இது விளம்பரமா ? செய்தியா ? இதி மலேசியா இந்து சங்கம் எங்கே நிற்கிறது தமிழ் சமய சைவ சித்தாந்தம் என்ன சுதாக்கிறது இந்து தர்ம மாமன்றம் இந்து SHEB ? PHEB என்ற இரு மாநிலங்களின் இந்து அறப்பணி வாரியங்கள் நிலை என்ன ?
குரு பூஜா அல்லது குரு மார்க்க வழிபாடுகள் என்றால் என்ன என்று விளக்கி இருக்கலாம் . அல்லது சித்தர்களுக்கு குருவுக்கும் உள்ள சமய நெறிகள் என்ன?
குருக்கள என்று பூஜை போடுபவர் குருவா ?
முருகன் குருவனால் மற்ற தெய்வங்களை குல தெய்வம் இஸ்ட விரும்பிய தெய்வங்கள் எல்லாம் குரு இல்லையா?
உலகம் கண்ட இந்து மதத்தக்குஅதாவது ஆரியர் 1000 ஆண்டுகளாக வளர்த்த தமிழனின் சிந்து இந்துவாக தமிழ் சமயம் அல்லது சைவ சித்த அல்லது ஆசிவகம் என்ற ஆதி தமிழர்களின் 5000 ஆண்டு கால சித்த நெறி சிவனின் வழிபாடுகள் குரு வழிபாடுகள் இல்லையா ?
கடைசியாக தமிழர்கள் இந்துக்களா ?
குரு மார்கள் மன சாட்சியுடன் பதில் சொல்லட்டும். நன்றி.
உலகத் தமிழர் பாதுகாப்பு மையம் மலேசியா இயக்குனர் ம. அ. பொன் ரங்கன், தமிழர் குரல் அம்பாங் .
Loading...
இது அதுக்கும் மேலே…..வந்து பாருங்கள் ஐயா,எதையும் மேலோட்டமாக பார்த்தல் ஆழம் தெரியாது….குருவுக்கே குருவானவன் தலைமை சித்தன் முருக பெருமான்….சித்தர்கள் கண்ட உண்மை….ஆரியம் இங்கு செல்லாது ஏனெனில் அது வெறும் 5000 ஆண்டுகள்…..முருக பெருமானின் முதல் சீடன் அகத்தியர் முதல் சங்க காலத்தில் அதாவது 20,000 ஆண்டுகளுக்கு முன் தமிழ் மொழி (சிவபெருமானின் மொழி) இலக்கணம் கண்ட காலத்தில் பல அறிய குறிப்புகளை இயற்றி நமக்கு அளித்தார்.இன்னும் ஏராளம் ஏராளம் உண்மைகள் புதைந்து கிடக்கிறது,தேடினால்…முருக பெருமான் வழி காட்டுவார்…..
Loading...
ஹ ஹ ஹ
Loading...
ஆரியம் தானே தமிழ்சைவ சித்தாந்த அல்லது தமிழ் சமையத்தை இந்துக்களாக மாற்றியது. தமிழர்கள் இந்துக்களா என்ற கேள்விக்கு மட்டும் பத்தி சொல்லுங்கள் ஐயா குமரா அவர்களே. 20,000 ஆண்டுகளை பேசும் நீங்கள் இந்துத்வா காலம் எது? தமிழ் கடவுள் எனும் முருகன் பிராமணர்கள் போற்றும் இந்துக்கடவுளா ? நான் இந்துவல்ல தமிழ்ச சமய சைவ சித்தான் என் குரு சிதார் .அகத்தியர் பிறகு இன்றுவரை வள்ளுவர் என்பதால் நான் இந்துவல்ல ? இந்து இடையில் பிராமணர்கள் வடுகர்கள் ஆரிய மனிதன் கண்ட உலக வணிகம். என் இறப்புக்கு சிவனிடம் பட்ட கடன் 0.25,காசு மட்டுமே. இன்னும் ஆழமாக போகலாம் ! அங்கு அளவு கோள் விபரம் தெரியவில்லை. நன்றி ஓம் நமசிவாயா .
Loading...
சைவ சித்தாந்தத்தை இந்துவாக மாற்றியது ஆரியம் என்பதில் எனக்கு எந்த மாற்று கருத்தும் இல்லை ஐயா.தமிழர்கள் சைவ சமயத்தை போற்றியவர்கள்……இந்துவை அல்ல! இந்து தோன்றி 5,000 ஆண்டுகள் ஆகின்றன,அவர்கள் மொழிக்கு இலக்கணம் வகுத்தவரும் தமிழ் சித்தர் பதஞ்சலி முனிவர்.முருக பெருமான் தமிழ் கடவுள்,தொல்காப்பியர் (அகத்திய முனிவரின் முதல் சீடர்) சேயோனை பற்றி தெள்ள தெளிவாக கூறிவிட்டாரே…நான் யாரையா அதை மறுக்க? நம் பிறப்பு கர்ம கடனை அடைக்க…..
Loading...
ஒரே சிரிப்பாய் இருக்கின்றது. நான் இப்பகுதியில் கருத்து எழுத ஆரம்பித்தால் சிரிப்பாய் சிரித்து விடும்.
Loading...
சைவ சித்தாந்தம் என்ன என்று அறியாமல் அதனை “ஆரியமாக மாறியது” என்று எப்படி கூறுகின்றீர்?. “இந்து” என்று தங்களை அடையாளமிட்டுக் கொள்ளும் தமிழர் அவர்தம் இறை நெறியை அறியாமல் கிரியைகள் மட்டுமே சமயம் என்று நம்பி இதுநாள் வரை வாழ்ந்து வந்ததால் வந்த வினையின் பயனை குமரனின் கருத்தில் காண முடிகின்றது.
Loading...
“இந்து தோன்றி 5,000 ஆண்டுகள் ஆகின்றன”.
“இந்து” என்னவென்பதர்க்கு பொருள் தெரியாமல் 5,000 ஆண்டுகள் ஆகி விட்டது என்பதில் இருந்து “இந்து மதம்” என்ன என்பது என்று தெரியாமல் உளறினால் தவறு யாரிடம் உள்ளது? தமிழரின் சமயத்தை அறியாதவரிடமா அல்லது நம் மீது வேற்றொரு மதக் கொள்கையை நிர்பந்தமாக நிரப்பி அதுவே உம் மதம் என்று ஏற்றுக்கொள்ள வைத்த ஆரியரிடமா? சிந்தியுங்கள். தமிழர் சிந்தித்து அவர்தம் அறிவார்ந்த சமயத்தில் நிற்க வேண்டிய 21-ம் நூற்றாண்டில் நாம் வாழ்கின்றோம். தமிழர் இன்னமும் ஏமாளிகளாக வாழ வேண்டிய அவசியம் இல்லை.
Loading...
“இந்து மதம் ஒரு கூட்டணி!” என்ற தலைப்பில் செப்டம்பர் மாத சிவனருள் இதழில் முனைவர் நாகப்பன் ஆறுமுகம் அவர்கள் வரைந்த கட்டுரையை இங்கே மறு பதிவிடுகின்றேன்.
“இந்து மதம் ஷண் மதக் கூட்டணி. ஷண் என்றால் ஆறு. எனவே, ஆறு வகையான மதங்களின் கூட்டணியே இந்து மதம். சிவபெருமானைக் கடவுளாய்க் கொண்ட சைவம், கணபதியைத் தெய்வமாகக் கொண்ட காணபத்தியம், குமரனைத் தெய்வமாய்க் கொண்ட கௌமாரம், சக்தியைத் தெய்வமாகக் கொண்ட சாக்தம், விஷ்ணுவைத் தெய்வமாகக் கொண்ட வைஷ்ணவம், சூரியனைத் தெய்வமாய்க் கொண்ட சௌரம் ஆகியவற்றின் கூட்டணியே இந்து மதம். இவற்றோடு ஆரிய மதமாகிய வைதீகமும் சேர்ந்து இந்து மதம் இந்து தர்மம் ஆனது.
ஒரு காலத்தில் சிவனைப் போற்றிய சைவ சமயமே இந்திய பெரு நிலத்தின் பொதுச் சமயமாக இருந்தது. சைவம் சிவனை உருவ நிலையில் கண்டபோது அவனது அருள், ஆற்றல், அறிவு ஆகியவற்றைச் சக்தி வடிவில் கண்டது. உண்மையில் சிவனும் சக்தியும் பிரிவில்லா ஒரு பொருள் என்பதே சைவத்தின் தேர்ந்த முடிவு.
பிற்காலத்தில் கருத்துக்கள் மாறின. சிவத்தினின்று பிரியாத சக்தியை பிரித்து வழிபட்டோர் சாக்தம் என்னும் புதிய மதத்தை தோற்றுவித்தனர்.
சிவன் ஐந்தொழிலையும் ஒரு சேரச் செய்யும் சுதந்திரர். அவரே அசுத்த மாயையில் படைத்தல், காத்தல், அழித்தல் ஆகிய தொழில்களில் ஒவ்வொன்றை மட்டுமே செய்யும் தெய்வங்களை அதிட்டித்துச் செயல்படுத்தினார். இவர்களில் படத்தலைப் பிரம்மாவும், காத்தலைத் திருமாலும், அழித்தலை உருத்திரனும் செய்தனர்.
சைவத்தில் சிறு தெய்வங்களாகக் கருதப்பட்ட இம்மூன்று தெய்வங்களும் தனித்தனியே பிரிந்து தனி கடவுளர் ஆயினர். பிரம்மா உபநிடதங்களில் கடவுள் நிலை பெற்றார். திருமால் விஷ்ணு ஆகி வைஷ்ணவ மதத்தின் கடவுள் ஆனார். உருத்திரன் வேதங்களில் கலந்தார்.
காலம் செய்த இந்த மாற்றங்களால் சைவம், சாக்தம், வைணவம் என்று பிரிந்தன. இவற்றோடு குமரன், கணபதி, சூரியன் ஆகியன சேர்ந்து அறுவகை மதங்கள் அமைந்தன. இவை அனைத்தும் வேள்வி நெறியாகிய வைதீகத்தோடு கலந்து இந்து மதம் அல்லது இந்து தர்மம் என்று பெயரளவில் ஒரு மதம் ஆயின. இதுவே ஷண்மத வரலாறு.
வேத நெறியின் தாக்கத்தால் இந்தியப் பெரு நிலத்தின் பெருஞ் சமயமாக இருந்த சைவம், சாக்தம், வைணவம், என்று பிரிந்தும் வேறு சிறு மதங்களின் வரிசையில் நின்றும் ஷன் மதங்களில் ஒன்று என்று ‘சிறுமைப்’ பட்டது.
