இந்த இனத்தை பார்த்தீர்களா ? இனத்தலைவர்களை பார்த்தீர்களா ? அரசியல் திமிரை பார்த்தீர்களா ? பாமர மக்களின் தேவைகள் அடுக்கு அடுக்காக இருக்கையில் அரசியல் எலிகள் செய்யும் சேட்டைகளை பார்த்தீர்களா ? எதிர்க்கட்சி தலைவர்களுக்கு இதுதான் வேலையா ? அரசு பதவிகளில் உள்ள தமிழர்களை கருவறுப்பது ஒரு பிழைப்பா போச்சி. அதில் மெச்சிக்க அரசியல் நடத்துவது ஒரு அயோக்கியததனம் என்பேன்.
நடப்பு PKR என்ற சிலாங்கூர் மாநில ஆட்சிக்குழுவில் ஒரு தமிழனை அல்லது ஒரு இண்டியனை பாகாதனில் பேரம் பேசி அமர்த்த முடியாத குலசேகரனும்,ராமசாமியும், சிவநேசனும் ,சிவராசாவும், மணிவண்ணனும், சேவியரும், சுரேன்றனும், மாணிக்காவும் இன்னும் பல எலிகள் …..சாதித்தது என்ன ?
கடந்த தேர்தலில் பேரம் ( அரசியல் வணிகம்) பேசி ஹிண்ட்ராப் வேதமூர்த்தி செனட்டராகி துணை அமைச்சர் பதவி ஏற்றதற்கு மேல் கண்ட “சீட்டு குருவிகள்” வேத மூர்த்தி “இனத்தை அடமானம் வைத்து விட்டார்” அவர் பதவி விலக வேண்டும் என்ற நச்சரிப்பை கொடுத்த இன துரோகிகள் இதுவரை அரசு அரசியல் பதவிகளில் இருந்து இந்த சமுதாயத்துக்கு செய்த துரோகங்கள் தவிர விரல் விட்டு எண்ண எந்த எருமையுயும் காணோம்.
இப்போது தேவமணி மீது அதே பாய்ச்சல் ? ம இ கா சட்ட மன்ற தலைவர் பதவியை எடுக்க முடியுமா ? என்ற சவாலை தந்த சிவநேசன் இப்போது தேவமணியை ராஜநாமா செய்ய சொல்கிறார்.
வீட்டை ( இனத்தை சுத்தம் செய்ய ) வீட்டை எரித்துகொள்ளுங்க்ள என்ற அரசியல் தலைகளின் சிறுபிள்ளைத்தனம்தான் இந்த சமுதாயத்தை அடியோடு சாய்த்துள்ளது. அதற்காக தேவமணி சமுதாயத்துக்கு எதையும் கிழிச்சி முறித்து விட்டார் என்று சொல்ல வரவில்லை. அவரும் வாயாடி வீர வேட்டுதான். தீபாவளி பட்டாசு புகைதான்.
இந்நாட்டு இண்டியன் …ஒரு சிறுபான்மை இனத்தில் 9 அரசியல் “சியால்” கட்சிகள் இதில் பேருக்கு ஒத்து ஊத அரசியல் சன்னியாசிகள் பலர். ஒரு அரசியல் பதவி என்ற ஓடுக்கு, துணையாக சில நன்றி ஜீவன்கள் ,அதுக்கு உதவியாக கையில் ஒரு கம்பு என்ற நிலையில் இனத்துக்கு பிரதிநிதி எனும் கருப்பு திரையில் ”வாயாங் கூலிட்” காட்டி எதோ இண்டியனும் ” ஊளார்” போல உள்ளான் என்ற பெருமையை இழக்க வேண்டாம் என்றே சொல்ல தோன்றுகிறது.
சமீபத்தில் இன உரிமை காரணமாக சீ….னை சந்தித்தேன் அவர் இப்படி துப்பினார் . எல்லாம் சட்ட மன்றத்துக்கும் நாடாளுமன்றத்துக்கும் போய் எண்ண கிழிக்க போறோம் ? என்று கொச்சையாக கேட்டார். அரசு பதவிகளில் எவனாச்சும் இந்த தமிழ் சமுதாயத்துக்கு உதவி இருக்கனா சொல்லுங்க ? உங்க மலேசியாவிலும் அதுதானே என்றார் !
