated into Tamil language and it was perhaps not possible to ignore or neglect the use of those words ; hence Tolkappiyar found it, as a necessity to frame rules to suit the genius of the language.”(“The date of Tolkappiam” in the Annals of Oriental research- vol XIX-part II).
வடசொல்லைத் தமிழில் பயன்படுத்துவது குறித்த தொல்காப்பியரின் நெறிமுறையில் “என்ப’ அல்லது “என்மனார் புலவர்’ என்று அவருக்கு முந்திய காலத்து சூத்திரங்கள் குறிப்பிடப்படவில்லை என்பதை இந்த மேற்கோள் தெரிவிக்கிறது. பேரா.இலக்குவனாரும் இதே கருத்தை வெளிப்படுத்தியுள்ளதாக அவரது மகன் பேரா.மறைமலை இலக்குவனார் என்னிடம் தெரிவித்தார். ஆனால் தொல்காப்பியம் மூலத்தைப் படிக்கும்போது இக்கருத்து தவறோ என்ற ஐயம் எழுகிறது.”
மேற்கூறிய பேராசியர்களை விட நான் என்ன பெரிய தமிழ் அறிஞனா?. ஆகவே அவர்களின் கருத்தே எமது கருத்தாகவும் ஏற்றுக் கொள்வீர்.
மொழி இலக்கணத்தில் பிற மொழி சொற்களை எடுத்து ஒரு மொழியில் சேர்பதற்கு ஓர் இலக்கணம் வகுப்பது இன்றியமையாதது. தொல்காப்பியரின் காலத்திலேயே தமிழில் வடசொல் பயன்படுத்தப் பட்டிருப்பதற்கு வாய்ப்பு உள்ளதால் அதை தமிழாக்கம் செய்வதற்கு (‘to assimilate”) ஒரு இலக்கண வரம்பு வேண்டும் என்று எண்ணி சொல்லிய தொல்காப்பிய சூத்திரம் கீழ்காணுமாறு:
“வடசொல் கிளவி வடஎழுத்து ஒரீஇ,
எழுத்தொடு புணர்ந்த சொல் ஆகும்மே.
சிதைந்தன வரினும், இயைந்தன வரையார்” (சொல்: 5 :6)”.
தொடரும்.
நாம் இங்கே வாதிடுவது தமிழ் மொழியில் பிற மொழிகளின் சேர்க்கையைப் பற்றியது அல்ல என்ற தெளிவு வேண்டும். யாம் இங்கே வாதிடுவது தமிழ் மொழியின் மீதோ, தமிழரின் மீதோ பிற மொழிகள், சமஸ்கிருதம் உட்பட, “ஆதிக்கம்” செலுத்தக் கூடாது என்பதுதான். இதில் என்ன தவற்றைக் கண்டீரோ?. உம் தாய்மொழியை புறக்கணித்து வீட்டு மாற்றான் மனைவியை தொட்டுக் கொள் என்பதும், கட்டிக் கொள் என்பதும் எவ்விதத்தில் நியாயம்?. அவர்தம் தாய்மொழியையும் படிக்காமால், அவர்தம் தாய்மொழியையும் விட்டு விட்டு பேதையாய் நிற்போர் மாற்றான் மொழியைக் கட்டிக் கொண்டு அவ்வாறே தமிழரையும் மற்ற மொழிகளுக்கு வழிவிடுங்கள் என்று மடைமாற்றம் செய்வது, மறைந்திருந்து தமிழரின் முதுகில் குத்துவதர்க்குச் சமம் என்று அறிக. நாங்கள் தமிழ் மொழி சீர்த்திருத்தம் என்பது எங்கள் மொழியை அழிவிலிருந்து தர்காக்கவே. முடிந்தால் எங்களுடன் சேர்ந்து ஒத்துழையுங்கள் இல்லையேல் எங்களை விட்டு நீங்குங்கள். தமிழக்கு பகைவரானால், தமிழர் அவ்வாரனவரை விட்டு நீங்குவதால் தமிழ் இன்னும் பல்லாயிரம் ஆண்டுகளுக்கு வாழும் என்பதை அறிந்துதான் சொல்கின்றேன்.
வட சொல் என்பதும், வட மொழி என்பது என்னவென்பதை அறியாமல் பலர் தங்கள் மனதிற்கு தோன்றியதை எல்லாம் கற்பித்துக் கொண்டு கருத்தாடுவது முறையல்ல. வடமொழி என்பதே தமிழ் மொழி கலந்த பிற மொழிகளைக் குறிப்பதாகும். சமஸ்கிருதம் என்ற செயற்கை மொழியும் இதில் அடங்கும். வடசொல், வடமொழி என்பதானது இந்தியக் கண்டத்தில் பண்டைய தமிழகத்திற்கு வடக்கே தமிழ் கலந்து பேசப் பட்ட பிராகிருத, பாலி மொழிகளையும் குறிக்கும் என்பதை அறிக. இது சமஸ்கிருத மொழியை மட்டும் குறிக்கும் என்பதானது தவறான கருத்தாகும்.
தேனீ >
” தாம் விரும்பாத தமிழரின் இறை சிந்தனையை பற்றி ஏன் தெரிந்துகொள்ளவேண்டும் என்ற இறுமாப்பே காரணம்..”” என்ற உமது கருத்து 100 % சரியே !!
அந்த வரியில் “தமிழரின் இறை சிந்தனையை ” இன்ற இடத்தில் “” பழம்பெரும் சமஸ்கிருதத்தையும் :வேதங்களையும் “:” என நாங்கள் மாற்றி போட்டு வாசித்தால் தகுமோ ??
நண்பர் தேனீ அவர்களே, அடுத்தவன் என்ன செய்ய வேண்டும் என்று நீங்கள் குறிப்பிடுவதை விட, நீங்கள் என்ன தமிழுக்கு செய்தீர்கள் என்று பட்டியலிடுங்கள், உங்கள் புகழ் பரவும். அதை விடுத்து, சமஸ்கிருத்தத்தை திணிக்க முயள்கிறார்கள் என்று குற்றம் சாட்டுங்கிரீர்கள் தவிர நீங்கள் என்ன செய்தீர்கள் என்றால், வாதிடுபவர்கள் ஆரியர்கள் / பார்பனர்கள் என்க்ரிர்கள். மலேசியாவில் உள்ள எந்த ஒரு தமிழ் பள்ளியிலாவது சமஸ்கிருதம் படியுங்கள் என்று சொல்கிறர்கள ? எந்த ஒரு செய்தி தாள் சமஸ்கிருத்தத்தில் வருகிறதா ? எந்த ஒரு சம்ஸ்கிருத வகுப்பிர்காவது தமிழ் மாணவர்கள் செல்கிறார்களா ? இல்லை ! அப்படி இருக்க, சமஸ்கிருதத்தால் தமிழுக்கு ஆபத்து என்றால் எப்படி ? கோவிலில் மந்திரங்கள் சமஸ்கிருத்தத்ஹால் உச்சரிக்க படுகிறது என்றால், நீங்கள் அதை தமிழில் மொழியாக்கம் செய்து தந்து விட்டு அப்புறம் உங்கள் குட்ட்ரசாட்டுகளை வைக்க வேண்டும். ஒன்னுமே செய்யாமல் அடுத்தவன் தவறு செய்கிறான் என்றால் எப்படி ? இதைதான் வாயாலையே வீடு கட்டி நாகாலேயே சுன்னம்ம்பு புசருது என்று தெள்ள தெளிவாக கூரிவிட்டெனெ!
படியங்கள்,நிறையவே படியுங்கள்.மு.வா..திரு வி கா, தேவாரம்,திருவாசகம்,சித்தன்,புத்தன் எல்லாவற்றையும் நன்றாய் படியுங்கள்.ஆனாலும் கசடற கற்க,கற்றப்பின் நிற்க அதற்கு தக என்று தான் சொல்கிறன் .யார் வாய் கேட்பினும் மெய் பொருள் காண்பதே அறிவல்லவா?.மீண்டும் ஏன் கணியன் பூங்குன்றனாரை வம்புக்கு இழுக்குறிர்கள்?Level field இருந்தால் மட்டும் தான் Ultimate ஆக“யாதும் ஊரே யாவரும் கேளிர்” அடைய முடியும் என்றா சொன்னார்? மலேசியாவில் தமிழ் ஆராய்ச்சி மாநாடு நடந்தபோது பழம் பெரும் மொழிகள் கொண்ட நாகரீக சமூகங்கள் மற்ற சமூகத்தினரை எப்படி பார்க்கிறது என்று முத்தமிழ் அறிஞர் திரு. கி.ஆ. பெ. விஸ்வநாதம் இப்படி விளக்கினார்.
ரோமானியர்கள் தங்களை எஜமானர்கள் என்றும் மற்றவர்களை எல்லாம் அடிமைகள் என்றும் பார்க்கின்றனர்..
சீனர்களோ தங்களை மட்டுமே மனுஷர்கள்ளாயும் மற்றவர் எல்லாம் பேய்கலாயும் காண்கிறார்கள்.
அரேபியர்கள் தங்களைப் பேசத் தெரிந்தவர்கள் என்றும் மற்றவர் எல்லாம் பேசத்த் தெரியாதவர் என்றும் எண்ணுகின்றனர்.
தமிழன் மட்டுமே “யாதும் ஊரே யாவரும் கேளிர்”என்று உலகத்தாரை தம்முடைய உறவினனாக கொண்டாடுகிறான் என்றார்.
இதில் எங்கிருந்து வந்தது Level field.பிறர் தன் குடும்பம்,தம் இனம் தம் நாடு என்று தன்னலம் பேனினாலும் தமிழனுடைய தமிழ் நெறி மட்டுமே அவனை உலகில் வேடு பிரித்து காட்டுகிறது.நெறி தவறும் அரசனாய் வாழ்வதை விட யாசித்து வாழும் நெறி தவறா ஏழை புலவனாய் சாகலாம்.இதை தானே பூம்புகார் காதையும், அரிச்சந்திரனும் நமக்கு எடுத்துக் காட்டுகின்றன?
உலகத்திற்குப் பொதுவான ஒரு சிறந்த ஆட்சி முறை ஏற்படும் வரையில் நம் நாட்டை நாம் தவறாமல் காத்துக் கொள்ள வேண்டும். அது குறுகிய நோக்கம் அல்ல. இன்றியைமயாத கடமை என்று உணர்ந்துகொள்.”
மு வாவின் மேலே உள்ள குறிப்புக்கும் உலகில் கணக்கிடப்பட்ட 6760 மொழிகளில் இன்றைய உலக சூழலில் எந்த ஒரு நல்லாட்சி வந்து தமிழை காக்க போகிறது?எரிகிற வீட்டில் பிடுங்கிய வரை லாபம் என்று உங்களைப் போல் நினைக்கின்ற தமிழ் குழப்பவாதிகள் இருக்கும் வரை இது சாத்தியமா என்று கொஞ்சம் யோசியுங்கள். இணைய மய எல்லையில்லா உலக சூழலை மு வா எதிர் நோக்கினாரா?அவருடைய நாட்டு பற்று,தமிழ் பற்றில் எனக்கு கிஞ்சித்தும் சந்தேகம் இல்லை.ஆனாலும் கனவுலகை விட்டு நிஜ உலகிற்கு விழித்தெழுங்கள் என்றுத்தான் சொல்கிறேன்.எத்தனை சரித்திர,இலக்கிய புத்தகங்களை படித்தாலும் ஆளுக்கொரு விதமாக வியாக்கியானம் செய்வதால் பல தவறுகள் ஏற்படுகின்றன. இயற்றப்பட்ட புத்தகங்களின் காலம்,காலத்தின் நிலை,சொல்லலிய கருத்து,எடுத்த நிலையென ஒவ்வொன்றாய் பிய்த்து ஆராய்ந்தால் மட்டுமே சொல்லலிய கருத்துக்கள் காலத்திற்க்கு ஒத்து போகுமா என்றுணர முடியும்…நான் இன்னும் பாலகன் தான்.ஆனாலும் இன்னும் நான் படிப்பேன்,பதிப்பேன்.
10 ஆண்டு சுனக்கத்தை 10 மாதங்களில் போக்க முடியாது என்கிற பகுதிக்கு என்னுடைய விமர்சனம்.
IIT பம்பாயில் S.குருமூர்த்தியின் லெட்செரில்லிருந்து:
CASTE + ECONOMY = ENTREPRENEURSHIP .
CASTE + POLITICS = CHAOS. YOU TUBE ல் அவருடைய லெச்சர் உள்ளது.இந்திய பொருளாதாரம் பற்றி அருமையான பாடம் போதிக்கிறார்.
இது என்னுடைய சிந்த்தனை;நான்கு வர்ணங்கள் தொழில் சமுகத்தை சார்ந்ததாகவே காட்டப்பட்டது.இதை பிறப்பால் பிரிக்கவில்லை.இராமாயணம் எழுதிய வால்மீகி ஒரு வேடவர், மகாபாரதத்தை எழுதிய வேதவியாசர் ஒரு மீனவர்.ஆனாலும் இருவரும் எழுதியது வேதங்கள் என்று ஒத்துக் கொள்ளப்படுள்ளது. ஆக ஜாதியை பிறப்பால் குறித்து ,உப கிளைகளை வகுத்ததன் சூட்சமம் என்ன?யார் அப்படி வகுத்தார்கள்?அவனுக்கு உடன் போனவன் யார்? இதனை எத்தனனை பேர் ஒத்துக் கொள்வார்கள்?உடனே ஆரியன் என்று குதிகாதிர்கள்.திராவிடன் அல்லது தமிழன் ஆரியனுக்கு ஊளை கும்பிடா போடுக் கொண்டிருந்தான்?