இச்சிறுமையிலிருந்து சைவத்தை மீட்கவே நால்வர் பெருமக்கள் தம் இறுதி நாள் வரை போராடினர். சிவனே பரம்பொருள் என்று அவர்கள் உரத்துக் கூறியது பக்தி உணர்வால் மட்டும் அல்ல, வரலாற்றைப் புதுக்கும் நோக்கத்திலும்தான். வேத நெறியினரின் வேள்விக் கிரியைகளும் அவர்கள் உருவாக்கிய புராணங்களும் அறு வகைச் சமயங்களை இந்து என்னும் ஒரு வகைச் சமயமாக ஆக்கியது. இந்து என்ற சொல் இந்தியப் பெரு நிலத்தைக் குறிக்கும் இடப் பெயரே ஆகும். இந்தியப் பெரு நிலத்தை முழுவதுமாய்க் கவர்ந்த வைதீகம் தனித்து நின்ற மதங்களை எல்லாம் விழுங்கிக் கொண்டு இந்து தர்மம் என்றும் இந்து மதம் என்றும் தானே எல்லாம் என்று உயர்ந்து நிற்கிறது.
சிவத்தினின்று பிரிந்த சாக்தம், வைஷ்ணவம், தனித்தே இருந்த கௌமாரம், காணபத்தியம் சௌரம் ஆகியன ஒவ்வொன்றும் தனித்தனி மதங்களாய் இருந்து வைதீகத்தால் இணைக்கப் பட்ட போது அனைத்தும் தத்தம் சுய அடையாளத்தை இழந்து வைதீகத்த ‘முகமூடியாய்’ அணிந்து கொண்டன. இதுவே இன்றைய நிலை. இந்திய சமயங்களின் வரலாற்றை ஆராய்ந்தால் ஷண் மதங்கள் இந்து மதம் ஆனது ஒரு தவறான கூட்டணி என்ற உண்மையை உணர முடியும்.
இந்திய மதங்களைத் தத்துவ நோக்கிலும் காலாந்தரத்தில் நடந்த மாற்றங்களை வரலாற்று நோக்கிலும் கண்டால் மட்டுமே இந்த உண்மைகளைக் கண்டறிய முடியும்.
முதுமுனைவர் அருணை வடிவேல் முதலியார், க. வெள்ளைவாரணனார், அ.ச. ஞானசம்பந்தனார் போன்றோர் வரலாற்றுப் பார்வையில் வழங்கிய நூல்களைப் பயின்றால் இந்திய சமயங்கள் பற்றிய உண்மைகளை அறியலாம். ‘முதலையும் மூர்க்கனும் கொண்டது விடா” என்ற முதுமொழிக்கு ஏற்ப தம் கருத்தை வெற்றுச் சொற்களால் நாட்ட முனைவது பயனற்ற சொல்.
“சிவதமிழ்ச்செல்வர் முனைவர் நாகப்பன் ஆறுமுகம்”
இன்றைக்கு இது போதும்.
Loading...
தமிழர் தோழர் தேனியின் வரவு நல்வரவாகட்டும். நன்றி ஐயா !
Loading...
நன்றி திரு பொன் ரங்கரே. இங்கே நான் கருத்து எழுத ஆரம்பித்தால் ஏதாவது ஏடா கூடமாக எழுத வேண்டி வந்து விடுமே என்றுதான் சில நாட்களாக எம்மை கட்டுப் படுத்திக் கொண்டு இருந்தேன். தங்கள் கருத்தைப் படித்தும் கருத்து எழுதாமல் இருந்தேன். பிறர் அரைகுறையாக தமிழர் சமயத்தைப் பற்றி கருத்து எழுதுவதைக் கண்டவுடம் எம்மனம் பொறுக்கவில்லை. அதனால்தான் இப்பகுதிக்கு கருத்து எழுத ஆரம்பித்தேன். எழுத ஆரம்பித்து விட்டதால் இனி ஒளிவு மறைவு ஏன்? தொடரும்
Loading...
முதலில் மேலேயுள்ள அறிக்கையை செம்பருத்தில் பதிவு செய்ய கொடுத்தவர் யார்?. அர்த்தஞான இயக்கமா? நேற்று பெய்த மழையில் இன்று பூத்த காளானுக்கு இந்த வேலையைக் கொடுத்தவர் யார்? அருணகிரிநாதர் மன்றமா? சொல்லுங்கள். தமிழர் தொன்றுதொட்டு வழிபட்டு வந்த தெய்வமாம் முருகன். அம்முருகனுக்கு தனித்து இவர்கள் காவடி எடுக்க என்ன நேர்ந்தது?. அம்மை அப்பரை முருகன் மறந்து விட்டானா அல்லது இவர்கள் மறுத்து மறைக்கின்றார்களா? கணபதியை இவர்கள் மறந்து விட்டார்களா அல்லது ஆப்ரிக்காவிற்கு கப்பலேற்றி அனுப்பி விட்டார்களா?. ஏன் இந்த சிறுபிள்ளைத்தனமான விளையாட்டு?. தொடரும்
Loading...
மதுவையும் மாதுவையும் நண்ணி பின் ஞானம் பெற்றவர் அருணகிரிநாதர். எப்படி கண்ணதாசனோ அப்படியே அருணகிரிநாதரும். இவர்களுக்கு களங்கத்தை ஏற்படுத்த இதைச் சொல்லவில்லை. எது நடந்த உண்மையோ அதைத்தான் சொல்கின்றேன். இவ்விருவருமே நகரத்தார் வகுப்பைச் சார்ந்தவர்கள். அருணகிரிநாதருக்கு மன்றத்தை எடுத்த மருத்துவர் ஜெயபாலனும் நகரத்தார். அவருக்கு ஒத்தூதி பாட வரும் சோ.சோ.மீ. – யும் நகரத்தார். இப்ப இவர்களின் நோக்கம் என்ன? தங்கள் குல தெய்வமாக வழிபட்டு வரும் முருகனுக்கு மகுடம் சூட்ட வேண்டும் என்ற எண்ணத்தில் நகரத்தார் நடத்தும் நாடகம் என்று சொல்லாமல் ‘Why the worship of Lord Muruga So Important’ என்று ஏன் அம்மை அப்பரை நீக்கி விட்டு முருகனுக்கு மகுடாபிஷேகம் செய்ய வேண்டும்? ஏன் இவர்கள் அம்மை அப்பரை ‘outdoor’ – சில் குடிவைத்து விட்டு மகனுக்கு மாடி வீடு கட்டி குடியேற்ற வேண்டும்? இதற்கெல்லாம் ஒரே காரணம்தான் உண்டு. கடந்த ஆண்டு ஷா அலாம் மிட்லாண்ட்ஸ் மாநாட்டில் ‘நால்வர் காட்டிய ஒரு கடவுள் வழிபாடு” என்ற கருப்பொருளில் நடத்திய மாநாட்டைக் காணப் பொறுக்காமல் எங்கே முருகனுக்கும் கணபதிக்கும் பங்கம் வந்து விடுமோ என்று அன்று ஆரம்பித்தது இன்றும் தொடர்கின்றது. இவர்கள் ஒன்றை புரிந்து கொள்ள வேண்டும். மூல கடவுளாகிய சிவபெருமானை நீக்கி விட்டு செயல்படும் சைவத்தில் ஒன்றிக் கொண்ட பிற தெய்வங்களுக்கு என்றும் பெருமை ஏற்படப் போவதில்லை. அம்மை அப்பனை மறந்த பிள்ளைக்கு எப்படி விமோச்சனம் இல்லையயோ அப்படியே இதுவும். இனியாவது தவற்றை உணர்த்து திருந்தி வாழக் கற்றுக் கொள்ளுங்கள். சைவத்தின் சிவன் சக்தி இல்லாமல் முருகனும் கணபதியும் சுதந்திரம் இல்லாதவர்கள் என்று புரிந்து நல்வழிப் படுங்கள். இன்பமே சூழ்க எல்லோரும் வாழ்க. இதற்கு மேலும் மறு கருத்து எழுதி என்னை மீண்டும் உசுப்பி விடாதீர்கள்.
Loading...
ரொம்ப முக்கியம் பா ,நம் நாட்டு தமிழர் எதிர்நோக்கும் தற்போதைய பிரச்சனைகள் .1) தமிழ் கல்வி மற்றும் தமிழ் பள்ளி விவகாரம் நிரந்தர தீர்வின்மை . 2) தொடர்ந்து மூடி மறைக்கப்படும் Malaysia தமிழர் வாராலாறுகள் , 3)அரசாங்க / தனியார் நிறுவனங்களில் தமிழ் மொழி புறக்கணிப்பு . 4) அரசு / தனியார் வானொலி தமிழ் மொழி சிதைவு ,5 அரசு / அரசு சார்புடைய நிறுவனங்களில் தமிழர்களுக்கு வேலை வாய்ப்பு இன்மை . 6 ) படிவம் 6 மற்றும் பல்கலை கழகத்தில் தமிழ் மொழி யின் எதிர்காலம் . 7) தமிழ் இளைஞர்களின் ஒழுக்ககேடு மற்றும் கலாச்சார சீரழிவு . இன்னும் பல உண்டு . இதை பற்றி யாருக்கும் கவலை இல்லை முருகனுக்கு மகுடம் சூட்டுவதுதான் தற்போதைய மிகப் பெரிய சமூகத்தொண்டு . நேரம் இருந்தால் முருகனின் வேல் எடுத்து முதுகை சொரிந்து கொள்ளுங்கலைய்யா .
Loading...
தேனீ ,அவர்களே !நான்கு வார்த்தைகள் சொன்னாலும் நச்சென்று சொன்னீர்கள் பரம்பொருளாகிய அம்மை ,அப்பரை நீக்கி பிள்ளைக்கு விழா! திருந்துவார்களா?
Loading...
நான் பெரிதும் மதிக்கும் அன்புசால் தேனீ அவர்களுக்கு வணக்கம் . சமீபத்தில் முனைவர் ஐயா அரு நாகப்பன் அவர்களை ஒரே மொழி தமிழ்ப பள்ளிகளில் மலாய் மொழி மாற்றம் எதிர்ப்பு நிகழ்வில் சந்திதிதேன். உங்கள் ஆய்வு பதிவுகளை பற்றி பேசினோம். மிக மகிழ்ச்சி தெரிவித்தார். உங்களை அவருக்கு தேனீ என்ற பெயரில் சற்று வியப்புடன் என்னை போல தெரியாதுங்க என்றார்.உங்களை சந்திக்க ஒரு படச்சுரல் பேட்டிக்கு எங்கள் தமிழர் குரல் விரும்புகிறது. தமிழர் எழுச்சி விழாவுக்கு 31/1/16 உங்களை அழைப்போம். முனைவர் அரு நாகப்பனார் அவர்களும் வருவார். என் 016 6944223 தோடர்பு கொள்ளவும் ,நன்றி வாழ்த்துக்கள்.
Loading...
