உடல் சோர்வை போக்க சூப்பர் டிப்ஸ்: மிஸ் பண்ணிடாதீங்க

கோடைகால தாக்கத்தால் ஏற்படும் அதிக வியர்வை, உடல் சோர்வு, நீர்ச்சத்து இழப்பு போன்ற பல்வேறு பிரச்சனைகளை சுலபமாக குணமாக்க அற்புதமான தீர்வுகள் இதோ..

புளிச்சைக்கீரை

ஒரு பாத்திரத்தில் நெய் விட்டு, உருகியதும் நசுக்கி வைத்துள்ள புளிச்ச கீரையை சேர்த்து வதக்கி, அதனுடன் சிறிது மிளகுப்பொடி, உப்பு சேர்த்து நீர்விட்டு கொதிக்க வைக்க வேண்டும்.

நன்மைகள்

இந்த புளிச்சக்கீரை சூப்பை வடிகட்டி குடித்து வந்தால், சிறுநீர் தாரையில் ஏற்படும் எரிச்சல், நாவறட்சி, உடல் சோர்வு போன்ற பிரச்சனைகள் குணமாகும்.

புளிப்பு சுவையுடைய இந்த கீரை நார்ச்சத்து, கால்சியம் அதிகம் நிறைந்தது. எனவே இது எலும்புகளுக்கு அதிக பலம் கொடுக்க உதவுகிறது.

சிவப்பு பொன்னாங்கண்ணி கீரை

சிவப்பு பொன்னாங்கண்ணி கீரையை அரைத்து பசையாக்கி, அதனுடன் சீரகம், பனங்கற்கண்டு சேர்த்து ஒரு டம்ளர் நீர் விட்டு கொதிக்க வைக்க வேண்டும்.

நன்மைகள்

இந்த பொன்னாங்கண்ணி கீரை சூப்பை வடிகட்டி குடித்து வந்தால், கோடைகாலத்தில் ஏற்படும் கண் எரிச்சல், கண்சிவப்பு, உடல் சோர்வு மற்றும் மலச்சிக்கல் போன்ற பிரச்சனைகளுக்கு நல்ல தீர்வளிக்கிறது.

இந்தக் கீரையில் நார்ச்சத்து அதிகம் உள்ளதால், இது உடலுக்கு தேவையான சத்துக்களை தருவதுடன், தோலுக்கு மினுமினுப்பைக் கொடுக்கிறது.

செவ்வாழைப்பழம்

செவ்வாழை பழத்தை துண்டுகளாக நறுக்கி, அதனுடன் தேன், காய்ச்சிய பால் ஆகிய இரண்டையும் சேர்த்து சாப்பிட்டு வர வேண்டும்.

நன்மைகள்

இந்த செவ்வாழைப்பழத்தை சாப்பிட்டு வருவதால், அது உடல் சோர்வை நீக்கி, புத்துணர்வு அளிப்பதுடன், சிறுநீர் தாரையில் எரிச்சல், உடல் எரிச்சல், அதிக வியர்வை, துர்நாற்றம், சோர்வு, மயக்கம் போன்ற பிரச்சனைகளுக்கு நல்ல தீர்வாக உள்ளது.

பசலைக்கீரை

கொடி பசலைக்கீரை உடலுக்கு குளிர்ச்சியையும், தலைவலியை போக்கும் தன்மை கொண்டது. எனவே பசலை கீரையை அரைத்து, அதை பசையாக்கி நெற்றியில் பற்று போட்டு வந்தால், தலைவலி விரைவில் குணமாகிவிடும்.

-lankasri.com