உலகில் நாம் அறியா விடயங்கள் நிறைய இருக்கின்றன. அவ்வற்றை எல்லாம் தெரிந்து கொள்ளும் பொழுது நமக்கு ஆச்சர்யம் தான் மிஞ்சும்.
அவ்வாறு இந்த உலகில் மிக அழகான பிரமிக்க வைக்கும் சுற்றுலா தளங்கள் ஏராளமான உள்ளன. சில வற்றை நமக்கு தெரிந்திருக்கும் சில வற்றை தெரிந்திருக்க வாய்ப்பில்லை.
அதே போல இவ்வுலகில் ஆபத்தான சுற்றுலா தளங்களும் உள்ளன. அப்படிப்பட்ட ஆபத்தான சுற்றுலா மலை பாதையை பற்றி இங்கு பார்க்கலாம்.
எல் கேமினிடோ டெல் ரே ( El caminito del Rey)
உலகிலேயே மிகவும் ஆபத்தான பாதை என்றல் அது ஸ்பெயினில் உள்ள எல் கேமினிடோ டெல் ரே தான். 1905 ஆம் ஆண்டு தொழிலாளர்கள் நீர் நிலைகளுக்கு செல்வதற்காக இப்பாதை அமைக்கப்பட்டது.
இந்த நடை பாதை சுமார் 3 கி.மீ நீளத்தில் 358 அடி உயரத்தில் வெறும் 3 அடிக்கு குறைவான அகலத்தில் சிமெண்டில் அமைக்கப்பட்டுள்ளது.
சுமார் 100 ஆண்டு பழமையான இந்த பாதை சேதமடைந்தது. சாகசம் செய்பவர்களுக்கு சவாலாக இருக்கும் இந்த பாதையில் 5 நபர்கள் கீழே விழுந்து இறந்ததால் இப்பாதையை ஸ்பெயின் அரசாங்கம் மூடி தடையும் விதித்தது. அப்படி தடை விதித்தும் பொது மக்கள் இதை பயணப்படுத்த தொடங்கினர் ஆதலால் பல மில்லியன் செலவு செய்து பாதையை சீரமைத்து 2015 ஆம் ஆண்டு மீண்டும் திறக்கப்பட்டது.
-manithan.com