ஐயா பொன் ரங்கரே நான் அக்கடான்னு இருக்கின்றேன். என்னை வம்பில் மாட்டி விட்டு விடுவீர்கள் போலிருக்கே? எனக்கும் தங்களைப் போல் தமிழர் பிரச்சனையில் முன் நிற்க வேண்டும் என்று ஆசைதான். ஆனால் தொழிலும், குடும்ப பாரமும் தடுக்கின்றது. ஐயா முனைவர் நாகப்பன் அவர்களுக்கும் நான் இங்கே எழுதும் கருத்துக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. இங்கே எழுதும் கருத்தைப் பற்றிக் கூட நான் அவரிடம் சொல்வதும் இல்லை, விவாதிப்பதும் இல்லை. ஆனால் எம் கருத்தைப் பார்த்து அவர் நன்றாக எம்மை அடையாளம் கண்டு கொண்டு இருப்பார். அவரிடம் சைவ சித்தாந்தம் பயின்று, தமிழர் சமயத்தை தெளிவித்துக் கொண்ட பிறகு, சமய விவகாரங்களில் அவரைப் பின் பற்றி ஆழமாக போய் கொண்டிருக்கின்றேன். இங்கே யாம் எழுதும் சமயக் கருத்துக்கள் நான் அவரிடம் பயின்றவையே. தாங்கள் எனக்குச் சொல்லும் வாழ்த்துகள் அனைத்தும் அவரையே சாரும். எனக்கு அவர் சித்தாந்த ஆசிரியராகவும், சமய வழிகாட்டியாகவும் கிடைத்தது நான் பெற்ற பேறு. உயிர் உள்ளவரை அவரை என்றும் எம் மனதே வைத்துப் போற்றுவேன். என்னைப் பற்றி தெரிந்துக் கொண்டு பேசுவதால் 31-1-16 – ம் திகதியை எமது நாட்குறிப்பில் குறித்துக் கொள்கிறேன். இறைவன் திருவருளால் நாம் அனைவரும் தமிழர் முன்னேற்றத்திற்க்காக ஒன்று கூடுவோம்.தங்களை அலை பேசி வழி தொடர்பு கொள்வேன்.
Loading...
தேனீ ,நீர் ஒரு நிறம் மாறும் பூச்சி .இது நீர் எழுதிய கருத்து:- :தமிழனாக தனித்து நின்றால் தான் தமிழனின் தலை எழுத்தை மாற்ற முடியும். இண்டியன், இந்து என்பதெல்லாம் தமிழர் தலையில் மிளகாய் அரைக்க வந்த மாய வார்த்தைகள். நாங்கள் புரிந்துக் கொண்டோம். பிழைத்துக் கொள்வோம். இண்டியன், இந்து என்ற குட்டையில் பிறர் வீழ்ந்து ஊறி இருக்க வேண்டுமானால் இருந்துக் கொள்ளுங்கள். யாருக்கென்ன வந்தது.
Loading...
சிவன் ,சக்தி ,கணபதி ,முருகன் ,தமிழ் கடவுள அல்லது இந்து கடவுள ?
Loading...
இந்து மரபில் இந்த இருபாதைகளும் முறையே சகுணபிரம்ம உபாசனை என்றும் நிர்க்குணபிரம்ம உபாசனை என்றும் சொல்லப்பட்டிருக்கின்றன. இரண்டுமே பிரம்மம்தான். ஒன்று உருவம் உடையது. இன்னொன்று உருவம் அற்றது. ஒன்று சாமானிய தளத்தைச் சேர்ந்தது இன்னொன்று விசேஷ தளத்தைச் சேர்ந்தது. ஒன்று நம்மில் இருந்து அதை பார்ப்பது, இன்னொன்று அதை மட்டும் பார்க்க முயல்வது. இரண்டுமே நம்முடைய உருவகங்கள் மட்டுமே. . ஒன்றுக்கு கற்பனை ஆயுதம் பிறிதுக்கு தர்க்கமே ஆயுதம். நம்முடைய ஆளுமை எப்படி கோருகிறதோ அப்படி நாம் உருவகித்துக்கொள்பவை.
Loading...
‘உருவாய் அருவாய் உளதாய் இலதாய்’ என எல்லா நிலைகளிலும் இருப்பது இறையே என்பதே இந்து மரபின் புரிதலாகும்.
Loading...
சிவன் சத்தி, கணபதி, முருகன் யார் என்பதற்கு தமிழருடைய சமய வரலாற்றை அறிந்திருக்க வேண்டும். அதைத்தான் முனைவர் நாகப்பன் அவர்கள் ‘இந்து மதம் ஒரு கூட்டணி’ என்று விளக்கி விட்டாரே. அதைப் படித்தும் புரிந்துக் கொள்ள முடியவில்லையானால் அப்புறம் என்னத்தைச் சொல்வது!.
நிர்குண பிரம்மம், சகுன பிரம்மம் என்ற வேதாந்த கருத்தைச் சொல்லத் தெரிந்தவருக்கு மேலே போட்ட வினாவிற்குப் பதில் சொல்லத் தெரியவில்லை என்றால் இது கேப்பார் பேச்சா அல்லது ஏட்டுச் சுரைக்காயை வைத்துக் கொண்டு கதை அளக்கிண்றீரா?
இறைவன் சிவபெருமான் தன் சொரூப நிலையில் குணங்கள் அற்றவனாக தன்னையே நோக்கி இருப்பான். இது சிவனே என்று செயலற்று இருக்கும் நிலை. இதுதான் நிர்குண பிரம்மம் என்று வேதாந்தம் சொல்லும்.
உயிர்கள் அனாதியிலேயே ஆணவ மலத்தில் அழுந்தி முழு அறியாமையில் செயலற்றுக் கிடந்தது என்று கூறுவது சித்தாந்தம். பதி (இறைவன்), பசு (உயிர்), பாசம் (மும்மலங்கள்) என்றும் உள்ள நித்திய பொருட்கள் என்று பகரும் சித்தாந்தம். வேதாந்தத்தில் இந்த கோட்பாடு இல்லை காரணம் அவர்கள் ஒரு பொருள்வாதிகள். பிரம்மம் ஒன்றே பொருள் மற்றை எல்லாம் மாயை என்று கூறி சித்தாந்திகள் கேட்ட கேள்விக்கு பதில் தெரியாமல் “அநீர்வஷியினியம்’ (சொல்ல முடியாதது) என்று கூறி தப்பித்துக் கொண்டார் ஆதி சங்கரர் முதல் அவர் பின்னால் வந்த குருமார்கள் அனைவரும். இதற்கு தருக்க ரீதியில் (‘by logical deduction’) பதில் சொல்லியது சித்தாந்த நெறியே. அதனால்தான் கண்ணதாசனும் ‘தெளிவாகத் தெரியாமால் போனாலே வேதாந்தம், அது தெளிவாகத் தெரிந்தாலே சித்தாந்தம்” என்று கூறிப் போனார். இப்படி அறியாமை எனும் கேவல நிலையில் இருந்த உயிர்களின் ஆணவ மலத்தை நீக்கி மெய்பொருளை அறிந்து முத்தி பேரின்பத்தை அளிக்க உயிரின்பால் கொண்ட கருணையால் சிவபெருமான் தடத்த நிலைக்கு வருகின்றார். இங்கே அருவமாக, அருவுருவமாக, உருவமாக நாம் அறியும் வண்ணம் திருமேனி எடுத்து காட்சி அளித்தமையே மகேஸ்வர மூர்த்தங்கள். இதுவே தமிழர் திருமேனி வழிபாட்டில் நிற்பதர்க்குக் காரணம். இதைத்தான் வேதாந்தம் சற்குண பிரம்மம் என்று பகரும், நிற்க.
சிவன், சத்தி, கணபதி முருகன் யார் என்று கேட்ட கேள்விக்கு அருணந்தி சிவாச்சாரியார் அருளிய மெய்கண்ட சாத்திர நூல்களில் ஒன்றான சிவஞான சித்தியாரில் பதில் உள்ளது. (சுபபக்கம் 115)
“யாதொரு தெய்வங் கொண்டீர் அத்தெய்வ மாகி ஆங்கே மாதொரு பாக னார்தாம் வருவர்மற் றத்தெய் வங்கள் வேதனைப் படும் இறக்கும் பிறக்கும்மேல் வினையுஞ் செய்யும் ஆதலான் இவையி லாதான் அறிந்தருள் செய்வ னன்றே”
இதன் பொருள் நாம் எவ்வொரு தெய்வத்தை வணங்கி வழிபட்டாலும் ஆங்கே ‘மாதொரு பாகனார்’ சிவனே அவ்வுருவில் வந்து நமக்கு அருள்புரிவான் என்பதாகும். சிவன் பரம்பொருள் என்பதற்கு இதற்கு மேலும் விளக்கம் வேண்டுமா?. சிவனின் தன்மையாகிய அருள், செயல், அறிவு என்பதை சைவம் ‘சத்தி’ என்று பகரும். அதனால்தான் சிவனும் சத்தியும் என்று இணைப்பிரியாதது என்று கூறுவது. ஒரு பொருளும் அதன் தன்மையும் என்றும் பிரியாதிருப்பதை உணர்த்துவது இறைவன் சிவன்பெருமானின் நிலையை. இக்கருத்தைப் புராணத்தின் அடிப்படையில் விளக்கப் போய், சிவன் ஆண், சத்தி பெண் இவை இரண்டையும் பிரிக்க முடியாது என்று பாமரர்கள் மனதில் ஆழாமாகப் பதிய வைத்து விட்டதால் இன்று நமது கடவுளை ஆணும் பெண்ணுமாகவும், கணவனும் மனைவியாகவும் பார்க்க வேண்டிய அந்த பழைய நிலையிலேயே உள்ளோம். 21-ம் நூற்றாண்டிலும் இப்படியா?. இதற்குத்தான் தமிழர் சமயத்தை அறிவுக் கண்ணோடு பார்க்க வேண்டுமே ஒழிய புராணக் கண்ணோடு பார்க்கக் கூடாது என்பது. தமிழர் கண்ட இறை நெறி அறிவார்ந்த சமய நெறி என்பதை அறிவோம். நிற்க.
“மற்றத் தெய்வங்கள் வேதனைப் படும் இறக்கும் பிறக்கும்மேல் வினையுஞ் செய்யும் ஆதலான் இவையி லாதான் அறிந்தருள் செய்வ னன்றே”.
பரம்பொருளைப் போன்று ஆதியும் அந்தமும் இல்லாத ஒரு பொருளே, அருள் செய்ய முடியும் அவ்வாறு அல்லாத உயிர் குலத்தில் தோன்றி நிற்கும் தெய்வங்களாகிய கணபதியும், முருகனும் பிறக்கும் இறக்கும் மேல் வேதனையும் படும் (பிற உயிர்களைப் போன்று இன்ப துன்பங்களை அனுபவிக்கும்). ஆகையால், இவ்வாறன தெய்வங்கள் பரம்பொருளாகிய சிவ பெருமான் ஆற்றும் ஐந்தொழில்களை ஆற்ற முடியாது. இவ்வளவையும் சொல்லியது தமிழரின் மெய்கண்ட சாத்திரங்கள். இப்ப சிவன், சத்தி, கணபதி, முருகன், சிவாகமத்தின் வழி தமிழர் நெறியில் நிற்கும் வழிபாட்டுத் திருமேனிகளா அல்லது ஆரிய வைதீக தீ வழிபாட்டில் நிற்கும் உருவங்களா என்பதை கேள்வி கேட்டவரே பதில் சொல்லட்டும்.
