உலகின் தொன்மையான ஆறு செம்மொழிகளில் தமிழும் ஒன்று. ஏனையவை இலத்தீன், சீனம், கிரேக்கம், ஹீப்புரூ மற்றும் சமற்கிருதம் ஆகும். தமிழின் சிறப்பினை, அதன் இலக்கிய வளத்தை, உலக அறிஞர்கள் போற்றிப் பேசுகின்றனர். ஆனால் தமிழர்களுக்குத் தமிழ்மொழியின் அருமை பெருமை, சீர் சிறப்புத் தெரியாது இருக்கிறது.
தமிழுக்குத் தொடர்பே இல்லாத உருசிய நாடு தமிழைக் கொண்டாடுகிறது. அங்கிருக்கும் அதிபர் மாளிகையான கிரெம்ளின் மாளிகையின் பெயரை அவர்கள் அழகு தமிழில் எழுதியுள்ளார்கள். முதலாவதாக அவர்கள் தாய்மொழியான உருசியத்திலும் இரண்டாவதாக அண்டைநாட்டு மொழியான சீனத்திலும் மூன்றாவதாக உலகத் தொடர்புமொழி என்ற நோக்கில் ஆங்கிலத்திலும் நான்காவதாக தமிழிலும் எழுதியிருக்கிறார்கள்.
தமிழைவிட எத்தனையோ உலகமொழிகள் பெரும்பாலான மக்களால் பேசப் படுகின்றன. ஆனால் அவற்றையெல்லாம் விட்டுவிட்டு தமிழ்மொழியில் அதிபர் மாளிகையின் பெயரை எழுதியதற்கு உருசியர்கள் கூறும் காரணத்தை தமிழர்கள் சிந்தித்துப் பார்க்க வேண்டும்.
“உலகில் ஆறு மொழிகள்தான் மிகவும் தொன்மையானவை. அவை கிரேக்கம், லத்தீன், எபிரேயம், சீனம், தமிழ், சமற்கிருதம். இந்த ஆறு மொழிகளில் இரண்டு மொழிகள் இன்று வழக்கில் இல்லை. உலகில் உள்ள முக்கிய மொழிகளான 642 மொழிகளிலும் சரியான, தகுதியான மொழியாக “தமிழ் மொழி” தென்பட்டது. அந்த மொழியைச் சிறப்பிக்கவே “கிரெம்ளின் மாளிகை” என தமிழில் எழுதினோம்” என்று உருசியர்கள் கூறுகிறார்கள்.
வெளிநாட்டினருக்குத் தமிழின் அருமை பெருமை தெரிந்திருக்கிறது. தமிழர்களுக்குத்தான் தெரியவில்லை. தமிழில் எழுதுங்கள், தமிழில் பேசுங்கள், தமிழில் வழிபாடு செய்யுங்கள்,தமிழ்ப் படைப்பாளிகள் கழகம் தமிழ்மொழி வளர்ச்சி, தமிழ்க் கலை பண்பாடு ஆகியவற்றின் மேம்பாட்டைக் குறிக்கோளாகக் கொண்டு இயங்கி வருகிறது. தமிழ் எங்கள் உயிர்! தமிழ்க் கலை எங்கள் மூச்சு! தமிழ்ப் பண்பாடு எங்கள் வாழ்வு! திருக்குறள் எங்கள் வழிகாட்டி! என்பன அதன் முழக்கமாகும்.
இந்தக் குறிக்கோள்களை அடைய வேண்டும் என்றால் தமிழ்மொழி எமது வீட்டு மொழியாக இருக்க வேண்டும். வீட்டில் தமிழைத் தவிர வேறுமொழியில் பேசுவதில்லை என நாம் உறுதி எடுத்துக் கொள்ள வேண்டும். இந்தியாவின் புகழ்பெற்ற நேரு குடும்பம் வீட்டில் இந்தியில் மட்டும் உரையாடியது. திருமணங்கள் திருக்குறள் ஓதி செந்தமிழில் நடைபெற வேண்டும். திருக்கோயில் வழிபாடு வண்டமிழில் இருக்க வேண்டும்.
