தமிழ் மொழி உலகில் சிறந்த மொழிகளில் ஒன்று என்ற அங்கிராம் கிடைத்து நடந்த( முதல்) உலகத் தமிழ் 9 தாவது ஆராய்ச்சி மாநட்டில் ஒரு உண்மை மறைக்கப்பட்டது.. இது ஒன்பதாவது உலகத்தமிழ் மாநாடா ? உலகத் தமிழ் 9 தாவது ஆராய்ச்சி மாநாடா என்ற இலக்கிய பிழையையும் உங்களிடம் விட்டு விடுகிறேன். ஒன்பதாவது உலகம் எனபது அந்த கிரகத்தில் என்னை மரணிக்க செய்ததது. ஆனால் என் தமிழ் உதிரம் என்னை மீட்டது!
ஆராய்ச்சியில் அடிப்படையில் கோளாரா? மாரிமுத்து PHD தான் பதில் சொல்லவேண்டும்? இதுபோலவே வீரமணியும் பழமையை உளறினார் ? பொய்மையால் கருப்பு மை தடவினார்!
மாநாட்டில் வீரமணி உரையில் தமிழ் மொழி உலகசசிறந்த மொழிகளில் 6வது இடத்தில தமிழ் மொழி உண்டு என்பதை சொல்ல வில்லை ! உலக மொழி அறிஞர்கள் அங்கிகாரம் வளங்கியுள்ளதையும் அதற்கு ஆய்வு செய்த தமிழர் மொழி ஞாயிறு தேவ நேயப் பாவாணர் பெயரையும் குறிப்பிடவில்லை ? மாறாக பிறகு தமிழ் மாநில அரசு கொண்டாடிய செம்மொழி மாநாட்டில் தமிழுக்கு செம்மொழி புகழ் சேர்த்த நிகழ்வை நினைவு படுத்தி செம்மொழி ஆய்வுகளை எழுதிய சுமார் பத்து பேர்களை வாசித்தார். அதில் ஒருத்தர் கூட தமிழன் இல்லை. உலக மொழி அந்தஸ்து பெற 11 இலக்கிய இலக்கண அம்சங்களை ஆய்ந்த மொழி ஞாயரின் குறிப்பை இந்த செம்மொழி காப்பி அடிச்சாங்கள் சொன்னதாக பொய் சொல்லிவிட்டார். தமிழை உலகசசிறந்த மொழி என்றப்பின் அதற்கு செம்மொழி என்று அரசியல் தன மாநாடு நடத்திய திராவிட கூட்டம் தமிழர்களை ஏமாற்ற நடத்திய நாடகம். தமிழக தமிழர்களை தமிழ் என்ற ஆயுதத்தில் ஆளுமையில் அரசியல் அரசு முதலீடு செய்த இதரவ வந்தேறிகள் கூட்டம் இதுவரை நம் தமிழர் மண்ணுரிமையில் தமிழ் பெயரால் தொடர்ந்து அட்டகாசம் செய்கின்றனர்.
இதை அறியாத பேதைமை சாமிவேலு அந்த தெலுங்கர் உரையில் மதி மயங்கி விட்டதாக அறிவிலித்தனமாக பேசினார். என் குருதி கொதித்தது. ஆய்வும் அறிவும் இல்லாத தெலுக்கு ஒடுகாளிகளிகளை வைத்து தமிழ் ஆராய்ச்சி மாநாடுகள் நடத்த வேண்டிய பிச்சை புத்தி ஏன் என்கிறேன். பினாங்கு சர்வதேச தமிழ் மாநட்டில் ராமசாமி வைகோ என்ற தெலுங்கனை வர வைத்து மாநாட்டை நடத்தினார் தமிழகம் சென்ற வைக்கோ தமிழர் தேசியத்தை வசைப்பாடி அதை வளர விட்டக் கூடாது என்று தமிழர்களிடம் சொன்னார்.
மாட்டில் நடமாடிய அனேக தெலுங்கு மலையாள வேடர்களை பார்த்தேன் …தோழர் தமிழர் முத்து சந்திரன் சொன்னது போல முதல் நாட்டியம் சமஸ்கிரத பாட்டுக்கு பாகங்கள் பற்றி இச்சைத்தன ஆடைகள் அதுவும் இதுவும் தெரியும்படி ஆடினார்கள். தமிழன் கலை எது ?தமிழ் ஆராய்ச்சி மாநாட்டில் நாட்டிய மணிகள் என்றால் சமஸ்கிரத பாட்டுதானா ? தெலுங்கு கூட்டம்தனா ? தெலுங்கன் மலையாளி மாநாடுகளில் ஒரு தமிழனை தமிழச்சியை இவர்கள் சேர்ப்பார்களா? தெலுங்கு மாநட்டு கண் காட்சியில் என்னதான் உடு என்று பார்க்கப்போன என்னை “உனக்கு இங்கே என்ன வேலை?” என்று ஒரு தெலுங்கன் கேட்டான் …எங்கள் தமிழர் பொருட்ட்களை வைத்து உங்கள் கண் காட்சி என்கிறாய் உனது ரத்தத்தை கீறி பார் தமிழன் விந்து ஓடும் என்றேன்.
இப்படியாக தமிழ் வழி சொறி எலிகளாகா உள்ளே புகுந்து நமது சட்டி பானைகளை நோண்டி நோட்டமிட்டு இன ஓட்டை போடும் வீரமணி வைக்கோ விஜயகாந்த் கருணாநிதி ஈவேரா அரசியல் டென்கிகள் தமிழச்சி மணி அம்மையை அனாதையாக விட்ட திராவிட பண்பாடு தெரியுமா? தமிழர்கள் கொடுத்து வைத்த கோடான கோடி திரவிட சொத்துக்களை தெலுங்கர் வீரமணி போட்டுக்கொண்ட கதை தெரியுமா? பாதி தமிழனாக மீதி குடம்பவியல் தெலுங்கனாக வாழும் மாநாடு மட்லோடுகள் ஆடும் நாடகத்தை தமிழர்கள் புரிதல் வேண்டும்.
நேற்று பெருஞ்சித்தனார் மகன் பூங்குன்றன் அவர்களையும் மறை மலை அடிகளார் பேரன் மறை தி .தாயுமானவன் இருவரையும் நாம் தமிழர் ,தமிழர் களம் ,தமிழர் தேசியம் ,தமிழர் பாதுகாப்பு இயக்கங்கள் சந்தித்து உரையாடல் தமிழ் களம் கண்டோம். மொழி வளம் நன்றாக் உள்ளது இன வளம் மண்ணடியில் உள்ளது,நமது அரசியல் அரசு முன்னுரிமைகள் பாதுகாக்க தமிழர் தேசியம் நகர்வுகளை அரசியல் நினைவில் தமிழக தமிழர்கள் உணர்வு பெற வேண்டும் தமிழன் உணர “தமிழர் தேசியம் அரசியல் மாநாடு” நடத்த வேண்டும் என்ற கோரிக்கையை முன் வைத்தோம்.
எங்கோ ஆரம்பித்து அரசியல் வியாக்கானம் என்று யோசிக்கலாம் ? சாமி வேலு வீரமணி திராவிட கூட்டத்தில் தமிழே தெரியாத கூடிகெடுத்த பழனிவேல் அரசியல் பேசும்போது இந்த கலப்படம் ஒன்றும் தப்பில்லை.
பிரதமர் வாய் கிழிய மலேசியாவின் தமிழ் தமிழன் உணர்வு பேசினார் ஒரு இதர மொழி ஊடகமும் ஒரு வரி ஒன்னும் எழுதவில்லை இன மொழி அழுத்தம் எங்கனம் உள்ளது என்று ஆராயுங்கள்? கடுப்பில் முஹிடின் நிறைவுக்கு போக வில்லை போனவர்கள் எழுதினால் உங்கள் பங்கையும் தமிழ் இனம் பரிசீலிக்கும் .. தொடர்வேன்.
தமிழன்புடன் .
-ம .அ. பொன் ரங்கன்
இயக்குனர் தமிழர் தேசியம் மலேசியா
தமிழனக்கு தனி நாடே இல்லை.இதில் தமிழுக்கான உலக மொழி அங்கிகாரம் கேட்பது வேடிக்கையாய் உள்ளது.வட மக்கள் தனி தமிழ் நாடு அமையா விடுவோமா? நடவாத ஒன்று.
பயத்தில் உளறுகிறான் samar அசிங்கம்!
தமிழர் தேசியம் மாநாடு என்பதைவிட தமிழர் ஒற்றுமை மாநாடு என்பது சிறப்பாக இருக்கும்.
“” சம்ஸ்கிருத மொழி சார்ந்த சாத்திரங்களில் விமானம் சம்பந்தமாக பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே குறிப்பு உள்ளது ..” என 9 ஆவது தமிழ் ஆராய்ச்சி மாநாட்டு அறிஞர்கள் சிலர் குறிப்பிட்டதை நாளிதழ்களில் பெரிதாக போட்டிருந்தார்கள் >
இந்த விஷயம் தமிழில் இல்லை என்று பெரிய மனதோடு ஒத்துக் கொள்ளவா ? அல்லது சொன்ன அறிஞர்கள் எல்லோரும் படிக்காத மூடர்கள் என முடிவு கட்டவா ??
