நேரத்தை கடந்து வேகமாக பயணிக்க ஆர்பரித்து வரும் நாம் உணவிலும் வேகத்தை எதிர்பார்க்கிறோம். அதன் காரணத்தால் பிறந்த உணவுகள் தான் இந்த ஃபாஸ்ட் ஃபுட் நாவை காதலில் விழவைக்கும் இதன் வித்தியாசமான ருசிக்கு நாம் என்றோ அடிமையாகிவிட்டோம். நமது குழந்தைகளையும் இதற்கு அடிமைப்படுத்திவிட்டோம். இதில் என்ன இருக்கிறது என கேள்விகேட்கும் நபர்கள் இந்த ஃபாஸ்ட் ஃபுட் உலகில் நடக்கும் இந்த பித்தலாட்டம் நிறைந்த அசிங்கமான உண்மைகளை அறிந்தால் இனிமேல் அந்த ஃபாஸ்ட் ஃபுட்யே சாப்பிடமாட்டீர்கள்…
மஸ்டர்ட் – கெட்சப் தியரி!
நீங்கள் ஃபாஸ்ட் ஃபுட் சாப்பிடும் போது அருகே இந்த மஞ்சள் – சிவப்பு காம்போ எப்போதும் இருக்கும். இதை டிப் செய்யாமல் ஃபாஸ்ட் ஃபுட் உணவுகளை ருசிக்கவே மாட்டோம். இதை பின்னணியில் ஒரு தியரி இருக்கிறது. ஆம், இவை இரண்டுமே ருசியை அதிகரிக்கிறதோ, இல்லையோ? உங்கள் பசியை அதிகரிக்கும். இதன் மூலம் உங்களை அதிகம் சாப்பிட வைப்பது தான் இந்த மஸ்டர்ட் – கெட்சப் தியரி.
சில நிமிடங்களில்!
அவ்வளவு பெரிய பர்கர் நீங்கள் ஆர்டர் செய்த உடனேயே கிடைத்துவிடும். இதற்கு பின்னணியில் இருக்கும் மர்மம் வேறொன்றும் இல்லை, ஏற்கனவே பாதி சமைத்து ஃப்ரீசரில் பதப்படுத்தி வைத்ததை உங்களுக்கு சூடு செய்து, தயாரித்து தருகின்றனர். இது தான் உண்மை!
மென்று சாப்பிட!
பொதுவாக, நாம் ஒரு உணவை சாப்பிடும் போது 15 முறையாவது மென்று சாப்பிடும் வகையில் அமைந்திருக்கும். ஆனால், ஃபாஸ்புட் உணவுகளை இதைவிட வேகமாக மென்று சாப்பிடும் வகையில் தான் அமைந்திருக்கும். எவ்வளவுக்கு எவ்வளவு நீங்கள் குறைவாக மென்று சாப்பிடுகிறீர்களோ, அவ்வளவு பசி அதிகரிக்கும். இதற்கு காரணம் சரியாக மென்று சாபிட்டவில்லை என்றால், உங்களுக்கு சாப்பிட்ட திருப்தி ஏற்படாது.
ஒரே ருசி தான்!
பெரும்பாலும் நீங்கள் சாப்பிடும் ஃபாஸ்புட் உணவுகள் ஒரே மாதிரியான ருசியை அளிக்க கூடியவை தான். முக்கியமாக சிலர் சாலட் உணவுகள் குறைந்த கலோரிகள் தான் இருக்கும் என ஆர்டர் செய்து சாப்பிடுவார்கள். ஆனால், நீங்கள் எண்ணுவதைவிட அதிக கலோரிகள் கொண்டிருக்கும் சாலட் உணவுகள்.
காம்போ!
காம்போ உணவுகள் குறைந்த பணத்தில் அதிக உணவு உண்பதற்கு தரப்படுவது அல்ல. குறைவாக சாப்பிட வருபவர்களையும் அதிகம் சாப்பிட வைக்கு பயன்படுத்தும் உக்தி ஆகும். கொஞ்சம் பணம் அதிகம் கொடுத்தால் அதிக உணவு கிடைக்கிறது என மக்களும் விரும்பி வாங்கி உண்ணுவார்கள். இதெல்லாம் கார்ப்பரேட் சூச்சமம்!
கிரில் மீட்!
அதிகளவில் உணவு தயாரிக்கும் நிறுவனங்கள் கிரில் செய்து இறைச்சியை சமைப்பது இல்லையாம். இவர்கள் ஏற்கனவே அதிகளவில் உணவுகளை வாங்கில் ஃப்ரீசரில் வைத்திருப்பார்கள். இதை கிரில் செய்வதற்கு பதிலாக கிரில் போன்ற நறுமணத்தை தரும் செயற்கை புகை பயன்படுத்தி கிரில் மீட் போன்று தயாரிக்கின்றனர். நேரத்தை மிச்சப்படுத்த இப்படியும் சில யுக்திகளை கையாள்கின்றனர்.
போலி முட்டை!
நீங்கள் உன்னுள் ஃபாஸ்ட்புட் களில் சேர்க்கப்படுவது பெரும்பாலும் உண்மையான முட்டை அல்ல. Glycerine மற்றும் Dimethylpolysiloxan (ஒருவகை சிலிகான்) உடன் E552 சேர்த்த ஆரோக்கியத்தை அளிக்கும் வகையில் தயாரிக்கப்படும் போலி முட்டை கலவை பயன்படுத்துகின்றனர்.
காபி!
நீங்கள் நுரை பொங்கி வழியும் காபியை விரும்பு குடிக்கும் நபரா? இதில் அழகான வடிவத்தில் நுரை உண்டாக்க பயன்படுத்தப்படும் Styroform எனும் கெமிக்கல் நரம்பு மண்டலத்தை பாதிக்கக்க செய்யும் என்பதையும் நீங்கள் தெரிந்துக் கொள்ளுங்கள்.
உடல் நலத்திற்கு கேடு விளைவிக்கும் இப்படிப்பட்ட உணவுகளை ஏன் அரசாங்கம் அனுமதிக்கிறது.? மக்கள் நலத்தைவிட விற்பனை வரிதான் முக்கியமோ?
கைலி முழங்கால் வரையிலும் முண்டா பனியனையும் உடுத்தி கொண்டும் வெள்ளை சோறும் கருவாட்டையும் சுட்டு சாப்பிட்ட இந்நாட்டு மைந்தர்கள் எனப்படும் பூமிபுத்ராக்கள், சிலுவார்-சட்டை அணிந்து திடீர் உணவு வகைகளை உண்பது புதுமையாக இருக்கட்டுமே என அரசாங்கம் விரும்புவதிலும் குற்றம் சொன்னால் என்னங்க நியாயம்.