இராஜராஜ சோழனின் மகன் இராஜேந்திர சோழன். விஜலாய சோழனின் காலத்தில் தொடங்கிய சோழ சாம்ராஜ்ஜியத்தின் முக்கிய அரசர்களுள் ஒருவராக திகழ்ந்தவர் ராஜேந்திர சோழர். இவரது ஆட்சிக் காலத்தில் சோழ சாம்ராஜ்ஜியம் எல்லைகள் கடந்து போர் புரிந்து பெரும் வெற்றிகள் கொண்டன
கடற்போர்!
இருபது ஆண்டுகள் கடற்போர் புரிந்த மாபெரும் வீர அரசர் ராஜேந்திரா சோழர். அறுபது ஆயிரம் யானை படை, ஒரு லட்சம் பேர் கொண்ட காலாற்படையை வங்கக்கடல் கடந்து சென்று மறு கரையில் நிறுத்திய தருணமே அஞ்சி நடுங்கி தேசங்களை ஒப்படைத்தவர்களும் இருந்தனர். தனது போர் வீரத்தால் அடிப்பணிய வைத்தும் பல தேசங்களை வெற்றி வாகை சூடி சாதித்தார்.
தேசங்கள்!
மலேசியா, தாய்லாந்து, சிங்கப்பூர், இந்தோனேசியா, இலங்கை, ஜாவா, சுமத்திரா என வெளி தெற்கு ஆசியாவின் கீழ் நாடுகளை வெற்றிகொண்ட பேரரசன் ராஜேந்திர சோழன்.
தமிழ் பேரரசன்!
இந்தியாவின் முதல் பேரரசராக ராஜேந்திர சோழர் திகழ்ந்துள்ளார். தோல்வி என்றால் என்ன? என்ற கேள்வி கேட்கும்படி பல போர்களில் வெற்றிகள் வாரிக்குவித்தவர் ராஜேந்திர சோழன்.
கங்கை கொண்டான்!
கங்கை வரை சென்று வெற்றி பெற்று, அங்கிருந்து நீர் கொண்டு வந்து கங்கை கொண்ட சோழ புரத்தை உருவாக்கிய பேரரசர் ராஜேந்திர சோழன்.
ஆட்சி பரப்பளவு!
அன்றைய மதராசப்பட்டினம், ஐதராபாத், மைசூர் பகுதிகள் தொட்டு, கீழே ஈழம், மாலத்தீவுகள், பிற தேசங்கள் உட்பட பெரும் பரப்பளவில் ராஜேந்திர சோழன் ஆட்சி செய்து வந்துள்ளார்.
33 ஆண்டுகள்!
தான் ஆட்சி செய்து வந்த 33 ஆண்டுகளில் தலை சிறந்த நாடாகவும், மலேயாத் தீபகற்பம், கீழ் கடற்கரை உட்பட்ட பரந்த நாடாக அமைத்து பேரரசாக திகழ்தார். இவர் தான் முடிசூடிய இரண்டே ஆண்டுகளில் தனது மகன் ராஜாதிராஜ சோழனை இளவரசனாக முடிசூட்டு இருவரும் இணைந்து பெரும் ஆட்சி செய்தனர். பல போர்களில் வெற்றி கண்டனர்.
பெரும் போர்கள்!
சாளுக்கியர், ஈழம், கங்கை, பாண்டியர்கள், சேரர்கள் என அந்த காலத்தில் வலிமை மிகுந்து காணப்பட்ட அனைத்து ராஜ்ஜியங்களையும் போர் செய்து வென்ற பெருமைக்கு உரியவர் பேரரசர் ராஜேந்திர சோழன்.
புனைப்பெயர்கள்!
முடிகொண்ட சோழன், பண்டித சோழன் மற்றும் கங்கை கொண்ட சோழன் போன்றவை இவருக்கு சூட்டப்பட்டு பெரும் கவுரவம் மற்றும் விருதுகளாக திகழ்ந்தன.
புது தலைநகர்!
முக்கியமாக இவற்றுள் கங்கை கொண்ட சோழன் என்பதையே ராஜேந்திர சோழர் பெரும் புகழாக கருதினார். தஞ்சையை மாற்றி கங்கை கொண்ட சோழபுரத்தை தலைநகராக நிறுவினார்.


-manithan.com


























பழங்கதை.இன்றைய தமிழனின் நிலையே நமக்கு முக்கியம் !