மலேசியத் தமிழர்களின் நியாயமான தன் இனத்தின் மீது உள்ள தார்மீக உணர்வுகளுக்கு அரசு மதிப்பளித்திருக்க வேண்டும்!

protestஎத்தனை ஆண்டுகள் அனாலும் தமிழினப் படுகொலைக்கு தீர்வு கிடைக்கும்வரை உலகத் தமிழினம் உறங்காது என்பதற்கு மலேசியாவில் ராஜபக்சேவின் வருகைக்கு காட்டிய எதிர்ப்பு சரியான உதாரணம் !

ஒன்றரை லட்சம் தமிழர்களை கொன்று குவித்த இனப்படுகொலையாளிக்கு தண்டனை வழங்காமல் சிவப்புக்கம்பள வரவேற்பு நல்குவதை உலகத்தமிழர்கள் ஆதரிக்கவில்லை அதற்க்கு மலேசியா தமிழர்களும் விதிவிலக்கில்லை!

இலங்கையில் நிகழ்த்தப்படட தமிழின இனப்படுகொலை உலகத்தமிழர்கள் உள்ளங்களில் நீறு பூத்த நெருப்பாக எரிந்துக்கொண்டிருக்கிறது! இதனை மலேசியா அரசாங்கம் உணர்ந்திருக்கவேண்டும்!

மலேசியா தமிழர்களின் நியாயமான தன் இனத்தின் மீது உள்ள தார்மீக உணர்வுகளுக்கு மதிப்பளித்திருக்க வேண்டும்! ஆசியா தலைவர்கள் மாநாட்டு ஏற்பாட்டுக்குழுவினர் கண்டிப்பாக ராஜபக்சேவை மலேசியாவுக்கு வர அழைப்பதற்கு முன் இதனை கவனத்தில் கொண்டிருக்க வேண்டும்! இனப்படுகொலைக்கு எதிராக தண்டனை வழங்கும் தீர்மானம் ஒன்றை நிகழ்ச்சி நிரலில் இடம்பெறச்செய்திருக்க வேண்டும்!

ஓர் இனத்தை அழித்தவனை மேடைஏட்றி தீவிரவாதத்தை ஒழித்துவிடடேன் என்று கொக்கரிப்பவனை எதிர்கால இளைஞர்கள் வேடிக்கை பார்த்துக்கொண்டு சும்மா இருப்பார்கள் என்று உலகம் நம்பினால் அது பொய்த்துப்போகும்!

killing-132-617x264

இனப்படுகொலைக்கு தீர்வு தராமல் காலத்தினை கடத்துவது அலட்சியப்படுத்துவது உளவியல் ரீதியில் இளைஞர்களை மிகவும் பாதிப்படைய செய்துள்ளது! அது வார்த்தைகளாலும் செயல்களாலும் வெளிப்படும்போது இனப்படுகொலைகளை ஆதரித்தோர் ஆதரிப்போர் அதனை பொறுத்துக்கொள்ளத்தான் வேண்டும்!

எம் வீரம் சொரிந்த இளைஞர்களே! உலகத்தமிழர்கள் நாங்கள் உங்கள் பின்னால் நிற்கிறோம்! எங்களுக்காக நீங்கள்! உங்களுக்காக நாங்கள்!

Kalaimugilanஎழு விழி

தடை அதை உடை!

வரலாறு படை!

-பி.கே.குமார்