உலகின் தொன்மையான ஆறு செம்மொழிகளில் தமிழும் ஒன்று. ஏனையவை இலத்தீன், சீனம், கிரேக்கம், ஹீப்புரூ மற்றும் சமற்கிருதம் ஆகும். தமிழின் சிறப்பினை, அதன் இலக்கிய வளத்தை, உலக அறிஞர்கள் போற்றிப் பேசுகின்றனர். ஆனால் தமிழர்களுக்குத் தமிழ்மொழியின் அருமை பெருமை, சீர் சிறப்புத் தெரியாது இருக்கிறது.
தமிழுக்குத் தொடர்பே இல்லாத உருசிய நாடு தமிழைக் கொண்டாடுகிறது. அங்கிருக்கும் அதிபர் மாளிகையான கிரெம்ளின் மாளிகையின் பெயரை அவர்கள் அழகு தமிழில் எழுதியுள்ளார்கள். முதலாவதாக அவர்கள் தாய்மொழியான உருசியத்திலும் இரண்டாவதாக அண்டைநாட்டு மொழியான சீனத்திலும் மூன்றாவதாக உலகத் தொடர்புமொழி என்ற நோக்கில் ஆங்கிலத்திலும் நான்காவதாக தமிழிலும் எழுதியிருக்கிறார்கள்.
தமிழைவிட எத்தனையோ உலகமொழிகள் பெரும்பாலான மக்களால் பேசப் படுகின்றன. ஆனால் அவற்றையெல்லாம் விட்டுவிட்டு தமிழ்மொழியில் அதிபர் மாளிகையின் பெயரை எழுதியதற்கு உருசியர்கள் கூறும் காரணத்தை தமிழர்கள் சிந்தித்துப் பார்க்க வேண்டும்.
“உலகில் ஆறு மொழிகள்தான் மிகவும் தொன்மையானவை. அவை கிரேக்கம், லத்தீன், எபிரேயம், சீனம், தமிழ், சமற்கிருதம். இந்த ஆறு மொழிகளில் இரண்டு மொழிகள் இன்று வழக்கில் இல்லை. உலகில் உள்ள முக்கிய மொழிகளான 642 மொழிகளிலும் சரியான, தகுதியான மொழியாக “தமிழ் மொழி” தென்பட்டது. அந்த மொழியைச் சிறப்பிக்கவே “கிரெம்ளின் மாளிகை” என தமிழில் எழுதினோம்” என்று உருசியர்கள் கூறுகிறார்கள்.
வெளிநாட்டினருக்குத் தமிழின் அருமை பெருமை தெரிந்திருக்கிறது. தமிழர்களுக்குத்தான் தெரியவில்லை. தமிழில் எழுதுங்கள், தமிழில் பேசுங்கள், தமிழில் வழிபாடு செய்யுங்கள்,தமிழ்ப் படைப்பாளிகள் கழகம் தமிழ்மொழி வளர்ச்சி, தமிழ்க் கலை பண்பாடு ஆகியவற்றின் மேம்பாட்டைக் குறிக்கோளாகக் கொண்டு இயங்கி வருகிறது. தமிழ் எங்கள் உயிர்! தமிழ்க் கலை எங்கள் மூச்சு! தமிழ்ப் பண்பாடு எங்கள் வாழ்வு! திருக்குறள் எங்கள் வழிகாட்டி! என்பன அதன் முழக்கமாகும்.
இந்தக் குறிக்கோள்களை அடைய வேண்டும் என்றால் தமிழ்மொழி எமது வீட்டு மொழியாக இருக்க வேண்டும். வீட்டில் தமிழைத் தவிர வேறுமொழியில் பேசுவதில்லை என நாம் உறுதி எடுத்துக் கொள்ள வேண்டும். இந்தியாவின் புகழ்பெற்ற நேரு குடும்பம் வீட்டில் இந்தியில் மட்டும் உரையாடியது. திருமணங்கள் திருக்குறள் ஓதி செந்தமிழில் நடைபெற வேண்டும். திருக்கோயில் வழிபாடு வண்டமிழில் இருக்க வேண்டும்.
உங்கள் உறவுகளை தமிழில் அழையுங்கள். அப்பா, அம்மா என்ற அழகு தமிழ் இருக்க டடி, மமி எங்களுக்குத் தேவையில்லை. அங்கிள், ஆன்ரி வேண்டாம். மாமா, மாமி என வண்ணத் தமிழில் கூப்பிடுங்கள். திருநாவுக்கரசர் இறைவனை ‘அப்பன்நீ, அம்மைநீ, அய்யனும்நீ, அன்புடைய மாமனும் மாமியும்நீ’ என்று பாடியிருப்பதை கவனியுங்கள்.
தமிழ்மக்கள் தங்கள் திருக்கோயில் வழிப்பாட்டைச் சொற்றமிழில் செய்ய வேண்டும். கடவுளுக்கு மொழிச் சிக்கல் இல்லை. அவருக்கு எல்லா மொழியும் தெரியும். முக்கியமாகத் தமிழ்மொழி தெரியும். சிவனார் ‘அருச்சனை பாட்டேயாகும் ஆதலால் நம்மை மண்மேல் சொற்றமிழ் பாடுக’ என்று சுந்தரரைப் பணித்ததாக சேக்கிழார் பெரிய புராணத்தில் பாடியிருக்கிறார். சுந்தரர் ‘இறைவன் தமிழை ஒத்தவன்’ என்றும் நாவுக்கரசர் ‘பண்ணின் இன்மொழி கேட்கும் பரமன்’ என்றும் ‘தமிழோடு இசைபாடல் மறந்தறியேன்’ என்றும் சேக்கிழார் ‘ஞாலமளந்த மேன்மை தெய்வத் தமிழ்’ என்றும் இறைவனை தமிழாகவே போற்றியிருக்கிறார்கள்.
வள்ளலார் ‘எந்தையுனைப் பாடி மகிழ்ந்து இன்புறவே வைத்தருளிச் செந்தமிழை வளர்க்கின்றாய்!’ என்றுபாடி “அருச்சனை பாட்டேயாகும்” என்ற சேக்கிழார் முழக்கத்தை மேலும் கூர்மைப்படுத்தி இருக்கிறார்.
அம்மா ..அப்பாவை வாடி..போடா என்று விரைவில் பிள்ளைகள் அழைக்கும் நாகரீகத்தை தமிழ் சினிமா பரப்பி வருகின்றது ..இன்று வரை எந்த தமிழ் வியாபாரியும் இதை எதிர்கவில்லை
இக்கட்டுரைப் பதிப்பை வரவேற்கின்றோம். தமிழ் கற்றோருக்குத் தெரியும் அதன் அருமை. அதை உணர்வால் உணர்ந்தோருக்குத் தெரியும் தமிழின் பெருமை. தமிழை வெறும் ஊருக்காயாக பார்ப்போருக்கு அது புளிக்கத்தான் செய்யும். பின்னதின் அளவிலேயே இன்றைய தமிழ் சினிமா. பின்னர் வருகின்றேன்.
முதல் அகில உலக தமிழ் ஆராய்ச்சி மாநாட்டினை ஏற்ப்பாடு முன்னின்று நடத்திய சேவியர் தனிநாயகம் அடிகளார் அவர்கள் ஒரு பன்மொழி புலவர் எனலாம். அவர் கூறினார் அவர் அறிந்த மொழிகளில் இறைவழிபாட்டிற்கு தமிழ் மொழியை விட சிறந்த வேறு மொழி எதுவும் இல்லை என்று. ஒரு தமிழரை கண்டு ‘வணக்கம்’ என்று கூறினால் பதிலுக்கு ‘good morning ‘ என்று கூறுகின்றனர். தமிழ் இழிவானது அல்ல. நம் நாட்டில் உள்ள இந்தியர்களில், பஞ்சாபியர், சில வட இந்தியர்களை தவிர்த்து தெலுங்கர், மலையாளிகளை உருவத்தை கொண்டு வித்தியாசம் காண முடிவதில்லாத வகையில் அவர்கள் தமிழ் பேச வேண்டும் எண்ணுவது தவறல்லவா. தமிழர்கள் தன்னார்வத்தோடு, தான் ஒரு தமிழன் மற்ற தமிழரோடு தமிழில் உரையாட முயற்சி செய்ய வேண்டும். நாம் மொழியில் பற்று கொள்ளவேண்டும் , மொழி வெறியர்கலாகிவிட கூடாது . நம்மை இறைவன் ஆசீர்வதித்து வழி நடத்துவாராக.
“தமிழில் வழிபாடு செய்யுங்கள்” என்று இந்த கட்டுரையில் குறிப்பிட்டுள்ளது எமது மனதை நெருடியது. தமிழரின் இறைச் சிந்தனைக்கும் ஆரியரின் இறைச் சிந்தனைக்கும் இருக்கும் தூரம் இரு துருவங்களுக்கு உரிய தூரமாகும். அப்படி இருந்தும் ஆரிய வேதங்களை தமிழர் தலையில் நிர்பந்தமாக வைத்து அதனையே ஏற்றுக் கொள்வதானது ஆண்டான் அடிமைக்கு வகுத்த வழியாகும்.
இதற்கு ஒரு சிறிய உதாரணத்தைக் கூறலாம். தமிழரின் சமய அடிப்படை நெறிகளில் ஒன்று கொல்லாமையை வேண்டுவதாகும். ஆரியரின் நெறிகளில் அவர் செய்யும் வேள்விக்கு தடங்கலாக இருக்கும் அசூரர்களை எரிக்கப் பட வேண்டும் என்றும் (யசூர் 4: சாதனம்: 3) துக்கமளிப்பவனுக்குத் துன்பம் அளிக்கவும் வேண்டும் (யசூர் 4: சாதனம்: 5) என்று அவர்தம் தேவர்களை நோக்கி வேத மந்திரங்களை ஒதுவது, தமிழரின் இறை நெறிக்கும் ஆரியரின் இறை நெறிக்கும் உள்ள முரண்பாட்டை விளக்கும்.ஆரியரின் இத்தகைய போங்கு இருக்கு யசூர் முதலிய ஆரிய வேதங்களில் பரவலாக காணலாம்.
இன்று ஆரியர் ஆண்டவரும் இல்லை தமிழர் அடீமையும் இல்லை என்பதை சொல்லியாத் தெரிய வேண்டும் தமிழர்களுக்கு!. அப்புறம் ஏன் ஆரிய பிராமணரின் கருத்துக்கு தமிழர் செவி சாய்க்க வேண்டும்?. (தொடரும்)
ஆரிய வேதம் வேள்வி வழிபாட்டை அடிப்படையாகக் கொண்டது. அது அவர்தம் தேவர்களை நோக்கி வழிபாடு செய்வதர்க்குரியது. தமிழர் கண்ட திருமேனி வழிபாட்டிற்குரிய மந்திரங்கள் அதில் இல்லை. அப்புறம் எப்படி ஆரிய வேதமும் தமிழரின் ஆகமங்களும் சேர்த்து வைக்கப் பட்டன?
தமிழரின் ஆகமங்கள் இறைவனை உணருதளுக்குரிய ஞான வழியையும், அவ்வழியே வீடு பேரின்பம் பெறவும், கோவில் அமைப்பு, சிலைகள் நிறுவுதல், ஆலய வீட்டுக் கிரியைகள் செய்தல் போன்றவற்றை வரைமுறைப் படுத்துபவைகளாக தோன்றின.
