மூளையை பாதிக்கும் ஆபத்தான உணவுகள்: எவை தெரியுமா?

brain_001மனித உறுப்புகளில் மிகவும் முக்கியமானது மூளை. ஏனெனில் அதன் அடைப்படையில் தான் உடலின் பல செயல்பாடுகள் நடைபெறுகிறது.

ஆனால் தினசரி நாம் உட்கொள்ளும் சில உணவுகள் மூளையை பாதிக்கும் என்பது உங்களுக்கு தெரியுமா?

மூளையை பாதிக்கும் உணவுகள் எவை?
  • மக்காச்சோளம் நம் உடலுக்கு ஆரோக்கியமானதாக இருந்தாலும், மைக்ரோவ்வேவ்வில் வைத்து தயாரிக்கப்படும் பாப்கார்ன்கள் சாப்பிடுவது மூளைக்கு ஆபத்தானது. ஏனெனில் இதில் அதிக கொழுப்புக்கள் உள்ளதால், இது மூளையின் ஆரோக்கியத்தை பாதிக்கும்.
  • சோடியம் நிறைந்த உணவுகளை அதிகமாக எடுத்துக் கொள்ளக் கூடாது. ஏனெனில் அது நம் உடலின் செயல்பாட்டைக் குறைத்து, மூளையையும் பாதிக்கச் செய்கிறது.
  • ப்ரைட் ரைஸ் மற்றும் துரித உணவுகளை அடிக்கடி சாப்பிடக் கூடாது. ஏனெனில் அது மூளையை மட்டுமின்றி, உடலின் முழு ஆரோக்கியத்தையும் பாதித்துவிடும்.
  • தினமும் சீஸ் மற்றும் வெண்ணெய்யை அடிக்கடி உணவில் சேர்த்து சாப்பிட்டு வந்தால், அந்த உணவில் உள்ள கொழுப்புகள், நம் மூளையின் ஆரோக்கியத்தை பாதிப்படையச் செய்யும்.
  • கொழுப்பு நிறைந்த உணவுகள், பதப்படுத்தப்பட்ட உணவுகள் மற்றும் காற்று நிரப்பிய பாக்கெட்களில் அடைக்கப்பட்ட திண்பண்டங்கள் ஆகியவற்றை சாப்பிடக் கூடாது. ஏனெனில் அது நம் உடலில் கொழுப்புகளை அதிகமாக்கி, மூளையின் ஆரோக்கியத்தை பாதிக்கும்.

    -lankasri.com