உங்கள் உறவுகளை தமிழில் அழையுங்கள். அப்பா, அம்மா என்ற அழகு தமிழ் இருக்க டடி, மமி எங்களுக்குத் தேவையில்லை. அங்கிள், ஆன்ரி வேண்டாம். மாமா, மாமி என வண்ணத் தமிழில் கூப்பிடுங்கள். திருநாவுக்கரசர் இறைவனை ‘அப்பன்நீ, அம்மைநீ, அய்யனும்நீ, அன்புடைய மாமனும் மாமியும்நீ’ என்று பாடியிருப்பதை கவனியுங்கள்.
தமிழ்மக்கள் தங்கள் திருக்கோயில் வழிப்பாட்டைச் சொற்றமிழில் செய்ய வேண்டும். கடவுளுக்கு மொழிச் சிக்கல் இல்லை. அவருக்கு எல்லா மொழியும் தெரியும். முக்கியமாகத் தமிழ்மொழி தெரியும். சிவனார் ‘அருச்சனை பாட்டேயாகும் ஆதலால் நம்மை மண்மேல் சொற்றமிழ் பாடுக’ என்று சுந்தரரைப் பணித்ததாக சேக்கிழார் பெரிய புராணத்தில் பாடியிருக்கிறார். சுந்தரர் ‘இறைவன் தமிழை ஒத்தவன்’ என்றும் நாவுக்கரசர் ‘பண்ணின் இன்மொழி கேட்கும் பரமன்’ என்றும் ‘தமிழோடு இசைபாடல் மறந்தறியேன்’ என்றும் சேக்கிழார் ‘ஞாலமளந்த மேன்மை தெய்வத் தமிழ்’ என்றும் இறைவனை தமிழாகவே போற்றியிருக்கிறார்கள்.
வள்ளலார் ‘எந்தையுனைப் பாடி மகிழ்ந்து இன்புறவே வைத்தருளிச் செந்தமிழை வளர்க்கின்றாய்!’ என்றுபாடி “அருச்சனை பாட்டேயாகும்” என்ற சேக்கிழார் முழக்கத்தை மேலும் கூர்மைப்படுத்தி இருக்கிறார்.
இங்கே பல நல்ல உள்ளம்களின் கருத்துக்களை கண்டேன்.
நான் பல காலங்களாக சொல்லி வரும் தமிழர்களின் சைவ சிந்தனைகளை படிப்பதில் மகிழ்ச்சியாக உள்ளது. குறிப்பாக தமிழா தேனீ ஐயா அரு நாகப்பனார் போன்றோரின் படைப்புக்கள் மெய் சிலிர்க்க வைத்தன !
என் சமீப ஆய்வில் தமிழர்களின் சமய நெறியில் ஆசிவகம் என்ற கண்டுபிடிப்பை கண்ணுற்றேன். தமிழர்களின் தமிழ்ச்சமயம் மருவி இந்துக்கள ஆனதின் அதிசயம் அநியாயத்தை கண்டேன். தமிழர்கள் தன்னை சைவ தமிழ்ச்சமய நிலை மாறி மருவி இந்துக்களாக மயங்கி உள்ளனர். எப்படி மீண்டும் தமிழ்ச்சமய அல்லது சைவ சித்தாந்த குழுமத்தில் இணைப்பது ? யாராகிலும் வழி பகிருங்கள் தமிழர்களே?
எப்பொழுது மதத்தை பற்றி தமிழன் வாதிடுகிறானோ அன்றே அது அவனை பிரித்து விடுகிறது .அவன் முன்னேற்றத்தை தடுக்கிறது .