அப்பாடா! இன்று காலையிலே சிவத்தை சற்று நேரம் சிந்தித்து விட்டு வேலைக்குச் செல்ல வழிவகுத்த sgr -க்கு மிக்க நன்றி. இப்ப தெரிந்துக்குமே யாம் இந்து மதத்தில் இல்லை. தமிழர் இறை நெறியாகிய சைவத்தில் உள்ளேன் என்று. ஆதலால் நான் பச்சோந்தி இல்லை என்பதும் இந்நேரம் புரிந்திருக்க வேண்டுமே! படிப்போருக்குப் புரியும்.
Loading...
கந்தசாமி கோவிலில் , கந்தன் புகழ் பாடுவது தவற ?
Loading...
குருவாய் .வருவாய , அருள்வாய் , குகனே . ஐய , பொன்ரங்கன் , தேனீ அவர்களுக்கு வணக்கம் . தமிழர்கள் இந்துவா ? இது உங்கள் வினா? உங்கள் கூற்றுபடி தமிழர்கள் சைவர்கள் . உலகில் வாழ் எல்லா தமிழரும் சைவர் என்றால் பதில் இல்லை தமிழர்கள் இஸ்லாம் , கிறிஸ்டியன் , மேலும் பல மதத்தில் உள்ளனர். ஏன் ? தமிழர்கள் ஓர் ஹிந்துவாக /சைவர் முருகனை வணக்குவது தவறு இலையே .

சமய ரீதியில் தமிழர்களுக்கு ஏற்பட்ட ஒரு பெரிய கேடு ஆரியத்தின் தாக்கம். நால்வர் பெருமக்கள் வழிகாட்டிய உண்மைச் சைவத்தையே வைதீகச் சைவர்கள் திசை திருப்பி ஆரியமயமாக்கி, ஆரியமே சைவம், சைவமே ஆரியம் என்று ஒரு சில நூற்றாண்டுகளாக சமரசம் சொல்லி வந்ததால் வந்த வினையை கடந்த ஒரு 2 நூற்றாண்டுகளாக தமிழர்கள் அறுவடை செய்கின்றோம். எரிகின்ற நெருப்பில் எண்ணையை ஊற்றியது போல திராவிடம் சைவம் தனிப் பெரும் சமயம் என்று அறியாமலும், இச்சமயம் ஆரிய வேதத்தினின்றும் மாறுபட்டது என்பதையும் அறியாமல் எப்படி ஆரியத்தை எதிர்த்தார்களோ அத்தோடு சைவத்தையும் சேர்த்து எதிர்க்க ஆரம்பித்தார்கள். அந்த வினையால் வந்ததுதான் தமிழர் தங்களை யார் என்று அறியாமல் “இந்து” என்று சொல்லிக் கொண்டு சிலருக்கு அதன் மீது வெறுப்பு ஏற்பட்டு மதம் மாறிப் போயினர். இப்பொழுது சைவ இயக்கங்கள் தமிழ் நாட்டிலும் சரி, மலேசியாவிலும் சரி இன்னும் உலகில் பிற நாடுகளிலும் வேகமாக தனது சைவ சமய விழிப்புணர்வை செய்து வருகின்றனர். இதன் பலன் இன்னும் ஒரு 10 வருடங்களில் கண் கூடாகப் பார்க்கலாம். இந்து மத புராணங்களை சொல்லிக் கொண்டு சிவனும், பெண்ணாகிய விஷ்ணுவும் ஐயப்பனை ஈன்று எடுத்தார்கள் என்று இன்னமும் புராணக் கதைகளைச் சொல்லிக் கொண்டிருந்தால் இந்து என்று சொல்லிக் கொள்ளும் தமிழர்கள் இன்னும் 100 வருடங்களில் காணாமல் போய் விடுவார்கள் காரணம் இன்றைய இளஞர்கள் சமயத்தை அறிவுப் பூர்வமான ரீதியில்தான் பார்க்கின்றார்களே ஒழிய புராண நம்பிக்கைகளின் அடிப்படையில் இல்லை. அவர்கள் இன்று தெய்வங்களை வைத்துக் கொண்டு அம்மா அப்பா விளையாட்டு விளையாடுவதை எள்ளி நகைக்கின்றார்கள். அதனால் சைவ சித்தாந்த நெறிகளை உய்த்துணர்ந்து சமய புராணங்கள் அந்நெறியின் தத்துவங்களுக்கு உட்பட்டு வந்தால் அதனை அறிவுப் பூர்வமாக அவர்களுக்கு உணர்த்தி நல்வழிப்படுத்துவதே தமிழர்க்கு அழகு. தமிழரல்லாதோர் அவரவர் வழியைப் பார்த்து போகட்டும். உங்களுக்கும் சேர்த்துதான் sgr. .
Loading...
ஆகமங்களையும், மெய்கண்ட சாத்திங்களையும், திருமுறைகளாகிய தோத்திரங்களையும் ஒருங்கே கொண்ட சைவம் பூரண சமயமாக விளங்கி வந்த காலத்தில் தென் இந்திய மூவேந்தர்கள் பெரிய பெரிய சிவாலையங்களைக் கட்டி அருச்சகர், ஓதுவார், பணியாட்கள் என்று அவ்வாலையங்களுக்கு வேண்டிய புஞ்சை, நன்செய் நிலங்கள் மற்றும் பொருளுதவிச் செய்து வந்தனர். அக்காலத்தில் முருக வழிபாடும், கணபதி வழிபாடும் எவ்வொரு சாத்திர நூல்களும் இல்லாமல் தோத்திர நூல்களை மட்டுமே கொண்டு வழிபாட்டையே அடிப்படையாகக் கொண்ட சிறிய சமயங்களாக முறையே கௌமாரம் என்றும் காணபத்தியம் என்றும் தமிழர்களிடையே விளங்கி வந்தன. அப்படி வழிப்படப் பட்ட முருகனையும், கணபதியையும் தமிழர் எவ்வாறு சுலுவாக மறந்து கழற்றி விட முடியும்?. தமிழர் நன்றி கெட்டவர்கள் அல்லவே!. அதனால்தான் அன்றே முருகனுக்கும், கணபதிக்கும் புராணக் கதைகளை ஏற்படுத்தி சிவன் சக்தியின் குமாரர்கள் என்று அடையாளமிட்டு சைவத்தில் இடம் கொடுத்தனர் அன்றைய சைவ அருளாளர்கள். அதனால்தான் சிவன், சத்தி, முருகன், கணபதி சிவ குடும்பமாக இன்றும் தமிழரிடையே போற்றி வரப் படுகின்றது. இப்படி தமிழர் முருகனையோ, கணபதியையோ வணங்குவது தப்பில்லை. ஆனால் ஒண்ட வந்த பிடாரி வீட்டுப் பிடாரியை ஓட்டுவது போல் அல்லவா இருக்கின்றது மேற்கூறிய அறிக்கைப் பதிவு!. ‘Why is the worship of Lord Muruga “so” important”. அப்படியானால் இவர்கள் முருகனுக்கு, சிவன் சக்தியிடம் இருந்து விவாகரத்து வாங்கிக் கொடுக்கப் பார்க்கின்றார்களா?. சிவம் இல்லையேல் சத்தி இல்லை என்பது போய் குமரன் இல்லையேல் சிவன் சக்தி இல்லை என்று உணர்த்துவதுதான் இந்த அழைப்பிதழின் நோக்கமோ? பரம்பொருளுக்கு முதலிடம் வழங்காமல் தக்கன் வேள்வி செய்து அடிபட்ட புராணங்களை இவர்கள் மறந்து விட்டார்களா? அப்படியானால் இது தவறு என்று சமயத்தை அறிந்தவர்களுக்குத் தெரியாதா? சைவ மாநாட்டின் கருப்பொருளை எதிர்த்த சுண்டைக்காய் அருணகிரி மன்றத்திற்கு இன்று அறிவு எங்கே போனது. அண்ணன் கணபதிக்கு இடமில்லை. அம்மை அப்பனுக்கு இடமில்லை!. அன்று இவர்களுடன் கச்சைக் கட்டிக் கொண்டு வந்த இந்து சங்கம் ஏன் இதை எதிர்க்கவில்லை? நகரத்தாரை எதிர்க்க இந்து சங்கத்திற்கு நாதி இல்லை என்பதுதானே உண்மை? அன்று இவர்களுடன் சேர்ந்து நின்ற நால்வர் மன்றத்திக்கு இதனைக் கேட்க தைரியமில்லை என்றால் சைவ இயக்கங்களைக் கேள்விக் கேட்க என்ன தகுதி இருக்கின்றது? இதில் வேறு நால்வர் மன்றம் என்று பெயர் வைத்துக் கொண்டு அந்த நால்வருக்கே நாமம் சாத்தி வருகின்றனர். கோலாலம்பூரில் நடக்கும் சமய அரசியல் மிகவும் கேவலமாகவும், கேனைத்தனமாகவும் இருக்கின்றது. .
Loading...
அட விடுங்கப்பா
Loading...
திரு .தேனீ ,நீங்கள் சைவத்தை ஒரு சிறிய வட்டத்துக்குள், கமண்டலத்தில் கடலை நிரப்ப பார்கிறிர்கள்.சைவத்திற்கு ,ஏது ஜாதி ,இனம் ,மொழி … ,இறைவனை எம் மொழியிலும் துதிக்கலாம். பதினெட்டு மொழிகளில் ஏத்தலாம் என்பது சரியே. மேலும், அறிந்த மொழி எதுவாயினும் அவ்வம் மொழியும் துதிப்பதற்கு உரியதே. இல்லுறை தெய்வத்தைத் தீட்சை பெற்றவர்கள், குரு உபதேசித்தபடியும், ஏனையோர் அறிந்த மொழிகளிலும் தோத்தரிக்கலாம். சித்தாந்த சைவர்கள் பன்னிரு திருமுறைப் பாடல்களைப் பாடித் துதிப்பதே சிறப்பு. பாடும் வாய்ப்பு இல்லாதவர்கள் வந்தவணம் ஏத்தலாம்.
Loading...
“தென்னாடுடைய சிவனே போற்றி எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி” – (திருவா. போற்றி.164, 165) “தென்னாடுடைய சிவனே போற்றி எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி” என்ற தொடர்களை மகுடமாகச் சொல்கிறோம். தென்னாட்டவர் துதிக்க உரிய சிவன் எந்நாட்டவரும் உரிய இறைவனாவார். தென்னாட்டவர் தென் மொழியிலும், அவ்வந் நாட்டவர் அவ்வம் மொழிகளிலும் துதிசெய்ய – தோத்தரிக்க ஆகமத்தில் விதியுள்ளது. எந்நாட்டவர்க்கும் சிவனே இறைவன் என்பதால், எந்நாட்டவர்க்கும் பொது மொழியாக நம் சமயம் விதித்துள்ள
Loading...
‘சென்சார் போர்ட்டு’ எதையோ ‘கட்’ பண்ணிட்ட மாதிரி இருக்கு! ஒவ்வொரு முறையும் கருத்து எழுதும் போது sgr ‘கோல் போஸ்ட்டை’ நகர்த்தி வைத்துக் கொண்டே இருந்தால் எப்படி ‘கோல்’ அடிப்பது. அதனால் வெள்ளியூர் முருகனின் திருவருளை வேண்டி கருத்துப் போராட்டத்தை விடுவோம்.