“எந்த ஒரு மொழியில் மார்க்கங்களை விளக்கினாலும் உண்மை இருக்க வேண்டும். மொழியை மட்டும் வைத்து கொண்டு பிணியை ஓட்ட முடியாது”.
தமிழ் மொழி பிணியை ஓட்டும் மொழி என்பதை, தமிழ் கற்றறிந்து இங்கே கருத்து உரையாடுவோர் அறியாமல் போனது ‘கற்றது கை மண் அளவு’ என்று நிருபிக்கின்றது.
அறத்தின் பெருமை அறிந்து அதன்வழி நின்று இம்மை, மறுமை இன்பங்களை அடைய வழிவகுப்பது தமிழ் வழங்கிய உலக திருமறையாம் திருக்குறள். இதுவே உலகியல் இன்பம் பொருட்டு தமிழ் காட்டிய அறநூல். இது அறம், பொருள் இன்பம் இம்மூன்றிலும் உண்மைச் சொல் வழி நின்று வீடு பேரின்பத்தை அடைய வழிகாட்டும் பொது நூல் என்பதாகும். அருளாளர்கள் பொருட்டு தமிழரின் வேதமாகிய திருமுறை சத்திநிபாதர்களுக்கு வீடு பேரின்பம் பெற வழிகாட்டும் அருள்நூல். இது சிறப்புநூல். இந்த சிறப்பு நூலில் அனைத்தையும் நீக்விட்டு பார்த்தால் அதில் இருப்பது சிவம் மட்டுமே. இந்த சிவத்தின் மூல மந்திரமாகிய ‘நமசிவய’ என்பது உயிரின் பிணியைப் போக்கும் உன்னத மந்திரம். அதை அறிந்து ஓதுவார்க்கு உடல் பிணி, உயிர் பிணி இரண்டும் நீங்கும். தமிழ் பொது நூலும், சிறப்பு நூலும் உலகியல் இன்பத்தில் நிலைத்து உடல் மற்றும் உயிர் பிணியைப் போக்கி பேரின்பத்தைக் கொடுக்கும் மொழி. இதனை அறியாமல் தமிழ் படித்தென்ன பயன்?.
அடப்பாவிகளா ? திருக்குறள் எப்பொழுது சிவனையோ அல்லது சைவத்தையோ போதித்தது ? தேனீ பொய் சொல்லி சைவ சின்த்தாந்தகளை கொலை செய்ய கூடாது : “இந்த சிறப்பு நூலில் அனைத்தையும் நீக்விட்டு பார்த்தால் அதில் இருப்பது சிவம் மட்டுமே. இந்த சிவத்தின் மூல மந்திரமாகிய ‘நமசிவய’ என்பது உயிரின் பிணியைப் போக்கும் உன்னத மந்திரம்.” என்று தேனீ எழுதி உள்ளீர். எங்கே நிறுபியும்மையா உங்கள் பொய்யை !
சமஸ்கிருத விரும்பிகள் தங்களுக்கு என்ன வேண்டுமோ அதைச் செய்யுங்கள். உங்களைப் போன்ற அறிவாளிகள் உங்கள் சமயச் சிந்தனையை போற்றுவதற்கு உள்ள அறிவு தமிழரிடம் இல்லை என்பதே எமது ஆதங்கம். தமிழர் சமயத்தை வாழவைக்க தமிழர்களைக் கூவி அழைக்கும் போது சமஸ்கிருத விரும்பிகள் சற்று ஒதுங்கி நிற்கலாமே. அதை விடுத்து ஏன் இங்கே வந்து முட்டுக் கட்டைப் போடுகின்றீர்?. தமிழர் தங்களின் அடிமையாக தொடர்ந்து வாழ இதுவும் ஒரு பின்வழிக் கதவு என்பதாலோ?. சற்றே விலகிக் கொள்ளுங்கள். நாங்கள் தமிழரை வாழ வைக்க விரும்புகின்றோம்.
தமிழர் சமஸ்கிருத மொழியில் உள்ள தந்திரங்களை தமிழில் மொழி பெயர்த்து இறைவனை வணங்க வேண்டும் என்பது அவசியமற்றது.
தமிழரின் வேதமாகிய திருமுறைப் பாடல்களையே தமிழரின் ஆலயங்களில் மந்திரமாக ஓதி வழிபடுவதே சாலச் சிறந்த வழிபாடாகும். அத்தமிழ் வேதங்கள் இறைவனின் கருணையை வேண்டிப் பாடப் பெற்றவை. பாடுவோர் பாடினால் இறைவனும் ஆடுவார். இதற்கு வழிவிட மலேசிய அருச்சகர் சங்கம் வழிகாட்ட வேண்டும். ஆனால் அருச்சகர்கள் அவ்வாறு செய்யாதிருக்க அவர்களுக்கு வைணவ தீட்ச்சை கொடுக்கும் போதே ‘திராவிட காணம்’ அவதாரிக்கக் கூடாது என்று குரு உபதேசம் செய்வதால் அவர்கள் குரு துரோகம் செய்ய அஞ்சுகின்றார்கள். இதற்கு மாற்று வழி வைதீக மதத்தை கை கழுவி விட்டு தமிழர் சமயத்திற்கு மாறினால் போதும். அதற்குதான் அப்பா இந்த பாடு. தமிழர் சமூதாயமே உங்களுக்கு கொஞ்சமாவது இறை சிந்தனை இருந்தால் தமிழர் சமயத்திற்கு தங்களை மத மாற்றம் செய்துக் கொள்ளுங்கள்.
தேனீ கீழுள்ள THREAD உங்களுக்குத் தான்.
ஐயா
தொல்தமிழில் ஜகரம், ஸகரம் போன்ற ஒலிகள் இருந்தால் பின் அவை ஏன் இடைக்கால தமிழில் இல்லாமல் போயின? புஜம் என்பதை புயம் என்றும், தஸரதன் என்பதை ஏன் தயரதன் எனறும் ஏன் எழுதினார்கள்?
வடமொழியில் அவை இருக்க தென்மொழியில் இல்லாமல் போன காரணம்?
தமிழ்த்தேனீ
21/03/2013
Re: [வல்லமை] தமிழின் திரிபே வடமொழி!
Other recipients: vall…@googlegroups.com, meyk…@yahoogroups.com, tolkaa…@egroups.com
Translate message into English
அதேபோல் சாதம் என்னும் சொல்லில் த என்னும் எழுத்து dha என்று தான் உச்சரிக்கப்படுகிறது,வேகம் என்னும் சொல்லில் க என்னும் எழுத்து ga என்றுதான் உச்சரிக்கப்படுகிறது
அன்றாடம் நாம் உபயோகிக்கும் பல சொற்களில் ஸ்மஸ்கிருதம் கலக்காத சொற்களே மிகவும் குறைவு.சங்(க)ம், அங்(க)ம் வ(கி)க்கிறது
வரு(கி)றேன்,தண்ணீர் கு(டி)ப்பது போன்ற எழுத்துக்கள் எல்லாமே சமஸ்கிருத உச்சரிப்பே
அன்புடன்
தமிழ்த்தேனீ
2013/3/21 K. Loganathan
அன்பரே
இதேக் கேள்வியைய்த்தான் நான் பல தமிழ் அறிஞர்களிடம் கேட்டுக்கொண்டு இருக்கின்றேன் ‘கஷ்டம்; ‘நஷ்டம்’ ‘துஷ்டன்’ என்றெல்லாம் வழக்கில்
சொல்கின்றோம், சுமேருத் தமிழில் ‘நிஷபா’ என்ற சொல் ‘நிடபா’ என்றும் எழுதப்படுகின்றது., ‘ஷ்’ எனும் எழுத்டு ‘ட்’ ஆகின்றது
இதனால் தான் என் கேள்வி: தமிழின் எழுத்துக்கள்தாம் யாவை? தொல்காப்பியர் தானே இந்த எழுத்துக்கள ‘வட எழுதது’ என்று சொல்லி அவற்றை விலக்க வேண்டும்என்றார்? அதற்கு முன்பு?
தமிழ் அறிஞர்கள் தான் தக்க விளக்கம் தர்வேண்டும்
உலகன்
2013/3/21 வேந்தன் அரசு :
“யாதும் ஊரே யாவரும் கேளிர்” என்பது ஓர் உன்னதமான நெறிதான். இதை நோக்கி நமது இலக்கு இருக்க வேண்டும் என்பதும் உன்னதமான சிந்தனைதான். ஆனால், நடைமுறையில் இதன் அணுகுமுறை எப்படி உள்ளது என்று 2000 ஆண்டுகள் கழித்துப் பார்த்தால் அன்று இருந்த நிலையில் தான் இன்றும் மக்கள் வாழ்ந்துக் கொண்டிருகின்றார்கள்.
மலாய்க்காரருக்கு தமிழர் நண்பர் என்று நமக்கு இந்நாட்டில் ‘பூமிபுத்ரா’ அந்தஸ்த்து கொடுக்கப் போவதில்லை. சீனருக்கு தமிழர் என்றும் ‘kling koi’ பேய்களாகத்தான் தெரிவர். சீனர்களுக்கும் தமிழர் நண்பர் என்றெண்ணி அவர்களின் வியாபாரப் பங்காளிகளாக நம்மை வைத்துக் கொள்ளப் போவதில்லை. அப்படியே வைத்துக் கொண்டாலும் அது இந்த தமிழரை சுரண்டுவதர்க்காகவே இருக்கும். அப்புறும் எங்கிருந்து வரும் ‘யாதும் ஊரே யாவரும் கேளிர்’?. அதனால மேற்கூறியவற்றில் எல்லாம் மாற்றம் கொண்டு வந்து விட்டு அப்புறம் நமக்கு உபதேசித்தால் நானும் அப்புலவரை வாழ்த்துவேன்.
இங்கே தமிழுக்காக, அது தமிழரிடையே நிலை பெறுவதற்காக பேசுவதே ஒரு பெரிய தமிழ் தொண்டாகாதா?. எமது தமிழ் தொண்டு, தமிழர்களின் பிள்ளைகளை தமிழ் ஆரம்ப பள்ளியில் படிக்க வையுங்கள் என்பது, தமிழ் பள்ளியில் பெற்றோர் ஆசிரியர் சங்கத்தில் இணைந்து எம் பிள்ளைகள் படிக்கும் பள்ளிக்கு எம்மால் ஆன பண உதவியும், உடல் உழைப்பையும் போட்டு தொண்டு செய்வது, தமிழ் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு சமயத்தைப் பற்றி போத்திப்பது, திருமுறை வகுப்பகளை நடத்துவது, அதனூடே திருக்குறளையும் எடுத்துக் கூறி மாணவர்களுக்கு விளக்குவது, திருக்குறள் புத்தகத்தை இனாமாக அவர்களுக்கு அன்பளிப்பது என்று இப்படியே இன்னும் அடுக்கிக் கொண்டே போகலாம். இதையெல்லாம் இங்கே சொல்லி அரசியல் தலைவர்கள் போல் கை தட்டு வாங்குவதற்கு அல்ல மாறாக மற்றவரும் அடி நிலைக்கு இறங்கி பிரதி உபகாரம் பெறாமல் தொண்டு செய்ய வேண்டும் என்பதே எம் நோக்கம். விளம்பர நோக்கம் கொண்டிருந்தால் யாமும் எம் முகத்திரையை கிழித்தெறிய முடியும்.
பிறர் எழுதும் கருத்தை முறையாக உள்வாங்கிக் கொண்டு பதில் எழுதுவதே சிறந்தது. அதை விடுத்து சொன்னது என்னவென்பதை புரிந்துக் கொள்ளாமலேயே “பாவி” என்றும் “பொய்” என்றும் அறியாமையில் கருத்து எழுதுவது தப்பு என்று அறிக. திருக்குறள் பற்றி சொன்னது இதுதான்.
இவ்வுலகில் இருவகை மக்கள் உள்ளனர்:
(1) உலகியல் வாழ்க்கையில் திருக்குறள் காட்டிய அறம், பொருள் இன்பம் எனும் இம்மூன்றின் பெருமையை உணர்ந்து, அவ்வழி நின்று புண்ணியம் பெற்று முத்தி எனும் வீடு பேரின்பம் பெறுவது “உலக வாழ்க்கையில்” நிற்போருக்கு வகுத்த வழி. இவர்களை “உலகர்” என்று பகுத்துக் கூறும் சைவம். திருக்குறள், உலகர் பொருட்டு செய்யப்பட்ட நூல். இது சைவத்திற்குப் பொது நூல்.
(2) இறைவனது அருளின் பெருமையை உணர்ந்து ஆன்மீகத்தின் வழி நின்று முத்தி எனும் வீடு பேரின்பத்தைப் பெறுவார் மற்ற வகையான மக்கள். இவர்களை சைவம் “சத்திநிபாதர்” என்று பகுத்துக் கூறும். இவ்வகையானோருக்கு வகுக்கப் பட்டது அருள்நூல். தமிழர் கண்ட வேதமாகிய திருமுறையே சத்திநிபாதருக்குரிய அருள்நூல். இந்த அருள்நூலின் மெய்பொருளே “சிவம்” என்பதாகும். “நமசிவய” எனும் ஐந்தெழுத்து மூல மந்திரத்திற்குப் பொருள் தெரியாமலா எல்லாம் கற்றறிந்தவர் போல் எங்களுக்கு வைதீகத்தின் பெருமையை பறைசாற்றிக் கொண்டிருந்தீர்?!.
இதிலிருந்து என்ன தெரிகின்றது என்றால் இவர்கள் தமிழரின் சமயத்தை கொஞ்சமும் அறியாமல் வைதீக சார்புடைய நூல்களை மட்டுமே கொண்டு தமிழர்களுக்கு அறிவு புகட்ட கிளம்பிய மதமாற்று போதகர்கள் என்று நன்றாக புலப்படுகின்றது. தமிழர்கள் விழித்துக் கொண்டோம். இனியும் தங்கள் பருப்பு எங்களிடம் வேகாது என்று அறிக.