9 ஆவது தமிழ் ஆராய்ச்சி மாநாட்டில் பிரதமர் கோட் சூட்டில் “அந்நியராக ” இருந்தார் > சரி – நம்ம இந்திய வம்சாவளி அமைச்சர்கள் -அறிஞர்கள் – ஏற்பாட்டு குழு பக்கிகளுக்குமா தெரியவில்லை இது “தமிழ் ஆராய்ச்சி மாநாடு ” என்று > ஒருத்தராவது நம் தமிழ் பண்பாட்டு உடையில் காணோமே ?? இது இங்கே :தமிழ் தமிழ் என வயிற்றில் அடித்துக் கொள்ளும் “”மரபணு தமிழ் “” ஞானிகள் கண்டுகொள்ளாமல் இருப்பது ஏனோ ??அவர்களும் கோட் சூட்டில் இருந்ததாலா ?? “”வாய் சொல்லில் வீரரடி > கிளியே !!!!”
ஐயா பொன் ரங்கன் அவர்களே .உங்கள் கருத்தில் நியாயம் உண்டு .அதே வேளையில் பல தமிழர்கள் நமது உண்மையான வரலாற்றை அறியவில்லை ,அறியவும் , விரும்பவும் இல்லை ஆரிய மலத்தை தின்று திராவிட மெத்தையில் சுருண்டு உறங்கினால் எங்கே தமிழன் தமிழனாக வாழ்வான்? இதில் சாதி சங்கங்கள் வேறு. மலேசியா திராவிட கழகத்தாரே (கலகத்தாரே).சாதி ஒழிப்போம் என சூளுரைத்தவர்களே மலேசியாவில் சாதி சங்கத்தை பதிவு செய்வதை நிறுத்தி விட்டீர்களா? . தனமான இயக்கமா? இல்லை மானங்கெட்ட இயக்கமா?
தமிழனின் உயிரைக் கொலையாக விதைத்திருக்கிறது சிங்களம். முளைத்துக் கொண்டிருக்கிறது தமிழீழம். உலகத்தின் கண்கள் காணும்படி விஸ்வ ரூபம் எடுக்கும்போது சிங்களன் விழி பிதுங்கும் தன் தவற்றை எண்ணி ; அகம்பாவத்தை எண்ணி ; அறிவீனத்தை எண்ணி ; அடாவடித்தனத்தை எண்ணி ; அகம்பாவத்தை எண்ணி!
அன்பே உருவான புத்தபிரானின் போதனையை உதாசினப்படுத்திய சிங்களம் அதற்கான விளையை கொடுத்தேயாகவேண்டும். இது இயற்கையின் நீதி. தெய்வம் நின்று கொள்ளும் (கொல்லும் அல்ல) என்பது இதனால்தான். இளைஞனாக இருப்பின் இந்த சமரசிங்கேயின் கண்கள் அதைக் காணும்!
வெள்ளியூர்முருகன் > பலர் நம் தமிழர் வரலாற்றை அறியவில்லை என்பது முற்றிலும் உண்மை _ “”மரபணு தமிழர் நாங்கள் “” என வாய் சவடால் பேர்வழிகள் / ஆராய்சி மன்னர்கள் / தமிழ் அமைச்சர்கள் / கவிஞர்கள் / ஏற்பாட்டு குழுவினர் பலர் 9ஆவது தமிழ் ஆராய்ச்சி மாநாட்டில் கோட் சூட்டுடன் தான் கலந்து கூத்தடித்தார்கள் என்பதை உலக தமிழர்கள் பார்த்தார்கள் !!
சமஸ்கிருதம் கோடி கட்டி பறந்து இப்போது இயந்திர கோளறு ஆகையால் விழுந்து நொறுங்கி விட்டது…….
இந்திய அரசாங்கம் உள் நுழைந்து பின்னணியில் வேலை செய்து தமிழ் மாநாட்டை சீர்குலைவு செய்திருக்கும்….நிச்சயமாக!…
சமஸ்கிருதம் ஒரு அழகான அற்புதமான மொழி. எல்லா வகையிலும் தமிழுடன் ஒத்து போகும். தமிழ் மொழியை ஆதி சிவம் என்பவர் இயட்ரியதாகவும் , சமஸ்கிருதத்தை விஷ்ணு என்பவர் இயட்ரியதாகவும் ஒரு அறிஞர் இணையத்தில் எங்கோ எழுதியதை படித்தேன். சமஸ்கிருதம் பாணினி என்பவரால் நன்றாக தொகுக்க பட்ட நிலையில் இன்று நமக்கு கிடைக்கிறது. தமிழில் எப்படி அக்கன்ன என்ற மூன்று புள்ளிகள் ஒருசார இருக்கிறதோ, அதே போல் சம்ஸ்கிருத மொழியிலும் அம் அஹ என்று அக்கன்னவை விளக்கும் இரண்டு சொற்கள் இருக்கும். அந்த மூன்று புள்ளிகளும் இங்கே இரண்டுக்கு ஒன்று என்று பிரிந்திருக்கும். ஒரு காலத்தில் சம்ஸ்கிருத எழுத்துக்கள் நான்கு வரிசையை தமிழில் பயன் படித்தி இருக்கிறோம். பாரிதியாரின் பகவத் கீதையின் விளக்க உரை இதை தெளிவு படுத்துகிறது. இணையத்தில் இலவசமாக கிடைக்கும்.
கடவுள் மறுப்பு பேசி அய்யனாரை இகழ்ந்தேன்
கேரள அய்யப்பன் வந்தான்்
வள்ளலாரை மறுத்தேன்
வடவன் பிள்ளையார் கோயில் அதிகமானது….
எமது இனத்தை காத்த காளியை, கடவுள் மறுப்பு என்ற பெயரில் விரட்டியடித்தேன்..
அந்த இடத்தில் இன்று
காவிகள் கும்மாளம் அடிக்கிறது..
எமது இன விஞ்ஞானிகள் சித்தர்களின் அறிவை தொலைத்தேன்.. இன்று எவனோ சாய்பாபாவுக்கு சிறப்பு பூசை நடக்கிறது..
எமது பன்பாட்டு வழிபாட்டை பகுத்தறிவு என்ற பெயரில் தொலைத்து விட்டேன்.. எமது நாட்டின் கதவுகளை திறந்து விட்டேன்..
திறந்த வீட்டில் நுழைந்த நாய்களை விரட்டியடிக்க ஒரே வழி எனது வீட்டில் மீண்டும் நானே நுழைவதுதான்…
இனி முப்பாட்டன் முருகனே எனது குல தெய்வம்..
வள்ளுவமே எனது மதம்
இயற்கையே எனது வழிபாடு , காளியும் சூளியும், கருப்பனும், முனியனுமே எனது கடவுள்கள்்..
தமிழன் என்கிற திமிரை உணர்ந்து கொண்டு சொல்கிறேன்…(ஓம் முருகா..போற்றி.. போற்றி)
போங்கடா…..
பெரியாராவது…. வெங்காயமாவது….்
நேற்று “தமிழர் மரபுதனை தேடி” எனும் நிகழ்வில் முனைவர் சுபாஷினியின் உரை கேட்டு மனம் நெகிழ்ந்துப்போனோம். தமிழராய்ச்சி மாநாட்டில் அவர் பேச இருத்த உரையை முழுமையாக பேச முடியாமல் அவரின் உரைக்குவியலை எங்கள் முன் ஆவணப்படுத்தினார். தமிழர்களின் இத்தகைய மரபுகளை ஆய்வு செய்துள்ள இவரின் சந்திப்பும் உறையும் மின்னல் FM நன்கு பயன் படுத்தியிருக்க வேண்டும். தோழி பொன் கோகிலம் கண்ணிலும் மலேசிய சுபாசினி படாமல் போனது வியப்பே ? இப்போது ஜெர்மனியில் கணினி துறையில் இவர் ஆற்றும் தொழில் தமிழருக்கு
பயன் மிக்கதாக உள்ளது தமிழ் Heritage foundation எனும் இயக்கம் நடத்தி உலகத தமிழர் ஆய்வுகளில் புஜங் பள்ளத்தாக்கின் 8 டாம் நூற்றாண்டுக்கே நம்மை தமதுரையில் வியக்க வைத்தார் .
“மின்னுலகில் நடைபயிலும் நாம், தமிழகம், மலேசியா, ஜெர்மனி, இங்கிலாந்து, தென்கொரியா போன்ற நாடுகளிலிருந்து செயல்படுகிறோம். இந்திய எண்ணிம நூலகத்தில் தமிழர் சேகரங்கள் உள்ளன. பிரித்தானிய நூலகத்தின் தமிழ் நூல்களை மின்னாக்கம் செய்துள்ளோம்.” என்று சொன்னார். மின்னல் FM மக்கள் நடுவே கவனிக்குமா என்றும் விண்ணப்பிக்கிறோம். உலகத தமிழர்
பாதுகாப்பு மையம்.
Dhilip2 நீங்கள் கூறுவது போல் தமிழ் மொழியில் உள்ளது அனைத்தும் சமஸ்கிரிதத்தில் இருப்பது உண்மையானால் இரண்டு மொழிகளும் சமாதானமாகவே போயிருக்கலாமே! அன்று தமிழ் மொழியை ஓரங்கட்டிய காரணத்தால் இன்று தமிழர்களால் சமஸ்கிருதமும் ஓரங்கட்ட படுகிறது அல்லவா?
ஸ்ரீ தரன் > நன்று சொன்னீர் !
