1930களில் மொழிவாரி மாநில உரிமைகள் அளிக்கப்பட்டபோதுமுற்கால வரலாறு அனைத்தும் மறந்துவிட்டு
ஐனநாயக முறைப்படி நேர்மையாக
அன்றைய சூழலில் மக்களின் பெரும்பான்மை மற்றும் நில அமைப்பை அடிப்படையாகக் கொண்டு
“தமிழ் மாநிலம்”அமைக்கப்பட்டிருந்த
இது தவிர குடகு நம்முடன் இணையத் தயாராக இருந்தது.
அந்தமான் தீவுக்கூட்டத்தில் பெரிய தீவான பெரிய-அந்தமானில் தமிழர் பெரும்பான்மை என்றவகையில் அத்தீவுக்கூட்டம் முழுவதும் நமக்குக் கிடைத்திருக்கும்.
இது நடந்திருந்தால் காவிரி, பாலாறு, முல்லைப்பெரியாறு, மீனவர் பிரச்சனை, ஈழப் பிரச்சனை, மலையகத் தமிழர் பிரச்சனை, அகதிப் பிரச்சனை என எந்த பிரச்சனையும் இருந்திருக்காது.
நாம் 1900களில் மற்ற இனங்களைப் போல அரசியல் விழிப்புணர்வும் இனவுணர்வும் பெற்றிருந்தால் நாம் இன்று சந்திக்கும் பல பிரச்சனைகள் இருந்திருக்காது.
மனம் சோராமல் இழந்ததை மீட்போம்.
__________________
தமிழகம் இழந்த பகுதிகள்
மானங்கெட்ட தமிழர்கள் இதனை கட்டாயம் படிக்க வேண்டாம்:
(கருத்தாக்கம்:
தாமோதரசாமி புதியதலைமுறை வழியாக
–>தமிழ்
கருத்துகள்)
தமிழ்நாடு இழந்த பகுதிகள்:-
நம் அரசியல் தலைவர்கள் அக்கறை காட்டாததால் தமிழகம்
அண்டைமாநிலங்களிடம் இழந்த நிலப்பகுதியின்
அளவு சுமார் 70,000 சதுரகிலோமீட்டர்கள்.
அந்தப்
பகுதிகள் நம்மிடம் இருந்திருந்தால் இன்று நாம்
சந்திக்கும் நதி நீர்ப்பிரச்சினைகள்
இருந்திருக்காது.
‘முல்லைப் பெரியாறு பிரச்சினையில் கேரளத்தவர்
நடந்துகொள்ளும் முறையைப்
பார்க்கும்போது கேரளாவோடு சேர்க்கப் பட்ட தமிழ்நிலப் பகுதிகளான தேவிகுளம், பீரிமேடு போன்ற
பகுதிகளை மீண்டும் தமிழகத்தோடு இணைக்கவேண்டும்
என்று கேட்க வேண்டிய நிலைமை ஏற்பட்டிருக்கிறது’
என்று இன்று அரசியல்வாதிகள் பேச ஆரம்பித்திருக்கிறார்கள்.
ஆனால், வரலாற்றை திரும்பிப்பார்த்தால்
மொழிவாரி மாநிலங்கள் பிரிக்கப்பட்டபோது தமிழ்நாடு இழந்த பகுதிகள் பல.
அவை தமிழ்நாட்டோடு இருந்திருந்தால் இன்று நாம்
சந்திக்கும் நதி நீர்ப்பிரச்சினைகள்
இருந்திருக்காது.
முல்லைப் பெரியாறு மட்டுமல்ல,
காவிரி, பாலாறு பிரச்சினைகள்கூட.
நாம் இழந்த
நிலப் பகுதிகளை ஒப்பிடுகையில் தேவிகுளம்,
பீரிமேடு என்பது கஜானாவையே கொள்ளை கொடுத்து விட்டு ஒற்றை மூக்குத்
திரும்பக் கேட்பது போலத்தான்.
ஏனென்றால், தமிழகம்
அண்டை மாநிலங்களிடம் இழந்த நிலப்பகுதியின்
அளவு சுமார் 70,000 சதுர கிலோமீட்டர்கள்.
அப்படி பல்லாயிரம் சதுரகிலோ மீட்டர் நிலப்
பகுதிகளை தமிழகம் இழக்கக் காரணம், நமது அரசியல்
கட்சிகள்.
இந்தக் கட்சி, அந்த இயக்கம் என்ற பேதம்
இல்லாமல் எல்லோருமே அந்த இழப்புக்கு துணை போன
அரசியலையே செய்தார்கள் என்பது வரலாறு முன்
வைக்கும் கசப்பான உண்மை.
நாடு விடுதலை பெற்றதும் மொழிவாரி அடிப்படையில்
மாநிலங்களைப் பிரிக்கவேண்டும் என்ற குரல்கள்
அடுத்தடுத்து இந்தியா முழுக்க எழுந்தன.
அப்படிக்
குரல் எழுப்பியவர்கள் பிரிவினைவாதிகள் அல்ல.
வெள்ளையனை வெளியேற்றவேண்டும் என்பதற்காக
சுதந்திரப் போராட்டத்தில் பங்கேற்றுச்
சிறை சென்றவர்கள்.
அதிலும் குறிப்பாக காங்கிரஸ்
இயக்கத்தில் இருந்தவர்கள்.