தேனீ அவர்களே, உங்கள் தொண்டை யாரும் இங்கே குறைவாக மதிப்பிட வில்லை. ஆனால் 200 ஆண்டுகள் இந்தியர்களின் வரலாறு கொண்ட மலேசியாவில் இந்துக்கள் என்று தமிழர் , தெலுங்கர் , மலையாளி , சிங்களிஸ் , சிங்கு , இன்னும் பலர் இருக்கிறார்கள். நாம் இப்பொழுது நமது IC யில் தமிழர் அவர் இவர் என்று எழுத வேண்டும் என்று கேட்பதால் , நிறைய குட்டி குட்டி சங்கங்களாக ஆகி விட்டோம். இதில் பார்பனர் / ஆரியர் / சிந்தியன் என்று இன்னும் பிரிக்க பிரிக்க , குழப்பங்கள் தான் மிஞ்சும் . எல்ல மனிதர்களுக்கும் தனக்கு பிடித்த ஒரு மார்க்கத்தையையோ அல்லது மதத்தையோ பின் பற்ற முழு சுதந்திரம் உள்ளது. ஆனால் நீங்கள் குறுவது போல் தமிழர்கள் சைவ சித்தாந்தத்தை மட்டும் பின்பற்ற வேண்டும் என்று குறுவது ஏற்புடையதல்ல. அதே வேலை தாங்கள் வாதிட்டு ஒரு மார்க்கைதை வெற்றி கொண்டீர்களானால் , அதை நான் யெற்று கொள்வேன் காரணம் அந்த மார்க்கம் தத்துவ நெறிகளில் , பிழைகளை குறைத்து , உண்மையை நோக்கி செல்கிறது என்று பொருள் படும். ஆனால் தங்களோ மாறு பட்ட கருத்து கொண்டவர். ஒன்று தெரிந்து கொள்ளுங்கள் நண்பர் தேனீ அவர்களே , என்னை போல் இந்து மதத்தில் இருக்கும் குறைபாடுகளை யாவராலும் சுட்டி காட்ட முடியாது காரணம் அவ்வளவு குழப்பங்களை நான் அறிவேன். உதாரனத்திற்க்கு சைவம் என்றால் சைவம் உண்ணுவது இல்லை என்பது என் வாதம். முதலில் எது சைவம் என்றால் ? ரத்தத்தால், சதையால் , எலும்பால் , ஜீவனால் ஆனவைகள் சைவம் இல்லை ! ஆனால் உண்மையில் உலகத்தில் உள்ள எல்லா வளர கூடியவை செடி கோடி இலை தலை காய் கரி அனைத்திற்கும் ரத்தம் சதை எலும்பு என்று எல்லாம் உண்டு. அவை ஒலிகளால் விசயங்களை பரிமாரிகொளவும் செய்கிறது. பஞ்ச பூதங்கலால் ஆனது. வெவ்வேறு வடிவில், ஆகையால் தான் அவை வளருது. அதே போல் செரிமான சக்தியும். மனிதனுக்கு அசைவம் செரிக்காது என்றால் , எப்படி உலகில் 2/3 பேர் அசைவம் உண்கிறார்கள் ? இதற்கே இன்னும் சரியான விளக்கம் தரமுடியாமல் மட்டி கொண்டு உள்ளோம் . இதில் புதிதாக ஒரு குழப்பம் தேவையா ? நான் BIBLE படித்திருக்கிறேன், அதனால் நான் ஒன்றும் கிருஸ்துவனாக மாறி விடவில்லை. என் அறிவிற்கு அவை எல்லாம் வித்து. ஆனால் சைவமும் வைணவமும் என் இரு கண்கள். அதன் மேல் உள்ள காதல், அதை இன்னும் தெரிந்து கொள்ள வேண்டும் என்றே தோன்றுகிறதே தவிர யார் மீதும் எனக்கு வெறுப்பு வரவில்லை . என் அடுத்த பத்து ஆண்டுகளில் , எப்படி அருள் வந்து ஒரு உடம்பில் நுழைகிறது என்பதை உணர ஆசை படுகிறேனே தவிர வேறு யாரையும் குறை சொல்ல அல்ல. ஒரு மனித உடலில் ஆவிகள் எப்படியெல்லாம் நுழையலாம், நுழைந்து எப்படியெலாம் ஆட்கொள்ளலாம் என்று நிறைய விஷயங்கள் உள்ளது பைபிள் லில். எனக்கு அது பிடுக்குமே தவிர பல விளக்கங்கள் நான் இந்து மதத்தில் இருந்தே பெற்று கொண்டேன். QURAN நில் ஜின் என்பது ஜின் அவ்வளவுதான் . இரண்டு வகை உள்ளது . இப்படி உண்மையை நோக்கி செல்ல வேண்டுமே தவிர மற்றவர்கலை புறம் பேச குடாது என்பது என் கொள்கை ! ஆகையால் நீங்கள் கோயிலில் பயன்படுத்த சம்ஸ்கிருத மந்திரங்களை முதலில் தமிழில் ஒரு மொழி மாற்றம் செய்து, அர்ச்சகர்கள் சங்கத்துடன் பேசி, அதை நடை முறை படுத்த முயற்சி செய்யுங்கள். முடிய விலை என்றால் நீங்களே இதை இந்து சங்கங்களுக்கு அனுப்பி பரிசலிக்க சொல்லுங்கள். திருக்குறள் , மதுரை தமிழ் சங்கத்தில் முதலில் எற்று கொள்ளவில்லை. பிறகு அவ்வையார் தலையிட்டு, அதை பொதுவுடமையாக்கி படிக்க வைத்தார். எள்ளவட்ரையும் வெறுப்பினாலேயே சாதித்து விடலாம் என்று நினைக்காதீர்கள். அன்பே சிவம்.
தமிழரிடம் இருக்கும் சரக்கு சிறந்த சரக்கு என்றால் அதை விட்டு ஏன் மாற்றானிடம் அதே சரக்கிர்க்காக தேடி ஒடுவானேன்?. தமிழர் கண்ட இறை நெறியின் மகத்துவம் அறிந்தோர் பிறர் சமயத்தை நாடி ஓடார். அதனால் தமிழரின் இறை நெறிகளை அறிந்து வாழ்வோருக்கு பிற மதத்தார் நெறிகள் அவசியமற்றது. அவ்வாரகின் வைதீக மதத்தையும், அவரின் பண்பாட்டையும், ஆரியரின் வேதத்தையும் நாடி ஓட வேண்டிய அவசியம் தமிழருக்கு இல்லை என்கின்றேன். தமிழருக்கு இருக்கும் இறை நெறி தனித்துவம் உடையது என்பதை அறிந்து அதுவே போதுமென்ற எண்ணத்தில் இருப்பது இறுமாப்பு அல்ல என்பதை அறிக இந்து தருமரே. இதற்குமேல் கருத்து எழுத எமக்கு இன்று நேரம் இல்லை. நாளை சிந்திப்போம்.
இறந்த பிறகு மனிதனின் நிலை என்ன ? மறு பிறவி உண்ட இல்லையா ? எந்த எந்த தமிழ் புத்தகங்கள் இதை விளக்குகின்றன ? ஆவிகளின் இருப்பிடம் எப்படி எப்படி பிரிக்க படுங்கின்றது தமிழில் ? விளக்குங்கள் தேனீ விளக்குங்கள்…இதைதான் வாயாலையே வீடு கட்டி நாகாலேயே சுன்னம்ம்பு புசருது என்று தெள்ள தெளிவாக கூரிவிட்டெனெ!
ஆர்யத்தமிழன் பக்கம்
சங்கத்தமிழ் இலக்கியங்களில் பிராமணீயம் – 3
தமிழும் சமஸ்கிருதமும்
தமிழகத்தில் பிராமணீய எதிர்ப்பின் மற்றொரு முகம் சமஸ்கிருத எதிர்ப்பு, சமஸ்கிருதம் பிராமணர்களின் மொழி என்பது தமிழ் இன மான காவலர்களின் (!) கண்டுபிடிப்பு. சமஸ்கிருதம் செத்தமொழி அது பேச்சு மொழி அல்ல, வழக்கொழிந்த மொழி, இவை போன்ற வெறுப்பு எதிர்ப்பு கோஷங்கள் இவர்களது வாதம். இவர்களது வெறுப்பு வாதத்தின் மீது நாம் சிந்தனை செய்தால்…
சங்கத்தமிழ் இலக்கியத்தில், பண்டைய தமிழகத்தில் சமஸ்கிருதத்தின் நிலை என்ன?
“இனமானவாதிகள்” சொல்வது போன்று சமஸ்கிருதம் பிராமண மொழியா? தமிழை போன்று உயர்ந்த மொழி இல்லையா?
தொல்காப்பியத்திற்கும் பழமையான நூல் அகத்தியம், இயல் இசை நாடகம் என்னும் முத்தமிழுக்கும் இலக்கணம் கூறப்பட்ட முழு முதல் நூல். இந்நூலின் சில சூத்திரங்கள் மட்டுமே உரையாசிரியர்களால் நமக்கு கிடைக்கிறது.இந்நூல் சமஸ்கிருதத்தினை நன்கு அறிந்த சமஸ்கிருத பெயர்கொண்ட அகஸ்தியரால் எழுதப்பட்டது. திருத்தமான இலக்கணம் செய்து தமிழ் வளர்த்தவர் சமஸ்கிருதம் அறிந்த அகஸ்தியர்தான்.அகத்தியம் கற்றவருள் தொல்காப்பியர் சிறந்தவர் என்கிறது தொல்காப்பிய பாயிரச்சூத்திரம். “தொல்காப்பியர் காப்பியக்குடியை சேர்ந்தவர்” என்பதை அவரது பெயரிலிருந்தே அறியலாம்,நாகை மாவட்டம் சீர்காழி தாலுக்காவில் “தொல்காப்பியக்குடி” என்னும் பெயரில் ஒரு கிராமம் இன்றும் உள்ளது. அதாவது வடபகுதி முனிவருள் “பார்க்கவ” முனிவரின் மரபினர் “காவ்ய” கோத்திரத்தினைச் சேர்ந்தவர் தொல்காப்பியர். ஆம், தொல்காப்பியர், இனமான குஞ்சுகள் வெறுக்கும் சமஸ்க்ருத அறிஞர்தான் என்பது தான் எத்தனை விந்தை.தொல்காப்பியத்திற்கு “பனம்பாரனார்” பாடிய சிறப்பு பாயிரத்தில் “ஐந்திரம் நிறைந்த தொல்காப்பியன்” என்கிறார். “ஐந்திரம்” என்பது இந்திரனால் செய்யப்பட்ட சமஸ்கிருத இலக்கண நூல், பாரத தேசமெங்கும் இந்நூல் பரவி இருந்தது “விண்ணவர் கோமான் விழுநூல்” என இந்நூலை சிலப்பதிகாரம் பாராட்டுகிறது.
ராம பக்தனாம் அனுமனை, ஐந்திரம் என்பதை அடைமொழியாக்கி “ஐந்திரம் நிறைந்தவன்” என்கிறது கம்பராமாயணம். “ஐந்திரவி யாகரணமும் ஓதி ஒரு நாளினில் வேதமொரு நாலுடன் கற்றான் அனுமன்”, என்கிறான் வைஷ்ணவனான கம்பன்.“இந்திரத்தை இனிதாக ஈந்தார் பூலும்”, என்கிறார் சைவராகிய நாவுக்கரசர்.
ஐந்திரத்தின் சிற்சில பகுதிகள் தான் கிடைக்கின்றன, ‘அத வர்ணா சமூக’, அதாவது எழுத்துக்கள் கூடிக் கூட்டெழுத்துக்கள் ஆகும் என்பது ஐந்திரம்.
சமஸ்கிருதத்தில் கூட்டெழுத்துக்கள் உண்டு தமிழில் இல்லை. ஆனால், தொல்காப்பியர் ஐந்திரம் என்னும் சமஸ்கிருத நூல் வழியில் அ +இ = ஐ, அ + உ = ஔ என்று வரும் என விதி வகுத்துள்ளார். அகரம், இகரம், ஐகாரம் ஆகும், அகரம், உகரம், ஔகாரம் ஆகும். “அகரத்திம்பர் யகரப் புள்ளி ஐஎன் நெடுஞ்சினை மெய்பெறத் தோன்றும்” என்பன அச்சூத்திரங்கள்.
நான்கு வேதத்திலும் புலமை உள்ளவன் என்பதாலேயே “அதங்கோட்டு ஆசான்” என்பவர் அவைக்கு தலைமை தாங்க அவர் முன் “தொல்காப்பியம்” அரங்கேற்றப்பட்டது.தமிழ் இலக்கண நூல் அரங்கேற்ற சதுர்வேதமும் அறிந்தவன் தேவையா? இது பார்ப்பன சூழ்ச்சி என கூக்குரல் எழுப்பவேண்டாம்.தமிழ் இலக்கண நூல் அரங்கேற்றத்திற்கு சதுர்வேதமும் அறிந்தவன் வேண்டும். ஏனெனில், “அறம்புரி அருமறை, மறையோர் தேத்து” என நான்மறைகளைச் சொல்லுவது மட்டுமல்லாது நான்மறை நுணுக்கத்தினையும் தொல்காப்பியம் சொல்லுகிறது.
