விக்னேஸ்வரனின் உயிருக்கு ஆபத்து – பாதுகாப்பை பலப்படுத்துமாறு கோரிக்கை

eluka-tamil-240916வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனுக்கு, தற்போது வழங்கப்பட்டுள்ள பாதுகாப்புக்கு மேலதிகமாக பொலிஸ் பாதுகாப்பை வழங்குவது தொடர்பில் பரிசீலணை செய்யுமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இது குறித்து வடமாகாண சபையின் தலைவர் சி.வி.கே.சிவஞானம் பொலிஸ்மா அதிபர் பூஜித் ஜயசுந்தரவுக்கு, கடிதமொன்றை இன்று அனுப்பி வைத்துள்ளார்.

அந்த கடிதத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, தனது உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தி அதனை தமிழீழ விடுதலைப் புலிகள் மீது சுமத்துவதற்கு முயல்கின்றனர்” என முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் அண்மையில் தெரிவித்திருந்தார்.

இதயைடுத்து அவருடைய பாதுகாப்புக்குத் தேவையான ஏற்பாடுகளை மேற்கொள்வதற்கான தீர்மானமொன்றை வடமாகாண சபை முன்னெடுத்திருந்தது.

தற்போது, மாகாண சபையின் சட்ட ஒழுங்குகளுக்கு அமைவாக, வடமாகாண முதலமைச்சருக்கு, நாட்டில் உள்ள ஏனைய முதலமைச்சர்களுக்கு வழங்கப்பட்டுள்ள பாதுகாப்புக்குச் சமமான பொலிஸ் பாதுகாப்பே வழங்கப்பட்டுள்ளது.

எனினும், உயிர் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளமையால், அவருக்கு மேலதிக பொலிஸ் பாதுகாப்பை வழங்குமாறு அவர் தனது கடிதத்தில் மேலும் தெரிவித்துள்ளார்.

-http://www.tamilwin.com

TAGS: