சீதாப்பழத்தில் கால்சியம், இரும்புச்சத்து, மெக்னீசியம், பொட்டாசியம், காப்பர், விட்டமின் C, A, புரதம், தாதுஉப்புகள், நார்ச்சத்து போன்றவை ஏராளமாக நிறைந்துள்ளது.
இவ்வளவு சத்துக்கள் நிறைந்த சீதாப்பழமானது இதயம் தொடர்பான பல்வேறு பிரச்சனைகளுக்கு தீர்வளிக்க உதவுகிறது.
சீதாப்பழத்தின் மருத்துவ நன்மைகள்
- சீதாப்பழம் இதய வால்வுகளில் உள்ள கொழுப்பைக் கரைத்து, இதயநோய், ரத்த அழுத்தம், ரத்தசோகை போன்ற பிரச்சனைகள் வராமல் தடுக்கிறது.
- சோர்வு நிலையில் உள்ள குழந்தைகளுக்கு, சீதாப்பழத்தை தினமும் கொடுத்தால், அவர்கள் எப்போதும் நல்ல புத்துணர்ச்சியுடன் இருப்பார்கள்.
- சீதாப்பழத்தில் உள்ள தாமிரச்சத்து, குடலுக்கு மிகவும் நல்லது. எனவே காலையில் வெறும் வயிற்றில் தொடர்ந்து ஒரு பழம் சாப்பிட்டு வந்தால், அது வயிற்றில் சுரக்கும் அமிலத் தன்மையை சீராக்கும்.
- கர்ப்பிணி பெண்கள் சீதாப்பழத்தை சாப்பிட்டு வந்தால், அவர்களின் உடல் வலிமை அடைவதுடன், வயிற்றில் உள்ள குழந்தையின் வளர்ச்சி நிலையும் மேம்படும்.
- சீதாப்பழம் பக்கவாதம், மாரடைப்பு போன்ற பிரச்சனைகளை தடுத்து, புற்றுநோய் எதிர்ப்பு செல்களை அழிக்க உதவுகிறது. இந்த பழத்தின் தோல் பற்சிதைவு, ஈறுகளில் ஏற்படும் வீக்கம் மற்றும் மலச்சிக்கலைக் கட்டுப்படுத்த உதவுகிறது.
- சீதாப்பழத்தின் மரத்தின் பட்டைகள், நீரிழிவு நோயை குணமாக்கவும், இலைகள் நோய்த் தடுப்புக்கு மருந்தாகவும் பயன்படுகிறது.
- சீதாப்பழம் நம் உடலுக்கு அதிக குளிர்ச்சியைத் தருவதால், இரவு நேரங்களில் சாப்பிடும் போது, வெந்நீரில் சிறிது நேரம் ஊறவைத்து, அதன் வெப்பநிலை உயர்ந்தவுடன் சாப்பிடலாம்.
- சீதாப்பழத்தை, ஆரம்ப நிலையில் காசநோய் பிரச்சனை உள்ளவர்கள் சாப்பிட்டு வந்தால், காசநோய் கட்டுப்படுத்தப்படும்.
-lankasri.com