தற்போது உருவாகியுள்ள நல்லாட்சி அரசாங்கம் புதிய தீர்வுத்திட்டத்தை நோக்கி நகர்ந்து கொண்டிருப்பதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.வியாழேந்திரன் கூறியுள்ளார்.
மட்டக்களப்பு – முறக்கொட்டாஞ்சேனையில் இராமகிருஷ்ணமிஷன் வித்தியாலய மண்டபத்தில் நேற்று (10) மாலை நடைபெற்ற மாணவர் கௌரவிப்பு நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
இங்கு அவர் மேலும் உரையாற்றுகையில்,
புதிய அரசியலமைப்பில் எங்களுக்கான ஒரு சரியான தீர்வுத்திட்டத்தை முன்வைக்க தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பலமான அழுத்தங்களைக் கொடுத்துக்கொண்டிருக்கிறது என்று கூறியுள்ளார்.
மேலும் கடந்த முப்பது வருட யுத்த சூழ்நிலை காரணமாக உயிர்களை இழந்துள்ளோம், உடைமைகளை இழந்துள்ளோம், இந்த நிலையில் கல்வியின் மூலமே இழந்த பொருளாதாரத்தைக் கட்டியெழுப்ப முடியும் என மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.வியாழேந்திரன் தெரிவித்துள்ளார்.
-http://www.tamilwin.com