தமிழ் மொழி உலகில் சிறந்த மொழிகளில் ஒன்று என்ற அங்கிராம் கிடைத்து நடந்த( முதல்) உலகத் தமிழ் 9 தாவது ஆராய்ச்சி மாநட்டில் ஒரு உண்மை மறைக்கப்பட்டது.. இது ஒன்பதாவது உலகத்தமிழ் மாநாடா ? உலகத் தமிழ் 9 தாவது ஆராய்ச்சி மாநாடா என்ற இலக்கிய பிழையையும் உங்களிடம் விட்டு விடுகிறேன். ஒன்பதாவது உலகம் எனபது அந்த கிரகத்தில் என்னை மரணிக்க செய்ததது. ஆனால் என் தமிழ் உதிரம் என்னை மீட்டது!
ஆராய்ச்சியில் அடிப்படையில் கோளாரா? மாரிமுத்து PHD தான் பதில் சொல்லவேண்டும்? இதுபோலவே வீரமணியும் பழமையை உளறினார் ? பொய்மையால் கருப்பு மை தடவினார்!
மாநாட்டில் வீரமணி உரையில் தமிழ் மொழி உலகசசிறந்த மொழிகளில் 6வது இடத்தில தமிழ் மொழி உண்டு என்பதை சொல்ல வில்லை ! உலக மொழி அறிஞர்கள் அங்கிகாரம் வளங்கியுள்ளதையும் அதற்கு ஆய்வு செய்த தமிழர் மொழி ஞாயிறு தேவ நேயப் பாவாணர் பெயரையும் குறிப்பிடவில்லை ? மாறாக பிறகு தமிழ் மாநில அரசு கொண்டாடிய செம்மொழி மாநாட்டில் தமிழுக்கு செம்மொழி புகழ் சேர்த்த நிகழ்வை நினைவு படுத்தி செம்மொழி ஆய்வுகளை எழுதிய சுமார் பத்து பேர்களை வாசித்தார். அதில் ஒருத்தர் கூட தமிழன் இல்லை. உலக மொழி அந்தஸ்து பெற 11 இலக்கிய இலக்கண அம்சங்களை ஆய்ந்த மொழி ஞாயரின் குறிப்பை இந்த செம்மொழி காப்பி அடிச்சாங்கள் சொன்னதாக பொய் சொல்லிவிட்டார். தமிழை உலகசசிறந்த மொழி என்றப்பின் அதற்கு செம்மொழி என்று அரசியல் தன மாநாடு நடத்திய திராவிட கூட்டம் தமிழர்களை ஏமாற்ற நடத்திய நாடகம். தமிழக தமிழர்களை தமிழ் என்ற ஆயுதத்தில் ஆளுமையில் அரசியல் அரசு முதலீடு செய்த இதரவ வந்தேறிகள் கூட்டம் இதுவரை நம் தமிழர் மண்ணுரிமையில் தமிழ் பெயரால் தொடர்ந்து அட்டகாசம் செய்கின்றனர்.
இதை அறியாத பேதைமை சாமிவேலு அந்த தெலுங்கர் உரையில் மதி மயங்கி விட்டதாக அறிவிலித்தனமாக பேசினார். என் குருதி கொதித்தது. ஆய்வும் அறிவும் இல்லாத தெலுக்கு ஒடுகாளிகளிகளை வைத்து தமிழ் ஆராய்ச்சி மாநாடுகள் நடத்த வேண்டிய பிச்சை புத்தி ஏன் என்கிறேன். பினாங்கு சர்வதேச தமிழ் மாநட்டில் ராமசாமி வைகோ என்ற தெலுங்கனை வர வைத்து மாநாட்டை நடத்தினார் தமிழகம் சென்ற வைக்கோ தமிழர் தேசியத்தை வசைப்பாடி அதை வளர விட்டக் கூடாது என்று தமிழர்களிடம் சொன்னார்.
மாட்டில் நடமாடிய அனேக தெலுங்கு மலையாள வேடர்களை பார்த்தேன் …தோழர் தமிழர் முத்து சந்திரன் சொன்னது போல முதல் நாட்டியம் சமஸ்கிரத பாட்டுக்கு பாகங்கள் பற்றி இச்சைத்தன ஆடைகள் அதுவும் இதுவும் தெரியும்படி ஆடினார்கள். தமிழன் கலை எது ?தமிழ் ஆராய்ச்சி மாநாட்டில் நாட்டிய மணிகள் என்றால் சமஸ்கிரத பாட்டுதானா ? தெலுங்கு கூட்டம்தனா ? தெலுங்கன் மலையாளி மாநாடுகளில் ஒரு தமிழனை தமிழச்சியை இவர்கள் சேர்ப்பார்களா? தெலுங்கு மாநட்டு கண் காட்சியில் என்னதான் உடு என்று பார்க்கப்போன என்னை “உனக்கு இங்கே என்ன வேலை?” என்று ஒரு தெலுங்கன் கேட்டான் …எங்கள் தமிழர் பொருட்ட்களை வைத்து உங்கள் கண் காட்சி என்கிறாய் உனது ரத்தத்தை கீறி பார் தமிழன் விந்து ஓடும் என்றேன்.
இப்படியாக தமிழ் வழி சொறி எலிகளாகா உள்ளே புகுந்து நமது சட்டி பானைகளை நோண்டி நோட்டமிட்டு இன ஓட்டை போடும் வீரமணி வைக்கோ விஜயகாந்த் கருணாநிதி ஈவேரா அரசியல் டென்கிகள் தமிழச்சி மணி அம்மையை அனாதையாக விட்ட திராவிட பண்பாடு தெரியுமா? தமிழர்கள் கொடுத்து வைத்த கோடான கோடி திரவிட சொத்துக்களை தெலுங்கர் வீரமணி போட்டுக்கொண்ட கதை தெரியுமா? பாதி தமிழனாக மீதி குடம்பவியல் தெலுங்கனாக வாழும் மாநாடு மட்லோடுகள் ஆடும் நாடகத்தை தமிழர்கள் புரிதல் வேண்டும்.
நேற்று பெருஞ்சித்தனார் மகன் பூங்குன்றன் அவர்களையும் மறை மலை அடிகளார் பேரன் மறை தி .தாயுமானவன் இருவரையும் நாம் தமிழர் ,தமிழர் களம் ,தமிழர் தேசியம் ,தமிழர் பாதுகாப்பு இயக்கங்கள் சந்தித்து உரையாடல் தமிழ் களம் கண்டோம். மொழி வளம் நன்றாக் உள்ளது இன வளம் மண்ணடியில் உள்ளது,நமது அரசியல் அரசு முன்னுரிமைகள் பாதுகாக்க தமிழர் தேசியம் நகர்வுகளை அரசியல் நினைவில் தமிழக தமிழர்கள் உணர்வு பெற வேண்டும் தமிழன் உணர “தமிழர் தேசியம் அரசியல் மாநாடு” நடத்த வேண்டும் என்ற கோரிக்கையை முன் வைத்தோம்.
எங்கோ ஆரம்பித்து அரசியல் வியாக்கானம் என்று யோசிக்கலாம் ? சாமி வேலு வீரமணி திராவிட கூட்டத்தில் தமிழே தெரியாத கூடிகெடுத்த பழனிவேல் அரசியல் பேசும்போது இந்த கலப்படம் ஒன்றும் தப்பில்லை.
பிரதமர் வாய் கிழிய மலேசியாவின் தமிழ் தமிழன் உணர்வு பேசினார் ஒரு இதர மொழி ஊடகமும் ஒரு வரி ஒன்னும் எழுதவில்லை இன மொழி அழுத்தம் எங்கனம் உள்ளது என்று ஆராயுங்கள்? கடுப்பில் முஹிடின் நிறைவுக்கு போக வில்லை போனவர்கள் எழுதினால் உங்கள் பங்கையும் தமிழ் இனம் பரிசீலிக்கும் .. தொடர்வேன்.
தமிழன்புடன் .
-ம .அ. பொன் ரங்கன்
இயக்குனர் தமிழர் தேசியம் மலேசியா
மீண்டும் ஆரிய அடிமையில் விழ வேண்டாம் என்பதை ஏற்க மறுக்கும் அன்பர்களே, நீங்கள் அவர்களுக்கு அடிமையாய் இருப்பதில் எங்களுக்கு ஆட்சேபனை ஏதும் இல்லை. ஆனால் எங்களையும் உங்களுடன் கூட்டிக் கொண்டு படு குழியில் மீண்டும் தள்ள எத்தநிக்காதீர்கள். ஆரியத்தை எதிர்த்து ஆங்கிலத்தை ஏன் வளர்த்து வருகின்றீர்கள் என்று கேட்ப்போர் தங்கள் வீட்டில் முதலில் தமிழில் பேசுங்கள். இல்லையேல் நீங்கள் கூறும் தமிழ் மெல்ல மெல்ல சமஸ்கிருதத்தைப் போல் சாகும். அகஸ்தியர் என்ன வீட்டில் தமிழிலா பேசுகின்றார்?. தமிழர் வட்டத்திர்க்கு வெளியே நின்றுகொண்டு பலரும் தமிழர்களுக்கு போதிக்கலாம். ஆனால் நான் தமிழன் என்று சொல்லிக் கொண்டு வர உங்களுக்கு யோக்கியதை உள்ளதா?. அப்படி இல்லையானால் தமிழ் தேசியத்தைப் பற்றி குறை கூற உங்களுக்கு என்ன தகுதி உள்ளது?. முதலில் தமிழரிடையே ‘யாவரும் கேளிர்’ பின்னர் யாதும் ஊரே யாவரும் கேளிர். அப்படித்தானே இந்நாட்டில் தமிழர் அல்லாதோர் எங்களுக்கு இப்ப வாழ கற்றுக் கொடுத்திருகிண்றீர்கள்!. இதில் தப்பு ஏதும் உளதோ?.
அகஸ்டின் உங்கள் கருத்து அருமை….. இதைதான் நாமும் என் வாழ் நாள் முழுவதும் கேட்டு வருகிறேன். வடவன் ஆரிய மொழி என்று அவனை குறை கூறியே ஆங்கலத்தை வளர்த்து வருகிறோம். நிறைய விசயங்கள் சமஸ்கிரகதிலும் பொதிந்து கிடக்கிறது.அதையும் ( சமஸ்கிரதம் கற்ற ) தமிழ் பண்டிதர்கள் நமக்கு மொழி இந்த தமிழ் உலகத்திற்கு தருவார்களேயானால் நம் மொழி வளரும்….. தமிழை எந்த கொம்பனாலும் அழிக்கமுடியாது….. இவர்களே மொழிக் காவலர்கள் என்று அரசியல் செய்வதும் ( தமிழ்நாட்டில்) தமிழே என் உயிர் மூச்சி என கூவிக் கொண்டு ஆங்கிலத்தில் கூடி குலவுவதும் தான் இவர்கள் போக்கு. இன்னும் எதனை காலத்திற்கு பிராமணரையும் சமஸ்கிரததையும் குறை சொல்லி பிழைப்பை ஓட்டப் போகிறார்களோ. அது அந்த ஆண்டவனுக்கே வெளிச்சம்.
“லெமுரியா கண்டமே ஆழ்கடலில் மூழ்கி இருக்கும் பொழுது அங்கிருந்து யார் கிரந்த மொழியில் உள்ள கல்வெட்டை கொணர்ந்தது?. இதுவும் இணைய யோக்கியமோ?. ” என்று தேனீ கேட்டிருகீர்கள். பூனை கண்ணை மூடி கொண்டால் உலகமிருண்டது என்று நினைத்து கொள்ளுமாம். உங்களை மனதில் வைத்துதான் இதை எழுதி இருக்க வேண்டும் போல். ஐயா குஜராத்தில் இருந்து 24 KM கடலில் இருக்கும் துவபராகாவை முத்து குளிப்போர் அமரிக்க பல்கலைகழகங்களுக்காக ஆராட்சி செய்தார்கள். அதன் இரண்டாம் பகுதியை தமிழ்நாண்டின் மூன்று கடல் அடியில் ஆராட்சி செய்தார்கள். அங்கே சில கோயில்களை இருப்பதும், அதில் எழுத பட்டிருக்கும் வாசகங்களையும், கட் வெட்டுக்களையும் வெளியே எடுத்தார்கள். இனிய இனையதளத்தில் தேடுங்கள் ! சும்மா எவனையாவது குறை சொல்லிகிட்டு தமிழ் வளர்கிறான் பேர்விழி என்று திரியாதிர்கள்.
சங்கம் மருவிய காலத்தில் சமண முனிவரானவருக்கு காதலைப் பற்றி என்ன தெரியும் என்று கேட்டதனாலே, திருத்தக்கத் தேவர் சீவக சிந்தாமணி எனும் காதல் காவியத்தைப் படைத்தார். அதைப் பார்த்து தானும் காதல் காவியம் படைக்கப் புறப்பட்டு ஆரியரின் காதலை நம்பி கம்பன் ஏமாந்தான். அதனால்தான் என்னவோ ‘புலவர்’ – க்கு சக்கரவர்த்தி என்று பட்டம் கொடுத்தார்களோ என்னவோ தெரியவில்லை. எப்படி தொல்காப்பியனை தமிழர் போற்றுகின்றோமோ அது போலவே கம்பரையும் போற்றுகின்றோம். காரணம் அவர்களைப் போன்றோர் தமிழுக்கு செய்த தொண்டு. அவ்வாறே, பார்பன பூனூலை தூக்கி எரிந்து விட்டு வந்த பாரதிக்கும் தமிழன் தலை வணங்குகின்றான். ஆனால் தமிழை நிராகரித்து, தமிழரை சூத்திரன் என்று இன்றும் கூறும் பிராமணருக்கு ஏன் வக்காலத்து?. அதனால் பாதிக்கப்படாதோர் என்பதால்தானே இந்த பிராமணர் கரிசனை. பாதிக்கப் பட்டோரைக் கேளுங்கள் விடை எதிராக இருக்கும்.
