20,000 வருடங்களுக்கு முன்னர் கடலில் மூழ்கிப் போன தமிழனின் வரலாறு..!

தமிழ் மொழியை பேச மறந்துவரும் தமிழர்களே. எத்தனை பேருக்கு தமிழின் பெருமைகள் முழுமையாக தெரியும்? “கல்தோன்றி மண் தோன்றாக் காலத்துக்கு முன் தோன்றிய மூத்த குடியினர்” தான் தமிழர்கள்.

ஆனால் இன்று தமிழில் பேச வெட்கப்படுவதும் அவன்தான். இதற்கு காரணம் எம் வரலாற்றை முழுமையாக தெரிந்து கொள்ளாததுதான்.

முதலில் நாம் நம் வரலாற்றை தெரிந்து கொள்ள வேண்டும். அதற்கு உங்களை 20,000 வருடங்களுக்கு முன்னர் கடலில் மூழ்கிய ஒரு உலகிற்கு அழைத்துச் செல்லப்போகின்றேன்.

என்னுடன் சேர்ந்து பயணிக்க சில நிமிடங்களை ஒதுக்குங்கள். அப்போதுதான் சில உண்மைகள் உங்களுக்கு புரியும்…

“குமரிக்கண்டம்“ இங்குதான் பல வரலாற்று அதிசயங்கள் நிகழ்ந்துள்ளன. ஆம் உலகின் முதல் மனிதன் பிறந்ததாக வரலாற்று ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றார்கள்.

இங்கு தான் நம் மூதாதையர் வாழ்ந்துள்ளனர். ஆனால் இன்று கடலுக்கடியில் அமைதியாக உறங்கிக்கொண்டிருக்கின்றது குமரிக்கண்டம்.

குமரிக்கண்டம் என்பது முற்காலத்தில் இருந்ததாக கோட்பாடுகளால் ஊகிக்கப்படும் அல்லது இலக்கியங்களில் கூறப்படும் மிகப் பெரிய நிலப்பரப்பாகும்.

கண்டம் போன்ற பெரும் நிலப்பகுதியானது இன்றுள்ள இந்தியாவின் எல்லையான குமரி முனைக்குத் தெற்கே முற்காலத்தில் பாண்டியர்களின் ஆட்சிக்கு கீழ் அமைந்திருந்தது எனக் கருதுவதற்கு இடம் தரும் வகையில் பண்டைத் தமிழ் இலக்கிய நூல்களில் கூறப்பட்டுள்ளது.

தேவநேயப் பாவாணர் முதலானோர் இந்த குமரிக்கண்டத்தில்தான் வாழ்ந்துள்ளார். இங்கு மாந்தர்களும் தமிழர்களும் முதன்முதல் தோன்றியுள்ளதாக எழுதியுள்ளனர்.

ஆதி மனிதன் தோன்றியிருக்கக் கூடிய தென் குமரிக்கண்டம் கடல்கோளால் அழிவிற்கு உட்பட்டது என்பது ஆய்வாளர்களின் கருத்து.

கடந்த1960ஆம் ஆண்டு இந்து மாகடலில் கடற்தள ஆராய்ச்சியாளர் செய்த ஆய்வில் தமிழகத்தின் கன்னியாகுமரிக்குத் தெற்கே இரண்டு கண்டங்கள் இருந்திருப்பதை கண்டுபிடித்துள்ளதாக கூறுகின்றார்கள்.

1960 – 1970 ஆண்டுகளில் தயாரிக்கப்பட்ட இந்து மாகடல் கடற்தள வரைபடங்களில், குமரிக் கண்டத்தின் பூர்வீக அமைப்பு நிலை காணப்படுகிறது.

-tamilwin.com

https://youtu.be/CXRgVGl7hkU