தமிழ் எண்களை நாணயத்தாள்களில் அச்சிட்டு தமிழின் சிறப்பை எடுத்துக்காட்டும் நாடு உலகத்திலேயே ஒன்று தான்.
ஒவ்வொரு மொழியும் தனக்கே உரிய வரி வடிவ எண்களைக் கொண்டுள்ளன ஆனாலும் இலக்கங்களையே அதிகமாக பாவனையில் கொண்டுள்ளன.
எனினும் ஆப்ரிக்கா கண்டத்தில் உள்ள மிகச்சிறிய நாடான மொரிசியஸ் இன்றும் தன் நாட்டு நாணயத்தாள்களில் தமிழ் எண்களை அச்சிட்டு வருகின்றது.
உலகில் இந்த நாட்டு நாணயத்தாள்களில் மட்டுமே தமிழ் எழுத்துக்களும் எண்களும் அச்சிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
மொரிசியசில் ஏறக்குறைய 55 000 தமிழர்கள் வாழ்கின்றதாக கூறப்படுகின்றது. தமிழர்கள் இந்நாட்டின் வளர்ச்சியில் முக்கிய பங்காற்றியுள்ளனர்.
மேலும் தமிழர்கள் பலர் அமைச்சர்களாகவும் நீதிமான்களாகவும் பதவி வகித்துள்ளனர். சில பள்ளிகளில் தமிழ் மொழி பாடமாகக் கற்பிக்கப்படுகிறது.
இந்த நாட்டின் பணத்தில் தமிழ் எழுத்துக்கள் மற்றும் தமிழ் எண்கள் பொறிக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.
ஒரு சில மொழிகளில் மட்டுமே வரி வடிவ எண்கள் இன்றுவரை பாவனையில் இருக்கின்றன. அப்படியாக தமிழ் மொழியின் எண்கள் இன்று வரை உலகின் எங்கோ ஓர் இடத்திலாவது பாவனையில் இருக்கின்றது என்பது சிறப்பானதாகும்.
-http://www.tamilwin.com
கரும்பு பயிரிட்டதால் இந்த இனிப்பான செய்தி. நாங்கள் ரப்பர் பயிரிட்டதால் ரப்பரை வைத்தே தமிழை அழிக்கிறார்கள்! மதம் பிடித்து அலைகிறார்கள்!