முதன் முதலில் மராத்தி மொழிபேசும்
மக்களுக்கு தனியாக மராட்டிய மாநிலம் அமைக்கவேண்டும் என்று ‘சம்யுக்த மகாராஷ்டிரா சமிதி’ என்ற
அமைப்பை ஏற்படுத்தி, போராடத் துவங்கியவர்
விடுதலைப் போராட்ட தியாகியான சங்கர்ராவ் தேவ்.
அடுத்து, குஜராத் மாநிலத்தில் ‘மகா குஜராத்
ஜனதா பரிஷத்’ என்ற அமைப்பின் மூலம் போராடத்
துவங்கினார் இந்துலால் யக்னிக்.
அதன் பிறகு தென்னிந்தியாவில் தனி ஆந்திர மாநிலப்
போராட்டம் எல்லாவற்றையும்விட பெரியஅளவில் விஸ்வரூபம் எடுத்தது.
அடுத்து கர்நாடகா,கேரளாவிலும்
போராட்டங்கள்.
ஆனால், தமிழ்நாட்டில்
அப்படி ஒரு போராட்டம் எழவேஇல்லை. இங்கிருந்த
தேசிய உணர்வு, திராவிட
உணர்வு இரண்டுமே அதற்கு காரணம்.
வெள்ளையர் ஆட்சியில், சென்னை ராஜதானி என்ற பெயரில்
இன்றைய நான்கு தென்மாநிலங்களும் ஒன்றாக இருந்தன.
அதனால், சென்னையும் தமிழ் மண்ணும் அரசியல்
சமூகரீதியாக கேரள, ஆந்திர, கன்னடர்களும்
உரிமையோடு செயல்படும் நிலமாகவே இருந்தது.
மொழிவாரி மாநிலங்கள் பிரிக்கப்பட்டபோது தென்
இந்தியாவில் கேரள,கன்னட, ஆந்திர மாநிலத்தவர்
காலகாலமாக தமிழ் நிலப் பகுதிகளாக இருந்த
பகுதிகளை தங்கள் மாநிலத்தோடு இணைக்கக்
கோரி போராடினர்.
அதில் முதன் முதலாக
வெற்றிபெற்றவர்கள் கேரள மாநிலத்தவர்தான்.
அகஸ்தீஸ்வரம், தோவாளை,நெய்யாற்றுப் பகுதி, நெடுமங்காடு, இடுக்கிமாவட்டத்தின் பெரும்பகுதி,
வண்டிப் பெரியாறு, தேவிகுளம்,பீரிமேடு, குமுளி,
கொச்சின்சித்தூர், பாலக்காடு பகுதிகள்
போன்றவை எல்லாம் இன, மொழி,வரலாற்று, இலக்கிய
ரீதியாக தொடர்புடைய தமிழகத்துடன்இணைக்கப்பட்டிருக்க வேண்டும்.
ஆனால் நடக்கவில்லை.
மொழிவாரி மாநிலப்போராட்டம் பொங்கி பிரவகித்த
நிலையில் 1954ம் ஆண்டு மொழிவாரி மாநிலம் பற்றி ஆராய்ந்து அறிக்கை தர, பசல் கமிஷன் என்ற
ஒரு கமிஷனை மத்திய அரசு நியமித்தது.
அந்த
கமிஷனிடம் கேரளத்தவர்கள் மேலே குறிப்பிட்ட
பகுதிகளைத் தவிர கோவைமாவட்டத்தின் மேற்குப்
பகுதி, நீலகிரி,கூடலூர், ஊட்டி ஆகிய
பகுதிகளையும் கேட்டனர்.
அன்று (இன்று போல) கேரளத்தவர்கள் அரசியலிலும்
நிர்வாகத்திலும் செல்வாக்கோடு இருந்தனர்.
அன்று நேருவின் அமைச்சரவையிலும் வெளிநாட்டுக்
கொள்கை ரீதியான பதவிகள், அயல்நாட்டு தூதரகப்
பதவிகள், சர்வதேச நெருக்கடிகளுக்கு பரிகாரம்
காணும் பதவிகள்,மூன்று மெய்க்காப்பாளர் பதவிகள்,
நேருவின் அந்தரங்கச் செயலாளர் பதவி, அகில இந்திய
காங்கிரஸ் செயலாளர் பதவி, பாராளுமன்ற
எதிர்க்கட்சித்தலைவர் பதவி என்று பல
பொறுப்புக்களில் கேரளத்தவர் இருந்தனர்.
தவிர மொழிவாரி மாநிலம்
பற்றி ஆராய்ந்து அறிக்கை தர அமைக்கப்பட்ட பசல்
கமிஷனிலேயே கே.எம்.பணிக்கர் என்ற
மலையாளி பொறுப்பில் இருந்தார்.
தமிழகம் சார்பில்
யாரும் இல்லை.
அவர், ‘தனக்கு தேவிகுளம், பீரிமேடு பகுதிகளில் நிறைய தேயிலைத் தோட்டங்கள்
இருப்பதால் அவற்றை தமிழ்நாட்டுக்குத் தரமுடியாது’
என்று சொன்னதாகக் கூறப்படுகிறது
(காண்க:பெட்டிச்
செய்தி).
ஆனால், இந்த விஷயத்தில் கேரளத்தவரை மட்டும்
குறைசொல்லிப் பயனில்லை.
நம் அரசியல்கட்சிகளும்,
தலைவர்களும் தமிழ் மண்ணைவிடக்
கட்சிவிசுவாசத்திற்கே முக்கியத்துவம் அளித்தனர்.