ஆமாம், ஆமாம் குஜாரத்தில் முத்துக் குளித்தவர்கள் பாற்கடலை கடைய பயன்படுத்தபட்ட மத்துவையும் கண்டுப் பிடித்து விட்டார்கள் என்று நானும் படித்தேன். ஆதாரத்தை தொல்பொருள் ஆராச்சியாளர்கள் முன்வைக்காமல், அதை உலகளாவிய தொல்பொருள் ஆராட்சியாளர்கள் ஏற்காமால் தானே ஒரு கதையை எழுதி இணையத்தில் பதிவேற்றம் செய்தால் இராமர் பாலம் இன்றும் மிதக்கின்றது என்று சொல்வதைப் போலாகும். ஏன் ஒரு முதுகலைப் பட்டம் பெற்றவரும் ஆதாரமற்ற இணைய செய்திகளை மட்டும் வைத்துக் கொண்டு எங்கள் பிராணனை வாங்கிக் கொண்டிருக்கின்றீர்களோ தெரியவில்லை. இணைய செய்திகளை கொஞ்சம் அறிவுப் பூர்வமாக பகுத்தறியப் பழகிக் கொள்ளுங்கள். நாங்களும் பல செய்திகளை இணையத்தில் படித்துக் கொண்டுதான் இருக்கின்றோம். ஆனால் அதில் எது உண்மை, எது மயக்கம், எது பொய் என்று பகுத்து அறிந்து இங்கே முன் வைக்கின்றோம். வெறும் நம்பிக்கையின் அடிப்படையில் இல்லை.
தேனீ,பாவம் ஆரிய மாயையில் சிக்கி உங்களுக்கு குழப்பம் நீங்கவில்லை.உங்கள் கருத்தில் எதை எதையோ சொல்லி மொட்டை தலைக்கும் முழங்க்காலுக்கும் முடிச்சு போடுகிறிர்கள்.முதலாவது தாங்கள் நோக்கும் ஆரியம் ஒரு மாயை என்று புரிந்து கொள்ளுங்கள்.ஒன்றும் இல்லாத பூதத்தை தடி கொண்டு விரட்டுகிறிர்கல்.அதை பார்ப்பவர்களுக்கு மோடி மஸ்த்தான் வித்தை காட்டுவது போல் தோன்றுகிறது.அதை தான் சுட்டிக்காட்ட முயற்சிதேன் .காலம் தொட்டு நம் அடி வாசலில் இருக்கும் ஆரியம் நம் வீட்டில் புகவில்லை என்பதே என் கருத்து. காரணம் தமிழ் நம் தாய் மொழியாய் இருப்பதனால்.தாய் மொழி என்றதும் நீங்கள் நினைப்பது போல் அல்ல,நம் மொழியை நம் தாயின் மூலம் வந்தது என்று நம் மொழியை மானுஷீகம்படுத்த நான் விரும்பவில்லை.ஆனால் எல்லா மொழிகளுக்கும் தாய் என்றும் தன்னை காத்துக்கொள்ள தனக்கு என ஒரு அமானுஷ சக்த்தியை கொண்டுள்ளது என்றும் சொல்லிக்கொள்ள வாஞ்சிக்கிறேன்.கடவுள்ளை காபாற்ற பல கும்பல்கள் கிளம்பி உள்ளது போல மொழியை காப்பாற்றுகிறேன் என்று உங்களை போல் பலர் கிளம்பிவிட்டது வேடிக்கையாய் தான் உள்ளது.வட மொழியை தவிற மற்ற எந்த மொழியும் புக உங்களுக்கு சம்மதம் என்றே .படுகிறது.இன்றைய உலக மயமாகுதலில் அதை தவிர்க்கவும் முடியாது.பாவம் ஆங்கிலேயனாகிய மாக்ஸ் முல்லரின் வாதத்தை ஒரு ஆங்கிலேயானுடைய ஆங்கலத்தை கொண்டு தான் சித்தாந்த தீபிகா எனும் ஆங்கில மாத இதழின் குறிப்பை உங்களால் வைக்க முடிகிறது.அந்த வாதம் பரிணாமத்துக்கு ஒத்து போகுமே தவிர இயற்கைக்கு ஒவ்வாது.
மகாபலிபுரத்தின் கடற்கரையிலும் கோவில்கள், இன்னும் பல சிற்ப அம்சங்கன்களைக் கொண்ட கட்டட அமைப்புகளும் உள்ளன என்பதை பல ஆண்டுகளுக்கு முன்னமே இந்திய தொல்பொருள் ஆய்வாளர்கள் கண்டுப் பிடித்து விட்டனர். அதைப் போலவே பூம்புகார் துறைமுகத்திற்கு 3 கிலோ மீட்டர் தொலைவில் கடலடியில் பண்டைய பூம்புகார் நகரமே உள்ளதையும் இந்திய தொல்பொருள் ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர். இவை எல்லாம் தமிழர்களின் தொன்மையான வாழ்க்கை வரலாற்றை வெளியே கொண்டு வரக் கூடும் என்பதால் இந்திய அரசுக்கு பணம் செலவழித்து கடலுக்குள் ஆராய்ச்சி செய்ய மனமில்லை. ஆனால் ஒரு அமெரிக்கன் புராணக் கதைகளின் அடிப்படையில் துவாரகை குஜாராத் கடல் அடியில் உள்ளது என்பதை வெறும் வாயிலே கட்டி சுண்ணாம்பு தடவினால் நம்புவீர்கள்!. நம்பிக் கொள்ளுங்கள். ஆனால் இந்திய தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் இதைச் சொல்ல எந்த ஆராய்ச்சியையும் முன் வைக்கவில்லையே. வெறும் ‘youtube’ கதைகள் மட்டும் உண்மையாகி விட முடியாது.
ஆரிய மாயை என்று கருதுவோர் இந்து எனப்படும் மதத்தில் இல்லாத போது அந்த ஆரியத்தின் தாக்கத்தை தங்களால் எப்படி உணர முடியும்?. அது ‘ஒன்றும் இல்லாத பூதம்’ என்பது தங்களின் கருத்து. அது இன்றும் ‘தமிழர்களை ஆட்டிப் படைக்கும் பிசாசு’ என்பது எங்களின் கருத்து. தமிழர் கட்டிய ஆலயத்திர்க்குச் சென்று தமிழில் எங்கள் கடவுளரை வழிபட முடியாமல் தடுப்பது ஆரியம் என்றால் தங்களுக்கு புரியாது காரணம் தாங்கள் அதன் பாதிப்பை எதிர்கொள்ளவில்லை. தாங்கள் தங்களுடைய திருச்சபையில் தங்களுக்குத் தெரிந்த தமிழிலும் வணங்கலாம், தங்களுக்குப் புரிந்த ஆங்கிலத்திலோ மலாய் மொழியிலோ வணங்கலாம். எங்களுக்கு அவ்வாரா?. எங்களுக்குப் புரியாத சமஸ்கிருதத்தில் மந்திரங்களைப் பாட வாய் மூடிக் கொண்டு பார்க்கின்றோமே அந்த நிலை உங்களுக்கு இல்லை அதனால் தாங்கள் அறியாததை, அடி வாங்காததின் நிலையைக் கொண்டு ‘மாயை’ என்று சொல்கின்றீர். “காலம் தொட்டு நம் அடி வாசலில் இருக்கும் ஆரியம் நம் வீட்டில் புகவில்லை என்பதே என் கருத்து”. அதில் சந்தேகம் என்ன?. உங்கள் சமயக் கிரியைகளை புரியாத சமஸ்கிருதத்திலா சொல்லி வழிபடுகின்ரீர்?. உழவர் சொன்னாரே எமக்குப் புரியாத மொழியில் மந்திரம் ஓத சடமாக உட்கார்ந்துக் கொண்டு என் பிள்ளைக்கு காரியம் செய்தேன் என்று அந்த வலியும் உங்களுக்குப் புரியாது காரணம் இந்து மதத்திற்குள் நீங்கள் நிற்கவில்லை. தொடரும்.
தமிழின் சிறப்பை எடுத்துச் சொன்ன அந்த கட்டுரையின் ஆரம்பத்தைத்தான் சொன்னேனே ஒழிய அதன் முழு சாரத்தையும் இங்கே வைக்கவில்லை. தமிழின் மேன்மையை அறியாமல் தமிழர் அல்லாதோர் பிற மொழிகளின் சிறப்பையும் உள்ளதையும் இல்லாததையும் சொல்லும் பொழுது, மொழி தோன்றியது எவ்வாறு என்பதை உணர்த்த மெக்ஸ் முல்லரின் கருத்தைத் தெரிவித்தேன். மேற்கூறிய கருத்தைப் பதிவு செய்வதர்க்கு காரணமாவர் மேலும் மறுமொழி கூறி இருந்தால் தமிழ் தோன்றியது எங்ஙனம் என்று தமிழ் பாடமே நடத்தி இருப்பேன். மொழி வளர்ச்சி என்பது ஒரு பரிணாம வளர்ச்சி. தாங்கள் எதை “இயற்கை” என்று நம்புகின்ரீரோ அதுவே சித்தாந்தத்தின் அடிப்படையில் “செயற்கை” என்பதை தமிழர்களால் நிறுவ முடியும் என்பதையும் தங்களுக்கு உணர்த்த முடியும். இந்த அறிவை நிச்சயமாக தாங்கள் தமிழ் படித்த பள்ளியில் படித்திருக்க முடியாது. இதற்கு தாங்கள் தமிழரின் இறை நெறிகளை விளக்கும் மெய்கண்ட சாத்திரங்களை கற்றுணர்ந்திருக்க வேண்டும். அதற்கு தங்களுக்கு வாய்ப்பு இல்லாமல் போய் விட்டது. ஆனால் தாங்கள் மொழி பெயர்க்கப் பட்ட ஆரிய வேதத்தையும் பகவத் கீதையையும் படித்திருக்கக் கூடும் காரணம் ஆரிய மொழிபரப்பு நிறுவனங்கள் கிறிஸ்துவ மொழிபரப்பு நிறுவனங்களுக்குச் சற்றும் சோடை போனதல்ல. அதனால்தான் சமஸ்கிருதமும், ஆரிய வேதமும் பண்டைய காலத்தில் உலகின் பல பகுதிகளுக்கும், தென்கிழக்காசியா உட்பட, பரப்ப முடிந்தது. அதன் பின்னரே இஸ்லாமும், கிறிஸ்துவமும் தென்கிழக்காசியாவிற்கு வந்தன என்பது தாங்கள் அறியாததா. இன்று இரவு தொடரும்.
“எல்லா மொழிகளுக்கும் தாய் என்றும் தன்னை காத்துக்கொள்ள தனக்கு என ஒரு அமானுஷ சக்த்தியை கொண்டுள்ளது என்றும் சொல்லிக்கொள்ள வாஞ்சிக்கிறேன்.” இதைப் படிக்கும் வாய்க்கும், கேட்கும் காதுக்கும் இனிமையாக இருக்கின்றது என்பேன். ஆனால் நடைமுறை அம்சத்தில் இது சாத்தியமா?. மொழி என்பது சடம். தானே தோன்றி, தானே நிலைத்து, தானே தன்னை அழித்துக் கொள்ள இயலாதது. அதற்கு உயிர் கொடுப்பதே அம்மொழியை பேசுபவர்களால். அம்மொழி வளர்வதும் அம்மொழியை பேசுபவர்களால், அம்மொழி அழிவதும் அதைப் பேசுவோர் அழிவதால். இதுவே அம்மொழி தன்கத்தே கொண்டிருக்கும் தற்காப்பு சக்தி என்பதே சரியான அணுகு முறையாகும். மொழி பேசுபவர் ஒழிந்தால் அம்மொழி தானே தன்னைத் தற்காத்துக் கொள்ள இயலாது. அம்மொழியை பேச, தொடர்ந்து பேச, அம்மொழியை ஆராதிக்கின்றவர், தற்காக்கின்றவர் இருந்தே ஆக வேண்டும். இந்த இடத்தில்தான் தாங்களும் எம்மைப் போன்ற பிற செம்பருத்தி வாசகர்களும் ஒன்றித்தும், தனித்துவத்துடனும் நிற்கின்றோம். வாழ்க தங்கள் தமிழ் பற்று.