திருமேனி வழிபாட்டிற்கு வழிகாட்டாத ஆரிய வேதங்களின் குறைகளை தெற்கே வந்த அப்பிரமனர்களுக்கு நிவர்த்தி செய்ய தேவைப் பட்டது தமிழரின் ஆகமம். அதற்கேற்றவாறு அவர்கள் வேதம் ஆகமும் இரண்டும் இறைவனைக் காட்டும் நெறிகளே என்று ஒத்தூதிப் பாடி வேதாகமம் என்று கூறி தெனிந்தியாவில் தோன்றிய ஆலய வழிபாட்டிற்குள் தங்களையும் நுழைத்துக் கொண்டு அவர்களின் வேள்வி வழிபாட்டையும் நுழைத்துக் கொண்டார்கள். அவர்களின் இத்தகையப் போக்கை அக்னிஹோத்ரம் இரானுஜர் அவர்தம் ‘இந்து மதம் எங்கே போகிறது’ என்ற நூலில் இவ்வாறு குறிப்பிடுகின்றார்:
“பிராமணர்களின் மிகப் பெரிய பலமே, யாரிடம் எது நல்லதாக இருக்கின்றதோ அதை தங்களுக்கு ஸ்வீகாரம் செய்து கொள்வதுதான். ஆங்கிலத்தில் ‘Adoption’ என சொல்லுவோமே …:
ஆரிய வேதத்திர்க்குத்தான் தமிழரின் ஆகமம் துணையாக தேவைப் பட்டதே ஒழிய தமிழரின் ஆகமத்திற்கு ஆரிய வேதத்தின் துணை தேவைப் படவில்லை. தமிழர் இறைச் சிந்தனை தனித்து நின்று தானே இயங்கக் கூடியது. அப்புறம் எதற்கு இந்த ஓட்டுச் சேர்த்தல் என்ற சம்ஸ்கிருத மந்திரங்கள் ஆலய வழிபாட்டில் இன்று வரை நிலை நிறுத்தப் படுகின்றது? (தொடரும்)
இறைவன் வாக்குகளுக்கு அப்பாற்பட்டவன் என்பது தமிழர் நெறி. வேதாந்தத்திர்க்கும் இது உடன்பாடே. ஆகவே இறைவனை வேண்ட இன்ன மொழி என்பது அவசியமில்லை. ஆனால் இறைவனின்பால் பக்தி கொள்ள, அன்பு கொள்ள அடியார் பெருமக்கள் அவரவர் அறிந்த மொழியிலேயே இறை வழிபாடு மேற்கொள்ள வேண்டியது அவசியமாகின்றது. சமய அறிஞர்களின் கருத்தும் இதுவே. தான் எதைச் சொல்லி இறைவனை இறைஞ்சுகின்றோம் என்று அறிய வேண்டியது உணர வேண்டியது அடியார்களின் தேவை. அதனால் தமிழர் தாம் அறிந்த தமிழ் மொழியிலேயே இறை வழிபாடு செய்வதுதான் சாலச் சிறந்தது. நமது திருமுறைகளே பரம்பொருளாம் சிவ பெருமானின் திருமேனி அருச்சனைக்கு உரியவையாம். அவ்வாறே, சைவத்தைச் சார்ந்து நிற்கும் முருகருக்கும் பிள்ளையார் வழிபாட்டிற்கு அத்திருமுறைகளே வேதமாம். பின்னர் எதற்கு ஐயா புரியாத சமஸ்கிருதம் தமிழர் வழிபாட்டில் இன்றும் நிலை நிறுத்தப் பட வேண்டும் என்று அருச்சக பெருமக்கள் கங்கணம் கட்டிக் கொண்டு உடும்புப் பிடியாய் பிடித்து வைத்துக் கொண்டிருக்கின்றீர்? இனி தமிழர் ஆலயங்களில் “இங்கு தமிழிலும் அர்ச்சனை செய்யப் படும்” என்ற விளம்பரப் பலகை கழற்றிப் போட்டு விட்டு திருமுறைகளையே மந்திரமாகச் சொல்லி அருச்சனை செய்யுங்கள். இது மலேசிய அருச்சகர் சங்கத்திற்கு விடுக்கப் பட்ட வேண்டுகோள். வேண்டுதலை மதியாமல் மிதிக்க, இவர்களை ஒரு நாள் தமிழர் மிதிக்க வேண்டி வரும்.
தமிழன் தமிழை உயிர் என நேசிக்க வேண்டும் .அதே சமயம் மற்ற மொழிகளையும் கற்க முயலவேண்டும் .இன்றைய வாழ்வில் பன்மொழி அறிவு நமது சமுதாய முன்னேற்றத்திற்கு இன்றி அமையாதது
ஐயா தேனீ அவர்களே கடவுள் மந்திரத்துக்கு மொழி கிடையாது என்றால் ஏன் தமிழ் நாட்டில் பெட்ரோல் கிடைக்கவில்லை ? மற்ற மாநிலத்தில் உள்ள வளப்பம் ஏன் தமிழ் நாட்டில் இல்லை . அதற்கு என்ன காரணம் என்று விளக்க முடியுமா ?
திராவிடத்தால் மறைக்கப்பட்ட தமிழர்களின் வரலாற்று ஆய்வுகளை மீட்பதையே வீரத்தமிழர் முன்னணி தனது முதற்பணியாக கொண்டு இயங்குகிறது . வரலாற்றால் மறைக்கப்பட்ட இனம் , தானே தனது வரலாற்றை எழுதும் என்பது உலக எதார்த்தங்களில் ஒன்று .
அதன்படி கடந்த 13/8/2015 அன்று வீரத் தமிழர் முன்னணி சார்பாக “மெய்வழிச்சாலை” எனும் ஒரு அதிசிய கிராமத்திற்கு ஆய்வு நிமித்தமாக சென்றோம்.
மெய்வழிச்சாலை என்பது கல்வியறிவு பெற்றவர்களும் பெறாதவர்களும், எல்லா சாதியினரும், எல்லா மதத்தினரும் வேதங்களையும் தமிழில் எளிதாகக் கற்று ஆத்ம ஞானத்தை பெற மெய்வழி சாலை ஆண்டவர்கள் என்பவரால் ஏற்படுத்தப்பட்ட கட்டணம் வசூலிக்காத ஒரு மெய்கல்வி பாேதிக்கும் நிலையம் ஆகும். அதனாலேயே மெய்வழிச்சாலைக்கு மெய்க்கல்விகலா சாலை என்றும் சாகாக் கலைக் கல்விசாலை எனவும் பெயர்களுண்டு. அப்படி ஆத்ம ஞானத்தையும், முக்தியையும் அடைகிறார்கள் என்பதற்கு அடையாளமாக “ஜீவப்பிரயாணம்” அல்லது “பரிசுத்த யதார்த்த நற்சாவு” இங்கு நடந்து கொண்டு வருகிறது. மெய்வழிச்சாலை இந்தியாவில் தமிழகத்தின் புதுக்கோட்டை மாவட்டத்தில், அன்னவாசலுக்கு அருகில் உள்ளது.
இதைத் தொற்றிவைத்த குருபெருமான் மெய்வழி சாலை ஆண்டவா்கள் தமிழகத்தின் ஈரோடு மாவட்டம் காசுக்காரம்பாளைத்தில் கி.பி.1855 ஆம் ஆண்டு சாதாரண ஏழை முஸ்லீம் விவசாய குடும்பத்தில் பிறந்தவா். குடும்பத்தின் சூழ்நிலை காரணமாக பள்ளிப் படிப்பு படிக்க இயலாமல் விவசாயத்தையும் ஆடு மாடு மேய்க்கும் தொழிலாபரணத்தையும் மேற்கொண்டாா். தன் மத பெரியவா் ஒருவா் மனிதனின் பிறப்பின் நோக்கமே அனியாய மரணம் அடைந்து எமனிடம் போகாமல் நியாய மரணம் அடைந்து இறைவன் திருவடி சோ்வதே என்று கூற, அதிலிருந்து இவாின் நோக்கம் பாா்வை எல்லாமே அநியாய மரணத்திலிருந்து தப்பிப்பது எப்படி? என்ற ஏக்கத்தால் ஞான வேட்கை பிறக்கிறது. பிறப்பால் முஸ்லீமாக இருந்தாலும் தன் மத வேதத்தையும் சைவ வைஷ்ணவ வேதங்களையும் இதற்காக அலசி ஆராய்கிறாா். ஆச்சாியமளிக்கும் விதத்தில், எல்லா மதங்களுமே தங்களுடைய பாணியில் இதையே போதிப்பதை அறிகிறாா். இறுதியில் ஒரு மெய்யான குருவை அடைந்து அவாின் கருணையினால் இறைவனை அறிந்து அநியாய மரணத்திலிருந்து தப்பிக்கலாம் என உணா்கிறாா். அதிலிருந்து ஒரு மெய் குருவை தேடுவதை தன் வழக்கமாக்கிக்கொள்கிறாா்.
முகம்மது சாலிஹ் என்ற இயற்பெயர் கொண்ட தணிகைமணிப் பிரான் என்ற பொிய மகானை சந்தித்து தனக்கு ஞானம் அளிக்கும்படியும் அநியாய மரணத்திலிருந்து காப்பாற்றும்படியும் மன்றாடுகிறாா். அவ்வாறே தணிகைமணிப் பிரான் அவர்களும் இவரை சீடராக ஏற்றுக்கொண்டு ஞானத்தை அளிக்கிறாா். இதேபோல் மக்களுக்கும் ஞானம் அளித்து அநியாய மரணத்திலிருந்து காப்பாற்றுமாறு கட்டளையிடுகிறாா். இதுவே மெய்வழி எனும் சமையம் தோன்றுவதற்கான காரணம் ஆகும்.
இங்கு முழுக்க முழுக்க தமிழில் தான் அனைத்தும் நடைப்பெறுகிறது. தமிழை தெய்வ மொழி என்றுப் போற்றும் இவர்களை , தமிழர்கள் மறந்தது ஏன்?
இவர்கள் அனைவரும் ஒரே மாதிரியான கூரை வீடுகளில் தான் வாழ்கிறார்கள் , மின்சாரம் இந்த ஊரில் கிடையாது . இயற்கையின் சூழலில் இவர்கள் ஊர் உள்ளது .. எங்குப்பார்த்தாலும் பச்சை மரங்கள்.
தமிழில் ஆன்மீக தேடல் உள்ளவர்கள் கண்டிப்பாக போக வேண்டிய இடம் “மெய்வழிச்சாலை”.நன்றி பாரி
தேனி கட்டுரையாளர் சொல்லாததை எல்லாம் சொல்லி வருகிறார். கட்டுரையாளர் சொல்லுவது மிகவும் சாதாரண விஷயம். உங்கள் வீட்டில் தமிழ் பேசுங்கள். நண்பர்களிடம் தமிழ் பேசுங்கள். அக்கம் பக்கத்தில் உள்ளவர்களிடம் தமிழ் பேசுங்கள்.தமிழ்ப் பள்ளிகளில் உங்கள் பிள்ளைகளைச் சேருங்கள். இடை நிலைப் பள்ளிகளில் உங்கள் பிள்ளைகளைத் தமிழ் படிக்க ஊக்கிவியுங்கள். கோவில்களில் அர்ச்சனைகள் தமிழில் செய்ய ஊக்கிவியுங்கள். இதையெல்லாம் விட்டுவிட்டு ஆரியம் வாரியம் என்று பேசிக் கொண்டிருக்கிறார்! எப்போதும் வானத்தைச் சுற்றிக் கொண்டிருக்காதீர்கள். மண்ணுலகம் பக்கம் திரும்பி வாருங்கள்!
