தமிழர் தேசிய புத்தாண்டு வாழ்த்துகள் தமிழர்களே !
யாரெல்லாம் தமிழர்கள் ? இண்டியன் என்பவர்கள் யார் ?
சமீபத்தில் தமிழகத் தமிழ் தேசியப்பேரவை த்தலைவர் ஐயா பெ. மணியரசன் எழுதிய புத்தகம் “தமிழ்த் தேசக்குடியரசு ” படித்த போது ஒரு உண்மை தெரியவந்தது. அவர் எழுதிய வரிகளை அப்படியே எழுதுகிறேன்,
” இந்திய அரசமைப்புச்சட்டம் ”இந்தியர்” என்ற ஒரு தேசிய இனம் NATIONALITY இருப்பதாக கூறவில்லை. அந்நாட்டின் குடியுரிமை CITIZENSHIP பற்றி மட்டுமே பகுதி 2 டில் விதிகள் 3 முதல் 10 வரை கூறுகின்றனவாம். இந்தியாவின் குடிமகன் அல்லது குடிமகள் CITIZEN OF INDIA என்பது மட்டுமே அரசமைப்புச்சட்டம் பேசுகிறது. இந்தியாவின் பெருமுதலாளிய இந்தி ஆதிக்க பார்ப்பனிய சக்திகளும் அவர்களின் அரசியல் பிரதிநிதிகளும் இந்தியன் என்ற ஒரு தேசிய இனம் இருப்பதுபோல சட்டவிரோதமாக பேசியும் எழுதியும் வ்ருகின்றனர்.”
அதுக்குமேல ஒரு படி சென்று ” இச்சக்திகள் இந்தியாவை ஒரு தேசம் என்றும் சட்டத்துக்கு புறம்பாக எழுதி வருகின்றனர். இந்தியாவின் அரசிலமைப்பு சட்ட விதி 1 இந்தியா அல்லது பாரதம் அரசுகளின் (STATES ) ஒன்றியம் என்றுதான் கூறுகிறதாம். இவையெல்லாம் சுரண்டல் சக்திகளும் ஆதிக்கசக்திகளும் கிளப்பிவிடும் இந்திய தேசிய வெறிப்பரப்பல் முறையாகும். அனைத்து இந்திய இடதுசாரிகளும் இந்தியன் என்ற ஓர் இனம் இருப்பதாக வதநதி பரப்புகின்றனர்” என்று எழுதியுள்ளார்.
இதற்கும் மலேசியத்தமிழரகளின் அரசியல் குழப்பத்துக்கும் என்ன சம்பந்தம் என்று நீங்கள் எகுறுவது புரிகிறது. சற்றே தொடருங்கள் என் அருமை தமிழர் உறவுகளே !
இந்தியாவின் தமிழர் ,தெலுங்கர் , வங்காளி இன்னும் பல மாநிலங்களின் இனங்களை இயற்க்கையான தேசிய இனங்களையும் இந்தியா அரசியலமைப்பு சட்டம் குறிப்பிடவில்லையாம். இந்திய குடியுரிமை என்று மட்டுமே அது கூறுகிறது.
தமிழர் போன்ற தொன்மையான இனத்தை இந்தியாவின் அரசியலைப்பு சட்டம் கூற வேண்டும் என்பது தமிழர் தேசியத்தின் கோரிக்கையாகும்.
இப்போது “தமிழர் தேசியம்” என்ற சொர்க்கோவையில் சில வேளைகளில் தமிழ் தேசியம் என்று மொழிக்கு முக்கியத்துவம் தருவது இயல்பாக இருந்தாலும் “தமிழ்” தேசியம் என்பவர்கள் வெறும் மொழியால் இணைந்தும். தமிழர் தேசியம் என்பதின் பொருள் தாயும் தந்தையும் தமிழராக இருத்தல் வேண்டும் என்பது கட்டாயமாகிறது. இங்கே சாதியமும்,சமயமும் முன்னிறுத்தப்படவில்லை என்பதை “தமிழர்கள் உணர வேண்டும்.”
தேசம் என்பது என்ன ? நீண்ட நெடுங்காலமாக ஒரு நிலப்பகுதியில் சேர்ந்து வாழ்ந்து அங்கே ஒரு பொது மொழி, பொது பொருளியல், பொதுப்பண்பாடு அந்த பண்பாட்டில் உருவான உளவியல் உறவில் உருவாக்கம் பெற்று வரலாற்றில் நிலைத்துவிட்ட ஒரு சமூகம் தேசமாக அமைகிறது.அந்த இனம் தேசிய இனமாக உரிமைப்பெறுகிறது.
தமிழகத்திலிருந்து மாலாயா வந்த தமிழர்கள் கடந்த 200 ஆண்டுகளை மட்டும் எடுத்துக்கொள்வோம். மலைவாழ் தமிழ்ப்பள்ளிகளின் வரலாறுக்குள் இன்று 2 மில்லியன் இந்தியர்களில் 85 சகிதம் தமிழர்கள் இருப்பதாக கணக்கியல் காட்டுகிறதாம்.
