மலேசிய இந்தியர்களுக்கு ஓர் அவசரக்கால அறுவைச்சிகிச்சை!

man_writingவரும் 26/ 3/ 2016 Rapat Rakayat என்ற வட்சாப் குழுவினர் ஒரு கலந்துரையாடல் நடத்த உள்ளனர். அரசியல், சமுகம் என்ற இரண்டு சதுரங்கத்தில் ..என்ன நடக்கபோவுது என்பதை யூகிக்க முடிகிறது.

நம்மில் நல்லதை நினைத்து ஒன்று சேரும்போது பிளவுகள் சர்வசாதாரனம். ஆனால் ஒரு அறுவைசிகிச்சை வழி இதயத்தை மாற்றும் ஆற்றல் மிக்க உலகில் மனங்களை நல்வழிபடுத்த வழி பிறந்த்துள்ளது,அதுதான் மாற்று வழி மனநிலை சிகிச்சை.

ஒருவருக்கு இரண்டு நிமிடங்கள் பேசும் வாய்ப்பு.எழுதியும் தரலாம் என்ற அறிவிப்பு என் மண்டை குடைச்சலை அதிகம் கவர்ந்தது நான் எடுத்துக்கொண்ட தலைப்பு சமூகம் சார்ந்த பொருளாதாரம்.இதனால் நான் அரசியலுக்கு எதிரியும் அல்ல அதை யாசிக்காதவனும் அல்ல ,ஆனால் மலேசிய இந்தியர்களின் அரசியலை என்னால் ஜீரணிக்க முடியவில்லை என்பதுதான் உண்மை. எனது அரசியல் போராட்டமெல்லாம் அநீதிகளுக்கு எதிர்ப்பான நிலப்பாட்டும் வருங்கால இளைஞர்கள் அரசியல் விழிப்புக்கு மட்டுமே.அது ஒரு வித ராஜாங்க விதி.

நான் பொருளாதாரம் பேசும் முன், அரசியல் நமக்கு குறிப்பா மலேசிய இந்தியர்களுக்கு தேவை இல்லை என்று சொல்ல வருகிறேன்.
இதற்கு பத்தாயிரம் காரணங்களை சொல்லலாம். ஒரு சமூக வெற்றி என்பது பொருளாதாரமா, அரசியலா ? என்றால் சாமி போல நாஜி போன்றவர்களுக்கு இரண்டும் இரண்டு கண்கள் போல.

ஆனால் சாதார ஒரு ஏழை ,வறுமை பரிதாப சமுகத்துக்கு பொருளாதாரமும் கல்வியும் முக்கியம் என்று கருதுபவன் நான்.
இன்றைய உலகில் பொருளாதாம் இருந்தால்தான் அந்த இரண்டாம் கட்ட கல்விக்கு போக முடியும் ..இதை வளர்த்துகொண்டவன் மூன்றாம் நிலையில் அறிவு இருந்தால் அரசியலுக்கு போகலாம். அதற்கு வயது வரம்பு 40 மேல் …..

மலேசியாவில் பெரும்பாலும் அரசியல் வாதிகள் ஆனபிறகுதான் பணக்கார பட்டியலில் இணைவார்கள். ஆனந்தா ,ஏகே ,டோனி போன்ற முதலாளிகள் அரசியல் ருசியில் இல்லாவிட்டாலும் அதன் அரவணைப்பில் ஆனவர்கள்தாம். இல்லை என்று யாராலும் சொல்லமுடியாது.

உலகத்தில் தமிழன் ஒரு அனாதை இனம் ..இந்தியன் அவனின் எஜமான் என்றால் பலருக்கு கோபம் வரும். உலக அரங்கில் ஒரு தலைவன் இல்லாத இனம் , அங்கீகாரமில்லாத இனம். ஐநா சபையில் இன்னும் அடிவாங்கும் இனம்.