@abraham terah
நல்ல குட்டு …
யாரவது கிரெம்ளின் பக்கம் போனால் ஒரு புகைப்படம் எடுத்து போடுங்கள்..ரஷ்யாவில் ஏராளம் மலேசிய தமிழ் மாணவர்கள் படிகின்றார்கள் …. நுழைவு கட்டணம் 300 roubles ….கண்ணால் காணுவதே உண்மை ..முன்னர் ஒருதடவை அமெரிகாவில ஒரு வீதிக்கு ஜெயலலிதா பெயர் வைகபட்டதாக செய்தி பரப்ப பட்டது
தமிழரின் ஆலயத்தில் தமிழில் வழிபாடு இல்லை!. ஏன்? சும்மா நம்ப மக்களிடம் கேட்டுப் பாருங்களேன். சமஸ்கிருதம் தேவ பாசை!. அதற்கு தனி ஆற்றல் உள்ளது! அதனால் அம்மொழியில் சொன்னால்தான் கடவுளுக்கு ஏற்றுக் கொள்ளும்! தமிழ் நீஷ பாசை! தமிழ் இறைவனை வணங்க தகுதி இல்லாதது என்று சொல்வது அருச்சகர்களும், அரைகுறை சமய அறிவாளிகளும். அதனால்தான் ஏன் தமிழர் தமிழில் வழிபாடு செய்ய வேண்டும் என்று சொல்வதற்கு அதற்குரிய பின்னணியும் தமிழர்களுக்கு தெளிவிக்க வேண்டியுள்ளது. இப்படி தமிழர் அவர்தம் உண்மை சமய நெறிகளையும், இறைவனை சார்ந்து நிற்க தமிழர் மேற்கொள்ள வேண்டிய முறையான பக்தி நெறியையும் விளக்க வேண்டியது எம் போன்றோரின் கடமையாகின்றது. இவ்வாறு தமிழர் அவர்தம் உண்மைச் சமய நெறியை அறிந்து சிறந்த பக்தி நெறியில் நின்றால் இந்து சமய வியாபாரம் தடுத்து நிறுத்தப் படும். தமிழரிடையே காணப்படும் தவறான பக்தி நெறிகளைக் காட்டி பிறர் தமிழரை மதம் மாற்றுவதை தடுத்து நிறுத்த முடியும். தமிழர் மதம் மாறுவதை தடுத்து நிறுத்த முடியும். இது பகுத்தறிவாளர்கள் என்றுக் கூறிக் கொண்டு நாத்திகம் பேசிவர்களின் வழக்கு அல்ல. இது தமிழரின் சமயம் அறிந்த ஆஸ்திக தமிழரின் விளக்கம். சிந்திக்க வேண்டியவர்கள் இன்னும் மதம் மாறாமல் இருக்கும் தமிழர். விலகி இருக்க வேண்டியவர் மதம் மாறிய தமிழரும், இன்னும் இருப்போரையும் மதம் மாற்ற கங்கணம் கட்டிக் கொண்டு வேலை செய்யும் கோடரிக் கம்புகளும்.
விளங்காத விளக்கெண்ணைகளுக்கு விளக்கம் வேண்டுமானால் சைவ சித்தாந்த வகுப்பிர்க்குச் சென்று கேள்விகளுக்கு வேண்டிய விளக்கங்களைத் தருக்க ரீதியாகப் பெற்றுக் கொள்ளுங்கள். எனக்கும் ஒரு கேள்வி உண்டு. ஏன் அரபு நாடுகளில் தண்ணீர் கிடைக்கவில்லை?. இந்தியாவில் இருக்கும் மாநிலங்களில் வளப்பம் பெற்ற மாநிலமாக தமிழ் நாட்டிற்கு 3-வது இடம். கொஞ்சமாவது உலகச் செய்திகளை படிக்கின்றீர்களா அல்லது குண்டிச் சட்டிக்குள் குதிரை ஒட்டி விட்டு இங்கே வந்து கேள்விக் கேட்கிறீர்களா?
நண்பரே தேனி! நீரும் மதம் மாறியவர் என்பதை எப்போதும் மறந்து விடாதீர்கள்! இப்போது நீங்கள் செய்ய வேண்டியது எல்லாம் நீங்கள் பெற்ற பயனை மற்றவர்களுக்கு எடுத்துரைக்க ஊர் ஊராகச் சென்று, கோவில் கோவிலாகச் சென்று விழிப்புணர்வை ஏற்படுத்துங்கள். செம்பருத்தியில் எழுதிவிட்டு எல்லாம் தானாக மாறிவிடும் என்று நம்பிக் கொண்டிருக்காதீர்கள்! நீங்கள், பொன்.ரங்கன், தமிழர் எழுச்சிப்பறை எல்லாம் ஒரே குட்டையில் ஊறிய மட்டைகளாகவே தோன்றுகிறது. யாருக்கும் பயனில்லை!
கண்டிப்பாக வடுகருக்கு பயனில்லாதவர்களாகவும்
வேஷம்போடும் பச்சோந்திகளுக்கும் நாம் பயனற்றவராகவே இருப்போம் அதில் எந்தமாற்றமுமில்லை ..
கிறிஸ்தவ பெயர்தாங்கிய வடுகர் abraham terah ..
சந்துல சிந்துபாடுவதில் பெரிய கில்லாடி ..
யாம் மதம் மாறவில்லை. இதுவரையில் பின்பற்றி வந்த மதத்தின் கோட்பாடுகளையும், நெறிகளையும் அறியாமல் வெறும் திருமேனி வழிபாடும் கிரியைகள் மட்டுமே எமது சமயம் என்று நம்பி இருந்த காலம் போய், தமிழர் வாழையடி வாழையாக கண்டுணர்ந்த மெய்யறிவையும், அறிவார்ந்த சமய கோட்பாடுகளையும், நெறிகளையும் பிரித்தறிந்தேன். அதுவே தமிழர் சமயம் என்று அறிந்த பிறகு, மெய்யறிவிலும் எம் முன்னோர்கள் எம் இனத்தை கை விட்டு விடவில்லை மாறாக சிறந்ததொரு சமயத்தை எங்களுக்கு விட்டுச் சென்றதை அறிந்து அவர்களுக்குத் தலை வணங்குகின்றேன். இப்படி ஒரு சிறப்பான இனம் வழி தவறி, பிறாரால் மயக்கப்பட்டு மதம் மாறிப் போவதற்கு இடையில் தமிழரிடையே ஏற்படுத்தப்பட்ட மயக்க நிலையைக் கண்டு வருந்துகின்றேன். இந்நிலை தமிழரிடையே மாற வானுலகம் சுற்றிக் கொண்டிருக்காமல், கால் நடையாய் வீதி தோறும் மண்ணுலகில் நடந்து சென்று தமிழர்களிடம் மத மாற்றத்திற்கு எதிரான விழிப்புணர்வை செய்துக் கொண்டிருக்கின்றோம். அதில் கண்ட இரண்டு செய்திகளை இங்கே குறிப்பிடுகின்றேன். (1) கணவனை இழந்த கைம்பெண் 3 குழந்தைகளுடன் ஒரு தோட்டத்தில் வாழ்வதை அறிந்த கிறிஸ்துவ தமிழர்கள் அவர் கிறிஸ்துவத்திற்கு மதம் மாறினால் மாதம் RM300/= வெள்ளிக்கான அத்தியாவசியப் பொருட்களை வாங்கிக் கொடுப்பதாக கூறினார்களாம். தொடர்ந்து 3 மாதங்களாக முயற்சி செய்தும் அப்பெண் மதம் மாறாததால் வருவதை நிறுத்திக் கொண்டார்களாம். (2) ஒரு சுங்க இலாகாவில் வேலை செய்யும் தமிழரின் வீட்டிற்கு முன் வந்து இன்னொரு கிறிஸ்துவ தமிழர் “நாங்கள் சபை கூட்டம் நடத்துகின்றோம் வந்துப் பாருங்கள்” என்று 2 முறை வலுகட்டையமாக வற்புறுத்தியதை கண்டித்து அடுத்த முறை வந்ததால் போலீசில் புகார் செய்வேன் என்று பயமுறுத்தியவுடன் வருவதை நிறுத்தினாராம். இறுதியாக காலை வேளையில் எம் வீட்டு வாசலில் நின்று என் மனைவியிடம் நாங்கள் இனாமாக புத்தகம் கொடுக்கின்றோம் படியுங்கள் என்று நீட்டியவுடன், இது கிறிஸ்துவ மத புத்தகமானால் வேண்டாம் என்று சொல்ல, “உங்களுக்கு ஓம் என்பதின் அர்த்தம் தெரியுமா” என்று கேட்டாராம் அந்த குழுவில் இருந்த ஒரு இளம் பெண்!. இப்படிதான் தமிழர் தொடர்ந்து மதம் மாற்றப் படுகின்றனர். இதற்கு மறு கருத்து எழுதி மேலும் முகத்தில் கரியைப் பூசிக் கொள்ள வேண்டாம். நம் அனைருக்கும் சிவ பெருமான் அருளாசி வழங்குவார்.
பாவம் தனி நாடு இல்லாத இனங்கள் அதன் மொழியின் பெருமை பேசி என்ன பயன்.சிங்களவர்கள தனி கொண்டுள்ளார்கள்.உலகம் மதிக்கும் போற்றும்.உங்களால் ஒன்னும் பு……….. முடியாது.
இன்று நாம் எல்லையற்ற உலகில் வாழ்ந்து வருகின்றோம். அதனால் தமிழருக்கு ஓர் எல்லையை மட்டும் வகுத்துக் கொள்ளாமல் உலகமெங்கும் தமிழர் சிறந்து வாழ சிவ பெருமான் நமக்கு வழி வகுத்து வருகின்றார். அதில் ஒரு சிறு துளிதான் உலகவாழ் தமிழர்களை ஒன்று சேர்த்து வைக்கும் இந்த செம்பருத்தி இணையதளம் வழி நாம் காண்பது. இப்படி தமிழர்களின் முன்னேற்றப் பாதைக்கு இன்று இணையதளம் முதன்மையில் நிற்கின்றது. அப்புறம் எதற்கு தமிழருக்கு தனி நாடு? நம் முன்னோர்கள் வாழ்ந்து காட்டியது போல் உலகமே எங்கள் நாடு என்று வாழ்வோம். வாழ்ந்து காட்டுவோம்.
டேய் samarasinge! அப்பவே உன்னிடம் என்ன சொன்னேன்? போய் பொண்டாட்டி பிள்ளைங்களை கவனி அதுங்க எங்கையோ மேஞ்சிகிட்டு இருக்குங்க…இது தமிழன் விஷயம் சுட்டு போட்டாலும் உனக்கு மண்டையிலே ஏறாது! போ.. போ.. வேலை வெட்டியை பாரு….
தமிழர் எழுச்சிப்பறை உங்கள் அளவுக்கு எனக்குத் தமிழ் புலமை இல்லை. பெரியாரையும் வடுகர் என்கிறீர்கள். என்னையும் வடுகர் என்கிறீர்கள். பெரியார் தாழ்த்தப்பட்ட மக்களுக்காக வாழ்நாள் முழுவதும் போராட்டம் நடத்திய ஒரு போராளி. நானோ சாதாரண கடைநிலைத் தமிழன். என்னை பெரியார் அளவுக்கு உயர்த்துவதை நான் விரும்பவில்லை. உண்மையில் வடுகர் என்றல் என்ன?
மதம் மாறினால்தான் உதவிக் கரம் நீட்டுவோம் என்று வாசலில் வந்து நிற்கும் பச்சோந்திகளை செருப்பால் அடித்து விரட்டுங்கள்!!!
