வெப்பநிலை அதிகரிப்புக்கு ஈடுகொடுக்கக்கூடிய பசுக்கள் விரைவில்!

cow1தற்போது உலகளாவிய ரீதியில் வெப்பநிலையானது மிக வேகமாக அதிகரித்து வருகின்றமை தெரிந்ததே.

இதன் காரணமாக உயிரினங்கள் அனைத்தும் அசௌகரியங்களை எதிர்நோக்கி வருவதுடன் இறப்புக்கு முகம் கொடுக்கும் அபாயத்தையும் எதிர்நோக்கி வருகின்றன.

இந்நிலையில் வெப்ப சூழலை தாங்கக்கூடிய பசுக்களை உருவாக்கும் முயற்சியில் விஞ்ஞானிகள் ஈடுபட்டுள்ளனர்.

இதற்கான முன்மொழிவை University of Florida Institute of Food and Agricultural Sciences முன்வைத்துள்ளது.

இது மூன்று வருட திட்டத்தினைக் கொண்டிருப்பதுடன் இதற்காக 733,000 அமெரிக்க டொலர்களும் ஒதுக்கப்பட்டுள்ளது.

குறித்த திட்டத்தின் ஊடாக பசுக்கள் அனைத்தும் மரபுரிமை மாற்றத்தின் மூலமே உருவாக்கப்படவுள்ளது.

இவை காலநிலை மாற்றத்தினை தாங்கிக்கொள்ளக்கூடிய வகையில் காணப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

-lankasri.com