உலகில் 120 மில்லியன் தமிழன் இருந்தும் தமிழனுக்கு தனி மண்ணில்லை, தனி அரசு இல்லை தனி சுதந்திரமில்லை ஆனால் சுதந்திரமாக பொருளாதார பேறுகளை பெற எந்த எதிர்ப்பும் இல்லை எனலாம். கல்வியை பெற எந்த தடையும் இல்லை என்பதும் விதியாகும். ஆனால் அடைந்தோமில்லை ? ஏன் !!!.

அரசியல் ஓசியில் தலைமை ஏற நினைப்பவர்கள் அரை குறை கல்வியில் அரசியலை முன்னெடுத்து நகர்கிறார்கள். பிறகு பொருளாதாரம் பின்பு அனுபவ கல்வியில் நிந்தனை விதிகளை, வித்தைகளை கற்று கடைசியில் அரசியலிருந்து ஒதுக்கப்டுகின்றான்.

இதை ஏன் நான் பாடமாக சொல்ல வேண்டும் ? காரணம் இதுதான். நான் எடுத்துக்கொண்ட பொறுப்பு, சமூக வெற்றி என்பது பொருளாதாரம். பிறகு கல்வி என்பது நிரந்தரம் என்பதால் ஒரு சமுதாயம் இதில் முதலீடு செய்தால் அரசியலில் அடக்க ஒடுக்கமான தலைவனை நாம் பெறலாம்.

ஆக நான் சொல்லப்போவது இதுதான் ….

மலேசியத் தமிழனும் சரி இந்தியனும் சரி இந்த இரண்டு சமுதாயமும் முன்னேற வேண்டுமானால் 10 கட்சிகளை 10 தலைவர்களைக்காட்டி காட்டி கேவலப்படுவதை காட்டிலும், 10 பொருளாதார வாய்ப்புகளை 10 கல்விமான்களை வளர்க்க திட்டமிட வேண்டும்.

நம் மக்களை அரசியலை ஓட்டை காட்டி ஏமாற்றும் அரசியல் நடிகர்களாகாமல் பொருளாதார ,கலவி மேதாவிகளை உருவாக்கினால் இந்த சமுதாயத்தை மீட்டுத்தந்த பெருமையில் இன்றைய சமூகத தலைவர்கள் பாராட்டை பெறுவர் என நீங்களும் முடிவு எடுக்க வேண்டும். முயற்சி என்பது தனி மனிதனுக்கு பொருந்தும் இறுதியான முடிவு என்திலதால் புத்திசாலித்தனம் இருக்கும்.

நாட்டின் அரசியலில் ஆளும் கட்சி எதிர் கட்சி என்ற இரு தரப்பு கட்சி நிலை தொடரும். இதில் இந்தியர்களுக்கு வேலை, வேளைக்கு ஒட்டுபோட்டுவிட்டு வீட்டுக்கு வந்து வணிக கடையை பார்த்தால் போதும். ஒரு உதாரணம்; சிங்க் ,பஞ்சாபி ,இலங்கைததமிழர்கள் அரசியல் ஆடுவதில்லை.ஒட்டுப போட வருவதுகூட இல்லை.

இன்று அவர்கள் வாழ்வாதாரம் வென்று நிற்கிறார்கள். தமிழர்களை நாம் அதிகமாக கொண்டாலும் இந்தியன் பட்டியலில் தான் ஓட்டுகள் பதிவாகின்றன. மலேசியன் இந்தியர்களில் 10% இதரவர்கள் 80% – 90 % தமிழர்கள். ஆனால் நமக்கு அரசியல் அங்கிகாரம் கிடையாது.ஒரு சிறுபான்மை இனம் பொருளாதாரத்தில் 0.5 என்கிறார்கள் அதில் இந்தியர்கள் மட்டும்தான் உள்ளனர். தமிழர்களுக்கு அதில் எந்த நிலையும் இல்லை இல்லை. அப்போது இத்தனை காலம் அரசியல் நாடகம் நமக்கு பயன் தர வில்லை என்பதுதான் மிட்டாய் விந்தை.?