திலிப் 2 – தாங்கள் எவ்வளவு உரைத்தாலும் சில “மரபணு தமிழர்க்கு ” உங்கள் விமர்சனம் வேப்பங்காயாய் தான் இருக்கும் !! “” சமஸ்கிருதம் வளர்ந்தால் > தமிழ் பட்டுபோகும் “” என்று கூப்பாடு போட்டு நமது தமிழின் மாண்பினையும் -சக்தியையும் வேண்டுமென்றே கேவலப் படுத்துவதுதான் அவர் தம் தொழில் ///
inthuDharman! மேலே உள்ள எமத்து கருத்தை மீண்டும் ஒரு முறை படி! சமஸ்கிரிதத்தை யாம் குறைத்து மதிப்பிடவில்லையே! சமாதானம் என்ற எண்ணம் “மரபணு தமிழனுக்கு” மட்டும்தான் என உறுதி செய்த உமக்கு நன்றி! வேப்பங்கையின் மருத்துவ குணத்தை அறிவாயா? பட்டுப்போக போவது உமது ஆணவம் தமிழ் அல்ல?
கிபி. இரண்டாம் நூற்றாண்டுக்கு முன்பு சமஸ்கிருதம் இருந்ததற்கான எந்த ஆதாரமோ அல்லது கல்வெட்டுகளோ இல்லை என்று ஆய்வாளர்கள் சொல்கிறார்கள். கிபி 2ம் நூற்றாண்டில் கிடைத்த முதல் கல்வெட்டும் செம்மையான சமஸ்கிருதமாக இல்லாமல் வளர்ச்சி குன்றியதாகத்தான் உள்ளதாம். அம்மொழி செம்மைபட எவ்வளவு காலங்கள் எடுத்துக்கொண்டிருக்கும் என்பதை தமிழர்கள் , அறிவுள்ளவர்கள் யூகித்தறியுங்கள்.
இந்த நிலையில் வைதீகத்தை பரப்ப எல்லோரும் படிக்க வேண்டும் என்பதும், தமிழை சமஸ்கிருதம் விழுங்கிவிடும் என்று தமிழர் நடுங்குவதாக பிதற்றுவதும் மடைமை. பல மொழிகள் சமஸ்கிருத மொழியைவிட செம்மொழியாக இருக்க மத்திய அரசை தங்கள் கைகளில் வைத்துள்ள வைதீக கூட்டம் இந்திய மக்களிடையே திணிப்பது என்ன ஜனநாயகம்? ஆய்வுப்படி திருவள்ளுவர் காலத்தையே தொடமுடியாத சமஸ்கிருத மொழி வரலாறு தமிழுக்குத் தாய்மொழி சமஸ்கிருதம் என்று பீற்றித்திரியும் பேதை வைதீகர்களை என்ன சொல்வது தமிழர்களே? தேவைப்படின் ஆதாரங்கள் முன் வைக்கப்படும்!
இப்பகுதிக்கு வரவேண்டிய எமது கருத்து தவறுதலாக தமிழ் ஆராய்ச்சி மாநாட்டுக் கட்டுரைக்குப் போய் விட்டது. அக்கருத்தை மீண்டும் இங்கே பதிவிடுகின்றேன்.
உண்மைத் தமிழன் அறிவுப் படியில் முன்னேருபவன். அவ்வாறு அல்லாமல் 2,000 வருடத்திற்கு முன் நாம் எங்கே இருந்தோமோ அதை விட்டு நகரமாட்டேன் மாட்டேன் என்பது சுய தமிழரின் பண்பாடு அல்ல. மனிதன் முதலில் தனக்குத் தீங்கு செய்வது எது என்று அறிந்து அதற்குப் பயந்து அவ்வாறு தீங்கு செய்வனவற்றை வணங்கினான்.பின்னர் இயற்கை சம்பந்தமான பஞ்ச பூதங்களினால் வரும் நன்மைகளைக் கண்டு அவற்றைப் போற்றினான். இதுவே நம்பிக்கையைச் சார்ந்து நம்மிடையே இருந்து வந்த மரபு நெறி வழிபாட்டிற்கான அடித்தளம். மதம் தோன்றியதும் இவ்வாறான பல நம்பிக்கைகளின் அடிப்படையிலேயே. பின்னர், தமக்குத் தெய்வம் தீங்கு செய்யும் என்று எண்ணி அதை சாந்தப் படுத்த உயிர்பலி கொடுக்கும் பழக்கத்தை மேற்கொண்டனர். அவ்வாறு செய்யேல் தெய்வக் குற்றமாகி விடும் என்று பாமரர் பயமுறுத்தப் பட்டனர். இதுவரையில் பகுத்தறிவிற்கு செயல் இல்லாத நிலையிலேயே நம்மவர் மரபு நெறி வழிபாட்டில் நின்றிருந்தனர். 2,000 ஆண்டுகள் கழித்தும் அவ்வாறே பலர் பகுத்தறிவிற்கு ஒவ்வாத தான் கொண்ட நம்பிக்கையில் இருந்து மாறவில்லை. மாறவும் மறுக்கின்றனர். பழக்க தோஷமே இதற்குக் காரணம். இருப்பினும் இவ்வாறு வாழ்ந்த தமிழர்களில் ஒரு சிறு பகுதியினர் கடவுளைப் பற்றிய சிந்தனையில் மூழ்கினர். கடவுள், உயிர்களுக்கு உடலைக் கொடுத்து, உலகைப் படைத்து அதன் நுகர்ச்சிப் பொருட்களில் உயிர் இன்பமும், துன்பமும் பெற்று இருப்பதற்கு ஒரு காரணம் இருக்க வேண்டும் என்று உணர்ந்தனர். இத்தகைய தமிழரின் உணர்வே இறைவன் அன்புள்ளம் கொண்டவன் என்று உணர்வதற்கு வழி வகுத்தது. அவன் கருணை வேண்டி வழிபட வேண்டியதே நம் கடமை என்று அறிந்து இறை வழிபாட்டை மேற்கொண்டனர். இது தமிழர்களின் பண்பாட்டில் ஏற்பட்ட சமயத் தேற்றம் என்று சொல்லலாம். இவ்வாறு தமிழர்களிடம் இருக்கும் சமய நெறிகளை அறிந்து, பகுத்தறிவிற்கு உதவாத நம்பிக்கைகளை உதறித் தள்ளி மேம்படுபவனே தமிழன். கண்டே காட்சி கொண்டதே கோலம் என்றிருந்தால், ஆரியர் சொன்னதே தெய்வ வாக்கு என்று நம்பிக் கொண்டிருந்தால் எத்துனை பெரியார் வந்தாலும் தமிழர் மேம்படமாட்டார்.
வேப்பங்காய் என்பது யாருக்கு எது வேண்டாமோ அதையே அவர் வாயில் துனித்தாலாகும். அது கசக்கும். சம்ஸ்கிருத மொழியை வேண்டுவோர் அதைக் கற்றுக் கொண்டு பேசா மடந்தையாக இருக்க விரும்பினால் அவ்வாறே வாய் மூடிக் கொண்டு இருந்துக் கொள்ளுங்கள். எம் இனிய தமிழில் பேச விரும்புவோருக்கு எமது முத்தமிழ் இனிக்கும். என்றும் இனிக்கும்.இதுவே எங்களுக்குத் தேவை வேப்பங்காய் அல்ல.
கோட்டும் சூட்டும் கொண்ட தமிழன் தமிழ் ஆராய்ச்சி மாநாட்டில் கலந்துக் கொண்டால் அதைக் கொண்டவனிடம் கேளுங்கள். எம்மைப் போன்ற செம்பருத்தி வாசகர்களும் ஆதரவு கொடுப்போம். அதை விடுத்து செம்பருத்தி வாசகர்களிடம் மல்லுக்கு நிற்பதானால் கையாலாகாத கோமாளி என்று பெயர் பெற்றுக் கொள்ள வேண்டாம்.
எவனோ ஒருவன் ஊர் பேர் தெரியாதவன் இணையத்தில் போடும் குப்பைகளைக் கொண்டு தமிழ் ஆதி சிவம் என்பவர் இயற்றியதாகும் என்பது எள்ளி நகைக்கக் கூடியது. பராசக்திக்கு ஆதி பாரசக்த்தி உண்டாகியது போல் சிவத்திற்கும் ஆதியானவர் யார்?. சிவமே ஆதியும் அந்தமும் இல்லாதவன் என்பதால் அவனுக்கு ஒரு ஆதி ஆரியத்தில் இருந்து முளைத்து வந்தானா?. ஏன் தமிழையும் தமிழரின் சமயத்தையும் அறிவிலித்தனமாக இப்படி அசிங்கப் படுத்த முனைகின்றீர்?. இதுவும் மென்மையாக நல்லதைச் சொல்வது போல் நஞ்சும் கலந்து ஊட்டும் பொய். சுத்தப் பொய்.
“எமது பன்பாட்டு வழிபாட்டை பகுத்தறிவு என்ற பெயரில் தொலைத்து விட்டேன்…போங்கடா…பெரியாராவது…. வெங்காயமாவது…” இது ரொம்பவே நல்லா இருக்கு; காரணம் பகுத்தறிவு என்ற பெயரில் பகுக்காத அறிவையெல்லாம் எற்று கொண்டோம். பழியை அடுத்தவன் தலையில் போட்டோம். இப்பொழுது குய்யோ முறையோனு கத்திக்கிடு இருக்கோம் !
