ஷாரியா நீதி மன்றங்களிடம் அதிகாரங்களை நீதிபதிகள் இழப்பதை தடுப்பதற்கு நாடாளுமன்றத்தில் திருத்தங்களை சமர்பிக்க வேண்டுமென்று ஹிண்ராப் வலியுறுத்துகிறது!

hindrafபிள்ளைகள் அரசியலமைப்பிற்கு புறம்பாக மத மாற்றம் செய்யப்படும் சிக்கலான பிரச்னையைத் தீர்ப்பதிலும் அடிப்படை மனித உரிமைகளை காப்பதிலும்   அரசாங்கம் நிலையான வலுவான அரசாங்கம் என நிரூபிக்க வேண்டும் என ஹிண்ட்ராப் வலியுறுதியிருக்கிறது .

இது 45 விழுக்காடு முஸ்லிம் அல்லாத மக்களைப் பொறுத்த விஷயமாகும் . சிறு பான்மையினரின் அடிப்படை உரிமைகளை காப்பதில் த வறிழைக்கப்பட்டிருக்கிறது. அப்பிரச்சனைகளை அரசியல் செல்வாக்கு, அரசையமைப்பிற்கு உட்படாத வகையில் பார்க்காமல் முழுமையாக சட்டத்தின் கொள்ககைகளின் அடிப்படையில் பார்க்க வேண்டும் .
அதிகாரங்கள் துறக்கப்பட்டதனால் குடும்பங்களுக்கு பெரும் துயர் ஏற்பட்டுள்ளது .
– சட்ட தார்மீக காரணங்கலுக்கான கடைசி அரண் நீதி துறையாகும் .

ஆனால் மத மாற்றப் பிரச்னைகளில் உறுதியான ஆக்ககரமான நடவடிக்கைகள் எடுக்கப்படுவதில்லை. கூட்டரசு அரசியலமைப்பில் அளிக்கப்பட்டுள்ள அடிப படை , சிறு பான்மை உரிமைகள் பாது காக்க  ப்படுவதில்லை.அரசியலமைப்பின் 121 (1) (ஏ) சட்ட விதியும் , 12 (4) வது விதியும் பெற்றோர் என்ற சொல்லுக்கு தவறான வியாக்கியானம் செய்யப்படுகிறது.

பிள்ளைகளின் ஒரு தலை பட்சமான மத மாற்றத்திற்கு தடை விதித்த 2009 ஆம் ஆண்டு அமைச்சரவை உத்தரவை செயல்படுத்துவதற்கு அரசாங்கம் உறுதியான நடவட்டிக்கை எடுக்க வேண்டும். திரூ மணம் பதிவு செய்யப்பட்ட போது இருந்த நிலைமைக்கு ஏற்ற பிள்ளைகளின் பராமரிப்பு உரிமை அமைய வேண்டும் என்ற அடிப்படையில்  1976 சட்ட சீரமைப்பு ( திருமணம் , விவாக ரத்து ) இஸ்லாமிய குடும்ப சட்டங்கள் அமையும் வகையில் திருத்தம் செய்யப்பட வேண்டும் .  ஒருவர் பின்னர் மதம் மாறினாலும் இந்த முறை  கடைப்பிடிக்கப்பட  வேண்டும் .

முஸ்லிம் களூகும் , முஸ்லிம் அல்லாதாருக்கும் சமமான உரிமைகள் இருக்கும் வகையில் 12(4) 121(1) (ஏ)  விதிகளில் அர சாங்கம் திருத்தம் செய்ய வேண்டும் . அது தெளிவாக இருக்க வேண்டும் . சிவில் சட்டங்கள் ஷாரியா சட்டத்திற்கு குறைவானதல்ல  என்று முன்னாள் பிரதமர் துன் டாக்டர் மகாதிர் முகமட்  நாடாளுமனறத்தில்  நாடாளுமன்றத்தில் கூறியுள்ளார்.

ஷாரியா சட்டம் அரசியலமைப்பில் உள்ள அடிப்படை மனித உரிமைகளை மீறாதென்றும் மகாதிர் தெரிவித்துள்ளார்.
ஆகவே அததிருத்தங்கள்  செய்யப்படும் வரை சமமான சிவில் நீதித் துறை அனைவருக்கும் கிடைக்காது .

இது சமயம அல்லது சமய மேலான்மையைப் பற்றியது அல்ல . நாட்டின் சட்டத்தில் உள்ள தெளிவற்ற நிலையினால் நீதிபதிகளின் நீதித் துறை அதிகாரம் தொடர்ந்து பறிக்கப்படுமா என்பது தான் கேள்வி. அரசாங்கம் சிறந்த குடிமக்களை உருவாக்கும் நிலைமைக்கு வழி வகுக்க  வேண்டும்..இல்லாவிட்டால் நீதியற்ற சமூக உருவாக்கத்திற்கு வழி வகுத்து விடும்,

-வேத மூர்ததி

தலைமை ஹிண்ட்ராப் .