ஆனால் நம்து மலேசியாவின் அரசியல் கட்சிகள் தமிழர்களை இந்தியன் பாட்டியலில் போட்டு 15 சகிதம் இந்தியர்களின் போர்வையில் நம்மை அமுக்கி அரசு அரசியல் உரிமைகளை பொத்திக்கொள்வதாக சொல்ல வருகிறேன்.
மலேசியாவின் இதர இந்தியன் காட்சிகளை ஒரு புறம் வைப்போம். காரணம் அங்கே தூயத்தமிழர்கள் இல்லை என்பதை நாம் அறிவோம். ம இ கா போன்ற அரசியல் கட்சியில் அதிகமாக தமிழர்கள் இருந்த்தாலும் பதவி ஆதிக்கம் என்பது சாதியமும் இதர அந்நியர்கள் அதிகம் ம இ கா பதவிகளில் இருக்க காரணம் இந்தியன் என்ற அமைப்பின் காரணம் என்பதை நாம் அறிய வேண்டும்.
மலேசியத்தமிழர்களுக்கு தமிழகத்தை போலவே அரசியல் ஆளுமை சக்தி கிடையாது. காரணம் நடுவண் அரசுகள் தமிழர்களை அரசியல் அமர்வில் வைப்பதில்லை அது இந்தியாவாகட்டும் மலேசியாவாகட்டும். இதன் அடிப்படை காரணத்தை நம்மால் ஆராய முடியவில்லை?
இது உலக அரசியல் ரகசியமாக இருக்குமோ என்றும் யோசிக்கிறோம். தமிழ் ஈழ தமிழர்கள் அடிப்பட்ட போது வல்லரசு நாடுகள் உதவவில்லை. நியாயம் பேசும் ஒபாமா கூட சமத்துவம் பேசி உள் நாட்டுப்போரை நிறுத்தவில்லை. பாங்கி முன் கூட இப்போது தன் உதவில்லை என்ற கோழைத்தன அவலத்தை வெளிக்காட்டியுள்ளார்.
நாட்டில் எத்தனையோ தமிழர் அரசியல் அறிவாளிகள் இருந்தும். இதை சீர் தூக்கி பார்க்க முன் வருவதில்லை. இருக்கும் அரசியல் வாதிகள் தமிழர்கள் என்ற அடையாளத்தில் அரசியல் நடத்தினால் வாக்குகள கிடைக்காது என்று இதரவர்களுடன் ஒட்டி உறவாடி நம் வாக்குகள மட்டும் வேண்டும் என்று ஏமாற்றுகிறார்கள்.
DAP, PKR என்ற முக்கிய எதிர்கட்சியிலும் இந்த பாகுபாடுகள்தாம் முந்தி நிற்கிறது. நல்ல தமிழர் இனம் காக்கும் தமிழர்கள் அரசியலுக்கு வருவதில்லை. அப்படியே வந்தாலும் அரசியல் தலைமைத்துவம் ஒரவஞ்சனையில் கேட்பர் பேச்சைகேட்டு காசுக்கும் பெட்டிக்கும் ஒநாய்க்கூடமாக மாறுகிறது.
எனக்குத்தெரிந்த தெரிந்த ஒருவரிடம் கேட்டபோது நல்ல தமிழர் அரசியவாதிகள் இந்த நாட்டில் இல்லாததால் நல்ல சமூக சேவையாளர்கள் அடையாளம் தெரியாமல் போகிறார்கள் என்றார்.
நல்லவர்களுக்கெல்லாம் சாட்சிகள் இரண்டு ஒன்று மனசாட்சி இன்னொன்று தெய்வதின் சாட்சி. ஆனால் மனிதர்கள் மயங்கி அரசியல் நடத்தும் காலம் இருக்கும் வரை தமிழர் சமுதாயம் இழப்புக்களுக்கு தயாராகி உடையும் என்பது நமது ஆய்வு.
நான் என் தமிழ் இனத்துக்காக அரசியல் போராளி.என்பதில் தெளிவாக உள்ளேன். வரப்போகும் PRU 14 பக்கம் வந்து விட்டது. இது வேறு மாதிரி அமையும் என்பது என் கணிப்பு தமிழர்கள் தயாராகலாம்.
மலேசிய அரசியல் தலைவர்களும் தமிழர்களின் உரிமையை இன்னும் உணராமல் இருப்பதும் இந்த இந்தியனால் என்பதை அறிவார்த்த புத்தாக்கம் அறிவிக்கும் காலம் வரை காத்திருக்க முடியாது. தமிழர்கள் அரசியல் தனமாசிந்திக்காவிடில் தமிழனுக்காக யாரும் சிந்திக்கபோவதில்லை என்ற எச்சரிக்கை மணி அடிக்கிறேன்.
நெஞ்சமிருக்கு தெளிவாக நேரமிருக்கு நமக்காக !