இது விளம்பரமா ? செய்தியா ?
இதி மலேசியா இந்து சங்கம் எங்கே நிற்கிறது
தமிழ் சமய சைவ சித்தாந்தம் என்ன சுதாக்கிறது
இந்து தர்ம மாமன்றம்
இந்து SHEB ? PHEB என்ற இரு மாநிலங்களின்
இந்து அறப்பணி வாரியங்கள் நிலை என்ன ?
குரு பூஜா அல்லது குரு மார்க்க வழிபாடுகள் என்றால்
என்ன என்று விளக்கி இருக்கலாம் .
அல்லது சித்தர்களுக்கு குருவுக்கும் உள்ள சமய நெறிகள் என்ன?
குருக்கள என்று பூஜை போடுபவர் குருவா ?
முருகன் குருவனால் மற்ற தெய்வங்களை குல தெய்வம்
இஸ்ட விரும்பிய தெய்வங்கள் எல்லாம் குரு இல்லையா?
உலகம் கண்ட இந்து மதத்தக்குஅதாவது ஆரியர் 1000 ஆண்டுகளாக வளர்த்த தமிழனின் சிந்து இந்துவாக தமிழ் சமயம் அல்லது சைவ சித்த அல்லது ஆசிவகம் என்ற ஆதி தமிழர்களின் 5000 ஆண்டு கால சித்த நெறி சிவனின் வழிபாடுகள் குரு வழிபாடுகள் இல்லையா ?
கடைசியாக தமிழர்கள் இந்துக்களா ?
குரு மார்கள் மன சாட்சியுடன் பதில் சொல்லட்டும். நன்றி.
உலகத் தமிழர் பாதுகாப்பு மையம் மலேசியா
இயக்குனர்
ம. அ. பொன் ரங்கன், தமிழர் குரல்
அம்பாங் .
இது அதுக்கும் மேலே…..வந்து பாருங்கள் ஐயா,எதையும் மேலோட்டமாக பார்த்தல் ஆழம் தெரியாது….குருவுக்கே குருவானவன் தலைமை சித்தன் முருக பெருமான்….சித்தர்கள் கண்ட உண்மை….ஆரியம் இங்கு செல்லாது ஏனெனில் அது வெறும் 5000 ஆண்டுகள்…..முருக பெருமானின் முதல் சீடன் அகத்தியர் முதல் சங்க காலத்தில் அதாவது 20,000 ஆண்டுகளுக்கு முன் தமிழ் மொழி (சிவபெருமானின் மொழி) இலக்கணம் கண்ட காலத்தில் பல அறிய குறிப்புகளை இயற்றி நமக்கு அளித்தார்.இன்னும் ஏராளம் ஏராளம் உண்மைகள் புதைந்து கிடக்கிறது,தேடினால்…முருக பெருமான் வழி காட்டுவார்…..
ஹ ஹ ஹ
ஆரியம் தானே தமிழ்சைவ சித்தாந்த அல்லது தமிழ் சமையத்தை இந்துக்களாக மாற்றியது. தமிழர்கள் இந்துக்களா என்ற கேள்விக்கு மட்டும் பத்தி சொல்லுங்கள் ஐயா குமரா அவர்களே. 20,000 ஆண்டுகளை பேசும் நீங்கள் இந்துத்வா காலம் எது? தமிழ் கடவுள் எனும் முருகன் பிராமணர்கள் போற்றும் இந்துக்கடவுளா ? நான் இந்துவல்ல தமிழ்ச சமய சைவ சித்தான் என் குரு சிதார் .அகத்தியர் பிறகு இன்றுவரை வள்ளுவர் என்பதால் நான் இந்துவல்ல ? இந்து இடையில் பிராமணர்கள் வடுகர்கள் ஆரிய மனிதன் கண்ட உலக வணிகம். என் இறப்புக்கு சிவனிடம் பட்ட கடன் 0.25,காசு மட்டுமே. இன்னும் ஆழமாக போகலாம் ! அங்கு அளவு கோள் விபரம் தெரியவில்லை. நன்றி ஓம் நமசிவாயா .
சைவ சித்தாந்தத்தை இந்துவாக மாற்றியது ஆரியம் என்பதில் எனக்கு எந்த மாற்று கருத்தும் இல்லை ஐயா.தமிழர்கள் சைவ சமயத்தை போற்றியவர்கள்……இந்துவை அல்ல! இந்து தோன்றி 5,000 ஆண்டுகள் ஆகின்றன,அவர்கள் மொழிக்கு இலக்கணம் வகுத்தவரும் தமிழ் சித்தர் பதஞ்சலி முனிவர்.முருக பெருமான் தமிழ் கடவுள்,தொல்காப்பியர் (அகத்திய முனிவரின் முதல் சீடர்) சேயோனை பற்றி தெள்ள தெளிவாக கூறிவிட்டாரே…நான் யாரையா அதை மறுக்க? நம் பிறப்பு கர்ம கடனை அடைக்க…..
ஒரே சிரிப்பாய் இருக்கின்றது. நான் இப்பகுதியில் கருத்து எழுத ஆரம்பித்தால் சிரிப்பாய் சிரித்து விடும்.
சைவ சித்தாந்தம் என்ன என்று அறியாமல் அதனை “ஆரியமாக மாறியது” என்று எப்படி கூறுகின்றீர்?. “இந்து” என்று தங்களை அடையாளமிட்டுக் கொள்ளும் தமிழர் அவர்தம் இறை நெறியை அறியாமல் கிரியைகள் மட்டுமே சமயம் என்று நம்பி இதுநாள் வரை வாழ்ந்து வந்ததால் வந்த வினையின் பயனை குமரனின் கருத்தில் காண முடிகின்றது.
“இந்து தோன்றி 5,000 ஆண்டுகள் ஆகின்றன”.
“இந்து” என்னவென்பதர்க்கு பொருள் தெரியாமல் 5,000 ஆண்டுகள் ஆகி விட்டது என்பதில் இருந்து “இந்து மதம்” என்ன என்பது என்று தெரியாமல் உளறினால் தவறு யாரிடம் உள்ளது? தமிழரின் சமயத்தை அறியாதவரிடமா அல்லது நம் மீது வேற்றொரு மதக் கொள்கையை நிர்பந்தமாக நிரப்பி அதுவே உம் மதம் என்று ஏற்றுக்கொள்ள வைத்த ஆரியரிடமா? சிந்தியுங்கள். தமிழர் சிந்தித்து அவர்தம் அறிவார்ந்த சமயத்தில் நிற்க வேண்டிய 21-ம் நூற்றாண்டில் நாம் வாழ்கின்றோம். தமிழர் இன்னமும் ஏமாளிகளாக வாழ வேண்டிய அவசியம் இல்லை.
“இந்து மதம் ஒரு கூட்டணி!” என்ற தலைப்பில் செப்டம்பர் மாத சிவனருள் இதழில் முனைவர் நாகப்பன் ஆறுமுகம் அவர்கள் வரைந்த கட்டுரையை இங்கே மறு பதிவிடுகின்றேன்.
“இந்து மதம் ஷண் மதக் கூட்டணி. ஷண் என்றால் ஆறு. எனவே, ஆறு வகையான மதங்களின் கூட்டணியே இந்து மதம். சிவபெருமானைக் கடவுளாய்க் கொண்ட சைவம், கணபதியைத் தெய்வமாகக் கொண்ட காணபத்தியம், குமரனைத் தெய்வமாய்க் கொண்ட கௌமாரம், சக்தியைத் தெய்வமாகக் கொண்ட சாக்தம், விஷ்ணுவைத் தெய்வமாகக் கொண்ட வைஷ்ணவம், சூரியனைத் தெய்வமாய்க் கொண்ட சௌரம் ஆகியவற்றின் கூட்டணியே இந்து மதம். இவற்றோடு ஆரிய மதமாகிய வைதீகமும் சேர்ந்து இந்து மதம் இந்து தர்மம் ஆனது.
ஒரு காலத்தில் சிவனைப் போற்றிய சைவ சமயமே இந்திய பெரு நிலத்தின் பொதுச் சமயமாக இருந்தது. சைவம் சிவனை உருவ நிலையில் கண்டபோது அவனது அருள், ஆற்றல், அறிவு ஆகியவற்றைச் சக்தி வடிவில் கண்டது. உண்மையில் சிவனும் சக்தியும் பிரிவில்லா ஒரு பொருள் என்பதே சைவத்தின் தேர்ந்த முடிவு.
பிற்காலத்தில் கருத்துக்கள் மாறின. சிவத்தினின்று பிரியாத சக்தியை பிரித்து வழிபட்டோர் சாக்தம் என்னும் புதிய மதத்தை தோற்றுவித்தனர்.
சிவன் ஐந்தொழிலையும் ஒரு சேரச் செய்யும் சுதந்திரர். அவரே அசுத்த மாயையில் படைத்தல், காத்தல், அழித்தல் ஆகிய தொழில்களில் ஒவ்வொன்றை மட்டுமே செய்யும் தெய்வங்களை அதிட்டித்துச் செயல்படுத்தினார். இவர்களில் படத்தலைப் பிரம்மாவும், காத்தலைத் திருமாலும், அழித்தலை உருத்திரனும் செய்தனர்.
சைவத்தில் சிறு தெய்வங்களாகக் கருதப்பட்ட இம்மூன்று தெய்வங்களும் தனித்தனியே பிரிந்து தனி கடவுளர் ஆயினர். பிரம்மா உபநிடதங்களில் கடவுள் நிலை பெற்றார். திருமால் விஷ்ணு ஆகி வைஷ்ணவ மதத்தின் கடவுள் ஆனார். உருத்திரன் வேதங்களில் கலந்தார்.
காலம் செய்த இந்த மாற்றங்களால் சைவம், சாக்தம், வைணவம் என்று பிரிந்தன. இவற்றோடு குமரன், கணபதி, சூரியன் ஆகியன சேர்ந்து அறுவகை மதங்கள் அமைந்தன. இவை அனைத்தும் வேள்வி நெறியாகிய வைதீகத்தோடு கலந்து இந்து மதம் அல்லது இந்து தர்மம் என்று பெயரளவில் ஒரு மதம் ஆயின. இதுவே ஷண்மத வரலாறு.
வேத நெறியின் தாக்கத்தால் இந்தியப் பெரு நிலத்தின் பெருஞ் சமயமாக இருந்த சைவம், சாக்தம், வைணவம், என்று பிரிந்தும் வேறு சிறு மதங்களின் வரிசையில் நின்றும் ஷன் மதங்களில் ஒன்று என்று ‘சிறுமைப்’ பட்டது.