இது நடைமுறைக்கு வந்து 45 ஆண்டுகள் ஆகி விட்டது ஆனால் MIC – MCA துரோகிகள் எல்லாவற்றையும் மூடி மறைத்து கேட்க விதை இல்லாமல் எலும்பு துண்டுக்காக இன்றும் நக்கி கொண்டிருக்கின்றான்கள்
தேனி! நீங்கள் ஒரு தமாஷான பேர்வழி. சைவ சமயத்திலிருந்து தமிழர்களை ஆரியர்கள் இந்துவாக மதம் மாற்றினர் என்று நீங்கள் தான் சொன்னீர்கள். ஆக முதல் மத மாற்றம் என்பது இப்போது நடைபெறவில்லை. தமிழர்கள் இந்த மத மாற்றத்தை எப்போதோ ஏற்றுக்கொண்டு விட்டனர். அதன் பின்னர் தான் பல மத மாற்றங்கள். நீங்கள் சொன்ன இரண்டு சம்பவங்களையும் கொஞ்சம் கூர்ந்து கவனியுங்கள். இரண்டு சம்பவங்களுமே கிறிஸ்துவர்கள் அந்தக் குடும்பங்களை அணுகிய பின்னரே உங்களுக்குத் தெரிய வந்திருக்கிறது. கணவனை இழந்த ஒரு தாய் மூன்று குழந்தைகளுடன் கஷ்டப்படுவது உங்கள் கண்களுக்குத் தெரியவில்லை. அக்கம் பக்கத்தில் உள்ளவர்களுக்குத் தெரியவில்லை. கிறிஸ்துவர்கள் உதவ வருகிறார்கள் என்றதும் அனைவருக்கும் ரோஷம் பொத்துக் கொண்டு வருகிறது! அவர்கள் செத்தாலும் பரவாயில்லை என்று நீங்கள் நினைப்பதால் தானே உங்களுக்கு அந்த அலட்சியம்? இன்னொரு நண்பரை சபைக் கூட்டத்திற்கு வரும்படி வற்புறுத்தினார்கள் என்பது உண்மை தான். அவர்கள் இந்துக்களை மட்டும் தான் என்று இல்லை. என்னைப் போன்ற கிறிஸ்துவர்களையும் தான் கூப்பிடுகிறார்கள். நாங்கள் அவர்களை அலட்ச்யப் படுத்துகின்றோம். சிலர் அவர்களோடு சேர்ந்து விடுகிறார்கள். எங்களிடமும் தான் அவர்கள் இனாமாகப் புத்தகங்களைக் கொடுக்கிறார்கள். நாங்கள் ஏற்றுக் கொள்ளுவதில்லை.நண்பரே! ஒன்றைப் புரிந்து கொள்ளுங்கள். நீங்கள் சொன்ன அனைத்தும் கத்தோலிக்க திருச்சபையோ, மெதடிஸ், அங்கலிக்கன் போன்ற பாரம்பரிய கிறிஸ்துவ திருச்சபைகளோ செய்வதில்லை. எல்லாமே நேற்று முளைத்த, இந்துப் பின்னணியிலிருந்து வந்த சபைகளே செய்கின்றன.இவர்களால் நல்லதும் நடக்கிறது; கெட்டதும் நடக்கிறது. கிறிஸ்துவம் பசித்தவருக்கு உணவு கொடு என்று சொல்லுகிறதே தவிர, வற்புறுத்தி ஒருவனை கிறிஸ்துவனாக மாற்று என்று சொல்லவில்லை. நிச்சயமாக சிற்றெரும்பு சொன்னது போல அவர்களைச் செருப்பால் அடித்து விரட்டலாம். இப்போதும் கூட செத்துப்போன ஒருவனை மதம் மாற்றி போலிசாரின் துணையுடன் ‘அழைத்துச்’ செல்லும் போது செருப்பால் தானே அடித்து விரட்டுகிறோம்? வாழ்த்துக்கள்!
வடுகர் என்றால்என்ன ?
சுருக்கமாக சொல்வதென்றால் பல தேசிய இனங்களை தங்கள் கபட புத்தியால் அடிமைபடுத்துவது ..எத்தனை தலைமுறைகள் ஆனாலும்
அந்த இனமாகவே அவர்களின் மதமாகவே மாறி தலைமை பதவிகள் அனைத்தையும் ஆக்கிரமிப்பவர்கள் வடுகர்கள் ..
வடுக ராமசாமி நாயகர் யாருக்காக உழைத்தார் ?
நீண்டகால திட்டத்தோடு தனது வடுக இனத்தவரை ஆள்விட்டு அழகுபார்த்தார் .. வடுகபாசத்தொடு வடுகர்களின் வளர்ச்சிக்காக அவர் கட்டமைத்ததுதான் திராவிடம் ..
தமிழன் பழையபெருமை பேசிபேசியே கெட்டான் என்று யாராச்சும் சொன்னால் அவன்தான் கோடரிகாம்பு ..
நாம் பேசினால் நாம் சிந்திப்போம் சிந்தித்தால் இளையதலைமுறை இனிமேலாவது அந்த பழைய பெருமை புகழோடுவாழ களம்அமைக்கும் ..நாம் பேசவேண்டும் ..நம் முன்னோர்கள் முதாதையர் எத்தகைய உயர்ந்த வாழ்வு வாழ்ந்தார்கள் என்பதை நாம் மறக்காமால் இருக்க அத்தகைய வாழ்வு வாழ பேசியே ஆகவேண்டும் … தயவுசெய்து செம்பருத்தி தோழர்கள் ஒவ்வொருநாளும் தமிழர் இனத்தின் பெருமைபேசும் செய்தியை பிரசுரிக்கவும் ..
“இந்து மதம்” என்ற சொற்றொடர் பரவலாக புழக்கத்தில் வந்தது ஆங்கிலேயர் இந்தியாவை ஆள ஆரம்பித்த காலத்தில். குறிப்பாக சொல்ல வேண்டுமானால் 19-ம் நூற்றாண்டின் இறுதிக் கால் நூற்றாண்டில். பிராமணர்கள் தமிழர்களை இந்துவாக மாற்றவில்லை. அவர்கள் தமிழர் வாயில் அந்த வார்த்தையை நுழைத்தனர். பிறரைப் போன்று தமிழரும் அந்த “இந்து” என்ற வார்த்தைக்கு என்ன அர்த்தம் என்று புரியாமல் தம்மை இந்துவாக நினைத்துக் கொண்டு வாழ்ந்தனர். இன்றும் அறியாதவர்கள் அவ்வாறே நினைத்துக் கொண்டு வாழ்கின்றானர். இதுதான் பிராமணரின் கெட்டிகாரத்தனம். “இந்து மதம்” என்பது ஒரு மதத்தின் கோட்பாட்டை குறிப்பதில்லை. இந்தியாவில் தோன்றிய பல மதங்களைக் குறிக்கும் ஒரு பொதுப் பெயர். அவ்வாறு இருப்பதில் தமிழர் கண்ட சைவ நெறியும் அடங்கும். நாங்கள் பிறந்தது முதல் இன்று வரை தமிழர் கொண்ட திருமேனி வழிபாட்டைச் செய்து சைவத்தின் சாதனமாகிய திருநீற்றை அணிந்து இறை பக்தியில் இருந்தோம். எங்களுக்கு கிடைக்கப் பெறாமால் போனது தமிழர் சமயத்தின் மெய்கண்ட சாத்திரங்களும், தோத்திரங்களான திருமுறைகளில் கூறப் பட்டிருக்கும் தமிழர் சமயத்தின் கோட்பாடுகளும், நெறிகளுமே. இதை போதிப்பார் அற்று தமிழர் வாழ்ந்ததனால், இடையில் வந்த ஆரிய பிராமணரும் ஆரிய வேதம்தான் தமிழருக்கும் உடையது என்று கூறி எங்கள் தலையில் மிளகாய் அரைத்தனர். அதற்கு உடந்தையாக இருந்தவர் வைதீகச் சைவர்கள். இன்று சித்தாந்தம் பயின்று மெய்கண்ட சாத்திர மற்றும் திருமுறைகளில் தவழ்ந்து வரும் ஆகமப் பொருளையும் அறிந்து புரிந்துக் கொண்டோம். தமிழர் சமய கோட்பாடுகளும், நெறிகளையும் அறிந்த பிறகு ஆரியம் எங்களுக்கு அந்நியமாகப் போனதில் ஆச்சரியம் இல்லையே. எம்மைப் போன்ற தமிழர் மதம் மாறவில்லை. எங்கள் பொன்னான சமயத்தை அறிந்து அச்சமயம் காட்டும் அன்பு (இன்பம்), அறம், பொருள் என்ற முப்பொருளின் உட்பொருளாக இருக்கும் மெய்பொருளை உணர்ந்து வீடுபேறு பெறுவதே இலக்காகக் கொண்டு வாழ்கிறோம். எம்மை போன்ற தமிழர் எம் சமயத்தை அறிந்து தொடருகின்றோம். இன்னும் பலர் அறியாமல் தொடர்ந்து கொண்டிருக்கின்றனர். இதுவே எங்களுக்குள் இருக்கும் வேறுபாடு. மதம் மாறிய பிறர் எப்படியோ? எங்களவர் பலர் சிறு சிறு குழுக்களாக இயங்கி உதவி வேண்டுவோர் பலருக்கு தொண்டு செய்த வண்ணம் இருக்கின்றனர். ஆனால் தொண்டு என்ற பெயரில் மதத்தைப் பரப்ப அல்ல மாறாக உண்மைத் தொண்டாக செய்து வருகின்றனர்.
சார் கடவுளுக்கு அபிஷேகம் செய்வதை முதலில் ஆரம்பித்தவர் யார் என்று சொல்ல முடியுமா ?
எமது பதில் மேலே பெயரில்லாமல் உள்ளது ..
தற்சமயம் வெளியூரில் உள்ளதால் நண்பரின் கணனியிலிருந்து பதிவுசெய்தேன் எனதுகணணி நினைப்பில் சரிபார்க்காமல் அனுப்பிவிட்டேன் ..
சார் யார் முதலில் கோவிலில் மணி அடித்தது என்று சொல்ல முடியுமா? இதெல்லாம் ஒரு கேள்வியா? கடவுள் நம்மை போன்று தூல உடம்பை உடையவர் அல்ல. அதனால் அவர் தினமும் குளிக்க வேண்டிய அவசியம் இல்லை. திருமேனி அபிஷேகம் என்பது என்று ஆகமத்தின் வழி தமிழர் திருமேனி வழிபாட்டைக் கொண்டனரோ அன்றே அபிஷேகமும் ஆரம்பித்தது. இப்ப திருப்தியா?
பத்தாயிரம் போர்க்கப்பல்கள் நின்றிருந்த – காவிரிபூம்பட்டினம் !
“காவிரிப்பூம்பட்டினம்” – கடலுக்கடியில் கண்மூடிக்கிடக்கும் நம் வரலாற்றைத் தேடி ஒரு பயணம் !
கலை, இலக்கியம், வீரம், கொடை, பண்பாடு, நாகரீகம், போன்ற பலவற்றை இந்த உலகிற்கே கற்றுத்தந்த நம் தமிழ் இனம், இன்று தன் வரலாற்றையே மறந்து மேல் நாட்டு மோகத்தில் தான் கடந்து வந்த பாதைகளை திரும்பிப் பார்க்காமல் சென்று கொண்டிருப்பது வேதனைக்குரிய விடயம்!.
ஆனால் வரலாறு என்பது ஒரு வட்டம் தான், ஒரு காலத்தில் இந்த உலகையே ஆண்ட நாம், இன்று உலகிற்கு அடிமையாய் இருக்கிறோம், மீண்டும் இந்த கால சக்கரம் சுழன்று நம் பெருமைகளை இந்த உலகம் பேசும் நாள் வெகு தொலைவில் இல்லை என்ற நம்பிக்கையுடன், நம் சோழ துறைமுக தலை நகருக்கு உங்களை அழைத்துச் செல்கிறேன்.நம் முன்னோர்களின் வரலாற்றை தெரிந்து கொள்ள கடலோடு பயணிப்போம் வாருங்கள் !!
தமிழகத்தில் 99% பெயர்கள் காரணப் பெயரால் அமைந்தவை என்பது அனைவரும் அறிந்த ஒன்று. அந்த வகையில் வந்த பெயர் தான் இந்த “காவிரிப்பூம்பட்டினம்”.
பல ஊர்களின் மக்களை வாழவைத்தது போக மீதமுள்ள தண்ணீரை கூட கடலுக்கு தந்து விடும் காவிரி ஆறு கடலில் சங்கமிக்கும் இடத்தின் அருகில் அமைந்தது தான் இந்த அழகிய நகரம்!!.