தேவிகுளம்,
பீரிமேடு பகுதிகளை கேரளத்தோடு இணைப்பதற்கு எதிராக போராடிய பி.எஸ்.மணி என்ற தலைவர்
சென்னை வந்து காமராஜரை சந்தித்து, ‘தேவிகுளம்,
பீரிமேடு பகுதிகள் காப்பாற்றப்படவேண்டும்’ என
வேண்டினார்.
அப்போது காமராஜர் ‘குளமாவது மேடாவது’ இந்தியாவில்தானே
இருக்கிறது மணி, காங்கிரஸ் வேலையைப் போய்ப் பார்’
எனச் சொல்லி அனுப்பினார்.
மணி, ‘தினமணி’ ஆசிரியர்
ஏ.என்.சிவராமனைச்
சந்தித்து பிரச்சினையை விளக்கினார்.
அவர்,
‘குளமாவது மேடாவது’ என்ற தலைப்பில்,‘தினமணி’யில்
தலையங்கம் ஒன்று எழுதினார்.
சி.சுப்ரமணியம்
ஒருமுறை, ‘தேவிகுளம், பீரிமேடு நமக்கு வேண்டும்’
என சட்டமன்றத்தில் வாதிட்டவர்.
ஆனால், மத்திய
தலைமையின் கருத்துவேறாக இருக்கிறது எனத்
தெரிந்தபோது, 1956 மார்ச் 28ம் தேதி பசல்
கமிஷனின் அறிக்கையை சட்டமன்றத்தில்
அறிமுகப்படுத்தி அதை ஏற்குமாறு வாதிட்டவரும்
அவர்தான்.
தேவிகுளம், பீரிமேடு போராட்டம் பற்றி விவாதிக்க
1956ம் ஆண்டு ஜனவரி 27ம் தேதி சென்னையில்
அனைத்துக்கட்சிக் கூட்டம் ஒன்று நடந்தது.
அதில்
அண்ணா கலந்து கொள்கிறார் என்ற காரணத்தால் பெரியார்
அந்தக்கூட்டத்தில் பங்கேற்கவில்லை.
(காண்க:அண்ணாவின்
கடிதம்).
‘மொழிவழி பிரிந்து இனவழி ஒன்றுபட்டு சோஷலிச
திராவிடக்குடியரசு கூட்டாட்சி’ காணும் கனவில்
இருந்த திமுக,காங்கிரசிற்கு எதிராகக்
கூட்டணி காண்பதிலும் மாநிலஉரிமைகள் சார்ந்த
வேறு பிரச்சினையிலும் காட்டிய ஆர்வத்தை இந்தப்
பிரச்சினையில் காட்டவில்லை.
‘பெரியாரும் அண்ணாவும்
தட்சிணப் பிரதேசத் திட்டத்தை எதிர்ப்பதிலேதான்
அதிக அக்கறை காட்டினார்கள்.
தேவிகுளம்,
பீரிமேடு பிரச்சினையில் அவ்வளவாக
அக்கறை காட்டவில்லை’ என்று,
‘எனது போராட்டங்கள்’
நூலில் எழுதுகிறார் ம.பொ.சி.
பிரச்சினை வலுவாக இருந்தபோது அந்த
ஆண்டு கம்யூனிஸ்டுக் கட்சியின் அகில இந்திய
மாநாடு சென்னையில் நடக்கவேண்டிஇருந்தது.
ஆனால்,
கேரள மாநிலத்தவர் அதை தங்கள் செல்வாக்கால்
கேரளாவுக்கு மாற்றினர்.
அங்கு திடீர் என அந்த
மாநாட்டில், ‘தேவி குளம்,பீரிமேடு பகுதிகள்
கேரளாவுக்கே சொந்தம்’ என்று தீர்மானம் போட, தமிழக
கம்யூனிஸ்ட் தலைவர்கள் அதைஎதிர்க்காமல் கட்சிக்
கட்டுப்பாடு என்ற பெயரில் அதை ஏற்றுக் கொண்டனர்.
(ஆனால், ஜீவா எல்லைகளை மீட்கத்
தொடர்ந்து போராடினார்).
அப்போது தமிழக அரசின் தலைமைச் செயலாளராக
இருந்தவர் கேரளத்தைச் சேர்ந்தவர்.
தேவிகுளம்,
பீரிமேடு பகுதிகள் யாருக்கு சொந்தம் என்பது பற்றிப்
பேச, தமிழக-கேரள மாநிலத் தலைமைச் செயலாளர்களின்
கூட்டம் திருவனந்தபுரத்தில் நடந்தது.
அப்போது தமிழக அரசின் தலைமைச் செயலாளரான வர்கீஸ்
அந்தப் பகுதிகளை கேரளாவுக்குத் தர சம்மதம்
தெரிவித்துக் கையெழுத்திட்டார்.
‘தமிழக அரசின்
தலைமைச் செயலாளரான நீங்கள்
இப்படி தமிழகத்துக்கு எதிராக கையெழுத்துப்
போடலாமா?’ என்று ஒரு நிருபர் கேட்டபோது,
‘அந்தப்
பகுதிகள் இல்லாவிட்டால் கேரளா ரொம்பக் கஷ்டப்படும்’
என்றார் வர்கீஸ்.
இவற்றிற்கு எதிராக நேசமணி, ம.பொ.சிவஞானம்
போன்றோர் செய்த சில போராட்டங்களின் விளைவாக
கேரளத்தவர் தங்களுக்கு கொண்டு போக நினைத்த
செங்கோட்டை, அகஸ்தீஸ்வரம், தோவாளை, கன்னியாகுமரி பகுதிகள் மட்டும் மீட்கப்பட்டன.
