தர்பூசணியை(குமுட்டிப் பழம் ) சாப்பிட்ட பின் நீர் குடிக்க வேண்டாம்.. உடலுக்கு ஆபத்து…?

watermelon_desibantuதர்பூசணியை கோடைகாலத்தில் விரும்பாதவர்கள் யார்? குறிப்பாக குழந்தைகளின் ஃபேவரி பழங்களில் தர்பூசணிக்குதான் முதலிடம்.

தர்பூசணி சிறந்த நீர்ச் சத்து கொண்டவை. பல வித ஊட்டச்சத்துக்களும் நிரம்ப பெற்றவை. லைகோபீன், பொட்டாசியம் மற்றும் நார்சத்து நிரம்பிய பழம்.

இப்படி தர்பூசணியிடன் நிறைய நன்மைகள் தரும் பக்கம் இருந்தாலும், அதனைப் பற்றி தவறான நம்பிக்கைகளும் உலவுகின்றன. அதில் ஒன்றுதான் தர்பூசணிய சாப்பிட்ட பின் நீர் குடிக்கக் கூடாது என்பது.

அதனைப் பற்றி கொஞ்சம் விரிவாக பார்க்கலாமா?

காரணம் 1

தர்பூசணியில் 96 சதவீதம் நீர் இருக்கிறது, . அதனுடன் நாம் நீர் குடித்தால் , ஜீரண உறுப்புகளில் சுரக்கும் என்சைம் திரவம் அடர்த்தி குறைந்து அஜீரணம் மற்றும் வாயு பிரச்சனை உண்டாகும்.

காரணம் 2

இது நீர் மற்றும் ஃப்ரக்டோஸ் எனப்படும் சர்க்கரை இருப்பதால் அதனை சாப்பிட்ட பின் நீர் குடித்தால் வயிற்றுக் கோளாறுகள் ஏற்படுத்திவிடும் என்று ஒருசாரார் தெரிவிக்கின்றனர்.

காரணம் 3

ஆயுர்வேதத்தின்படி சில உணவுகள் கூட்டுச் சேர்க்கை இயல்பான ஜீர்ண மண்டலத்தின் வேலையை பாதிக்கும். தோஷங்களை உண்டு பண்ணும். எனவே தர்பூசணியை தனியாக சாப்பிடுவது நல்லது. என்று ஆயுர்வேத மருத்துவர். வசந்த் லாட் கூறுகின்றார்.

காரணம் 4

உடலில் செரிப்பதற்கான குடல்களில் உருவாகும் நல்ல பேக்டீரியாக்களின் வளர்ச்சிக்கும் செயல்களுக்கும் தேவையான சர்க்கரையும், நீரும் தர்பூசணியில் இருப்பதால், அதனை சாப்பிட்ட பிறகும் நீர் குடித்தால், நல்ல பேக்டீரியாக்கள் அடித்துச் செல்லப்பட்டு, செரிமான பிரச்சனையை உண்டு பண்ணும் என்று ஊட்டச்சத்து நிபுணர் அஞ்சு சூத் கூறுகின்றார்.

காரணம் 5

தர்பூசணியுடன் வேறெந்த உணவுப் பொருளும் சாப்பிடக் கூடாதென்று ஆயுர்வேதம் கூருகின்றது. அப்படி சேர்ந்து சாப்பிட்டால் ஜீரண சக்தி குறைந்து, அமிலத்தன்மை அதிகரிக்கும் சூழ் நிலை உருவாகுமாம். முடிவு? அதனால்தான் ஜீரண பிரச்சனை இருப்பவர்கள் தர்பூசணியை சாப்பிட்ட பின் நீர் குடிப்பதால் வயிறு உப்புசம் மற்றும் அசிடிட்டி உண்டாவதாக உணர்கிறார்கள்.

எது எப்படியோ அறிவியல் பூர்வமாக இதனைப் பற்றி எதுவும் தெளிவாக தெரியவில்லையென்றாலும், அதன் நன்மைகளை மட்டும் பார்த்து, தர்பூசணியை வயிறு நிறைய நாம் உண்ணலாம். அதன் சுவையை ரசிக்கலாம்.

-manithan.com