காவிரியின் வடக்கு கரையோரம் அமைந்த இந்த நகரின் அழகை கி.மு. ஐந்தாம் நூற்றாண்டில் எழுதப்பட்ட “சிலப்பதிகார” நூல் விவரிக்கிறது. இந்த மூழ்கிய இந்த நகருடன் சேர்த்து இந்தியாவின் சில பகுதிகள், இலங்கை, பர்மா, மாலத்தீவு, வியட்நாம், கம்போடிய, இந்தோனேசியா, வங்காள தேசம், சிங்கப்பூர், மலேசியா, தாய்லாந்து போன்ற பகுதிகளையும் நம் சோழ மன்னன் ஆண்டு வந்தான்!! இந்த துறைமுகத்தில் சுமார் 10,000 போர்க்கப்பல்கள் நிறுத்தப்பட்டிருந்தது !!
இந்த நகரம் அழகான இரண்டு முக்கிய ஊர்களை கொண்டிருந்தது.
ஒன்று கடலோரம் இருந்த “மருவுர்பாக்கம்”
மற்றொன்று இதன் மேற்க்கே அமைந்த “பட்டினப்பாக்கம்”.
இந்த இரண்டு ஊர்களையும் பிரித்த ஒன்று இதன் குறுக்கே அமைந்த ஆக்கிய தோட்டங்கள், இந்த தோட்டத்து மர நிழலில் தான் தினமும் அங்காடிகள் நிறைந்த சந்தை நடைபெற்றது!
இது இன்று உள்ள 24 மணி நேர அங்காடிகளை போன்று பகல், இரவு, முழுவதும் செயல்பட்டுள்ளது!! அப்படி என்றால் எவ்வளவு பெரிய முன்னேறிய நகராமாக இருந்திருக்கும் என்று சற்று எண்ணிப்பாருங்கள்!! பகல் அங்காடியின் பெயர் “நாளங்காடி”, இரவில் நடப்பது “அல்லங்காடி” !!
ஏற்கனவே கூறி இருந்ததை போல கடற்கரை ஓரம் அமைந்த இந்த ஊரில் மாட மாளிகைகள் நிறைந்து காணப்பட்டது! இந்த இடத்தில் கடல் வழி வியாபாரிகள், வெளிநாட்டவர், என பலர் வாழ்ந்துள்ளனர்! இந்த ஊரை சுற்றி மீனவர்கள், தறி நெய்பவர்கள், பட்டு வியாபாரிகள், மீன், கறி வியாபாரிகள், பானை, தானியங்கள், நகை, வைர வியாபாரிகள் நிறைந்து காணப்பட்டனர் !
பட்டினப்பாக்கம்:
இங்கு அரச குடும்பம், அரசுத் துறை உயர் அதிகாரிகள்,பணக்கார வியாபாரிகள், விவசாயிகள், மருத்துவர், சோதிடர், ராணுவம், அரண்மனை நடனக் கலைஞர்கள் போன்றவர்கள் இருந்தனர் !!
இங்கு ஐந்து மன்றங்கள் அமைக்கபட்டிருந்தன
(௧) வெள்ளிடை மன்றம்
(௨) எலாஞ்சி மன்றம்
(௩) நெடுங்கல் மன்றம்
(௪) பூதச்சதுக்கம்
(௫) பாவை மன்றம்
இந்த ஊரை மேலும் அழகுப்படுத்தியத் தோட்டங்கள்
(௧) இளவந்திச்சோலை
(௨) உய்யணம்
(௩) சன்பதிவனம்
(௪) உறவனம்
(௫) காவிரிவனம்
பட்டினப்பாலை என்ற சங்க நூல், இந்த நகரின் அழகை பல இடங்களில் விவரிக்கின்றது. அடுக்கு மாடிகளை அப்போதே கொண்ட இந்த நகரில், ஏணிகள் மற்றும் மரப் படிகளால் மேல் மாடிக்கு சென்றுள்ளனர்!! நகரின் எல்லா இடங்களிலும், பல வடிவங்களில் சோழர் கொடிகள் பரந்த வண்ணம் இருந்துள்ளது !!
இந்த உலகில் எதுவுமே நிரந்தரம் இல்லை என்பதை நிரூபிக்கும் வகையில் “சுனாமி” வடிவில் வந்தது இந்த நகருக்கு அழிவு. சுமார் 1500 வருடங்களுக்கு முன் ஏற்பட்ட ஒரு மிகப்பெரிய ஆழிப்பேரலையால், இந்த நகரை உரு தெரியாமல் அழித்துவிட்டு சென்றது.
மணிமேகலை நூலில் ஒரு இடத்தின் அழிவை இப்படி விவரிக்கின்றது.அதாவது வருடா வருடம் தவறாமல் “இந்திர விழா” கொண்டாடும் சோழ மன்னன், அந்த ஆண்டு கொண்டாடத் தவறியதால் கடவுளின் கோபத்துக்கு ஆளாகி அவனின் நகரை அழித்ததாகக் கூறுகின்றது.
இங்கு கிடைக்கப்பெற்ற சில தொன்மையான பொருட்களை கொண்டு இந்த ஊரில் “சிலப்பதிகார அருங்காட்சியகம்” ஒன்று தொடங்கப்பட்டு, நம் பண்டைய தமிழர்களின் கலாசாரத்தை இன்னமும் பிரதிபலித்துக் கொண்டிருக்கின்றது!
இங்கு ஆராய்சிகள் மேற்கொள்ளப்பட்டால் இன்னுமும் வெளிவராத நம் பெருமைகளும், அரிய தகவல்களும் வெளி வர வாய்ப்புள்ளது!!
தமிழர்கள் அனைவரும் இந்த அருங்காட்சியகத்திற்கு சென்று நம் வரலாற்றை காண வேண்டும். அதே போன்று நமக்கு பின் வருபவர்களுக்கும் நம் வரலாற்றை கற்பிப்பது ஒவ்வொரு தமிழனின் கடமை.
2015 ஆம், ஆண்டின் கணக்குபடி தமிழ் நாட்டில் பிராமணர்கள் 2.75 % -மட்டுமே உள்ளனர், 2001 ஆம் ஆண்டின் கணக்குப்படி தமிழரல்லாதவர்கள் (தெலுங்கு,கன்னடம்,உருது, மலையாளம் மற்றும் வட நாட்டவர் நீங்கலாக) 10.43 % என்றும் புள்ளிவிபரம் இணையத்திலே காணமுடிகின்றது.
” நம் வீட்டில் அன்னியன் புகுந்து கொண்டதோல்லாது அவன் நம் எசமானன் என்றால் நமக்கு இதைவிட மானமற்ற தன்மை – இழிதன்மை – வேறு என்ன ? – சிந்தியுங்கள் !
மூன்று விழுக்காடு ஆரியன் மட்டும் அன்னியர்களா ? பதினோறு விழுக்காடு தமிழரல்லாதவர்கள் அன்னியர்களா?
பெரியாரை திட்டியதாக சொல்லப்படும் தோழர் மணியரசனுக்கு ஆதரவாகவோ அல்லது திராவிடத்தை தூக்கி பிடிக்கும் பேராசிரியர் சு.ப. வீ க்கு எதிராகவோ நாம் இங்கே சிந்திக்கவில்லை.
பெரியார் தமிழ் மொழிக்கு மற்றும் தமிழருக்கு எதிராக பேசியவைகளை இங்கே பதியப்போவதும் இல்லை.ஏனென்றால், எதை சொன்னாலும், அதைமட்டும் தனியாக பிரித்து படிக்ககூடாது, அதற்கு முன்னர் அல்லது பின்னர் சொன்னதை சேர்த்து படிக்கவேண்டும் என்று 110 மொழிக்கே மூல மொழியான தமிழுக்கே புது இலக்கணம் வகுக்கின்றார்கள், அல்லது ஐயா, சு, ப. வீ போல், 94 ஆண்டு தமிழ் நாட்டில் உழைத்த பெரியாருக்கு அன்போடு செல்லமாக கடிந்து கொள்ள உரிமையிருக்கு என்று பெரியாரே யோசித்திருக்காத புதிய கருத்தை திணிக்கும்போதுதான் இல்லாத திராவிடம் ஊசலாடுகின்றது .
எனவே, பகுத்தறிவை மட்டுமே கொண்டு எழுதப்படுகின்றது.
இப்போது, கடவுள் இல்லை என்று சொல்பவர்கள் மட்டுமே பகுத்தறிவாதிகள் என்றும், மற்றவர்கள், குறிப்பாக இந்துக்கள் முட நம்பிக்கையாளர்கள், சூத்திரர்கள், ஆதிக்க சாதிகள், சாதி வெறியர்கள், கீழ் சாதிகள் மற்றும் புதிதாக தலித்துக்கள் என்று பிரித்தாளுகின்ற சூழ்ச்சியின் கோட்ப்பாடுதான் திராவிடம்.
“கடவுள் இல்லை என்று சொல்ல பெரியார் ஒன்றும் கடவுள் இல்லை” – உன்னை சிந்திக்க சொன்னாரே தவிர தன்னை தரிசிக்க சொல்லவில்லை.
கடவுள் இருக்கிறாரா..? இல்லையா என்று சிந்திக்க தூண்டுவதுதான் பகுத்தறிவேயொழிய, கடவுள் இல்லை என்று சொன்னவரை வழிதொடர்வது அடிமைத்தனம்.
பிராமணர்கள் சொன்னதைவிட சூத்திரர்கள் என்ற வார்த்தையை அதிகமாக உபயோகித்தவர்கள்தான் இன்றைய போலி பகுத்தறிவாளிகள் என்று சொன்னால் மிகையாகாது.
ஐயா சு. ப. வீ கூற்றுப்படி,
திராவிடம் தமிழோடு சேர்ந்து நடைபோடவே விரும்புகின்றது?
நன்று. யாதும் ஊரே! யாவரும் கேளிர் என்ற தமிழரின் அறம் சார்ந்து உங்களை அரவணைத்து செல்வதில் தமிழ் தேசியத்திற்கு எந்த ஒரு தடையும் இல்லை. ஆனால், உங்கள் திராவிடம் என்ற முகமூடியை கழற்றி வைத்துவிட்டு சொந்த அடையாளத்தோடு வாருங்கள்.
திராவிடம் அதை சார்ந்த அரசியல்வாதிகள் தமிழ், தமிழர்களுக்காகவே உழைத்தார்கள்?
கடந்த 60 ஆண்டுக்கு மேலாக தமிழ், தமிழர்க்கு செய்த நன்மைகளாவன,
1. மிக பெரும்பான்மையான ஆண்டுகளை தமிழரல்லாதவர்கள்தான் (திராவிடர்கள் ) ஆட்சி செய்து கொண்டு, கொண்டும் இருகின்றீர்கள்.
2. பல்வேறு சாதி சங்கம் மாறும் கட்சிகளை உருவாக்கி தமிழர்களை பிரித்தாளும் நுணுக்கமான அரசியலை முன்னெடுத்து சென்றும் கொண்டியிருக்கின்றீர்கள்.
3.இன்றும் மீனவ பிரச்னைகளிலும், மீத்தேன் பிரச்சனைகளிலும் ஒன்றுபட தடையாய் இருப்பது திராவிட அரசியலின் வளர்சியல்லவா!
4. ஒரு நீண்ட நெடிய கூடங்குள போராட்டகளம் தனித்துவிடப்பட்டு, சொந்த மண்ணிலே அகதியாகும் சுழலை உருவாக்கிகொண்டிருப்பது திராவிட ஆட்சியின் சிறப்பு.
5. கல்வியிலும், வேலை வாய்ப்பிலும் தமிழருக்கு முன்னுரிமை கொடுக்காமல், தமிழரல்லாதவற்கும்- ஒடுக்கப்பட்ட மக்கள், பின்தங்கிய வகுப்பு,பழங்குடி என்று தீண்டமை தீயை பற்றவைத்துள்ளீர்கள் .