ஆனால்,
தமிழகத்தோடு சேர வேண்டிய சுமார் 1,500 சதுரகிலோமீட்டர் நிலப் பகுதி கேரளாவுக்கு போயிற்று.
அதில் முக்கியமாகக் குறிப்பிடப்பட
வேண்டியது செங்கோட்டை தாலுகாவில் இருந்த சில
பகுதிகள்.
1950களிலேயே ஆண்டுக்கு சுமார்
எட்டு கோடி ரூபாய் வருமானம் தந்து கொண்டிருந்த
வனப்பகுதியை தமிழகம் இழந்தது.
இந்த 1,400 சதுர கிலோமீட்டர் பகுதி மட்டும்
நியாயமாக தமிழகத்துக்கு வந்திருந்தால் இன்று முல்லைப் பெரியாறுபகுதி முழுக்க நம்மிடம்
இருந்திருக்கும்.
பிரச்சினையே கிடையாது.
பவானி நதிப் பிரச்சினை கிடையாது.
தமிழ்ப் பண்பாட்டு இலக்கிய வடிவமான கண்ணகிக்கோயில்
நம்மைவிட்டுப் போயிருக்காது.
அங்கு நாம் வழிபடப்
போனாலே, கேரள போலீசாரிடம் அடிபடும்
நிலைமை வந்திருக்காது.
சிறுவாணி அணையின் ஒருபகுதியை தம்மிடம்
வைத்துக்கொண்டு சிறுவாணித் தண்ணீருக்கும் கடிவாளம்
போட கேரளத்தவர் போடும் நினைப்புகளுக்கே
வாய்ப்பிருந்திருக்காது.
எல்லா பிரச்சினைகளுக்கும் காரணம், தமிழகத்துடன்
சேர வேண்டிய 1,400 சதுரகிலோமீட்டர் பரப்பை நாம்
இழந்ததுதான்.
கேரளாவிடம் இழந்தது இப்படி என்றால், ஆந்திராவிடம் இழந்தது இன்னும் அதிகம்.
சுதந்திரம் வாங்குவதற்கு முன்பு ஆந்திராவின் ராயலசீமாவே தமிழர்கள் அதிகம் வாழ்ந்த பகுதிதான்.
திருப்பதிக் கோயில் கருவறை சுவர் கல்வெட்டுகளில்கூட தமிழ் எழுத்துகளே உள்ளன.
திருப்பதியில் இருந்த
தனித்தமிழ் பள்ளிகள்,அங்கு தமிழ்க் கலைகாலகாலமாக
வளர்ந்த விதமே அழகு.
1912ம் ஆண்டு ஆந்திரப்பிரதேச காங்கிரஸ்
சென்னை மாகாணத்தில் இருந்து ஆந்திரப்
பகுதிகளை பிரித்து தனி மாநிலம் அமைக்கவேண்டும்
என்று கோரிக்கை வைத்தது.
தமிழகத்தில் திராவிடம்
பேசிக்கொண்டிருந்த நீதிக் கட்சியின்
ஆந்திரப்பிரதேசக்கிளையும்
அதே கோரிக்கைவைத்தபோது இங்கிருந்த நீதிக்கட்சிப்
புரவலர்கள் அதைக் கண்டிக்கவில்லை.
மொழி வாரி மாநிலங்கள் பிரிக்கப்பட்டபோது
தமிழ்நாட்டுடன் இணைக்கப்பட்டிருக்க வேண்டிய சித்தூர் மாவட்டம்,
நெல்லூர் மாவட்டம்,இவற்றில் தங்கிய
திருப்பதி,காளகஸ்தி, புத்தூர், நகரி,ஆரணியாறு,
வடபெண்ணைஆறு, பொன்வாணி ஆறு இவற்றின் வளமான
பகுதிகள்,நந்தி மலை இவை எல்லாம்
ஆந்திராவோடு போயின.
இதன் பின்னால் விதியின் விளையாட்டு ஒன்றுண்டு.
மொழிவாரி மாநிலப் பிரிவினைக்காக அமைக்கப்பட்ட
பசல் கமிஷன் ஒரு விதியை வரையறுத்தது.
அதாவது,
பிரச்சினைக்குரிய பகுதிகளில் வாழும் மக்களின்
மொழி என்ன என்பது முக்கியம் இல்லை.
அங்கு உள்ள நிலம் யாருக்கு அதிகம்
உரிமைப்பட்டதாக உள்ளது என்பதைப்
பொறுத்தே சம்பந்தப்பட்ட மாநிலத்துடன்
இணைக்கப்படும் என்று முடிவு எடுத்தது.
அதன்படியே கேரள எல்லையை ஒட்டிய தமிழ்
நிலப்பகுதிகள் கேரளாவுடன் இணைக்கப்பட்டன.
ஆனால், தமிழ்நாடு-ஆந்திரப்
பிரிவினையின்போது நடந்தது என்ன தெரியுமா?
வடக்கே இருந்து பிழைப்பு தேடி வந்த
தெலுங்கு பேசும் மக்கள் நெல்லூர், சித்தூர்
பகுதிகளில் குறிப்பிட்ட எண்ணிகையில் இருந்தனர்.
ஆனால், நிலத்தின் உரிமையாளர்கள்,
தமிழர்களாகவே இருந்தனர்.
ஆனாலும் இங்கு விதியைத் தலைகீழாக
மாற்றியது அப்போது மத்திய அரசு அமைத்த படாஸ்கர்
கமிஷன் என்ற கமிஷன்,
‘நிலம் யாருடையது என்பது முக்கியம் அல்ல. வாழும்
மக்களின் மொழிதான் முக்கியக் கூறு’
என்று சொல்லி எல்லாபகுதிகளையும் ஆந்திராவுடன்
இணைத்தது.