சித்தாந்த தீபிகா எனும் மாத இதழ் வந்த காலம் 19-ம் நூறாண்டின் இறுதிக் காலத்திலும் 20-ம் நூற்றாண்டின் ஆரம்பக் காலத்திலும். இதில் கருத்து எழுதியோர் ஆங்கிலத்தில் புலமைப் பெற்ற தமிழர் மட்டுமல்ல, ஆங்கிலேயரும் அடங்குவர். தமிழரின் சைவ சித்தாந்தத்தை ஆங்கிலேயரும் அறியும் வண்ணம் வந்ததே இந்த ஆங்கில மாத இதழின் நோக்கம். மேலும் தமிழர் சமயம், தமிழ் மொழி போன்றவற்றிக்கும் ஆங்கிலேயருடன் கருத்து பரிமாற்றத்திர்க்காக அந்த காலத்திலே ஆரம்பிக்கப் பட்டு தமிழரின் ஆங்கில புலமை வெளிபடுத்தும் இதழ் சித்தாந்த தீபிகா. அகஸ்டியருக்காகவும் இன்னும் இப்பகுதியில் கருத்துப் பரிமாற்றம் செய்த செம்பருத்தி வாசகர்களுக்கும் பயன்படும் வண்ணம் அம்மாத இதழின் இணைய வலைச்சுட்டியை கீழே இணைத்துள்ளேன். படித்துப் பயன் பெறுங்கள். தமிழ் மொழியின் தோற்றம் குறித்து மேலும் கருத்து தொடர்ந்திருந்தால் தமிழ் மொழி ஆராய்ச்சிக் கழகத்தின் ஆய்வுகளைக் கொண்டு கருத்து எழுதி இருப்பேன். ஆங்கில இதழைக் கொண்டு தமிழின் மேன்மை உணர்த்துவதனாது ஒரு சிறு பகுதியே. தமிழில் கைவசம் நிறைய உள்ளது.
சித்தாந்த தீபிகாவின் இணைய வலைச் சுட்டி கீழே:
http://siddhantadeepika.blogspot.com/2011/02/siddhanta-deepika-complete-volumes-in.html
https://www.youtube.com/watch?v=Zc2dWngyZH4
https://www.youtube.com/watch?v=rnMM-sAGiVg
துவாபாரக இதோ கடலின் அடியே
5000-6000 ஆண்டுகளுக்கு முன்னர் நம் தமிழர்கள் எவ்வாறான ஒரு அழகான, உயரிய, நாகரீகமான வாழ்க்கை வாழ்ந்திருக்கிறார்கள் என்று அறிந்து கொள்வோமா?
அதற்குமுன்னர்,
நான் எனது பதிவுகளில் பழங்காலம் தொட்டு தமிழர்கள் பின்பற்றிய சமயத்தை “சைவம் “என்றே விளிக்கிறேன்.
சைவம் உலகிலேயே பழைமையான சமயம் என்று அறியப்படுகிறது. சுமார் 5000 ஆண்டுகளுக்கு முற்பட்ட நாகரீகமான சிந்துவெளி நாகரீகத்தில் (ஹரப்பா , மொஹஞ்சதாரோ போன்ற பகுதிகளில்) அண்மையில் கண்டெடுக்கப்பட்ட புதைபொருட்களில் அதற்கான சான்றுகள் கிடைக்கப்பெற்றுள்ளன. ஆகவே ஆரியர்கள் இந்தியாவுக்குள் நுழையும் முன்பே சைவத்தைப் பின்பற்றிய தமிழர்கள் இந்தியாவின் வடபகுதிகள் எங்கும் நிறைந்திருந்தனர்.
.
தமிழர்கள் வாழ்ந்த பகுதிகள் சிந்துவெளி என அழைக்கப்பட்டு பின்னர் இந்துவெளி என்று மருவி, பின்னர் ஆரியர்களின் மதக்கொள்கையாகத் திரிந்து சுமார் 200 வருடங்களுக்கு முன்னர் ஆங்கிலேயர்களால் ஹிந்து , ஹிந்துசம் என்று அழைக்கப்பட்டது.
‘இந்து மதம்’ – என்னும் பெயர் கி.பி. 1794க்கு முற்பட்ட இந்திய இலக்கியங்கள் எவற்றிலுமே இல்லாத புதுப்பெயர் ஆகும்.
சைவ சமயத்தை வளர்த்த நாயன்மார்கள் அறுபத்து மூவரும் தமிழ்நாட்டில் பிறந்தவர்கள். வைணவ சமயத்தை உருவாக்கிய ஆழ்வார்கள் பன்னிருவரும் தமிழ்நாட்டில் பிறந்தவர்கள்.
சைவ சமய இலக்கியமான பன்னிரு திருமுறை தமிழிலேயே இருக்கிறது. வைணவ சமய இலக்கியமான நாலாயிரத் திவ்வியப் பிரபந்தம் தமிழ்மொழியிலேயே இருக்கிறது.
இந்தியாவில் உள்ள பழமையான சைவக் கோவில்கள் இருநூற்று எண்பது ஆகும். அவற்றுள் இருநூற்று எழுபத்து நான்கு கோவில்கள் தமிழ்நாட்டில் தான் இருக்கின்றன.
வைணவத் திருப்பதிகள் நூற்று எட்டில் தொண்ணூற்று ஆறு திருப்பதிகள் தமிழ்நாட்டில் தான் இருக்கின்றன. சைவ சமயத்தின் தலைமைக் கோவில் சிதம்பரத்தில் இருக்கிறது. வைணவர்களின் தலைமைக் கோவில் திருவரங்கத்தில் இருக்கிறது. ஆகவே சைவமும் வைணவமும் தமிழர் சமயங்கள் என்பதில் எவ்வித ஐயத்திற்கும் இடமில்லை.
(பேராசிரியர் முனைவர் மு. தெய்வநாயகம் எழுதிய ‘இந்துத்துவாவின் பிடியிலிருந்து இந்து மதத்தை விடுவிப்பது எவ்வாறு?’ என்னும் நூலில் இருந்து எடுத்து வெளியிடப்பட்டுள்ளது)
என்னுடைய கருத்தை அப்படியே இங்கே தணிக்கை செய்து விட்டார்கள் . உண்மையும் அதனுடன் செத்து விட்டது.
சபாஷ் தன்மான தமிழா …யார் இந்த இந்தியன் என்பதையும் ? தமிழன் இந்தியன் என்று அலைகழிக்க காரணம் என்ன என்பதையும் இலேசாக வளம் வந்து இருக்கலாம். நான் பல முறை தேய்த்துள்ளேன். நீங்களும் எழுதுங்கள்.நன்றி பாராட்டுகள்.
தோழர் தேனியின் முயற்சிகள் என்னை வியக்க வைக்கிறது ! நாள் பதிவுகள். இந்த தமிழ் இன தலைவர்கள் படிக்க வேண்டும். நம்பிக்கை பிறந்துள்ளது. வாழ்த்துகள்…தொடர்வோம்.
எனது எழுத்தை படித்து,பிய்த்து,பிரித்து விளக்கம் கொடுத்த உங்கள் பாணிக்கு,மற்றவன் பார்த்தான் என்றால் தமிழன் நோக்கிப் பார்த்தான் என்ற விதி பொருந்தும் போலும்.அதற்கு மேலும் தங்களுடைய தமிழ் கல்வியின் சாரஹம்ஸத்தை கற்றுக்கொடுக்க தயார் என்கிற வேகமும் பாராட்டதக்கது.ஆனாலும் அதில் பல பொத்தல்கள் உள்ளது.அதை பாப்போமா..
ஆரியத்தை எதிர்த்து ஆங்கிலத்தை ஏன் வளர்த்து வருகின்றீர்கள் என்று கேட்ப்போர் தங்கள் வீட்டில் முதலில் தமிழில் பேசுங்கள். இல்லையேல் நீங்கள் கூறும் தமிழ் மெல்ல மெல்ல சமஸ்கிருதத்தைப் போல் சாகும். Theni wrote on 13 February, 2015, 16:22
ஆக செத்த பாம்பை அடிப்பது தான் உங்கள் போராட்டம் என்று செத்த சமஸ்கிருதத்தை வைத்து வித்தை காட்டுகிறீர்கல்.அதை தான் இங்கு பலர் சுட்டிகாட்டுகின்றன்ர்.இதை தான் ஒன்றும் இல்லாத மாயை என்று சொல்கிறேன்.
முதலில் தமிழரிடையே ‘யாவரும் கேளிர்’ பின்னர் யாதும் ஊரே யாவரும் கேளிர். அப்படித்தானே இந்நாட்டில் தமிழர் அல்லாதோர் எங்களுக்கு இப்ப வாழ கற்றுக் கொடுத்திருகிண்றீர்கள்!. இதில் தப்பு ஏதும் உளதோ?.Theni wrote on 13 February, 2015, 16:22
ஐயா இதில் நிறையவே தப்பு உள்ளது.யாதும் ஊரே யாவரும் கேளிர் என்று நீங்கள் நினைக்கும் பாணியிலா புலவன் பாடினான்?அவனை என் வம்புக்கு இழுக்கிறீர்?மற்றவர்கள் செய்தார்களானால் அவர்கள் செய்யட்டும்.தமிழனுக்கு என்று ஒரு நெறி உண்டு.அதை பற்றி யாருக்கும் கவலை இல்லை.அதை குறித்து மேடைகளில் பேச வேண்டாமா ?குண்டர் கும்பல்களை இயக்குவதும்,கட்சிக்காக போராடுவதும்,சாதி சங்கங்கலை கட்டி காப்பதுமே நாம் தமிழ் உணர்வு என்று நினைகின்றோம்.தமிழ் நெறி குறித்து யார் பேசுகிறார்கள்,அது கதைக்கு ஆகாதே.பின் நமக்குள் என்ன வேறுப்பாடு ?தமிழ் உணர்ச்சியை கிளப்பாமல் ,தமிழ் உணர்வு கொண்டு வாழுங்கள் என்றுத்தான் சொல்கிறேன்.
மொழி வளர்ச்சி என்பது ஒரு பரிணாம வளர்ச்சி. தாங்கள் எதை “இயற்கை” என்று நம்புகின்ரீரோ அதுவே சித்தாந்தத்தின் அடிப்படையில் “செயற்கை” என்பதை தமிழர்களால் நிறுவ முடியும் என்பதையும் தங்களுக்கு உணர்த்த முடியும்.Theni wrote on 15 February, 2015, 14:38
ஐயா,தமிழ் இயற்கை மொழியா,செயற்கை மொழியா என்று தேட நாம் சித்தாந்ததிற்ககுள் அவ்வளவவு ஆழத்திற்குல் போக தேவை இல்லை.அதை வேறோரு நாள் வைத்துக் கொள்ளலாம். கை புண்ணிற்கு கண்ணாடி தேவை இல்லை.உணர்ச்சி வசப்படாமல் தொடர்ந்து வாசியுங்கள் .
1.இயற்கை மொழி
மனித இனத் தொடக்கத்தின் ஊடாகவே இணைந்து வளரும் மொழி இயற்கை மொழி.
2.செயற்கை மொழி
ஒரு இனக் கூட்டத்தாரிடம் இருந்து பிரிந்து புதியதொரு இனக் கூட்டமாக பல்கிப் பெருகும் சமூகம் இயற்கை மொழிக் கூறுகளின் அடிப்படையுடன் புதிதாகக் குடியேறிய சூழலுக்கு ஏற்றவாறு புதிய ஒலிக்குறிகளை தங்கள் மூதாதையர்களின் மூல மொழியுடன் கலந்து பேசும் போது பிறப்பவை செயற்கை மொழி.
இந்த விளக்கம் போதும் என்று நினைக்கின்றேன்.உங்கள் தமிழ் அறிவிற்க்கு நிச்சயமாக இது உங்களுக்கு புரிந்திருக்கும் என்று நம்புகிறேன்.
“எல்லா மொழிகளுக்கும் தாய் என்றும் தன்னை காத்துக்கொள்ள தனக்கு என ஒரு அமானுஷ சக்த்தியை கொண்டுள்ளது என்றும் சொல்லிக்கொள்ள வாஞ்சிக்கிறேன்.” இதைப் படிக்கும் வாய்க்கும், கேட்கும் காதுக்கும் இனிமையாக இருக்கின்றது என்பேன். ஆனால் நடைமுறை அம்சத்தில் இது சாத்தியமா?. மொழி என்பது சடம்…Theni wrote on 15 February, 2015, 15:06
வாய் புளித்ததோ,மாங்காய் புளித்ததோ என்கிற தோரணையில் மொழி என்பது சடம் என்கிறிர்கள்.உங்கள் மொழி அறிவு மெய் சிலிர்க்க வைக்கிறது.இயல்,இசை,நாடகமென தம் மக்களோடு பரிணமித்து கொண்டிருக்கிற தமிழ்,சைவம்,வைணவம்,சாக்தம் கணபத்தியம்,கௌமாரம் ,சௌரம் புத்தம்,ஜைனம்,சீக்கியம் என்று எல்லா பிரிவுகளையும் உள்ளடக்கிய இந்து மதத்திற்குள் உள்ள பிரிவுகளையும் கடந்து தன்னுடைய இடத்தை நிலை நிறுத்தி கொண் டிருக்கவில்லையா ,இயற்கை சீற்றங்களையும்,காலத்தையும் கடந்து இன்னும் தமிழின் வளங்களை,பொக்கிஷங்களை வாரி வழங்கி கொண்டிர்க்கவில்லையா?என்னய்யா சடம் என்கிறிர்கள்?
ஒன்றை தெரிந்து கொள்ளுங்கள் ஒட்டு மொத்தமாக தமிழ் இனமே முற்றும் அழிந்தாலும் தன்னை தானே வாரிகொடுத்த தமிழ் இயற்கையோடு நிலைத்தே நிற்க்கும்.தமிழை காக்க தமிழன் தேவை இல்லை.