6.வேலுநாச்சியார், புலித்தேவன் முதல் கக்கன், காமராசன் வரை உழைத்த நல்லவர்களை சாதியதுக்குள் குறுக்கிய பெருமை திராவிடத்தைதான் சாரும்.
7.முல்லை பெரியாறு பிரச்னை, காவிரிபிரச்சனை, மின்சார பற்றாக்குறை, பாலாறு பிரச்சனை, அந்நிய நாட்டு குளிர்பான நிறுவனங்களினால் ஏற்ப்படும் தண்ணீர் பிரச்சனை, ஏதிலிகளாய் ஈழத்தமிழ் உறவுகளின் இழிநிலைக்கெதிராகவோ இன்னும் எத்தனையோ தமிழர் பிரச்சனைகளை பற்றி சிந்திக்காமல் மதுவால் மரணித்து கொண்டுடிருப்பது திராவிடதால்தானே.
8. பெண்ணுரிமை, தீண்டாமை,வெங்காயம் பற்றியெல்லாம் சிந்தித்தது திராவிடம்தான் என்றால், அண்டை மாநிலங்களில் ஏன் திராவிடம் பரவவில்லை என்ற கேள்வியை எங்களுக்குள் எழுப்பியதும் உங்கள் திராவிடம்தான்.
9. திராவிடர்கள் செய்த நன்மைகளைவிட, தமிழர்களுக்கெதிரான தீமைகள் என்பதற்கு ஆதாரங்களை இங்கே சொல்ல தேவையேயில்லை; ஏனென்றால் இன்றைய தமிழர்களின் நிலைமையே ஆதாரம்.
அ, தமிழர்களுடைய வரலாறு மறைக்கப்பட்டு, திரிக்கப்பட்டு தமிழர்களை தமிழர்களுக்கு எதிராகவே ஏற்ற தாழ்வுகளோடு இருக்க தூண்டியது.
ஆ, தமிழர்களின் மொழி, கலை, பண்பாடு, விளையாட்டு, விவசாயம் போன்றவற்றை சிதைத்ததும் அழித்ததும் திராவிடம்.
இ, தமிழர்களின் மண்ணும், மானமும் வெளிமாநிலத்தாராலும், டாஸ்மாக்களும் விழுங்கபட்டு வருகின்றது.
ஈ, தமிழர்களின் வாழ்வாதாரத்தை அழித்து, இலவசம் என்ற மாயையில் சோம்பேறிகளாக மாற்றியது.
உ, திரைப்படம், ஊடகம்,தொலைக்காட்சித்துறைகளில் தமிழரல்லாதோர் பெருகி தமிழருக்கு எதிராக செயல்படுவதும், இன்றைய, வருங்கால சமுதாயத்தை சீரழித்துவருவதும்.
ஊ, சின்னஞ்சிறு குழந்தை முதல் மூதாட்டி வரை பாலியல் பலாத்காரம் செய்யப்படுவதும், பள்ளி சிறுவர்கள் மதுவுக்கு அடிமையாகி வருவதும், செந்தமிழ்மொழி அந்நிய மொழியோடு கலந்து பேசப்படுகின்ற கேவலமான ஒரு சீர்கெட்ட சமுதாயத்தை கட்டமைத்த பெருமை திராவிடத்தையேச்சாரும்.
எ, தமிழ்நாட்டில் இன்றைய எதிர்கட்சியின் வெற்றியே, திராவிடத்தின் மிகபெரும் வளர்ச்சியாகும்.
திராவிடம் தமிழ் தேசியத்திற்கு எதிரானது அல்ல!
பேராசிரியர் சு.ப வீ அவர்களின் அறிவு திறமைகண்டு பலமுறை வியந்ததுண்டு. அனால்,அவரே திராவிடம் ஒரு கோட்பாடு, தமிழின் மாற்றுச்சொல்; ஆரியனுக்கான எதிர்சொல் என்று ஆரம்பத்தில் சொன்னவர், கடைசியில், தருமபுரி கலவரத்தில் அடித்துகொண்டது திராவிடர்களா? தமிழர்களா என்று கேள்வியை கேட்டு யார், யாரெல்லாம் திராவிடர்கள் என்பதை சிந்திக்கவைத்திருக்கின்றார்.
ஆகா, அடித்துகொண்டது தமிழர்கள்தான்; திராவிடர்கள் அடித்துக்கொள்ளவில்லை என்பதும் உண்மை என்றால்! யார் திராவிடர்கள்…???
மேலும், கேரளாவில் ஐயப்பன் கோவிலுக்கு போனால்மட்டும் அடிக்கிறான் என்ற ஒற்றைகூற்றை மட்டும் எடுத்துக்கொண்டு குதர்க்கமாக பதில் சொல்வதுதான் திராவிட அரசியல் என்பதற்கு ஒரு உதாரணம்.
ஆண் நான்கு வப்பாட்டி வைத்திருந்தால், பெண்ணும் நான்கு கள்ளகாதலன் வைத்து கொள்ளவேண்டும் என்பதும்,
உன் மனைவியை ஒருத்தன் தவாறன நோக்கத்தில் அழைத்தால், அதை என் மனைவியிடம் கேட்டுகொள் என்பதும் பெண்களுக்கான சமஉரிமை என்றால், அது சுத்த அயோக்கியத்தனம்.
பெரியார் தன முதல் மனைவி கோவிலுக்கு போனபோது தன நண்பர்களை வைத்து கேவலமாக கேலிபேசவைத்ததற்கும், பேராசிரியர் சு.ப. வீ பதிலுக்கும் ஒன்றும் வித்தியாசம் இல்லை.
இதுதான் பகுத்தறிவு என்று பேராசிரியரை பேசவைத்ததுதான் திராவிடம்.
தமிழக எல்லைகளில் குப்பையை கொட்டுவது முதல், இந்து கோயில்கள் சார்ந்த தமிழர் நிலபரப்பை ஆக்ரமிப்பு செய்துள்ளதெல்லாம் பேராசிரியருக்கு மறந்து போய்விட்டதா? அல்லது இல்லை என்று மறுக்கப்போகின்றாரா..?
இந்துக்கள் கோயிலுக்கு செல்வது முட நம்பிக்கை என்றும், அங்கு போனால் அடிப்பார்கள் என்று சொல்வதுதான் திராவிட அறம் என்றால் அது எங்களுக்கு தேவையில்லை.
பேராசிரியர் பெருமையுடன் சொல்கின்றார், திராவிடம் என்பது மரம்; அதில் ஒரு கிளைதான் இன்று சொலப்படுகின்ற தமிழ்தேசியம் என்கிறார். உண்மையென்னவென்றால், திராவிடம் என்பது தமிழருக்கு பயன்படாத மரம்தான்; ஆனால் தமிழ்தேசியம் என்பது ஏமாற்றப்பட்ட திராவிடத்தால் முளைத்த விதை.
அயோத்திதாசர் மற்றும் மொழி ஞாயிறு பாவாணர் திராவிடம் என்ற சொல்லை ஏற்றார் என்று ஒரு பேச்சுக்கு வைத்துகொண்டாலும், அவர் காலங்களில் இருந்த தமிழர்களும் நம்பியதால் வந்த விளைவைதான் இன்றும் அனுபவித்துக்கொண்டிருக்கின்றோம்.
கடவுள் இல்லை, கடவுளை கற்பித்தவன் முட்டாள், அதை வணங்குபவன் காட்டுமிராண்டி என்று நீங்கள் கற்பிப்பது, உங்கள் சிந்தனையை மற்றவர்மேல் திணித்து அவர்களை சிந்திக்காமல் செய்வது- இதுதான் காட்டுமிராண்டித்தனம்.
இந்து சமய மக்கள் அதிமாக இருக்கையில் முட பழக்ககங்களும் மற்ற சமயத்தவரைகாட்டிலும் அதிகமாக இருப்பதில் ஆச்சரியம் இல்லை.
ஆக, தமிழர்கள் யார், அவர்களின் வரலாற்றை மீட்டு ஆரியத்தை தோலுரித்திருந்தால் வரவேற்கலாம்; அதைவிட்டு அவன் காவடி தூக்கினால், தீ மிதித்தால் திராவிட கழகமும் எதிர்வினை புரிவது பெரியாரின் கோட்ப்பாடு.
பிள்ளையார் என்ற ஒரு கல்லை தூக்கி போட்டு உடைப்பதில் இல்லை பகுத்தறிவு. முதலில் நாம் யார் என்பதை அறிந்துகொள்வதே பகுத்தறிவின் தொடக்கமாகும்.
நீங்கள் பெருமையாய் சொல்கின்ற சாதிய எதிர்ப்பே திராவிடர்கள் தங்களை காத்துகொள்ளத்தானே தவிர, உண்மையில் தமிழர்களை ஒன்றிணைக்க அல்ல. இதற்கு நீங்களும் சொன்ன கீழ்வெண்மணி முதல் தாமிரபரணி, பரமக்குடி மற்றும் தருமபுரி சம்பவங்களே உதாரணம்.
நம்முடைய நாட்டின் தட்பவெப்ப நிலைக்கு கருப்புநிறம் உகந்ததல்ல; அதனால்தான் நாம் வாகனங்களில், வீடுகளில் மற்றும் உடைகளில் தவிர்கின்றோம். ஆனால் பெரியார் கருப்புச்சட்டை போட்டார் என்பற்காக அதையே பின்பற்றுவது என்ன மாதிரியான பகுத்தறிவு.
பேராசிரியர் சொன்னதுபோல் திராவிடம் உண்மையில் சாதி எதிர்ப்பு, தீண்டாமை எதிப்பு, சமுக நீதியை பேணியிருந்தால், இன்று நமக்கு திராவிட எதிர்ப்பே வந்திருக்காது. பல நூற்றாண்டாய் தமிழனை பிரித்துவந்த சாதிய கட்டமைப்பை வெறும் அறுபது ஆண்டுகளில் மாற்றமுடியாது என்று கதை சொன்னால்; அதையும் நாங்கள் நம்புகின்றோம். இல்லாத திராவிடத்தை விலக்கிக்கொண்டு ஓய்வெடுத்துகொள்ளுங்கள்.
நாங்கள் எங்களை பார்த்து கொள்கின்றோம். எங்களிடம் ஒரு வாஞ்சிநாதன்தான் உள்ளே வந்தான்; ஆனால் ஓராயிரத்திற்கு மேலான திராவிடர்கள் உள்ளே வந்து எங்களை வெளியேற்றிவிட்டார்கள்.
ஆரியத்தில் அன்று வீழ்ந்தோம்; பின்னர் எழுந்துவிட்டோம். அனால் திராவிடத்தில் அன்று மட்டுமல்ல இன்றும் அம்மா காலிலும், ஆதவன்காலிலும், குடிகாரன், மற்றும் குழப்பவாதிகள் காலிலும் விழுந்து கிடக்கின்றோம்.
இன உணர்வும், எழுச்சியும் பெறுவதற்கு, எங்களை நாங்கள் தமிழர் என குறிக்க தமிழ் இருக்கும்போது திராவிடம் என்ற அரசியல்சொல்லோ! மாற்றுச்சொல்லு! கோட்ப்பாடோ தேவையில்லை.
தோழர் மணியரசன்,பெரியாருடைய சிந்தனைகள் தமிழ்நாட்டைவிட்டு வெளியே செல்லவில்லையே; ஏனென்றால் இது உயர்ந்த சிந்தனையல்ல என்ற கருத்தை முன்வைத்தால்,
ஒரு தோழர் எழுதுகிறார், பெரியார் தமிழ்நாட்டில் பிறந்து அவர்களுக்கவே கடைசிவரையில் உழைத்தவர் இந்தமண்ணைவிட்டு வெளியே செல்லவில்லை என்று புலாங்கிதம் அடைகின்றார்.
ஏன் இன்றுவரை பெரியாரின் பகுத்தறிவும், அவர் கொள்கைகளும் தமிழ்நாட்டிலேயே வளர்ச்சியடையவில்லை? எத்தனை விழுக்காடு வளர்ச்சி கண்டுள்ளது என்று நீங்கள் சிந்தித்தால் பகுத்தறிவாளிகள் எனக்கொள்ளலாம்.