வடபகுதியில் மங்கலங்கிழார், ம.பொ.சிவஞானம்
போன்றோர் மட்டுமே இதை எதிர்த்து தீவிரமாகப்
போராடினர்.
இராஜாஜி இவர்களுக்கு ஆதரவாக இருந்தார்.
ஆனாலும் தமிழத்தின் தேசிய
திராவிட அரசியல் நிலவரம் இந்த
அநியாயங்களை தடுக்க பெருவாரியாக
முன்வராததால், முறைப்படி தமிழகத்துக்கு வரவேண்டிய நிலப்பகுதியில்
திருத்தணி, வள்ளிமலை,
திருவாலங்காடு போன்ற பகுதிகள்
மட்டுமே தமிழகத்துக்கு கிடைத்தன.
1960ம் ஆண்டு ஏப்ரல் மாதம் ஒன்றாம்
தேதி வரையறுக்கப்பட்ட
எல்லைகள்படி தமிழ்நாட்டுடன் இருந்த 32,000 சதுர
கிலோ மீட்டர்
நிலப்பகுதி ஆந்திராவுக்கு தரப்பட்டது.
சேலம், செங்கல்பட்டு மாவட்டங்களில் இருந்து சுமார்
525 சதுர கிலோமீட்டர் பகுதி,
ஆந்திராவுக்கு அளிக்கப்பட்டது.
ஆரணியாறு அணைக்கட்டு ஆந்திராவுக்குப் போனது.
திருப்பதி பறிபோனது.
காளஹஸ்தி போனது.
நந்தி மலை போனது.
நந்தி மலை நம்மோடு இருந்திருந்தால்
பாலாற்றுப் பிரச்சினை எழுந்திருக்காது.
சென்னையையே ஆந்திரர்கள் தங்களுக்குக் கேட்டார்கள்.
பல தமிழ் நிலப் பகுதிகளை இழந்து அதைத்
தக்கவைத்துக் கொண்டார்கள் நம் அரசியல்வாதிகள்.
இந்த கேரள, ஆந்திர,
சென்னை விவகாரங்களிலாவது அரசியல்கட்சிகள் சில
போராட்டங்களை நடத்தின.
அறிக்கைகள் விட்டன.
ஆனால், கர்நாடகாவிடம்
நாம்
இழந்தது என்பது தூக்கத்தில் திருட்டுக்
கொடுத்ததற்கு சமம்.
காவிரி எங்கே உற்பத்தி ஆகிறது என்றால்,
குடகு மலை என்று எல்லோருக்கும் தெரியும்.
பழந்தமிழில் குடக்கு என்றால்,
மேற்கு என்று பொருள்.
அங்கு வாழும் மக்கள் பேசும் மொழி கூர்க்
மொழி.
சுமார்முக்கால்
நூற்றாண்டுக்கு முன்புவரை கன்னடர்களும்
கூர்க்
மக்களும் அரசியல் ரீதியாக விரோதம் பாராட்டிக்கொண்டிருந்தார்கள். அதனால்,
மொழிவாரி மாநிலப்
பிரிவினையின்போது இந்த கூர்க் மக்கள்,
‘நாங்கள்
எங்கள் மொழி மற்றும் கலாச்சாரத்தின்
அடிப்படையாக
இருக்கும்
தமிழ்நாட்டோடு இணைந்துவிடுகிறோம்’
என்று சொன்னார்கள்.
அதற்காக அந்த மக்கள்,
கன்னடர்களை எதிர்த்து ஆயுதம் ஏந்தி சிறிய
அளவில்
போராடியதுகூட உண்டு.
நாம் சற்றே கண்காட்டி இருந்தால்கூட அவர்கள்
ஓடி வந்து ஒட்டிக்கொண்டிருப்பார்கள்.
அப்படி தமிழகத்தோடு இணைந்து இருந்தால்,
காவிரித்தாய் ‘தமிழகத்திலேயே’ உற்பத்தியாகி,
தமிழகத்திலேயே கடலில் கலந்திருப்பாள்.
நமக்கு காவிரிப் பிரச்சினையே வந்திருக்காது.
தமிழகத்தின் நெற்களஞ்சியம் பதராகி இருக்காது.
கன்னடர்கள் திட்டமிட்டுப் போராடியதால்
முறைப்படி தமிழ்நாட்டுக்கு வர வேண்டிய
பெங்களூரு,
மைசூரு மாவட்டத்தின் ஒரு பகுதி, கோலார்
தங்கவயல்
பகுதிகள் கர்நாடகாவுக்குப் போயின.
பெங்களூரைத் தங்கள் வசமாக்கிக்கொள்ள
கர்நாடகத்தினர் காய் நகர்த்திய விதம், அவர்கள்
எவ்வளவு புத்திசாலிகள் என்பதைக்
காட்டுகிறது.
ஒரு மாநிலத்துடன் ஒரு பகுதி இணைக்கப்பட
வேண்டும்
என்றால் முதலில் நிலத் தொடர்பு,
அடுத்து மொழித்
தொடர்பு இருக்க வேண்டும் என்பது விதி.
ஓசூரில்
அப்போது தெலுங்கு பேசுவோர் 39
சதவிகிதமும்
அடுத்து, கன்னடம் பேசுவோர் 35 சதவிகிதமும்
இருந்தனர்.