முனைவர் அவர்களுக்கு நன்றி. தாங்கள் இவ்விடத்திற்கு வருவீர்கள் என்று யாம் எதிர்பார்க்கவில்லை. ஏறக்குறைய 15 ஆண்டுகள் முறையாக பதிவு பெற்ற இரு ஆலயங்களில் நிருவாகத்துறையில் ஐவர் குழுவில் பங்காற்றிய அனுபவம் உண்டு. இந்த அனுபவம் ஆலயக் கிரியைகளிலும், வீட்டுக் கிரியைகளிலும் ஓரளவுக்கு பயிர்ச்சியையும் நமது வழிபாட்டு முறைமைகளையும் கற்றுக் கொள்ள வழி வகுத்தது. ஓர் ஆலயத் திருவிழாவை முன்னின்று நடத்தக் கூடிய அனுபவத்தையும் கொடுத்தது. யாம் செய்த முன்தவப் பயனோ என்னவோ எனக்குத் தெரியாது. சமயம் என்பது மனம்போன போக்கில் மேற்கொள்ளப் படும் வெறும் நம்பிக்கையைச் சார்ந்த வழிபாடும் கிரியைகள் மட்டுமே என்று இருந்த எம்மை போன்றோருக்கு திரென்று ஒரு நாள் உறவினர் வழி அலைபேசி அழைப்பு வந்தது. முனைவர் நாகப்பன் என்பார் சமயத்தைப் பற்றி பேச வருகின்றார் வாருங்கள். இதுவும் பத்தில் பதினொன்றாக இருக்கும் சமய சொற்பொழிவு என்றுதான் எண்ணிப் போனேன். அவர் தமிழர் சமயம் என்பது வெறும் வழிபாடு மட்டுமல்ல, கிறிஸ்துவ, இஸ்லாமியர் போன்று நமக்கும் திருமறைகள் உண்டு. அதன்வழி அருளாளர்கள் உணர்த்திய இறைக் கோட்பாடும், இறைவனை அறியும் நெறியும், அதற்குரிய சரியை, கிரியை, யோகம், ஞானம் என்ற நான்கு படிமுறைகளைக் கொண்ட சாதனங்களும், இந்த சாதனங்களைப் பின்பற்றுவதற்கு வேண்டிய அறவாழ்வுமே (நல்லொழுக்கத்துடன் கூடிய வாழ்க்கை நெறி) தமிழர் சமய நெறிகள் என்று அறிவுறுத்தினார். இறைவனுக்கும் ஆன்மாக்களுக்கும் உள்ள தொடர்பையும், இறைவன் ஏன் ஆன்மாக்கள் மீது கருணைக் கொண்டு உடலையும், கருவிக் கரணங்களையும், உலகங்களையும், அதனுள் போகங்களையும் படைத்தளித்தான் என்பதையும் விளக்கினார். இதை நமக்கு உணர்த்துவது சைவ ஆகமங்களும், அதனை ஒழுங்குப் படுத்தி அனைவரும் அறியும் வண்ணம் வந்த மெய்கண்ட சாத்திரங்களும், இறைநெறிக்கு தோத்திரமாக அமைந்த திருமுறைகளுமே தமிழர் கண்ட சமயம் என்று உணர்த்தினார். சம்மட்டியால் மண்டையில் ஓங்கி அடித்த மாதிரி ஓர் உணர்வு. அப்படியானால் ஆலய வழிபாடுகளும், அதனைச் சார்ந்து வரும் கூத்தும் கும்மாளங்களும் மட்டும் தமிழரின் சமயம் அல்ல அதற்கு மேலும் சைவத்தின் மறைகளாக நம் தமிழருக்கு இறைவன் சிவபெருமானால் அருளப்பெற்ற இறை உண்மையும் உண்டு என்று அறிந்தேன். மேலும், தமிழர் கண்ட சமயம் வெற்று நம்பிக்கைக்களைச் சார்ந்த அடுக்குகளைக் கொண்டதும் இல்லை என்பதையும் அறிந்தேன். தமிழரின் சமயம் ஓர் அறிவார்ந்த சமயம் என்பதையும் அறிந்தேன். ஆன்மீகத்தில் நுழைய ஒரு சிறிய விளக்காக எம் வாழ்க்கையில் நுழைந்தவர் எமது அன்புக்கும் மதிப்புக்கும் உரியவர் முனைவர் என்பதை இவ்விடத்தில் அறிவிப்பதில் பெருமகிழ்ச்சி அடைகின்றேன்.மேன்மைகொள் சைவ நீதி விளங்குக உலகமெல்லாம்.