இச்சிறுமையிலிருந்து சைவத்தை மீட்கவே நால்வர் பெருமக்கள் தம் இறுதி நாள் வரை போராடினர். சிவனே பரம்பொருள் என்று அவர்கள் உரத்துக் கூறியது பக்தி உணர்வால் மட்டும் அல்ல, வரலாற்றைப் புதுக்கும் நோக்கத்திலும்தான். வேத நெறியினரின் வேள்விக் கிரியைகளும் அவர்கள் உருவாக்கிய புராணங்களும் அறு வகைச் சமயங்களை இந்து என்னும் ஒரு வகைச் சமயமாக ஆக்கியது. இந்து என்ற சொல் இந்தியப் பெரு நிலத்தைக் குறிக்கும் இடப் பெயரே ஆகும். இந்தியப் பெரு நிலத்தை முழுவதுமாய்க் கவர்ந்த வைதீகம் தனித்து நின்ற மதங்களை எல்லாம் விழுங்கிக் கொண்டு இந்து தர்மம் என்றும் இந்து மதம் என்றும் தானே எல்லாம் என்று உயர்ந்து நிற்கிறது.
சிவத்தினின்று பிரிந்த சாக்தம், வைஷ்ணவம், தனித்தே இருந்த கௌமாரம், காணபத்தியம் சௌரம் ஆகியன ஒவ்வொன்றும் தனித்தனி மதங்களாய் இருந்து வைதீகத்தால் இணைக்கப் பட்ட போது அனைத்தும் தத்தம் சுய அடையாளத்தை இழந்து வைதீகத்த ‘முகமூடியாய்’ அணிந்து கொண்டன. இதுவே இன்றைய நிலை. இந்திய சமயங்களின் வரலாற்றை ஆராய்ந்தால் ஷண் மதங்கள் இந்து மதம் ஆனது ஒரு தவறான கூட்டணி என்ற உண்மையை உணர முடியும்.
இந்திய மதங்களைத் தத்துவ நோக்கிலும் காலாந்தரத்தில் நடந்த மாற்றங்களை வரலாற்று நோக்கிலும் கண்டால் மட்டுமே இந்த உண்மைகளைக் கண்டறிய முடியும்.
முதுமுனைவர் அருணை வடிவேல் முதலியார், க. வெள்ளைவாரணனார், அ.ச. ஞானசம்பந்தனார் போன்றோர் வரலாற்றுப் பார்வையில் வழங்கிய நூல்களைப் பயின்றால் இந்திய சமயங்கள் பற்றிய உண்மைகளை அறியலாம். ‘முதலையும் மூர்க்கனும் கொண்டது விடா” என்ற முதுமொழிக்கு ஏற்ப தம் கருத்தை வெற்றுச் சொற்களால் நாட்ட முனைவது பயனற்ற சொல்.
“சிவதமிழ்ச்செல்வர் முனைவர் நாகப்பன் ஆறுமுகம்”
இன்றைக்கு இது போதும்.
தமிழர் தோழர் தேனியின் வரவு நல்வரவாகட்டும். நன்றி ஐயா !
நன்றி திரு பொன் ரங்கரே. இங்கே நான் கருத்து எழுத ஆரம்பித்தால் ஏதாவது ஏடா கூடமாக எழுத வேண்டி வந்து விடுமே என்றுதான் சில நாட்களாக எம்மை கட்டுப் படுத்திக் கொண்டு இருந்தேன். தங்கள் கருத்தைப் படித்தும் கருத்து எழுதாமல் இருந்தேன். பிறர் அரைகுறையாக தமிழர் சமயத்தைப் பற்றி கருத்து எழுதுவதைக் கண்டவுடம் எம்மனம் பொறுக்கவில்லை. அதனால்தான் இப்பகுதிக்கு கருத்து எழுத ஆரம்பித்தேன். எழுத ஆரம்பித்து விட்டதால் இனி ஒளிவு மறைவு ஏன்? தொடரும்
முதலில் மேலேயுள்ள அறிக்கையை செம்பருத்தில் பதிவு செய்ய கொடுத்தவர் யார்?. அர்த்தஞான இயக்கமா? நேற்று பெய்த மழையில் இன்று பூத்த காளானுக்கு இந்த வேலையைக் கொடுத்தவர் யார்? அருணகிரிநாதர் மன்றமா? சொல்லுங்கள். தமிழர் தொன்றுதொட்டு வழிபட்டு வந்த தெய்வமாம் முருகன். அம்முருகனுக்கு தனித்து இவர்கள் காவடி எடுக்க என்ன நேர்ந்தது?. அம்மை அப்பரை முருகன் மறந்து விட்டானா அல்லது இவர்கள் மறுத்து மறைக்கின்றார்களா? கணபதியை இவர்கள் மறந்து விட்டார்களா அல்லது ஆப்ரிக்காவிற்கு கப்பலேற்றி அனுப்பி விட்டார்களா?. ஏன் இந்த சிறுபிள்ளைத்தனமான விளையாட்டு?. தொடரும்
மதுவையும் மாதுவையும் நண்ணி பின் ஞானம் பெற்றவர் அருணகிரிநாதர். எப்படி கண்ணதாசனோ அப்படியே அருணகிரிநாதரும். இவர்களுக்கு களங்கத்தை ஏற்படுத்த இதைச் சொல்லவில்லை. எது நடந்த உண்மையோ அதைத்தான் சொல்கின்றேன். இவ்விருவருமே நகரத்தார் வகுப்பைச் சார்ந்தவர்கள். அருணகிரிநாதருக்கு மன்றத்தை எடுத்த மருத்துவர் ஜெயபாலனும் நகரத்தார். அவருக்கு ஒத்தூதி பாட வரும் சோ.சோ.மீ. – யும் நகரத்தார். இப்ப இவர்களின் நோக்கம் என்ன? தங்கள் குல தெய்வமாக வழிபட்டு வரும் முருகனுக்கு மகுடம் சூட்ட வேண்டும் என்ற எண்ணத்தில் நகரத்தார் நடத்தும் நாடகம் என்று சொல்லாமல் ‘Why the worship of Lord Muruga So Important’ என்று ஏன் அம்மை அப்பரை நீக்கி விட்டு முருகனுக்கு மகுடாபிஷேகம் செய்ய வேண்டும்? ஏன் இவர்கள் அம்மை அப்பரை ‘outdoor’ – சில் குடிவைத்து விட்டு மகனுக்கு மாடி வீடு கட்டி குடியேற்ற வேண்டும்? இதற்கெல்லாம் ஒரே காரணம்தான் உண்டு. கடந்த ஆண்டு ஷா அலாம் மிட்லாண்ட்ஸ் மாநாட்டில் ‘நால்வர் காட்டிய ஒரு கடவுள் வழிபாடு” என்ற கருப்பொருளில் நடத்திய மாநாட்டைக் காணப் பொறுக்காமல் எங்கே முருகனுக்கும் கணபதிக்கும் பங்கம் வந்து விடுமோ என்று அன்று ஆரம்பித்தது இன்றும் தொடர்கின்றது. இவர்கள் ஒன்றை புரிந்து கொள்ள வேண்டும். மூல கடவுளாகிய சிவபெருமானை நீக்கி விட்டு செயல்படும் சைவத்தில் ஒன்றிக் கொண்ட பிற தெய்வங்களுக்கு என்றும் பெருமை ஏற்படப் போவதில்லை. அம்மை அப்பனை மறந்த பிள்ளைக்கு எப்படி விமோச்சனம் இல்லையயோ அப்படியே இதுவும். இனியாவது தவற்றை உணர்த்து திருந்தி வாழக் கற்றுக் கொள்ளுங்கள். சைவத்தின் சிவன் சக்தி இல்லாமல் முருகனும் கணபதியும் சுதந்திரம் இல்லாதவர்கள் என்று புரிந்து நல்வழிப் படுங்கள். இன்பமே சூழ்க எல்லோரும் வாழ்க. இதற்கு மேலும் மறு கருத்து எழுதி என்னை மீண்டும் உசுப்பி விடாதீர்கள்.
ரொம்ப முக்கியம் பா ,நம் நாட்டு தமிழர் எதிர்நோக்கும் தற்போதைய பிரச்சனைகள் .1) தமிழ் கல்வி மற்றும் தமிழ் பள்ளி விவகாரம் நிரந்தர தீர்வின்மை .
2) தொடர்ந்து மூடி மறைக்கப்படும் Malaysia தமிழர் வாராலாறுகள் , 3)அரசாங்க / தனியார் நிறுவனங்களில் தமிழ் மொழி புறக்கணிப்பு . 4) அரசு / தனியார் வானொலி தமிழ் மொழி சிதைவு ,5 அரசு / அரசு சார்புடைய நிறுவனங்களில் தமிழர்களுக்கு வேலை வாய்ப்பு இன்மை . 6 ) படிவம் 6 மற்றும் பல்கலை கழகத்தில் தமிழ் மொழி யின் எதிர்காலம் . 7) தமிழ் இளைஞர்களின் ஒழுக்ககேடு மற்றும் கலாச்சார சீரழிவு . இன்னும் பல உண்டு . இதை பற்றி யாருக்கும் கவலை இல்லை முருகனுக்கு மகுடம் சூட்டுவதுதான் தற்போதைய மிகப் பெரிய சமூகத்தொண்டு . நேரம் இருந்தால் முருகனின் வேல் எடுத்து முதுகை சொரிந்து கொள்ளுங்கலைய்யா .
தேனீ ,அவர்களே !நான்கு வார்த்தைகள் சொன்னாலும் நச்சென்று சொன்னீர்கள் பரம்பொருளாகிய அம்மை ,அப்பரை நீக்கி பிள்ளைக்கு விழா! திருந்துவார்களா?
நான் பெரிதும் மதிக்கும் அன்புசால் தேனீ அவர்களுக்கு வணக்கம் .
சமீபத்தில் முனைவர் ஐயா அரு நாகப்பன் அவர்களை ஒரே மொழி தமிழ்ப பள்ளிகளில் மலாய் மொழி மாற்றம் எதிர்ப்பு நிகழ்வில் சந்திதிதேன். உங்கள் ஆய்வு பதிவுகளை பற்றி பேசினோம். மிக மகிழ்ச்சி தெரிவித்தார். உங்களை அவருக்கு தேனீ என்ற பெயரில் சற்று வியப்புடன் என்னை போல தெரியாதுங்க என்றார்.உங்களை சந்திக்க ஒரு படச்சுரல் பேட்டிக்கு எங்கள் தமிழர் குரல் விரும்புகிறது.
தமிழர் எழுச்சி விழாவுக்கு 31/1/16 உங்களை அழைப்போம். முனைவர் அரு நாகப்பனார் அவர்களும் வருவார். என் 016 6944223 தோடர்பு கொள்ளவும் ,நன்றி வாழ்த்துக்கள்.