தெலுங்கு பேசும் மக்களே அதிகம்
இருந்தாலும்
ஆந்திராவோடு நிலத்தொடர்பு இல்லை என்ற
காரணத்தால், அதை ஆந்திரா கைவிட்டது.
அன்று அது வறண்ட
பூமி என்பது வெளியே சொல்லப்படாத
காரணம். ஆந்திராவோடு அது இணைக்கப்படாத
பட்சத்தில்
கன்னடம் பேசுவோர் அதிகம் இருந்ததால்,
அதை கர்நாடகாவோடுதான் இணைத்திருக்க
வேண்டும்.
ஆனால்-
பெங்களூரு விவகாரம் வந்தபோது, கன்னட
மக்கள் அதிகம்
இருந்தாலும் நாங்கள் ஓசூரை தமிழகத்துக்குக்
தந்துவிட்டோம். அதற்குப் பதிலாக கன்னடம்
பேசும்
மக்களை விட தமிழ் பேசும் மக்கள் அதிகம்
இருந்தாலும்
நாங்கள் பெங்களூரை எடுத்துக்கொள்கிறோம்
என்று கோரிக்கை வைத்தது கர்நாடகா.
தமிழகம் அதற்கு உரிமையான
நிலப்பகுதிகளை இழந்ததற்கு, தமிழகத்தில்
அன்று நிலவிய மண் சார்ந்த உணர்வு இல்லாத வாய்ச்சவடால் அரசியல்தான் காரணம்.
இன்றைய தமிழகத்தின் பரப்பளவு 1,30,609
சதுர
கிலோமீட்டர்கள் தமிழகம்
அண்டை மாநிலங்களிடம் இழந்த
நிலப்பகுதியின் அளவு சுமார் 70,000 சதுர
கிலோமீட்டர்கள். இவையும்
நம்மோடு இருந்திருந்தால்
தமிழகம், கர்நாடகாவைவிட இன்னும் பெரிய
மாநிலமாக
இருந்திருக்கும்.
அப்போதும் ஆந்திராவைவிட
சற்று சிறிய மாநிலமாக இருந்திருக்கும்
என்றாலும்கூட, தமிழகமே மற்ற தென்னிந்திய
மாநிலங்களைவிட வளமான மாநிலமாக
இருந்திருக்கும்.
நன்றி: அசுஆ சுந்தர் (Asa sundar)
மேலும் அறிய,
தமிழகம் இழந்த பகுதிகள்
vaettoli.blogspot.in/2016/
— with கரிமா வளவன் and Asa Sundar.
ஆந்திர,கர்நாடக,கேரளா,சிறிய லங்காவிடம் இழந்த அனைத்து நிலங்களுடன் தனி தமிழர் நாடு ஒன்றே தீர்வு! இல்லையேல் உலக தமிழர்கள் என்றென்றும் அகதிகள்!!!
வாழ்ந்து கெட்டவன் தமிழன் என்பதற்கு இதை விட நற்சான்று கிடைக்குமோ?. தமிழருக்கு இருந்த யாதும் ஊரே யாவரும் கேளீர் என்ற பரந்த மனப்பான்மையே தமிழனை அழிக்க வல்லதாயிற்று. தமிழன் சிந்திப்பதற்கு சோம்பல் பட்டான். இவன் சோம்பலை சாதகமாக்கிக் கொண்டனர். சாமார்த்தியசாலிகள். இன்னும் தமிழ் நாட்டுத் தமிழர் திருந்திய பாடில்லையே. நெஞ்சு பொறுக்குதில்லையே இந்த நிலைகெட்ட தமிழரை நினைந்தால் நெஞ்சு பொறுக்குதில்லையே.
“மானங் கெட்டத் தமிழர்களென்று” வேறு சொல்லிவிட்டீர்கள்; பொதுவாக புலம் பெயர்ந்தத் தமிழர்கள் மானங் கெட்டு வாழவில்லை; கொஞ்சம் தன்மானத்தோடும் சுயமரியாதையோடும் இன்றும் எல்லோரும் தங்கள் தங்கள் நாடுகளில் வாழ்ந்துக் கொண்டிருக்கின்றார்கள்; இந்த இரண்டையும் தமிழகத்தில்தான் போய்த் தேடவேண்டும். இவர்கள் திராவிடம், அப்புறம் தேசியம் என்று இந்த இரண்டுக் கொட்ப்பாடுகளையும் சொல்லிச் சொல்லிச் இந்த இரண்டாலும் தமிழகத்தில் ஒன்றன் பின் ஒன்றாக எல்லாவற்றையும் இழந்துக் கொண்டிருக்கின்றார்கள். இவர்களுக்கு திராவிடமும் புரியவில்லை; தேசியமும் விளங்கவில்லை. தமிழைப் படிப்பதும், அந்தத் தமிழை நேசிப்பதும், காப்பதும் நம் உரிமை; இந்த உரிமையைக் கூட இவர்கள் நன்கு உணரவில்லையே. “பரந்த மாநிலம்” என்றக் கட்டுரையை இவர்கள்தான் முதலில் படிக்க வேண்டும். பிறகு சிந்திக்க வேண்டும்.