தமிழ், தமிழருக்கு ஆதரவாக எதிர்க்காத பெரியாரின் ஆரியஎதிர்ப்பும், தமிழ், தமிழருக்கு எதிராக திராவிடத்தை ஆதரிக்கின்ற கோட்பாடும் ஒன்றுதான்.
அன்று தென்னிந்தியதர்களை ஆரியத்திற்கு எதிரானவர்கள், திராவிடர்கள் என்று அழைத்தீர்கள் நாங்கள் ஏற்றுகொண்டு அடிமையாகி போனோம்; இன்றும் , நாங்கள் தமிழர்கள் மட்டும்தான் திராவிடர்கள் என்றோம், என்று புதுக்கதை சொல்லுகிறீர்கள், மேலும்,திராவிடர்கள் என்று இல்லாத இனத்தை குறிக்கவில்லை.
திராவிடம் என்பது அரசியல்சொல் என்றும் எங்களை குழப்பியதுபோதும். எங்களுக்கு தமிழ், தமிழர் என்று தொன்மையான அழகான அடையாளம் இருக்கின்றது;எங்களை நாங்களே ஆண்டுகொள்கின்றோம். நீங்கள் எங்கள் அடிமையாகவேண்டாம்; விலகிவாழுங்கள் என்கிறோம்.
தமிழ் தேசியத்திற்குள் நிலம்,மொழி, இனம், கலை, பண்பாடு, வழிபாடு,விளையாட்டு,வாழ்வாதாரம் மற்றும் மிக முக்கியமாக வரலாறு மீட்கப்படவேண்டும்; வெளிக்கொணர வேண்டும்.
இதை திராவிடம் செய்ய தவறியதால் தமிழ் தேசியம் பிறக்கின்றது.
மீண்டும் சொல்கின்றோம் தமிழ்தேசியம் திராவிடத்தின் கிளையல்ல.
தொன்மையான தனி வித்து…விதை.
தமிழ்நாடு தமிழருக்குத்தான்.
உலகில் பல நாடுகளிலும் தமிழர்கள் பரவி வாழ்ந்து நாகரிகம், கலை, கட்டடம், அறிவியல் போன்றவற்றை வளர்த்தனர் என்பதற்குப் பலச் சான்றுகளைத் தந்தேன்.
மெக்சிகோவில் உள்ள கோசுமெல் தீவில் மயன் நாகரிகம், கட்டடம் போன்றவை உலக மக்களுக்கு வியப்பூட்டி வருகின்றன. இந்த மயன்கள் சுத்தத் தமிழர்கள். அவர்கள் தான் காலக் கணக்கீடு, நாட்காட்டியெல்லாம் தயாரித்தவர்கள்.
கோசுமெல் தீவில் மயன்கள் கால நாகரீகச் சின்னங்கள் காணப்படுகின்றன. இவர்கள் காலத்து நாகரிகக் கட்டடங்கள் பிரமிடுகள் போல இருக்கும். பலபடிகள் ஏறிச் செல்ல வேண்டும். மேலே ஏறிப்பார்த்தால் நாம் வானத்தில் தொங்குவது போல இருக்கும்.
இப்படியொரு தொழில் நுட்பத்துடன் அக்காலத்திலே எப்படிக் கட்டினார்களோ என்று உலக மக்கள் வியக்கின்றனர். மேலே நின்று பார்க்கும் போது தலைச் சுற்றும்.
உலக மெங்கும் அறிவும், கலையும், நாகரிகமும் வளர்த்தத்தமிழன் இன்று சாராயம், புகை, பான்பராக் என்று அடிமையாகி சீரழிகிறான்! எனவே அன்னிய மோகத்திலிருந்தும், ஆரிய மடமைகளிலிருந்தும் தமிழர்கள் விடுபட்டு, பழம்பெருமைகளை நிலை நாட்ட வேண்டும். இது தமிழர்களால் முடியும்!
டாக்டர் ஃபெல் (Dr.Fell) என்ற அமெரிக்க அறிஞர் தமிழர்கள் மெக்சிகோ வில் குடியேறிவாழ்ந்ததை உறுதி செய்கிறார்.
மெக்சிகோ நாட்டு அருங்காட்சியகப் பாதுகாவலர் ராமன் மேனா என்பவர் மாயன் எழுத்துமுறை தமிழ் மூலத்திலிருந்து வந்தது என்கிறார்.
அமெரிக்க மிக்சிகன் மாகாணப் பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த உய்கோ ஃபோக்ஸ் (Hugo Fox) என்ற பேராசிரியர் சில ஆயிரமாண்டுகளுக்குமுன் தமிழ்மொழி மெக்சிகோவில் பேசப்பட்டது என்கிறார்.
அதே போல் ஆர்சியோ நன்ஸ் என்ற மொழி அறிஞர் தென்னமெரிக்காவில் தமிழ் பேசப்பட்டதை உறுதி செய்கிறார்.
இத்தாலி நாட்டில் தமிழ்
இத்தாலி நாட்டில் உரோமர்களுக்கு முன் வாழ்ந்தவர்கள் தமிழர்கள் என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
கி.மு.3000 ஆண்டளவில் வடக்கு மெசப்பட்டோமியாவின் துருக்கி, ஆர்மேனியன் ஏரிப்பகுதிகளில் வாழ்ந்த தமிழர்கள் சிரியா, பாலஸ்தீனப்பகுதியில் பரவி பின் கி.மு.2000களில் காக்சிகோவின் தெற்குப் பகுதிக்குச் சென்று, பின் கி.மு 900 களில் இத்தாலிக்கு வந்தனர் என்கின்றனர்.
ரஷ்யப்பகுதி
சுமார் 8000 ஆண்டுகளுக்கு முன் அய்ரோப்பாவின் தென்பகுதி, ரஷ்யாவின் காக்கேசியப் பகுதி, வட ஆப்பிரிக்காவின் கடலோரப் பகுதிகளில் பேசப்பட்ட மொழி தமிழ் என்கின்றனர் ஆய்வாளர்கள்.
மஞ்சை வசந்தன்
அன்பரே!! ஒருவருக்கு உதவி செய்வதென்பது எந்நோக்கமும் கொண்டிருத்தல் ஆகாது!! பசி என்று வருவோருக்கு புசிக்க கொடுப்பதே மனிதாபிமானம்!! மக்களின் ஏழ்மை சூழ்நிலையை தமக்கு சாதகமாக பயன் படுத்தி மதம் மாறினால்தான் உதவி கிடைக்குமென்பது மனிதாபிமானமல்ல!! மானங் கெட்ட செயலே!!! அப்படி செய்வோரை பரம பிதா இயேசுவே கூட மன்னிக்க மாட்டார்!!! மதம் பாராது உதவுவோரே மனிதனில் மாணிக்கம்!!! இது எம்மதத்துக்கும் பொருந்தும் அன்பரே!! சிந்திப்போம் செயல் படுவோம்!!!
தமிழனுக்கு தனி நாடு உண்டா? இந்தியாவின் தமிழ் நாடு மாநிலம் தான். அது தமிழ் நாடு இல்லை.முதலில் தமிழனுக்கு என்று தனி நாடு இருந்தால் மட்டுமே மொழி நிலைதிற்கும்.தமிழ் மாநாடு நடத்தினால் மட்டும் மொழி நிலை பெறாது.
9.8.2015 ஞாயிறு நன்பனில் ஒரு சிறப்பு செய்தி வந்திருந்தது. அதனில் படிப்பறிவு குறைந்த ஒரு தமிழ் குடும்பத்தினர் (அவர்களின் சமயத்தை நான் குறிப்பிடவில்லை) அறியாமை காரணத்தினால் பிள்ளைகளுக்கு பிறப்பு பத்திரம், அடையாள அட்டை,பள்ளிப்படிப்பு போன்றவைகளில் அலட்சியமாக இருந்து அவைகளை பெறாமல் இருந்துவிட்டனர். இதனை அறிந்த ஒரு கிறித்தவர் அவைகளுக்கு வேண்டிய செயலில் இறங்கினார். விஷேசம் என்னவென்றால் அந்த கிறித்தவர் மற்ற சமயத்தை சார்ந்த அரசாங்க அதிகாரிகளின் உதவியால் நடவடிக்கை எடுத்துள்ளார்.இங்கே மதமாற்றம் என்பதற்கு எவ்வித செயலும் இல்லையென்று கட்டுரையாளரே கூறியுள்ளார். அதன் பிறகு நல்லுள்ளம் கொண்ட பல சமய குறிப்பாக ஹிந்து சமய நண்பர்கள் ஒன்று சேர்ந்து அந்த குடும்பத்திற்கு உதவிக்கரம் கொண்டு அந்த.குடும்பத்தை ஒரு நல் வழிக்கு கொண்டு செல்கின்றனர். இங்கே சமயம் (மதம்) பார்த்து செயல்பட்டால் அல்லல் படுவது அந்த பாதிக்கப்பட்ட குடும்பமே. குண்டு சட்டிக்குள் குதிரை ஒட்டாமல் பறந்து சிந்தித்து ஒற்றுமைக்கு வழி கண்டு செயல்படுவோம்.நலம் காண்போம். இறைவன் நம்மை ஆசீர்வதித்து வழி நடத்துவாராக.
தமிழனுக்கு தனி நாடு உண்டா என்று கேட்பவன் தமிழனா?. அட எங்களுக்கு தனி நாடு இருக்கா இல்லையா என்பதில் இவ்வளவு அக்கறை காண்போர் அவரவருக்கென்ன தனி நாடா வைத்திருக்கின்றீர்?. சுவர் இல்லாமல் சித்திரம் வரைய முடியாது. இப்பொழுதுதான் தமிழர் தேசியம் பிறந்திருக்கின்றது. அடுத்து தமிழர் நாடும் பிறக்கும்.
செழியன் அறிவாயுதம் ஏந்தி உலகத்தமிழர்கள் போர்செய்தால் தமிழர்களுக்கான நாட்டை நிச்சயம் உருவாக்கலாம் ..
தமிழர் எழுச்சிப்பறையின் 22-8-2015 திகதி பதிவிட்ட கருத்தை வரவேற்கின்றேன். தமிழர்களுக்கு அனைத்திலும் தேவைப்படுவது அறிவாயுதம்தான். வாளைவிட கூர்மையானது.
தமிழன் வித்து. அதிலிருந்து முளைத்த கிளை திராவிடம். அந்த கிளைகளில் சீக்குப் பிடித்து சீல் வடிவதால் இன்று தமிழர் தேசியத்தைக் கொண்டு அந்த சீக்குப் பிடித்த கிளைகளை கபாத்து (வெட்ட) செய்ய வேண்டிய கட்டாயத்திற்குள் வந்து விட்டோம். இல்லையேல் தமிழன் என்ற மரமே சாய்ந்து விடும்.
மேலும் சில உண்மைகள் தமிழர் எழுச்சிப்பறை அவர்களே,மாயன்; ராவணனின் மாமனார்,ஒரு கட்டிட கலை வல்லுநர்,இவர்வழி தோன்றியவர்கள் மாயங்கள்.3000 ஆண்டுகளுக்கு முன்பு திருமூலர் மாயன்களுக்கு பல வாழ்வியல் தத்துவங்களை அருளியதை அவர்கள் கல்வெட்டுகளில் காணலாம்.உலகிற்கே வாழ கற்றுகொடுத்த 18 சித்தர்களும் தமிழர்கள்.
தேனீ ,சித்தன் நல்லது தோழர்கள்.நன்றி ..