அவர் சாயலில் “மாயிக ,, பிகெஆர் ,டி எ பி என்கிறீர் இன்னும் மக்கள் சக்தி , ஹிண்ட்ராப் என்று சொன்னிங்க அதெல்லாம் இந்த இனத்தை மீட்டு விட்டதா என்று கேக்கிறேன் ..இன்னும் எத்தனை ஆண்டுகள் அவரவர் பதவிக்கும், பொருளுக்கும் அலையிறான். இதில் நம்மையே அடிச்சி அவன் அரசியல பேசுவதால் வந்த ஏமாளித்தனம் என்றார்”
தேவமணி மயிகாவில் ஜெயித்தால் சட்ட மன்ற பதவி விலகுவேன் என்றது அவர் தனி உரிமை . ஆனால் BN , மாயிக்கா
என்ற கட்சிக்குள் சில கடமைகள் உண்டு என்பதால் உயர் தலைவர்கள் ஆலோசனைக்கு வீட்டு விடுகிறேன் என்பதில் ஒரு நாகரீகம் தெரிகிறது ” என்னா தப்பு ” இதுவரை அரசியல் வாதிகள் பேசாத ,சொல்லாத ,கூவாத கூத்தா ? தேவமணி நடத்தை !
அவர் அங்கிருந்தால் பத்து ஏழைகளுக்கு பத்து சட்ட மன்ற உறுப்பினரிடம் உதவி கேக்கலாம். குலா அண்ணன் சொல்வது போல இருந்தால் அந்த பத்து பேருக்கும் கடைசியில் ”நாலு பேருக்கு நன்றி கதிதான்” இந்த சமுதாய சாவு …சவபெட்டிக்கு கூட கமிசன் கேக்கும் அரசியல் பதவிகள் காலம் இது ..ஆக அவரவர் வேலைய பாருங்க.
அரசியல் உரையில் உங்க ”மொக்கததன கத்திகளில் சமுதாயத்தை உரச வேண்டாம். நீங்கள் உங்கள் உத்தியில்
மொக்கைகள்தான் அதிகம்.
அழகான தமிழ் உரை நடையில் நிலை குலையும் தமிழர்களே ! அறிக்கைகள் கொட்டம் அடங்கட்டும்.
அளந்து வைத்த இறைவன் கூட வாய் பேச முடியாமல் அரசியலில் தற்சமயம் அமைதி காக்கிறான். அவன் நேரம் வரும்.
பற்று , பாசம் , வேண்டும் அனால் அதுவே அடுத்த கட்ட தேல்விக்கு இச்சையாக இருக்கககூடாது.
-பொன் ரங்கன், தமிழர் குரல்
மலேசியன் wrote on 14 November, 2015, 17:21
அதுதான் பார்த்தேன், ஏன் இன்னும் யாரும் வாய் திறக்கவில்லை என்று. மாண்புமிகு எம். குலசேகரன்: வாழ்க நன்றி. மாண்புமிகு எம். குலசேகரன் அவர்களே சுங்கை சிப்புட் கி. மணிமாறன் டத்தோ ஸ்ரீ தேவமணிக்கு முழு அமைச்சர் பதவி வழங்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்துள்ளார்.(மலேசிய நண்பன் 14/11/2015 பக்கம் 4). நம்ம நாடு எப்படி, எங்கு போய்க் கொண்டிருக்கிறது என்று தெரியாமலே நமது குட்டி தலைவர் இருக்கிறார்கள். மாண்புமிகு எம். குலசேகரன் இந்தியர்களிடையேயும் மலேசியர்களிடையேயும் மஇகா மீது மீண்டும் நம்பிக்கை வர பாடுபட வேண்டிய கடப்பாடு’ துணைத் தலைவருக்கு உண்டு என்பதால் அவரை விட்டுவிடுங்கள் அவர் மாநிலச் சட்டமன்றத் தலைவராக இருக்கட்டும். இந்த பதவியை அவர் துறந்தால் முழு அமைச்சர் பதவி கிடைக்காது (இவர் மக்களவை உறுப்பினர் இல்லை) அதோடு இந்திய சமூகத்துக்கு வழங்கப்பட்ட மாநிலச் சட்டமன்றத் தலைவர் பதவியும் பறிப்போகும். எது எப்படி இருப்பினும் டத்தோ ஸ்ரீ தேவமணி சட்டமன்றத் தலைவர் பதவியை துறக்கூடாது ஆனால் அனைத்து ம இ கா உறுபினர்களிடமும் மன்னிப்பு கேட்க வேண்டும் (குறிப்பாக அவருக்கு வாக்களித்த 698 உறுப்பினர்களிடம்). மாண்புமிகு எம். குலசேகரன் இந்திய சமூகத்தின் ஒற்றுமையை கருத்தில் கொண்டு அவரை வாழ விடுங்கள்.