வீர நாயக்கர் இனத்தின் வரலாற்று பதிவுகள்
April 21, 2013 ·
இலங்கை நாயக்கர்கள் :
தஞ்சை, சிவகங்கை, ராம்நாடு, தூத்துக்குடி, திருநெல்வேலி, நாகை, திருவாரூர் , கடலூர் போன்ற தமிழக ஊர்களில் இருந்து 17 ஆம் நூற்றாண்டு நாயக்கர் படைகள் பெருவாரியாக இலங்கைக்கு செல்கின்றது. இவர்கள் யாவரும் நாயக்கர் பிரிவில் கவரை, சில்லவார் ராஜகம்பளம் மக்களாகவும், சில கம்மவார் பிரிவினரும் சென்றுள்ளனர்.
மதுரை, தஞ்சாவூர் நாயக்கர் படைகள் கண்டி என்ற இலங்கையின் ஒரு பகுதிக்கு சென்று நாயக்கர் ஆட்சியை நிறுவினர். இதில் கடைசி மன்னர் விக்ரம ராஜ சிங்க நாயக் என்பவர் ஆங்கிலேயருக்கு எதிராக போராடினார் என்பதால் அவரை ஆங்கிலேயர்கள் பிடித்து தமிழகத்தின் வேலூர் கோட்டையில் தூக்கிட்டு கொன்றனர்.
சுதந்திர விரும்பிகளாக இருந்த நாயக்கர்கள் ஆங்கிலேயர்களை எதிர்த்து பல போர்கள் செய்தனர், அவரில் முக்கியமானவர் விக்ரம் சிங்கே நாயக் என்பவர் இவரின் மனைவி சில்லவார் ராஜகம்பளம் பிரிவாகவும், அவர் கவரை பிரிவாகவும் இருந்தார்.
போர்த்துகீசியர்கள் இலங்கையை பிடிக்க நினைக்கையில் அன்று மதுரை, தஞ்சை, இலங்கை நாயக்கர்கள் அனைவரும் ஒரே அணியில் நின்று அவர்களை தாக்கி வெற்றி கொண்டனர்.இந்துக்களாக இருந்த நாயக்கர்கள் பிற்காலத்தில் புத்த மதத்தின் மீது பற்றுகொண்டு அனைவரும் புத்த மதத்தை தழுவினர்.
கண்டி நாயக்கர்களின் ஆதி :
மதுரையை ஆட்சி செய்துகொண்டு இருந்த குமார கிருஷ்ணப்பா நாயக்கர் என்பவர் போர் செய்து சிங்கள குறு நில மன்னனை வெற்றி கொள்ள செல்கிறார் ஆனால் சென்ற இடத்தில் பாம்பு கொத்தி இறக்கின்றார். இதனால் அவரின் மச்சுனன் விஜய கோபால நாயக்கர் என்ற கவரை இனத்தவர் இங்குள்ள கவரை, ராமநாதபுரம் சில்லவார்கள் பலரை அழைத்துக்கொண்டு அனுராதபுரா என்ற இலங்கையின் மேற்கு பகுதியில் குடியேறி சிங்கள குறுநில மன்னனை தாக்கினார் வெற்றியும் கொண்டார். இதனால் மனமகிழ்ந்த விஜயநகர அரசு விஜய கோபால நாயக்கருக்கு இலங்கை முழுவதுமே கொடுத்து ஆட்சி செய்த பணித்தனர்.
மதுரை, தஞ்சை நாயக்கர்கள் உறவினர்கள் என்பதால் தொடர்ந்து படைபலம் முதலான அனைத்தும் இலங்கைக்கு கிடைத்தன.இலங்கையில் உள்ள முதலியார்கள் நாயக்கர்கள் ஆட்சியை விரும்பவில்லை எனவே இவர்களை எதிர்க்க முடியாமல் பலர் கிறிஸ்தவ மதத்துக்கு மாறி ஆங்கிலேயரிடம் அடைக்கலம் நாடி, நாயக்கர் படைகளுக்கு எதிராக ஆங்கிலேய மிசினரிகளை துண்டிவிட்டுக்கொண்டு இருந்தனர். இதனை அறிந்த விஜய கோபால நாயக்கர் தஞ்சை மன்னர் ரகுநாத நாயக்கரிடம் தெரிவிக்க அவர் 5000 படைவீரர்களை இலங்கைக்கு கொடுத்தார் அனைவருமே நாயக்க இனத்தவர்களாக இருந்தனர்.
5000 படைவீரர்களோடு சென்று முதலியார் குடியிருப்பு பகுதிகளை விரட்டிவிட்டார், நாலாபக்கமும் சிதறி முதலியார், சானார் இனத்தவர்கள் சென்றனர். அங்கெல்லாம் நாயக்கர் மக்கள் குடியேறினர். மிகுந்த இயற்கை வளமும், நல்ல இடங்களில் மட்டுமே நாயக்கர்கள் குடியேறினர்.
நாயக்கர்களுக்கு ஆதரவாக மறவர் படைகளை சிலரை சேதுபதி தந்தார் எனவே மறவர்களும் இலங்கையில் சிலர் குடிபெயர தொடங்கினர்.
விர நரந்திர சிங்கா நாயக் :
இலங்கையின் கடைசி நாயக்க மன்னர், இவரின் வீரம் தியாகம் இன்றும் இலங்கையில் போற்றி பாடபடுகிறது . 1707 முதல் 1739 வரை இலங்கையை ஆட்சி செய்தார்.மிகுந்த வீரம் கொண்ட மன்னர் என்று பெயரெடுத்தவர். இவர் 1708 இல் பரமக்குடி பாளையக்காரரும் மதுரை நாயக்கர் மன்னரின் சொந்தக்காரரும் ஆன தும்பிச்சி நாயக்கரின் மகள் பொம்மியை திருமணம் செய்துள்ளார் , 1710 இல் இரண்டாவதாக தொட்டப்ப நாயக்கனூர் பாளையக்காரி ஒருவரை திருமணம் செய்துள்ளார். இவருக்கு 32 பிள்ளைகள் இருந்ததாக அவரே எழுதிவைத்து சென்றுள்ளார்.
