இறுக்கமான உள்ளாடை: ஆண்களுக்கு ஏற்படுத்தும் அபாயம்

நாம் அணியும் உள்ளாடைகள் தரமானதாக இருக்க வேண்டியது மிகவும் அவசியம். ஏனெனில் தரமற்ற மற்றும் இறுக்கமான உள்ளாடைகளை அணிவதால் ஆண்கள் பல பிரச்சனைகளை சந்திக்க நேரிடுகிறது.

இறுக்கமாக உள்ளாடை அணிவதால் ஏற்படும் பிரச்சனைகள்

 

  • உள்ளாடைகளை இறுக்கமாக உடுத்தும் போது, வெப்பத்தை அதிகமாக்கி, விந்தணு வளர்ச்சியை உறிஞ்சுவதுடன், கருத்தரிக்கும் திறனை, குறைக்கும் வாய்ப்பினை அதிகமாக்குகிறது.

 

  • ஆண்களின் விந்தணுக்கள் தொடர்பாக மலட்டுத்தன்மை போன்ற பல பிரச்சனைகள் இறுக்கமான உள்ளாடைகள் அணிவதன் மூலம் ஏற்படுவதாக மருத்துவ பரிசோதனைகள் கூறுகின்றது.

 

ஆய்வு கூறுவது என்ன?

இது குறித்து நடத்தப்பட்ட ஆய்வில், உள்ளாடை அணியாமலும், பலதரப்பட்ட தரங்களில் உள்ளாடைகளை அணிவதற்கும் உள்ள வேறுபாடுகள் அறியப்பட்டது.

இந்த ஆய்வின் முடிவில், அதிக வெப்பநிலை காரணமாக விந்தணுக்கள் பாதிக்கப்படுகிறது. ஆனால் உள்ளாடை அணியாமல் இருப்பதாலும், ஒருசில பாதிப்புகள் உண்டாகும் என்று ஆய்வு கூறுகிறது.

குறிப்பு

ஒவ்வொருவரும் தங்களது உடலின் வெப்பநிலைக்கு ஏற்றது போல உள்ளாடைகளை அணிய வேண்டியது அவசியம்.

எனவே மிகவும் இறுக்கமான, அசௌகரியமான உள்ளாடைகள் அணிவதை தடுப்பதால், விந்தணு ஆரோக்கியத்தினை பாதுகாக்கலாம்.

 

-lankasri.com