தமிழ் மொழியை மதிக்கிறேன் போற்றுகிறேன்…ஆனால், தமிழன் தமிழன் என்று கூக்குரல் எழுப்புவதனால் உலக இந்தியர்களை தமிழனாக காண்பது ஒவ்வாத ஒன்றே!! தமிழன் தமிழனாகவே இருக்கட்டும்.. இந்தியர்கள் இந்தியர்களாகவே வாழட்டும். இதில் முக்கியம் ஒற்றுமையே!!
அன்பர் தராசு .தமிழன் தமிழன் என்று கூக்குரல் எழுப்புவதனால் உலக இந்தியர்களை தமிழனாக காண்பது ஒவ்வாத ஒன்றே!
இந்தியன யாரு தமிழனா மாற சொன்னது ?
நாங்க தமிழர்கள் தமிழன் தமிழன் என்று கூறுவதால் உமக்கேன் வலிக்கிறது!? இனிமேல் தமிழன் முதுகில் சவாரிசெய்ய முடியாதுங்கிற அச்சமோ ?…
நாங்க தமிழன் தமிழன் என்றால் மற்றவர்கள் இஞ்சிதின்ற குரங்காட்டம் ஆடுவதேன் !?
தமிழர் கண்ட சமயம் ஒன்று உண்டு. தமிழரின் வேதம் திருமுறையாகும். தமிழரின் இறை நெறியானது, இறைவன் என்பார் ஆணவ இருளில் கட்டுண்டு இருக்கும் உயிர்களின்பால் கருணைக் கொண்டு, இவை பக்குவப்பட்டு முத்தி பேரின்பம் எனும் இறைஅருள் பெற வேண்டி பிரபஞ்சத்தை படைத்தருளிய முப்பொருள் விளக்கத்தை உணர்த்துவதாகும். இது சுருக்கத்திலும் சுருக்கமாக சொன்னது. இதன் விரிவாக்கம் தமிழரின் சமயத்தில் உள்ள சைவ ஆகமங்களையும், தமிழரின் வேதமாகிய திருமுறைகளையும், தமிழர் கண்ட இறை நெறியாகிய மெய்கண்ட சாத்திரங்களையும் விரிவுபடுத்திச் சொல்லவதாகும். கல் தோன்றி மண் தோன்றா காலத்துக்குரிய தமிழருக்கு ஒரு சமயம் உண்டு ஆனால் அந்த சமயத்திற்கு உரிய இடத்தை தராது தமிழர் ஆலயத்தில் கோலோச்சுவது சமஸ்கிருதம். தமிழரே அவர்தம் சமயத்தை அறியாதவாறு கண்கட்டி ‘மோடி மஸ்த்தான் வித்தை காட்டுவது’ சமஸ்கிருதமும், ஆரிய வேத ஆதிக்கமும். இது செத்த பாம்பு அல்ல. தமிழரின் சமயத்தை சாகடித்த நச்சுப் பாம்பு என்றாலும் தகும். அதானால் சமஸ்கிருதத்தையும், ஆரிய ஆதிக்கத்தையும் நிறுத்தி தமிழரின் சமயம் மீட்சிப் பெற நாங்கள் போராடுகின்றோம். இது தமிழர் அல்லாதோருக்குப் புரிய வேண்டிய அவசியமில்லை, புரிந்துக் கொள்வதற்கு பக்குவமும் இருப்பதாக தெரியவில்லை. நாங்கள் எங்களின் கண்ணுக்குத் தெரிந்த பிசாசைத்தான் எதிர்கின்றோம். கண்ணுக்குத் தெரியாத மாயை அல்ல.
“தமிழனுக்கு என்று ஒரு நெறி உண்டு”. எங்கள் சைவத்தில் வேடிக்கையாக ஒரு கதை சொல்வதுண்டு. சிவன் தன் அடியார்களின்பால் கொண்ட அன்பினாலும், கருணையாலும் அடியார் பெருமக்கள் கேட்டதை எல்லாம் ஒரவஞ்சனை இல்லாமல் கொடுத்து அருள்வானாம். அப்படி ஒரு பக்தன் ‘நான் யார் தலையில் கை வைக்கிறேனோ அவன் உடனே மரணமடைந்து விட வேண்டும் என்றானாம். சிவனும், தந்தேன் என்றாராம்’. வரம் கிடைத்த மகிழ்ச்சியிலும் அகங்காரத்திலும் சிவன் தலையிலேயே கை வைத்து சோதிக்க நினைத்தானாம் அந்த பக்தன். வரம் கொடுத்த சிவனே அந்த பக்தனுக்கு அஞ்சி ஓட்டம் பிடித்தானம். கதை கேட்க நல்லா இருக்குல்ல. இப்படிதான் தாங்கள் சொல்லும் ‘யாதும் ஊரே யாவரும் கேளிர்’ எனும் தமிழரின் நெறியும். ஏதோ வயிற்றுப் பிழைப்புக்காக அன்று புலவர் அரசர் முன்னே பாடி பரிசை வாங்கிச் செல்ல இன்று இதையே பலரும் தத்தம் அரசியல் இலாபத்திற்காக சொல்லித் திரிகின்றனர். இதைச் சொன்ன கணியன் பூங்குன்றனார் தமிழருக்கு மட்டும் சொல்லவில்லை அன்று சங்ககாலத்தில் தமிழர்களுடன் கூடி வாழ்ந்து இன்று தங்களை தனிமைப்படுத்தி மலையாளிகள் என்றும், தெலுங்கர் என்றும் , கன்னடத்தவர் என்றும் சொல்லிக் கொள்கின்றார்களே அவர்களுக்கும் சேர்த்துதான் சொன்னார். ஆனால் இன்று நடப்பதென்னவொ?. மலேசிய மலையாளிகள் சங்கம் என்று ஒன்று முன்னமே இருக்க புதியதோர் சங்கமாக முளைத்தது மலேசிய இந்து மலையாளிகள் சங்கம்!. இதுதான் இன்று மலையாளிகளிடம் இருக்கும் ‘யாதும் ஊரே, யாவரும் கேளிர்’ எனும் சிறப்பு நெறி. அன்று ஆந்திர பிரதேசமாக இருந்து இன்று ராயலசீமா ஆந்திரம் என்றும் தெலுங்கானா என்று இருப்பதுதான் தெலுங்கர்கள் பின்பற்றும் ‘யாதும் ஊரே, யாவரும் கேளிர்’ எனும் சிறப்பு நெறி. இதில் தமிழன் ஒரு கேனையன். ஏதோ இதை தனக்கு மட்டுமே சொன்னதாக நினைத்துக் கொண்டு நாம் அனைவரும் இந்தியர் என்று கூறி அன்றிருந்து இன்று வரை இந்நாட்டிலும் சரி தமிழ் நாட்டிலும் சரி அனைத்தையும் பிறருக்குப் பகிர்ந்து வாழ்ந்தான். இது தமிழருக்கே இருக்கும் அன்பு நெறியால் வந்த பண்புள்ளம். அந்த அன்பினாலும், பண்பினாலும் தமிழருக்கு கிடைத்த வெகுமதி? அங்கே தண்ணீர் பஞ்சம், இங்கே தனித்து வாழ்வோம் என்று பிறர் தமிழருக்குக் கற்றுக் கொடுத்த பாடம். இதற்க்கெல்லாம் காரணம் அந்த தமிழரின் ‘யாதும் ஊரே, யாவரும் கேளிர்’ என்ற சிறப்பு நெறிதான் என்றால் தமிழனும் சிவனைப் போல ஏமாளிதான். இத்தகைய ஏமாளித்தனத்தில் இருந்து போராட்டம் மிகுந்த இந்த உலகில் தமிழன் நிலைத்து வாழ வேண்டுமானால் ஒரு சில நூற்றாண்டுகளுக்கு தமிழன் தன்னை உயர்த்திக் கொள்ள ‘தமிழர் யாவரும் கேளிர்’, பின்னரே யாதும் ஊரே யாவரும் கேளிர் என்று மாறிப் பாடுகின்றோம். இவ்வாறு சொல்வதற்காக எம்மை மன்னிப்பீராக. இது காலத்தின் கோலம்.
சேர்த்துதான் சொன்னார்
ஈர மரக்கட்டையாக வாழும் தமிழர்களுக்கு தண்ணீர் ஊற்றினோம் தளைக்கவில்லை. நெருப்பை எற்றுகின்றோம் தமிழர் உணர்ச்சி எரியட்டுமே என்று. கொஞ்ச நாளைக்கு எரிய விட்டுத்தான் பார்ப்போமே. யாருக்கு என்ன நட்டமாகப் போகப் போகின்றது!.
“1.இயற்கை மொழி
மனித இனத் தொடக்கத்தின் ஊடாகவே இணைந்து வளரும் மொழி இயற்கை மொழி.
2.செயற்கை மொழி
ஒரு இனக் கூட்டத்தாரிடம் இருந்து பிரிந்து புதியதொரு இனக் கூட்டமாக பல்கிப் பெருகும் சமூகம் இயற்கை மொழிக் கூறுகளின் அடிப்படையுடன் புதிதாகக் குடியேறிய சூழலுக்கு ஏற்றவாறு புதிய ஒலிக்குறிகளை தங்கள் மூதாதையர்களின் மூல மொழியுடன் கலந்து பேசும் போது பிறப்பவை செயற்கை மொழி”.
இந்த மொழி விளக்கம் எனக்கு அதிகமாகவே புரிஞ்சி புடிச்சிருக்கு.
“வாய் புளித்ததோ,மாங்காய் புளித்ததோ என்கிற தோரணையில் மொழி என்பது சடம் என்கிறிர்கள்.உங்கள் மொழி அறிவு மெய் சிலிர்க்க வைக்கிறது”. நான் சித்தாந்தத்தின் அடிப்படையில் சொன்ன விடயம் தங்களுக்கு விளங்கவில்லை என்பதால் அவசரப் பட்டு வார்த்தையை விட்டு விட்டீர்கள். கால நேரம் கருதி இதற்கு நாளை பதில் சொல்லுகின்றேன்.
தமிழ் நெஞ்சங்களே, Ipoh தமிழர் திருநாள் இலக்கிய விழா வரும் 22/2/15 நாள் , மணி 4.30 க்கு Ipoh மாரியம்மன் ஆலய மண்டபத்தில் இனிதே நடைபெறவுள்ளது .
அணைத்து தமிழ் நெஞ்சங்களும் தவறாமல் கலந்து சிறப்பிக்குமாறு கேட்டு கொள்ளபடுகிறீர்கள் .
இவ்வாடுண்டும் தமிழ் நாட்டை சேர்ந்த தமிழ் அறிஞரின் இலக்கிய பேருரை இடம்பெற உள்ளது. தமிழ் இலக்கிய மழையில் நணைய அரைவரும் அன்புடன் அழைக்க படுகிறீர்கள் .- நன்றி செம்பருத்தி
19 ஆம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் விவாதிக்க வேண்டியதை 20 ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் விவாதிக்கிறார்கள்.
தமிழர் கட்டிய ஆலயத்திர்க்குச் சென்று தமிழில் எங்கள் கடவுளரை வழிபட முடியாமல் தடுப்பது ஆரியம் என்றால் தங்களுக்கு புரியாது காரணம் தாங்கள் அதன் பாதிப்பை எதிர்கொள்ளவில்லை. தாங்கள் தங்களுடைய திருச்சபையில் தங்களுக்குத் தெரிந்த தமிழிலும் வணங்கலாம், தங்களுக்குப் புரிந்த ஆங்கிலத்திலோ மலாய் மொழியிலோ வணங்கலாம். எங்களுக்கு அவ்வாரா?. எங்களுக்குப் புரியாத சமஸ்கிருதத்தில் மந்திரங்களைப் பாட வாய் மூடிக் கொண்டு பார்க்கின்றோமே அந்த நிலை உங்களுக்கு இல்லை அதனால் தாங்கள் அறியாததை, அடி வாங்காததின் நிலையைக் கொண்டு ’மாயை’ என்று சொல்கின்றீர். “Theni wrote on 15 February, 2015, 14:15.
திருச்சபைகளும் இதை கடந்து தான் வந்துள்ளது.அதற்க்கு மூர்க்கமும் ,வன்முறையும் வழியல்ல.இதற்கு தேவை அன்பு,வைராக்கியம்,தியாகம்.இப்பொழுது அதன் பலனை அனுபவிக்கின்றேன்.இதை நானே சொல்லி கொண்டிருந்தால் உங்களுக்கு அது இலச்சையாய் இருக்கும்.ஆகவே இதோடு ஒரு வரலாற்று கட்டுரையை இணைக்கிறேன்.இது வரலாறு என்று மட்டும் அல்லாமல் அனுபவ பாடமாக மற்றவர்களுக்கும் உதவலாம்.
தமிழர் சமயம்
MenuWidgetsSearch
Uncategorized
தாய்மொழி பற்றும், விவிலிய மொழிப்பெயர்ப்பும்
தாய் மொழி பற்று அவசியமா? , கேளிக்குறியதா? அவரவர் தாய் மொழியில் வழிபாடு நடத்துவது குற்றமா? கிழே பதிவிட்டுள்ள கட்டுரை ”காக்கையர் ம.பழனிச்சாமி பிள்ளை” அவர்கள் எழுதிய தமிழின தாழ்ச்சி நிலை தொடர்ச்சி நிலையாவது ஏன்? என்ற புத்தகத்திலிருந்து எடுக்கப்பட்டது.
