வெங்காயத்தில் சல்பர், விட்டமின் C, B6, பயோடின், ஃபோலிக் அமிலம், குரோமியம், கால்சியம் மற்றும் நார்ச்சத்து போன்றவை வளமாக நிறைந்துள்ளது.
இவ்வளவு சத்துக்களை உள்ளடக்கிய வெங்காயத்தை பச்சையாக சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் என்னவென்று தெரியுமா?
வெங்காயத்தை பச்சையாக சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்
- வெங்காயத்தில் உள்ள க்யூயர்சிடின் தமனிகளில் ப்ளேக்குகளின் உருவாக்கத்தைத் தடுத்து, மாரடைப்பு ஏற்படும் அபாயத்தை குறைக்கிறது.
- வெங்காயத்தில் உள்ள அழற்சி எதிர்ப்பு பண்புகள் சுவாச குழாய் தசைகளை ரிலாக்ஸ் அடையச் செய்து, ஆஸ்துமா மற்றும் மூச்சுக்குழாய் அழற்சியில் இருந்து விடுபட உதவுகிறது.
- வெங்காயம் சளி, இருமல், காய்ச்சல், தும்மல் மற்றும் மூக்கு ஒழுகல் போன்றவற்றையும் தடுக்க பெரிதும் உதவியாக இருக்கும்.
- வெங்காயத்தில் உள்ள ஆன்டி-மைக்ரோபியல் தன்மை சளி, காய்ச்சல், தும்மல், மூக்கு ஒழுகல், போன்ற நோய்களை சரிசெய்து, அல்சர் ஏற்படும் அபாயத்தைக் குறைக்க உதவுகிறது.
- வெங்காயத்தில் உள்ள கரையக்கூடிய நார்ச்சத்துக்கள், குடலில் நல்ல பாக்டீரியாக்களின் வளர்ச்சியை அதிகரித்து, செரிமானம், மலச்சிக்கல், சிறுநீர்ப்பை கோளாறுகள் போன்ற பிரச்சனை ஏற்படாமல் தடுக்கிறது.
- வெங்காயத்தில் உள்ள ஆன்டி-செப்டிக் மற்றும் ஆன்டி-மைக்ரோபியல் பண்புகள், காசநோயை ஏற்படுத்தும் மைகோபாக்டீரியத்தை செயலிழக்கச் செய்து, காசநோய் வராமல் தடுக்கிறது.
- பிரசவத்திற்கு பின் பெண்கள் வெங்காயத்தை சிறிது பச்சையாக தினமும் சாப்பிட்டால், அது தாய்ப்பால் உற்பத்தியை அதிகரிக்க உதவுகிறது.
- வெங்காயத்தில் கலோரிகள், சோடியம் குறைவு மற்றும் கொழுப்புகள் அற்றது என்பதால், அது ரத்த நாளங்களின் நெகிழ்வுத்தன்மையை அதிகரித்து, ரத்தசோகை, உயர் இரத்த அழுத்த பிரச்சனை வராமல் தடுக்கிறது.
- -lankasri.com