பொன், ரங்கன்
தமிழர் தேசியம் மலேசியா
ஒன்னு அரைச்ச மாவையே அரைக்கிறது …..இல்லனா வாயாலே வடை சுட்டு வித்தே பொழப்ப நடத்தறது ! தமிழன், தெலுங்கன், மலையாளீ, கர்நாடகா காரன், திராவிடன், அவன் இவன் என்று பிரிப்பதனால் மானுட சமூகத்திற்கு ஒரு மண்ணாங்கட்டியும் கிடைக்க போறது இல்லை ….. நல்ல படிச்சி, சமுதாய தொண்டு செய்யுங்கள் … நீதியரசர் சந்துருவை போல ….எதிர் கட்சி இந்திய தலைவர் குலா அவர்கள் போல ….. இந்தியனு தன் அடையாள அட்டையில மலேஷியா அரசாங்கம் எழுதி விட்ட்து …. எங்கே வீரம் இருந்தால் அடையாள அட்டையை திருப்பி கொடுத்துட்டு பேசுங்கடா …
தம்பி! இதெல்லாம் புரிய கொஞ்சம் நாளாகும். நீங்கள் ஒன்னும் செய்ய வேண்டாம். சும்மா இருந்தாலே தமிழனுக்கு நல்லது செய்கிறதா அர்த்தம்!
“மலேசியத்தமிழர்களுக்கு தமிழகத்தை போலவே அரசியல் ஆளுமை சக்தி கிடையாது. காரணம் நடுவண் அரசுகள் தமிழர்களை அரசியல் அமர்வில் வைப்பதில்லை அது இந்தியாவாகட்டும் மலேசியாவாகட்டும். இதன் அடிப்படை காரணத்தை நம்மால் ஆராய முடியவில்லை?”
இதென்ன அணுவியல் சூத்திரமா? நமக்குப் புரியாமல் போக! தமிழர் என்பாருக்குத் தான் தமிழன் என்ற உணர்வு இல்லாத போது எங்கிருந்து வரும் அரசியல் பண்பாட்டு முதிர்ச்சி? இக்கருத்தை ஏற்காமல் சில சடங்கள் இருக்கலாம். ஆனால் தமிழருக்குள்ளே இருக்கும் புல்லுருவிகளை அடையாளம் கண்டு களையெடுத்தால் தமிழர் சிறந்தோங்க வாழ முடியும். நம்மால் முடியாதது ஏதுமில்லை. தமிழர் என்பார் ஓர் இனம் என்று அறிய கொஞ்சம் புத்தியைத் தீட்டினால் போதும்.
“மலேசியத்தமிழர்களுக்கு தமிழகத்தை போலவே அரசியல் ஆளுமை சக்தி கிடையாது. காரணம் நடுவண் அரசுகள் தமிழர்களை அரசியல் அமர்வில் வைப்பதில்லை அது இந்தியாவாகட்டும் மலேசியாவாகட்டும். இதன் அடிப்படை காரணத்தை நம்மால் ஆராய முடியவில்லை?”
இதென்ன அணுவியல் சூத்திரமா? நமக்குப் புரியாமல் போக! தமிழர் என்பாருக்குத் தான் தமிழன் என்ற உணர்வு இல்லாத போது எங்கிருந்து வரும் அரசியல் பண்பாட்டு முதிர்ச்சி? இக்கருத்தை ஏற்காமல் சில சடங்கள் இருக்கலாம். ஆனால் தமிழருக்குள்ளே இருக்கும் புல்லுருவிகளை அடையாளம் கண்டு களையெடுத்தால் தமிழர் சிறந்தோங்க வாழ முடியும். நம்மால் முடியாதது ஏதுமில்லை. தமிழர் என்பார் ஓர் இனம் என்று அறிய கொஞ்சம் புத்தியைத் தீட்டினால் போதும்.
தமிழருக்குள்ளே இருக்கும் புல்லுருவிகளை அடையாளம் கண்டு களையெடுத்தால் தமிழர் சிறந்தோங்க வாழ முடியும். நம்மால் முடியாதது ஏதுமில்லை. இந்த “புல்லுருவி”யாரை குறிப்பது ?தமிழரை தவிர்த்து பிற மலேசியா இந்தியரையையா?நாம் மலேசியா இந்தியராக ஒற்றுமையாக வாழமுயவில்லைஎன்றால்!இதே கொள்கையை ,மலேசியா வாழ் பிற இனம் (மலாய் )நாட்டின் வளர்ச்சி நீரோடையில் இருந்து நம் உரிமைகளை பறித்து ,பிரிவினை வளர்த்து,நாட்டின் ஒற்றுமையை சீர்குழைத்தால்!தமிழராக உரிமைக்கு போராடபோகிறீர்களா ?அல்லது மலேசியா இந்தியர்களாக ஒற்றுமையாக போராடப்போகிறீர்களா? பிரிவினை சிந்தனையை களைவோம்.
தமிழன் என்றாலே குழப்பம்தான் உதாரணம் இந்த கட்டுரையாளர். இதுல இந்தியன் வந்துதான் உங்களை குழப்புணுமா ?