“Dhilip2 நீங்கள் கூறுவது போல் தமிழ் மொழியில் உள்ளது அனைத்தும் சமஸ்கிரிதத்தில் இருப்பது உண்மையானால் இரண்டு மொழிகளும் சமாதானமாகவே போயிருக்கலாமே!” …………நான் “சமஸ்கிருதம் ஒரு அழகான அற்புதமான மொழி. எல்லா வகையிலும் தமிழுடன் ஒத்து போகும். ” என்று தான் எழுதி உள்ளேன். நீங்கள் நினைப்பது போல் “அனைத்தும் சமஸ்கிரிதத்தில் இருப்பது ” என்பது தவறு. ‘எ’ ‘ஒ’ சமஸ்கிருதத்தில் இல்லை. இப்படி, இந்த எழுத்துக்களின் மேல் வருகின்ற புள்ளிகளை அநுஸ்வாரம் என்பார்கள். அதே போல் இந்த எழுத்துக்களின் பக்கத்தில் வருகின்ற புள்ளிகளை விஸர்க்கம் என்பார்கள். இவைகள் முக்கியமானவை. நான்கு வகை க1, க2, க3, க4 போல் இருப்பு கொள்ளும். ‘லு’ மற்றும் ‘ரூ’ அதிக பயனீட்டில் வரும். ச’ என்ற மெட்குரியீடு சிவன் என்ற ‘ன்’ உள்ள சக்கரத்தை போல் உச்சரிக்க வேண்டும். 15 உயிர் எழுத்துக்களும், 35 மெய்யெழுத்துக்களும் கொண்டவை. கி பி 7 நூற்றாண்டில் தான் இந்த மொழி ‘சமஸ்கிருதம்’ என்று உருமாற்றம் செய்ய பட்டது பாணினி அவர்களால். அதற்க்கு முன் சமஸ்கிருத்தி என்று, கிராந்த மொழி தழுவலும் இதில் உண்டு. கிராந்த மொழி, தமிழின் முன்னோடி யும் கூட. கிராந்த மொழி 1% குறைவாக திருக்குறளில் உள்ளது என்கிறார்கள், ஆனால் ஆதாரத்தை காட மாட்டேன் என்கிறார்கள்.. எந்த ஓசை கொண்ட எழுத்தையையும், தமிழில் சேர்த்துக்கொள்ளலாம். அது தமிழின் மிக பெரிய மாண்பு. எதையும் தன்னுள் ஈர்துகொள்ளும் தன்மையுடையது. அப்படியே இந்த இரண்டு பெரிய மொழிகள் கொண்டுள்ள தொடர்பு. சில மொழிகளின் தோற்றம் இப்படி வரையறுக்கலாம் : தெலுங்கு (கிராந்த-தமிழ் (70%) + சமஸ்கிருதம் (30%)), மலையாளம் (தமிழ் (30%) + கிராந்த-சமஸ்கிருதம் (70%)), கன்னடம் (தமிழ் (40%) + கிராந்த-சமஸ்கிருதம் (60%)) கொண்டிருக்கிறது. மலாய் மொழி 70% (தமிழ்+ சமஸ்கிருதம்) கொண்டுள்ளது. 2000 ஆண்டுகளுக்கு முன் தெலுங்கு, திராவிட மொழியாக (தமிழகாதான்) போட்ற பட்டது. 600 ஆண்டுகள் முன் மலையாளம் என்று ஒரு மொழி இல்லவே இல்லை ! அளவுகள் எல்லாம் ஏற குறைய உள்ளவை. இந்த நான்கும் (தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம்) பிந்தைய திராவிட நாகரிகத்தின் மொழிகள். இதில் மூத்தது தமிழ். ஆனால் முதன்மையானது கிராந்த மொழி. இந்த கிராந்த மொழி 30% சமஸ்கிருதம் கொண்டிருப்பதை பார்த்தல், சம்ஸ்கிருதி மேட்கு இந்தியாவின் பழமையான மொழிகளில் ஒன்று என்பது புலப்படும். என் கணிப்பின் வழி பார்த்தல், கிராந்த மொழி 24,000 ஆண்டுகள் பழைமை வாய்ந்ததாக தான் இருக்க வேண்டும். ஆனால் தமிழ் 12,000 ஆண்டுகள் முன்பு கிராந்த மொழியில் இருந்து பிரிந்திருக்க வேண்டும், அப்படியே சமஸ்கிருதம் 36,000 முன்பே இருந்திருக்க வேண்டும். லெமுரியா கண்டத்தில் கண்டெடுத்த கல் பதிவேட்டில் கிராந்த மொழி எழுத்துக்கள் தான் இருந்தன என்று ஆய்வு கூறுகிறது. இங்கே குழப்படி என்ன வென்றால் ஆதிகாலத்தில் ஆதி-தமிழ் எழுத்தும் கிராந்த மொழி எழுத்தும் எப்படி மாறு படுகின்றன என்ற வரையறை இல்லாமல் போனது தான் இன்றைய கஷ்டம். There is no scale to prove anomalies. சும்மா கன்மூடிதனமாக கல் தோன்றி மண்தோன்றா காலத்தில் முன் தோன்றியது தமிழ் என்றல்லாம் புகழ்ந்து தள்ளுவார்கள். எல்லாம் அன்புதான் தான். ஆனால் அன்னையிடம் ஒரு மாதிரி, அக்காளிடம் ஒரு மாதிரி, மகளிடம் ஒரு மாதிரி, மனைவியிடம் ஒரு மாதிரி என்று பிரிய வில்லையா ? சிவபெருமானே ஆடும் கலைகளின் 8 வகை ஆனந்த தாண்டவத்தை சமஸ்கிருதத்தில் எழுதி வைத்துள்ளார் என்பது மரபு வழி நம்பிக்கை (பிழையிருப்பின் அது என் குற்றம்), சமணர்கள் இதை நம்புகிறார்கள். இங்கே யாரும் மரபணு தமிழர்கள் இல்லை என்பது என் வாதம். அட தமிழர்களுக்குலேயே வந்த ஜாதிகளுக்கு விளக்கம் தருவார்கள் பாருங்களேன், தூக்கில் தொங்கி விடலாம் என்று தோன்றும் எனக்கு ! தமிழர்கள் தமிழில் உள்ள போகிஷங்களை ஆராய வேண்டும். உதாரனர்த்திர்க்கு 15 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த அருணகிரி நாதர் அன்றாதி பாடி இருக்கிறார். அவை த தா தி தீ து தூ தெ தே தை தொ தோ தௌ த் பொன்றவற்றை மட்டும் கொண்டு கவி பாடுவது. இன்று இவை புழக்கத்தில் இல்லை. இப்படி புதிய ஆராசிகள் செய்வதை விட்டு விட்டு, எப்ப பார்த்தாலும் என் தோல்விக்கு அவன் காரணம் என்று போலம்புவது ஏன்?
IndhuDharman முதலில் inthu என்ற இந்து என்ற சமஸ்க்ரித்த மதத்துக்கு விளக்கம் தந்தால் உங்கள் சமஸ்கிரிதம் “வளர்ந்தால் தமிழ் பட்டுபோகும்” என்ற உண்மைக்கு விவாதம் வைப்போம்.காரணம் நுனிப்புல் மேயும் அடிப்படை இலாதான் தமிழ் இலக்கிய இலக்கண வரலாறு தெரியாமல் உலப்புவருக்கு என்னதான் விளக்கினாலும் விட்டில் பூச்சிகள் போல நெருப்பு அது ஒளி என்று தெரியாமல் மாயத்துகொள்வது போல சாவ நான் பாவியாகக்கூடாது! இந்து என்றால் யார் எது என்றும் உன் சம்ஸ்கிருத மொழி இலக்கண ஆற்றலை காட்டவும் என் சைவ சித்தாந்த தமிழ் இலக்கியப பன்முக பார்வையை திறக்கிறேன்.? இல்லாவிட்டால் பிராமண சமஸ்கிருதத்தை மூடிக்கிட்டு முக்காடு போடுக !
பொன் ரங்கன் > ” சமஸ்கிருதத்தை வளர விட்டால் தமிழ் தாழ்ந்து போய்விடும் ” > என்ற வாதம் செய்து வருகிறார்களே எந்த அர்த்தத்தில் ?
நம் மொழியின் மேல் -அதன் பேராற்றலின் மேல் – எந்த சூழ்நிலையிலும் அதன் பேராண்மையை அழித்துவிட இயலாது என்ற நம்பிக்கையின் மேல் சந்தேகம் வருமா வராதா என்பதுதானே விமர்சனம் ? இயன்றால் விளக்குங்கள் > இல்லாவிட்டால் ( உமது மொழியில் – ) மூடிகிட்டு முக்காடு போடவேண்டியது தானே ?அதை விடுத்து ” இந்து வுக்கு அர்த்தம் சொல் ” என சுற்றி வளைப்பானேன் ?
Dhilip2 உங்கள் ஆய்வு கிராந்த மற்றும் சமஸ்கிரித மொழிகளில் வெகுவாக இருந்ததால் தமிழ் மொழியின் உண்மை நிலவரத்தை சற்று குறைவாகவே மதிபிட்டுள்ளீர் என்பது என் கருத்து. தமிழ் எழுத்துக்களின் ஆராய்ச்சி, உபயோகம் என உங்கள் தேடல்களை மேலும் விரிவு படுத்தினால் நான் கூறுவது புரிய வரும்.மரபணு தமிழனை சமஸ்கிரித inthuDharman இழுத்ததால் உடன்பாடு இல்லாதபோதிலும் பதிலுக்கு எழுத வேண்டியதாயிற்று.
