தினசரி நாம் சாப்பிட்டு முடித்ததும் 15 அல்லது 20 நிமிடங்கள் கழித்த பின் தான் தண்ணீரைக் குடிக்க வேண்டும்.
ஏனெனில் நாம் உட்கொள்ளும் உணவு செரிமானம் அடைவதற்கு, நம் உடலில் உள்ள சுரப்பிகள், சில என்சைம்கள் மற்றும் அமிலங்களை சுரக்கும்.
எனவே அதற்கு இடையூறு ஏற்படுத்தாமல் இருக்க சாப்பிட்டவுடன் தண்ணீரைக் குடிக்கக் கூடாது.
ஆனால் சாப்பிட்டு முடித்த பின் சிறிது நேரம் கழித்து, ஜில் தண்ணீர் குடிப்பதை தவிர்த்து, இளஞ்சூடான நீரைக் குடிக்கலாம்.
சாப்பிட்டதும் சூடான நீரை குடிப்பது நல்லது ஏன்?
உணவு சாப்பிட்ட பின் இளம் சூடான நீர் அருந்துவது இதயத்திற்கு நல்லது என்று மருத்துவர்கள் கூறுகின்றனர். ஏனெனில் இளம் சூடான தண்ணீரைக் குடிப்பதால், புற்றுநோய் செல்கள் உருவாவதை தடுக்கிறது.
மேலும் நாம் சாப்பிடும் உணவானது எளிதில் செரிமானம் அடைவதோடு உடலுக்கு கெடுதல் ஏற்படுத்தும் கெட்டக் கொழுப்புக்களை தடுக்கிறது.
எனவே சாப்பிட்டு முடித்ததும் இளம் சூடான சூப் அல்லது வெது வெதுப்பான தண்ணீரைக் குடிக்கலாம்.
சாப்பிட்டதும் ஜில் தண்ணீர் குடிப்பதால் ஏற்படும் ஆபத்து?
- சாப்பிட்டு முடித்தவுடன் ஜில் தண்ணீரை குடிப்பதால் இதயநோய் மற்றும் புற்றுநோய் ஏற்படும் வாய்ப்பை அதிகமாக்குகிறது.
- ஜில் தண்ணீரானது நாம் சாப்பிட்ட உணவில் உள்ள எண்ணெய் துகள்களை கெட்டியாக்கி உணவு செரிமானம் அடைவதில் பிரச்சனையை ஏற்படுத்தி விடுகிறது.
- ஜில் வாட்டரானது நமது உடலில் உள்ள கொழுப்பின் அளவை அதிகரிக்க செய்து, இதயம், சிறுநீரகம் தொடர்பான பல பிரச்சனைகளை உருவாக்குகிறது.
- -lankasri.com