மக்களை இணைப்பதற்கும் பிரிப்பதற்கும் சமயம் பல காலங்களாக ஒரு கருவியாக இருந்து வந்ததுள்ளது என்பதை நாம் அறிவோம். தமிழரை பிரித்தது “இந்து” என்று ஒரு மதம். யாரோ ஒரு வகுப்பினரின் சுயநலத்திற்காக நம் தமிழரை நான்கு கூறு போட்டு அதில் சாதியத்தை ஏற்றி பிரித்தனர் சூழ்ச்சியாளர்கள். சாதியத்தைக் கொண்டு பல மதங்களில் மேலும் தமிழர்களைப் பிரித்தனர். வந்தேறிகள். தமிழர் பிரிந்ததைக் கண்டு இன்று வருத்தப்டுவதில் பயனில்லை. தமிழரை ஒற்றுமைப் படுத்த வேண்டியதை எண்ணி வருத்தப் பட வேண்டியதே இன்றைய நிலை. எது நம்மை பிரித்ததோ அதனை அறிந்து நாம் நீங்கினால் தமிழர் ஒன்றுபட பெரியதொரு ஊக்க மருந்து நமக்குக் கிடைக்கும். திராவிட கழகம் இதில் தோற்றது. அதனால்தான் அவர்கள் இறை மறுப்புக் கொள்கையை முன் வைத்தனர். இது பொய்யானா தோற்றமுடையது என்பதை தமிழர் உணர்ந்தவுடன் எப்படி புத்த மதமும், சமண மதமும் தென்னாட்டை விட்டே ஓடினவோ அதே போல் திராவிடமும் தென்னாட்டை விட்டே ஓடும். அதற்கு வழிவகுக்கும் கருவி சைவம். இந்து என்ற மாயையில் இருந்து நாம் விலக வேண்டுமானால் தமிழர் சமயத்தை நம்மவர் அறிய வேண்டும். அறிந்து அதன் வழி அறவொழுக்கதைக் கொண்ட வாழ்க்கையில் நிற்க வேண்டும். இதனை இறைக்கண்ணால் கண்டவர்கள் முன்னெடுத்ததுதான் மலேசியாவில் சைவ சித்தாந்த வகுப்புக்களின் வழியில் தமிழரை மூட நம்பிக்கைகளின் சங்லிப் பிடியில் இருந்து அறுத்து உண்மை நெறியின் வழி ஒன்றினைக்கும் முயற்சி. இது தமிழ் நாட்டில் இப்பொழுது வெகு வேகமாக செயல்பட ஆரம்பித்துள்ளது. அதன் வெளிப்பாடு இன்னும் சில ஆண்டுகளில் ஒரு வெடுகுண்டாக தமிழ் நாட்டில் வெடிக்கும். அன்றே நாம் தமிழர் இயக்கம் திராவிட இயக்கங்களைப் பின் தள்ளி முன் நிற்கும் நாளாக அமையும். நல்ல காரியங்களுக்கு தடங்கலும், ஒடுக்கலும் எப்பொழுதும் இருந்து கொண்டேதான் இருக்கும். அதனை தாண்டி வருவதற்கு நம் தமிழருக்கு இறைவன் திருவருள் எப்பொழுதும் தொடர்ந்து இருக்கும் என்பதனை ஏற்று தொடருங்கள் திரு பொன் ரங்கன் மற்றும் கலை அவர்களே.
தேனீ,தமிழர் எழுச்சிப்பறை மிக மிக அருமை. வாழ்க தமிழ்.