Tun குருவி அவர்களே,என் தேடல் பிழை என்று நாளை ஒருவர் நிருபித்து விடலாம். ஆச்சிறிய படுவதற்க்கில்லை! நானும் ஒப்பு கொள்வேன். ஆனால் கன்மூடிதனமாக , தன்தோன்றி தனமாக இல்லாததை இருக்கு என்றும், இருக்கிரததை இல்லை என்றும் அவர் அவருக்கு என்ன தோன்றுகிறதோ அதையெல்லாம் பகுத்தறிவு என்கிறார்கள். மேலே நான் குறிப்பிடும் 24,000 , 12,000 , 36,000 ஆண்டுகள் மொழியிருந்திருக்க வாய்ப்பில்லை என்கிறார் என் அமெரிக்க நண்பர். தடயங்களை காட்டுங்கள் என்கிறார் என்னால் முடிய வில்லை. ஆனால் 24, 36, 12 என்கிற விகிதாசாரம், தற்போதுள்ள நூல்களை வைத்து நிருப்பித்து விடலாம். எனவே தான் ஆதியில் சமஸ்கிருத்தி, கிராந்த, மற்றும் தமிழ் இந்தியாவின் பன்மைய மொழிகள் என்பதில் எனக்கு கருத்து வேறுபாடு இல்லை. இதில் கிராந்த மொழி முழுமையான இலக்கண இலக்கிய குறிப்புகள் இன்று இல்லவே இல்லை. சிலர் இந்த கிராந்த மொழி ஆதி-தமிழ் என்கிறார்கள், மறுக்கமுடியவில்லை ஆனால் எற்று கொள்ளவும் முடியவில்லை; காரணம் இல்லை என்று கூருவதர்க்கு எந்த அறிவும் தேவையில்லை ஆனால் உண்டு என்பதற்கு எல்லாம் அறிவும் தேவையாயிருக்கிறது. தமிழ் ஆதி சிவம் என்ற சிவா பெருமான் இயட்ற வில்லை என்றால் யார் இயட்றியது? சிவம் இயட்ற, அவர்மகன் முருகு முதல் இலக்கணம் செய்தார். அவரின் தொண்டரான அகத்தியர் இலக்கண தொகுப்பை செய்தார். சரி இல்லையென்றால், தமிழ் எங்கிருந்து எப்படி வந்தது என்று விளக்குங்கள் பாப்போம். எப்படி மற்ற மொழிகளில் அதன் தாக்கம் உள்ளது என்று விளக்குங்கள் ஐயா !!
சமஸ்கிருதம் = வாக்யம் தமிழ் = வாக்கியம்
சமஸ்கிருதம் = சீ’க்4ரம் தமிழ் = சீக்கிரம்
சமஸ்கிருதம் = ராஜ்யம் தமிழ் = ராஜ்யம்
சமஸ்கிருதம் = அன்னம் தமிழ் = ஆகாரம்
சமஸ்கிருதம் = ரத்நம் தமிழ் = ரத்தினம்
சமஸ்கிருதம் = சாஸ்த்ரம் தமிழ் = சாஸ்திரம்
“சமஸ்கிருதம் ஒரு அழகான அற்புதமான மொழி. எல்லா வகையிலும் தமிழுடன் ஒத்து போகும்”. எப்பொழுதுமே எந்த சமயமோ, மொழியோ தாமாகவே பிறருக்குத் தீங்கு இழைப்பதில்லை. அதனைக் கையில் எடுத்துக் கொண்டவராலேயே பிறருக்குத் தீங்கு ஏற்படும். அப்படி தமிழன்னைக்கு வந்த தீங்குதான் சமஸ்கிருதத்தை தங்கள் கையில் எடுத்துக் கொண்ட ஆரிய பிராமண வம்சாவளியினரின் செயல். இது நடந்தது இன்று நேற்றல்ல. ஒண்ட வந்தப் பிடாரி வீட்டுப் பிடாரரியை ஒட்டியது போல், என்று ஆரிய பிராமணர்கள் இந்தியாவில் தெற்கே நோக்கி நகர்ந்தனரோ அன்றிருந்தே ஆரம்பமானது தமிழ் மொழி அழிப்பு. பிற தேசத்தில் இருந்து வந்த மொழியை வாழ வைக்க, வந்த இடத்தில் மக்கள் இல்லாமல் போனதால் வழக்கொழிந்த மொழியாகிப் போனது சமஸ்கிருதம். இருப்பதையாவது காக்க முற்பட்டவர், தமிழ் மொழியின் தொன்மையும் சிறப்பையும் அறிந்து அத்துடன் தமது மொழியை சேர்த்துப் புதியதோர் மொழியாக கொண்டு வந்ததே சமஸ் + கிருதம் (சேர்த்து வைத்த மொழி). சேர்த்து வைத்தவர். தமிழை வாழ விட்டிருக்கலாமே?. எங்களைத்தான் சூத்திரர் என்று கூறி வாழ விடாமலும், மீள விடாமலும் கட்டி வைத்தனர். ஆனால் எங்கள் தமிழ் ஆரிய பிராமணர்களை என்ன செய்தது?. இன்று பிறந்த பையன்கள் நிலை தெரியாமல், வழக்கொழிந்துப் போன சமஸ்கிருதத்திற்கு வக்காலத்து வாங்குவது ஒன்னும் பெரிய விசயமல்ல. காரணம் அது அவர்களுடைய மொழி கலை, கலாச்சாரம். ஆனால் உம் பாட்டன் முப்பாட்டன் தமிழுக்கு இழைத்த அநீதி வரலாறுப் படிவத்தில் அச்சாகி இருக்கின்றது. பழைய வரலாற்றை இன்றும் தமிழர் அறியும் வண்ணம் வைத்த உண்மைத் தமிழர்களுக்குத் இன்று நாம் தலை வணங்குகின்றோம். தொடரும்.
இந்திய தென் நாட்டில், சைவத்தின் பொற்காலம் கி.பி. 14-ம் நூற்றாண்டு முதல் கீழ்நோக்கிச் செல்ல அங்கே சிறப்படையத் தொடங்கியது சமஸ்கிருதம். அன்றிருந்து, ஆங்கிலேயன் வந்த பிறகும் கி.பி. 19-ம் நூற்றாண்டின் முக்கால் பகுதி வரை தமிழ் மொழியை ஒரு கட்டாயப் பாடமாக பயில விடாமல் வைத்திருந்தனர் பிராமணர். சமஸ்கிருதமே மேல் நிலைப் பள்ளிகளிலும், பல்கலைகழகங்களிலும் கட்டாயப் பாடமாக இருந்தது. இது பிராமணப் பிள்ளைகளுக்கு அம்மொழியில் மேல்படிப்பைத் தொடர வசதியாக இருந்தது. தமிழர் பிள்ளைகளுக்கோ மேல்படிப்பைத் தொடர இது வேப்பங்காயாக இருந்தது, இந்நிலையில் 1875-ம் ஆண்டு முதல் ஆங்கிலேயர் அரசாங்கம் விதித்த புதிய பாட திட்டத்தின் வழி தமிழ் மொழி மேல் நிலைப் பள்ளிகளிலும், மெட்ராஸ் பல்கலைகழகத்திலும் கட்டாயப் பாடமாக்கப் பட்டது. தமிழ் மொழியை போதிக்க ஒரு சில தமிழ் அறிஞர்கள் மெட்ராஸ் பல்கலைகழகத்தில் நியமிக்கப் பட்டதை காணப் பொறுக்காத பிராமணர் சமூகம், அப் பல்கலைகழகத்தில் தமிழ் மொழிக்குப் பதில் சம்ஸ்கிருத மொழியையே கட்டாயாப் பாடமாக்க வேண்டும் என்று அப்பல்கலைக்கழக செனட் சபைக்கு முன்மொழிந்தனர். பழம் நழுவி பாலில் விழும் நேரத்தில் மெட்ராஸ் மாகாண தமிழ்ச் சங்கங்களின் எதிர்ப்பால் ஆங்கிலேய அரசாங்கம் புதியதோர் கல்விச் சட்டத்தை 1906-ல் நிறுவி ஆங்கிலத்துடன், தமிழ் மொழியையும் கட்டாயப் பாடமாக்கியது. வினை விதைத்தவன் வினை அறுப்பான் என்பது போல தமிழை தரைமட்டமாக்க நினைத்த பிராமணர்களுக்கு சமஸ்கிருதம் இன்று வழக்கொழிந்த மொழியாகிப் போனது. இப்பச் சொல்லுங்கள் தமிழர் ஏன் சமஸ்கிருதத்தைப் படிக்க வேண்டும்?. தொடரும்.
1897 முதல் 1914 வரை வெளிவந்த சித்தாந்த தீபிகா எனும் ஆங்கில மாத இதழில் ஜே.எம். நல்லசுவாமி எனும் அறிஞர் எழுதிய ஆங்கில கட்டுரையின் ஒரு பகுதியை இங்கே குறிப்பிடுகின்றேன். இதைப் படிக்கும் தமிழர் என்பார் தமிழைப் போற்றுவார். தமிழர் என்று தங்களை அடையாளப் படுத்தாதார் சமஸ்கிருதத்தைப் போற்றுவார்.
“… During the last quarter of a century the study of vernaculars (‘including tamil’) was compulsory only for a short time, after the introduction of the new Regulations in the end of 1906. As soon as it was found that the compulsory vernacular composition in the Intermediate Examination was leading to the vernacular being studied in schools, instead of Sanskrit, an agitation was commenced. It was proposed and finally carried in the Senate that the vernacular composition test inserted by the government should be struck out. When the Government refused to sanction this change it was proposed as the next best thing to introduce translation from Sanskrit as an option to vernacular composition. This was carried; vernacular ceased to be a compulsory subject and our new enthusiasts for the vernacular have yet shown no signs of proposing to go back upon their action. I do not mean of course, to imply that these gentleman are opposed to the vernacular. Their attitude towards it is “I could not love thee, dear, so much, lived I not Sanskrit more. but recollection of their action in the past deprives eloquent appeals for the study of the mother tongue of a good deal of their face. It is noteworthy, though your article does not mention it, that large majority on Saturday included almost all the non-Brahmin Indian members of the Senate, and most of the men who have really done something for the vernacular literature.
