இன அரசியல் – இன்னும் பிழிகிறது, தமிழன் மெழுகு வர்த்தியா ?

contentwriting_1கொஞ்சம் நாட்களாக ஒரு வகை மின்சாரம் பாய்வது போல் உணர்கிறேன்.நம் நாட்டின் அரசியல் மின்சாரம். ஒவ்வொரு கட்சியும் தனித தனி விசையை வைத்துகொண்டு மண்டைக்கு மூளை நரம்பியல் வைத்தியம் தருகின்றனர்.

நாட்டில் அதிஸ்ட வசமாக ஆளும் கட்சி எதிர்கட்சி என்ற இரண்டு கட்சி நடைமுறையில் பொது தேர்தலை சந்திக்கிறோம். அடுத்த பொதுத் தேர்தல் மும்முனை கட்சி ரோதனையா இருக்கும் என்றும் நம்பலாம்.

உலகம் அறியாத இன கட்சிகளும் பல்லின கட்சிகளும் என்ற பரிணாம உந்துதலில் மலேசியா மக்கள உரசிக்கொண்டு இருக்கிறோம். மேலும் ஒரு படி சென்று பல்லின கட்சிகள் பெர்சே மஞ்சள் நடத்தினர். ஒரு இன கட்சியான அம்னோ சிகப்பு நடத்தினர்.

ஒரு இன கட்சிகளான அம்னோ , ம இ கா , எம் சியே , இன்னும் பல கட்சிகள் தேசிய முன்னணியில் இருந்தாலும் சிவப்பு சட்டையில் இதர கட்சிகள் கலக்கவில்லை. நாட்டின் பிரதமர் சிகப்பு சட்டை நிகழ்வில் காரமான இன உரிமை உச்சத்தை தொட்டார். அது அவரில் உரிமை என்றாலும் ஒரு ஜனநாய நாட்டில் பிரதமர் என்ற கடமையில் கயமையாகத்தான் இருந்தது.

தேசிய முன்னணியை ஆளும் அரசை வழி நடத்தும் ஒரு தலைவர் ஒரு படிப்பினை நாட்டு மக்களுக்கு தந்துள்ளார். என்னதான் பல்லின உணர்வில் சத்து மலேசியா பாடம் சொன்னாலும், இனம் என்று வரும்போது குருதி கொதிக்கும் என்பது ஒவ்வொரு மனித உணர்ச்சிகளாகும் என்பதை உறுதி செய்துள்ளார்.

இப்போது நாட்டின் இன கட்சிகளின் உரிமை பிரதிபலிப்பை சந்திக்கும் முன் . பல்லின கட்சிகளான பி பி பி , கெரக்கான் , டி எ பி ,பிகே ஆர் , இன்னும் பல சபாஹ் சரவாக் கட்சிகளையும் இணைத்து நாட்டின் நவீன அரசியல் சித்தாந்தத்தை கொண்டிருக்கையில் இனக கட்சிகளான அம்னோ ,ம் சீ ச , ம் இ கா, மதம் சார்ந்த பாஸ், இன்னும் பல போன்றவை காலம் கடந்த அல்லது வைராக்கிய பாரம்பரிய அரசியல் சித்தாந்தத்தை கையில் ஏந்தி உள்ளதை அறிவோம்.

நாடு மேம்பாட்டை நோக்கி ஓடினாலும் அரசியல் ரூபத்தில் மீண்டும் இன அரசியல் தலைததொக்கி உலக அதிர்வை தந்துள்ளது. இதில் எல்லா இனமும் அரசியல் ஊடுரவல் செய்ய தமிழர்கள் மட்டும் இந்தியன் அடையாளத்தில் 9 கட்சிகளில் “சுகவீன கபட” நாடகம் நடத்தி வருகிறோம். அனால் ஒரு தனி சிறப்பு அரசியல் தலைவரையும் நாம் காண முடியவில்லை?தமிழர்கள் தேசிய முன்னணி போல மக்கள் கூட்டணியிலும் மங்கிய மடையர்களாக உள்ளோம்.

தேசிய முன்னணியில் இந்தியன் இனககட்சியாகா ம் இ கா எதோ பிச்சி பிடிங்கினாலும் நஜிப் தலைமையில் 3 பிலியன் வரை உரசி உள்ளார்கள். ஆனால் தமிழர்கள் அதே பாவப்பட்ட அரிசி பருப்பு நிலைதான். மக்கள் கூட்டணியில் அரிசி பருப்பு பால் டின் என்ற கூடுதல் டின்னில் அடைப்பட்டு உள்ளார்கள்.

தமிழர்களுக்கு இன ரீதியான தனி கட்சிக்கு நாம் தயாராகி விட்டோமா ? என்பதுதான் இப்புதிரின் விமர்சனம். அல்லது
பல்லின கட்சி பாரம்பர்ய பிறழல் உளறல்தான் நமது பிழைப்பா ?

தமிழர் நாட்டில் தமிழர் கட்சிகள் அரசியல் உரிமை தலை தூக்கி விட்டது.நம் நாடான மலேசியாவின் 1.5 மில்லியன் தமிழர்களின் நிலை இந்தியன் அடிமையில் தலைவன் தந்த மீதியா அல்லது தமிழன் இன பாதுகாப்பா ?

சிறு பான்மை தமிழன் அல்லாத இந்தியன் பதவிக்கும், வணிகத்துக்கும் வசதிக்கும் பல்லின கட்சி என்று பல்லை காட்டுகிறான். இனத்தில் அதிகமுள்ள தமிழன் அதிகம் வாக்குரிமை வைத்துக்கொண்டு இனத்தை “தாரை வார்த்து தந்து” இதரவனுக்கு இன்னும் தொடர்ந்து தலை வணங்குகிறான்.

மா இ கா வில் தமிழன் தலைமை பீடம் வைத்திருந்தாலும் இந்தியன் நரிகள் அனுபவிக்க பல ஜன்னல்களை வாடகை விட்ட கதைதான் கடந்த 30 ஆண்டு கால பொருளாதார இழப்பில் தமிழன் பட்ட அடகு கடை சோத்திரம்.

மா இ கா தான் இன ரீதியான கட்சி என்றால் அதன் இன உரிமை உண்மை திருப்பு முனைக்கு சிலரை கூர்மையாக்கி ஒரு வருசத்துக்கு 10 பிலியன் அரசு மானியத்தை பெரும் அறிவு சார்ந்த தமிழ் தலைவன் வேண்டும்… அல்லது தனி உரிமை பெற தமிழன் தனி கட்சி அமைதல் காலத்தின் விவேகமென உணர்த்த கடமை பட்டுள்ளேன்.

பூனைக்கு யார் மணி கட்டுவது என்ற பழைய பஞ்சாங்கம் வேண்டாம். புலியின் பல்லை புடுங்குவது என்ற அரசியல் வீரத தமிழனை தேடுவோம்.

-பொன் ரங்கன்
தமிழர் குரல்