என் உறவு தமிழர்களே… தமிழச்சிகளே…..
நாம் ஏன் நாம் தமிழர் கட்சியை ஆதரிக்கனும்?. பணம்
சம்பாதிக்க வேறு வழி இல்லாமல் அரசியல் செய்ய வந்த பிள்ளைகள் அல்ல இவர்கள். தங்கள் பிள்ளைகளுக்காக நல்ல வழியை ஏற்படுத்த அரசியலுக்கு வந்தவர்கள்.முழு நேர அர
சியல் வாதிகளாக இங்கு யாரும் இல்லை, மாண வர்களாக, கல்லுரி ஆசிரியராக, கணிப்பொறி வல்லுநர்களாக என பல தரப்பிலும் உள்ள பொது நல சிந்தனை உள்ளவர்களால் கட்ட மைக்கப்பட்டு வரும் கட்சி. மாற்றம் வே ண்டும் என்பவர்கள் கண்ணை மூடி ஆதரிக்க வேண்டியது நாம் தமிழர் கட்சியும்
அதன் சின்னமான இரட்டை மெழுகு வர்த்தியையும்தான்.
இந்தியனாக வக்களித்தோம்
திராவிடனாக வாக்களித்தோம்
மதத்திற்க்காக வாக்களித்தோம்
சாதிக்காக வாக்களித்தோம்
“வரலாற்றில் முதல் முறையாக மானத் தமிழனாக வாக்களிப்போம் நாம் தமிழர். நமது சின்னம் இரட்டை மெழுகுவர்த்தி.” அன்னைத் தமிழினினமே நமக்கான
அரசியலை நாமே முன்னெடுப்போம். தமிழ்தேசியத்தை வென்றெடுப்போம்.
-தன்மானத் தமிழன், பையம்பாடி, மதுராந்தகம், தமிழ்நாடு
“வரலாற்றில் முதல் முறையாக மானத் தமிழனாக வாக்களிப்போம்”. தமிழ் நாட்டுத் தமிழரில் எவ்வளவு பேர் மானத் தமிழராக வாழ்கின்றனர் என்பது தேர்தல் முடிந்தவுடன் வெட்ட வெளிச்சமாகி விடும். அதற்கப்புறம் தன்மானத் தமிழனாகிய நாமெல்லாம் வாயடைத்துப் போவோம்!. பிறர் நம்மைப் பார்த்துச் சிரிக்காமல் இருந்தாலே, அது நாம் பெரும் பாக்கியம்.
நடைபெற உள்ள சட்ட சபை தேர்தலில், கிரிமினல் வழக்குகள் உள்ள வேட்பாளர்கள் பட்டியலில் திமுக முதலிடம் வகிக்கிறது.
இது குறித்து, தி அசோசியேஷன் ஃபார் டெமாக்ரட்டிக் ரிபார்ம்ஸ் என்ற தனியார் அமைப்பு வெளியிட்டுள்ள தகவலில், தற்போது உள்ள வேட்பாளர்களில், 68 திமுக வேட்பாளர்கள் மீது கிரிமினல் வழக்கு நிலுவைல் உள்ளது. இரண்டாவது இடத்தில் பாமகவில் 66 கிரிமினல் வேட்பாளர்கள், மூன்றாவதாக, அதிமுகவில் 47 வேட்பாளர்கள் மீது கிரிமினல் வழக்கு உள்ளது.
மேலும், பாஜகவில் 26 பேர் மீதும், காங்கிரஸில் 10 பேர் மீதும் கிரிமினல் வழக்குகள் நிலுவையில் உள்ளதாக தகவல் வெளியிட்டுள்ளது. நன்றி webdunia..
தேனி ஐயா! சிரிக்க வேண்டிய அவசியமில்லை! இரண்டு திராவிடக் கட்சிகளும் ஆட்சி அமைக்கப் போவதில்லை! அதுவே தமிழனுக்கு வெற்றி தான்!
எம் விருப்பமும் அதுவே. கூட்டனி ஆட்சி என்பது இதுவரை தமிழ் நாட்டில் இருந்ததாக தெரியவில்லை. தேர்தல் கூட்டங்களில் அறிவார்ந்த மக்கள் கலந்து கொள்வது குறைந்துள்ளதாக செய்தி வருகின்றது. அத்தேர்தல் கூட்டங்களில் ஆடு மாடுகளைப் போல் கூட்டி வைக்கப் படுவது பாமரர்களே என்பதும் நன்றாகத் தெரிகின்றது. தேர்தல் முடிவு, நகர்புறங்களில் மாற்றத்திற்கு வழிகோலும் என்றும், புறநகர் பகுதிகளில் எப்பொழுதும் உள்ள ஒட்டு வங்கியை வைத்து திராவிடக் கட்சிகள் வெல்லும் என்றும் நம்பலாம். பொறுத்திருந்து பார்ப்போம்.
அறிவார்ந்த மக்கள் தேர்தல் கூட்டங்களில் கலந்து கொள்ளாவிட்டால் பரவாயில்லை. புதிய மாற்றத்திற்காக ஓட்டுப் போட வந்தால் போதும்!
https://youtu.be/HdhAu6fbeIA
ஏன் இந்தியா தமிழ் நாட்டின் கச்சா தீவை சிங்களவனிடம் கொடுத்தது.உலகத்தில் எந்த நாடும் தன் மக்களுக்கு இந்த துரோகத்தை செய்யாது,தமிழ் நாட்டு மக்களின் அனுமதி இல்லாமல் செய்த இந்த அயோக்கியத்தை இந்திர காந்தியும் கொலைகார கருணாநிதி மன்னிக்க முடியுமா?ஏமாளிகள் தமிழ் நாட்டு மக்கள்.
கருணாநிதியின் காலத்தில் தான் கட்ச தீவு தாரை வார்க்கப்பட்டது– கருணாநிதி இதற்க்கு பதில் சொல்ல வேண்டும் விரைவில்–எந்த நேரத்திலும் ஏதும் நேரலாம்–நடக்குமா?
சோற்று சுகத்திற்காகவும் காசுக்காகவும் விலைமதிப்பற்ற வாக்குச் சீட்டை சுயமரியாதையையும் தன்மானமுமிழந்து தங்கள் பிள்ளைகளின் எதிர்க்காலத்தையும் சேர்த்து விற்பவர்களிடம், “நாம் தமிழர்கள் நாம் தமிழர்கள்” என்றுக் கூவி கூவி, இனிமேலாவது சுயமரியாதையோடும் தன்மானத்தோடும் வாழ்வோமென்று மன்றாடும் நாம் தமிழர்க் கட்சிக்கு வாக்களிப்பார்களா? இந்தத் திராவிடக் கட்சிகளின் பொறுப்பற்ற ஆட்சியை தட்டிக் கேட்க தமிழக சட்ட மன்றத்தில் குறைந்தது நான்குப் பேர்களாவது சட்ட மன்றத்தில் கட்டாயம் இடம் பெற வேண்டும். தமிழக மக்கள் இடம் பெறச் செய்வார்களா?