Anybody who knew anything connected with the introduction of new curricula in 1905, knew at the time that the vernaculars were sought to be sacrificed in the interest of Sanskrit. But the dream of the Sanskritists was upset by the action of the Government (‘Madras Presidency’) who interfered at the last moment by imposing for the intermediate examination compulsory vernacular composition as a result of the protest that were sent by the Madras Tamil Sangam, Salem Tamil Sangam, Saiva Siddhanta Maha samajam etc. The result of this was that even those Brahmin students who were studying Sanskrit from the lower forms had to give up its study in favour of the vernacular…”
ஒரு மொழிக்கு இலக்கணம் தோன்றும் முன் அந்த மொழி பல்லாயிரம் ஆண்டுகள் பேசப்பட்டிருக்க வேண்டும். அதன்பின் அந்த மொழியில் இலக்கியம் தோன்றிருக்க வேண்டும். அதுவே மொழியின் வளர்ச்சியை மதீப்பீடு செய்யும் விதம். அப்படிப் பார்க்கும் பொழுது சமஸ்கிருதத்திற்கு இலக்கணம் வகுத்து எழுதிய பாணினியின் காலத்திற்கு முன்னையே தமிழுக்கு தொல்காப்பியர் இலக்கணம் வகுத்து எழுதியுள்ளார் என்று S. BHARATHI, M,A.,B.L. எனும் தமிழ் அறிஞர் ‘TAMIL CLASSICS and TAMILAGM’ (1913) எனும் தனது ஆய்வேட்டில் குறித்துள்ளதை கீழே காணலாம்:
“…Again, it is a known fact that in Tholkappiyar’s age, the Tamil writers were sufficiently conversant with Sanskrit and its literature. Tholkappiyar himself is believed on all hands to have been a Tamilised Aryan. Yet, we find his collegiate friend, who writes the preface to his classic grammar referring only to Aindhiram and not to Paniniyam as the source of Tholkappiyar’s inspiration. Had
Panini’s masterpiece been in existence at the time, it is impossible to explain how it could have been ignored by the great Tamil Aristotle or why it should have been less known in the South, than the less studied and less used Aindhiram. The only reasonable inference is that Tholkappiar had written his great treatise long before Panini was born to enrich the Aryan tongue with his grammar. And as Panini’s age has been fixed about the 4th century B.C , Tholkiippiyani must have been written three or four centuries prior to it…”
மேற்கூறிய கருத்தின் அடிப்படையில் பார்ப்போமோனால், ‘தமிழ் 12,000 ஆண்டுகள் முன்பு கிராந்த மொழியில் இருந்து பிரிந்திருக்க வேண்டும், அப்படியே சமஸ்கிருதம் 36,000 முன்பே இருந்திருக்க வேண்டும்’ என்று அவரவர் (ஆதாரமற்ற) கணிப்பில் கூறுவதெல்லாம் உண்மையாகி விட முடியாது. அவரவர் கணிப்பு என்பது அவரவர் எந்த கண்ணோட்டத்தில் தமிழ் மொழியை பார்க்கின்றனர் என்பதைப் பொறுத்தே அமையும். அதனால், தான் போற்றும் சம்ஸ்கிருத மொழியை தமிழ் மொழியுடன் ஒப்பிட்டு பேசுவது முன்னதற்கு கண்ணில் நெய்யை விட்டுக் கொண்டு பார்ப்பதும், பின்னதிர்க்கு கண்ணில் சுண்ணாம்பை வைத்துக் கொண்டு பார்பதற்கும் ஒப்பாகும். தமிழர் மடையார் என்று நினைத்துக் கொண்டு கருத்து எழுத ஆரம்பித்தால் அப்புறம் இங்கே தமிழ் பாடம் நடத்த வேண்டிய கட்டாயம் வந்து விடும்.
மனிதனை மனிதனாக்குவது மொழி என்பது அனைவரும் அறிந்த கருத்து. பிற மிருகங்களை விட மனிதன் எனும் மிருகம் உயர்ந்து நிற்பதர்க்குக் காரணம் பகுத்தறிவு என்ற ஆறாம் அறிவைப் பெற்று இருப்பதினால். இதுவும் அனைவரும் அறிந்த கருத்துதான். இந்த பகுத்தறிவைப் பயன்படுத்தாமல் பலர் ‘நம்பிக்கை’ என்னும் மயக்கத்தில் இருப்பதினால் வரும் வினை ‘அறிவீனமாகும்’. இப்பகுதியில் கருத்து எழுதும் படித்தறிந்த ‘புலவர்’களிடம் இருந்து வரும் ‘நம்பிக்கை’ நமது சமயத்தின் ‘கடவுள் நம்பிக்கையையே’ ஆட்டம் காண வைத்து விடும் போலிருக்கு. ‘மொழி’ உருவானது மனிதரின் செயலா? அல்லது கடவுளரின் அருளா?.
துடிசைக்கிழார் அ சிதம்பனார் என்பார் தமிழ் மொழியைப் பற்றிய ஆராய்ச்சிக் கட்டுரையில் ‘THE TAMIL LANGUAGE’ – Part 1 – Origin of Language (1913)- ல், ‘MAX MULLER’ -ரை மேற்கோள் காட்டி மொழி தோன்றியதின் வரலாற்றை கீழ்காணுமாறு கூற ஆரம்பிக்கின்றார்:
“..Max Muller says in his science of language, “when we see the history, or, as it is now the fashion to call it, the evolution of language, we cannot help admitting that there must have been some kind of beginning. A language such as English, for instance, does not tumble down from the sky; and even if it did, it would have to be picked up; and to pick up a language, as you know, is not a very easy task, particularly for a person supposed to be dumb and without any idea of what language is meant for. In former times, as it seemed to be impossible to account for language as a piece of human workmanship, it was readily admitted that it was of Divine workmanship, that it really had tumbled down from the sky in some way or other, and that, curiously enough, man alone of all animals then living upon earth had been able to pick it up. But when languages began to be more carefully examined traces of human workmanship become more and more visible and at last the question could no longer be pushed aside, how language was made, and why man alone of all living beings should have come into possession of it. So, I am of opinion that all languages in the world are the work of human beings and not the work of Divinity. Language is a product of thought; that thought must always come first, language after; that thought is independent of language, and that the Greeks were great bunglers when they denoted language and thought by one and the same terra “Logos.”
Before the language, the existence of human beings is necessary. Before the creation of human beings the existence of the world is necessary…”
மீண்டும் சித்தாந்த தீபீகாவுக்கு நன்றி.
இப்பொழுது சொல்லுங்கள் “மொழி” தோன்றியது மனிதரின் செயலா? அல்லது இறைவனின் அருளா?. மனிதரின் செயல் என்பதை மறுத்தால் மீண்டும் எழுதுவேன்.
லெமுரியா கண்டமே ஆழ்கடலில் மூழ்கி இருக்கும் பொழுது அங்கிருந்து யார் கிரந்த மொழியில் உள்ள கல்வெட்டை கொணர்ந்தது?. இதுவும் இணைய யோக்கியமோ?.
கி.பி. 19-ம் நூற்றாண்டுக்கு முன்னர் ஏறக்குறைய 500 வருடங்களாக சமஸ்கிருதமே தென்னாட்டில் தமிழர்களை ஆட்கொண்டு இருந்தது. 500 வருட காலக் கட்டத்தில் தமிழுக்கு எவ்வளவு மொழிச் சிதைவு ஏற்பட்டிருக்கும்?. இதற்காக தனித் தமிழ் இயக்கத்தை ஏற்படுத்திய மறைமலை அடிகளார் போன்றோர் பிராமண வம்சாவளி மக்களிடம் எவ்வளவு எதிர்பை எதிர் கொண்டார். பிராமண வம்சாவளி மக்கள் பலவிதத்தில் அவரை தனிமைப்படுத்தி விமர்சிக்க முற்பட்டனர். அக்காலகட்டத்தில் தமிழில் கலந்துப் போன சமஸ்கிருத எழுத்துக்கள் ஏராளம். அவ்வாறே சேர்த்த மொழியாக விளங்கும் சமஸ்கிருதத்திலும் தமிழ் எழுத்துக்கள் அடங்கியே இருக்கின்றன. மொழி கலப்பு என்பது ஆச்சரியமானது அல்ல. எல்லா மொழிகளிலும் இது நடப்பதுண்டு. இது சம்பந்தமாக பொன் ரங்கன் அவர்கள் ஒரு கட்டுரை எழுதுவாறேயானால், மொழி கலப்புப் பற்றி தனி கருத்து உரையாடல் வைத்துக் கொள்ளலாம். இன்றும் பக்தி காலத்தில் (கி.பி. 7-ம் நூற்றாண்டு முதல் 14-ம் நூற்றாண்டு வரை) தோன்றிய தமிழ் சமய இலக்கியங்களே நமக்கு வழக்கில் இருந்த பல தொன்மையான தமிழ் வார்த்தைகளை உள்ளடக்கி இருக்கின்றன. அவற்றை வெளியே எடுத்து வழக்கில் கையாள்வதற்கு மலேசிய தமிழர்களோ, இலங்கைத் தமிழர்களோ, சிங்கப்பூரிய தமிழர்களோ முன் வர வேண்டும். தமிழ் நாட்டைக் குறிப்பிடாததர்க்குக் காரணம் அவர்களில் பெரும்பாலானோர் பக்தி கால தமிழ் இலக்கியம் என்றால் என்னவென்பதையே மறந்து விட்டு ஆரிய சமய இலக்கியங்களிலே மூழ்கி முத்தெடுத்துக் கொண்டிருக்கின்றனர். உருப்படுமா தமிழ் அந்த தமிழ் நாட்டில்?.