இன்று, தட்டு தடுமாறி கல்வியில் வெற்றிக்கண்ட தமிழர்கள் பொருளாத விளைச்சலில் ஓங்கி நிற்கின்றனர் ..தோட்டப்புற தொழிலாளிகள் இன்னும் வறண்ட வாழ்கையின் உச்சத்தில் 70% விழுக்காட்டினர் சவுகின்றனர். இது யார் பொறுப்பு?

தோட்டத்தில் யூனியன் வைத்து ஆண்டவன் பிள்ளைகள் எல்லாம் இன்று வசதி பட்டியலில் சொகுசா படம் பார்க்கின்றனர். நமது ஏழைகள் இன்னும் பட்டணம் பார்க்காமல் குடிசைகளில் வந்கலதேசிகள் வாழ்வியலை விட மோசமாக உள்ளனர்..ஏன் இவர்களுக்கு நமது அரசியலும் அதன் தலைமை பீடர்களும் உதவவில்லை? செலாங்கூர் மாநிலத்தில் கூட நமக்கு ஏழைகளின் குழந்தைகள் என்ற ஆட்சி குழுதான் கழுகாய் சுத்துது.

இன்று நாம் கூடி மீண்டும் அரசியல் தத்துவங்களை பேசி மீட்பதாக நினைத்து மீண்டும் ஒரு வரலாற்று பிழையை செய்ய கூடுகிரோமா?

அல்லது குழும உரிமத்தில் அரசியல் வாதிகளுக்கு வக்காலத்து வாங்கி சமுதாய பொருளாதார கல்வி வளர்ச்சிக்கு நிபுணத்துவ வசதி விபத்து நடத்தி பிறகு பார்ப்போம் என்ற கட்டு போட போகிறோமா?

சமுதாயம் பல மாநாடுகளையும் , பொருளாத பொய் அலைகளையும் சந்தித்து அடித்து போனதுதான் மிச்சம். அந்த அத்து மீறலை சுட்டு எரித்து புது தீபம் ஏற்ற போகிறோமா ? இந்த குழுமத்தை தவிர வேறு யாரும் இந்த சமுதாயத்துக்கு எந்த சாதனையும் செய்யப்போவதில்லை என்பதை எழுதி தருகிறேன். நீங்களும் தப்பு செய்து விடாதீர்கள்.
நமது இன்றைய தேர்வுதான் தான் என்ன?

1. அரசியலை தற்காலிகமாக மறந்துவிடுதல்

2. PNB போல ஒரு நிறுவனம் அமைப்பது. அது போல கஜானாவிடம் 500 மில்லியன் கோருவது. அதன் வழி அரசிடம் 500 மில்லியன் மில்லியன் soft loan கடன் பெற கோருவது. 1 பில்லியன் நமது இலக்கு.

3. வணிக சந்தையில் finish விற்பனை பொருட்களை அடையாளம் கண்டு, சந்தை படுத்தி அணைத்து இனங்களிடம் மற்றும் ஏற்றுமதி தேடல்களை அடையாளம் கண்டு வெற்றி பெற ஒரு Declaration செய்வது.

4.இதன் வழி சொந்த கல்வித்துறைகளை வளர்ப்பது.
இந்த மூன்று தேவைகளின் அடிப்படியில் அரசுக்கு KUALA LUMPUR Malaysian Indian Economi Stimulation declaration 2020 ( KLMIESD 2020 ) என்ற பதிவில் பொருளாத மேம்பாட்டை வளர்ப்பது.

இதற்கு 5 உறுப்பினர் கொண்ட குழுவை அமைத்து தேவையான
நிர்வாக செயல் முறைகளை அமுல் செய்வது.

இது மட்டுமே மலேசியத தமிழர்களை ,இந்தியர்களை அரசியல் பொருளாதார சமுக அடுத்த கட்ட நிலைக்கு கொண்டு செல்லும் என்பது எனது ஆலோசனை.

நன்றி வணக்கம் ..

பொன் ரங்கன் 
தமிழர் தேசியம் அசொசியாட்ஸ்