உலகம் முழுவதும் நன்கு பரவிக் கிடக்கக் கூடிய கிறித்துவ மதத்தில் ஒரு காலத்தில் இலத்தீன் (The Latin Language) மொழியிலேதான் அனைத்து வகையான பூசைகளும் நடந்தன. அந்த மதத்திற்குரிய அடிப்படையான, உயிர்நாடியான மூல வேத நூலான விவிலியம் (The Bible) இலத்தீன் மொழியில்தான் இருந்தது. மத குருமார்களாகப் பணிபுரியும் பாதிரியார்களும் மதத்தை புரிந்து கொள்ளவும் அல்லது மதத்தின் சடங்குகளையும், பூசைகளையும் செய்து சத்தியும் சித்தியும் பெற விரும்புகிறவர்களும் கட்டாயமாக இலத்தீன் மொழியைக் கற்றுக் கொண்டுதான் ஆகவேண்டும்.
இந்த இலத்தீன் மொழிதான் ‘அருளுலக ஆட்சி மொழி’,‘பூசைமொழி’, ‘தவமொழி’, ‘தெய்வமொழி’, ‘தேவமொழி’ …. என்று நம்பப்பட்டது. இந்த ‘இலத்தீன் மொழியைத் தவிர வேறு எந்த மொழியும் கடவுள் அருளை, தெய்வீகச் சத்தியைப்பெற்றுத் தராது, பெற்றுத் தர முடியாது; இந்த இலத்தீன் மொழிக்கு எதிராக அல்லது மாறாக அல்லது வேறாகச் சிந்திப்பவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் மத விரோதிகளாவார்கள் ; நாத்திகராவார்கள் ; கடவுள் மறுப்பாளர்களாவார்கள் ; மிகப் பெரிய பாவிகளாவார்கள்; தேவதண்டனைக்கு உரியவராவார்கள் ….. என்ற கருத்து கிறித்துவ மதத்தில் மிகத் தெளிவான ஆணித்தரமான கருத்தாக இருந்தது.
எனவே, ஐரோப்பாக் கண்டத்தில் வாழ்ந்த தாய்மொழிப்பற்றாளர்கள், தங்களுடைய தாய்மொழியிலேயே தங்களுடைய மத வேத நூலான விவிலியத்தைப் படிக்கவும், பூசைகளைச்செய்யவும், மதச் சடங்குகளைச் செய்யவும் மாறாத வேகத்தோடு ஏங்கித் தவித்தார்கள். அவர்களின் ஏக்கங்களை மதத் தலைமைப் பீடமும், மதக் குருமார்களும், இலத்தீன் மொழி வெறியர்களும் தவறானதாக, மிகப் பெரிய ஆபத்துக்குரியதாக, கொடிய நோயினும் அஞ்சத் தக்கதாக, மன்னிக்க முடியாத மாபெரும் குற்றமாக நினைத்தார்கள்! இதனால், கிறித்துவ மத வாதிகளும், மதத் தலைவர்களும் தாய்மொழிப் பற்றென்பது மத விரோதமான உணர்வு என்றும் மதத் துரோகமான உணர்வு என்றும், மன்னிக்க முடியாத மாபெரும் குற்ற உணர்வு என்றும் கருதினார்கள்.
அதன் பயனாக, 12ஆம் நூற்றாண்டில் பீட்டர் வால்டோ (Peter Waldo) என்ற ஒரு பெருஞ் செல்வர் முதன் முதலில் விவிலிய நூலை பிரெஞ்சு மொழியில் மொழிபெயர்த்து வெளியிட்டார். அந்த மொழிபெயர்ப்பு காட்டுத்தீ போல் எங்கும் பரவியது. அது கண்டு கிறித்துவ மதத் தலைவர்கள் பயந்தார்கள். பிரெஞ்சு
மொழிப் பற்றினால் மதத்தின் ஆட்சிமொழியாக இருந்த இலத்தீன் மொழிக்கு ஆபத்து வந்தது என்றும், அந்த ஆபத்து விரைவில் மதத்திற்கு வந்து விடும் என்றும் அச்சப்பட்டார்கள்.
இவற்றின் விளைவாக, பதினான்காவது நூற்றாண்டில் ஆக்சுபோர்டு பல்கலைக் கழகத்தில் (Oxford University) பேராசிரியராக இருந்த சான் வைக்கிலிப்பு (John Wycliff) என்பவர் முதன்முதல் கிறித்துவ மதத்தின் வேதநூலான விவிலியத்தைத் தொன்று தொட்டு வந்த இலத்தீன் மொழியிலிருந்து ஆங்கில மொழியில் மொழி பெயர்த்து இங்கிலாந்திலும், செர்மனியிலும், பொகிமியாவிலும் பரப்பினார். இந்த மொழிபெயர்ப்பைப் பொதுமக்கள் கேட்கக் கூடாது என்று மத குருமார்களும், மதத் தலைவர்களும், மதவாதிகளும் அறிவிப்புக்கு மேல் அறிவிப்பு வெளியிட்டுக் கொண்டேயிருந்தார்கள்.
இந்தக் கண்மூடித் தனமான மத வெறியர்களுக்கு முன்னால் உண்மையான தாய்மொழிப் பற்று அடங்கி ஒடுங்கிப் போய்விடவில்லை. மக்கள் கூட்டம் கூட்டமாகத் தெருக்களில் கூடி நின்று பேராசிரியர் சான் க்கிலிப்பின் விவிலியத்தின் ஆங்கில மொழி பெயர்ப்பைப் படிக்கச் சொல்லிக் கேட்கலானார்கள். அப்பொழுது, மத வெறியர்களின் வற்புறுத்தலினால் அரசாங்கம் தனது காவலர்களை அனுப்பி தெருக்களில் கூடிடும் மேற்படிக்கூட்டத்தைச் சாட்டையால் அடித்து கலைந்து செல்லுமாறு ஆணையிட்டார்கள். ஆனால், தாய்மொழியின் மீது பற்றும், பாசமும் அளவுக்கு மேல் வைத்திருந்த மக்கள் சவுக்கடி பட்டுக் கொண்டே ஆங்கில மொழியிலிருந்த விவிலியத்தைத் தெருக்களில் நின்று உரக்கப் படித்தும், படிக்கக் கேட்டும் மகிழ்ந்தார்கள்.
இப்படித் தாய்மொழிக்காக அமைதி வழியில் புரட்சி செய்து தெருக்களில் நின்று சவுக்கடி பட்ட மக்களின் வீர வரலாறு உலக வரலாற்றில் நிலையான இடத்தைப் பெற்றது. அதாவது, தாய்மொழிக்காகச் சவுக்கடி பட்டுக் குருதி கொட்டத் தயாராக இருப்பவர்கள்தான் தூய்மையானவர்கள், வாய்மையானவர்கள், தாய்நாட்டுப் பற்று மிக்கவர்கள், உண்மையான மனிதப்பண்புடையவர்கள் – என்ற உண்மை சவுக்கடி பட்ட மக்களின் உடலிலிருந்து கசிந்து சிந்திய குருதியால் எழுதப் பட்டது!
வரலாற்றை திருப்பிப் போட்டு இங்கே தமிழர்களை ஏய்க்க வந்ததால் தமிழர் தாண்டி வந்த தடைகளைச் சொன்னோம். வரலாற்றை மறந்தவன் வெகு சீக்கிரத்தில் அழிந்து விடுவான். தமிழர்கள் வாழ்வாங்குவாழ எங்கள் வரலாற்றையும் புரிந்து பாதுகாப்போம்.
தங்களின் தகவலுக்கு நன்றி அகஸ்தியரே. நாங்கள் விரும்புவதும் அறவழியே. அதில் சந்தேகமில்லை. ஆனால் நீங்கள் கூறிய கருத்துக்கும் நாங்கள் முன் வைக்கும் கருத்துக்கும் வேறுபாடு உள்ளது. தாங்கள் சொன்னது விவிலியத்தின் மொழிபெயர்ப்பு. நாங்கள் சொல்வதோ தமிழர் கண்ட இறை நெறி. இது ஆரியரின் இறை நெறி தத்துவங்களுக்கு வேறுபட்டது என்பதால் இங்கே வேண்டுவது மொழிபெயர்ப்பு அல்ல தமிழர் சமய மீட்சி. இதுவே இங்கே அழுத்தம் திருத்தமாக சொல்ல வந்தது. தமிழர் சமய மீட்சியை விரும்பாதோரே (தங்களை அல்ல) நாங்கள் இங்கே முன் வைக்கும் கருத்துக்கு முரண்படுகின்றனர். அதுவே எமது ஆதங்கத்திற்கும், தமிழர் உணர்ச்சி எழவும் காரணம்.
அகஸ்டின் சபாஷ்! உங்களுக்கு என் பாராடுக்கள். உண்மையை ஒத்து கொள்ள மாட்டார் இந்த தேனீ!
அகஸ்தியர் சொல்லியது தாய்மொழிக்கு வழிவிடு என்பது. எங்களது வேண்டுகோளும் அதுவே. இதுதான் அவர் சொன்னதில் இருக்கும் உண்மை. அதைப் புரிந்துக் கொள்ளாது சபாஷ் போடுதெல்லாம் தானே தன்னை குஷிப் படுத்திக் கொள்வது (‘syok sendiri’) போலாகும்.
மனித நேயத்தின் அடிப்படையில் நாங்கள் இன்னொரு மனிதனை மதிக்கின்றோம் அவன் எங்களை மிதிக்காத வரை. இனத்தின் அடிப்படையில் தமிழருக்கு என்று மொழி, கலை கலாச்சாரம் பண்பாடு உண்டு. அந்த பண்பாட்டுக் கூறுகளில் தமிழரின் சமயமும் அடங்கும். எம்மின பண்பாட்டைக் காப்பதில் எமக்கு கடப்பாடு உண்டு. அப்படி எம்மின மொழி, பண்பாட்டுக் கூறுகளை பிறர் எதிர்ப்பாரேயானால் அவரை எப்படி நாங்கள் நண்பனாக ஏற்றுக் கொள்வது?. அதனால்தான் நண்பனையும் பார்த்து தேர்ந்தெடு என்பது இந்நாளில் அவசியமாகின்றது. தமிழரின் தாய்மொழிக்கு அவர்தம் கலை கலாச்சார பண்பாடு, சமயம் உட்பட, எதிர்வாதம் தொடுப்போர், அதற்கு எதிராக நடப்போரை “நண்பேண்டா” என்று சொல்ல தேவை இல்லை. அவர்களை விட்டு நாங்கள் ஒதுங்கி தமிழருக்கு உரிய பண்பாட்டில் நிற்க விரும்புகின்றோம். சமஸ்கிருதம் தமிழரின் சமய வழிபாட்டில் இருக்கத் தேவை இல்லை. அதற்குப் பதிலாக தமிழில் திருமுறை ஓதி எம் சமய வழிபாடு செய்ய தமிழருக்கு அறிவினை புகட்டுவதே எம்மைப் போன்றோரின் கடப்பாடு என்று எண்ணி நாங்கள் தமிழருக்கு வழியைக் காட்டுகின்றோம். அவ்வாறு வந்ததே இன்று தமிழரின் ‘திருமுறைத் திருமணமாகும்’. இத்திருமணத்தில் தமிழரின் அனைத்து மரபுச் சார்ந்த சடங்குகளுடன் தமிழரின் வேதமாகிய திருமுறையை மந்திரமாக ஓதி சமய வழிபாடு செய்து திருமணத்தை செவ்வனே நடத்தி வைக்கின்றோம். இங்கே தமிழருக்குப் புரியாத சமஸ்கிருதத்திற்கும் வேள்வி கலாச்சாரத்திர்க்கும் இடமில்லை. தமிழர் சமயம், ‘மேன்மைகொள் சைவ நீதி விளங்குக உலகமெல்லாம்’ என்று அறவழியிலேயே மீட்சி பெற ஆரம்பித்துள்ளது. இது தொடரும்.
Theni wrote on 17 February, 2015, 1:29 ஈர மரக்கட்டையாக வாழும் தமிழர்களுக்கு தண்ணீர் ஊற்றினோம் தளைக்கவில்லை. நெருப்பை எற்றுகின்றோம் தமிழர் உணர்ச்சி எரியட்டுமே என்று. கொஞ்ச நாளைக்கு எரிய விட்டுத்தான் பார்ப்போமே. யாருக்கு என்ன நட்டமாகப் போகப் போகின்றது!.
இதை தான் இது தமிழ் போராட்டம் அல்ல வெறும் அரசியல் என்கிறேன்.அந்த தீயில் நீங்களோ,உங்கள் குடும்பம்,சுற்றத்தாரோ கருகி தியாகம் செய்வீர்களா?ஒரு தலைவனாவது மாண்டதுண்டா?கடை தொண்டன் உணர்ச்சி பொங்கி தீக்குளித்தால் அந்த கருகலில் ஒரு மாலை போட்டு குளிர்காய்ந்து கொள்கிறீகள்.இதில் யாருக்கு என்ன நட்டம்என்கிறிர்கள்.அவனுடைய குடும்பத்தாரிடம் சென்று யாருக்கு நட்டம் என்று கேட்டுப்பாருங்கள்.எத்தனை வாகனங்களை எரித்தீர்கள்,எத்தனை மாணவர்கள் பள்ளிக்கு பரிச்சைக்கு செல்ல முடியாமல் போனது,எத்தனை கர்ப்பிணிகள் மருத்துவமனை செல்லமுடியாமல் போனது,எத்தனை முக்கிய அலுவல்கள் தடைப்பட்டன,எத்தனை இழவு வீடுகளில் தகன காரியம் தாமதப்பட்டது.இதில் உங்களுக்கு என்ன நட்டம்?இத்தனை பேர்கள் விட்ட பெருமூச்சினால் உங்களால் மட்டும் தானே குளிர்காய முடியும்.இந்த அர்த்தத்தோடு குறிப்பிட வில்லை என்று நீங்கள் சொல்ல்லலாம்.எப்படியும் அர்த்தம் கொள்ள நேரிடும் என்று குறிப்பிட விரும்புகிறேன்.
