உலக நாடுகளின் மொத்த கடன் சுமை என்பது முதல் காலாண்டில் 217 டிரில்லியன் டொலர் என தகவல் வெளியாகியுள்ளது.
உலக நாடுகளின் மொத்த கடன் சுமை என்பது ஆண்டு தோறும் அதிகரித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
இது உலக நாடுகளின் மொத்த வருவாயை விடவும் 327 சதவிகிதம் அதிகம் எனவும் தெரிய வந்துள்ளது.
நாடுகளின் கடன் சுமை அதிகரிக்க முக்கிய காரணமாக கூறப்படுவது பொருளாதார வளர்ச்சியே ஆகும் என ஆய்வாளர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
இதனால் ஒவ்வொரு நாடுகளும் அவர்களின் பொருளாதார மேம்பாட்டிற்காக 3 டிரில்லியன் டொலர் முதல் 56 டிரில்லியன் டொலர் வரை கடனாக பெற்று வந்துள்ளதை நிபுணர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
இதுவும் நாடுகளின் பொருளாதார வளர்ச்சியை விடவும் 218 சதவிகிதம் அதிகம் எனவும் தெரிய வந்துள்ளது.
இந்த வரிசையில் அமெரிக்காவின் கடன் சுமையானது சுமார் 20 டிரில்லியன் டொலர் என கூறப்படுகிறது. இது மொத்த உலக நாடுகளின் கடன் சுமையில் 10 சதவிகிதமாகும்.
சீனாவின் கடன்சுமையானது 2 டிரில்லியன் டொலர் எனவும் தெரிய வந்துள்ளது.
-lankasri.com