என்னையா இது ? தேனீ யுடம் ஒரே அக்கபோரா இருக்கு ! அவர் ஒரு வீர தமிழன் என்பாராம் ஆனால் இன்றைய ஆங்கிலத்தால் ஏற்படுகின்ற தமிழ் கொலையை சிந்திக்க மாட்டாராம். பிறகு 1000 வருடம் கழித்து குய்யோ முறையோனு கத்திக்கிடு இருப்பாராம். அவ்வளவு வீர தமிழர் என்றால் ஏன் மலாய் மொழியையும் ஆங்கில மொழியையும் படிகிர்ரீர்கள்? காரணம் இன்றைய சுழலில் ஒரு நாட்டின் குடியுரிமைக்கு, வேலைவாய்ப்பு, தொழில் ஆற்றல் திறன் மேலோங்குதல் போன்றவற்றுக்கு பல மொழிகள் தேவை படுகிறது. ஆரம்பத்தில் இவைகளுடன் சேர்ந்து ஆட்டம் போட்டு விட்டு, லாபத்தை சுவைத்து விட்டு, பிறகு என் இனத்தவரின் தோல்விக்கு எவன் எவன்னோ காரணம் என்பாராம். அவ்வளவு உண்மையானவன் என்றல் இன்றே எதிர்க்க வேண்டாமா ? ராஜா ராஜா சோழன் ஆண்ட பூமி, தமிழை தவிர வேட்ட்று மொழிக்கு idam illai என்று கூரிபாருங்கல் ? பிறகு 200 வருசத்துக்குலே இருக்கும் குறிப்புகளை காட்டி விட்டால் எல்லாம் சரி என்றாகிவிடுமா ? சரி அந்த அந்த அறிஞர்கள் குறியிடும் குறிப்புgal என்ன ? எப்படி அவர்களுக்கு அந்த விஷயம் தெரிய வந்தது (REFERENCES) எங்கே ? சும்மா வாயாலையே வீடு கட்டி நாக்காலயே சுண்ணாம்பு பூசகூடாது.
Dhilip 2,தமிழ் மொழியை இயற்றியவர் ஆதி சிவன் என நீங்கள் கூறும் கருத்தை மறுக்க யாரையா நான்? இருப்பினும் ஒரே ஒரு விளக்கம் தேவை படுகிறது உங்களிடமிருந்து; சிவனின் ஆதி எப்போது என்று கூறினால் மீதியை நானும் விளக்கி கூறுகிறேன் ஐயா!
அன்வார் வழக்கை கண்டு நான் அதிர்ச்சியை இருக்கிறேன். மீண்டு வந்ததும் எழுதுகிறேன். pls
ஒருவர் தனது தாய்மொழியை அடுத்து வேற்றொரு மொழியைக் கற்றுக் கொள்வதின் நோக்கம் பிற மொழி பேசுபவரிடம் தொடர்பு கொள்வதற்காகவே. மொழி ஒரு தொடர்பு கருவி. அதற்கு அப்புறம்தான் மற்றவை எல்லாம். பேசாத ஒரு மொழியைக் கற்று பயன் என்?. மலாய், ஆங்கிலம் இன்னும் பல மொழிகள் அம்மொழிகளில் பேசும் மக்களிடையே தொடர்புகொள்ளத் தேவைப் படுகின்றது. அதனால் கற்றுக் கொண்டு பேசுகின்றோம். இதனால் தமிழர்களுக்குக் எல்லாம் பறைசாற்றுவது, பேசாத மொழியை கற்பதால் பயன் இல்லை என்பதால் அதனைக் கற்காதே.
தமிழுக்காக போராடதவரெல்லாம், தமிழுக்காக தலைவணங்காத தேங்காய் மூடிகலெல்லாம் மூடிகிட்டு இருங்கள். எங்களைப் போன்றோர் இருக்கும் வரை தமிழ் வளரும் வாழும். தமிழர் வாழ்வாங்கு வாழ்வார்.
ஜே.எம். நல்லசாமி என்பார் மெட்ராஸ் மாகாணத்தில் நந்தியால் மாவட்ட அதிகாரியாக பணியாற்றியவர். இன்று இப்பகுதி ராயலசீமா ஆந்திரத்தில் உள்ளது. இவர் தமிழ், ஆங்கிலம், சமஸ்கிருதம் ஆகிய மூன்று மொழிகளிலும் புலமை பெற்றவர். சித்தாந்தத்திலும் தேறியவர். சுவாமி விவேகானந்தா சிக்காகோ மாநாட்டில் உரையாற்றி விட்டு இந்தியாவிற்கு திரும்பி வந்து இவரைச் சந்தித்து சைவ சித்தாந்தாந்தைக் கேட்டறிந்து அதன் பெருமையை பின்னால் பாராற்றியவர். பிராமணர் தமிழுக்கு இழைத்த அநீதிச் சம்பவம் நடந்த காலக்கட்டத்தில் (1905 -1906) வாழ்ந்தவர். அச்சமயம் தமிழ் மொழிக்காக நேரிடையாக களத்தில் இறங்கி பிராமண சமூகத்திடம் போரிட்டவர். தானே கண் கூடாக கண்டதற்கு ஆதாரம் தேவையா?. உள்ளங்கை புண்ணுக்கு கண்ணாடி வேண்டுமா?. என்னே அபத்தம். உண்மையை ஏற்றுக் கொள்ள பக்குவம் போதவில்லை என்றால் மேலும் கேளுங்கள். தமிழுக்கு ஏற்படுத்தப் பட்ட அநீதிகளை மேலும் விவரிக்கின்றேன். வரலாறு எங்களுக்கு உணர்த்தும் பாடத்தை மறவாமல் இருக்க தமிழர்களுக்கு வரலாற்றை மீண்டும் மீண்டும் நினைவுபடுத்துவதில் என்ன தவறு இருக்க முடியும்.
சமஸ்கிருதம் பார்பனர்களின் அப்பன் மொழி; ஆத்தா மொழியல்ல. தமிழ் எங்கள் அப்பன், ஆத்தா இருவரின் மொழி. இதற்காக குரல் கொடுப்பதும், எங்கள் மொழியை மேம்படுத்த நினைப்பதும் எங்கள் உரிமை.
எந்தத் தமிழனும் மலாய் மொழியைப் பயன்படுத்தி தன்னுடைய வழிபாட்டை செய்யமாட்டான். எந்தத் தமிழனும் ஆங்கில மொழியில் தன்னுடைய வழிபாட்டை செய்யமாட்டான். ஏன் என்றால் தமிழனின் தமிழ்மொழி ஒரு உண்மையான செம்மொழி; அவனது தாய் மொழி. ஆனால் பாருங்கள் தனது வழிபாட்டில் சமஸ்கிருதம் திணிக்கப்படுவதை அவனால் எதிர்கொள்ள முடியவில்லை. காரணம் கோவில் வழிபாட்டு அதிகாரம் அவன் கைகளில் இல்லை. பார்பனியர்களே வர்ணாசிரம அடிப்படையில் ஐயனாக இருக்க முடியும் என்று ஆரிய அடிவருடிகளாம் மன்னர் காலங்களில் நடைமுறையில் இருந்ததை மக்களாட்சி நடைபெறும் காலத்திலும் , சமூக விடுதலை பெறமுடியாமல் , கோவில்களில் பார்பனர்கள் மட்டுமே அதிகாரம் செலுத்த வேண்டும், அவர்களின் மேன்மை நிலைநிறுத்தப்பட வேண்டும் என்று முட்டள்தனமாக, தன்னிலை உனராமல் இருந்ததால் உலகம் பூராவிலும் பார்பான் ஐயன் வடிவத்தில் தன் அப்பன் மொழியான சமஸ்கிருத மொழித்திணிப்பை நாசுக்காக பக்தி எனும் பெயரில் செய்கிறான். தமிழனின் தலையில் மிளகாய் அரைக்கிறான். ஏமாளித் தமிழன் தன் தாய்மொழியைக் கோவிலிருந்து வெளியே தள்ளினாலும் பரவாயில்லை இறவனிடமிருந்து பார்ப்பனிய ஐயனின் தயவில்,சிபாரிசில் கடவுளின் வரம் கிடைத்தால் போதும் என்று மாயையில் கிடக்கிறான். இந்த மட்டித் தமிழனைத் தட்டி எழுப்ப சில தமிழ்த் தேனீக்கள் களத்திற்கு வந்தால் சில பார்ப்பன அடிவருடிகள் அடிக்கடி பெயர்களை மாற்றிக்கொண்டு புதுப் புது பெயர்களில் ஆரியக்கொடி பிடிக்கின்றன. எங்கள் அடிமடியில் ஆங்கிலமோ அல்லது பிற மொழிகளோ கைவைக்கவில்லை. ஏன் என்றால் அவை ஒரு மொழியாகவே எங்களிடம் தாக்கத்தை ஏற்படுத்துகிறது. ஆனால் சமஸ்கிருதம் பக்தி எனும் பகல்வேடமிட்டு ஐயன் வடிவில் எங்கள் தமிழ்க்குடியைக் கெடுக்க ஹிந்து எனும் பொந்திலிருந்து வரும் விஷப்பாம்பு! எங்களுக்குள்லிருந்தே அப்பாவிபோல் காவி வேடமிட்டு எம் தமிழினத்தை அழிக்கும் வைரஸ் கிருமி! அதனால்தான் உண்மை தமிழன், உணர்வுள்ள தமிழன் சினக்கிறான்; உள்ளம் கொதிக்கிறான். திலீப் 2 எனும் பெயரில் இந்து தர்மன் இங்கே ஆரியக் கடைபோடுவதை நிறுத்து. உண்மையுள்ளவனுக்கு எதற்கு கிறிஸ்துவப் பெயரில் முகமூடி?