எழுத்துக்கள் பிறக்கும் இடம் எட்டு, அவை “தலை, மிடர், நெஞ்சு, பல், உதடு, நாக்கு, மூக்கு, அண்ணம் (தாடை). இந்த எட்டு மட்டுமன்றி மூலாதாரத்திலிருந்தும் எழுத்தொலி பிறப்பதுண்டு, இதனை வெளிப்படையாக விளக்கமுடியாது. அந்தணர் வேதத்தில் காணலாம் என்கிறார் தொல்காப்பியர்.
“எல்லா எழுத்தும் வெளிப்படக் கிளந்து
சொல்லிய பள்ளி எழுதரு வளியில்
பிறப்பொடு விடுவழி உறழ்ச்சி வாரத்து
அகத்தெழு வளிஇசை ஆரில்தப நாடி
அன்பில் கோடல் அந்தணர் மறைத்தே
அஃது இவண் நுவலாது எழுந்துபுறத்து இசைக்கும்
மெய்தெரி வளியிசை அலபுநுவன் றிசின
(தொல் 102)
தொல்காப்பியத்தின் இந்த சூத்திரம் நமக்கு சொல்வது என்னவென்றால் தமிழில் எழுத்திலக்கணம் முழுவதும் அறிய வேண்டுமென்றால் சமஸ்கிருத வேதத்தின் துணை தேவை என்பதே,சமஸ்க்ருதம் அறிவியல் பூர்வமான மொழி இந்த மொழியில் தான் எப்படி உச்சரிக்கிறோமோ அப்படியே எழுதவும் முடியும் அதனால்தான் க,ச,ட,த,ப என்னும் எழுத்துக்களில் நான்கு விதமான உச்சரிப்பு க, க்க, ga, gha என வருகிறது.
தமிழில் க, ச, ட, த, ப என்னும் எழுத்துக்கள் இருப்பினும் உச்சரிப்பின் போது சமஸ்க்ருத ஒலி உச்சரிப்பையே பயன்படுத்துகிறோம். உதாரணமாக “பம்பரம்” என்னும் தமிழ் சொல்லில் முதல் எழுத்தில் வரும் ப வுக்கும் மூன்றாவது எழுத்தாக வரும் ப தீணீ எனவும் உச்சரிக்கும் போது சமஸ்க்ருத எழுத்து ஒலியாக மாறுகிறது, இதனால்தான் தமிழில் எழுத்திலக்கணம் அறிய சமஸ்கிருதம் அறியவேண்டும் என்கிறார் தொல்காப்பியர்.
இலக்கண வேற்றுமை எட்டு, முதல் வேற்றுமையின் சிறு வேறுபாடே எட்டாம் வேற்றுமை, ஆதலால் முதலும் எட்டும் வேறானவை அல்ல என்பதால் ஏழு என்னும் வழக்கு முன்பு இருந்ததை அகத்தியமே சொல்கிறது. ஆனால் ஐந்திரம் என்ற சமஸ்கிருத இலக்கண நூலின் வழியில் வேற்றுமை எட்டு என்கிறது அகத்தியம்.
“வேற்றுமை தாமே ஏழ் என மொழிப” என்று தமிழ் மரபுப்படி ஏழு வேற்றுமையை கூறுகின்ற தொல்காப்பியர் கூட சமஸ்கிருத இலக்கண நூலாம் ஐந்திர மரபுப்படி “விளியொடும் எட்டே” என்று அகத்தியர் காட்டிய வழியில் முடிக்கிறார்.
தமிழ் இலக்கண நூலாம் அகத்தியத்தில் நமக்கு கிடைத்துள்ள சில சூத்திரங்களிலேயே சையம், திசை, ஆனந்தம், அராகம், சொச்சகம், வயிரம், மயன், பொத்தகம், சேனை, கம்பலம், காலம், ஆனந்தப்பையுள், பாலன், குமாரன், தானம், விருத்தம்’ பல சமஸ்கிருத சொற்கள் காணப்படுகின்றன.
தொல்காப்பியரோ பன்னிரு நிலத்தினும் வழங்கிவரும் சொற்களைத் தமிழில் கையாளலாம் என்று சொற்களில் (திசைச் சொல்லையும்) சமஸ்கிருதத்திற்கு மட்டும் தனி இடம் தந்து தமிழில் கையாள விதியை விளக்குகிறார், சேர்த்துக்கொள்கிறார்.
வட சொற் கிளவி வடஎழுத்து ஒரீஇ
எழுத்தொடு புணர்ந்த சொல்ஆ கும்மே,
‘சிதைந்தன வரினும் இயைந்தன வரையார்’
என்கிறது தொல்காப்பியம்.
தமிழும் சமஸ்கிருதமும் எதிர் எதிர் மொழி என்னும் வறட்டு பொய் வாதத்தினை தமிழ் சங்க இலக்கியங்கள் மறுக்கின்றன. மாறாக தமிழ், தாய் என்றால் சமஸ்கிருதம், தந்தை என்கிறாள் ஔவை மூதாட்டி தன் ஆத்திச்சூடியில்.
ஆம்! “அன்னையும் பிதாவும் முன்னெறி தெய்வம்’, “அன்னை” என்று தமிழ் வார்த்தையை பயன்படுத்திய ஔவை “தந்தை” எனத் தமிழில் குறிப்பிடாமல் ‘பிதா” என சமஸ்கிருதச் சொல்லை பயன்படுத்தியதிலிருந்து என்ன புரிகிறது?
ஔவை வாக்குப்படி தமிழ் தாய் மொழி, சம்ஸ்கிருதம் தந்தை மொழி. தாயினையும் தந்தையையும் பிரித்தல் சரியா? தந்தையை தாய்க்கு எதிராக எண்ணுவதும், எதிராக்குவதும் சரியாகுமா? தமிழுக்கு எதிராக சமஸ்கிருதம் என எண்ணுவதும், எழுதுவதும், பேசுவதும், தாய்க்கு ஆம் தமிழுக்கு செய்யும் துரோகம்.
சமஸ்கிருதம் கலக்காத சங்கத்தமிழ் இலக்கியம் எதுவுமே இல்லையே. சமஸ்கிருதம் கலக்காத பக்தி இலக்கியம் கூட எதுவுமே இல்லை.தமிழ் இனமானவாதிகளுக்கு ஒரு செய்தி “தமிழன்’ என்று ஒரு இனத்தின் பெயர், சங்கத்தமிழ் இலக்கியங்களில் இல்லை. “தமிழன்” என்ற சொல்லை முதன் முதலில் உண்டாக்கியவர் சமஸ்க்ருத வெறுப்பு கடவுள் மறுப்பு கொண்ட நாத்திகர்கள் அல்ல. பக்திமார்க்கத்தில் திளைத்த திருமால் அடியாராகிய பூதத்தாழ்வார் தான், தனது இரண்டாம் திருவந்தாதியில் “74வது” பாசுரத்தில் “பெருந்தமிழன்” என்று தன்னை அடையாளப்படுத்திக் கொள்கிறார்.
ஆழ்வார் வாக்கினை அடியார்களாகிய நாமும் உறக்கச் சொல்வோம் ஆஸ்திகவாதிகளாகிய “நாமே பெருந்தமிழன்” என்று.
வாழிய செந்தமிழ்! வாழிய சமஸ்கிருதம்!
வாழிய பாரத மணித்திருநாடு! வந்தே மாதர(ஓ)ம்
PLEASE GIVE YOUR FEEDBACK
*Name:
*E-mail:
*Comments:
– See more at: http://www.brahmintoday.org/magazine/2013_issues/bt118-1308_tamilan-pages.php#sthash.2El5IXND.Zyj89mfk.dpuf
சங்கத்தமிழ் இலக்கியங்களில் பிராமணீயம் – 3…..உம்மைப் போல் இதுவும் சுட்டது தான்.பண்டைய ஆட்களை எல்லாம் விவாதத்திற்கு இழுக்கிற நாம் இதை போன்ற வாதங்களையும் பரிசீலிக்கத்தான் வேண்டும்.உங்களுக்கு வேண்டிய பல வினா விடைகள் இதில் உங்களுக்கு விளக்கம் அளித்திருக்கும்.
Theni :தமிழர் அல்லாதோர் கவலைப் படாத தமிழ் மொழியை பற்றி எம்மைப் போன்ற, பொன் ரங்கன் போன்ற, தமிழன் போன்ற தமிழரின் எழுத்து வல்லமையும், செயல் வலிமையையும் நம்பித்தான் தமிழ் வாழ முடியும.
Theni தமிழர் சமயத்தை வாழவைக்க தமிழர்களைக் கூவி அழைக்கும் போது சமஸ்கிருத விரும்பிகள் சற்று ஒதுங்கி நிற்கலாமே. அதை விடுத்து ஏன் இங்கே வந்து முட்டுக் கட்டைப் போடுகின்றீர்?.
மேலுள்ள உமது அறிக்கைக்கு விடையளிக்க விரும்புகிறேன்.
சற்று கடுமையாய் தான் இருக்கும்.சவாலை உமது குழுவோடு நீர் மட்டும் செய்து வெற்றி பெருவீர்களானால் உலகமே உங்களை போற்றும்.அடுத்த சந்ததியினரும் உம்மை பற்றித்தான் இலக்கியங்களில் புகழ்பாடும்.(சற்று ஓய்வெடுத்து எழுதகிறேன்)
Dhilip 2 .. அப்படியே…!!! எனக்கு தேனீயிடம் கேட்டு சொல்லுங்கள். பொங்கல்தான் தமிழ் புத்தாண்டு..னு கொண்டாடனும்னு சொல்லுறாரு …. யாரோ அறிஞர் பெருமக்கள் கூடி மாநாடு நடத்தி பொங்கலைதான் எல்லா தமிழனும் புத்தாண்டுன்னு கொண்டாடனும்னு சொன்னாங்கனு சொல்லுறாரு. வருஷம் என்பது சூரிய சந்திர நிலைகளை வைத்துதானே கணக்கு போடா முடியும்? கூடி பேசினால் அது கணக்கில் வருமா? துவாரகன்
வட சொல் என்பதும், வட மொழி என்பது என்னவென்பதை அறியாமல் பலர் தங்கள் மனதிற்கு தோன்றியதை எல்லாம் கற்பித்துக் கொண்டு கருத்தாடுவது முறையல்ல. வடமொழி என்பதே தமிழ் மொழி கலந்த பிற மொழிகளைக் குறிப்பதாகும். சமஸ்கிருதம் என்ற செயற்கை மொழியும் இதில் அடங்கும். வடசொல், வடமொழி என்பதானது இந்தியக் கண்டத்தில் பண்டைய தமிழகத்திற்கு வடக்கே தமிழ் கலந்து பேசப் பட்ட பிராகிருத, பாலி மொழிகளையும் குறிக்கும் என்பதை அறிக. இது சமஸ்கிருத மொழியை மட்டும் குறிக்கும் என்பதானது தவறான கருத்தாகும். Theni wrote on 22 February, 2015, 20:07
உமது விளக்கம் சரியா என்று மீண்டு நன்றாக பாருங்கள்.வட சொல்லையும்,திசைச் சொல்லையும் Rojak பண்ணாதிர்கள்.
1.4.3 திசைச்சொல்
தமிழ்நாட்டுக்கு அப்பால் உள்ள பிற பகுதிகளில் பேசப்படும் மொழிகளிலிருந்து வந்து தமிழ்மொழியில் கலந்து வரும் சொற்கள் திசைச் சொற்கள் எனப்படும்.
எ.கா) ஆசாமி, சாவி
இவற்றில் ஆசாமி என்னும் சொல் உருதுமொழிச் சொல். சாவி என்னும் சொல் போர்த்துக்கீசிய மொழியில் உள்ள சொல். இச்சொற்கள் தமிழ்மொழியில் கலந்து வருகின்றன. இவ்வாறு தமிழ்நாட்டுக்கு நான்கு திசைகளிலும் உள்ள பகுதிகளிலிருந்து தமிழ் மொழியில் வந்து வழங்கும் சொற்கள் திசைச் சொற்கள் எனப்படும்.
செந்தமிழ் நிலத்துடன் சேர்ந்த பன்னிரு நாடுகளிலிருந்து தமிழ் மொழியில் வந்து வழங்கும் சொற்களும் திசைச் சொற்கள் எனப்படும்
பெற்றம் – பசு – தென்பாண்டி நாட்டுச்சொல்
தள்ளை – தாய் – குட்ட நாட்டுச்சொல்
அச்சன் – தந்தை – குடநாட்டுச்சொல்
பாழி – சிறுகுளம் – பூழிநாட்டுச்சொல்
இவை போன்றவை செந்தமிழ்நிலத்துடன் சேர்ந்த நாடுகளிலிருந்து தமிழ் மொழியில் வந்து வழங்கும் சொற்கள் ஆகும்.
சில திசைச் சொற்களின் பட்டியலையும் அவற்றின் நாடுகளையும் காண்போம்.
திசைச்சொல் மொழி தமிழ்
கெட்டி தெலுங்கு உறுதி
அனாமத்து உருது கணக்கில் இல்லாதது
சரகம் பாரசீகம் எல்லை
நைட் ஆங்கிலம் இரவு
செந்தமிழ் நிலம் சேர் பன்னிரு நிலத்தினும்
ஒன்பதிற்று இரண்டினில் தமிழ்ஒழி நிலத்தினும்
தம் குறிப்பினவே திசைச் சொல் என்ப
(நன்னூல் : 273)
செந்தமிழ் நிலத்தைச் சேர்ந்த பன்னிரண்டு பகுதிகளிலிருந்தும் பதினெட்டு மொழி பேசும் நாடுகளில் தமிழ்மொழி பேசும் பகுதி அல்லாத பிற பதினேழு நிலங்களில் உள்ள மொழிகளிலிருந்தும் தமிழ் மொழியில் கலந்து வரும் சொற்கள் திசைச் சொற்கள் என்பது இந்த நூற்பாவின் பொருள்.