தாங்களும் தங்களுக்கு தெரிந்த தமிழர் வரலாற்று செய்திகளை பகிருங்கள் .. பெரும்பாலான தமிழ் பத்திரிகைகள் சினிமா /ஜோசியம் /ராசிபலன் / யோசியகாரர்களின் ஏமாத்து வேலைக்கும் ஆதரவாக பிரசுரிகிறார்கள் .. இல்லன்னா இந்து புராண புளுகுகளை தொடராக எபிசொட் போட்டு எழுதுகிறார்கள் ..
ஏன் நமக்கு அடுத்தவன் புராணம் .. முல்லைக்குதேர் கொடுத்த பாரி /மனுநீதிசோழன் /வள்ளலார் /ஒவ்வை பாட்டி இப்படி எத்தனையோ நம் முன்னோர்களின் வாழ்க்கை வரலாற்றை எழுதலாம் ..
வானொலியில் இப்பெல்லாம் தமிழர் சார்பான செய்திகள் அண்மைகாலமாக கேட்கக்கூடியதாக இருக்கிறது .. வாழ்த்துக்கள் ..
உலகில் தோன்றிய சமயங்களெல்லாம் மக்களிடம் தோன்றும் குறைகளைக் களைந்து , வாழ்க்கை முறைகளை நெறிப் படுத்தும் நோக்கங் கொண்டவை ,இவற்றில் மிகவும் தொன்மை வாய்த்த சமயமாகக் கருதப்படுவது சைவசமயம் ஒரு காலத்தில் சைவசமயமும் அதன் வழி சிவா வழிபாடும் இந்திய நாடு முழுவதும் பரவி இருந்தன என்பதற்குச் சான்றுகள் பல உள்ளன. சைவ சமயம் வளர்ந்தோங்கி இருந்தகாலம் பன்னிரு திருமுறை ஆசிரியர்கள் காலமாகிய கி .பி .5ஆம் நூற்றாண்டு முதல் கி .பி , 12ஆம் நூற்றண்டு வரை என்பது திருமுறை ஆராய்சிக் கலைஞ்ர் பேராசிரியர் கலைமாமணி புலவர் திரு க வெள்ளவாரணனர் அவர்கள் கருத்தாகும், அப்போது நாட்டில் பக்தி வெள்ளம் பெருக்கொடுத்து,எழுதுமறைகள் பல தோன்றின .சிவத் தொண்டர்கள் பலர் தோன்றி சிவத்தலங்களுக்குச சென்று திருக்கோயில்களில் எழுந்தருளிருக்கும் இறைவனை இனிய,எளிய தமிழ்ச் சொற்களால் பாடி வழிப்பட்டனர். திருநீற்றீன் பெருமையையும் திருவைந்தெழுத்தின் வல்லமையும் வலியுறுத்தி மக்களை சைவசமயத்தில் ஈடுப்படச் செய்து இறையருள் பெறச் செய்தனர் ,அவர்கள் இயற்றிய தெய்வ மணங்கமழும் அப்பாடல்கள் பன்னிரு திருமுறைகளாக வகுக்கப்பட்டன .இவை சமய நூல் கள் மட்டும்மல்லாமல் இலக்கியச் செறிவும் ,வரலாற்று உண்மைகளும் .இசை நுணுக்கங்களும் ,நிறைந்தவைகளாகத் திகழகின்றன . அன்பு நெறியில் வாழ்ந்து ,சிவத் தொண்டில் உறுதியாக நின்று ,சிவபரம்பொருளுக்கே தம்மை முழுவதுமாக ஈடுபடுத்திக்கொண்ட சிவனடியார்களின் வரலாறுகளை தெய்வ நலஞ்சான்ற சேக்கிழார் நாயனார் பன்னிரண்டாம் திருமுறையாகிய திருத்தொண்டர் புராணமெனும் பெரிய புராணத்தில் விளக்குகிறார் .அப்பெரும்புராணம் 5286 செய்யுட்களைக கொண்டது.இவற்றில் நமது நாயன்மார்கள் நால்வரில் ,முதல் முன்று திருமுறைகளை அருளிச்செய்த திருன்ஞான சம்பந்தமூர்த்தி நாயனார் புராணத்தை 1256 செய்யுட்களால் பாடிப் பரவுகிறார் சேக்கிழார் நாயனார் . கற்றோரும் மற்றோருமாகிய யாவருக்கும் எளிதே பயன்ப்பாடும் பொருட்டு ,இப்பெரிய புராணத்தை ,அழகிய உரைநடையில் யாழ்ப்பாணம் நல்லூர் ஆறுமுக நாவலர் சைவப்பிரகாச வித்தியாசாலை அறக்கட்டளை யால் தனி நூலாக பதிப்பிக்கப்பட்டு வெளியடப்படுகிறது சைவப்பெருமக்கள் தேவாரம் பாடிய திரு ஞான சம்பந்தமூர் த்தி நாயனாருடைய அருள் வரலாற்றைப படித்துப் பயன் பெற வேண்டும் .பெரிய புராண மூல நூலைப படிதின்புறுவதர்க்கும்,இறையருளைப் பெறுவதற்கும் இந்நூல் தூண்டு கோலாக அமையவேண்டுமென்பதுஅறக்கட்டளையின் நோக்கங்கள் .அவை நிறை வேறும்என்பதில் ஐயமில்லை . சைவப்பிரகாச வித்தியாசாலை அறக்கட்டளை
உலக அதிசயப்படியலில் இடம்பெறாத தமிழர்களின் கட்டிடக்கலை மற்றும் பொறியியல் அதிசயமான ” இசைத் தூண்கள் ” !!.————-http://dravida-nadu.blogspot.com/2012/04/blog-post_36.htmlஎது உண்மையான உலக அதிசயம் http://dravida-nadu.blogspot.com/2012/04/blog-post_3460.html
ஒவ்வொரு தூணிலும் தனித்தனி இசையை எழுப்பும் தனித்துவம் வாய்ந்த சிற்ப கலை நுட்பத்தை அறிந்து வைத்திருந்தவர் தமிழர். என்பது இன்றும் நிலைத்து நிற்கும் தமிழர் வரலாறு. தமிழரின் பெருமையையும் பேசுவோம். தமிழர் பொருளாதாரத்தில், கல்வியில், மெய்ஞானத்தில் சிறந்து விளங்க செம்பருத்தி இணையதளம் நமக்கு பெரும் பங்களிப்பதர்க்காக நன்றி நவில்கிறோம்.
இவ்வளவு நாள் நேரிடையாகவே தமிழரின் சமயம் தனித்துவம் வாய்ந்தது என்பதனை செம்பருத்தி வாசகர்களிடம் பகிர்ந்துகொண்டிருந்தேன். இன்று லோசணிகா வடிவில் நண்பர் ஒருவர் கிடைத்திருகின்றார் என்பதை அறிந்து மகிழ்வடைகின்றேன். முடிந்தால் இந்த புனைப்பெயரை மாற்றி தமிழ் வடிவில் ஒரு நல்ல பெயரை பயன்படுத்தினால் நலமாகும்.
மதுரை மீனாச்சி அம்மன் கோயில் ஆயிரங்கால் மண்டபத்தின் தூணை
தட்டினால் வீணையைப்போல் இசை ஒலி கெட்கும்.பல ஆண்டுகளுக்கு
முன்என் மைத்துனர் தட்டச் சோன்னார்!.
மிகவும் சிறந்த தகவல்கள் ..
பாப்பாவுக்கு பஜன் பாட செல்லும் தமிழன் எப்பதான் உணர்வானோ …
தமிழ் நாளிதழ் ஒன்றில் சைவ சமய வழிபாடு சம்பந்தமாக நா .தர்மலிங்கம் எழுதுகிறார் ..இந்துமதம் என்று பஜன் பாடும் தமிழர்களுக்கு சைவ சமய சிறப்பை எடுத்துகூற நாடுபுறாகவும் பணியாற்றவேண்டும் .. சிறு கையேடுகளாக தமிழ் ,ஆங்கிலத்திலும் அச்சடித்து ஆலயங்கள் தமிழர் கூடும் இடங்களில் கொடுக்கவேண்டும் …
மலேசிய வாழ் தமிழர்களுக்கு தமிழரின் சமயத்தை எடுத்துரைக்கப் பிறந்தவர்களில் முனைவர் நாகப்பன் ஆறுமுகம் அவர்களும் ஐயா நா. தர்மலிங்கம் அவர்களும் தற்சமயம் நாடெங்கும் சிறந்த சிவப்பணி செய்து வருகின்றார்கள். சைவத்தில் தங்களை சிவ ஆச்சாரியார் என்ற பெருமையுடன் சிலர் சிவ நெறியில் நிற்கின்றனர் மற்றும் சிலர் தங்களை சிவாச்சாரியார் என்று சொல்லிக்கொண்டு அதற்கு சம்பந்தம் இல்லாத நெறிகளில் நின்று கொண்டு சமயப் பணியாற்றுகின்றார்கள். நாம் பொருளாதாரத்திலும் கல்வியிலும் முன்னேற வேட்கை கொண்டு முழுமூச்சாக செயல் பட்டுக் கொண்டிருக்கின்றோம். நமக்கு தற்சமயம் குறையாக இருப்பது தமிழர் அவர்தம் சமயம் அறிந்து ஒரு நெறியில் நிற்பதற்கு வழிகாட்ட போதுமான சமய ஆசிரியர்கள் தேவைப்படுகின்றார்கள். அதை முன்னிட்டு மலேசிய சைவ சமய பேரவை இந்நாட்டில் பல இடங்களில் சைவ சித்தாந்த வகுப்புக்களை, சித்தாந்தத்தில் பயிற்சி பெற்ற, தகுந்த ஆசிரியர்களைக் கொண்டு நடத்தி வருகின்றனர். சைவ சமய பேரவையின் மூலமாக “சிவனருள்” மாதந்திர சமய பத்திரிக்கையும் வெளியிட்டு வருகின்றனர். இப்பத்திரிகை RM2/= வெள்ளி வீதம் விற்கப் படுகின்றது. இதனைப் பெற விரும்புவோர் முனைவர் நாகப்பன் ஆறுமுகம் அவர்களை தொ.பே எண்: 016 9691090 வழி தொடபு கொள்ளலாம். இப்பத்திரிக்கை சைவ சமய மன்றங்களின் வழியாகவே நாடெங்கும் விற்கப் படுகின்றது. இதை தவிர்த்து மலேசிய சைவ சமய பேரவையும் நாடெங்கும் சைவ சமய மன்றங்களை நிறுவி வருகின்றது. இம்மன்றங்களை நிறுவுவதற்கு முதல் கட்டளையாக குறைந்த பட்சம் 30 மாணவர்கள் கொண்ட சித்தாந்த வகுப்பு நடத்த ஏற்பாட்டாளர்கள் செய்வீர்களானால் அம்மாணவர்களைக் கொண்டு சைவ மன்றம் அமைத்து தர அனைத்து ஆவணங்களையும் உதவிகளையும் செய்து தரும். இதற்கும் முனைவர் அவர்களைத் தொடர்பு கொண்டால் தக்காரின் வழி தங்களுக்கு உதவி செய்ய அந்தந்த மாநில ஒருங்கிணைப்பாளர்கள் வழி ஆவண செய்யப் படும். மேன்மைகொள் சைவ நீதி விளங்குக உலகமெல்லாம்.
எமது சைவப் பணி குறித்து தேனீ வழங்கிய குறிப்புகளுக்கு நன்றி. தமிழ் குறித்தும் தமிழர் சமயம் குறித்தும் நீங்கள் நிகழ்த்திய உரையாடல்கள் என் முதுமைக்கு மருந்தாய் அமைந்தன. நாற்பது ஆண்டு கால களைப்பு சற்று நீங்கியதாய் உணர்கிறேன். தமிழன் தன்னை இழந்து முப்பது நூற்றாண்டுகள் ஆகிவிட்டன. மீட்கும் போராட்டம் அத்துணை எளிதல்ல. என்றாலும் இன்று தொடங்கினால் நமது தமிழ்ப் பேரப் பேர்த்தியர் தொடர்வர். திருவருள் துணை உண்டு.