பொலன்னறுவை அருகே விழுந்த விண்கல்லில் பல அரிய உலோகங்கள் காணப்பட்டதையடுத்து பல்வேறு நாடுகளின் விஞ்ஞானிகளும் பொலன்னறுவைக்கு படையெடுத்துள்ளனர்.
கடந்த 2012ம் ஆண்டு பொலன்னறுவை திம்புலாகல பிரதேசத்தில் விண்கற்கள் விழுந்திருந்தது. இதனை சேகரித்திருந்த வானியல் ஆய்வாளர்கள் ரஷ்யாவின் விண்வெளி ஆய்வு மையம் ஒன்றுக்கு மேலதிக ஆராய்ச்சிகளுக்காக அனுப்பி வைத்திருந்தனர்.
குறித்த ஆராய்ச்சியில் விண்ணிலிருந்து விழுந்த கற்களில் டைட்டானியம், தோரியம், யுரேனியம் போன்ற அரிய வகை உலோகங்கள் கலந்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
அத்துடன் அடையாளம் காணப்படாத நுண்ணுயிர்கள் மற்றும் இரண்டு வகையான பக்டீரியாக்களும் குறித்த விண்கற்களில் உயிர்வாழ்வது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து உலகின் பல்வேறு நாடுகளின் விஞ்ஞானிகளின் கவனம் பொலன்னறுவை நோக்கித்திரும்பியுள்ளது.
தற்போது பொலன்னறுவை நோக்கி பல்வேறு நாடுகளின் விஞ்ஞானிகளும் படையெடுத்து ஆய்வுகளில் ஈடுபட்டுள்ளனர்.
-http://www.tamilwin.com