பன்னிரண்டு நிலங்கள் (நாடுகள்)
1) தென்பாண்டி நாடு 2) குட்ட நாடு 3) குட நாட4) கற்கா நாடு 5)வேணாடு 6) பூழி நாடு 7) பன்றி நாடு 8) அருவா நாடு 9) அருவா வடதலை நாடு 10) சீதநாடு 11) மலாடு 12) புனல் நாடு
என்பவை பன்னிரண்டு நாடுகள் ஆகும்.
பதினெட்டு மொழி வழங்கும் நாடுகளில் தமிழ் தவிர்த்து ஏனைய பதினேழு நாடுகள்.
1) சிங்களம் 2) சோனகம் 3) சாவகம் 4) சீனம் 5) துளு 6) குடகம்
7) கொங்கணம் 8) கன்னடம் 9) கொல்லம் 10) தெலுங்கம் 11) கலிங்கம்
12) வங்கம் 13) கங்கம் 14) மகதம் 15) கடாரம் 16) கௌடம் 17) குசலம்
என்பவை பதினேழு மொழிகள் பேசப்படும் நாடுகள் ஆகும்.
1.4.4 வடசொல்
வடமொழி என்று குறிப்பிடப்படும் சமஸ்கிருத மொழியிலிருந்து தமிழ்மொழியில் கலந்து வரும் சொற்கள் வடசொற்கள் எனப்படும்.
வடசொல் இரண்டு வகைப்படும்.
1) தற்சமம்
2) தற்பவம்
1. தற்சமம்
வடமொழிச் சொற்கள் தமிழ்மொழியில் தமிழ்ச் சொற்கள் போன்றே மாற்றமின்றி வருவது தற்சமம் எனப்படும்.
(எ.கா)
கமலம்
காரணம்
மேரு
இச்சொற்களில் வடமொழிக்குரிய சிறப்பு எழுத்து எதுவும் இல்லை. இவற்றில் தமிழ் எழுத்துகளே இடம் பெற்றுள்ளன. எனவே இச்சொற்கள் தற்சமம் என்று அழைக்கப்படுகின்றன.
2. தற்பவம
வட மொழிக்குரிய சிறப்பு எழுத்துகள் தமிழ்த் தன்மைக்கு ஏற்ப மாறி வருவது தற்பவம் எனப்படும்.
(எ.கா)
பங்கஜம் – பங்கயம்
ரிஷபம் – இடபம்
ஹர – அரி
பக்ஷி – பட்சி
சரஸ்வத – சரசுவதி
வருஷம் – வருடம்
இவற்றில் வடமொழிக்கே உரிய ஒலிப்புகளைக் கொண்ட எழுத்துகள் தமிழ் மொழிக்கு ஏற்ப மாறி வந்துள்ளன. எனவே தற்பவம் என்று அழைக்கப்படுகின்றன..
பொது எழுத்தானும் சிறப்பு எழுத்தானும்
ஈர் எழுத்தானும் இயைவன வடசொல்
(நன்னூல் : 274)
வடமொழிக்கும் தமிழ்மொழிக்கும் பொதுவாக உள்ள எழுத்துகளாலும் வடமொழிக்குச் சிறப்பாக உள்ள எழுத்துகளாலும் வடமொழியிலிருந்து தமிழ் மொழியில் வந்து வழங்கும் சொற்கள் வடசொற்கள் என்பது இதன் பொருள்.tamilvu.org
வாழ்க சிங்களம்.500 வருடத்தில் வந்த சிங்கள நாடு உலகமே மதிக்கிறது.தமிழனுக்கு தனியா நாடு கிடையாது.நீங்கள் எவ்வளவு சிறந்த சமுதாயம் இந்த லச்சனத்தில் தெரிகிறது.நாடே உய்லாத அனாதைக்கு இவ்வளவு பேச்சு இருந்த உலகத்தில் கொடிகட்டி வாழும் எங்கள் இனம் உயர்ந்த நிலையில் இருக்கிறோம் என்பதை உணருங்கள்.உங்களால் ஒன்னும் பு ………….. முடியாது என்பது திண்ணம்.வாழ்க வட மாயம்.வளர்க சிங்களம்.
ஐயா துவாரகன் அவர்களே, “பொங்கல்தான் தமிழ் புத்தாண்டு” என்பது தவறு. தாங்கள் படித்தவர், பண்புள்ளவர், தாங்களும் சீர்தூக்கி பார்க்கும் தன்மையை விடலாமா ? நாம் கற்காலத்தில், உழவு வேலையே இல்லாத காலத்திலும், புத்தாண்டுகளை எதிர்நோக்கினோம். விக்கிபீடியா நமது பாரத நாடான “இந்தியாவின்” காலங்களை வருசை படுத்தி உள்ளது. தேடுங்கள் அங்கே. தி மு க கலைஞர் ஒரு தேச துரோகி. மக்கள் பணத்தை கொள்ளை அடிக்கும் திருடர். அவர் செய்ததுதான் இந்த புத்தாண்டு பட்டிமன்றம். நான் ஒரு ஜோக் சொல்வேன்: சீத்தா பிராட்டி (ராமனின் மனைவி) தீபாவளியை காட்டில் கொண்டாடினாரா அல்லது அரண்மனையிலா ? உடனே a ) அல்லது b ) என்று option கேட்காதிர்கள் காரணம் தெரெதாயுகத்தில் நடந்தது ராமாயணம். அதற்க்கு பின்புதான் துவாபரகயுகம், இதில் தான் கிருஷ்ணன் நரகாசுரனை கொன்று, அவன் 16,100 மனைவிகளுக்கு ஆத்மா திருப்பதி தந்தான். இங்கே தான் தீபாவளி வருகிறது. ஆகையால் தமிழர்களின் முந்தய நாகரிகம், பிறகு பிந்தைய நாகரிகம் என்று வைத்து கொண்டு, அதன் பிறகு வேண்டுமானால் பிந்தைய நாகரிகத்தில், உழவு காலத்திற்கு பின் அரசியல் கட்சிகளால் “பொங்கல்தான் தமிழ் புத்தாண்டு” என்று மாற்றம் கண்டது என்று வேண்டுமானால் வைத்து கொள்ளலாம். (பின் குறிப்பு: அப்பொழுதும் அ தி மு க போன்ற கட்சிகள் “பொங்கல்தான் தமிழ் புத்தாண்டு” என்று ஏற்று கொள்ள வில்லை)
“தமிழும் சமஸ்கிருதமும் எதிர் எதிர் மொழி என்னும் வறட்டு பொய் வாதத்தினை தமிழ் சங்க இலக்கியங்கள் மறுக்கின்றன. மாறாக தமிழ், தாய் என்றால் சமஸ்கிருதம், தந்தை என்கிறாள் ஔவை மூதாட்டி தன் ஆத்திச்சூடியில்.” அகஸ்டின் அவர்களே , உண்மையிலேயே என்னை கவந்து விட்டீர்கள் போங்கள்…..
Dhilip 2 தமிழுக்கும் சமஸ்கிருதத்துக்கும் அண்மைய காலங்களில் தான் பகையை உண்டாக்கினார்கள் என்று புரியவே brahmin today இல் இருந்ந்து copy,paste செய்தேன்.உங்கள் போற்றுதல் அவர்களுக்கு உரியது.ஆனாலும் இதில் தமிழ் ஆய்வாளர்களின் கருத்து என்ன என்று நாம் பார்க்க வேண்டியவர்களாய் இருக்கிறோம்.
வழக்கம் போல குய்யோ முறையோனு கத்திகிட்டு இருப்பார்கள் இந்த தமிழ் ஆய்வாளர்கள் அகஸ்டின் அவர்களே. புருஷன் பொண்டாட்டி சண்டை என்னைக்கு ஒஞ்சிருக்கு? எப்படி சண்ட போடாலும் மாலை வேலை வந்துட்ட கம்முனு ஆயிருவார்கள். அவ்வளவு தான் நம்ம சண்டைனு ….
பிடுங்குவதில் வல்லமை பெற்ற அசிங்கள மன்னனே! உம் இன தொழிலை நீரே வைத்துகொள்ளும் எம் இனத்திற்கு அது தேவையற்றது!
வேங்கையன், யாரை குறிப்பிடுகிறீர்கள் ? நான் சுத்த தமிழன் ஐயா. தேனீ தான் என்னை ஆரியர் என்றும் பார்பனன் என்றும் முத்திரை குத்தி விட்டார்…. நானும் சைவத்தையும் வைணவத்தையும் போட்ட்ருபவன் …. ஷன்மதத்தை போட்ருகிறவன் தான் …. ராஜ ராஜ சோழன் பரம்பரையில் வரும் 6 மன்னர்களின் பெயர் அப்படியே என் குடும்ப உறுப்பினர்களுக்கு வரும் ஐயா …. என் பெயர் குந்தவை நாச்சியார் மற்றும் விமலாதித்தன் பரம்பரை பெயரை வைத்தே வருமைய்யா… நான் தான் மோடனாக இருக்க திலிப் என்று ஏ ஆர் ரஹ்மான் அவர்களின் இந்திய பெயரை வைத்து கொண்டு அலைகிறேன் …
Dhilip 2! தங்களை இல்லை ஐயா,மேலே உள்ள பிடுங்கிகள் கூட்டத்தின் தலைவன் samar asinge வை குறிப்பிட்டேன்.சிங்களவன் 23 பேடி நாடுகளுடன் கூட்டாக சேர்ந்து ஈழ தமிழன் நாட்டை பிடுங்கியதை அடிக்கடி நினைவு கூர்ந்து வருகிறான்.என்ன வீரம்! என்ன வீரம்!
சமரசிங்கே சிங்களவன் பெயரில் இருக்கும் ஒரு தமிழன்…. வேங்கையன் அவர்களே …!!!! சூரியனை கண்டு எதோ ஒன்று குழைக்கிறது. நாம் அதற்காக அசரகூடாது. சிங்களவன் இந்த அளவுக்கு தமிழ் எழுத படிக்க தெரியாது. குடி பெண் சகவாசம் என்று அலையும் ஈனப் பிறப்பு இதை நான் இலங்கை சென்றிருந்த போது என் கண்களால் கண்டது. நம்புங்கள் இவன் தமிழன்….. புல்லுருவி … குலத்தை அழிக்க வந்த கோடரிக் காம்பு .. வெள்ளாட்டு மந்தையில் கருப்பு தோல் போர்த்திய குள்ள நரி.
நிச்சயமாக ஈழ தமிழர்களுக்கு ஒரு விடியல் வரும். தமிழர்களின் தன்மான தலைவர் வேலு பிள்ளை பிரபாகரன் அவர்கள் தொற்றதர்க்கு ஒரு ஒரு காரணம் தான் உயர்ந்தது. உண்மையான தமிழனாக, இந்தியாவிற்கு மட்டும் உண்மையாய் இருந்தது. அவர் நினைத்திருந்தால் அமெரிக்காவுடன் கூட்டு சேர்ந்து தமிழ் ஈழம் அமைத்திருக்கலாம். ஆனால் நாம் தான் பாசத்திற்கும் உண்மைக்கும் அடிமையானவர்கள். ஒரு கோடி குடுத்தாலும் தாயையும், தமக்கையையும், மனைவியையும், குழந்தைகளையும் விட்டு தர மாட்டோம். சிங்களவன் இன்று அப்படி அல்ல ….
“ராம பக்தனாம் அனுமனை, ஐந்திரம் என்பதை அடைமொழியாக்கி “ஐந்திரம் நிறைந்தவன்” என்கிறது கம்பராமாயணம். “ஐந்திரவி யாகரணமும் ஓதி ஒரு நாளினில் வேதமொரு நாலுடன் கற்றான் அனுமன்”, என்கிறான் வைஷ்ணவனான கம்பன்.”.
“ஐந்திரம்” எனும் எழுத்து இலக்கணத்திற்கும் “அனுமானுக்கும்” முடிச்சிப் போட பண்டார மரபில் வந்த கம்பனுக்கு எங்கனம் தெரியும்? வால்மீகி இராமனயத்தை மொழிபெயர்த்ததோடு அல்லாமல் அதினுள் தன் சுய கற்பனையையும் புகுத்திய கம்பன், அனுமானின் அறிவாற்றலை உயர்த்திக் காட்ட வேண்டும் பழங்காப்பியங்களில் வரும் கட்டுக்கதைகளே (‘myth’) இவை. அப்படி இல்லையென்றால் சூரியனையே பழம் என்று கருதி அதனை பிடிக்கப் பறந்து போன அனுமாருக்கு ஏன் இந்த எழுத்து இலக்கணத்தை கற்க வேண்டும் என்ற நிலை வர வேண்டும் என்பதையும் விளக்குங்களேன்!. அதிகப் பிரசங்கித்தனமாக அந்த பிராமணன் எழுதியதை அப்படியே இங்கே போட்டு “பதில் சொல்” என்பதில் இருந்து தெரிகின்றது இந்த அகஸ்தியர் பெயர் போட்டுக் கொண்ட அரை குறை தமிழ் புலவரின் அறியாமை!. தொடரும்
ஒரு சில நாட்கள் வெளி அலுவல்களாலும் உடல் நலமின்மையாலும் இப்பகுதியில் கருத்து எழுத முடியவில்லை. அதற்குள் “அப்படியே கம்முனு ஆயிருவார்கள்” என்றால் எப்படி. எமக்கு இருக்கும் ஒய்வு நேரத்தில்தான் கருத்தாட முடியும்.