இவரின் காலத்துக்கு பிறகே நாயக்க மன்னர்கள் பெருவாரியாக புத்த மதத்தை தழுவினர், பெரிய பெரிய புத்த கோவில்களை கட்டினர், போர்த்துகீசிய, டட்ச் கட்டிய முதலியார்களின் சர்ச்களை இடித்து தள்ளினர். இந்து மத கோவில்களை இவர்கள் இடிக்கவில்லை காரணம் இவர்கள் இந்து மதத்தில் இருந்து மாறியதாலும் வைணவ மரபினர் என்பதாலும் இந்து கோவில்களை இவர்கள் தாக்க வில்லை.
ஸ்ரீ விஜய ராஜசிங்கா நாயக் : 1739 – 1747
தந்தைக்கு பிறகு மகன் ஸ்ரீ விஜய ராஜசிங்கா நாயக் பொறுப்பேற்றார் .இவர் சிவகங்கை பகுதியில் இருந்த திருப்பாசீச்வரம் சமீன் பெண்ணை திருமணம் செய்தார் இவர் கவரை இனத்து பெண்ணை திருமணம் செய்தார்.பிறகு கண்டமனூர் பாளயத்தார் பெண் ஒருவரையும் திருமணம் செய்தார், இவர்களும் இவர்கள் உறவினர்கள் பெருமளவில் இலங்கையில் குடியேறினர்.
கீர்த்தி ஸ்ரீ ராஜ சிங்கா நாயக் என்பர் பிறகு ஆட்சி செய்துள்ளார். இவரும் திருமணம் மதுரை நாயக்க பெண்களையே திருமணம் செய்தார். இலங்கையில் உள்ள எல்லா மன்னர்களும் கடைசி வரையிலும் பாளையக்கார் நாயக்க பெண்களையே திருமணம் செய்துள்ளனர்.
இன்று இலங்கையில் மக்கள் தொகையில் முதலாவதாக இருக்கும் நாயக்க மக்கள் அனைவரும் மதுரை, தஞ்சை நாயக்கர் மரபினரான நாயக்கர்களின் கொடி வழி உறவினர்கள். இலங்கை நாயக்க மன்னர்களை பற்றி இன்னும் பல வரலாற்று தகவல்கள் உங்களுக்கு வந்துக்கொண்டே இருக்கும்.
இலங்கையின் எல்லா பிரதமர், முக்கிய பொறுப்புகள் யாவும் நாயக்கர்களே இன்று வரை இருந்துவருகின்றனர். நாயக்க மக்களின் தனி நாடாகவும், புத்த மதத்தை பாதுக்காக்கும் சமூகமாகவும், முரட்டு குடியாகவும், யாருக்கும் பயப்படாத இனமாகவும் நாயக்க மக்கள் இன்றும் உள்ளனர். நாங்க வேனும்ம்னா பரந்த ஆந்திரம் அமைக்கலாம் ..நீங்கள் கணவுகாநாதீர்கள்.. தமிழகத்தில் எங்களை மீறி ஒரு ஆணியகூட நீங்க புடுங்கமுடியாது மக்கா ..ஜெய் கிந்த் பாரத் மாதாகீ
நல்லாதான அம்புலிமாமா கதைய சொல்லிக்கிட்டு இருந்தே….ஏன் கடைசியா புடுங்கிறத தொழிலுக்கு மாறிட்டே? வளர்ப்பு அப்பிடிங்கறையா? சரி…சரி..உன்னை பெத்தவங்க சொல்லி கொடுத்தது நீ இன்ன செய்வ? அது போக….உன் கதையே வச்சி பார்த்த 17ஆம் நூற்றண்டுலேயிருந்து அடுத்தவன் சொத்தை புடுங்கிறத முழு நேர தொழிலா செஞ்சிகிட்டு வரிங்க! ம்ம்ம்……ஒன்னு மட்டும் எனக்கு சரியா புடிபடலே…என்னாங்கிறையா? முரட்டு குடி,யாருக்கும் பயபடாத இனம்னு சொன்னே அப்புறம் எப்படி வெள்ளைக்கார படை எடுப்புலே துண்டை காணம்,துணிய காணம்னு ஒட்டு மொத்த கூட்டமே ஓட்டம் எடுத்திங்க மக்கா? கொஞ்சம் பொறு நான் ஓடி போயி pop corn வாங்கிட்டு வந்தறேன்….
இதற்கு மேல் உங்களால் ஒன்னும் புடுங்க முடியாது.வாயை மூடிக்கொண்டு இந்தியாவிலும் சிறிலங்காவிலும் அடக்கி வாசிப்பது தான் நல்லது.
வாங்கடா வடுக பொட்டுகட்டி பயலுவ ! உங்க வீரம் எப்படிங்கிறத விலாவாரியாக விளாசுருவோம்..அப்புறம் அசிங்கமாயிடும் பரவால்லையா ?
வடுக டீலிங் எல்லாமே பண்டமாற்றுதானே ?
கண்டி அதிகாரம் கைமாறியது மதுரை சைடுகுடுமி நாய்கர் எப்படி ஆலயத்தினுள் ஐயங்காரால் கொல்லபட்டார்ன்னு விலாவாரியாக கூறணுமா சுரேசு நாய்கேர்காறு?