மாநாடு நடத்தி நம்மவர்களை இப்படி மோதவிட்டு சாமி வேலு இங்கேயும் கொள்ளை அடித்தான். இவன் அரசியல் வாதி தமிழ் நேசனை வாங்கி பதிரிகைகாரகளை விபச்சாரப்படுதியவன் .தானே மந்திரி தானே ராஜா இவன் எல்லாம் தமிழ் மாநாடு நடத்தினா இப்படிட்தான்ஹ்
ஆங்கில, மலாய் மொழியைப் பயன்படுத்தி மதம் மாருகிரானே ? முதலில் ஒன்று தெரிந்து கொள்ளுங்கள். உங்களை யாரும் சமஸ்கிருதம் படியுங்கள் என்று இப்பொழுது சொல்லவில்லை. அதன் காலம் முடிந்திருக்கலாம், ஆனால் அவை இந்தியாவின் மூத்த மொழிகளின் ஒன்று. தேவை பட்டால் மட்டும் படித்து கொள்ளுங்கள். உங்களுக்கு உதவாது என்றால் ஏன் படிக்க வேண்டும்? கிராந்த மொழி அறவே மொழி இல்லவே. IBRU மொழி மிகவும் பழமையானது ஆனால் முகவும் குறைந்த மனிதர்கள் தான் இன்று தெரிந்து வைத்துள்ளார்கள். ஆகையால் எப்ப பார்த்தாலும் “என் தோல்விக்கு சமஸ்கிருதம் தான் காரணம்” என்று ஒருவன் கூறினால் நான் நடு ரோட்டில் நின்று சிரிப்பேன். கையாலாகாதவர்கள் என்று. ஒன்று சொல்கிறேன் நினைவில் கொள்ளுங்கள். எல்லா மானிட பிரிவுகளிலும் எவனோ ஒருவன் அரசியல் படை நகர்த்தும் பொழுது எதோ ஒரு மொழி சிதையும். அது காலத்தின் கோலம். அதையே பேசி பேசி ஒருவன் அரசியல் செய்வானால், அவனால் அவன் மதத்துக்கு புதுமை செய்ய இயலாது. கையாலாகாதவர்கள் என்று முத்திரை குத்துவதைவிட வேறு வழியில்லை. அப்படி தெரியாதவர்களுக்கு, இதோ சில: போதிதர்மர் தான் சீனாவுக்கு எல்லா முலிகை மருத்துவம் தந்தார் என்பது, சில முரண்பாடுகளை தருகிறது காரணம் போகர் என்ற ஒரு முலிகை மருத்துவர் ராயரின் நாட்டில் இருந்து (அதாவது திராவிடநாடு) போதிதர்மருக்கு முன் சீனவிட்டிக்கு சென்றிருக்கிறார். மதுவும் மங்கையும் தந்து அவரை ஏமாற்றி முலிகை மருத்துவத்தை வங்கி கொண்டதாகவும் பின் அவர் மனம் திருந்தி முருகனிடம் சரணாகதி அடைந்ததும், முருகன் கனவில் தோன்றி அவர் பாவங்களுக்கு பரிகாரமாக ஒரு நவ பாஷான முலிகையாலான முருகன் சிலையை செய்ய சொன்னதாகவும் ஒரு கதை இருக்கிறது. இதை ஆராய்ந்து நம் மக்களுக்கு விளக்கினால் கூட நாம் எப்படி பட்ட நாகரிகத்தை கொண்டவர்கள் என்று பிறர் மத்திப்பர். சும்மா எப்ப பார்த்தாலும் ஓலம் இடுக்கிடே இருந்தா … போரடிக்குது ….
இன்னும் எவ்வளவு காலம்தான் வட மாநிலங்களையும்,வட மொழியையும் எதிர்பது தமிழ் உணர்வு என்றும்,தமிழ் ஏமாற்று பேர்வளிகளுக்கு கட் அவுட் வைப்பது தமிழர் தேசியம் என்றும் சொல்லிகொண்டிருபார்கள்.யாதும் ஊரே யாவரும் கேளிர் தமிழ் இனத்துக்குள் மட்டும் தானா,ஏன் ஒரு தெலுங்கனோ,மலையாளியோ தமிழ் சேவை செய்தால் என்ன? ஜி.யு.போப்,கால்டுவெல் போன்றவர்களின் சேவையை குறைத்து மதிப்பிட முடியுமா?தமிழ் உணர்வு என்பது தமிழனுக்கு.மட்டும் தானா.வேற்று மொழிக்காரன் ஆய்வு செய்தால் தமிழ் தீட்டாகிவிடுமா?தமிழை உலக மொழியல்ல,குறைந்தது இந்திய மொழியாக்குவது எப்படி?தமிழ் உணர்வு ஒன்றே மொழி வளர்க்கும்.இனவெறியல்ல.
தமிழ் தேசியத்தை கட்டுவதற்கு பதிலாக தமிழ் இனத்தில் உள்ள சாதியத்தை ஒழிக்க முற்பட்டால் மனித நேயம் வாழும் .
அகஸ்தியரே, தாங்கள் இங்கே வந்து கருத்து எழுதுவது எம்மை ஆச்சரியத்தில் வைத்துள்ளது. தமிழை போற்றும், தமிழுக்காக போராடும் அனைவரையும் வரவேற்கின்றோம் அது எந்த மொழி பேசுபவராகவும் இருந்தாலும் சரி. ஆனால் தமிழரிடமே வாழைப்பழத்தில் ஊசியை ஏற்றுவது போல் பிற மொழியை ஏத்துவோரிடம் கொஞ்சம் முன் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்பதே எம்மைப் போன்றோரின் நோக்கம்.
தமிழ் தேசியத்தை கட்டுவதற்கு பதிலாக தமிழ் இனத்தில் உள்ள சாதியத்தை ஒழிக்க முற்பட்டால் மனித நேயம் வாழும் .
ஏமாறும் வரை ஏமாற்றத்தான் செய்வார்கள்.தமிழை வைத்து வியாபாரம் செய்வோரை பலர் கண்முடித்தனமாக பின்பற்றுவதால் செய்கிறார்கள். தமிழ் வியாபாரிகளின் குடும்பத்திலும்,பிள்ளைகளும் அந்நிய மொழியில் பாண்டித்துவம் பெற்றவர்களும் உண்டு .ஐயா ஆரிய பார்ப்பண பாரதியை நாம் தமிழ் கவி என்றும் வட மொழியில் புழமை பெற்று வட மொழி இராமாயணத்தை தமிழில் தொகுத்த கம்பரை ‘கவி சக்கரவர்த்தி’ என்றும் வியப்புடன் புகழ்கிறோம்.அவர்களால் நாம் வீழ்ந்தாவிட்டோம்?இன்று வரை அந்த பழம் புராணத்தை பாடியே காலத்தை ஓட்டவிலையா?மனம் விட்டு சொல்லுங்கள், இன்றைய நிலையில் நமது முதல் எதிரி வட மொழியா ஆங்கிலமா?ஆங்கிலத்தை யார் திணிக்கிறார்கள். ஆங்கிலத்தால் தமிழ் அழியவில்லையா?ஒன்றை சொல்லி கொள்ள ஆசை.செப்புத்தகட்டிலும்,கல் வெட்டிலும்,ஓலை சுவட்டிலும் நம் பாட்டன் முப்பாட்டன் தமிழை பிள்ளைகளுக்கு காட்டும் நாம்,நம்மால் ஆன தமிழுக்கான படைப்புக்களை வருங்கால சந்ததியின்னர் தோண்டியெடுக்க எதை விட்டு செல்ல போகிறோம்,பார்ப்பினிய எதிர்ப்பை மட்டுந்தானே
அகஸ்டின் உங்கள் கருத்து அருமை….. இதைதான் நாமும் என் வாழ் நாள் முழுவதும் கேட்டு வருகிறேன். வடவன் ஆரிய மொழி என்று அவனை குறை கூறியே ஆங்கலத்தை வளர்த்து வருகிறோம். நிறைய விசயங்கள் சமஸ்கிரகதிலும் பொதிந்து கிடக்கிறது.அதையும் ( சமஸ்கிரதம் கற்ற ) தமிழ் பண்டிதர்கள் நமக்கு மொழி இந்த தமிழ் உலகத்திற்கு தருவார்களேயானால் நம் மொழி வளரும்….. தமிழை எந்த கொம்பனாலும் அழிக்கமுடியாது….. இவர்களே மொழிக் காவலர்கள் என்று அரசியல் செய்வதும் ( தமிழ்நாட்டில்) தமிழே என் உயிர் மூச்சி என கூவிக் கொண்டு ஆங்கிலத்தில் கூடி குலவுவதும் தான் இவர்கள் போக்கு. இன்னும் எதனை காலத்திற்கு பிராமணரையும் சமஸ்கிரததையும் குறை சொல்லி பிழைப்பை ஓட்டப் போகிறார்களோ. அது அந்த ஆண்டவனுக்கே வெளிச்சம்.