காஃபிக்கு ஆபத்து

coffeeபுவிவெப்பமடைவதால் கோடிக்கணக்கானவர்களின் காலைபானமான காஃபி காணமல் போய்விடுமா?

போகக்கூடும் என்கிறார் “காஃபி ரிபோர்ட்” அறிக்கையின் துணை ஆசிரியரும் கிவ்பூங்கா ஆய்வாளருமான ஆரோன் டேவிஸ்.

பூமி வெப்பமடைவதை உடனடியாக தடுக்காவிட்டால் காஃபிகொட்டை விளைச்சல் குறையும்; காஃபியின் சுவை மோசமாகும்; அதன் விலையும் பலமடங்கு அதிகரிக்கும் என எச்சரிக்கிறார் அவர்.

புவி வெப்பமடையும் போக்கு ஏற்கனவே காஃபி கொட்டை பயிரிடலை பாதிக்கத் துவங்கிவிட்டது என்கிறார் அவர்.

காஃபியின் பிறப்பிடம் எத்தியோப்பியா. ஆப்ரிக்காவின் மிகப்பெரிய காஃபி ஏற்றுமதி நாடும் அதுவே.

தற்போது எத்தியோப்பியாவின் காஃபி பயிராகும் நிலத்தில் 60% புவி வெப்பமடைவதால் காணாமல் போகுமென கணக்கிடப்படுகிறது.

சூடான காஃபி சுவையான பானமாக இருக்கலாம். ஆனால் பூமி சூடானால் காஃபியே காணாமல் போய்விடும் என்கிறார்கள் ஆய்வாளர்கள்.

-BBC_Tamil