திரும்பிய பக்கமெல்லாம் பிளாஸ்டிக். ஆழ்கடலின் அடியிலும் பிளாஸ்டிக் கழிவுகள்.
ஆசியாவின் வாடிக்கையாளர் சார்ந்த பொருளாதார வளர்ச்சியால் பிளாஸ்டிக் உற்பத்தி ஆசிய நாடுகளில் பலமடங்கு அதிகரித்தது.
ஆனால் தற்போது அரசுகளும் தொழிற்சாலைகள் உள்ளிட்ட மற்றவர்களும் பிளாஸ்டிக்கால் கடலில் ஏற்படும் மோசமான மாசை குறைப்பதற்கான பெரும் முயற்சியை முன்னெடுத்துள்ளனர்.
தமது மாசுகளை அகற்றும் நடவடிக்கையை முன்னெடுக்கப்போவதாக சில ஆசிய நாடுகள் ஐநாவிடம் உறுதி அளித்துள்ளதாக ஐநா சுற்றுச்சூழல் இயக்குநர் எரிக் சோல்ஹெய்ம் தெரிவித்தார்.
குப்பைகளை கையாளும் தனது வழிமுறைகளை மேம்படுத்தப்போவதாக சீனா கூறியுள்ளது.
பிளாஸ்டிக் பயன்பாட்டை கட்டுப்படுத்தும் திட்டம் ஒன்றை தாய்லாந்து கொண்டுவருகிறது.
இந்தோனேஷிய அரசு பிளாஸ்டிக் கழிவுகளை கையாள்வது குறித்து குழந்தைகளுக்கு கற்பிக்கிறது.
இவையெல்லாம் முன்னேற்றம் தான் என்றாலும் இவை போதுமானதல்ல என்கிறது கிரீன்பீஸ் அமைப்பு. -BBC
சீனா இப்போது பிளாஸ்டிக் பைகளை அரிசியாக மாற்றி விட்டது! பிரச்சனை அவர்களுக்குத் தீர்ந்தது!
பிளாஸ்டிக் அரிசி பிளாஸ்டிக் முட்டை தயாரிப்பாளர்கள் துப்பாக்கியின் முன் நிறுத்தப்பட வேண்டும்.
மனிதனின் பணம் பண்ணும் பேராசை உலகையே மூழ்கடிக்குமா?