சம்ஸ்கிருத மொழி ஆராய்ச்சி என்று வேற்றொரு பிராமண புளுகர் சொன்னதை இங்கே வெட்டி ஒட்டி “இப்ப பதில் சொல்லுங்கள்” என்றால் இக்கருத்தை பதிவிட்டவருக்கு தமிழ் மொழியின் தொடக்கமும் அதனுள் புகுந்த செயற்கை மொழியின் ஆதிக்கமும் தெரியவில்லை என்றுதானே அர்த்தம்?. அவ்வாறு தெரியாதவராயின் மொழி ஆராச்சிக்குள் ஏன் இறங்க வேண்டும்?. எல்லாம் அந்த செயற்கை மொழியை தர்காக்க வேண்டும் என்ற ஆர்பரிப்புதான் என்றால் நானும் ஏற்றுக் கொள்கின்றேன்.
“சங்கத்தமிழ் இலக்கியங்களில் பிராமணீயம் – 3 – தமிழும் சமஸ்கிருதமும்
தொல்காப்பியத்திற்கு “பனம்பாரனார்” பாடிய சிறப்பு பாயிரத்தில் “ஐந்திரம் நிறைந்த தொல்காப்பியன்” என்கிறார். “ஐந்திரம்” என்பது இந்திரனால் செய்யப்பட்ட சமஸ்கிருத இலக்கண நூல், பாரத தேசமெங்கும் இந்நூல் பரவி இருந்தது “விண்ணவர் கோமான் விழுநூல்” என இந்நூலை சிலப்பதிகாரம் பாராட்டுகிறது.”
இதற்கு விளக்கம்:
தொல்காப்பியரின் சக மாணவராகிய பரம்பனார் எழுதிய சிறப்புப் பாயிரத்தில் வரும் வரிகள்:
”மயங்கா மரபின் எழுத்துமுறை காட்டி
மல்குநீர் வரைப்பின் ஐந்திரன் நிறைந்த
தொல்காப் பியனெனத் தன்பெயர் தோற்றிப்
பல்புகழ் நிறுத்த படிமை யோனே”.
இதில் “ஐந்திரன்” என்பதின் விளக்கமென்ன?. ஐந்திரன் என்பது எழுத்து இலக்கணத்தின் பாகுபாடு, சொல்லிலக்கணம், பொருள் இலக்கணம், யாப்பிலக்கணம், அணி இலக்கணமாகும். இதுவே ஒரு மொழியின் இலக்கணத்தை வகுக்கும் வழிமுறையாக தொல்காப்பியர் காலத்தின் இந்திய தென்னாட்டில் வழக்கில் இருந்த முறையாகும். அகத்தியம் காட்டிய வழியாகும். இக்காலக்கட்டத்தில் சமஸ்கிரதத்துக்குரிய பாணினி இலக்கணம் தோன்றாமையால் இவ்விதமான எழுத்து இலக்கண தொகுப்பு முறையானது தென்னாடுடையது எனலாம். Theni wrote on 8 February, 2015, 15:56 இருக்கும் ஆங்கில மேற்கோளைக் காணவும். அதனால், “ஐந்திரம்” என்பது இந்திரனால் செய்யப்பட்ட சமஸ்கிருத இலக்கண நூல்” என்பது எங்கனம் ஏற்புடையதாகும்?. இது உண்மையானால் அந்த இந்திரனால் செய்யபட்ட சம்ஸ்கிருத இலக்கண நூலை இங்கே முன் வைக்கவும். யாம் எமது ஆராய்ச்சிக்கு எடுத்துக் கொள்வோம். இல்லாத ஒன்றைக் கொண்டு இருக்கின்றது என்று வாதிடுவோர் கூற்றை எவ்வாறு ஏற்றுக் கொள்வது?. தொடரும்
தாங்கள் கேட்கும் எல்லா கேள்விகளுக்கும் மற்றவர்கள் பதில் சொல்ல வேண்டும், ஆனால் தாங்கள் அப்படி அல்ல. இதில் மற்றவர்கலுக்கு என்ன தெரியும் அல்லது தெரியாது என்று நீங்களே கற்பனை செய்து கொள்வீர்கள்…. “வால்மீகி இராமனயத்தை மொழிபெயர்த்ததோடு அல்லாமல் அதினுள் தன் சுய கற்பனையையும் புகுத்திய கம்பன், அனுமானின் அறிவாற்றலை உயர்த்திக் காட்ட வேண்டும் பழங்காப்பியங்களில் வரும் கட்டுக்கதைகளே (‘myth’) இவை.” தாங்கள் வால்மீகி யை விமர்சிக்கலாம் …ஆனால் நங்கள் dr . மு வ பற்றி பெசகூடாது …. என்னைய ஞாயம் இது ? அனுமானை ஏன் பஞ்ச முக அனுமான் என்கிறார்கள் ? தேனீ விளக்குங்கள் ஐயா.. விளக்குங்கள்…
நீர் வந்தால் தானையா இந்த அரங்கமே கல கலக்குது ,இல்லேனா கம்முன்னு தான் ஆயிடுது.வசைப்பாட,வாங்கிக்கட்ட ஆள் வேணாமா?அய்யோயோ ,பொறுமை,பொறுமை,வாங்கிக் கட்டுவது என்னைப்பற்றி சொன்னேன்.அய்யா சிரிப்பை பாரு..
“இந்திரத்தை இனிதாக ஈந்தார் பூலும்”, என்கிறார் சைவராகிய நாவுக்கரசர்.” இது ஒரு பிராமணரின் புளுகு!.
திருமுறை பாடல்களை தலையும் வாலும் இல்லாமல் போட்டு இப்படி சொல்கின்றார் திருநாவுக்கரசர் என்றால் அது சைவ நெறியில் நிற்காதோருக்குத் தெரியாது, புரியாது. அந்த திருமுறை பாடலின் குறிப்பிட்ட 2 அடிகளை கீழே பதிக்கின்றேன்:
“இந்திரத்தை யினிதாக ஈந்தார் போலும்
இமையவர்கள் வந்திறைஞ்சும் இறைவர் போலும்..” (6.28.8)
இதன் உரை விளக்கம்:
இந்திரனை இனிய தலைவனாக பெற்றுள்ள தேவர்களும் வேண்டி வணங்கும் இறைவன் (திருவாரூரில் வீற்றிருக்கும்) சிவ பெருமான் போலும்..
இதில் எங்கு திருநாவுக்கரசர் “ஐந்திரம் என்பது இந்திரனால் செய்யப்பட்ட சமஸ்கிருத இலக்கண நூல்” என்பதை ஏற்றுக் கொண்டார்?. தனக்கு வேண்டுமானால் தமிழர் மடையர் என்று நினைத்துக் கொண்ட பிராமணன் எதை வேண்டுமானாலும் சொல்லிக் கொள்ளலாம், எழுதிக் கொள்ளலாம். எங்களுக்கும் அறிவு சிந்தனை உள்ளது என்பதை இவர்கள் மறந்து விட்டார்கள் போலும். இல்லாத ஒன்றைச் சொல்லி அறிவு புகட்ட கிளம்பிய அந்த பிராமணனுக்கு தலையில் ஒரு கொட்டு. தொடரும்.
“நான்கு வேதத்திலும் புலமை உள்ளவன் என்பதாலேயே “அதங்கோட்டு ஆசான்” என்பவர் அவைக்கு தலைமை தாங்க அவர் முன் “தொல்காப்பியம்” அரங்கேற்றப்பட்டது.”
இது எதனைக் காட்டுகின்றது, இப்படி எழுதுவதால் தம் முகத்திரையை தாமே கிழித்துக் கொள்கின்றோம் என்ற சமயோசித புத்தி இல்லாத பிராமணன் எழுதியது மேலேயுள்ள கருத்து.
தொல்காப்பியர் காலத்திலேயே அரசவையில் ஆரிய பிராமணர்கள் அவைப்புலவர்களாக வேரூன்றி இருந்துள்ளனர் என்பதை தொல்காப்பியத்தின் சிறப்பு பாயிரத்தில் வரும் குறிப்பு இவ்வுண்மையை உணர்த்துகின்றது. தென்னாட்டு மூவேந்தர்களுக்கு இராஜதந்திரிகளாக ஆரிய பிராமணர்கள் தொன்று தொட்டு இருந்து வந்துள்ளனர் என்பதையும் தமிழர் வரலாறு அறிந்தோர் அறிவர். இந்நிலையில் சதூர் வேதம் கற்றோர் தலைமை ஏற்றுத்தான் தொல்காப்பியம் அரங்கேற்றம் செய்ய வேண்டி இருந்தது என்று தமிழரை இளிப்பது எங்கனம் பொருந்தும்?.
இதே நிலைதான் திருவள்ளுவர் காலத்திலும் நடந்தது. வள்ளுவன் பிராமணர் அல்லாதவர் என்பதால் சாதியத்தின் அடிப்படையில் திருக்குறள் பாண்டிய மன்னனின் அரசவையில் அரங்கேற்றுவதர்க்குப் பிராமணர் ஆதிக்கத்தில் இருந்த அவைப் புலவர்களால் எதிர்ப்பு தெரிவிக்கப் பட்டது!. 20-ம் நூற்றாண்டு ஆரம்பத்தில் மெட்ராஸ் பல்கலைகழகத்தில் நடந்த அதே கூற்றுதான் அன்று திருவள்ளுவர் காலத்திலும் நடந்தது. இத்தரணியில் தமிழ் அறநூலாம் உலகத் திருமறையாகிய திருக்குறள் கன்னித் தமிழ் காலத்தில் என்றென்றும் நிலைத்திருக்க வேண்டும் என்றெண்ணிய சிவ பெருமான் தஞ்சம் என்று வருவோருக்குத் தஞ்சம் அளிக்கவேண்டி சங்கத்தமிழ் புலவர்களில் ஒருவராகிய அவ்வை பிராட்டிக்கு வழிகாட்டினான் . சங்கப்பலகையில் (தகுதியுள்ள புலவர்க்கு மட்டும் இடங்கொடுக்கக் கூடியதாய்ச் சிவபிரானாற் சங்கத்தார்க்குஅருளப்பெற்ற ஒரு தெய்வப்பலகை) திருக்குறளை மிதக்கவிட்டு சங்க அரசவையில் அரங்கேற்றினார். திருமறை கண்ட திருவள்ளுவருக்கே இவ்வளவு அவதி என்றால் அவரை விட எளிமையான தமிழருக்கு அந்த ஆரிய பிராமணர்களால் தமிழருடைய வரலாற்றில் எவ்வளவு அவதி நிகழ்திருக்கக் கூடும் என்பதை சிறிது சிந்துப் பாருங்கள் தமிழர்களே. இதனை அறிந்து, ஆரிய மொழியிலா அல்லது தமிழிலா உங்கள் வாழ்வும் தாழ்வும் உள்ளது என்பதனை உணர்ந்து வாழக் கற்றுக் கொள்ளுங்கள் தமிழர்களே. தொடரும்.
ஆசிரியரே, நான் பதிவேற்றும் கருத்துக்கள் “awaiting for approval” என்ற வாசகம் வரவில்லையே. கொஞ்சம் கவனிப்பீர்களா. நன்றி.
மேலே குறிப்பிட்ட சங்ககால புலவர் அவ்வையாரைத் தவிர்த்து ஒன்றுக்கு மேற்பட்ட பெண் புலவர்கள் “அவ்வையார்” என்ற பெயரில் அதற்குப் பின்னும் இருந்துள்ளனர் என்று தமிழ் அறிஞர் வையாபுரி பிள்ளை அவர்கள் 1947-ல் சைவ சமாஜம் வெளியிட்ட தனது ஆய்வேட்டில் குறிப்பிட்டுள்ளார். அவ்வாறே, நக்கீரர் எனும் பெயரில் சங்ககாலம் முதல் 4 பேர் இருந்துள்ளனர் என்று கூறியுள்ளார். இதில் திருவிளையாடல் புராணத்தில் வரும் சங்ககால நக்கீரரும், திருமுருகாற்றுப்படை வழங்கிய நக்கீரரும் ஒருவரா அல்லது வெவ்வேரனவரா என்ற சந்தேகம் எழுகின்றது. இதில் “ஆத்திச் சூடி” வழங்கிய அவ்வையாரும், சங்ககால அவ்வையாரும் ஒருவரா அல்லது வெவ்வேறானவரா என்ற கேள்வியும் எழுகின்றது அல்லது இவர் பாதி தமிழ் பழமும், மறுபாதி சம்ஸ்கிருத பழமும் உண்ட அவ்வையாரா என்று கேள்விக் கேட்கிறேன். வரலாற்று அடிப்படையில் நிறுவுங்கள். ஏன் இந்த மயக்கம் என்றால் எமது சிறுவயதில் ஒரு தமிழ் படத்தில் சிவபிரானை உள்ளம் உருகிப் பாடி மற்றொரு தமிழ் படத்தில் முருகனை உளமார பாடிய கே.பி. சுந்தரம்பாள்தான் அவ்வை பிராட்டி என்று நம்பியிருந்தேன். அதனால் தமிழ் தாய் என்றும் ஆரிய தந்தை என்றும் சொன்ன அவ்வை “யார்” என்று நிறுவுங்கள்.
“தமிழ் இனமானவாதிகளுக்கு ஒரு செய்தி “தமிழன்’ என்று ஒரு இனத்தின் பெயர், சங்கத்தமிழ் இலக்கியங்களில் இல்லை. “தமிழன்” என்ற சொல்லை முதன் முதலில் உண்டாக்கியவர் சமஸ்க்ருத வெறுப்பு கடவுள் மறுப்பு கொண்ட நாத்திகர்கள் அல்ல. பக்திமார்க்கத்தில் திளைத்த திருமால் அடியாராகிய பூதத்தாழ்வார் தான்.”
