கெட்ட கொழுப்புகளின் தேக்கம் நம் உடலில் அதிகமாக இருந்தால் உடல் பருமன் அதிகரித்து உயரத்திற்கு ஏற்ற உடல் எடையுடன் இருக்க முடியாது.
எனவே 7 நாட்களில் 10 கிலோ உடல் எடையைக் குறைக்க இதய மருத்துவர் அற்புதமான டயட் திட்டத்தினை கூறியுள்ளார்.
காலை உணவு
இந்த 7 நாட்கள் டயட்டின் போது காலை உணவாக பழங்களை மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும்.
ஆனால் திராட்சை, வாழைப்பழம் போன்ற பழங்களை மட்டும் தவிர்க்க வேண்டும்.
நாள் – 1
மதிய உணவு- 1 வேக வைத்த முட்டை, 1 ஆரஞ்சுப் பழம், 200 மிலி தயிர் சாப்பிட வேண்டும்.
இரவு உணவு- 2 தக்காளி, 2 வேக வைத்த முட்டைகள், 2 துண்டு பிரட் டோஸ்ட், 1/2 வெள்ளரிக்காய் சாப்பிட வேண்டும்.
நாள் – 2
மதிய உணவு- 1 வேக வைத்த முட்டை, 1 ஆரஞ்சுப் பழம், 1 கப் தயிர் சாப்பிட வேண்டும்.
இரவு உணவு- 1 ஆரஞ்சுப் பழம், 1 துண்டு பிரட் டோஸ்ட், 125 கிராம் வேக வைத்த இறைச்சி, சர்க்கரை இல்லாமல் 1 கப் டீ அல்லது காபி குடிக்க வேண்டும்.
நாள் – 3
மதிய உணவு- 1 வேக வைத்த முட்டை, 1 ஆரஞ்சுப் பழம், 1 வெள்ளரிக்காய் சாப்பிட வேண்டும்.
இரவு உணவு- 1 ஆரஞ்சுப்பழம், 1 துண்டு பிரட் டோஸ்ட், 125 கிராம் வேக வைத்த இறைச்சி, சர்க்கரை இல்லாமல் 1 கப் டீ அல்லது காபி குடிக்க வேண்டும்.
நாள் – 4
மதிய உணவு- 1 தக்காளி, 1 துண்டு பிரட் டோஸ்ட், 125 கிராம் காட்டேஜ் சீஸ் சாப்பிட வேண்டும்.
இரவு உணவு- 1 ஆரஞ்சுப் பழம், 1 துண்டு பிரட் டோஸ்ட், 125 கிராம் வேக வைத்த இறைச்சி, சர்க்கரை இல்லாமல் 1 கப் டீ அல்லது காபி குடிக்க வேண்டும்.
நாள் – 5
மதிய உணவு- 1 தக்காளி, 1 துண்டு பிரட் டோஸ்ட், 200 கிராம் வேக வைத்த இறைச்சி அல்லது மீன் சாப்பிட வேண்டும்.
இரவு உணவு- 1 கப் வேக வைத்த கேரட், உருளைக்கிழங்கு மற்றும் பட்டாணி போன்ற காய்கறி உணவுகளை சாப்பிட வேண்டும்.
குறிப்பு
காய்கறிகளை வேகவைத்து சாப்பிடும் போது அதில் உப்பு சேர்க்கக் கூடாது.
5 நாட்கள் டயட்டை பின்பற்றிய பின், 2 நாட்கள் இடைவெளிக்கு விட்டு 8-ஆவது நாளில் இருந்து மீண்டும் இந்த டயட்டை பின்பற்ற வேண்டும்.
இந்த டயட்டை பின்பற்றும் போது முக்கியமாக தினமும் தவறாமல் 30 நிமிடம் உடற்பயிற்சி செய்ய வேண்டும்.
இதய நோயாளிகள் இந்த டயட்டை பின்பற்றும் முன் மருத்துவரின் ஆலோசனை மிகவும் அவசியம்.
-lankasri.com