பெட்றோர் மிக முக்கியம் அதேபோல் மனைவியும் குழந்தைகளும் மிக முக்கியமானவர்களே!

OLYMPUS DIGITAL CAMERA

பெந்தோங் 15-5-2015

கடந்த 15-3-2015 இல் அகால மரணம் அடைந்த திரு. செல்வத்தின் மனைவியும் இரு குழந்தைகளும் ஆதரவற்ற நிலையில் உள்ளனர். 4 ஆண்டுகளுக்கு முன்பு குடும்பம் உற்றார் உறவினர் ஏற்பாட்டில் திருமணம் செய்து கொண்டோம். என் கணவர் என்னையும் குழந்தைகளையும் எந்த குறையுமின்றி பேணி காத்து வந்தார். கடந்த வருடம் நவம்பர் மாதம் அவருக்குப் புற்று நோய் என்று தெரியவந்தது, சரி படுத்திவிட முடியும் என்று நம்பினேன். தொடர்ந்து, மருத்துவமனையில் சிகிட்சை அளிக்கப்பட்டது. ஆனால் எந்த பயனும் இல்லாமல் எங்களை விட்டு போய்விட்டார் என்று அவர் மனைவி லோகேஸ்வரி வயது 33 அழுதுக் கொண்டே கூறியபோது மனம் கலங்கி விட்டது.

loges husbandமூத்த மகள் வயது 3, இளைய மகன் வயது 1 1/2 இவர்களை நான் எப்படி வளர்த்து கரை சேர்க்கப் போகிறேன் என்று அவர் கலங்குவது கண்டு கல்லும் கரைந்துவிடும். செல்வம் வயது 33 ஒரு தனியார் நிறுவனத்தில் “பொயிலர்” (Boiler) ஆக வேலை பார்த்தார். நல்ல கணவர், பொறுப்பான தந்தை. 1600 வெள்ளி சம்பளத்தில் மிக எளிமையாகவும் மட்டற்ற மகிழ்ச்சியாகவும் குடும்பம் நடத்தியிருக்கிறார். அவர் மனைவி லோகேஸ்வரி ஒரு குடும்ப மாது. கணவரும் குடும்பமும்தான் அவர் உலகமாக இருந்தது. இன்றய நிலையில் அவர் குழந்தைகளுக்கு தாயாகவும் தந்தையாகவும் மாற வேண்டியுள்ளது.

தன் கணவரின் ஓய்வூதியம் அவருடைய தாயார் பெயரில் இருப்பதால் லோகேஸ்வரிக்கு அதில் எந்த உரிமையும் இல்லை என்றாகிவிட்டது. இதை கேட்கும்போதே கோபம் பிரிட்டு வந்தாலும் சட்ட ரீதியாக எதாவது வழி இருக்கிறதா என்று பார்த்தால் ஒரு வழியும் இல்லை என்று அறிந்த போது அதிர்ந்து போனேன் என்றார் சபாய் சட்டமன்ற உறுப்பினர் காமாட்சி துரைராஜு

என் கணவர் நோய்வாய்ப்பட்டிருந்தபோது அவரை காப்பாற்ற வேண்டும் என்று நினைத்தேனே தவிர அவர் இறந்து விடுவார் என்று நான் நினைத்ததே இல்லை. நான்கு மாதங்களில் நோயின் தாக்கம் அதிகரித்து இறந்துவிட்டார். அவருடைய சம்பளம் எவ்வளவு என்றுகூட எனக்குத் தெரியாது, அதைப்பற்றி நான் பொருட்படுத்தவும் இல்லை.

அவர் இறந்த பிறகு சில நாட்களில் அவருடைய பெற்றொர் என்னை அழைத்துக்கொண்டு கே.டபள்யு.எஸ்.பி. (KWSP) அலுவலகத்திற்கு சென்றனர். பாரங்களைப் பூர்த்தி செய்தனர். பணத்தைப் பெற என் கணவரின் அசல் இறப்பு பத்திரம் தேவைப்பட்டதால் அது என்னிடம் இருந்ததால் என்னை அழைத்துக்கொண்டு கே.டபள்யு.எஸ்.பி. (KWSP) அலுவலகத்திற்கு சென்றனர். காரியம் முடிந்தவுடன் என் மகனின் சொத்தை அனுபவிக்க எங்களுக்கே உரிமை இருக்கிறது என்று காலை வாரி விட்டனர். என் பிள்ளைகளும் சட்டப்படி பதிவு திருமணம் செய்த எனக்கும் எந்த உரிமையும் இலையா என்று பரிதாபமாக கேட்கிறார் லோகேஸ்வரி.

Jpegகடந்த வாரம் லோகேஸ்வரி திருமதி. காமாட்சியின் உதவி நாடி சென்ற போது அவர் இந்த விவரங்களை சொல்லியிருக்கிறார். திருமதி. காமாட்சி லோகேஸ்வரியை நேரில் சந்தித்து தன்னால் முடிந்த உதவியை செய்வதாக கூறியுள்ளார். சட்டத்தில் வழி இல்லாத நிலையில் லோகேஸ்வரியின் மாமனார் மாமியாரிடம் பேச முற்பட்ட போது அவர்கள் அதற்கு தயாராக இல்லை என்பது தெரியவந்தது.

சமுதாய நல இலாகாவிடம் உடனடி பண உதவி கேட்டு பாரம் பூர்த்தி செய்து தந்துள்ளேன். அவர்கள் கருணையோடு லோகேஸ்வரிக்கு உடனடி உதவி செய்ய பரிசீலிப்பர் என்று நம்புகிறேன் என்றார் காமாட்சி.

லோகேஸ்வரி நிலை அங்காங்கே ஆம் அறிந்தும் அறியாமலும் நடந்து கொண்டுதான் இருக்கிறது. மிகப் பெரிய படிப்பினையை தரும் இது போன்ற சம்பவங்கள் இனியும் நடக்காமல் இருக்க நாம்தான் உரிய நடவடிக்கையை எடுக்க வேண்டும். ஓய்வூதிய வாரியமும் இதைதான் அடிக்கடி வலியுறுத்துகிறது. பெட்றோர் மிக முக்கியம் அதேபோல் மனைவியும் குழந்தைகளும் மிக முக்கியமானவர்களே. அவர்களையும் மறவாமல் வாரிசுதாரர்களாக நியமிப்பது அவசியம் .

நன்றி,

காமாட்சி துரைராஜு