இதைத்தான் இன்றைய நாளில் நின்று கொண்டு 2,000 ஆண்டுகளுக்கு முன் தமிழர்கள் இருந்த, வாழ்ந்த நிலையை அறியாமல் ஆரியப் புராணம் பாடுவது என்பது. மூவேந்தர் காலத்தில் மக்கள் தங்களை தமிழர் என்றும், தெலுங்கர் என்றும், மலையாளி என்றும், கருநாடகர் என்றும் மொழி அடிப்படையில் குறித்துக் கொள்ளவில்லை மாறாக பாண்டிய நாட்டு மக்கள் என்றும், சேர நாட்டு மக்கள் என்றும், சோழ நாட்டு மக்கள் என்றும்தான் தங்களை பிறரிடம் அறிமுகப் படுத்திக் கொண்டார்கள். இதற்கு காரணம் என்ன?. திருவேங்கட மலைக்குத் தெற்க்கே வாழ்ந்த மக்கள் எல்லாம் தமிழும், தமிழ் கலந்த வட்டார மொழிகளையுமே பேசி வந்தனர். அதானால் தான் “தமிழன்” என்று தங்களை வகைப் படுத்திக் கொள்ள வேண்டிய அவசியம் ஏற்படவில்லை. இதனை அறியாமால் அந்த பிராமணர் வைணவ புராணம் பாடுவதேன் தெரியுமா?. அவருக்கு சைவ பக்தி இலக்கியங்களில் போதிய அறிவு இல்லை. கி.பி. 3-ம் நூற்றாண்டில் திருமூலர் அருளிய திருமந்திரத்தின் 6-வது தந்திரம் வழங்கும் “தமிழ்மண் டலம் ஐந்தும் தாவிய ஞானம்” (10.6.7)
எனும் சொல் தமிழர்கள் வாழ்ந்ததைச் சொல்லவில்லையா? 7-ம் நூற்றாண்டின் முற்பகுதியில் வாழ்ந்த திருஞானசம்பந்தர் தமது தேவாரத் திருமுறைகளில் பலவிடங்களில் “தமிழ்ஞானசம்பந்தன்” என்று தன்னைச் சொல்லிக் கொள்ளவில்லையா?. 7-ம் நூற்றாண்டைச் சேர்ந்த பூதத்தாழ்வார் மட்டும்தான் அந்த பிராமணர் கண்ணுக்குத் தெரிந்தா மற்றது இருண்டு விட்டதா?. யாருக்கு எது வேண்டுமோ அதுதானே கண்ணுக்குத் தெரியும்!. நாளை தொடரும்.
“ஏன் இந்த மயக்கம் என்றால் எமது சிறுவயதில் ஒரு தமிழ் படத்தில் சிவபிரானை உள்ளம் உருகிப் பாடி மற்றொரு தமிழ் படத்தில் முருகனை உளமார பாடிய கே.பி. சுந்தரம்பாள்தான் அவ்வை பிராட்டி என்று நம்பியிருந்தேன். அதனால் தமிழ் தாய் என்றும் ஆரிய தந்தை என்றும் சொன்ன அவ்வை “யார்” என்று நிறுவுங்கள். ” தேனீ . “7-ம் நூற்றாண்டைச் சேர்ந்த பூதத்தாழ்வார் மட்டும்தான் அந்த பிராமணர் கண்ணுக்குத் தெரிந்தா மற்றது இருண்டு விட்டதா?. யாருக்கு எது வேண்டுமோ அதுதானே கண்ணுக்குத் தெரியும்!.” – தேனீ . ஆகா மொதத்தில் உங்களுக்கு என்ன வேண்டுமோ அதையே நாங்களும் ஒத்து கொள்ள வேண்டும் அப்படிதானே தேனீ அவர்களே ?
“ஐந்திரம்” எனும் எழுத்து இலக்கணத்திற்கும் “அனுமானுக்கும்” முடிச்சிப் போட பண்டார மரபில் வந்த கம்பனுக்கு எங்கனம் தெரியும்? வால்மீகி இராமனயத்தை மொழிபெயர்த்ததோடு அல்லாமல் அதினுள் தன் சுய கற்பனையையும் புகுத்திய கம்பன்,அனுமானின் அறிவாற்றலை உயர்த்திக் காட்ட வேண்டும் பழங்காப்பியங்களில் வரும் கட்டுக்கதைகளே (‘myth’) இவை. அப்படி இல்லையென்றால் சூரியனையே பழம் என்று கருதி அதனை பிடிக்கப் பறந்து போன அனுமாருக்கு ஏன் இந்த எழுத்து இலக்கணத்தை கற்க வேண்டும் என்ற நிலை வர வேண்டும் என்பதையும் விளக்குங்களேன்!.Theni wrote on 28 February, 2015, 11:50
வசூல் ராஜா mbbsல் கமலஹாசன் ஒரு தத்துவம் சொல்வார்.அதாவது ஒரு ஜோக் சொன்னால் ஆராயக் கூடாது,அதை அனுபவிக்கணும் என்று.என்னுடைய நிறைய கேள்விகளுக்கு நீங்கள் இன்னும் பதில் சொல்ல வில்லை. அதற்கெல்லாம் நீங்கள் பதில் சொல்ல வேண்டும் என்று நான் எதிர் பார்க்கவும் இல்லை, வற்புறுத்வுமில்லை.முடிந்தால் நம் சம்பாஷனை இதை படிபவகளுக்கு மண்டையில் சற்று மணி அடிக்கட்டுமே அனுமன் ஏன் இந்த எழுத்து இலக்கணத்தை கற்க வேண்டும் என்ற நிலை வர வேண்டும் என்கிற கேள்விக்கு நீர் அறிந்த புராணத்தை மற்றவர்களும் அறிய :
சொல்லின் செல்வன் என்று அனுமனுக்கு சிறப்பு பெயர் உண்டு. ஆனால், அந்த அனுமனுக்கு பாடம் நடத்திய பெருமை சூரியனைச் சேரும். ஒருமுறை பால அனுமன் சூரியனைப் பழம் என்று நினைத்து வானமண்டலத்திற்கு தாவினார். சூரியனின் இயக்கம் தடைபட்டு நின்றது. இதனால் உலகமே ஒருகணம் அசையாமல் நின்று போனது. விஷயத்தை அறிந்த இந்திரன், ஓடோடிவந்து அனுமனின் முகத்தில் தன் வஜ்ராயுதத்தால் ஓங்கியடித்தான். மயங்கிய குழந்தை அனுமனைத் தாங்கிப்பிடித்தார் வாயுபகவான். (வாயுவின் மகனே அனுமன்). கோபமான வாயுவை இந்திரனும், சூரியனும் சமாதானப்படுத்தினர். தன் தவறுக்கு பரிகாரமாக சூரியன்அனுமனுக்கு காயத்ரி மந்திரத்தை உபதேசித்ததுடன், இலக்கணங்களையும் கற்றுத் தந்தார். அன்று முதல் அனுமன் சர்வவியாகரண பண்டிதன் என்னும் சிறப்புப் பெயர் பெற்றார். வியாகரணம் என்றால் இலக்கணம்.
புராணங்களில் இருந்து கேள்வி கேட்டால் புராணத்தை கொண்டுதான் நான் பதில் சொல்ல முடியும். இதற்கு மேல் பதில் வேண்டும் என்றால் நல்ல ஒரு பார்ப்பானை அணுகி விளக்கம் பெறவும்.
ஐந்திரம்” எனும் எழுத்து இலக்கணத்திற்கும் “அனுமானுக்கும்” முடிச்சிப் போட பண்டார மரபில் வந்த கம்பனுக்கு எங்கனம் தெரியும்? Theni wrote on 28 February, 2015, 11:50 .
உங்களுடைய தமிழ் கல்வியில் நீங்கள் கம்பனை படிக்கவில்லை போலும்.கம்பன் வீட்டுக் கட்டுத்தறியும் கவி பாடுமாம்.கவிதைக்கு பொய் அழகு என்பது வைரமுத்துவின் வரிகள்.கம்பனின் அனுமானை பற்றிய சித்திரம் கவியா,கற்பனையா,காவியமா,அல்லது தத்துவமா என்று நீங்கள் அணுகுகின்ற அந்த பாபானையே கேளுங்கள்.நான் அந்த அளவுக்கு தமிழ் புழமை பெற்றவன் அல்ல. நான் இன்னும் பாலகனே.
( பி.கு ) இதையும் சொடுக்கி படிக்கலாமே…
www.dinamani.com/weekly_supplements/tamil_mani/article954124.ece?service=print
ஆயிரம் கைகள் மறைத்து நின்றாலும்
ஆதவன் மறைவதில்லை
ஆணைகள் இட்டே யார் தடுத்தாலும்
அலைகடல் ஓய்வதில்லை
ஆடி வா
ஆடி வா
ஆடி வா
புவி ஆழப் பிறந்தவளே ஆடி வா
புகழ் தானே தேடி வரும் பாடி வா
ஆடி வா ஆடி வா ஆடி வா
இடையூரை வெல்ல ஓர் நடமாடி வா
இசை கொண்டு அழகே நீ தேராடி வா
தரை மீது போராட சதிராடி வா
செந்தமிழே நீ பகை வென்று முடி சூடி வா
(ஆடி வா )
மயிலாட வான்கோழி தடை செய்வதோ
மாங்குயில் பாட கோட்டான்கள் குறை சொல்வதோ
முயல் கூட்டம் சிங்கத்தின் எதிர் நிற்பதோ
அதன் முறையற்ற செயலை நாம் வரவேற்பதோ
(ஆடி வா )
உயிருக்கும் மேல் எங்கள் மொழி அல்லவோ
அதன் உரிமைக்கு குரல் இங்கே நாம் அல்லவோ
புயலுக்கும் நெருப்புக்கும் திரை போடவோ
உண்மைக்கு வெற்றி அவன் தீர்ப்பல்லவோ
(ஆடி வா )
(என்ன செய்யறது மேலே உள்ள பாட்டு சுட்டதுதான், எனக்கு சுட்ட பழம்ன்ன ரொம்ப பிடிக்கும்)
தொல்காப்பியத்தைப் பற்றிப் பேசும்பொழுது இதன் தனிச் சிறப்பை ம.பொ. சிவஞானம் இவ்வாறு கூறுகின்றார்:
“தமிழராகிய நாம் நமது தாய் மொழியிலே தொல்காப்பிய நூலை பெற்றதற்காக இறுமாப்புக் கொள்ளலாம்; இதயம் பூரிக்கலாம் அதிலும் எழுத்ததிகாரத்தையும் சொல்லதிகாரத்தையும் பெற்றதோடன்றி, உலக மொழி எதற்கும் இல்லாத பொருள் இலக்கணத்தையும் பெற்றோமே, அது நமக்கே உரிய தனிப் பெருமையாகும்.”
மேற்கூறிய கருத்தை ஒப்புதலுடன் ஏற்று உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் வெளியிட்ட ‘மொழியியல் நோக்கில் சங்க இலக்கியங்கள்’ (முதல் பகுதி) (2009 பதிப்பு) கீழ்காணுமாறு குறித்துள்ளனர்:
” தொல்காப்பியம் எழுத்து, சொல் பொருள் என்ற மூன்று அதிகாரங்களில் ஐந்திலக்கணங்களைக் கொண்டுள்ளது. எழுத்து, சொல் யாப்பு, அணி என்ற இலக்கணங்களைப் பிற மொழி இலக்கணங்களிலும் காணமுடியும், ஆனால் பொருள் இலக்கணம் காண முடியாத ஒன்று. ஒரு மொழியைப் பற்றி நன்கு அறிய வேண்டின் அம்மொழி பேசும் மக்களின் வாழ்வியல் பற்றியும் அறிந்திருத்தல் வேண்டும் என்ற நிலையில்தான், பொருளிலக்கணம் பேசப்படுகின்றது என எண்ணலாம்.”
மேற்கூறிய கருத்தானது “ஐந்திரம்” என்பது இந்திரனால் செய்யப்பட்ட சமஸ்கிருத இலக்கண நூல் என்ற கருத்து பொருத்தமற்றது என்பதை சொல்லாமலேயே மறுக்கின்றது. ஆகையால் “ஐந்திரம்” என்பதற்கு இந்திரனை கூட்டிக் கொண்டு வந்து அவருடைய வச்சுர ஆயுதத்தைக் கொண்டு நாமே நம் தலையில் அடித்துக் கொள்வதை இத்துடன் நிறுத்தி விட்டு வேறு பயனுள்ளவற்றை அலசுவோம்.
அகஸ்தியரே தாங்கள் முன் வைக்கும் பல கேள்விகள் எம் அறிவு சிந்தனையைத் தூண்டுகின்றது. இருப்பினும் எது முக்கியமானதோ அந்த வினாக்களுக்கு முதலில் விடை காண்போம். கீழ்காணுவது தங்களின் கேள்வி:
“சமஸ்கிருத எதிப்பு என்பது அண்மைய காலங்களில் அல்லது சென்ற நூற்றாண்டில் ஆரம்பித்தது தானே.அதுவரை தமிழுக்கும்,சமஸ்கிருதத்துக்கும் ஒரு ஆரோக்கிய பரிவர்த்தனை இருக்கத்தானே செய்ததது.பின் இதன் சீர்குழைவு எப்பொழுது ஏற்பட்டது? கடவுள் மறுப்பு கொள்கை,ஆரிய சார்பு சிந்தனை மறுப்பு,வடமொழி எதிர்ப்பு உருவாகின பின் தானே.”
அகஸ்தியரே தங்களின் மேற்கூறிய கேள்விக்கு மேலே யாம் முன்வைத்த பல கருத்துக்களைக் கொண்டே விடை காணலாம். தொடரும்.
முதற் கேள்வி (1) சம்ஸ்கிருத எதிர்ப்பு ஏன் வந்தது?.