உங்கள் எழுத்தில் வேகம் இருகிறதே தவிர விவேகம் இல்லை என்றெ படுகிறது.இருப்பினும் நீங்கள் வைக்கும் வாதத்திற்கு எனது பாராட்டுக்கள்.பொன்.ரங்கன் மற்றும் பலர் கூட உங்களை பாராட்டும் விதமாக நீங்கள் நன்றாக உணர்ச்சி பொங்க எழுதுகிறிர்கள்.எனது வாழ்த்துக்கள்.(ஐயய்யோ மற்றவர்களையும் உசுப்பிவிட்டேனா?)
“தமிழர் உணர்ச்சி எரியட்டும்” என்பது எடுத்தோம் கவிழ்த்தோம் என்பதில்லை. விவேகானந்தர், இராமகிருஷ்ண பரமஹம்சரிடம் எனக்கு கடவுளைக் காட்ட முடியுமா என்று கேட்டாராம். அவரும் முடியும் என்று கூறி ஒரு நாள் இருவரும் ஆற்றில் நீராட இடுப்பளவு தண்ணீரில் நிற்க இராமகிருஷ்ண பரமஹம்சர் உடனே விவேகானந்தரின் தலையைப் பிடித்து தண்ணீரில் மூழ்கடித்தாரம். மூச்சுத் திணறி முண்டியடித்து தலையை நீரின் வெளியே எடுத்த விவேகானந்தர் கேட்டாராம், ‘ஏன் என்னை உயிர் விடும் அளவுக்கு நீரில் மூழ்கடித்தீர்கள்?. அதற்கு இராமகிருஷ்ண பரமஹம்சர், நீரில் மூழ்கிய நீர் எந்த உத்வேகத்தோடு நீருக்கு வெளியே வர போராடினாயோ அத்தகைய உத்வேகம் உம்மிடம் இருந்தால் மட்டுமே நீர் இறைவனைக் காண முடியும் என்றாராம். இதனால் புரிந்துக் கொள்வது என்ன? வெறும் வார்த்தையால் சொல்லி பலனடைய முடியாது. கொண்ட காரியத்தை சாதிக்க அதற்கு உரிய மனோவேகமும் இருக்க வேண்டும். அந்த மனோவேகம் செயல்பட உடல் உழைப்பும் போட வேண்டும். அகஸ்தியர் எண்ணுவது போல் தமிழ் மொழி பேணுவது என்பது சாலைப் போராட்டம் நடத்துவதும், தீக்குளிப்பதும், அடிதடியில் இறங்குவதும், கிறிஸ்துவர்களை அடக்கி ஆண்ட அரச வீரர்களிடம் சவுக்கு அடி வாங்குவதும் இல்லை. இங்கே நாம் நடத்துவது கருத்துப் போராட்டம். இங்கே நாம் கருத்து அளவில் தமிழ் மொழிக்கு உரிய அங்கிகாரத்தை நிலை நிறுத்த போராடுகின்றோம். அது தமிழரின் கலை கலைச்சாரமாகட்டும், பண்பாடாகட்டும், தமிழர் சமயமாகட்டும் அனைத்திலும் தமிழ் மொழி சிறந்து விளங்க தமிழர் செய்ய வேண்டியவனைச் சொல்கின்றோம். அப்படி இல்லை என்றால் தமிழ் மொழியின் தொன்மையும், சிறப்பையும் பேசி வாய் ஜாலங்கள் செய்வதால் என்ன பயன். தமிழர் அவர்தம் மொழியில் சமய வழிபாடு செய்ய முடியவில்லையானால் அந்த தமிழுக்கு சிறப்பு என்ன வேண்டிக் கிடக்கு?. இதுநாள் வரை ஈர மரக்கட்டைகளாக வாழ்ந்து வரும் தமிழர்களுக்கு அறிவுச் சிந்தனை மாற வேண்டும், அவர்தம் அறிவுச் சிந்தனை தீக்கொழுந்து விட்டு எரியட்டும் என்ற கருத்துப் போராட்டம் இது. கத்திப் போராட்டம் இல்லை. உணர்ச்சிப் போராட்டம் என்பது அறவழிப் போராட்டமாகவும் இருக்க முடியும். இங்கேதான் அகஸ்தியர் சிந்தனையும் எம் சிந்தனையும் வேறுபடுகின்றது. இதுவே அகஸ்தியர் எம் நிலையை வேறு கோணத்தில் பார்பதர்க்குக் காரணம். அன்பு நெறியில் நிற்போர், அறத்திற்கு எதிராக போவாரா?.
அகஸ்டின் இப்படி எழுதி இருக்கிறார் : “இதை தான் இது தமிழ் போராட்டம் அல்ல வெறும் அரசியல் என்கிறேன். அந்த தீயில் நீங்களோ,உங்கள் குடும்பம்,சுற்றத்தாரோ கருகி தியாகம் செய்வீர்களா? உங்கள் எழுத்தில் வேகம் இருகிறதே தவிர விவேகம் இல்லை” – எனக்கு இது ஒரு தீர்க்க தரிசனமாகவே தோன்றுகிறது அகஸ்டின் அவர்களே. பொருள்-விளக்கமே இல்லாத, பொருள்-அர்த்தமே இல்லாத, தீர்க்க தரிசனமே இல்லையென்றாலும், கன்மூடி தனமாக தமிழ் என்ற ஒரு காரணத்திற்க்காக மட்டும் முனிவர்கள் அல்லது மகான்கள் பாடியதை மட்டும் எற்று கொள்ளுங்கள் என்றால், அது பரிணாம வளர்ச்சிக்கு வித்திடாது. உலகம் அங்கேயே நிற்கிறது, சூரியன் பூமியை சுற்றுகிரது என்று ஒரு பழைய தத்துவம் உள்ளது. இதையே பிடித்து கொண்டால் மட்டும் போதும். உண்மை தேவையில்லை என்று ஒரு பிரிவினர் கூரிய காலமும் உண்டு. ஆகையால் எந்த ஒரு மொழியில் மார்க்கங்களை விளக்கினாலும் உண்மை இருக்க வேண்டும். மொழியை மட்டும் வைத்து கொண்டு பிணியை ஓட்ட முடியாது ! மதிரமும் வேண்டும், யந்திரமும் வேண்டும் தந்திரமும் வேண்டும். பாவம் தேனீ ! மொழிபட்ருக்கும் , குல-அரசியல் ஆரம்பத்திற்கும் இடையில் உள்ள மெல்லிய கோடு புரிய வில்லை. எல்லாம் பழைய பேப்பர் படிபதனால் வரும் தொல்லை.
தமிழர் கண்ட திருமுறைகளிலும், மெய்கண்ட சாத்திரங்களிலும் அடங்கியுள்ள பொருள் அர்த்தமும், பொருள் விளக்கமும் காணாமல் தீர்க்க தரிசனம் எப்படி கிட்டும்?. ஆரிய வேதமும் அதனைச் சார்ந்த நூல்கள் மட்டுமே தீர்க்க தரிசன நூல்கள் என்று கொள்ளாமல், தமிழரின் இறை நெறிகளையும் கற்று அறியுங்கள். அவ்வாறு அறிந்தவர்கள் நமது தேவாரத் திருமுறைகளிலும், திருவாசகத்திலும், திருக்கோவையாரிலும், மெய்கண்ட சாத்திரங்களிலும் உள்ள பதி, பசு பாசம் எனும் முப்பொருள் தத்துவங்களை கற்றறிந்து விட்டு இங்கே வந்து உபதேசம் செய்யுங்கள். ஆங்கிலத்தில் ஒரு சொற்றொடர் இவ்வாறு உண்டு: ‘what’s sauce for the goose is sauce for the gander’.. பிற மொழியில் உள்ள சமய நூல்களும் மெய்பொருள் காண்பது என்று சொல்ல முடிந்தவருக்கு அதே பாணியில் சொல்கின்றேன் கேளுங்கள். தமிழரின் சமயத்தில் இறை நெறி என்பது இந்திய மெய்யியல் தத்துவத் துறையில் தனித்துவம் கொண்டது. இதை ஆங்கில பாதிரிமார்களே உணர்ந்து ஒப்புக் கொண்டது. சித்தாந்தம் கற்றறிந்து உய்த்து உணருங்கள். அதன் இனிமையும், மகத்துவமும் புரியும். திருவாசகம் எனும் தேனைப் பருகிப் பாருங்கள். அதன் சுவை உமது நா அறியும். தேவாரம் எனும் பா பாடிப் பாருங்கள் உங்கள் உள்ளம் மணக்கும். தமிழர் இந்த அளவிற்கு இறைவனுக்கும், உயிருக்கும், உலகத்திற்கு உள்ள பந்தத்தை இவ்வளவு அறிவுப் பூர்வமாக சிந்தித்தார்களா என்று வியப்பீர். தமிழர் இறை சிந்தனையில் பிறருக்குச் சளைத்தவர் அல்ல என்பதை உணருவீர்கள்.
கேளுங்கள் சிவபுராணத்தில் உள்ள தமிழரின் இறை சிந்தனையை.
பழைய பேப்பர் படிப்பதின் மகத்துவத்தை அடுத்த நாளில் சொல்கின்றேன்.
எந்த ஒரு மொழியில் மார்க்கங்களை விளக்கினாலும் உண்மை இருக்க வேண்டும். மொழியை மட்டும் வைத்து கொண்டு பிணியை ஓட்ட முடியாது ! Dhilip 2 wrote on 19 February, 2015, 22:36
மேல் உள்ள Dhilip 2வின் கருத்தை ஆமோதிக்க தான் வேண்டும்.
ஆனால் Theniயோ தனக்கு சாதகமில்லாத கணியன் பூங்குன்றனாரின் பாடலை அவருக்கு தகுந்தாற்போல் கருத்தை மாற்றிக் கொள்வாராம்.
எல்லா புழவர்கலும் யாசகத்திற்காக அரசரை புகழ்ந்து பாடினார்கள் என்கிறார்.ஒரு வேளை எல்லா கோயில்களிலும் தமிழே எல்லா பூஜா அனுஷ்டனங்களிலும் அனுசரிக்கப்படும் என்று ஒரு கட்டளை வந்தால்,பல தமிழ் பாடல்களில்,மீண்டு சொல்கிறேன் தமிழ் பாடல்களினுடே உள்ள சமஸ்கிருதத்தை எப்படி கலையெடுப்பீர்கள் .தமிழ் இலக்கியங்களில் எங்கேனும் சமஸ்கிருத எதிர்ப்பை உங்களால் காட்ட முடியுமா?சமஸ்கிருத எதிப்பு என்பது அண்மைய காலங்களில் அல்லது சென்ற நூற்றாண்டில் ஆரம்பித்தது தானே.அதுவரை தமிழுக்கும்,சமஸ்கிருதத்துக்கும் ஒரு ஆரோக்கிய பரிவர்த்தனை இருக்கத்தானே செய்ததது.பின் இதன் சீர்குழைவு எப்பொழுது ஏற்பட்டது?கடவுள் மறுப்பு கொள்கை,ஆரிய சார்பு சிந்தனை மறுப்பு,வடமொழி எதிர்ப்பு உருவாகின பின் தானே.
தொல்காப்பியத்தின் கீழ் உள்ள செய்யுளை பற்றிய உங்கள் விளக்கம்மென்ன?
(உம்) இயற்சொல் திரிச்சொல் திசைச்சொல் வடசொல் என்று
அனைத்தே செய்யுள் ஈட்டச் சொல்லே.
தொல்காப்பியர் வடவர் வசத்தால் மாட்டிக்கொண்டு எழுதிய வரிகள் என்றா சொல்வீர்கள் ?இப்பொழுது சொல்லுங்கள்.வடவரை எதிர்கிறிர்கலா , சமஸ்கிருத மொழியைஎதிர்கிறீர்கலா,அர்ச்சனையில் உள்ள சமஸ்கிருதத்தை எதிர்கிறீர்கலா?தமிழின்
சொல் வழக்கிலும் செய்யுளிலும் உள்ள வட சொற்களை என்ன செய்யப்போகிரிகள்?
ஒளவைப் பாட்டியை,இணையத் தமிழுக்கு ஒப்ப அவ்வைபாட்டி என்று தமிழ்படுத்துகிறோம் என்று சொல்லி அவ் வைப்பாட்டி என படிக்க
வைத்தார்களே அப்படிதான் இருக்கும் உங்கள் சீர்த்திருத்த குழப்பங்கக்ளும்.