ஒரே நாளில் எல்லாவற்றையும் மாற்ற இயலாது! நமது பிள்ளைகளின் கல்வி போதனா முறைகளில் சிறிது ஒற்றுமையும் சேர்த்து ஊட்ட வேண்டும் குறைந்த பட்சம் இன்னும் 20 -30 ஆண்டுகளில் நல்ல பலனை எதிர்பாக்கலாம்.அதுவரை போராட்டத்தை தவிர்க்க முடியாது!
உண்மைதான். தேவமணி சட்டமன்ற சபாநாயகர் பதவியைத் துறக்க வேண்டியதில்லை தமக்கு வாக்களித்தவர்களிடம் மன்னிப்பும் கேட்கவேண்டியதில்லை. முதிர்ச்சியற்ற அரசியல் முடிவுகளினால்தான் ஓர் அமைச்சர் பதவியை இழந்தோம். குலா அவர்களே உங்கள் கோரிக்கை அவசியமற்றது.
ஒரே நாளில் எல்லாவற்றையும் மாற்ற இயலாது.2015ம் ஆண்டின் இறுதியில் இருக்கிறோம். 2016ம் ஆண்டுக்குள் இன்னும் இரண்டு மாதங்களில் நுழைந்து விடுவோம். அப்போது எல்லா தமிழ்ப் பத்திரிக்கைகளிலும் ஒரு பரிதாபமான செய்தி வரும்….. இந்தப் பள்ளியில் மாணவர் எண்ணிக்கை சரிவு….. அந்தப் பள்ளியில் முதலாம் வகுப்பில் மாணவர்கள் யாரும் பதியவில்லை….. பல தமிழ்ப் பள்ளிகளில் மாணவர்கள் இல்லாததால் மூடப்படும் அபாயம்….
இதுபோன்ற அவலங்களைத் தவிர்க்க வேண்டும் என்றால் இந்த அணுகுமுறையைப் பயன்படுத்துவதைத் தவிர வேறு எதுவும் இருப்பதாகத் தெரியவில்லை.
தெரியாமல்தான் கேட்கிறேன்!! இதுவரை சபாநாயகர் பதவியிலிருந்து இந்தியர்களுக்காக மாண்புமிகு தேவமணி சாதித்ததுதான் என்ன?? உயர் பதவியில் ஓர் இந்தியன் இருப்பது பெருமையே!! அந்த பெருமையை வைத்து எருமை மேய்க்கக் கூட வழி இல்லையேல், பதவி இருந்தென்ன இறந்தென்ன??
திரு .பொன்.இரங்கன் அவர்களே ,ஏன் புலம்புத் தளுகின்றீர்கள் , உங்கள் வாழ்ன்நாளில் இது வரையில் யாரையாவது பாராட்டி பேசியுள்ளீர்களா?
நாட்டின் எதிர்கட்சிகள் நன்றாத்தானே ஆட்சி செய்கின்றன, வேறு என்ன வேண்டும், உங்கள்ளுக்கு பதவி வேண்டுமேயானால் கேட்டுப் பெறலாமே.ஒரு காலத்தில் எதிர் கட்சித் தலைவர்களைத் தூக்கோ தூக்குன்னு தூப்பினீர்கள் இப்போது வசைப்பாடுவது ஏன்?
யார் வந்தால் என்ன யார் போனால் என்ன நான் சமூகமலல தனியாள் எதை செய்தாலும் கேட்க நாதிஇல்லை அப்படி விட்டு விடுங்கள் நானும் கூ சூதொங் ஆகிறீன் .