கி.பி. 14-ம் நூற்றாண்டு தொடங்கி கி.பி 19-ம் நூறாண்டின் இறுதிக் காலம் வரை (ஆங்கிலேயன் வந்த பிறகும்) சமஸ்கிருத மொழியே தமிழ் நாட்டில் உயர் கல்வி பெறுவதற்கு முதன் மொழியாக இருந்தது. போதனா மொழியாகவும் இருந்தது. அதாவது, சமஸ்கிருதம் கட்டாயப் பாடமாகவும், தமிழ் மொழி இரண்டாம் தர மொழியாகவும், விருப்புப் பாடமாகவே (‘optional’) இருந்து வந்தது. பிராமணர்கள் பொதுவாக உயர் கல்வி நிலையங்களில் தமது ஆதிக்கத்தைச் செலுத்தி வந்ததே இதற்கு காரணம். சுயாட்சிப் பெற்ற இலங்கை நாட்டில் எப்படி யாழ்ப்பானத்தவரே அனைத்துப் பல்கலைகழகங்கிலும் ஆதிக்கம் செலுத்தி வந்தனரோ அதைப் போலவே தமிழ் நாட்டிலும் இருந்தது. கல்வியிலும் பொருளாதாரத்திலும் உயர்ந்து நின்ற சிறுபான்மையினரான பிராமண சமூகத்தை அவ்வாறு அல்லாமல் இருந்த பெரும்பான்மையினரான தமிழ் மக்களால் எதிர்க்க முடியவில்லை. அடிமை நிலையில் இருந்தனர். (20-ம் நூற்றாண்டின் ஆரம்பக் காலக் கட்டத்தில் மலாய்க்காரர்கள் எவ்வாறு இந்நாட்டில் இருந்தனரோ அவ்வாறே). இக்காலக் கட்டத்தில் பிராமணர் ஆண்டானாகவும் தமிழர் அடிமையாகவும் வாழ வேண்டிய நிர்பந்தத்தில் வாழ்ந்துக் கொண்டிருந்தனர். 1875-ல் ஆங்கிலேயன் கொண்டு வந்த புதிய கல்விக் கொள்கையின் வழி வட்டார மொழியை (தமிழ்) அனைவரும் கட்டாயப் பாடமாகப் படித்து தேர்ச்சிப் பெற்றால் மட்டுமே உயிர் கல்வியைத் தொடர முடியும் என்ற நிலைக்கு மாறியது. அதனால் பிராமணப் பிள்ளைகளும் தமிழைக் கட்டாயமாகப் படித்து தேர்ச்சிப் பெற்றப் பின்னரே மேற்கல்வியைத் தொடர முடியும் என்ற நிலை ஏற்பட்டது. இது தமிழ் மாணவர்களுக்கு சாதகமாகவும் பிராமண மாணவர்களுக்கு துன்பமாகவும் மாறியது. இதனால், பிராமணர்கள் ஆங்கிலேயரின் இத்தகைய கல்விக் கொள்கையை எதிர்த்தனர். உயர்கல்வி பெற மீண்டும் சமஸ்கிருதமே கட்டாயப் பாடமாக்க வேண்டும் என்று ஆங்கிலேய அதிகாரிகளை வற்புறுத்தினர். அதில் தோல்வியும் அடைந்தனர். இதற்கு காரணம் கி.பி. 18-ம் & 19-ம் நூற்றாண்டுகளில் சிறந்த ஆங்கிலப் புலமைப் பெற்ற தமிழ் அறிஞர்கள் பலர் தமிழ் நாட்டில் தோன்றி விட்டனர். உயர் கல்விக் கூடங்களிலும் போதனா ஆசிரியர்களாக தமிழர் ஒவ்வொருவராக முன்னேறிக் கொண்டிருந்தனர். இதற்கு மேலும் செயற்கை மொழியான சம்ஸ்கிருதத்தை காக்க முடியாது என்பதை அறிந்த பிராமணர்கள் வேறு வழி இல்லாமல் அடங்கினர். இவ்விடத்தில், தமிழ் வளர வழிவிட்ட ஆங்கிலேயனுக்கு தமிழர் தலை வணங்குகின்றோம். அன்றிருந்து தமிழர் பிராமணரை ஆள வேண்டி தமிழ் மொழிக்காக போர் கொடி தூக்கினர். சமஸ்கிருதத்தை கோடியில் வைத்தனர். கி.பி. 19-ம் நூற்றாண்டு இறுதி காலம் முதல் தமிழ் நாட்டில் தமிழ் மீண்டும் அதற்குரிய முதன்மை இடத்தைப் பெற்றது. இதன் பின்னரே, தமிழ் இலக்கியத்திலும், உரைநூல்களிலும் வேகமான முன்னேற்றம் இன்றுவரை காணப் படுகின்றது. இதுதான் கி.பி.19-ம் நூற்றாண்டு முதல் சம்ஸ்கிருத எதிர்ப்பு துவங்கியதர்க்குக் காரணம். அதற்கு முன் இருந்த நிலை சமரச நிலை அன்று மாறாக சமஸ்கிருதம் தமிழின் மீது ஆதிக்கம் கொண்டு மேலேற முடியாமல் அழுந்தி வைத்திருந்த நிலையாகும். கி.பி. 14-ம் நூற்றாண்டில் இருந்து கி.பி. 19-ம் நூற்றாண்டு வரை தமிழில் சிறந்த இலக்கியங்கள் தோன்றாததற்கு இதுவே காரணமாம். தொடரும்.
வட்டாரகளிலும் சமஸ்கிருதமே ஆதிக்கம் செலுத்தி வட்டார மொழிகளை பின்னடையச் செய்தது.
இவ்வாறு தமிழ் மொழியும் தமிழரும் பிராமண சமூகத்தின் கிடிக்கிப் பிடியில் இருந்து விடுபட வேண்டி பிராமணர் எதிர்ப்பு கிளம்பியதும் அந்த கி.பி. 19-ம் நூற்றாண்டின் இறுதியில்தான். பாவாணரின் நூற்றாண்டு நினைவு வெளியீடாக வந்த ‘தமிழர் வரலாறு’ (1972) (பகுதி 2) என்ற நூலில் இருந்து பெரியாரை பற்றிய ஒரு குறிப்பை இங்கே மறுபதிப்பிடுகின்றேன்:
“தந்தை பெரியார்
அடிமைபட்டுக் கிடந்த சிறப்பு வாய்ந்த ஓர் இனத்தின் வரலாற்றை எடுத்துச் சொல்லி நம்மை தமிழர்களாய்த் தலைநிமிர வாழவைத்த பெருமைக்குரியவர் தந்தை பெரியார்.
பொதுத் தொண்டு செய்ய முன்வரும் எவரும் மான அவமானம் பார்க்கக் கூடாது என்ற உணர்வோடு தமிழ்குடிக்குத் தொண்டு செய்து தமிழர்களுக்கு இலக்கணமாய் வாழ்ந்தவர் தந்தை பெரியார்.
தன்மானத்தை இழக்க நேரிடினும், தமிழ்க்குடியின் மானத்தை உயர்த்திக் காட்டுவேன் என்று தமிழர்களுக்கு இலக்கியமாய் வாழ்ந்தவர் தந்தை பெரியார். இவர் ஒரு நூற்றாண்டுப் பயனைத் தமிழர்களுக்கு தம் ஓய்வறியா உழைப்பால் உண்டாக்கிக் காட்டியவர்.
இவர் தோன்றியிராவிடில் பேரறிஞர் அண்ணா, பெருந்தலைவர் காமராசர் போன்ற பெருமக்களின் தொண்டும், அரசியல் பணியும் தமிழர்களுக்குக் கிடைத்திரா, தமிழ்த்தென்றல் திரு. வி.க. தமிழ்துறவி குன்றக்குடி அடிகளார் ஆகியோர் ஆற்றிய சமயப்பணியும், தமிழ்பணியும் தமிழ்நாட்டில் வலம்வந்து நிலைத்திரா. தனிதமிழ் இயக்கத் தந்தை மறைமலையடிகள், மொழிநூல் வல்லுநர் தேவநேயப் பாவாணர் போன்ற பேரறிஞர்கள் தனித்தமிழ் இயக்கத் தொண்டும், பணியும் மதித்துப் போற்றும் நிலை தமிழ்நாட்டில் வளர்ந்திரா. புரட்ச்சிபண் பாடிய பாவேந்தர் பாரதிதாசனின் மொழி இன, நாட்டுணர்வும், பகுத்தறிவுக் கொள்கையும் தமிழ்மண்ணில் தழைத்தோங்கி இரா. பெரியார் பிறந்ததால் தமிழர்களாய் நாம் தலை நிமிர்ந்து நிற்கிறோம்.
தன்னலம் அணுவின் முனையளவும் இல்லாது தமிழர்களின் மேன்மைக்கு உழைத்த தந்தை பெரியாரை – மொழிஞாயிறு பாவாணர் அவர்களின் நூற்றாண்டு நினைவாக அவர் படைத்த நூல்களை வெளியிடும் இந்த நேரத்தில் பெரியாரின் பெருந்தொண்டை நன்றியோடு நினைவுகூர்கிறேன்.
பதிப்பாளர்
கோ. இளவழகன்”
தமிழன், காட்டுமிராண்டித் தமிழனாகவும், மூட நம்பிக்களைக் கொண்ட தமிழனாகவும், பிராமண அடிமைகளாகவும் வாழாமல் தரணி முழுவதும் தலை நிமிர்ந்து வாழ வேண்டியவனாக நம்மை உயர்த்திவர் தந்தை பெரியார். இன்று இதனை அறியாத பல சிறுசுகள், அன்னாரைத் தூற்ற வேண்டி பிராமணர் நமக்கு அவ்வப்போது போட்டுக் கொடுக்கும் தகவல்களை உண்மை எதுவென்றும் பொய் எதுவென்றும் தெரியாமல், அறியாமல் ஒரு சாரர் பேச்சைக் கேட்டுக் கொண்டு தூற்றுவது இந்நாளைய தமிழரின் போதாத காலம் என்றுதான் சொல்வேன். நாளை தொடரும்.
தெரியும்,புராணத்தை காட்டினால் வஜ்ராயுதத்தை கொண்டு அடித்துக் கொள்வீர்கள் என்று எனக்கு தெரியும்,அதனால் தான் தின மணியின் link ஐ கொடுத்தேன்.அதில் “ஐந்திரம்”பற்றிய முனைவர் பேராசிரியர் க.நெடுஞ்செழியன் கருத்துக்கு மறுப்பு விளக்கம் படித்தீர்களா?அதையும் சற்று அலசுங்களேன்.அதற்கும் உங்கள் மறுப்பு இருக்கட்டும்.அனால் அப்படியும் ஒரு பதிவு உள்ளது என்று அறிவீர்கள்.
இன்று திருக்குறளை எழுதியவர் சாலமோன் பாப்பையா என்றும்,வீரப் பாண்டி கட்டபொம்மன் என்றால் சிவாஜி என்றும் ,ஔவையார் என்றால் கே.பி.சுந்தராம்பாள் என்றும் சினிமாவும்,டிவியும் நன்றாக மூளைச் சலவை செய்துவிட்டது.என்ன செய்வது இதுவும் காலத்தின் கோலம் தான்.சங்ககால புலவர் எத்தனை பேர் ஔவயர் அல்லது நக்கீரர்கள் இருந்தாலும் நம்முடைய focus subject ல் தான் இருக்க வேண்டும்.சொல்லப் போனால் சுட்டப் பழம் வேனுமா?சுடாதப் பழம் வேண்டுமா? இட்டமுள்ள கனியை இயேம்பு நீ பாட்டி என்று பையன் மரத்தில் இருந்து கேட்டதைப் பார்த்தால் நெட்டில் நாம் சுட்ட கட்டுரைகளை போலதான்.இருக்கிறது.அவனும் ஒரு வேளை அடுத்தவர் உடைய மரத்திலிருந்து தான் ஔவைக்கு பழத்தை சுட்டானோ.
ok ok விஷயத்திற்கு நாம் வருவோம்.பையன் சுத்த தமிழில் சுட்ட பழம் வேண்டுமா?சுடாத பழம் வேண்டுமா என்று தான் கேட்டான்.அனால் பாட்டி தான் தமிழ் பாட்டியா சமஸ்கிருதம் தெரிந்த பாட்டியா என்றுத் தெரியவில்லை.அனால் ஒன்று தெரிகிறது…நாம் வாதிக்கும் பாட்டி ஆத்தி சூடி பாடிய பாட்டி.
அன்னையும் தந்தையும் முன்னறி தெய்வம் என்று தமிழ் மட்டுமே தெரிந்த பாட்டி அல்ல,அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வம் என்று தந்தையை பிதா என்று பாடிய சமஸ்கிருதம் தெரிந்த பாட்டி.
தேனீ அவர்களே… நான் இப்போது இங்கு இல்லை. நீர் கலக்குகிறீர். உம்மைப் பெற்றதற்காக உம்முடையப் பெற்றோர் பெருமைபடலாம். உம்முடைய அறிவுசார்ந்த வாதத்திற்காக நீர் என் அருகில் இருந்திருந்தால் கட்டிப்பிடித்துக் கன்னத்தில் முத்தமிட்டிருப்பேன். தொடரட்டும் உம்முடைய வாதம். இந்த இனம் தன்னுணர்வு பெறட்டும்! நன்றி!
தேனீ அவர்களே, ஒன்னு உங்கள் கட்சி நிறுத்தனும், இல்லை எங்க கட்சி நிறுத்தனும். இல்லாவிடில் இது ஒரு முடிவில்லா பட்டிமன்றம் ஆகிவிடும். தீர்ப்பு இல்லாமல்………