ஐரோப்பியர்கள் அனைவரும் இந்த மன்னரின் பரம்பரையில் வந்தவர்களாம் தெரியுமா?

ஐரோப்பியர்கள் அனைவரும் 768 முதல் 814 ஆம் ஆண்டு வரை மேற்கு ஐரோப்பாவின் பெரும்பகுதியை ஆட்சி செய்த Charlemagne மன்னரின் பரம்பரையில் வந்தவர்கள் என்ற தகவல் வெளியாகியுள்ளது.

பிரித்தானியா மற்றும் ஐரோப்பியாவில் சிறந்து விளங்கும் பிரபலங்களில் பெரும்பாலானோர் தங்களை மன்னர் குல வழித்தோன்றல்கள் எனக் கூறிக் கொள்வதில் பெருமைபட்டுக் கொள்கின்றனர்.

கடந்த ஆண்டு பிரபல நடிகர் Danny Dyer தாம் 14 ஆம் நூற்றாண்டில் ஆட்சியில் இருந்த 3-வது எட்வர்ட் மன்னரின் வழித்தோன்றல் என பெருமையாக வெளிப்படுத்திக் கொண்டார்.

மட்டுமின்றி பிரபல தொழிலதிபரான Sir Richard Branson கூட இதே போன்றதொரு தகவலை வெளியிட்டார். 768 முதல் 814 வரை மேற்கு ஐரோப்பாவின் பெரும்பகுதியை ஆட்சி செய்த Charlemagne மன்னரின் பரம்பரையில் பிறந்தவர் தாம் எனவும் Sir Richard Branson குறிப்பிட்டார்.

ஆனால் மரபியல் வல்லுநரான Dr Rutherford இந்த விவகாரத்தில் வியப்படையும் வகையில் எதுவும் இல்லை என்றும், ஐரோப்பியர்களில் பெரும்பாலானோர் நேரிடையாக Charlemagne மன்னரின் பரம்பரையில் வந்தவர்கள் என்பதும், பிரித்தானியர்களில் பெரும்பாலானோர் 3-வது எட்வர்ட் மன்னரின் வழித்தோன்றல் என்பதும் உண்மைதான் என்றார்.

மட்டுமின்றி பிரபலங்களுக்கும் சாதாரண குடிமக்களுக்கும் இந்த விவகாரத்தில் இருக்கும் வேறுபாடு என்னவெனில், சாதாரண மக்களுக்கு தாங்கள் மன்னர் பரம்பரை என நிறுவும் வகையில் எந்தவித ஆதாரங்களும் இல்லை என்பதே என்றார் மரபியல் வல்லுநரான Dr Rutherford. மேலும், தமது பரம்பரை குறித்து ஆழமாக ஆய்வு மெற்கொண்டதாக கூறும் Sir Richard Branson, மன்னர் Charlemagne மற்றும் தமக்கான பரம்பரை இடைவெளி என்பது 40 தலைமுறை எனவும் கடந்த ஆண்டு தெரிவித்திருந்தார்.

இதேபோன்று பிரித்தானியர்களில் பெரும்பாலானோர் 3-வது எட்வர்ட் மன்னரின் 21-வது அல்லது 24-வது தலைமுறையை சேர்ந்தவர்களாக இருப்பார்கள் எனவும் Dr Rutherford அழுத்தமாக தெரிவித்துள்ளார்.

-lankasri.com