உடல் நலத்துக்கு தேவையான முக்கியமான உணவுகள் எவை என்பதை அறிந்து அதை தவிர்க்காமல் உண்ண வேண்டும்.
அப்படி சாப்பிட்டால் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.
வெள்ளைப் பூண்டு
குடல் புண் மற்றும் தலைவலி முதல் புற்றுநோய் வரை பல நோய்களையும் குணமாக்கும் சக்தி வெள்ளைப்பூண்டில் உள்ளது.
உடலில் நன்மை தரும் கொலஸ்ட்ரால் உருவாக வெள்ளைப்பூண்டின் பங்கு முக்கியமானது.
வெங்காயம்
ஜலதோஷத்தை ஏற்படுத்தும் நச்சு கிருமிகளையும், புற்று நோய்களையும், இதய நோய்களையும் தடுக்கும் தன்மை வெங்காயத்தில் உண்டு.
நோய் தொற்றைத் தடுத்து, உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க செய்கிறது.
வெங்காயத்தில் உள்ள அலிலின் என்ற ராசயனப் பொருள்தான், பாக்டீரியாக்கள், நச்சு கிருமிகள் போன்றவை உடலில் சேர விடாமல் தடுக்கின்றன.
ஆரஞ்சு
ஆரஞ்சு பழத்தில் விட்டமின் சி சத்து அதிகம் உள்ளது. இந்த விட்டமின், காற்று மற்றும் நீர் மூலம் பரவும் நோய் தொற்று கிருமிகளை எதிர்த்துப் போராடி, சேராமல் தடுக்கின்றன.
பருப்பு வகைகள்
பாதாம் பருப்பு, வேர்க்கடலை போன்ற வகைகளில் உள்ள விட்டமின் ஈ, வெள்ளை ரத்த அணுக்கள் சிறப்பாகச் செயல்பட உதவுகின்றன. இதனால், நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கிறது.
இறால், மீன் மற்றும் நண்டு
அழிந்து போன செல்களால் ஏற்படும் நோயை தடுக்கும் சக்தி, இறால் மீன் மற்றும் நண்டு உணவில் உள்ளது.
இதற்கு இதில் உள்ள துத்தநாக உப்பு உதவுகிறது. வாரம் ஒரு நாள் இவற்றை எடுத்துக் கொள்வது நல்லது.
தேநீர்
தேநீரில் உள்ள மக்னீசியம் உப்பு, நோய் எதிர்ப்பு செல்கள் அழியாமல் தடுக்கிறது. நோய் தொற்றை தடுக்கலாம்.
-lankasri.com
தகவல்களுக்கு நன்றி.