சீவக சிந்தாமணி, சிலப்பதிகாரம், மணிமேகலை, வளையாபதி, குண்டலகேசி என்னும் ஐம்பெருங்காப்பியங்களுள் சீவக சிந்தாமணி காலத்தால் முதன்மையானதாகும். வடமொழியில் உள்ள சீவகன் கதைகள் பலவற்றைப் பின்பற்றித் தமிழில் பாடப்பட்டது இந்நூல். http://www.chennailibrary.com/iymperumkappiangal/seevagachinthamani.html
அகஸ்டின் இப்படி எழுதி உள்ளீர்கள்: “அதுவரை தமிழுக்கும்,சமஸ்கிருதத்துக்கும் ஒரு ஆரோக்கிய பரிவர்த்தனை இருக்கத்தானே செய்ததது. பின் இதன் சீர்குழைவு எப்பொழுது ஏற்பட்டது? கடவுள் மறுப்பு கொள்கை,ஆரிய சார்பு சிந்தனை மறுப்பு,வடமொழி எதிர்ப்பு உருவாகின பின் தானே.” அட அட அடா …. தாங்கள் வாசகங்களை விளங்கி கொண்டாலே போதும். மொழி பற்றிலிருந்து வெளியே வந்து விடுவார்கள். தேனீ கஷ்ட்டபட்டு புதிது புதிதாக சிந்தித்து குழப்பங்களை அள்ளி இறக்காமால், கடவுளை தேடுங்கள், தமிழில் உள்ள பொக்கிஷங்களை வெளியில் கொண்டு வாருங்கள். அல்லது தேவாரம் திருமுறைகளை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்து , அவர்களையும் ஈர்திளுங்கள். சும்மா ஒரு சாராரை மட்டும் எசிகிட்டு இருந்தால் போதுமா ?
இங்கே நடக்கும் கருத்துப் பரிமாற்றம் தமிழ் கற்றறிந்த தமிழர் அல்லாதோருக்கும், அதே தமிழைக் கற்றறிந்த தமிழருக்கும் என்பதால் முன்னவர்களுக்கு தமிழ் என்பது அவர்தம் கண்டத்து வரைதான் எமக்கோ தமிழ் என்பது உள்ளத்து வரை. அதானால்தான் தமிழர் அல்லாதோரால் தமிழின் பெருமையை எடுத்துக் காட்ட முடியாமல் அம்மொழி ஏதோ சிறுமைப் பட்ட மொழிபோல் எடுத்துரைத்துக் கொண்டிருக்கின்றீர்கள். முன்னவர்களுக்கு டாக்டர் மு.வ. -வின் “தம்பிக்கு” என்ற கட்டுரைத் தொகுப்பில் இருந்து சில பத்திகளை இங்கே மறுபதிப்பிடுகின்றேன். அதிலிருந்து தமிழின், தமிழரின் சிறப்பை அறியுங்கள். நீங்கள் சிந்தித்து இங்கே எழுதும் கருத்திற்கு டாக்டர் மு.வ. அவர்தம் காலத்திலேயே பதில் சொல்லி விட்டார். அன்னாரின் கருத்து தொடந்து வரும்.
முனைவர் மு.வ.- வின் “தம்பிக்கு” எனும் கட்டுரை தொகுப்பில் இருந்து:
“தமிழ்மொழி நல்ல மொழிதான்; ஆனால் அதை வல்ல மொழியாக ஆக்கினோமா? பெர்ம்பாலோர் போற்றும் மொழியாக ஆக்கினோமா? இன்று எதை எடுத்தாலும் மக்கள் தொகையே வல்லமையாக வைத்துப் பெசப்படவில்லையா? தமிழ் மொழிக்கு அறிவுக் கலைகளில் செல்வாக்குத் தந்தோமா? நீதிமன்றங்களில் உரிமை நல்கிநோமோ? ஆட்சிக் கூடங்களில் வாழ்வு வளங்கிநோமோ இல்லையானால் வெறும் பேச்சு ஏன்?.
வல்லமை இல்லாத நல்ல தன்மை வாழாது தம்பி!. அது பொருட்பால் இல்லாத திருக்குறள் போன்றதுதான்.
நம் முன்னோர் இதை மறந்த காரணத்தால்தான், எத்தனையோ இழந்தனர். ஒன்று சொல்லட்டுமா? தமிழ் கலை நல்ல கலைதான். அதிலும் யாழிசை நல்ல இசைதான். ஆனால் வாழ்ந்ததா? இல்லை, ஏன்?. முன்னே செல்வாக்கைப் பெற்றவர்கள் யாழைப் புறக்கணித்தார்கள்; பிறகு பொது மக்கள் மறந்தார்கள். இன்று தமிழுக்கும் ஏறக்குறைய அதே நிலை இருப்பதை எண்ணிப்பார்; உன் மனம் புண்படும்.
நீ இதை மறுக்கலாம். அன்று அரசன் எவ்வழி அவ்வழி குடிகள் என்ற நிலைமை இருந்ததை நீ எடுத்துக் காட்டலாம். இன்று பொது மக்கள் எவ்வழி அவ்வழியே ஆட்சியாளர் என்று எடுத்துக் கூறலாம்.
இப்படி உன்னை ஏமாற்றிக் கொள்ள வேண்டாம் என்றுதான் உனக்குச் சொல்கின்றேன். பொது மக்களின் விருப்பம்போல் ஆட்சி நடப்பதாகச் சொன்னால், பொது மக்கள் போரை விரும்புகின்றார்களா, அணுகுண்டையும் பிற குண்டையும் விரும்புகின்றார்கள, வேலையில்லாத் திண்டாடத்தை விரும்புகின்றார்களா, குடிய்ருக்க வீடும் அறிவு வளர்க்கக் கல்வியும் உடல் வளர்க்கக் கஞ்சியும் இல்லாத கொடிய வறுமையை விரும்புகின்றார்களா என்று மெல்ல எண்ணிப்பார் உனக்கே தெரியும்.
பொதுமக்களுக்குத் தங்கள் எதிர்காலத்தையும் நிகழ் காலத்தையும் சேர்த்து எண்ணித் தேவையை உணர இன்னும் தெரியவில்லை. அவர்கள் களிமண்ணாய்த் திரண்டு கிடக்கிறார்கள்; யார் யாரோ நீர் சேர்த்து பிசைந்து தமக்கு வேண்டியவாறெல்லாம் உருவங்களைச் செய்து கொள்கிறார்கள்.
சரி, நீ சொல்கிறபடியே பார்ப்போம். இன்று ஆட்சி எல்லாம் ஓட்டுப் போடும் மக்களின் கைகளை பொறுத்தது என்று வைத்துக் கொள்வோம். அவர்கள் ஓட்டுப் போடும் போது தங்களைப் பற்றியாவது தமிழ்நாட்டைப் பற்றியாவது தமிழைப் பற்றியாவது கவலைப்படுகின்றார்களா?. அவர்கள் கவலைப்படாத நாடும் மொழியும் யாருடைய வல்லமையை நம்பி வாழ முடியும்?. வறுமையால் வாடும் அறிஞர் சிலருடைய துணை மட்டும் போதுமா?.”
தமிழர் அல்லாதோர் கவலைப் படாத தமிழ் மொழியை பற்றி எம்மைப் போன்ற, பொன் ரங்கன் போன்ற, தமிழன் போன்ற தமிழரின் எழுத்து வல்லமையும், செயல் வலிமையையும் நம்பித்தான் தமிழ் வாழ முடியும். இன்னும் நிறைய மறுமொழிகள் எழுத வேண்டியுள்ளது. ஒவ்வொன்றாக எழுத கால அவகாசம் தேவைப் படுகின்றது என்பதால் பொறுமை காக்கவும். கடந்த இரண்டு நாட்களாக தமிழுக்கும், தமிழருக்கும் தமிழர் சமயத்திற்கும் தொண்டு செய்து விட்டு வந்தமையால் கருத்துரையாட நேரமில்லை. இன்று முதல் தொடரும்.
முனைவர் மு.வ. மேலும் தமிழையும், தமிழரையும் காப்போர் யார் என்று அறிந்து அவரை நண்பராக ஏற்றுக் கொள் என்றும் அவ்வாறு செய்வதை எதிர்ப்போரை நமக்கு பகைவர் என்று அறிந்து நீக்குவது தமிழர் கடமையாகும் என்று கூறுகின்றார். “தம்பிக்கு” எனும் கடித வடிவிலான இலக்கியத்தைக் கொண்டு அவரே எழுதிய வரிகளைப் இங்கே படியுங்கள்:
” அன்புள்ள எழில்,
உன்னுைடய தமிழ்ப் பற்றையும் தமிழ்நாட்டுப் பற்றையும் போற்றுறேன்; வாழ்த்துகிறேன். ஆனால், இன்றைய கடிதத்தில் நீ எழுதியது போன்ற வீண் கனவு மட்டும் வேண்டாம். மேடைப் பேச்சு நம்முைடய உணர்ச்சி வெள்ளத்திற்குப் பெரிய வாய்க்காலாக இருந்து ஆத்திரத்தை தணித்து வற்றச்செய்து நம்மைச் சோம்பேறிகளாக ஆக்குவது போல், இப்படிப்பட்ட வீண்கனவுகள் நம்மை
வீணர்களாக ஆக்காமலிருக்க வேண்டும் என்ற எண்ணத்தால் இதைக்
குறிப்பிடுகின்றேன், வேறொன்றும் தவறாக எண்ண வேண்டாம்.
நான் சர்வாதிகாரியாக ஏற்பட்டால், திருக்குறள் ஓதாத திருமணம் தமிழ்நாட்டில் செல்லுபடி ஆகாது என்றும், தேவாரம் திருவாசகம் பிரபந்தம் முதலான தமிழ்மறை ஓதாத கோயில்கள் தமிழ்நாட்டில் திறந்திருக்கக் கூடாது என்றும், தமிழில் உத்தரவு அனுப்பத் தெரியாத பட்டதாரிகள் தமிழ்நாட்டில் அதிகாரிகளாக
இருக்கக் கூடாது என்றும், தமிழ்நாட்டுக் கவர்னரும் தமிழில் கையெழுத்து இடவேண்டும் என்றும் ஆணயிடுேவன் என்ற வீரமான எழுத்துக்கைள உன் கடிதத்தில் பார்த்ததும் நானும் சோர்வு நீங்கியவனாய்த் தலநிமிர்ந்த தமிழனாய் எழுந்து உட்கார்ந்தேன். ஆனால் சிறிதுேநரம் எண்ணிப் பார்த்த பிறகுதான், உனக்கு
ஏன் இந்த வீண் கனவு என்ற எண்ணம் வந்தது. மறுபடியும் சொல்கின்றேன், உன் மொழிப் பற்றையும் நாட்டுப் பற்றையும் போற்றுகிேறன். ஆனால் உணர்ச்சி
வெள்ளம் மட்டும் இருந்தால் போதாது. அது என்றைக்கேனும் ஒருநாள் வடிந்து வற்றிவிடும், வற்றாத ஊற்று உன் உள்ளத்தில் இருக்கட்டும்; செயல்திறன் வளரட்டும்.
நான் எதை வீண் கனவு என்று குறிப்பிடுகிறேன், தெரியுமா? திருக்குறள் ஓதியே திருமணம் நிகழ வேண்டும், தமிழ்நாட்டுக் கோயில்களில் உத்தமர்களின் தமிழ்ப்பாட்டு முழங்க வேண்டும்,அதிகாரிகள் தமிழை மதிப்பவர்களாக இருக்க
வேண்டும், கவர்னர் தமிழில் கையெழுத்து இட வேண்டும் என்னும் இவைகளை ஒருகாலும் வீண்கனவு என்று ஒதுக்க மாட்டேன். இது உனக்கே தெரியும். தமிழுக்கோ, தமிழ்நாட்டுக்கோ பகைவனாக இருப்பவன்தான் தான், இந்த நல்லெண்ணங்களை வீண் கனவு என்று குறைகூறுவான். நம் தாயை நாம் வழிபட்டு, நம்
குடும்பக் கடமையை நாம் ஆர்வத்தோடு செய்யும்போது , இதைத் தவறு என்றும் குறுகிய நோக்கம் என்றும் ஒருவன் குறுக்கிடுவானானால், அவனைப் பகைவன் என்று ஒதுக்குதே கடைமயாகும்.”
“பூப்போன்ற என் உள்ளம் யார் கண்டது; பொல்லாத மனம் என்ற பேர் வந்தது”. எல்லாம் அந்த தமிழுக்கே என்றால் மனம் பூரிப்படைவேன். “ஞாயங்கள் தெளிவாக நாளாகலாம் நான் யார் என்று அப்போது தெளிவாகலாம்.”. நாம் நேரிடையாக உறவு கொள்ளாமல் இங்கே மறைமுகப் போரில் தொடர்பு கொள்வதால் உண்மை தெரிவதில்லை. “உன் பாதை நீ கண்டு நீ வாழலாம், இனி என் பாதை நான் கண்டு நான் போகலாம்.” தொடரும்.
முனைவர் மு.வ. அவர்களின் “தம்பிக்கு” என்ற கடித வடிவிலான இலக்கியத்தை மேலும் படிக்க விரும்புவோருக்கு அதன் இணைய வலைச்சுட்டியை இங்கே தந்துள்ளேன். படித்து இன்புறுங்கள். அக்கட்டுரைகளைப் பதிவேற்றிய “Project Madurai” கழகத்தாருக்கும் எமது நன்றி உரியாதாகுக.
http://www.projectmadurai.org/pm_etexts/pdf/pm0334.pdf
அக்கட்டுரையில் உள்ள 7 & 8-ம் பக்கங்களையும் படித்து தெளியுங்கள். தொடரும்
.
