ஆண்கள் ஐம்பது வயதிற்குட்பட்ட நடுப்பகுதியில் தங்களது வாழ்நாளின் அதிகபட்ச நெருக்கடிகள் பலவற்றை சந்திக்கின்றனர். அவர்களது குறிக்கோள்களை அடைய வாழ்நாள் முழுவது ஓடிக்கொண்டே இருக்கின்றனர். இதனால் அவர்களால் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்த முடியாமல் போகிறது. ஐம்பது வயதில் ஆண்களை தாக்கும் 5 ஆபத்தான நோய்கள் பற்றி இப்பகுதியில் கொடுக்கப்பட்டுள்ளது.
1. கார்டிவாஸ்குலர் இருதய நோய்
அமெரிக்காவின் புள்ளிவிவர ஆய்வின் படி, கார்டிவாஸ்குலர் இருதய நோய் மற்றும் பக்கவாதம் ஆகிய இரண்டும் ஆண்களை அதிகமாக மரணமடைய செய்யும் நோய்களில் முதல் மற்றும் இரண்டாம் இடத்தை பிடித்துள்ளன. ஐந்தில் ஒருவர் இந்த நோயினால் பதிக்கப்படுகின்றனர். இது தமனிகளின் உட்சுவர்களில் கொழுப்பு அதிகமாக படிவதால் ஏற்படுகிறது. பெண்களை விட ஆண்கள் ஆறு ஆண்டுகளுக்கு முன்னராகவே இந்த நோயினால் பாதிக்கப்படுகின்றனர். இது மனிதனின் வாழ்நாளை 65 வயதிற்கு குறைவாக்குகிறது.
2. நுரையீரல் புற்றுநோய்
அமெரிக்காவில் அதிகப்படியான மரணங்கள் நுரையீரல் புற்றுநோயால் நிகழ்கிறது. இந்த நோய் ஏற்பட 90% புகைப்பழக்கம் காரணமாகிறது. இந்த நோய் அதிக அளவு பரவியவுடன் மட்டுமே இதனை எக்ஸ்ரேக்கள் மூலமாக கண்டறிய முடியும். அல்லது இதன் அறிகுறிகள் வெளிப்படும். இதனை ஆரம்பத்தில் கண்டறிய எந்த பரிசோதனை முறையும் இல்லை. புகைப்பிடித்தல் மற்றும் புகையிலை நுரையீரல் புற்றுநோய்க்கு உத்தரவாதம் அளிப்பதாக உள்ளது.
3. புரோஸ்டேட் புற்றுநோய்
அமெரிக்காவில் ஆண்களை அதிக அளவில் பாதிக்கும் நோய்களில் புரோஸ்டேட் புற்றுநோயும் ஒன்றாகும். ஆண்குறிக்கு பின்னால் இரகசியமான முறையில் நீர் தேங்குவதால் இந்த புற்றுநோய் உண்டாகிறது. ஆனால் இந்த புற்றுநோயால் 35 ல் ஒருவர் மட்டுமே உயிர் இழக்கிறார். மற்ற கொடுரமான நோய்களை காட்டிலும் இந்த புற்றுநோய் மெதுவாக வளரக்கூடியது. இது அதிகமாக பரவுவதும் இல்லை.
4. மன அழுத்தம்
மன அழுத்தம் பெண்களை விட ஆண்களை அதிகமாக பாதிப்பதாக ஆராய்ச்சிகள் கூறுகின்றன. ஆண்கள் மன அழுத்தத்துடன் இருப்பதால் இருதய நோய் பாதிப்பிற்கு அதிகமாக ஆளாகிறார்கள். ஆண்கள் தங்களது பிரச்சனைகளை மனதிற்குள்ளேயே வைத்து மறைப்பதால் மன அழுத்தம் ஏற்படுகிறது. ஆண்கள் தங்களது கஷ்டத்தை நினைத்து அழுவதில்லை. எனவே மனதை விட்டு துன்பங்கள் நீங்காமல், நாளுக்கு நாள் வழந்து கொண்டே போகிறது. இதனால் இருதய நோய்கள் மற்றும் பக்கவாதம் ஆகியவை ஏற்படுகிறது.
5. நீரிழிவு நோய்
அமெரிக்காவில், அதிக அளவு மரணத்தை ஏற்படுத்துவதில் நீரிழிவு நோயும் ஒன்று. இரத்த குழாய்களில் குளூக்கோஸின் அளவு அதிகரிப்பதால் இரத்த நாளங்கள் மற்றும் நரம்புகள் பாதிப்படைகின்றன இதனால், மாரடைப்பு, பக்கவாதம், குருட்டுத்தன்மை, சிறுநீரக செயலிழப்பு மற்றும் ஊனம் ஆகியவை ஏற்படுகிறது. நீரிழிவு நோயானது சத்தமில்லால் ஆரம்பிக்கிறது பல ஆண்டுகள் கழித்து தான் ஆண்களின் இரத்த சக்கரையின் அளவு அதிகரிக்கிறது. இதனால் அதிக அளவு தாகமும், சிறுநீர் வெளியேறுவதும் நடைபெறுகிறது. அதிக அளவு எடை நீரிழிவு நோய்க்கு முக்கிய காரணமாகிறது.
-manithan.com
ஆசிய நாடுகளின் புள்ளி விபரம் கொடுத்திருந்தால் இன்னும் பயனுடையதாக இருந்திருக்கும்!