ஐயா பொன் ரங்கரே நான் அக்கடான்னு இருக்கின்றேன். என்னை வம்பில் மாட்டி விட்டு விடுவீர்கள் போலிருக்கே? எனக்கும் தங்களைப் போல் தமிழர் பிரச்சனையில் முன் நிற்க வேண்டும் என்று ஆசைதான். ஆனால் தொழிலும், குடும்ப பாரமும் தடுக்கின்றது. ஐயா முனைவர் நாகப்பன் அவர்களுக்கும் நான் இங்கே எழுதும் கருத்துக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. இங்கே எழுதும் கருத்தைப் பற்றிக் கூட நான் அவரிடம் சொல்வதும் இல்லை, விவாதிப்பதும் இல்லை. ஆனால் எம் கருத்தைப் பார்த்து அவர் நன்றாக எம்மை அடையாளம் கண்டு கொண்டு இருப்பார். அவரிடம் சைவ சித்தாந்தம் பயின்று, தமிழர் சமயத்தை தெளிவித்துக் கொண்ட பிறகு, சமய விவகாரங்களில் அவரைப் பின் பற்றி ஆழமாக போய் கொண்டிருக்கின்றேன். இங்கே யாம் எழுதும் சமயக் கருத்துக்கள் நான் அவரிடம் பயின்றவையே. தாங்கள் எனக்குச் சொல்லும் வாழ்த்துகள் அனைத்தும் அவரையே சாரும். எனக்கு அவர் சித்தாந்த ஆசிரியராகவும், சமய வழிகாட்டியாகவும் கிடைத்தது நான் பெற்ற பேறு. உயிர் உள்ளவரை அவரை என்றும் எம் மனதே வைத்துப் போற்றுவேன். என்னைப் பற்றி தெரிந்துக் கொண்டு பேசுவதால் 31-1-16 – ம் திகதியை எமது நாட்குறிப்பில் குறித்துக் கொள்கிறேன். இறைவன் திருவருளால் நாம் அனைவரும் தமிழர் முன்னேற்றத்திற்க்காக ஒன்று கூடுவோம்.தங்களை அலை பேசி வழி தொடர்பு கொள்வேன்.
தேனீ ,நீர் ஒரு நிறம் மாறும் பூச்சி .இது நீர் எழுதிய கருத்து:- :தமிழனாக தனித்து நின்றால் தான் தமிழனின் தலை எழுத்தை மாற்ற முடியும். இண்டியன், இந்து என்பதெல்லாம் தமிழர் தலையில் மிளகாய் அரைக்க வந்த மாய வார்த்தைகள். நாங்கள் புரிந்துக் கொண்டோம். பிழைத்துக் கொள்வோம். இண்டியன், இந்து என்ற குட்டையில் பிறர் வீழ்ந்து ஊறி இருக்க வேண்டுமானால் இருந்துக் கொள்ளுங்கள். யாருக்கென்ன வந்தது.
சிவன் ,சக்தி ,கணபதி ,முருகன் ,தமிழ் கடவுள அல்லது இந்து கடவுள ?
இந்து மரபில் இந்த இருபாதைகளும் முறையே சகுணபிரம்ம உபாசனை என்றும் நிர்க்குணபிரம்ம உபாசனை என்றும் சொல்லப்பட்டிருக்கின்றன. இரண்டுமே பிரம்மம்தான். ஒன்று உருவம் உடையது. இன்னொன்று உருவம் அற்றது. ஒன்று சாமானிய தளத்தைச் சேர்ந்தது இன்னொன்று விசேஷ தளத்தைச் சேர்ந்தது. ஒன்று நம்மில் இருந்து அதை பார்ப்பது, இன்னொன்று அதை மட்டும் பார்க்க முயல்வது. இரண்டுமே நம்முடைய உருவகங்கள் மட்டுமே. . ஒன்றுக்கு கற்பனை ஆயுதம் பிறிதுக்கு தர்க்கமே ஆயுதம். நம்முடைய ஆளுமை எப்படி கோருகிறதோ அப்படி நாம் உருவகித்துக்கொள்பவை.
‘உருவாய் அருவாய் உளதாய் இலதாய்’ என எல்லா நிலைகளிலும் இருப்பது இறையே என்பதே இந்து மரபின் புரிதலாகும்.
சிவன் சத்தி, கணபதி, முருகன் யார் என்பதற்கு தமிழருடைய சமய வரலாற்றை அறிந்திருக்க வேண்டும். அதைத்தான் முனைவர் நாகப்பன் அவர்கள் ‘இந்து மதம் ஒரு கூட்டணி’ என்று விளக்கி விட்டாரே. அதைப் படித்தும் புரிந்துக் கொள்ள முடியவில்லையானால் அப்புறம் என்னத்தைச் சொல்வது!.
நிர்குண பிரம்மம், சகுன பிரம்மம் என்ற வேதாந்த கருத்தைச் சொல்லத் தெரிந்தவருக்கு மேலே போட்ட வினாவிற்குப் பதில் சொல்லத் தெரியவில்லை என்றால் இது கேப்பார் பேச்சா அல்லது ஏட்டுச் சுரைக்காயை வைத்துக் கொண்டு கதை அளக்கிண்றீரா?
இறைவன் சிவபெருமான் தன் சொரூப நிலையில் குணங்கள் அற்றவனாக தன்னையே நோக்கி இருப்பான். இது சிவனே என்று செயலற்று இருக்கும் நிலை. இதுதான் நிர்குண பிரம்மம் என்று வேதாந்தம் சொல்லும்.
உயிர்கள் அனாதியிலேயே ஆணவ மலத்தில் அழுந்தி முழு அறியாமையில் செயலற்றுக் கிடந்தது என்று கூறுவது சித்தாந்தம். பதி (இறைவன்), பசு (உயிர்), பாசம் (மும்மலங்கள்) என்றும் உள்ள நித்திய பொருட்கள் என்று பகரும் சித்தாந்தம். வேதாந்தத்தில் இந்த கோட்பாடு இல்லை காரணம் அவர்கள் ஒரு பொருள்வாதிகள். பிரம்மம் ஒன்றே பொருள் மற்றை எல்லாம் மாயை என்று கூறி சித்தாந்திகள் கேட்ட கேள்விக்கு பதில் தெரியாமல் “அநீர்வஷியினியம்’ (சொல்ல முடியாதது) என்று கூறி தப்பித்துக் கொண்டார் ஆதி சங்கரர் முதல் அவர் பின்னால் வந்த குருமார்கள் அனைவரும். இதற்கு தருக்க ரீதியில் (‘by logical deduction’) பதில் சொல்லியது சித்தாந்த நெறியே. அதனால்தான் கண்ணதாசனும் ‘தெளிவாகத் தெரியாமால் போனாலே வேதாந்தம், அது தெளிவாகத் தெரிந்தாலே சித்தாந்தம்” என்று கூறிப் போனார். இப்படி அறியாமை எனும் கேவல நிலையில் இருந்த உயிர்களின் ஆணவ மலத்தை நீக்கி மெய்பொருளை அறிந்து முத்தி பேரின்பத்தை அளிக்க உயிரின்பால் கொண்ட கருணையால் சிவபெருமான் தடத்த நிலைக்கு வருகின்றார். இங்கே அருவமாக, அருவுருவமாக, உருவமாக நாம் அறியும் வண்ணம் திருமேனி எடுத்து காட்சி அளித்தமையே மகேஸ்வர மூர்த்தங்கள். இதுவே தமிழர் திருமேனி வழிபாட்டில் நிற்பதர்க்குக் காரணம். இதைத்தான் வேதாந்தம் சற்குண பிரம்மம் என்று பகரும், நிற்க.
சிவன், சத்தி, கணபதி முருகன் யார் என்று கேட்ட கேள்விக்கு அருணந்தி சிவாச்சாரியார் அருளிய மெய்கண்ட சாத்திர நூல்களில் ஒன்றான சிவஞான சித்தியாரில் பதில் உள்ளது. (சுபபக்கம் 115)
“யாதொரு தெய்வங் கொண்டீர் அத்தெய்வ மாகி ஆங்கே
மாதொரு பாக னார்தாம் வருவர்மற் றத்தெய் வங்கள்
வேதனைப் படும் இறக்கும் பிறக்கும்மேல் வினையுஞ் செய்யும்
ஆதலான் இவையி லாதான் அறிந்தருள் செய்வ னன்றே”
இதன் பொருள் நாம் எவ்வொரு தெய்வத்தை வணங்கி வழிபட்டாலும் ஆங்கே ‘மாதொரு பாகனார்’ சிவனே அவ்வுருவில் வந்து நமக்கு அருள்புரிவான் என்பதாகும். சிவன் பரம்பொருள் என்பதற்கு இதற்கு மேலும் விளக்கம் வேண்டுமா?. சிவனின் தன்மையாகிய அருள், செயல், அறிவு என்பதை சைவம் ‘சத்தி’ என்று பகரும். அதனால்தான் சிவனும் சத்தியும் என்று இணைப்பிரியாதது என்று கூறுவது. ஒரு பொருளும் அதன் தன்மையும் என்றும் பிரியாதிருப்பதை உணர்த்துவது இறைவன் சிவன்பெருமானின் நிலையை. இக்கருத்தைப் புராணத்தின் அடிப்படையில் விளக்கப் போய், சிவன் ஆண், சத்தி பெண் இவை இரண்டையும் பிரிக்க முடியாது என்று பாமரர்கள் மனதில் ஆழாமாகப் பதிய வைத்து விட்டதால் இன்று நமது கடவுளை ஆணும் பெண்ணுமாகவும், கணவனும் மனைவியாகவும் பார்க்க வேண்டிய அந்த பழைய நிலையிலேயே உள்ளோம். 21-ம் நூற்றாண்டிலும் இப்படியா?. இதற்குத்தான் தமிழர் சமயத்தை அறிவுக் கண்ணோடு பார்க்க வேண்டுமே ஒழிய புராணக் கண்ணோடு பார்க்கக் கூடாது என்பது. தமிழர் கண்ட இறை நெறி அறிவார்ந்த சமய நெறி என்பதை அறிவோம். நிற்க.
“மற்றத் தெய்வங்கள் வேதனைப் படும் இறக்கும் பிறக்கும்மேல் வினையுஞ் செய்யும் ஆதலான் இவையி லாதான் அறிந்தருள் செய்வ னன்றே”.
பரம்பொருளைப் போன்று ஆதியும் அந்தமும் இல்லாத ஒரு பொருளே, அருள் செய்ய முடியும் அவ்வாறு அல்லாத உயிர் குலத்தில் தோன்றி நிற்கும் தெய்வங்களாகிய கணபதியும், முருகனும் பிறக்கும் இறக்கும் மேல் வேதனையும் படும் (பிற உயிர்களைப் போன்று இன்ப துன்பங்களை அனுபவிக்கும்). ஆகையால், இவ்வாறன தெய்வங்கள் பரம்பொருளாகிய சிவ பெருமான் ஆற்றும் ஐந்தொழில்களை ஆற்ற முடியாது. இவ்வளவையும் சொல்லியது தமிழரின் மெய்கண்ட சாத்திரங்கள். இப்ப சிவன், சத்தி, கணபதி, முருகன், சிவாகமத்தின் வழி தமிழர் நெறியில் நிற்கும் வழிபாட்டுத் திருமேனிகளா அல்லது ஆரிய வைதீக தீ வழிபாட்டில் நிற்கும் உருவங்களா என்பதை கேள்வி கேட்டவரே பதில் சொல்லட்டும்.
அப்பாடா! இன்று காலையிலே சிவத்தை சற்று நேரம் சிந்தித்து விட்டு வேலைக்குச் செல்ல வழிவகுத்த sgr -க்கு மிக்க நன்றி. இப்ப தெரிந்துக்குமே யாம் இந்து மதத்தில் இல்லை. தமிழர் இறை நெறியாகிய சைவத்தில் உள்ளேன் என்று. ஆதலால் நான் பச்சோந்தி இல்லை என்பதும் இந்நேரம் புரிந்திருக்க வேண்டுமே! படிப்போருக்குப் புரியும்.