கருணாநிதி தம்முடைய கட்சியை மக்கள் புறக்கணித்த காலத்தில் எல்லாம் தம்பிக்கு எழுதும் மடலில் ,மானங்கெட்ட தமிழர்கள் ,சொரணை கெட்ட தமிழர்கள் என்று வசைப்பாடுவது உண்டு.இதை போல் தங்கள் நோக்கம் நிறைவேறாவிடின் இப்படி மக்களை வசை பாடுவது இவர்களின் இயல்பு.பெரும்பான்மையை வைத்து தான் வல்ல மொழியை கணிக்க வேண்டும் என்றல் சீன மொழி இன்று உலகம் முழுவதும் பரவியிருக்க வேண்டுமே.ஒரு சிறு இனத்தாருக்குள் வழக்கத்தில் இருந்து மறைந்தது விட்டதாக எண்ணப்பட்ட ஹிப்ரு மொழி செழித்து தழைகின்றதே.
வல்லமை இல்லாத தமிழ் பொருற்பா இல்லாத குறள் போன்றது என்கிறீர்.சரியா? ஐயா இன்றளவும் குறளும் உள்ளது பொருற்பாவும் சேர்ந்தே உள்ளதே..ஏன் இல்லாத கற்பனை?யாழை இழந்த்தோம் என்பது உம் கவலை.செருப்பு இல்லையே என்று ஒருவனுக்கு கவலை,காலே இல்லை என்று மற்றவனுக்கு கவலை.இதை எல்லாம் சொல்லியா தமிழை வளர்ப்பீர்கள்.பழையன கழிதலும் புதியன புகுதலும் இயேற்கையின் விதியாயிற்றே.
மக்கள் யாவரும் எதிர்காலத்தை கண்டுள்ளதால் தான் உம்மை போன்றவர்களை புரகணிக்கிறார்கல்.தமிழை வைத்தே கட்சியை ஓட்டிவிடலாம் என்று உம் போறோர் நினைகிறீர்கல். வாழ்வாதாரத்தை மட்டுமே எதிர் நோக்கி மக்கள் வாக்களிகிறார்கள்.
தமிழர்களில் இரு பிரிவுகள்.80% தமிழே அறிந்தவர்கள்.20% ஒன்றிற்கு மேற்பட்ட மொழி அறிந்தவர்கள்.ஒன்றிற்கு மேற்பட்ட மொழி அறிந்தவர்கள் உடைய வாழ்வாதாரம் சிறப்பாக இருக்கிறது மட்டும் அன்றி அவர்ளுடைய தமிழ் பற்றும் மங்கி விடவில்லை என்று அறிந்திருக்கிறார்கள் .ஆகவே தமிழே அறிந்த தமிழர்களும் விழித்துக் கொண்டார்கள்.ஆகவே தமிழ் சொல்லி பெருன்பாமையை திரட்டலாம் என்கிறவர்களுடைய முகமூடியை கிழிகிறார்கள்.
உங்கள் கருத்துக்களில் முத்தாய்ப்பு எதுவெறால்:
தமிழர் அல்லாதோர் கவலைப் படாத தமிழ் மொழியை பற்றி எம்மைப் போன்ற, பொன் ரங்கன் போன்ற, தமிழன் போன்ற தமிழரின் எழுத்து வல்லமையும், செயல் வலிமையையும் நம்பித்தான் தமிழ் வாழ முடியும
CLAP,CLAP,CLAP,CLAP.
“யாதும் ஊரே யாவரும் கேளிர்” என்பது உலகத்தார் அனைவரும் அடையவேண்டிய ஒரு சிறந்த இலக்கு. அதற்கு உலகத்தினர் அனைவரும் ஒரே நிலயில் நின்று வாழ வேண்டும் (“There must be a level field”). பிறர், அவர்தம் குடும்பம், இனம், நாடு என்று தன்னலம் பேணும் உலகில் நின்று கொண்டு, தமிழர் “யாதும் ஊரே யாவரும் கேளிர்” என்றால் சாமிவேலுக்கும், சம்பந்தனாருக்கும் உள்ள வித்தியாசம் என்பேன். முன்னவர் சுயநலம் பேணி தன்னை வளர்த்துக் கொண்டார். பின்னவர் பொதுநலம் பேணி தன்னை ஏழையாக்கிக் கொண்டார். உலகம் பின்னவரை “வாழத் தெரியாதவர்” என்று புகழாரம் சூட்டுகின்றது. தமிழரும் பொதுநலம் பேணி இதுநாள் வரை வாழத் தெரியாதவராகவே வாழ்ந்து விட்டனர். தமிழரின் வீட்டில் தொடர்ந்து உலை எரிய வேண்டுமானால், அவர் வீட்டினுள் மழை நீர் ஒழுகாமல் தற்காத்துக் கொள்ள வேண்டியது அவர்தம் இன்றியமையாத கடமையாகும்.
முனைவர் மு. வ. மேற்கூறிய “தம்பிக்கு” எனும் கட்டுரையில் கீழ் காணுமாறு கூறுகின்றார்:
“யாதும் ஊரே யாவரும் கேளிர்” என்ற நல்ல நிலை வரவேண்டும், உலகம் ஒரு குடும்பமாக வாழ வேண்டும் என்று ஆர்வம் கொள். அந்த நிலை வந்தால், நாட்டுப்பற்று என்பது வேண்டாததாகிவிடும் என்றும் அறிந்துகொள். அது வரையில் நம் நாட்டுக்கு நாம் செய்ய வேண்டிய கடமை இருக்கிறது என்பதை மறவாதே. ஊர்க்கெல்லாம் பாதுகாவல் சிறந்த முறையில் ஏற்படும் வரையில் ஒவ்வொருவரும் தம்தம் வீட்டைத் தாளிட்டுக் காத்துக் கொள்ள வேண்டும் அல்லவா? அதுபோல் உலகத்திற்குப் பொதுவான ஒரு சிறந்த ஆட்சி முறை ஏற்படும் வரையில் நம் நாட்டை நாம் தவறாமல் காத்துக் கொள்ள வேண்டும். அது குறுகிய நோக்கம் அல்ல. இன்றியைமயாத கடமை என்று உணர்ந்துகொள்.”
இதற்கு மேலும் இந்த சொற்றுடருக்கு யாம் விளக்கம் அளிக்கத் தேவை இல்லை என்று நினைக்கின்றேன்.
“யாழை இழந்த்தோம் என்பது உம் கவலை.செருப்பு இல்லையே என்று ஒருவனுக்கு கவலை,காலே இல்லை என்று மற்றவனுக்கு கவலை.இதை எல்லாம் சொல்லியா தமிழை வளர்ப்பீர்கள். பழையன கழிதலும் புதியன புகுதலும் இயேற்கையின் விதியாயிற்றே. மக்கள் யாவரும் எதிர்காலத்தை கண்டுள்ளதால் தான் உம்மை போன்றவர்களை புரகணிக்கிறார்கல்.தமிழை வைத்தே கட்சியை ஓட்டிவிடலாம் என்று உம் போறோர் நினைகிறீர்கல். வாழ்வாதாரத்தை மட்டுமே எதிர் நோக்கி மக்கள் வாக்களிகிறார்கள்.
தமிழர்களில் இரு பிரிவுகள்.80% தமிழே அறிந்தவர்கள்.20% ஒன்றிற்கு மேற்பட்ட மொழி அறிந்தவர்கள்.ஒன்றிற்கு மேற்பட்ட மொழி அறிந்தவர்கள் உடைய வாழ்வாதாரம் சிறப்பாக இருக்கிறது மட்டும் அன்றி அவர்ளுடைய தமிழ் பற்றும் மங்கி விடவில்லை என்று அறிந்திருக்கிறார்கள் .ஆகவே தமிழே அறிந்த தமிழர்களும் விழித்துக் கொண்டார்கள்.ஆகவே தமிழ் சொல்லி பெருன்பாமையை திரட்டலாம் என்கிறவர்களுடைய முகமூடியை கிழிகிறார்கள்.” இதற்க்கு மேலே என்ன எழுதி இந்த தேனிக்கு புரிய வைக்கிறது அவர் நிலையை ? எல்லாம் எழுதியாகி விட்டது, அகஸ்டின் அவர்களால்……………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………… தேனீ அவர்களே, ஒருவர் ஒரு புத்தகம் எழுதினால் அதுதான் சரி என்று எப்படி கிரகிப்பீர்கள் ? நான் பல முனைவர்களின் ஆராட்சியுரையை படித்திருக்கிறேன். அதில் அவர்கள் “இந்த துறையில் முன்மாதிரிகள்” என்று ஒரு பகுதிகள் எழுத வேண்டும். ஆங்கிலத்தில் literature review என்பார்கள். அதில் ஆரம்பத்தில் இருந்தோ அல்லது ஒரு குறிப்பிட்ட இடத்தில் இருந்தோ ஒரு ஆராச்சியின் ஆணி வேர் என்ன என்று ஆரம்பித்து அதன் பரிணாம வளர்ச்சியை விளக்க வேண்டும். அப்படி விளக்கினால் மட்டுமே ஒருவரின் புதுமையை மற்ற ஆராட்சியாளர்கள் புரிந்து கொள்ள முடியும். அப்படி பட்ட ஆராட்சியுரையே பரிணாம வளர்ச்சிக்கு வித்து. இதுவே professional research . அப்படி இலாமல் தானாகவே ஒரு ஆராட்சி செய்து, அதன் கூற்றுகலை பொதுப்படையாக , மற்றவர்கலின் கருத்து இன்மையின்றி, தானாகவே ஒருவர் வெளியிடுவார்கலானால், அது ஒரு தனி மனித படைப்பு. personal research அறிவியலில் இப்படி பட்ட படைப்புகளை, அதன் தன்மையை “தனி மனிதனின் பார்வை” என்று தான் பார்பார்கள் ஒழிய, பொது கொள்கையாக ஏற்று கொள்ள முடியாது. தாங்கள் கூரும் dr .மு வ அவர்களின் திருக்குறள் விளக்கவுரை அற்புதம். ஆனால் இன்று திருக்குறளுக்கு பரிமலர், சாலமன் பாப்பையா, கலைஞர் போன்றோரில் தெளிவுரையும் அபாரம். ஆகையால் குறைகுருவதை நிறுத்தி விட்டு தமிழில் உள்ள பொக்கிசங்களை வெளியில் கொண்டு வாருங்கள். பல விஷயங்கள் தமிழில் புதைந்து உள்ளது. உதாரனத்திற்க்கு நோக்கு வர்மன் – தமிழில் , யோகாசனம் – தமிழில் , தமிழ் இலக்கணம்-எளிய முறையில் , தமிழ் கவிதைகள் – பள்ளி மாணவர்களுக்கு, SPM தமிழ் வாசிப்பு திறன் மற்றும் பயிற்சிகள்…இப்படி நிறைய செய்யலாம் ….நான் தமிழர்களின் கோயில் சிற்பங்கள் அதன் விளக்கத்தை ஆராய்ச்சி செய்கிறேன் … நிச்சயமாக ஒருநாள் முடிவடையும் பொழுது வெளியிடுவேன்….அப்படி நீங்களும் (தேனீ) எதையாவது புதுமையை தாருங்கள் …..
கடந்த 20-ம் நூற்றாண்டில் வாழ்ந்த சிறந்த தமிழ் இலக்கியவாதி முனைனர் மு.வ.-வின் கருத்தோவியங்களை அறியாத பாலகன் எத்துனை முனைவர்களின் ஆராட்சியுரையைப் படித்திருந்தாலும் என்ன பயன். அவர் 1947-ல் “மொழிநூல்” என்ற மொழி ஆராய்ச்சி நூலை எழுதி வெளியிட்டவர். அவர் எழுதி வெளியிட்ட அறிவு நூல்களை படித்தோர் அறிவர் மு.வ.-வின் அறிவுத் திறன், அவரின் சமூதாய, மொழிப் பற்று. அவர் “தம்பிக்கு” என்ற இலக்கியத்தில் கூறிய கருத்துக்களுக்கு பதில் சொல்ல முடியாதவருக்கு எல்லாம் பழையன கழிதலும் புதிய புகுதலும் என்ற வசனம் ஏன் வருகின்றது தெரியுமா?, தமிழருக்கு நல்லதைச் சொல்வது போல் பாசாங்கு செய்து தமிழரின் வாயில் நஞ்சூட்ட வந்த வர்கத்தினர் என்பதால். வேறு என்ன சொல்லத் தெரியும்.
தமிழரின் சமயம் எது என்று அறியாமல், தமிழரின் இறை பற்றிய சிந்தனையை தெரிந்துக் கொள்ளாமலும் ஆரியத்தை மட்டுமே சிறிது அறிந்து வைத்துக் கொண்டு எங்களுக்கு மற்றொரு பகுதியில் பாடம் நடத்தியவர் அறியும் வண்ணம் ‘Siddantha Deepika’ நூல்களை படிக்க வழி காட்டினேன். அனால் அது பழையது என்று சுட்டி புறம் தள்ளுவது எதனால் தெரியுமா? தாம் விரும்பாத தமிழரின் இறை சிந்தனையைப் பற்றி ஏன் தெரிந்துக் கொள்ள வேண்டும் என்ற இறுமாப்பே காரணம். வெறும் புராணக் கதைகளை மட்டுமே நம்பிக் கொண்டு கருத்து எழுதியோர் சிந்தனைக் கண் திறக்கவே பழைய நூல்களைப் படிக்க வேண்டும் என்பது.