கந்தசாமி கோவிலில் , கந்தன் புகழ் பாடுவது தவற ?
குருவாய் .வருவாய , அருள்வாய் , குகனே .
ஐய , பொன்ரங்கன் , தேனீ அவர்களுக்கு வணக்கம் .
தமிழர்கள் இந்துவா ? இது உங்கள் வினா?
உங்கள் கூற்றுபடி தமிழர்கள் சைவர்கள் .
உலகில் வாழ் எல்லா தமிழரும் சைவர் என்றால் பதில் இல்லை
தமிழர்கள் இஸ்லாம் , கிறிஸ்டியன் , மேலும் பல மதத்தில் உள்ளனர்.
ஏன் ? தமிழர்கள் ஓர் ஹிந்துவாக /சைவர் முருகனை வணக்குவது
தவறு இலையே .
குருவாய் .வருவாய , அருள்வாய் , குகனே .
ஐய , பொன்ரங்கன் , தேனீ அவர்களுக்கு வணக்கம் .
தமிழர்கள் இந்துவா ? இது உங்கள் வினா?
உங்கள் கூற்றுபடி தமிழர்கள் சைவர்கள் .
உலகில் வாழ் எல்லா தமிழரும் சைவர் என்றால் பதில் இல்லை
தமிழர்கள் இஸ்லாம் , கிறிஸ்டியன் , மேலும் பல மதத்தில் உள்ளனர்.
ஏன் ? தமிழர்கள் ஓர் ஹிந்துவாக /சைவர் முருகனை வணக்குவது
தவறு இலையே .
சமய ரீதியில் தமிழர்களுக்கு ஏற்பட்ட ஒரு பெரிய கேடு ஆரியத்தின் தாக்கம். நால்வர் பெருமக்கள் வழிகாட்டிய உண்மைச் சைவத்தையே வைதீகச் சைவர்கள் திசை திருப்பி ஆரியமயமாக்கி, ஆரியமே சைவம், சைவமே ஆரியம் என்று ஒரு சில நூற்றாண்டுகளாக சமரசம் சொல்லி வந்ததால் வந்த வினையை கடந்த ஒரு 2 நூற்றாண்டுகளாக தமிழர்கள் அறுவடை செய்கின்றோம். எரிகின்ற நெருப்பில் எண்ணையை ஊற்றியது போல திராவிடம் சைவம் தனிப் பெரும் சமயம் என்று அறியாமலும், இச்சமயம் ஆரிய வேதத்தினின்றும் மாறுபட்டது என்பதையும் அறியாமல் எப்படி ஆரியத்தை எதிர்த்தார்களோ அத்தோடு சைவத்தையும் சேர்த்து எதிர்க்க ஆரம்பித்தார்கள். அந்த வினையால் வந்ததுதான் தமிழர் தங்களை யார் என்று அறியாமல் “இந்து” என்று சொல்லிக் கொண்டு சிலருக்கு அதன் மீது வெறுப்பு ஏற்பட்டு மதம் மாறிப் போயினர். இப்பொழுது சைவ இயக்கங்கள் தமிழ் நாட்டிலும் சரி, மலேசியாவிலும் சரி இன்னும் உலகில் பிற நாடுகளிலும் வேகமாக தனது சைவ சமய விழிப்புணர்வை செய்து வருகின்றனர். இதன் பலன் இன்னும் ஒரு 10 வருடங்களில் கண் கூடாகப் பார்க்கலாம். இந்து மத புராணங்களை சொல்லிக் கொண்டு சிவனும், பெண்ணாகிய விஷ்ணுவும் ஐயப்பனை ஈன்று எடுத்தார்கள் என்று இன்னமும் புராணக் கதைகளைச் சொல்லிக் கொண்டிருந்தால் இந்து என்று சொல்லிக் கொள்ளும் தமிழர்கள் இன்னும் 100 வருடங்களில் காணாமல் போய் விடுவார்கள் காரணம் இன்றைய இளஞர்கள் சமயத்தை அறிவுப் பூர்வமான ரீதியில்தான் பார்க்கின்றார்களே ஒழிய புராண நம்பிக்கைகளின் அடிப்படையில் இல்லை. அவர்கள் இன்று தெய்வங்களை வைத்துக் கொண்டு அம்மா அப்பா விளையாட்டு விளையாடுவதை எள்ளி நகைக்கின்றார்கள். அதனால் சைவ சித்தாந்த நெறிகளை உய்த்துணர்ந்து சமய புராணங்கள் அந்நெறியின் தத்துவங்களுக்கு உட்பட்டு வந்தால் அதனை அறிவுப் பூர்வமாக அவர்களுக்கு உணர்த்தி நல்வழிப்படுத்துவதே தமிழர்க்கு அழகு. தமிழரல்லாதோர் அவரவர் வழியைப் பார்த்து போகட்டும். உங்களுக்கும் சேர்த்துதான் sgr. .
ஆகமங்களையும், மெய்கண்ட சாத்திங்களையும், திருமுறைகளாகிய தோத்திரங்களையும் ஒருங்கே கொண்ட சைவம் பூரண சமயமாக விளங்கி வந்த காலத்தில் தென் இந்திய மூவேந்தர்கள் பெரிய பெரிய சிவாலையங்களைக் கட்டி அருச்சகர், ஓதுவார், பணியாட்கள் என்று அவ்வாலையங்களுக்கு வேண்டிய புஞ்சை, நன்செய் நிலங்கள் மற்றும் பொருளுதவிச் செய்து வந்தனர். அக்காலத்தில் முருக வழிபாடும், கணபதி வழிபாடும் எவ்வொரு சாத்திர நூல்களும் இல்லாமல் தோத்திர நூல்களை மட்டுமே கொண்டு வழிபாட்டையே அடிப்படையாகக் கொண்ட சிறிய சமயங்களாக முறையே கௌமாரம் என்றும் காணபத்தியம் என்றும் தமிழர்களிடையே விளங்கி வந்தன. அப்படி வழிப்படப் பட்ட முருகனையும், கணபதியையும் தமிழர் எவ்வாறு சுலுவாக மறந்து கழற்றி விட முடியும்?. தமிழர் நன்றி கெட்டவர்கள் அல்லவே!. அதனால்தான் அன்றே முருகனுக்கும், கணபதிக்கும் புராணக் கதைகளை ஏற்படுத்தி சிவன் சக்தியின் குமாரர்கள் என்று அடையாளமிட்டு சைவத்தில் இடம் கொடுத்தனர் அன்றைய சைவ அருளாளர்கள். அதனால்தான் சிவன், சத்தி, முருகன், கணபதி சிவ குடும்பமாக இன்றும் தமிழரிடையே போற்றி வரப் படுகின்றது. இப்படி தமிழர் முருகனையோ, கணபதியையோ வணங்குவது தப்பில்லை. ஆனால் ஒண்ட வந்த பிடாரி வீட்டுப் பிடாரியை ஓட்டுவது போல் அல்லவா இருக்கின்றது மேற்கூறிய அறிக்கைப் பதிவு!. ‘Why is the worship of Lord Muruga “so” important”. அப்படியானால் இவர்கள் முருகனுக்கு, சிவன் சக்தியிடம் இருந்து விவாகரத்து வாங்கிக் கொடுக்கப் பார்க்கின்றார்களா?. சிவம் இல்லையேல் சத்தி இல்லை என்பது போய் குமரன் இல்லையேல் சிவன் சக்தி இல்லை என்று உணர்த்துவதுதான் இந்த அழைப்பிதழின் நோக்கமோ? பரம்பொருளுக்கு முதலிடம் வழங்காமல் தக்கன் வேள்வி செய்து அடிபட்ட புராணங்களை இவர்கள் மறந்து விட்டார்களா? அப்படியானால் இது தவறு என்று சமயத்தை அறிந்தவர்களுக்குத் தெரியாதா? சைவ மாநாட்டின் கருப்பொருளை எதிர்த்த சுண்டைக்காய் அருணகிரி மன்றத்திற்கு இன்று அறிவு எங்கே போனது. அண்ணன் கணபதிக்கு இடமில்லை. அம்மை அப்பனுக்கு இடமில்லை!. அன்று இவர்களுடன் கச்சைக் கட்டிக் கொண்டு வந்த இந்து சங்கம் ஏன் இதை எதிர்க்கவில்லை? நகரத்தாரை எதிர்க்க இந்து சங்கத்திற்கு நாதி இல்லை என்பதுதானே உண்மை? அன்று இவர்களுடன் சேர்ந்து நின்ற நால்வர் மன்றத்திக்கு இதனைக் கேட்க தைரியமில்லை என்றால் சைவ இயக்கங்களைக் கேள்விக் கேட்க என்ன தகுதி இருக்கின்றது? இதில் வேறு நால்வர் மன்றம் என்று பெயர் வைத்துக் கொண்டு அந்த நால்வருக்கே நாமம் சாத்தி வருகின்றனர். கோலாலம்பூரில் நடக்கும் சமய அரசியல் மிகவும் கேவலமாகவும், கேனைத்தனமாகவும் இருக்கின்றது. .
அட விடுங்கப்பா
திரு .தேனீ ,நீங்கள் சைவத்தை ஒரு சிறிய வட்டத்துக்குள், கமண்டலத்தில் கடலை நிரப்ப பார்கிறிர்கள்.சைவத்திற்கு ,ஏது ஜாதி ,இனம் ,மொழி …
,இறைவனை எம் மொழியிலும் துதிக்கலாம். பதினெட்டு மொழிகளில் ஏத்தலாம் என்பது சரியே. மேலும், அறிந்த மொழி எதுவாயினும் அவ்வம் மொழியும் துதிப்பதற்கு உரியதே. இல்லுறை தெய்வத்தைத் தீட்சை பெற்றவர்கள், குரு உபதேசித்தபடியும், ஏனையோர் அறிந்த மொழிகளிலும் தோத்தரிக்கலாம். சித்தாந்த சைவர்கள் பன்னிரு திருமுறைப் பாடல்களைப் பாடித் துதிப்பதே சிறப்பு. பாடும் வாய்ப்பு இல்லாதவர்கள் வந்தவணம் ஏத்தலாம்.
“தென்னாடுடைய சிவனே போற்றி
எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி”
– (திருவா. போற்றி.164, 165)
“தென்னாடுடைய சிவனே போற்றி
எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி”
என்ற தொடர்களை மகுடமாகச் சொல்கிறோம். தென்னாட்டவர் துதிக்க உரிய சிவன் எந்நாட்டவரும் உரிய இறைவனாவார். தென்னாட்டவர் தென் மொழியிலும், அவ்வந் நாட்டவர் அவ்வம் மொழிகளிலும் துதிசெய்ய – தோத்தரிக்க ஆகமத்தில் விதியுள்ளது. எந்நாட்டவர்க்கும் சிவனே இறைவன் என்பதால், எந்நாட்டவர்க்கும் பொது மொழியாக நம் சமயம் விதித்துள்ள